வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 28, 2008

மிருக கதை - 2

ஒரு மாலை நேரத்தில் முயல் மும்முரமாக ஒன்றை எழுதிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியில் வந்த நரி

நரி : என்ன செய்துக் கொண்டு இருக்கிறாய் ?

முயல் : தன் கண்டுபிடிப்பின் செய்முறை விளக்கத்தை எழுதிக்கிறேன்.

நரி : என்ன உன் கண்டுபிடிப்பு ?

முயல் : முயல் எப்படி நரியை சாப்பிடும் என்பதை பற்றியது.

நரி : நீ என்ன முட்டாளா ! யாராவது இதை நம்ப முடியுமா ?

முயல் : என்னுடன் வா ! நான் உனக்கு காட்டுகிறேன்.

நரியும், முயலும் ஒரு மரத்தின் பின்னால் சென்றது. சிறிது நேரம் கழித்து முயல் நரியின் எழும்பைக் கொண்டு வெளியே வந்தது. அதன் பின் தன் எழுதும் வேலையை செய்துக்கொண்டு இருந்த போது, அங்கு ஓனாய் முயலிடம் விசாரித்தது.

ஓனாய் : என்ன செய்கிறாய் ?

முயல் : முயல் எப்படி ஓனாய்யை சாப்பிடும் என்பதை பற்றி எழுதுகிறேன்

ஒனாய் : உனக்கு என்ன பைத்தியமா ? யாரும் நம்ப மாட்டார்கள்.

முயல் : என்னுடன் வா ! உனக்கு காட்டுகிறேன்.

ஓனாயும், முயலும் அதே மரத்தின் பின்னால் சென்றது. சற்று நேரம் கழித்து முயல் ஓனாயின் எழும்பைக் கொண்டு வெளியே வந்தது. இறுதியாக ஒரு கரடி முயலிடம் மற்றதை போல் அதே கேள்வியை கேட்டது.

முயல் அந்த கரடியை மரத்தின் பின் அழைத்து சென்றது. அங்கே, மரத்தின் பின் இருக்கும் சிங்கமிடம் கரடிக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

செய்தி : நாம் நம்பும் படி வேலை செய்கிறோம் என்பதை விட நம் மேல் அதிகாரி பிடித்திருந்தால் தான் நாம் எந்த வேலையிலும் நிடிக்க முடியும்.

மிருக கதை - 1

சமிபத்தில் ஒரு மின்னஞ்சலில் வந்த ஆங்கில மிருக கதையை தமிழாக்கம் செய்துள்ளேன். இந்த கதையில் வந்த செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அதிகாலை வேளை சூரியன் சுடும் நேரத்தில் ஒரு சிங்கம் தன் குகையில் உறங்கிக் கொண்டு இருக்கும் போது அந்த வழியாக நரி ஒன்று வந்துக்கொண்டு இருந்தது.

நரி : இப்போது நேரம் என்னவென்று தெரியுமா ? என் கை கடிகாரம் ஒட வில்லை.

சிங்கம் : என்னிடம் கொடு. உனக்காக நான் சரி செய்து தருகிறேன்

நரி : மிகவும் கஷ்டமான காரியம்... நகங்கள் கொண்ட கையில் செய்தால்... அந்த கடிகாரம் அழிந்துவிடும்

சிங்கம் : ஒன்றும் ஆகாது.... நான் சரி செய்வேன்

நரி : இது முட்டாள் தனமாக உள்ளது. நீண்ட நகங்கள் கொண்ட கையால் சரி செய்ய முடியாது.

"என்னால் சரி செய்ய முடியும்" என்று சொல்லி அந்த கடிகாரத்தை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் நுழைந்தது. சற்று நேரத்தில் வேளியே வந்தது. நரிக்கு ஒரே அதிர்ச்சி. நரி மகிழ்ச்சியுடன் தன் கடிகாரத்தை வாங்கி சென்றது. சோம்பேரி சிங்கம் மீண்டும் தன் உறக்கத்தை தொடர்ந்தது. அப்போது ஒரு ஓனாய் சிங்கத்தின் குகைக்கு வந்தது.

