வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 6, 2016

ஜெ.ஜெ !!!!

டிசம்பர் 24, 1987

தமிழகமே இருண்டது போல் உணர்வு. மக்களைப் பற்றி சிந்திக்கிற தலைவர் மீண்டும் தமிழ்நாட்டில் பிறப்பார்களா என்ற கவலை. ”மக்கள், மக்கள்” என்று உழைத்தவரின் உடல் உயரற்று கிடப்பதை கண்ணீரும், கவலையாக பார்க்க மக்கள் அலையென திரண்டனர். இப்படி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததால் தான் இன்று வரை புரட்சி தலைவரை “மக்கள் திலகம்” என்றே அழைக்கப்படுகிறார். 

எம்.ஜி.ஆரை “நண்பர்” என்று கருணாநிதி அழைத்தாலும், அவரது எதிர்கட்சியாக செயல்படுபவர். அவரது உடலைப் பார்க்க சென்றால் கண்டிப்பாக சலசலப்பு ஏற்படும். அதனால், தகவல் பரவுவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.

மக்களுக்காக உழைத்து உழைத்து தனது உடலை கவனிக்காமல் விட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது.

இப்படி ஒரு கூட்டம். பெரியார், அண்ணா இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டவர்களுக்கு நிகரான கூட்டம். மக்களுக்காக உழைத்த மாசற்ற மாணிக்கத்தை பார்க்க இறுதி வாய்ப்பு. 

எம்.ஜி.ஆர் உடலைப் பார்க்க நான்கு நான்கு பேராக வரிசையில் நின்று பார்த்தார்கள். ராஜாஜி பவனில் தொடங்கிய வரிசை சாந்தி திரையரங்கம் வரை நீண்டது. எத்தனை மணி நேரம் வரிசையில் நின்றாவது பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தி அழ வேண்டும் என்று மக்கள் துடித்தனர்.திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர். 

மதியம் 1 மணி அளவில் எம்.ஜி.ஆரின் உடல் இராணுவ டிரக்கில் ஏற்றினர். அவரது இறுதி பயணத்தில் கடைசி வரை செல்ல விரும்பிய அவரை ஒரு சிலர் ஓரம் கட்ட நினைத்தனர். ஒரு இராணுவ அதிகாரி அவரை டிரக்கில் ஏற்ற நினைத்தும், அவர்கள் விடவில்லை.

நாகரிகமற்ற வளர்ந்தவர்களிடம் அந்தச் சமயத்தில் அந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி சொல்லித்தர முடியும். அந்த புனிதமான சூழ்நிலையில் மாசுப்படுத்த விரும்பாமல் அவர் அமைதியாக இருந்தார். 

அவரை அரசியலில் தனியாளாகிவிட்டோம் என்ற மிதப்பில் ஒரு சிலர் இருந்தார்கள். அவர் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது பலர் கொண்டாடினார்கள். புரட்சி தலைவருக்கு பிறகு தங்களை எதிர்க்கும் சக்தி இல்லை என்று நினைத்தார்கள். இனி, நம் ராஜ்ஜியம் என்று துள்ளி குதித்தார்கள். அ.தி.மு.க கட்சி தங்களுடையது தான் என்று நினைத்தனர். உண்மையில் அவரின் அரசியல் வாழ்க்கை அங்கு இருந்து தான் தொடங்கியது.

அதற்கு முன் எம்.ஜி.ஆர் அரசியல் தளபதியாக இருந்தவர், எம்.ஜி.ஆர் இருந்த தலைமை பொருப்பை எடுத்து நிரப்பியவர். நெருக்கமானவர்களுக்கு ‘அம்மு’. திரையுலகத்தினருக்கு ஜெ.ஜெயலலிதா. அனைவராலும் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவர் என்பவர்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க என்ற கட்சி இருக்காது என்று பலர் நினைத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் உதயமாகும் ஒரு வாய்ப்பு இருக்கும் சூழ்நிலை உருவானது. ஒரு சில அ.தி.மு.கவினர் தங்கள் கட்சியை விட்டு எதிர் முகாமுக்கு சென்றார்கள். அவர்களின் கனவை எல்லாம் கனவாய் வைத்து, நிஜத்தில் வெற்றிகள் குவித்தவர் ஜெ.ஜெயலலிதா.

”ஜெயலலிதா” என்ற ஆளுமை மிக எளிதாக தோன்றவில்லை. சுற்றியிருப்பவர்கள் உதாசினத்தில், துரோகத்தில் உருவான ஆளுமை. 

அவர் மிகவும் கண்டிப்பானவர். கோபக்காரர். திமிர்ப் பிடித்தவர். என்று எதிர்க்கட்சினர் விமர்சனம் செய்யலாம். அலுவலகத்தில் ஒரு பெண் அமைதியாக இருந்தாலே ஏறி மீதிக்கும் உலகம். அரசியலில் அமைதியாக இருந்தால், வளரவிட்டுவிடுவார்களா ? 

ஆண்களை கொண்டு, அவர்களிடம் தன்னை காத்துக்கொண்டு வளர வேண்டும் என்றால் கட்டுப்பாடும், கண்டிப்பும் மிகவும் அவசியம். அதை தான் ஜெ.ஜெயலலிதா செய்தார்.

ஜெ.ஜெயலலிதா அடுத்து கட்சி தலைவர் யார் என்ற பேச்சு வந்ததேயில்லை. அதைப்பற்றி பேச யாருக்கு துணிவுமில்லை. அவரை மீஞ்சி கட்சியில் ஒருவராலும் செயல்பட முடியாது. தனது கட்சியை கட்டுப்படாக நடத்தி வந்தார். புரட்சி தலைவர் மறைவுக்கு பிறகு கட்சியை சீராக நடத்தியவர் ஜெ.ஜெயலலிதா மட்டும் தான்.

ஆண்கள் சிங்கமாக நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றை பெண்புலியாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக முதல்வராக ஆட்சி செய்திருக்கிறார்! 

நம்முடைய காலத்தில் ஜெயலலிதாவை விட சிறந்த சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!

Friday, December 2, 2016

1983 ( Malayalam - 2014)

Pelé: Birth of a Legend படம் பார்க்கும் போது என் நினைவுக்கு வந்தது நிவின் பவுலி நடித்த 1983 படம். தந்தையின் கனவை மகன் சுமக்கும் அதே கதை களன். ஆனால், Pele உண்மை கதை. 1983 பல தந்தையினர்களின் கதை. 

இந்தியா 1983வில் உலகக் கோப்பையில் தொடங்கியது அனைத்திந்தியர்களின் கிரிக்கெட் சாபம். ஒவ்வொரு இளைஞர்களின் கையில் கிரிக்கெட் மட்டை. தேசிய விளையாட்டான ஹாக்கியை பின்னுக்கு தள்ளி, இந்தியர்களின் மதமாக மாறிவிட்டது கிரிக்கெட். நிவின் கிரிக்கெட் ஆர்வத்தால் தந்தையின் இன்ஜினியரிங் கலைகிறது. காதலியை தொலைக்கிறான். வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனை வந்தாலும், கிரிக்கெட் அவனை மறக்கடிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் தந்தையின் மோட்டார் ரீ-பேர் வேலையை ஏற்க வேண்டியதாக இருக்கிறது. சச்சின் என்றால் யார் என்று தெரியாதப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனுக்கு மகன் பிறக்கிறான். 

தொலைந்த தனது கனவை மகன் வடிவில் நிறைவேற்றி கொள்கிறான். தந்தையின் கனவு மகனுக்கு லட்சியமாக மாறுகிறது. 

தந்தை கனவை தீணிப்பது வேறு. கனவை கொடுப்பது வேறு. இந்தப் படம் இரண்டாவது வகை. 

1983 படத்தில் ஒரு தந்தை தனது கனவை மகனிடம் மிக அழகாக கொடுக்கிறார். மகனுக்குன் அந்த கனவு பிடித்திருக்கிறது. மகன் களத்தில் விளையாடும் போது அவனையே பார்க்கிறான். 

இந்தப் படத்தை மகனின் லட்சியத்தை ஆதரிக்கும் தந்தையின் படமாக பார்ப்பதைவிட, மகன் மூலம் தன்னை பார்க்கும் ஒரு தந்தையின் படமாக பார்க்க வேண்டும்.

Tuesday, November 29, 2016

Demonetization நகைச்சுவை !!

செந்தில் : அண்ணே ! நிலைமை சரியாயிடிச்சு. பாருங்க ATMல கூட்டமே இல்ல...

கவுண்டமணி : டேய் ! அந்த ATM காசே இல்லடா !!

செந்தில் : அதனால என்ன அண்ணே ! ATMல கூட்டமே இல்லல்ல.... அப்போ எல்லாருக்கிட்டையும் பணம் வந்திடுச்சு தானே அர்த்தம்.

கவுண்டமணி : டேய் ! ATMல பணம் இருந்தா தானே காசு எடுக்க ஆளுங்க வருவாங்க...

செந்தில் : நீங்களே சொல்லுங்க... ATMல கூட்டம் இருக்கா ? இல்லையா ? ... கூட்டம் இல்லனு போது எல்லாருக்கிட்டையும் பணம் வந்திடுச்சு அண்ணே ! 

கவுண்டமணி : ஐய்யோ ராமா $#$#$ !!**
கைதி 1 : எதுக்கு உன்ன கைது பண்ணாங்க... ?

கைதி 2 : அரசாங்கத்துக்கு உதவி பண்ணேன். கைது பண்ணிட்டாங்க...

கைதி 1: அட பாவமே ! அப்படி என்ன உதவி பண்ண..?

கைதி 2 : கவர்மெண்ட் கிட்ட பணமில்லனு அவங்களுக்கு உதவியா நானே சொந்தமா ரூ.2000 நோட்ட பிரிண்ட் பண்ணேன். அதுக்கு கைது பண்ணிட்டாங்க...

**
இன்று பாரத் பந்த் (28.11.16) சொன்னாங்க....

எத்தன மணி, எந்த சேனல்ல படம் போடுறாங்கனு சொல்லவே இல்ல..**
ரூபாய் நோட்டு அடிக்கும் ஆர்டரை சிவகாசி பிரிண்ட்டிங்க்கு கொடுத்திருந்தால் இரண்டு நாட்களில் தேவையான பணத்தை அச்சடித்திருப்பார்கள்.

**
இன்று ஒருப் பெண் personal loanக்காக போன் செய்ய... “ Rs.XXX Amount லோன் வேண்டும்..” என்றேன்.

“உங்கக்கிட்ட Pay slip, PAN card, Bank details எல்லாம் இருக்கா சார்...” என்று கேட்டார்.

“இருக்கு. லோன்ன Cash தானே தருவீங்க...” என்று கேட்டேன்.
"இல்ல சார்... உங்க அக்கவுண்ட்ல போட்டுடுவோம். நீங்க Withdraw பண்ணிக்கலாம்...”

“ஏம்மா... Bankல இருக்குற என் காச Withdraw பண்ண முடியலைனு தான் லோன் கேக்குறேன்” என்றேன்.

போன் கட்...

**


ரேஷன்ல
அரசிக் கொடுத்து பார்த்திருப்ப
பருப்பு கொடுத்து பார்த்திருப்ப
சக்கரை கொடுத்து பார்த்திருப்ப
மண்ணணெய் கொடுத்து பார்த்திருப்ப

ரேஷ்னவிட பேங்க்ல
கூட்டத்த பார்த்திருக்கிறியா...
வெறித்தனமா
அடிச்சுட்டுப் பார்த்திருக்கிறா...
நம்ப பணத்த ரேஷன்ல கொடுக்குற மாதிரி
அளவா கொடுப்பாங்க...
ஒரு நாளைக்கு ரூ.4000 தான் தருவாங்க...
பார்க்குறியா... பார்க்குறியா... !

 **
பள்ளி நாட்களில் India is My Country என்று உறதிமொழி எடுக்கச்சொன்னார்கள். இனி ’India is Mai (மை) Country’ என்று சொல்ல கட்டளையிடுவார்கள்.

**
வீட்டிலிருக்கும் 500, 1000 நோட்டுகளைக் என் மனைவி கொடுத்தார். எனக்கு தெரியாமல் வீட்டில் நடந்த ஊழல் இப்போது தெரிய வந்திருக்கிறது

**

மோடி வெளிநாட்டு போறாரு கவலைப்பட்டாங்க. ஒரு அறிவிப்பு கொடுத்தாரு, அவரு வெளிநாட்டுலேயே இருந்திருக்கலாம் நினைக்க வச்சிட்டாரு

Tuesday, November 22, 2016

காதலன் : ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு - பா. தீனதயாளன்

ஜெமினியை வைத்துப் படம் எடுப்பது சின்னக் குழந்தையை வெச்சு முடிவெட்டற மாதிரி” – நாகேஷ். 

