வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, January 6, 2010

சென்ற வருடம் உருப்படியாய் செய்தது !

டிசம்பர்.31 போட வேண்டும் என்று நினைத்தது. இப்போது தான் இதை பற்றி பதிவு போட முடிந்தது.

சென்ற வருடம் படித்த புத்தகங்கள். (ஜூலை - டிசம்பர் வரை, ஜனவரி - ஜூன் வரை படித்த புத்தகங்கள்)

கிழக்கு பதிப்பகம்

1. மு.க.ஸ்டாலின் - ஜி.ஆர்.சுவாமி
2. இண்டர்வியூ டிப்ஸ் - எஸ்.எல்.வி. மூர்த்தி
3. ஜனகணமன - மாலன்
4. அடடே 2 - மதி
5.ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - எஸ்.எல்.வி. மூர்த்தி
6. ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Arthur Conan Doyle (தமிழில் : பத்ரி சேஷாத்ரி)
7.இரவுக்கு முன்பு வருவது மாலை (ஒலிப்புத்தகம்) - ஆதவன்
8.இட்லியாக இருங்கள்(ஒலிப்புத்தகம்) - சோம.வள்ளியப்பன்
9.அடுத்த வினாடி(ஒலிப்புத்தகம்) - நாகூர் ரூமி
10.மரியதையாக வீட்டுக்கு போங்கள்
11.மால்கம் எக்ஸ் - மருதன்
12.உயிர்ப் புத்தகம் - ஸி.வி.பாலகிருஷ்ணன்
13.ஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன் - பாலு சத்யா
14.தொழில் முனைவோர் கையேடு - எஸ்.எல்.வி. மூர்த்தி
15.பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - பா.ராகவன்
16.ஜெயலலிதா - அம்மு முதல் அம்மா வரை - ஜே.ராம்கி
17.சுதந்தர பூமி - இந்திரா பார்த்தசாரதி
18.சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - சோம.வள்ளியப்பன்
19.விஜயகாந்த் - யுவ கிருஷ்ணா
20. CMM:ஃபைவ் ஸ்டார் தரம் - சிபி கே.சாலமன்
21. வேதபுரத்து வியாபாரிகள் - இந்திரா பார்த்தசாரதி
22. எனக்கு வேலை கிடைக்குமா? - என்.சொக்கன்
23. ஹலோ, உங்களைத்தான் தேடுகிறார்கள்! - எஸ்.எல்.வி. மூர்த்தி
24. ஹிஸ்புல்லா - பா.ராகவன்

உயிர்மை பதிப்பகம்

25.ஏற்கனவே - யுவன் சந்திரசேகர்
26. கானல் நதி - யுவன் சந்திரசேகர்
27.வரம்பு மீறிய பிரதிகள் - சாரு நிவேதிதா
28. அ'ன்னா ஆ'வன்னா - நா.முத்துக்குமார்
29. இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா
30. எழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா
31. புதிய நீதி கதைகள் - சுஜாதா
32. பால்ய நதி - எஸ்.ராமகிருஷ்ணன்
33. நடந்து செல்லும் நீருற்று - எஸ்.ராமகிருஷ்ணன்

34. நானும் இலக்கியமும் - பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞர் அளித்த பதில்கள்,நக்கீரன் வெளியீடு
35. கலைஞர் 100 காவியத்துளிகள் - சபீதா ஜோசப், நக்கீரன் வெளியீடு
36. கலைஞரின் நகைச்சுவை நயம் - கவிஞர் தெய்வச்சிலை, நக்கீரன் வெளியீடு

37. மஹாகவி பாப்லோ நெருடா - நிழல் வெளியீடு
38. கடலும் கிழவனும் - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே

39. கதை கதையாம் காரணமாம் !! - சூரியசந்திரன்
40. இது ராஜப்பாட்டை அல்ல - சிவகுமார்
41. கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
42. மரணம் முற்றுப்புள்ளி அல்ல(கவிதை) - அப்துல் ரகுமான்
43. நிர்வாண நகரம் – சுஜாதா
44. திரைக்கதை எழுதுவது எப்படி ? - சுஜாதா
45. யுத்த பூமி லெபானன் - எஸ்.வி.ராஜதுரை
46. சில நேரங்களில் சில அனுபவங்கள் - பாக்கியம் ராமசாமி
47. எப்படி கதை எழுதுவது ? - ரா.கி.ரங்கராஜன்
48. யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" – நிலாரசிகன்