திரையுலகின் மூவேந்தர் நடிகர்களில் ஒருவர். அரசியல் சாயம் இல்லாத நடிகர். காதலை வாழ்க்கையாகக் கொண்டவரின் வாழ்க்கை வரலாறு. திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து பல நூல்கள் இருக்கிறது. காரணம், எம்.ஜி.ஆர் அரசியல் பிரமுகர். சிவாஜி நடிப்பின் அகராதி. ஆனால், ஜெமினி கணேசன் அப்படியில்லை. கிசுகிசு தவிர எதிலும் சிக்காதவர். பல ஆண்களின் பொறாமையை சம்பாதித்தவர். மக்கள் நடிகர்களுக்கு மத்தியில் இவர் இயக்குனர்களின் நடிகராக இருந்தவர். இயக்குனர் எது தேவையோ அதை மட்டுமே தனது நடிப்பில் கொடுப்பவர். அதனால், ஸ்ரீதர், கே.பாலசந்தர் போன்றவர்களின் விருப்பதிற்குரிய நடிகராக இருந்தார்.  “எப்படி பெண்கள் உங்களிடம் தேடி வந்து பேசுகிறார்கள்” என்று ஜெமினியிட கேட்டப்போது, “பொதுவாக செட்டில் சுமாரான அழுகுள்ள பெண்களிடம் முதலில் பேச்சு கொடுப்பேன். அழகான பெண்கள் தானாகவே வந்து என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்படி என் ட்ரிக் !” என்றார். (Hunterrr Style அறிமுகப்படுத்தியவர் இவரே !!  ) 

மனம் போல் மாங்கல்யத்தில் பைத்தியக்காரன் வேடத்தில் ஜெமினி பிரமாதமாக நடித்திருப்பார். அதைப் பற்றி அவரது முதல் மனைவி பாப்ஜி, “அது ஒன்றும் அவருக்கு க்ஷ்டமானது அல்ல ! அவர் சுபாவமே அப்படித்தானே!” என்று சொல்லிவிட்டார். எவ்வளவு கடுமையான – உண்மையான விமர்சனம். 

சிவாஜி அளவுக்கு நடிப்பு வராது என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டவர். அதேச் சமயம், சிவாஜியின் கால்ஷீட் கிடைக்கவில்லைஎன்றால் அடுத்து தயாரிப்பாளர் அனுகுவது ஜெமினி கணேசனை தான். 

ஒரு மனிதன் செக்ஸ் எப்போது அற்றுப் போகிறதோ அதற்கு மேல் வாழ்க்கை பயனற்றதுதான். ஆனால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்றால் எத்தனை வயதானாலும் இளமையாக வாழலாம்” – இதை தனது அதிகார பூர்வமான நான்காவது திருமணம் செய்யும் போது கூறியது. அப்போது அவருக்கு வயது 79 !!! 

”1934ல் பதிமூன்று வயதில் பள்ளியில் நாடகம் போட்டார்கள். அப்போதும் கிருஷ்ணன் வேஷம்தான் எனக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தது. நாடகத்தில் குட்டி கிருஷ்ணனாக நடித்த என்னை நிஜ வாழ்க்கையிலும் கிருஷ்ணனாகவே வாழச் செய்துவிட்டது விதி. 

இப்போது ‘காதல் மன்னன்’ என்ற பட்டப் பெயரைக் கேட்டாலே மனத்தில் வெறுப்புதான் எழுகிறது.” – தனது கடைசிக் காலத்தில் தனது ‘காதல் மன்னன்’ பட்டத்தை வெறுத்த தருணத்தை அவரே கூறியது. 

ஜெமினி யாரையும் விரட்டி விரட்டிக் காதலித்ததில்லை. பெண்கள் அவரைத் தேடி வந்து காதலிப்பார்கள். பின்பு, அவர்களாகவே பிரிந்து செல்வார்கள். அவர் எப்போதும் போல இயல்பாகவே இருப்பார். 

பிராமணராக பிறந்ததால் பிராமணப்பாத்திரத்தை ஏற்றுகொள்வதில் தயக்கம் காட்டினார். ’கௌரவம்’ படத்தில் ஆரம்பத்தில் ஜெமினிக்கு சொல்லப்பட்ட கதை. ஆனால், தன்னை விட சிவாஜி சிறப்பாக செய்வார் என்று கூறியவர் ஜெமினி கணேசன். 

 “Youth is not a time of Life. It’s a state of mind. 85 வயசுலயும் இளைஞனைப் பார்க்கலாம் 35 வயசுலயும் கிழவனைப் பார்க்கலாம். நான் இதுல முதல் ரகத்தைச் சேர்ந்தவன்.” – ஜெமினி கணேசன்.

குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் பழைய வெளியீடு.

கிடைப்பது சிரமம். பழையப் புத்தகக்கடையில் அல்லது Lending Library யில் கிடைத்தால் வாசிக்கவும்.


Monday, November 21, 2016

உலக சினிமா : Pelé: Birth of a Legend (2016)

ஒரு மகன் தந்தைக்கு கொடுக்கும் உண்மையான வலி என்ன ? 

தான் தோற்றுப்போன கனவை மகன் நினைவுப்படுத்துவது. 

அதேப் போல், மகன் தந்தைக்கு கொடுக்கும் மிகப் பெரிய சந்தோஷம் என்ன ?

 தந்தை தோற்றுப்போன கனவை மகன் வெற்றிப் பெற்றுக்காட்டுவது. 

*
Pelé: Birth of a Legend கடைசி இருபது நிமிடங்கள் Peleவின் தந்தை இடத்தில் பார்த்தால் என்னவோ, கண்ணில் நீர் தழும்பப் படத்தை பார்த்தேன். Pelé என்ற தனி மனிதனின் வாழ்க்கை வரலாறோ, ஒரு விளையாடு வீரனைப் பற்றிய கதையோ இல்லை. 

1950ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ‘Ginga’ என்ற ஸ்டைலில் தான் பிரேசில் தோற்றதாக பரவலாக நம்பப்பட்டது. 1958ல் இறுதிப் போட்டியின் ஸ்விடன் பயிற்சியாளர் பிரேசில் விளையாட்டு வீரர்களில் உடலில் இருக்கும் ஒவ்வொரு குறைப்பாடுகளை சொல்கிறார். பிரேசில் வீரர்கள் மனமுடைந்து போகிறார்கள். ஸ்விடன் நாட்டில் ஸ்விடனை வெற்றிக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைக்கிறார்கள். 

17வயதான Pelé அவர்களை உத்வேகப்படுத்துகிறான். அவர்களுடைய இயல்பான விளையாட்டை நினைவுப்படுத்துகிறான். பிரேசிலின் பயிற்சியாளரும் ‘Ginga’ முறை தான் ஸ்விடனை வெற்றிக்கொள்ள உதவும் என்று நம்புகிறார். இறுதிப்போட்டில் பிரேசில் வரலாறுக்காணாத 5-2 என்று வெற்றிப் பெறுகிறது. 

அதுவரை யாரும் மதிக்காத Ginga’ ஸ்டைலை கால்பந்தின் மிக அழகான ஸ்டைல் என்று வர்ணிக்கப்படுகிறது. கால்பந்து விளையாட்டில் மிகப் முக்கியமான ஸ்டைலாகவும் கருதப்படுகிறது. 


படம் முடியும் Pelé என்கிற Edson Arantes do Nascimento வரின் சாதனையை காண்பிக்கப்படுகிறது. இதுவரை 1283 கோல் அடித்திருக்கிறார். மூன்று முறை பிரேசில் உலகக்கோப்பை வெற்றி பெற உதவியிருக்கிறார். இறுதியாக சொல்லப்படும் சாதனையானாலும் முறியடிக்க முடியாத சாதனை ஒன்று குறிப்பிடப்படுகிறது. அது ஒரே ஆட்டத்தில் ஐந்து கோல் அடித்த ஒரே சர்வதேச வீரர் Pelé மட்டும் தான். இந்தச் சாதனையை ஒரு க்ளப் கால்பந்து போட்டியில் ஒருவர் ஐந்து கோல் அடித்து சாதனை செய்திருக்கிறாரான். அவர் Pelé வின் தந்தை Dondinho !!! 

பிரேசில் நாடே Peléவின் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. மகனின் வெற்றியில் Dondinho பேசமுடியாமல் வாயடைத்து கண்ணீர்ப்பட நிற்கும் காட்சி ஒரு தந்தையின் வெற்றியை காட்டுகிறது. படம் தொடக்கத்தில் இவர் கால்பந்தின் சச்சின் டெண்டுல்கர் என்று நினைத்தேன். படம் முடியும் போது பிரேசில் கால்பந்து உலகத்தின் கடவுளாக தெரிந்தார். 


படத்தின் பின்னனி இசை நமது ஏ.ஆர்.ரகுமான். இசை தான் வாழ்க்கை என்று இருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கு Pelé பற்றியோ, கால்பந்து பற்றியோ எதுவும் தெரியாது. அவருக்கு தெரிந்தது பிரேசிலியன் இசை மட்டுமே !!! 

Pelé படத்திற்காக இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் கேட்டப்போது Peléவை பற்றி கூகுள் அடித்து தேடியிருக்கிறார். Peléவின் சாதனைக்கு Ginga ஸ்டைல் மிக முக்கியக் காரணம் என்று அறிந்துக்கொண்டார்.

வெஸ்டன் கலந்த பிரேசிலியன் இசையை பின்னனி கொடுத்ததோடு இல்லாமல் “Ginga” என்ற promo song யை உருவாக்கினார். Pelé படத்தின் திரைக்கதையில் இந்தப்பாடல் இல்லை. “Ginga” முறையை பயன்படுத்தி தான் Pelé வெற்றிப்பெற்றிருக்கிறார். அதனால், இந்தப்பாடல் அவசியம் என்று ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து அதற்கான புரோமோ பாடலில் பாடியும், தோன்றியும் இருக்கிறார். 


** 

Pelé: Birth of a Legend ஒரு தனி மனிதனின் சாதனைப் படம் மட்டுமல்ல… ஒரு தந்தையின் கனவு வெற்றியைப் பற்றியப் படம். கால்பந்து என்ற விளையாட்டை பிரேசில் மக்கள் மனதில் விதைத்தவனின் படம். #worldmovie #உலக_சினிமா

Thursday, November 10, 2016

திரும்பப் பெற்ற ரூ.500, ரூ.1000 நோட்டு – யார் பாதிக்கப்படப் போகிறார்கள் ?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவுப்பு மூலம் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக குறையும். கறுப்பு பணம் முழுவதுமாக ஓழியாவிட்டாலும் ஒரளவு குறையும். 

கார்ப்ரேட் முதலாளிகள், அமைச்சர்கள் பாதிக்கப்படுவார்களா ? 

மோடியின் அறிவிப்பில் கார்ப்ரேட் நிறுவனமும், பெரிய அரசியல்வாதிகளும் இல்லை. இவர்கள் Higher Upper-Class வகையினர்கள். அவர்களிடம் பெரிய ஆடிட்டர், வழக்கறிஞர் டீம் இருக்கிறது. இதை எளிதில் கையாள்வார்கள். ஏற்கனவே அவர்களின் கறுப்புப் பணம் தங்கமாகவோ, வெளிநாட்டில் சொத்துகளாகவோ வாங்கியவர்கள். அவர்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர இந்த அறிவிப்பு உதவப் போவதில்லை. (அவர்கள் மீது எதிர்ப்பாராத ஐ.டி ரைட் மட்டுமே சிறந்த வழி.) 

அப்போது, யார் பாதிக்கப்படுவர்கள் ? 

அமைச்சர் போன்ற பெரிய அரசியல்வாதிகள் பாதிப்பு இல்லையென்றாலும் கவுன்சிலர், எம்.எல்.ஏ அளவுக்கு இருக்கும் அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு கடையிலும் வாங்கிய கமிஷன் வருமானத்தை எப்படி மாற்றியாக வேண்டும். பலரை ஏமாற்றி சம்பாதித்தது, சில கொலைகள் செய்து, சில பல உறவுகள் வேண்டாம் என்று பணத்தின் பின்னால் சென்றவர்கள் இந்த தருணத்தில் யோசிக்க வேண்டும். 

இருபது வருடம் மேல் இருக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள். வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர்கள். அவர்கள் வருமான வரி கட்டியிருக்கமாட்டார்கள். அவர்கள் தங்கள் வருமானத்தை இப்போது வங்கியில் செலுத்தியாக வேண்டும். பத்து லட்சம் மேல் வங்கியில் செலுத்தினால் வரி ஏய்ப்பு செய்ததாக கருதப்படும். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.தாசில்தாரர் அளவில் இருக்கும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் பணத்தை வங்கியில் போட்டால் மட்டுமே பயன்படுத்த முடியும். 

அதேப் போல், திரைத்துறை, ரியர் எஸ்டேட், காய்கறிப வணிகம் போன்ற Unorganized துறையினர் சிரமப்படுவார்கள். குறிப்பாக, கறுப்புப் பணத்தில் கட்டவிருந்த ப்ளாட் கட்டும் பிராஜெக்ட் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள். பணத்தேவைக்காக ஏற்கனவே கட்டப்பட்ட ப்ளாட்டுக்கு அதிக விலை சொன்னவர்கள் குறைக்க வேண்டியதாக இருக்கும். 

வரிக்கட்டாமல் பல கோடி வைத்திருப்பவர்கள் வங்கியிலோ அல்லது குறுக்கு வழியிலோ மாற்ற முயற்சிப்பார்கள். இவர்கள் எத்தனை வழி கண்டுப்பிடித்தாலும், என்ன செய்தாலும் கடைசியில் அத்தனைப் பணமும் வங்கியில் செலுத்தினால் மட்டுமே பயன்படுத்த முடியும். யாருக்கும் பயன்படாமல் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தப் பணம் வங்கிக் கணக்குக்கு வருகிறதென்றால் அரசாங்கக் கணக்குக்கு வருகிறது என்று அர்த்தம்.

மொத்தத்தில், வருமான வரி கட்டாத Upper Class, Upper Middle-class வர்கத்தினர்களுக்கு சம்பாதித்தவர்களுக்கு இதுப் பெரிய Check. 


மோடியின் நல்லிரவு அறிவிப்பை பலர் எதிர்க்கிறார்கள். கால அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு நேரம் கொடுத்தால், தங்கள் பணத்தை தங்கத்திலோ அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்து வெள்ளையாக மாற்றிவிட வாய்ப்பு இருக்கிறது. நல்லிரவு அறிவிப்பு என்பது சரியானது தான். 


அடுத்தது அரசு என்ன செய்ய வேண்டும் ? 

எந்த அளவுக்கு விரைவாக அறிவிப்பு கொடுத்தாரோ, அதை சரிசெய்யும் விதமான சரியாக திட்டமிடல் இருக்க வேண்டும். 

அடுத்த இரண்டு மாதத்திற்கு 80C பெற்ற N.G.O கணக்குகளை வருவாய் துறையினர் கவனிக்க வேண்டும். யார் யார் எவ்வளவு நன்கோடை கொடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் கணக்கில் இருந்து எந்த வங்கிக் கணக்குக்கு பணப்படுவாட நடக்கிறதது என்பதை கண்காணிக்க வேண்டும்.

வங்கி ஊழியர்கள், குறிப்பாக மேனேஜர் அளவில் இருப்பவர்களையும் கண்காணிக்க வேண்டும். ரூ.4000 மாற்ற வரும் வாடிக்கையாளரின் PAN Cardயை அடையாள அட்டையை நகல் எடுத்து, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உதவி செய்ய வாய்ப்பு இருக்கிறது. 

அடுத்து , தங்கம் மார்க்கெட்டின் அதிக முதலீடு வரும். தங்க முதலீட்டார்களையும் கண்காணிக்க வேண்டும். 

இதைச் செய்யாதப் பட்சத்தில் 500, 1000 நோட்டுகளை திரும்பப் பெற்ற உத்தரவில் எந்த பயனும் இருக்காது. 

** 

சரி… அதற்காக, அன்றாடம் வாழும் மக்கள் பாதிக்கப்படலாமா ? இயல்பு வாழ்க்கை பாதிக்கபடலாமா ? 

ஒழுங்காக வருமான வரிக் கட்டியவர்கள் இரண்டு நாள் தான் அவஸ்தை. இவர்கள் Middle-Class, Lower Middle-Class, Lower-Class வகையினர். சிறு வியாபாரிகள், தினக்கூலிகள் என்று தொடங்கி வெளியூருக்கு செல்பவர்கள் வரை அனைவருக்கும் இரண்டு நாள் அவஸ்த்தை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வருமான வரிக்கட்டாதவர்களுக்கு அடுத்த இரண்டு மாதம் அவஸ்தைப்பட போகிறார்கள். 

கவுன்சிலர்கள், ரியல் எஸ்டேட் வாதிகள், அரசாங்க ஊழியர்கள் போன்றவர்கள் நமது பணத்தை லஞ்சமாகவோ, கமிஷனாகவோ கொடுத்தது பழக்கப்படுத்தி நாம் தவறு செய்கிறோம். குறைந்தப்பட்சம் வேடிக்கைப்பார்த்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறோம். அந்த தவறுக்கு இரண்டு நாள் அனுபவிப்போம். 

நமது பணத்தை ஆட்டையப் போட்டவர்கள் இரண்டு மாதம் அவஸ்தைப்படட்டும். வருமான வரி துறையினரிடம் மாட்டி நஷ்ட ஈடுக்கட்டடும். 

மோடி அரசு எடுத்து வைத்திருப்பது முதல் அடியாக இருந்து, தொடர்ந்து கார்ப்பிரேட் ஆசாமிகள் மீது சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் கறுப்புப்பணம் ஒழிப்பு நடவடிக்கையில் நிச்சயம் பலன் தரும். கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த ஒரு நடவடிக்கைப் போதும் என்று நினைத்தால், புது ரூ.500, ரூ.2000 நோட்டு வந்ததும் ஆறு மாதத்தில் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்.

Wednesday, November 9, 2016

ரூ.500 - ரூ.1000 நோட்டு இல்லாத முதல் நாள் அனுபவம் !

காலையில் வண்டி டயர் பஞ்சராகி, மெக்கானிக் டயர்–டுயூப் இரண்டையும் மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார். ரூ.1500 ஆகும். கையில் பணம் இருந்தும் அதற்கு மதிப்பில்லை.“கிரெட் கார்ட் வாங்குவியானு” கேட்டேன். 

“இந்தியாவுலேயே பஞ்சர் கடைக்கு வந்து கிரெட் கார்ட் வாங்குவியானு கேட்ட முதல் ஆள் நீங்க தான்!” என்று கேட்பது போல் ரியாக்‌ஷன் கொடுத்தார். 

1.5. கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் MRF Dealer ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் கிரெட் கார்ட் மூலம் டயர் வாங்கிட்டு வாங்க என்று மெக்கானிக் கூறினார். 

MRF Dealer யிடம் நிலைமையை சொல்ல, என் கையில் இருக்கும் ஒரு ஆயிரம், ஒரு ஐந்நூறு நோட்டை வாங்கி புது டயர் கொடுத்தார். 

** 

பெட்ரோல் பங்க்கில் அவரவர் ரூ.100, ரூ.200 க்கு பெட்ரோலுக்கு ரூ.500 நீட்ட, சில்லரை குறைவாக இருக்கும் வேலை செய்யும் பெண் ”சில்லரை அதிகமா இல்லை. மத்தவங்களுக்கு கொடுக்கனும். இரண்டு மூனுப் பேர் ஷேர் பண்ணிக்கோங்க..” என்றாள். 

500/1000 ரூபாய் வாங்க மறுப்பது, பெட்ரோல் பங்க்யை மூடி வைப்பதை விட இது நல்ல யோசனையாக இருக்கிறது. 

அடுத்த இரண்டு நாளுக்கு பெட்ரோல் பங்க்கு இரண்டு, மூன்று வண்டியில் சென்று பெட்ரோல் போடுவது நல்லது. அவர்கள் சில்லரைத் தர வேண்டியதில்லை. உங்கள் தேவையும் நிறைவேறுகிறது. 

இதுப் போன்ற சூழ்நிலையில் எதிர்ப்பு, ஆதரவு என்ற இரண்டு குரலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. பேஸ்புக், டிவிட்டரில் லைக் மட்டுமே பெற்று தரும். 

ஒருவருக்கு ஒருவர் உதவி, நம்பிக்கை, பரஸ்பர ஒப்புதல் மட்டுமே இதுப் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மீண்டு வர முடியும்.

Thursday, November 3, 2016

அரசு அலுவலகச் சிஸ்டம்

எங்கள் பகுதி தபால் நிலையத்தில் ஸ்பீட் போஸ்ட், ரெஜிஸ்டர் பார்சல் கவுண்டரில் வயதானப் பெண்மணி ஒருவர் வேலை செய்கிறார். போன் பில், EB Bill போன்ற விஷயத்திற்கு தனி கவுண்டரெல்லாம் கிடையாது. எல்லாரும் அந்த கவுண்டரை தான் பயன்படுத்த வேண்டும். 

அந்த வயதானப் பெண்மணிக்கு கம்யூட்டர் ஆப்ரேட் செய்வதைப் பார்த்தால் ஆமையை விட மெதுவாக இயக்குவார் (வீடியோவில் இருக்கும் பெண்மணி மேல்). ஒவ்வொரு நாளும் அந்த கவுண்டரில் நிற்பவர்கள் அவரை வசவுப்பாடாமல் இருக்கமாட்டார்கள். கூட்டத்தின் கோபத்தை கட்டுப்படுத்த அந்தச் சமயத்தில் வேறு ஒருவரை உட்கார வைத்து வேலையை முடிப்பார்கள். சில சமயம் வசவு வார்த்தைகளை காதில் வாங்கி கொண்டு வேலை செய்வார். 

இது போதாதென்று அந்த பெண்மணிக்கு தமிழ் தெரியாது. வாடிக்கையாளர்கள் ஸ்பீட் போஸ்ட், ரெஜிஸ்டர் பார்சல் முகவரியை தமிழில் எழுதி வந்தால், அந்த அம்மாவின் நிலை அவ்வளவு தான். 

அவருக்கு கணக்கும் சரியாக தெரியாது. பல சமயம் சில்லரை கொடுக்கும் போது அதிகமாகவே கொடுப்பார். நியாயமாக இருப்பவர்கள் திருப்பி கொடுத்துவிடுவார்கள். சிலர் வந்தது லாபம் என்று எடுத்துச் செல்வார்கள். அந்த அம்மா தனது கை காசைப் போட்டு கணக்கு முடிப்பார். 

பல முறை தலைமை தபால் ஆபிஸரிடம் சொல்லியும் அந்தப் பெண்மணியை மாற்றவில்லை. காரணம், அவரை தவிர அந்த வேலையை செய்ய யாரும் முன் வரவில்லை. வாடிக்கையாளரை சந்திக்கும் கவுண்டரின் ஓய்வு கிடைப்பது குறைவு. மத்தியச் சாப்பாடு வரை கூட்டம் வந்துக் கொண்டே இருக்கும். மாதக்கடைசியில் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த பெண்மணி ஏமாந்தவர் என்பதால் இந்த வேலையை அவர் தலையில் கட்டிவிட்டார்கள். 

அவரைப் பற்றி விசாரித்தப் போது தான் தெரிந்தது கணவர் சர்வீஸில் இருக்கும் போது இறந்ததால் அவருக்கு தபால்துறையில் வேலை கொடுத்திருக்கிறார்கள். மகன் பத்தாவதோ, +1 படிக்கிறான். கணவர் இருக்கும் வரை வீடு தான் உலகம் என்று இருந்தவர், அவரின் மறைவுக்கு பிறகு தனது மகனையும், தன்னையும் காப்பாற்றுவதற்காக தெரியாத வேலையை கஷ்டப்பட்டு செய்கிறார். 

ஒரு வருடமாக அவரை கவனிக்கிறேன். முன்பைவிட பராவாயில்லை. அவர் தட்டுத்தடுமாறி எப்படியோ கம்யூட்டரை ஒரளவுக் கற்றுக் கொண்டுள்ளார். பாவம் தமிழ் படிக்கத்தான் தெரியவில்லை. கணக்கு போடுவதற்கு Calculator பக்கத்திலேயே வைத்திருக்கிறார். 

நியாயமாக அந்தப் பெண்மணி மீது கோபப்படுவது சரியா ? 


பொதுவாக, ஐ.டியில் வேலை செய்யாதவனுக்கு விழும் திட்டை விட அவர்களது மேலாளருக்கு தான் அதிக திட்டு விழும். காரணம், வேலை தெரியாதவனுக்கு வேலை கொடுத்தது அந்த மேலாளரின் தவறு. யாருக்கு என்ன வேலைக் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் மேலாளரின் வேலை. அதை செய்யத் தெரியாதவன் நல்ல மேலாளராக இருக்க முடியாது. இப்படித்தான் எல்லா தனியார் நிறுவனங்களிலும் இப்படி தான் நடக்கிறது. 