49. வெற்றி தரும் மேலாண்மை உத்திகள் - ஜி.வி.ராவ்
50. வாய்மையின் வெற்றி : ராஜீவ் காந்தி கொலை வழக்கு – கார்த்திகேயன்
51. வாடா மல்லி - சு.சமுத்திரம்
52. தமிழா ? அமிர்தமா ? - கா.வேழவேந்தன்
53. காலம் வென்ற தமிழக மகளிர் - சரளா ராசகோபாலன்
54. காற்றில் கவிதை உலா(கவிதை) - தனஞ்ஜெயன்
55. மழையில் குடைபிடித்துப் போகாதே (கவிதை) – தனஞ்ஜெயன்
56. The 80/20 Principle – Richard Koch

நியாயமாக பார்த்தால் நான் படித்த புத்தகங்களை பட்டியலிட தேவையில்லை. உண்மையை சொல்லுவதென்றால், ஒரு வருடத்தில் நூறு புத்தகம் படிப்பது பெரிய விஷயமில்லை. பணம் கொடுத்து புத்தகம் வாங்குவதை குறைத்து, நூலகத்தை அதிகமாக பயன்படுத்திக் கொண்டேன். (ஒரு வேளை, படித்த புத்தகம் தெரியாமலே மீண்டும் புத்தகம் வாங்கிவிட கூடாது என்பதற்காக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இத்தனையும் சொன்னேன். )

இந்த பட்டியல் சென்ற வருட வாசிப்பையும், எவ்வளவு உள்வாங்கியிருக்கிறேன் என்று எனக்குள் சென்று என்னை ஆராய்ந்து பார்த்தேன். இதில் மூன்று விஷயம் தெளிவாக தெரிந்தது

1. கவிதை படிப்பது மட்டுமல்ல... கவிதை எழுதுவதையும் குறைத்து விட்டேன் என்பது புத்தக பட்டியலிடும் போது உணர முடிந்தது.
2. கிழக்கு மற்றும் உயிர்மை பதிப்பகங்களை அதிகமாக படித்திருக்கிறேன். மற்ற பதிப்பக புத்தகங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
3. ஆங்கில புத்தகங்கள் வாசிப்பு மிகவும் குறைவு. அடுத்த வருடமாவது அதிகம் படிக்க வேண்டும்

உருப்படியாய் செய்தது.

பல நாள் செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து... ஒரு வழியாய் தைரியமாக 'பதிப்பக' துறையில் இறங்கியிருக்கிறேன். நீச்சல் தெரியாமல் ஆற்றில் குதித்திருக்கிறேன், எப்படியோ கரை சேர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கையில்....

இந்த வருடம் முயற்சி அல்ல... உறுதி மொழி

1. பதிப்பக சாரிபில் குறைந்தது பத்து புத்தகமாவது போட வேண்டும்.
2. என் இன்னொரு நீண்ட நாள் ஆசை ஒரு புத்தக கடை போட வேண்டும். (ஓ.சிலே புது புத்தகங்களை படிக்கலாம்.)

பதிப்பகத்தில் பெயர் எடுக்கும் வரை ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் தான். ( அலுவலக வேலையின் நடுவில் பதிப்பக வேலை.)

5 comments:

ரோஸ்விக் said...

அடேங்கப்பா.... இவ்வளவு புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள். எனது சோம்பேறித்தனத்தால் இது முடியவில்லை என பொறாமையாக இருக்கிறது.... :-))

தங்களின் பதிப்பக வேலைகள் சிறப்புற்று, நீங்கள் அதில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். தொடருங்கள்.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

அடேங்கப்பா...!இவ்வளவு புத்தகங்கள் படித்தீர்களா.உங்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது....!

Cloud World said...

hi guys,

http://cyberfraudidentifier.blogspot.com/

This blog used to cyber fraud identifier person.

Thanks for your help for posting this comment in your website.

Anonymous said...

பட்டியல் பெரிசு தான். ஆனாலும், தளங்கள் குறைவு போல இருக்கின்றது.

Henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

LinkWithin

Related Posts with Thumbnails