அரசு அலுவலகத்தில் மேலாளர்கள் விதிவிளக்காக வேலை செய்வார்கள். யார் ஏமாந்தவர்களோ அவரின் தலையில் வேலையை கட்டிவிடுவார்கள். அவர்களும் தனக்கு தெரிந்த வேலையை கொடுங்கள், தெரியாத வேலை கொடுக்காதீர்கள் என்று எதிர்த்து மேலாளரிடம் பேசமுடியாது. 

இன்று ஒரு நாள் பலு குறைவான வேலையை கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தால், அவரது வேலை செய்ய யாராவது ஒருவர் முன்வர வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த வேலையை அவர்கள் தான் செய்தாக வேண்டும். அப்போது தான், அவர்களது பிழைப்பு ஓடும். 

வங்கியில் இருக்கும் காஷியர் முதல் பேரூந்தை மெதுவாக ஓட்டும் ஓட்டுநர் வரை அவர்களது நிலைமை இது தான். தனக்கு கீழ் இருப்பவர்கள் எப்படி வேலைச் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் ஏசி அறையில் இருக்கும் அரசு மேலாளர்களை பொதுமக்கள் எளிதாக சந்திக்க முடியாத அரசு அலுவலகச் சிஸ்டம் செயல்படுகிறது. 

சொல்லப்போனால் பிரச்சனை அவர்களிடத்தில் மட்டும் இல்லை. இந்த சிஸ்டம் இப்படி தான் இயங்குகிறது என்று ஏற்க மறுக்கும் நம்மிடத்திலும் இருக்கிறது.

Wednesday, October 26, 2016

உலக சினிமா : Beautiful (2008)

‘ஆழகான பெண்ணை நம்பாதே’ என்ற வாசத்தை ஆட்டோவில் எழுதப்பட்டிருப்பதை படித்திருப்போம். உண்மையிலேயே பெண்ணின் அழகு ஆண்களுக்கு ஆபத்தாக இருக்கிறதா ? இல்லை. பெண்ணின் அழகை தேடிப் போகும் ஆண்களுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது. உண்மையில் பெண்ணின் அழகு ஆண்களைவிட சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது.

ஆண்களுக்கு ஆபத்து என்று சொல்வது கூட அந்தப் பெண் தனக்கு வரும் ஆபத்தை அடுத்தவர் மீது திருப்பிவிடுவது மூலம் தன்னை அவள் தற்காத்துக் கொள்கிறாள். 

கிம்-கி-டுக் கதை எழுதியப்படம். அவரின் உதவியாளரும், புது இயக்குனருமான ஜுஹ்ன் ஜெய்-ஹங் இயக்கியிருக்கிறார். படத்தை கிம் கி டுக் இயக்கவில்லை என்ற குறை தவிர, அவரது படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. அதாவது அவரின் ’உடல் அரசியல்’.

ஒரு வேலை கிம்-கி-டுக் இயக்கி, ஜுஹ்ன் ஜெய்-ஹங் பெயரை இயக்குனராக போட்டுவிட்டாரோ என்று தோன்றும். கதையும், அதன் காட்சியமைப்பும் எல்லாம் கிம்-கி-டுக்கின் சாயல் அதிகமாக இருக்கும்.

ஒரு பெண்ணுக்கு அழகு எவ்வளவு பெரிய சாபம் என்பதை தனது கதையில் யூன்-யியாங் பாத்திரம் மூலம் காட்டுகிறார்.ஆரம்பக்காட்சியில், யூன்-யியாங்யை பொறாமை கண்களால் அவளது தோழி பார்க்கிறாள். அவளை போல் தான் அழகில்லை என்பதை ஏக்க மூச்சு விடுகிறாள். யூன்-யியாங்யை வெறுப்பேற்ற தனது காதலனை அறிமுகம் செய்கிறாள். ஆனால், அவளுடைய காதலன் ஏற்கனவே யூன்-யியாங்கிடம் காதலை சொல்லி, அவள் ஏற்காமல் மறுத்திருக்கிறாள். 

அவள் எங்கு சென்றாலும் ஆண்களின் கண்ணில் ஒரு காமப்பார்வை பார்ப்பதை அவள் உணர்கிறாள். அதை கடந்து தனது இயல்பு பணிகளை யூன் செய்கிறாள். 

அவளது அப்பார்ட்மெண்ட் காவலாளி யூன் – சீயோல் அவளை ஒரு தலையாய் காதலிக்கிறான். அதேப் போல், யூன்-யியாங்யை இன்னொருவன் அவளுக்கே தெரியாமல் ஒருதலையாய் காதலிக்கிறான். யூன் தோழியின் காதலன் யூன்-யியாங்யிடம் தவறாக நடந்துக் கொள்ள, யூன் – சீயோல் அவனை அடிகிறான். இதனால், யூன்-யியாங்யின் தோழிக்கு அவள் மீது வெறுப்பு அதிகமாகிறது. அவர்களுக்குள் நட்பு முறிகிறது. 

மன வருத்தத்தில் தனது அப்பார்ட்மெண்ட்டுக்கு வரும் யூன், ஒரு தலையாய் காதலித்தவன் அவளுக்கு தொல்லை கொடுக்கிறான். அவனது காதலை அவள் மறுக்க, வெறிக் கொண்டு அவளை கற்பழிக்கிறான். காவலர்கள் அவனை கைது செய்கிறார்கள். 

அப்போது அவளை கற்பழித்தவன், “நான் தவறு செய்ததற்கு காரணமே உன்னுடைய அழகு தான் காரணம்.” என்கிறான். 

தான் கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியில் மீள முடியாமல் சாலையில் நடக்கும் போது மயக்கம் போட்டு கீழே விழ, அவளை காப்பாற்ற ஆண்கள் ”நான், நீ” என்று போட்டிப் போடுகிறார்கள். ஆண்கள் தன்னை மொய்ப்பதற்கு காரணம் தன்னுடைய அழகு தான் என்று வெறுப்படைகிறாள். தன் அழகை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். 

தனது உடல் ஏடையை ஏற்றுக்கொள்வதற்காக வெறித்தனமாக உண்கிறாள். ஏடைப்போடும் உணவு பொருள் வாங்க வழியில்லாத போது திருடி உண்கிறாள். ஆனால், அவள் திருடிய பொருளுக்கு யூன் – சீயோல் பணம் கொடுக்கிறான். திருடிய பொருளை கழிவறையில் வெறித்தனமாக சாப்பிடும் போது வயிற்று வலியில் மயங்கி விழுகிறாள். 

அப்போது, யூன் – சீயோல் வந்து அவளை பார்க்க, தன்னையறியாமல் அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். தன் தவறை உணர்ந்து, தன்னை தானே கண்ணத்தில் அடித்து அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். 

அவளை பரிசோதித்த மருத்துவரும் அவளை பரிசோதிப்பது போல் மார்ப்பகங்களில் கை வைக்கிறான். யூன்-யியாங் சுதாரித்து கொண்டு மருத்துவரை தடுக்க, அவர் அதிகமாக சாப்பிட்டதால் வயிறு வலி வந்தது என்று சொல்லி சமாளிக்கிறான். 

வீட்டுக்கு வரும் யூன்-யியாங் தன்னை ஒல்லியாக்கி கொள்வதில் முடிவு எடுக்கிறாள். அதற்காக மாத்திரை சாப்பிடுகிறாள். உடற்பயிற்சி செய்கிறாள். உணவு குறைத்துக் கொள்கிறாள். அவள் தன்னை வருத்திக் கொண்டு செய்யும் காரியத்தால் தன்னை பலவீனமாக்கிக் கொள்கிறாள். உடற்பயிற்சியின் போது மயங்கிவிழுகிறாள். 

அவளை காப்பாற்றிய யூன் – சீயோல் அவளை போட்டோ எடுக்கிறான். பின்பு தனது அறையில் அவளது புகைப்படங்களை மாட்டி அழகுப் பார்க்கிறான். 

இன்னொரு பக்கம், தனது செய்கையால் யூன்-யியாங் தன்னை பலவீனமாக்கி வருவதை உணர்கிறாள். அவள் சாதாரனமாக உண்ணும் உணவுக்கூட அவளுக்கு செரிக்காமல் வாந்தி வருகிறது. கண்ணாடியில் தனது முகத்தை பார்க்கும் போது, எப்படி தன்னை தானே சிதைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறேன் என்பதை புரிந்துக்கொள்கிறாள். 

தன் அழகு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதை அவள் தடுக்க நினைக்கிறாள். அதிகமாக மேக்-கப், ஆண்களை கவரும்ப்படியான கவர்ச்சி உடையில் செல்கிறாள். ஒரு ஆண் அவளிடம் சிரித்து பேச, அவளும் அவனுக்கு இனங்கி உறவுக்காக கழிவறைக்கு செல்கிறாள். ஆனால், அங்கு சென்றதும் அவள் மனம் மாறுகிறது. அவனிடம் தப்பிக்க அவனை தாக்குகிறாள். அடிவாங்கியவன் யூன்-யியாங்யை தாக்க முயற்சிக்க, அப்போது யூன் – சீயோல் அங்கு வந்து அவளை காப்பாற்றுகிறான்.

யூன்-யியாங்னுக்கு தன்னை கற்பழித்தவன் பின் தொடர்வது போன்ற பிரம்மை ஏற்படுகிறது. சிறுசிறுக அவள் மன சிதைவு ஏற்படுவதை யூன் – சீயோல் புரிந்துக்கொள்கிறான். அதனால், அவளை நிழல் போல் தொடர்கிறான். மனசிதைவில் அவள் தாக்க நினைக்கும் ஆண்களையும் காக்கிறான். அவள் வீட்டுமுன் நாய் போல் கிடக்கிறான். 

யூன்-சீயோல் யூன்-யியாங் மீது காதல் இருந்தாலும், எல்லா ஆண்களை போல அவள் உடல் மீது ஆசை இருக்கிறது. யூன்-யியாங்க்கு யூன்-சீயோல் மீது பரிவு வருகிறது. ஆனால், அவளின் மனம் யாரையும் ஏற்பதாக இல்லை. சீயோல் அவளை காப்பாற்ற முடியாமல் செயலற்றவனாக இருக்கிறான். அதனால், தனது கை தூப்பாக்கியை அவளது கரத்தில் ஓட்டி வைக்கிறான். மயக்கத்தில் இருக்குன் யூன்-யியாங்னுடன் உடலுறவு கொள்கிறான். 

மயக்கத்தில் இருந்து விழிக்கும் யூன்-யியாங் புன்னகையுடன் அவனை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால், ஒரு கட்டத்தில் தன் கையில் இருக்கும் தூப்பாக்கியால் அவளை சுட்டுக்கொள்கிறாள். கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் யூன்-யியாங் இறந்த யூன் – சீயோல் உடலை பார்த்து அலருகிறான். 

கை தூப்பாக்கியோடு வெளியே வரும் யூன்–யியாங் கண்ணில் படும் ஒவ்வொரு ஆண்ணையும் சுட்டுக்கிறாள். அவள் கண்ணுக்கு ஒவ்வொரு ஆண்ணும் அவளை கற்பழித்தவன் போல் தெரிகிறது. யூன்–சீயோல்லை சுட்டதற்கு காரணம் இது தான் என்பது புரிகிறது. அப்போது, அங்கு வரும் காவலர்கள் அவளை சுட, அவள் இறக்கிறாள். 

பிரேதப் பரிசோதனையில் யூன்–யியாங்யின் உடல் நிர்வணமாய் கிடக்க, பரிசோதனை செய்யும் மருத்துவரும் அவளின் உடலை புணர, படம் முடிகிறது. 

அழகான பெண்ணின் உடலுக்கு அவள் இறந்தப்பின்னும் ஆண்களிடம் இருந்து விடுதலை கிடைப்பதில்லை என்பதை படம் நமக்கு காட்டுகிறது. பெண்ணுக்கு எதிராக நடக்கும் வன்முறை, அவளை எந்த அளவுக்கு பாதிக்கிறது, அதனால் தன்னை தானே வெறுக்க தொடங்குகிறாள் என்ற உண்மையை “Beautiful” படம் உணர்த்துகிறது. 

பெண்ணுக்கு இலைக்கப்படும் பாலியல் கொடுமை அவர்களின்  உடலை மட்டுமல்ல. மனதையும் சேர்த்து பாதிக்கிறது. ஆண்ணின் பாலியல் உணர்வுக்காக உயிரை, வாழ்க்கையை இழந்தப் பெண்கள் ஏராளம். அவர்களிடம் தங்களை காப்பாற்றிக் கொள்ள பெண்கள் அழகை ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

செடியில் இருக்கும் அழகிய ரோஜா பார்ப்பது அழகாக இருக்கும். அதை பரிப்பதில் இருந்து அது தனது மரணத்தை நோக்கி பயணிக்கிறது. ஏறக்குறைய பெண் உடல் மீது நடத்தப்படும் வன்முறையும் பூவை பரிப்பதற்கு சமம் தான். வன்கொடுமையில் இருந்து மீண்டு வந்த பெண் இயல்பாக வாழ்ந்தாலும், வாழும் ஒவ்வொரு நாளும் உடலாலும், மனதாலும் நரகத்தையும், மரணத்தின் வலியையும் அனுபவித்து வருகிறாள்.

Monday, October 24, 2016

எப்படி ? இப்படி ? - பட்டிக்கோட்டை பிரபாகர்

ஒவ்வொரு மர்ம நாவலுக்கு பின்னால் எதோ உண்மையான குற்றம் ஒழிந்திருக்கிறது. உண்மையும், புனைவும் கலந்த ஒரு புள்ளி தான் மர்ம நாவலின் அடித்தளமாக இருக்கிறது. அப்படி மர்ம நாவலின் ஆசானான பட்டிக்கோட்டை பிரபாகர் புனைவு அல்லாத உண்மை சம்பவங்களின் குற்றத்தைப் பற்றி எழுதியிருக்கும் நூல் ‘எப்படி ? இப்படி ?’. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சுடப்பட்டதில் இருந்து அமெரிக்காவின் மர்லின் மன்றோ மரணம் பின் வரை நடந்த சம்பவங்கள், வழக்கு விசாரணை, தீர்ப்பு என்று 31 உண்மை குற்றச் சம்பவங்களை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவம் மர்மமான சிறுகதை போல் இருக்கிறது. சில வழக்கின் தீர்ப்புகள் இந்திய நீதிமன்றத்தில் பணம் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. 

உண்மை குற்றவியல் சம்பவங்களை வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நூல்… 

Wednesday, October 19, 2016

என் பிரியமான போட்டியாளர் என்.சொக்கன் !

என் பிரியமான போட்டியாளர் என்.சொக்கன். 

“இதை நான் சொல்லும் போது எனக்கு நீயெல்லாம் போட்டியாளனா என்று சொக்கன் நினைக்கக்கூடும். 

ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருப்பார். நான் முப்பது புத்தகம் கூட தாண்டியிருக்க மாட்டேன். அதில் பாதி அச்சில் கூட வரவில்லை.

சொக்கன் எழுத்தில் சந்திப்பிழை இருக்காது. எனக்கு சந்தி தாண்டவமாடும். ( இந்தப் பதிவில் எத்தனை சந்திப்பிழை இருக்கிறது என்பதை பார்த்தால் உங்களுக்கே என்னைப் பற்றி தெரியும்.) 

ஏணி வைத்து எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் சொக்கனை நான் ஏன் போட்டியாளராக நினைக்க வேண்டும்? 

அதற்கும் காரணம் இருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுத பா.ரா தொடர்பு கொள்ளும் போதெல்லாம், “இந்த புக் சொக்கன் எழுதுறான்” என்பார். அல்லது சொக்கன் எழுதி முடித்து புத்தகமாக வந்திருக்கும். ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட்டு ஏதாவது தலைப்பு நான் யோசிப்பதற்குள், சொக்கன் செயலில் இறங்கிவிடுவார். 

ஐ.டி.ஊழியர்களைப் பற்றி எழுதலாம் ? என்று பா.ராவிடம் சொல்லும் போது, சொக்கன் விகடன்ல “வல்லினம் மெல்லினம் இடையினம்” தொடர் எழுதுவதாக கூறினார். 

I give up. கிழக்கில் எழுதுவது தான் பிரச்சனை. Prodigy எழுதலாம் என்று “கலீலியோ கலீலி”, ”ரைட் சகோதரர்கள்” எழுதினேன். 

”RAW இந்திய உளவுத்துறை” எழுதலாம் என்று நினைக்கும் போது, “ அப்பா சொக்கா !!! RAW நீங்க எழுத தொடங்கலையே” என்று கேட்டேன். 

“எழுதலாம் நினைச்சேன். வேற வேலையில விட்டுட்டேன்.” என்றார்.

”புண்ணியமா போகும். எழுதாதீங்க… நா எழுதுறேன்” என்று சொல்லி எழுதத் தொடங்கியது தான் R.A.W. 

F.B.I., C.I.A., Mossad, K.G.B என்று எழுதியவர் ‘R.A.W’ எழுதவிடாமல் செய்த அவரின் பணிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 

ஓ.கே… ஜோக்ஸ் அப்பார்ட். ஜிப்ரான் கதைகளை மிட்டாய் கதைகள் என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். வாழ்க்கை வரலாறு, வரலாறு, தொழிட்நுட்ப கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார். ”தினம் ஒரு பா” என்று மரபு இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. ‘நல்ல தமிழில் எழுதுவோம்’ என்று இலக்கணத்தையும் விட்டு கொடுக்கவில்லை. 

சமக்காலத்தில் ஒரு Versatile Writer என்று சொன்னால் என்.சொக்கனை குறிப்பிடுவேன். நேர்த்தியான நடையை முழுவதுமாக குத்தகைக்கு எடுத்து எழுதியது போல் இருக்கும். 

அவர் ஆரம்பக்கால சார்லி சாபிளின் வரலாறு தொடங்கி அம்பானி, நாராயண மூர்த்தி, அயோத்தி, F.B.I., C.I.A., Mossad, K.G.B, அக்பர் என்று அவரின் பெரும்பாலான புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். 

இப்போது சொக்கனை பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணம் “வண்ண வண்ணப் பூக்கள்” நூல். 

இயல், இசை, நாடகம் குறித்து அவர் கூறும் விளக்கம், பொருள் என்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக, பாடகர்கள் மாற்றி உச்சரிக்கும் வார்த்தைகளால் பாடலாசிரியர் எழுதிய பொருள் மாறுப்படுவதை எடுத்து கூறிய விதம் ரசிக்கும் படியாக இருந்தது. 

இந்தப் புத்தகம் வாசிப்புக்கான நூல் இல்லை. ரசனைக்கான நூல். இன்னும் சொல்லப்போனால் ரசனையோடு வாசிக்கப்பட வேண்டிய புத்தகம். இதை வாசித்தப் பிறகு அவர் குறிப்பிட்டிருக்கும் பாடலை மீண்டும் கேட்கிறேன். இந்த அளவுக்கு நுணுக்கமான ரசனை கொண்டவரா சொக்கன் என்று வியக்க வைக்கிறார். 

ஒரு முறை பத்ரி கூறியிருக்கிறார், “புத்தகம் எனக்கு விற்பனை பண்டம்” என்று. எனக்கும் அப்படி தான். என் பொருளாதார நிலைமை அப்படி நினைக்க வைக்கிறது. ஆனால், சொக்கனுக்கு புத்தகம் என்பது புத்துயிர் கொடுக்கும் அமிர்தம். 

குறிப்பாக, “ஏழு கருவிகள்” என்ற கட்டுரையில், ”எல்லாம் ஒழுங்காக வர வேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலை மீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின் மீது இருக்கும் முனைப்பு. 

 உண்மையில், சொக்கனிடம் இருந்து நான் கற்க நினைத்து, இன்று வரை கற்க முடியாமல் நிரம்ப இருக்கிறது. 

Monday, October 17, 2016

பதிப்பகம் தொடங்கும் ஆசை ?

எப்பொதெல்லாம் பதிப்பகம் தொடங்கும் ஆசை வருகிறதோ, அப்போதெல்லாம் ‘நாகரத்னா பதிப்பகம்’ சார்பாக வெளியிட்டப் புத்தகங்களை பார்ப்பேன். மீண்டும் பதிப்பகம் தொடங்கும் ஆசை பறந்துவிடும்.

கடந்த இரண்டு மூன்று மாதமாக மீண்டும் பதிப்பகம் தொடங்க வேண்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம், நான் எழுதி கொடுத்த நூல்களை பதிப்பகங்கள் உரிய நேரத்தில் வெளியிடாமல் இருப்பது தான். ஏறக்குறைய எட்டு நூல் நான்கு பதிப்பகத்திடம் வெளியிடப்படாமல் இருக்கிறது. எப்போது வெளியிடுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத ரகசியம்.

இதனால், அடுத்த எழுதிய இரண்டு நூலை எந்தப் பதிப்பகத்திடமும் கொடுக்கவில்லை. மீண்டும் பதிப்பகம் தொடங்கி நாமே வெளியிடலாமா என்ற சிந்தனை வருகிறது. பணம் பிரச்சனை இல்லை. அச்சடிக்கும் நூல்களை வைப்பதற்கு இடம் இல்லை. முந்தைய நூல்கள் இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் படித்த புத்தகங்கள் வைப்பதற்கு கூட இடமில்லாமல், நாகரத்னா பதிப்பக நூல்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டியதாக இருக்கிறது. அதையும் மீறி சென்னை மழையில் சில நூறு பிரதிகள் பாதிக்கப்பட்டது. அப்படியாவது புத்தகம் செல்கிறதே என்று நினைத்து சந்தோஷப்படும் மனநிலை இருக்கிறேன்.

பதிப்பகம் தொடங்கும் ஆசை குறைத்துக் கொள்வதற்காக, என் வீட்டை ஆக்கிரமித்திருக்கும் நாகரத்னா புத்தகத்தை எண்ணிக்கை வெளியிடுகிறேன்.2012ல் வெளிவந்த புத்தகங்கள் Stock விபரங்கள்…
கேபிளின் கதை – 748 
என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிக்குமார் - 596 
பிணம் தின்னும் தேசம் – 412 
விழிப்பறி கொள்ளை – 333

2010ல் வெளிவந்த புத்தகங்கள் Stock விபரங்கள்… 
டைரிக்குறிப்பு காதல் மறுப்பும் – 524 
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் – 258

2010 முன்பு வெளியிட்ட நூல்கள்… 
எனது கீதை – 488 
என்னை எழுதிய தேவதைக்கு - 56 

நாகரத்னா பதிப்பகத்தில் 300-500 பிரதிகள் அச்சத்தடித்த நூல்கள் லாபம் தரவில்லை என்றாலும், பெரிய நஷ்டம் கொடுக்கவில்லை. மேல் குறிப்பிட்ட அனைத்து நூல்களும் 1000 பிரதிகள் அடித்தது. நஷ்டம் ஏற்படுத்தியதை விட இடம் ஆக்கிரமிப்பை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

என் புத்தகம் இத்தனை பிரதிகள் விற்பனையாகியிருக்கிறதா என்று எழுத்தாளர்கள் சந்தோஷப்பட வேண்டாம். என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிக்குமார், லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும், என்னை எழுதிய தேவதைக்கு… இந்த மூன்று நூல் மட்டும் தான் எனக்கு Breakeven கொடுத்தது (லாபம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க). 

சென்னை மழையில் கொஞ்சம், சில புத்தக விற்பனையாளர் ஸ்வாகா செய்தது கொஞ்சம் என்று காணாமல் போன பிரதிகளை கணக்கில் கொண்டு வரவில்லை. அதுவெல்லாம் போக கையில் இத்தனை பிரதிகள் இருக்கிறது. இதையெல்லாம் எப்படி காலி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்கி வருவதால், பல எழுத்தாளர்கள் சொந்தப் பதிப்பகம் தொடங்குவார்கள். அவர்களுக்கு ஒரு ப்ரீ அட்வைஸ்… 1000 பிரதிகள் அடிக்க வேண்டாம். அதே சமயம் POD மூலம் 200-300 பிரதிகள் அடிக்க வேண்டாம். 500 பிரதிகள் அச்சடித்து என்னால் விற்பனை செய்ய முடியும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே பதிப்பகம் தொடங்கலாம். இந்த நம்பிக்கையில் கொஞ்சம் குறைவதாக உங்களுக்கு தோன்றினாலும், உங்கள் பழைய பதிப்பகத்தோடு சமசரமாக சென்று கொடுக்கும் ராயல்டியை வாங்கிக் கொள்ளுங்கள். 

ராயல்டி பிரச்சனைக்காக வேறு பதிப்பகம் சென்று, இரண்டு மூன்று பதிப்பகம் மாற்றி… கடைசியில் பழைய பதிப்பகத்திடம் சரணடையும் கதை இங்கு ஆயிரம் உண்டு. ( பல பிரபல எழுத்தாளர் ஒரு ரவுண்ட் அடித்து, கடைசியில் தங்கள் பழைய பதிப்பகத்தில் தஞ்சமடைந்திருப்பதை கவனத்தில் கொள்க !) 

இந்த பதிவில் எனது எழுத்தாளர்களை குறைச் சொல்ல விரும்பவில்லை. அது என் நோக்கமுமில்லை. பதிப்பகம் தொடங்குவது விளையாட்டான விஷயமில்லை. வரும் லாபத்தை விட இரண்டு மடங்கான உழைப்பை கொட்ட வேண்டும். நஷ்டத்தை விட அதிகமாக நம்மை பாதிப்பது விற்பனையாக புத்தகங்கள். இந்த இரண்டு விஷயத்தை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். 

பதிப்பகம் தொடங்குவது… வியாபாரிகளின் வேலை. வியாபார சிந்தனையில்லாத எந்த எழுத்தாளரும் பதிப்பகம் தொடங்கினால் நிலைமை இதுவாக தான் இருக்கும். 

பின்குறிப்பு : இந்த பதிவை எழுதிய நான் விரைவில் புது பதிப்பகம் தொடங்கினால், அதற்கு காரணம் நானல்ல… என் பதிப்பகங்கள் .

Sunday, October 9, 2016

தேவி ( 2016 ) - திரை விமர்சனம்

விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் படங்களுக்கு மத்தியில் Comeback நாயகன் பிரபு தேவா களம் இறங்கியிருக்கிறார்.

படத்தில் பேய் இருக்கிறது. ஆனால், பயமுறுத்தவோ, பழிவாங்கவோ, கொலை செய்யவோ இல்லை. கதாப்பாத்திரங்களோடு கதாப்பாத்திரமாக வருகிறது. அதுவும் உருவம் இல்லாமல் வருகிறது.எப்படி பேய் பிடித்தது, பேய் பிடிக்கும் முன் பயமுறுத்தும் formalities காட்சிகள் எல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் வழக்கமான பேய்-காமெடி படமில்லை. காமெடிப் படம்.

பேய் பிடித்திருக்கிறது என்று நமக்கு உணர்த்திவிட்டு நேராக கதைக்கு சென்றிருக்கிறார்கள்.

பிரபு தேவாவுக்கு நல்ல Comeback படம். இளம் நாயகர் கொஞ்ச ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

தமன்னா ஹிந்திப்படத்திற்கான கவர்ச்சியை காட்டியிருக்கிறார். ( படம் ஹிந்தியிலும் வெளியாகுவதால் இருக்கலாம்.)

100 % காமெடிப் படம். குடும்பத்தோடு பார்க்கலாம்.

Tuesday, September 27, 2016

கவிதை : வாணி ஸ்ரீ !

அன்று என் காதலை மறுத்தவள்
இன்று பேஸ்புக்கின் என் நட்பை ஏற்க மறுக்கிறாள்

அன்றும் என்னை கடந்து போக விரும்பியவள்
இன்று என்னை பார்க்க விரும்பாதவளாக இருக்கிறாள்

என்றோ ஒரு நாள்
நீ என்னை மீண்டும் பார்த்தாள்
அடையாளம் தெரிவதற்காகவே
உடல் எடைப்போடாமல்
அதே எடையில் இருக்கிறேன்!
தலை முடிக்கு
கருப்பு சாயம் பூசுகிறேன் !

அந்த ஒற்றை நாளுக்காக
பல நாட்களாக
என்னை நான் பாதுகாத்துவருகிறேன் !

சந்தேகம் இல்லை
நீ என் வாணி ஸ்ரீ தான்
மாறவே இல்லை !
இந்த அளவுக்கு
ஒரு ஆணின் இதயத்தை உடைக்க
உன்னால் மட்டுமே முடியும் !!

ஆனால்,
அன்றும் சரி, இன்றும் சரி
நான் சிவாஜி கணேசன் அல்ல !

உன்னிடம் ஒரு நொடிக் கூட
நடிக்க தெரியாதவன் நான்
எப்படி சிவாஜியாக முடியும் ?

வாணி ஸ்ரீ !
நீ மறுப்பாய் என்று தெரிந்தும்
ஒரு முறை
உன்னை பார்க்க வேண்டும்
என்று என் மனம் விரும்புகிறது !

நீ என்னை மீண்டும் பார்த்தால்
அடையாளம் தெரிவதற்காகவே
நான் மார்க்கண்டேயனாக
 காத்திருக்கிறேன் !

Thursday, September 15, 2016

காவேரி பிரச்சனை

அரசியல் பிரச்சனையல்ல, கார்ப்ரேட் நிறுவனங்களால் உருவான பிரச்சனை.

காவேரி பிரச்சனையில் தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் வாய் திறக்கமாட்டார்கள். திறக்கவும் முடியாது. காரணம், விவசாயம் நிலம் அழிந்தால் தான் GAIL பிராஜெக்ட் கொண்டு வர முடியும். காவேரி நீர் வராமல் இருந்தால் தான் அவர்கள் சுதந்திரமாக மணல் கொள்ளை நடத்த முடியும். அவர்கள் நமக்காக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள் தனம். 

அடுத்து கன்னட சகோதரர்கள். தமிழ்நாட்டில் கொடுக்கும் நீரை குறைத்துக் கொண்டு தங்களுக்கு கொடுக்க போகிறார்கள் என்று நம்புகிறார்கள். விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். 

காவேரி பிரச்சனை உருவாக்கியது அங்குள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள் நீர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், அங்கு உருவாக இருக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் நீர் தேவைக்காகவும் தான். அதற்காக செயற்கையான நீர் பற்றாக்குறையை உருவாக்கி இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார்கள். (நான்கு வருடம் முன்பு கூடாங்குளம் அணுமின்நிலையம் திறப்பதற்காக செயற்கையான மின்சார பற்றாக்குறை உருவாக்கியது போல் தான் இதுவும்.) 

கார்நாடகாவில் அரசியல்வாதிகள் அனைவரும் காவேரிக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்பதும், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் அனைவரும் மௌனமாக இருப்பதும் கார்ப்ரேட் நிறுவனத்தின் லாபத்திற்காக மட்டுமே. 

இதில் முட்டாள் தனமாக பாதிக்கப்படுவது இரண்டு மாநில மக்கள் தான் !!

இந்தியாவை அரசியல்வாதிகள் ஆளவில்லை. கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் ஆள்கிறது!! 

Friday, August 5, 2016

கவலை இல்லாத மனிதன் !

கண்ணதாசனுக்கு அதிகம் கவலை தந்த படம். அவர் தயாரித்த முந்தையப் படங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் நஷ்டம் கொடுக்கவில்லை. ஆனால், இந்தப்படத்தில் சந்திரபாபு ஒத்துழைப்பு இல்லாததால் படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. 

படப்பிடிப்பு இடையில் சந்திரபாபு பேசிய சம்பளத்தை விட அதிகமாக கேட்டார். அந்தக் காலக்கட்டத்தில், சிவாஜி வாங்கிய சம்பளத்தை விட அதிகமான சம்பளத்தை சந்திரபாபுவுக்கு கொடுக்க வேண்டியதாக இருந்தது என்று கண்ணதாசன் தனது சுயசரிதையில் புலம்பியிருப்பார். வேறு பல தடைகளும் இந்த படத்திற்கு இருந்தது என்பது தனிக்கதை. 

படம் மிகப் பெரிய தோல்வி. இருந்தாலும், கண்ணதாசன் வரிகளில் சந்திரபாபுவின் குரல் வரும் பாடல்கள் நம்மை எதோ செய்யும். சில வரிகள் நமது ஆறுதலாக இருக்கும், இன்னும் சில வரிகள் நம்மையறியாமல் கண்ணீர் சிந்த வைக்கும். 

குறிப்பாக, “பிறக்கும் போதும் அழுகின்றாய்” என்ற பாடலில்... 

இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் 
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.” 

நமது சோகத்தை மறு பரிசீலனை செய்ய வைக்கும் வரிகள். ஒரு வேளை இந்த படம் வெற்றி பெற்றிருந்தால், இரண்டு கலைஞர்கள் மனது ஆறுதலான பாடல்களை கொடுத்து கொண்டே இருந்திருப்பார்கள். 

”கவலை இல்லாத மனிதன்” இரண்டு கலைஞர்களுக்கு மன உலைச்சல் கொடுத்தாலும், ரசிகன் மனதுக்கு ஆறுதலாக பாடல்களை கொடுத்திருக்கிறது 

பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் 


 கவலையில்லாத மனிதன்
Monday, August 1, 2016

என் கதை – கமலாதாஸ்

இந்தியாவில் அதிகம் விற்பனையான பெண் சுயசரிதை என்றால் கமலாதாஸின் “என் கதை” தான். 

இதற்கு முன் தமிழில் காப்புரிமையில்லாமல் கமலாதாஸின் “என் கதை” சுமாரான எழுத்துநடையில் வந்திருக்கிறது. எதுவும் வாசிக்க உகந்ததாக இல்லை. காலச்சுவடு பதிப்பகம் முறையாக காப்புரிமை வாங்கி வெளியிட்டு இருக்கிறார்கள். 

இந்த நூல் மலையாளத்தில் “என்டே கதா” என்ற பெயரில் வெளியிட்ட வருடம் 1973. அப்போது, கமலாதாஸூக்கு வயது 39. இரண்டு குழந்தைக்கு தாய். கணவனோடு வாழ்ந்து வருபவர். இப்படிப்பட்ட குடும்பப் பின்னனியில் இருப்பவர், தனது பதின்ம வயதில் அனுபவம் தொடங்கி, திருமணம் உறவு, அந்தரங்க காதல், காமம் என்று அனைத்தும் துணிவோடு பகிர்ந்து இருக்கிறார். தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கபட்டும் என்ற அச்சத்தை ஒடைத்து எரிந்தெரிந்திருக்கிறார். 

 “என் கணவரின் முன்பு எனக்குக் காமவேட்கை எழுந்ததில்லை. அவரெதிரில் என் காமவேட்கை எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. அறிவாற்றல் மிகுந்த எனது காதலர் என்னிடம் எப்போதும் பித்துப்பிடித்த பாலியல் மோகத்தை எழுப்புகிறார். அவர் என்னைத் திருப்திப்படுத்தியபோதிலும் அவர் திருப்தியடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஒரு முறை உடலுறவுக்குப் பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருந்தபோது என் கன்னங்களை அழுத்திக்கொண்டிருந்த அவரது உள்ளங்கை சட்டென்று மென்மையடைவதாக எனக்குத் தோன்றியது. அவர் ரகசியமாக மெல்ல எனது பெயரை உச்சரிப்பதைக் கேட்டேன். "

 இப்படி ஒரு பெண் சொல்லும் போது நமது சமூகம் அவளது ஒழுத்ததை கேள்வி கேட்கும். ஒரு பெண் உடலுறவின் கொண்டாட்டத்தை வெளிப்படையாக சொல்வதே தவறு. அதுவும் கணவனல்லாத ஒரு ஆண்ணுடன் கொண்ட உறவை, கணவனோடு கொண்ட உறவோடு ஒப்பிட்டு அதைவிட தனது காதலனுடன் இருந்த உறவை பெருமையாக பேசுவதை தங்கள் பண்பாட்டை கட்டிக்காப்பதாக சொல்லும் மாயச் சமூகம் ஏற்காத விஷயம். 

இந்தச் சமூக ஏற்றுகொண்ட ஓழுக்க விதிகளை கமலாதாஸ் பொருட்படுத்தியதில்லை. அதை ஏற்றுகொண்டதும் இல்லை. ஒழுத்தை பற்றி அவர் கூறும் கருத்து இது தான். 

 ”அழியக்கூடிய மனித உடலே இந்த ஒழுக்கத்தின் அடிக்கல். அழிவற்ற மனித ஆத்மாவில் அல்லது அதைக் கண்டறியக்கூடிய உருவாக்கப்பட வேண்டியதுதான் உன்னதமும் வணங்கத்தக்கதுமான ஒழுக்கம் என்று நம்புகிறேன்.” 

எழுபதுகளில் ஒரு பெண் இவ்வளவு துணிவோடு எழுதியதில்லாமல், தன்னுடைய சுயசரிதை இது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் கமலாதாஸ். சர்ச்சை நிறைந்த இந்த புத்தகம் அதிக விற்பனையானதற்கு இதுவும் ஒரு காரணம்.  ** 
திருமண பந்தத்தில் வரும் காமம் வேறு, காதலில் வரும் காமம் வேறு…. இரண்டும் காமம் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது. 

திருமண பந்தத்தில் வரும் காமம் ஒரு commitment. சில சமயம் ஒருவர் விருப்பமில்லை என்றாலும், இன்னொருவர் விருப்பத்திற்காக ஈடுப்பட வேண்டியதாக இருக்கும். இருவரின் ஒருவரே திருப்தியடைந்த உறவாக முடியும். இருவருக்கும் வேறு சாய்ஸ் இல்லாத உறவு என்று கூட சொல்லலாம். 

 ஆனால், காதலில் வரும் காமம் அப்படியில்லை. இருவரும் கொண்டாட நினைக்கும் விஷயம். இருக்கும் கொஞ்ச நேரத்தை வீணடிக்காமல் உறவை முழுவதுமாக அனுபவிக்க நினைக்கும் உறவு. பண்பாடு, கண்ணியம் எல்லாம் மறந்து, கட்டிலில் தங்களை தாங்களே அடையாளம் கண்டுக் கொள்ளும் உறவு. உறவு முடிந்து இருவரும் தங்கள் வேலையை பார்க்க செல்லலாம். ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முடியாது. 

 இந்த இரண்டு உணர்வின் வித்தியாசத்தை கமலாதாஸ் “என் கதை” நூலின் தெளிவான நீரோடைப் போல் பதிவு செய்திருக்கிறார். 

தனது அந்தரங்கக் காதலைப் பற்றி ஆண்களே வெளிப்படையாக பேச தயங்கும் காலத்தில் இருக்கிறோம். ஆனால், கமலாதாஸ் 70களில் தனது காதலனோடு இருக்கும் பொழுதை இப்படி விவரிக்கிறார். ஒரு மூதாட்டி என்னிடம் கூறினாள் 

“ மேம்சாஹிப். நீங்க அந்த எடத்துக்குப் போகாதீங்க. அங்க போறது ஆபத்தானது”. ராஜாவுக்கு ஏழைகளின் மத்தியில் எந்தவித நற்பெயரும் கிடையாது. ஆனால், அவரெதிரில் போய் நின்று அவரை விமர்சிக்க யாருக்கு தைரியமில்லை. 

வாரத்தில் ஓரிருமுறை ஒரு மணப்பெண்ணின் ஆடையலங்காரங்களுடன் அவரைச் சந்திக்கப் போனேன். ஓய்வறையின் கதவு சாத்தப்படும்போது அவர் தாகம் நிறைந்த உதடுகளுடன் என்னை ஓயாமல் முத்தமிடுவார். அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த பல கண்ணாடிகளில் எங்கள் முத்தம் பிரதிபலித்தது. 

தான் நோயுற்று இருக்கும் போது கணவனோடு இருந்த நெருக்கத்தை விவரிக்கிறார். மற்ற ஆண்கள் மீது காதலனையும் கொண்டாடுகிறார். பதின்ம வயதில் கண்ணாடி முன் தனது உடலை நிர்வாணமாக ரசித்ததை கூறுகிறார். குழந்தை பெற்றப்பிறகு உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும் சொல்கிறார். 

ஒரு பெண் தனது சொந்த வாழ்க்கையை இந்த அளவிற்கு பகிரங்கமாக, அதுவும் தனது உடல் சார்ந்த விஷயத்தை புத்தக வடிவில் பகிர்ந்ததை இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். 

’ஒழுங்கீனம்’ என்பதை மனிதன் இன்னொரு மனிதனை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கியது. அதை பொருட்படுத்தாமல் இருக்கும் மனிதன் சுதந்திரமாக தெரிகிறான். சுதந்திரமாக திரியும் மனிதன் அடிமையாய் இருக்கும் மனிதனின் கண்ணுக்கு ஒழுக்கமற்றவனாக தெரிகிறான். 

 ’ஒழுக்கம்’ என்ற வார்த்தை கூட ஒருவரை அடிமையாக்குறது அல்லது அடுக்குமுறை கையாள்கிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. 

 ** 
என் கதை 
- கமலாதாஸ் 
- Rs.145 
- காலச்சுவடு பதிப்பகம்

Monday, July 18, 2016

நான் ரஜினி பேசுறேன் !!

ரஜினி அலுவலகத்தில் தொலைப்பேசி மணி ஒலிக்கிறது..

ரஜினியின் மேனேஜர் : ஹெலோ !

நான் : நா குகன் பேசுறேன். ரஜினி சார் கிட்ட பேசனும்.

ரஜினியின் மேனேஜர் : என்ன விஷயமா பேசனும் ?

நான் : கபாலி படத்துக்கு வாழ்த்து சொல்லனும்.

ரஜினியின் மேனேஜர் : சார் பிஸியா இருக்காரு. அவர் ரசிகர் போன் பண்ணதா சொல்றேன்.

நான் : சார் ! நான் கமல் ரசிகன். இருந்தாலும், ரஜினி படத்துக்கு வாழ்த்து சொன்னேன் சொல்லுங்க…

கடுப்பாகி ரஜினி மேனேஜர் போன் கீழே வைத்திருப்பார்.

**

ஒரு மணி நேரம் கழித்து…. மீண்டும் போன் செய்தேன்.

நான் : நா குகன் பேசுறேன். ரஜினி சார் கிட்ட பேசனும்.

ரஜினியின் மேனேஜர் : உங்க வாழ்த்த ரஜினி சார் கிட்ட சொல்லிட்டேன்.

நான் : நீங்க சொன்னீங்கனு நா எப்படி நம்புறது ?

ரஜினியின் மேனேஜர் : அதுக்கு ..?

நான் : ரஜினி சார் கிட்ட போன் கொடுங்க கேட்குறேன்.

ரஜினியின் மேனேஜர் : யோவ் ! போன் வைட்டா !!
**அரை மணி நேரம் கழித்து…. மீண்டும் போன் செய்கிறேன்.

நான் : நா குகன் பேசுறேன்.

”யோவ் ! உனக்கு வேலையில்ல. எத்தன வாட்டி சொல்லுறது…” என்று ரஜினியின் மேனேஜர் கத்துவதை கேட்டு ரஜினி வர, மேனேஜர் விஷயத்தை சொல்கிறார்.

ரஜினி போன் ரிசிவரை வாங்கி… “ நான் ரஜினி பேசுறேன்”

“சார் நீங்களா !!! உங்கக் கூட பேசுவேன் நினைக்கவே இல்ல. கபாலி படத்துக்கு வாழ்த்துகள். இன்னும் நீங்க நிறைய படம் பண்ணனும். ஆனா, உங்க வயசுக்கு சூட்டாகுற கேரக்டர் மட்டும் பண்ணுங்க…” என்று சொல்லி அவரை நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளலாமல் போன் வைத்தேன்.

***

இதில் இருந்து என்ன தெரிகிறது… ரூ.3க்கு மூனு போன் செய்தால், ரஜினியிடம் நேரடியாக பேசலாம்.

”Wish Rajnikanth on Kabali! SMS, KABALI YOURNAME YOUR message and send to 53030 (Rs.5/SMS). Send your love to Rajni with Airtel!” 


போன்ற செய்தியை நம்பி பணத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 


நீங்க கபாலிடா சொல்லி சம்பாதிக்க நினைச்சா விடுவோம்மா !! 

யாருகிட்ட !! 

குகன்னா... இராமாயணம் படத்தில ராமருக்கு மீன் கொடுத்து, அவர படகுல ஏத்தி ஓட்டுற படகோட்டி  குகன் நினச்சியா.. !!” 

குகன்டா !!!

Friday, July 15, 2016

இந்துத்வ இயக்க வரலாறு – ஆர்.முத்துக்குமார்

“நான் சீர்திருத்தங்களின் ஆதரவாளன்தான். ஆனால், சீர்திருத்தம் என்ற பெயரில் இந்து மதத்தின் நம்பிக்கைகளைச் சீர்குலைக்கப் பார்ப்பதை வேடிக்கை பார்க்கமாட்டேன்”
– இது பாலகங்காதர திலகர் கூறியது. 

 இந்து மதமாக பார்க்கும் போது ஆயிரம் சர்ச்சைகள். உள்குத்து, வேறுபாடு, பிரிவினை நிறைய இருக்கிறது. ஆனால், இந்துத்வம் ஜாதிகளையோ, அதில் இருக்கும் உட்பிரிவையோ ஆதரிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் உருவ வழிப்பாட்டைக்கூட ஆதரிப்பதில்லை. எல்லோரும் ‘இந்து’ என்ற ஒற்றைக்குடைக்குள் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ’இந்துத்வம்’ என்பது மதம் அல்ல… அது வாழ்வியல் முறை. இந்து மதத்தினர் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் இல்லை. இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் கூட பின்பற்றலாம். 

கேட்க நன்றாக தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஏன் இந்துத்வ கொள்கையை சுற்றி இத்தனை சர்ச்சைகள். எதிரான இத்தனை கருத்துகள். இந்துத்வத்தை இந்துக்களே பலர் ஏன் எதிர்க்கிறார்கள். 

காரணம், இந்துத்வத்தை முழுமையாக உள்வாங்காமல் ”நான் இந்துத்வவாதி” என்று சொல்லிக் கொள்பவர்கள். உதாரணத்திற்கு, இந்துத்வம் ஜாதி அடையாளத்தை ஆதரிப்பதில்லை. ஜாதியையும் ஆதரிப்பதில்லை. ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை. ‘நான் பிராமணன்’, ‘நான் தேவர்’, ‘நான் கவுண்டர்’ என்ற சாதிய அடையாளத்தை காட்டிக் கொண்டு, பெருமையாக நினைப்பவர்கள் தான் ‘இந்துத்வம்’ பேசுகிறார்கள். அதாவது, ‘நான் இந்து’ என்ற கருத்தை விட ‘நான் இன்னார் ஜாதியை சேர்ந்தவன்’ என்பதை காட்டிக் கொள்வதில் அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. 


அரசியல் சட்டப்படி ‘தலித்’துகள் ‘இந்து’வாக கருதப்படுகிறார்கள். ஆனால், நிஜத்தில் அவர்களுக்கான உரிமை பல இடங்களில் மறுக்கப்படுகிறது. அதற்கு, காரணமாக தங்களை மேல் ஜாதி என்று நினைத்து கொள்பவர்கள். தன்னை ‘மேல் ஜாதி’ என்று கருதுபவன் ‘இந்துத்வத்தை’ பேசும் போது, அவன் மீது இருக்கும் வேறுப்போடு இந்துத்வத்தின் மீதும் சேர்ந்து வேறுப்பாக மாறுகிறது. 

மொத்தத்தில் இந்துத்வ தியரியில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதை தவறாக புரிந்துகொண்டு பின்பற்றுபவரை பார்ப்பதால், இந்துத்வத்தை புரிந்துகொள்ளும் முயற்சியை பலர் கைவிடுகிறார்கள். தவறாக புரிந்துக்கொண்டவர்களால் ‘இந்துத்வம்’ தவறாக பரப்பப்படுகிறது. இந்துத்வம் தவறாக தெரிகிறது. அதற்கு காரணம், இந்துத்வ எதிரிகள் அல்ல. இந்துத்வத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள் அல்ல. இந்துத்வ ஆதரவாக செயல்படுகிறோம் என்று சொல்பவர்கள். 

இதை நான் சொல்லும் போது இந்துத்வத்தை தவறாக புரிந்துகொண்டவர்கள் இந்துத்வத்தில் மட்டும் தான் இருக்கிறார்களா? இஸ்லாமிய மதத்தில் இல்லையா ? கிறிஸ்துவத்தில் இல்லையா ? என்று என்னை இந்துத்வவாதிகள் கேள்விக்கேட்கலாம். 

இந்துத்வவாதிகள் அடுத்த பிரச்சனை இது தான். அவர்களை விமர்சிக்கும் போது அதற்கான பதில் வரலாது. அதே கேள்வியை எதிர் கேள்வியாக கேட்பார்கள். குறிப்பாக கேள்வி கேட்பவன் இஸ்லாமியன், கிறிஸ்துவன் அல்லாமல், நாத்திகன், திராவிட கொள்கை ஏற்ற இந்துவாக இருந்தாலும் கூட அவனைப் பற்றி, அவன் கொள்கையைப் பற்றி பேசாமல் விவாதத்தில் பங்குபெறாத முஸ்லிம், கிறிஸ்துவத்தை வம்புக்கு இழுப்பார்கள். 

அவர்களின் கொள்கையை முழுமையாக புரிய வைக்கும் முயற்சியை விட இஸ்லாம், கிறிஸ்துவத்தை விமர்சிப்பதில் அதிக கவனத்தை செலுத்துவது ஹிந்துத்வவாதிகளின் அடுத்த பிரச்சனை. அதைவிட ‘எல்லோரும் சமம்’, ‘ஒன்றே தெய்வம்’ என்று நினைக்கும் செக்குலர்களை சேர்த்து விமர்சித்து வம்புக்கு இழுப்பது. இதனால், இந்துத்வவாதிகள் மத ஒற்றுமையில் விரும்பாதவர்கள் என்ற பிம்பத்தை சாமான்யர்கள் மத்தியில் அவர்களே உருவாக்கி கொள்கிறார்கள். 

இந்துத்வத்தைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தாமல், அதற்கான கட்டிடம் கட்டும் முயற்சியை தான் இந்துத்வவாதிகள் பல வருடங்களாக செய்து வருகிறார்கள். 

*இப்படி பல வருடங்களாக சர்ச்சைகளோடு இயங்கி, வளர்ந்து வந்த இந்துத்வ இயக்க வரலாற்றை ஒரு வருட கடின முயற்சியால் ஆர்.முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார். 

இந்த புத்தகம் ஆர்.எஸ்.எஸ் தொடக்கத்தில் தொடங்கவில்லை. ஹெட்கேவார் பேசும் முன்பே பலர் இந்துத்வத்தை பற்றி பேசியிருக்கிறார்கள். அதனால், சுவாமி தயானந்த சரஸ்வதியில் இருந்து இந்துத்வ இயக்க வரலாறு தொடங்குகிறது. ஆரிய சமாஜத்தின் தொடக்கத்தில் இருந்து வாசகன் பயணம் செய்கிறான். 

இந்து மதத்தில் பல தெய்வங்கள் இருப்பதை தவிர்த்தால் மட்டுமே இந்துக்கள் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற விரஜானந்தரின் கருத்தையும் இந்த நூல் பதிவு செய்கிறது. லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்துத்வத்தின் அபிமானிகளாகவே இருந்திருக்கிறார்கள். 

இந்துத்வ கொள்கை பரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தொடங்கிய ஹெட்கேவார், “ஆர்.எஸ்.எஸ். இந்துத்வ இயக்கத்தின் முத்திரை அல்ல அது தான் அவர்களின் முகவரி” என்கிறார். அவர்களுக்கான சட்டத்திட்டங்களும் உருவாக்குகிறார். 

இப்படி, சிறுக சிறுக இந்துத்வ கொள்கையை இந்தியா முழுக்க பரப்பிக் கொண்டு இருந்தவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரியாக பார்க்கத் தொடங்கியது காந்தி படுகொலையில் தான். இந்துத்வ அனுதாபியான பட்டேல் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்கும் அளவிற்கு கொண்டு சென்றது. அவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களாகவே தோண்டிய புதைக்குழி ‘காந்தி படுகொலை’. 

இதற்கு, வரலாற்று ரிதியாக அவர்கள் எவ்வளவு விளக்கம் கூறினாலும், சாமாதானம் செய்தாலும் அது மன்னிக்கப்படாத குற்றமாக கருதப்படுகிறது. அதை உணராமால் செய்தது மிகப்பெரிய தவறு. 

1961ல் நடந்த இந்தியா – சீனா போரில் ஆர்.எஸ்.எஸ் தங்கள் தேசப்பற்றை காட்டினர். நேரு நட்பு நாடு என்று நினைத்த சீனா முதுகில் குத்த, எதிரி என்று நினைத்த ஆர்.எஸ்.எஸ் களப்பணியில் உதவி செய்கிறது. ஆர்.எஸ்.எஸ் கடின முயற்சியால் அவர்கள் மீது இருந்த தடை விலகியது. இந்திய சுதந்திரத்தின அணி வகுப்பில் சேர்க்கப்பட்டார்கள். 


இன்று வரை, அவர்கள் மீது பல விமர்சனங்கள் இருக்கிறது. அவர்கள் பல தவறு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தேசப்பற்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. யுத்தக்காலத்தில் தங்களுக்கு எதிரான மத்திய அரசுக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள். யுத்தக்களத்திற்கு சென்று சேவை செய்திருக்கிறார்கள். 


அது இருக்கட்டும். பாதிக்கப்பட்ட எல்லை வீரர்களுக்கு சேவை செய்வது தேசப்பற்று என்றால், இந்திய எல்லைக்குள் பொருட்கள் நாசம் செய்யலாமா ? இஸ்லாமியர்கள் நடத்தும் வணிக வலாகத்தை தாக்கலாமா ? இது இந்திய வளர்ச்சியை பாதிக்கும் என்பது தெரியாதா ? உண்மையில் அதற்கு நியாயமாக பதில் அவர்களால் அளிக்க முடியாது. எந்த நாச வேலைகளை யார் செய்தாலும் நியாயமான காரணம் கிடையாது என்பது உண்மை. 


முதல் ஐந்நூறு பக்கங்கள் இந்துத்வ வரலாற்றை விறுவிறுப்பாக பேசும் இந்தப்புத்தகம், ஜனதாக் கட்சி தொடங்கியதும் கொஞ்சம் சோர்வாக செல்கிறது. பா.ஜ.க கட்சி பற்றி தொடங்கியதும் இயக்க வரலாறாக இருந்த நூல். அவர்களின் தேர்தல் அரசியல் வரலாறாக மாறிவிடுகிறது. பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி ஈடுப்பட்டார்கள், யாரோடு எப்படி கூட்டணி வைத்துகொண்டார்கள், தங்கள் கொள்கையில் எப்படி சமரசம் செய்து கொண்டார்கள் என்ற விபரம் தான் அதிகமாக இருக்கிறது. 

பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்த அளவுக்கு உதவினார்கள், அவர்களின் சமரசத்திற்கு ஆதரவாக இருந்தார்களா போன்ற விபரங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. 

பாபர் மசூதி தொடங்கும் போது கொஞ்சம் விறுவிறுப்பு எடுக்க, 1996ல் தேர்தல் தொடங்கியது மெதுவாக செல்கிறது. குஜராத் கலவரம் மீண்டும் விறுவிறுப்பு எடுக்கிறது. 

** 

இந்த நூல்… இந்துத்வத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ இல்லை என்பதை குறிப்பிட வேண்டும். இந்துத்வ வரலாற்றை தெரிந்து கொள்ள நினைக்கும் இந்துத்வ ஆதரவார்களும், எதிர்த்து பிரச்சாரம் செய்யபவர்களும், இந்துத்வத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள நினைப்பவர்களும் வாசிக்கலாம்.

இந்திய இறையான்மை இஸ்லாமியர்கள் வெடிகுண்டால் பாதிக்கப்படுகிறது என்று சொல்லும் இந்துத்வவாதிகள், அவர்கள் கையால் இருக்கும் கத்தியாலும் பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை உணர வேண்டும். 

அவர்கள் வெடிகுண்டு எடுத்ததை கேட்காமல், நான் கத்தி எடுத்தது உனக்கு தவறாக இருக்கிறதா ? என்று இந்துத்வவாதிகளிடம் கேள்வி வரலாம். 

அதற்கு பதில் ‘இந்த நூல் விமர்சனம்’ இத்தோடு முடிவடைந்தது என்பது  

 ** 

இந்துத்வ இயக்க வரலாறு 
 – ஆர்.முத்துக்குமார் 
- Rs.999 

Tuesday, June 21, 2016

இறைவியும், ஜன்னல் மலர் நாவலும் !!

‎இறைவி‬ படத்தின் Inspiration என்று பலர் கூறியதால் , படத்தை பார்த்த கையோடு இந்த நாவலை வாசித்துவிட்டேன். 

சுஜாதாவின் வழக்கமான மர்மம், நகைச்சுவை ஸ்கோப் இல்லாத கதைக்களன். ஆனால், வழக்கமான வேகம் கொண்ட எழுத்துநடை. ஒரு மணி நேரத்தில் வாசித்து முடிக்ககூடிய குறுநாவல். நாவலில் வரும் சோமுவின் பாத்திரமும், இறைவியில் விஜய்சேதுபதியின் பாத்திரம் ஒன்று தான். மீனா பாத்திரத்தில் அஞ்சலி, ஜகன் பாத்திரத்தில் பாபி சிம்ஹா, தேவராஜன் பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா காஸ்ட்டிங் செய்யப்பட்டிருக்கிறது. 

ஒரு இயக்குனருக்கான கற்பனை திறனுக்கு எஸ்.ஜே.சூர்யா பாத்திரத்திற்கு கதை பகுதி உருவாக்கி படம் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதேப் போல், விஜய்சேதுபதி மலரோடு இருக்கும் உறவும் இயக்குனருடைய கற்பனை தான். 

க்ளைமாக்ஸ் தவிர்த்து நாவலில் இருப்பதை அனைத்தும் இறைவியில் இருக்கிறது. அப்படியென்றால், எப்படி Inspiration என்று சொல்ல முடியும் ?

நாவலை தழுவி திரைப்படம் எடுக்கும் போது அப்படியே காட்சிப்படுத்த முடியாது என்பது உண்மை தான். ஆனால், நாவல் வரும் நாயகனை இரண்டாவது கதாநாயகனாகவும், துணை பாத்திரத்தை முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகனாக்கியிருப்பதும் தான் ஏன் என்று புரியவில்லை. கதை தழுவல் தெரியக்கூடாது என்பதாலா ? 

Inspiration என்ற வார்த்தையில் எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டிய சரியான அங்கிகாரம் கிடைக்காமல் செய்துவிடுகிறது. அதனால், ”ஜன்னல் மலர்” நாவலுடைய Inspiration தான் ”இறைவி” படம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

இறைவி – Based on அல்லது Adapted from “ஜன்னல் மலர்” நாவல் என்று சொல்லுவதே சரி என்று தோன்றுகிறது!!


Monday, June 20, 2016

இறைவி - திரைவிமர்சனம்

புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்ததால் இந்தப் படத்தை பார்க்க முடியவில்லை. இப்போது தான் பார்க்க நேரம் கிடைத்தது.

ஆண் கதாப்பாத்திரத்தை கொண்டு பெண்ணியத்தை பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த வித்தியாச திரைமொழிக்காகவே வாழ்த்தலாம். குழந்தைகள் தவிர்த்து குடும்பத்தோடு பார்க்கலாம்.

எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி நடிப்பை பற்றி பலர் பாராட்டிவிட்டார்கள். ஆதனால், அதைக் கடந்து மற்றவர்கள் சொல்லாததை சொல்ல விரும்புகிறேன்.முதல் பாதியில் வரும் மலர் பாத்திரம் என்னை மிகவும் வசீகரித்தது. சினிமாவில் காதல் வேறு, காமம் வேறு என்று காட்டிய முதல் பாத்திரம் இது தான். “என் கணவனை உறுகி உறுகி காதலிச்சேன்” என்று சொல்லும் பெண், தன் உடல் தேவைக்கு ஒரு ஆண் தேடிக் கொள்வதை பல ஆண்களுக்கு பிடிக்காமல் போகலாம். வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண், இன்னொரு திருமணம் மூலம் தான் வாழ வேண்டும் என்று சமூகம் எதிர்ப்பார்ப்பதை உடைத்திருக்கிறார்.

அடுத்து வடிவுக்கரசி பாத்திரம். முதல் காட்சியில் வசனம் பேசிவிட்டு, படம் முழுக்க படுத்தப் படுக்கையில் இருக்கிறார். அவர் குணமடைவார் என்று கணவர் ராதா ரவி காத்திருக்கிறார். ஒரு குடும்பத்தலைவி இல்லையென்றால் அந்த குடும்பம் எப்படி சீரழியும் என்பதை அந்த பாத்திரத்தை வைத்து உணர்த்துகிறார்.

வாழும் வயதில் கணவனை பிரிந்திருக்கும் பெண்ணுக்கு எவ்வளவு போராட்டமோ, வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் மனைவியை பிரிந்து வாழும் கணவனின் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் என்பதை ராதாரவி பாத்திரம் காட்டுகிறது.

தயாரிப்பாளர் பாத்திரம் மட்டும் நிறைய லாஜிக் உதைக்கிறது. கடன் வாங்கி படம் எடுத்தவன், அரை வாங்கியதற்காக தானும் நஷ்டப்பட்டு, அடுத்தவனையும் அழிக்க நினைப்பானா ? என்பது சந்தேகம் தான்.

ஒரு ஆண் தவறு செய்யும் முன் தன்னை நம்பி ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உணர்ந்தால், பல தவறுகள் நடக்காது. அப்படி அந்தப் பெண்ணை நினைக்காமல் தவறு செய்ய தொடங்கினால், தன்னையும் மட்டுமில்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் சேர்த்து பாதிக்கும் என்பதை ‪‎இறைவி‬ காட்டியிருக்கிறது.

ஒரு ஆண்ணை தவறு செய்யாமல் இருக்க வைப்பதே ’பெண்’ தான். (தவறு செய்ய வைப்பதும் பெண் தான். ஆனால் இதில் காட்டவில்லை).

 படம் Slow தான். ஆனால், Bore இல்லை.

LinkWithin

Related Posts with Thumbnails