ஓனாய் : இன்று உன் குகைக்குள் தொலைக்காட்சி பார்க்க வரலாமா ? என் தொலைக்காட்சிப் பேட்டி உடைந்து விட்டது.

சிங்கம் : என்னிடம் கொடு. நான் சரி செய்து தருகிறேன்

ஓனாய் : இதை நான் நம்புவேன் என்று நினைக்கிறாயா? எப்படி உன் நீண்ட நகங்கள் கொண்ட கையினால் சரி செய்வாய் ?

சிங்கம் : கவலை வேண்டாம். என்னால் முடியும்.

ஓனாய் தன் தொலைக்காட்சி பெட்டியை சிங்கத்திடம் கொடுத்தது. சிங்கம் அந்த தொலைக்காட்சி பெட்டியை தன் குகைக்குள் எடுத்து சென்றது. சற்று நேரத்தில் சரி செய்து தொலைக்காட்சி பெட்டியை ஓனாய்யிடம் கொடுத்தது. ஓனாய் மிகழ்ச்சியுடன் வாங்கி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தது.

வெளியே தெரியாத காட்சி : சிங்கத்தின் குகைக்குள் ஆறு முயல்கள் இருந்தன. ஆறு முயல்களும் மென்னையான கைகளையும், நல்ல அறிவு திறனும் இருப்பதால் அந்த பணியை செம்மையாக முடித்தன. சிங்கம் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை மட்டுமே பார்த்தது.

செய்தி : நிர்வாகியர் தன் கீழ் வேலை செய்பவர்களால் பெயர் எடுக்கிறான்.

Tuesday, February 5, 2008

13.இருபதாம் நூற்றாண்டில் மில்டன்

காலம் யாரையும் விட்டு வைத்ததில்லை. மில்டன் மட்டும் இதில் விதி விளக்காக எப்படி இருப்பார். இங்கிலாந்து மக்களுக்காக புரட்சி கவிதைகளை எழுதியவர். வாழ்க்கையை ஒரு போராட்டமாக வாழ்ந்தவர். அனைத்தும் முற்றுப்புளி போல் அவர் மரணம் வந்தது. நவம்பர் 8, 1674 அன்று தன்னுடிய அறுபத்தியைந்தாவது வயதில் லண்டனில் இறந்தார்.

சேக்ஸ்பியர் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட மில்டன் தன் எழுத்துக்களாலும் பலரை கவர்ந்திருக்கிறார். மில்டனின் எழுத்துக்கள் பல கவிஞர்கள் உருவாக காரணமாக இருந்தது என்று கூட சொல்லலாம். அலெக்ஸாண்டர் போப், வில்லயம் பிலேக், வில்லியம் வொட்ஸ்வொர்த், ஜெப்ரி ஹில், ஜான் கீட்ஸ் இப்படி பல வரலாறு புகழ் பெற்ற கவிஞர்களுக்கு மில்டன் ஒரு வழி காட்டியாகவே திகழ்ந்தார்.

உடல் ஊனமுற்றவர்களுக்கும் மில்டன் என்று உத்வேகமாக இருந்திருக்கிறார். 1928ஆம் ஆண்டு மில்டன் பெயரில் கண், காது இல்லாதவர்களுக்காக் ஜான் மில்டன் அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டது. அதை தொடங்கியர் யார் தெரியுமா... ஹெல்லன் கெல்லர் !! ஆம். அவரை கூட நாம் பாட புத்தகத்தில் படித்திருப்போம். பிறவியில் கண் இல்லாமல், காது கேட்காமல் பிறந்தவர். அதனால், வாய் பேசாமல் கூட முடியாமல் ஊமையானார். ஹெல்லன் கெல்லருக்கும் உத்வேகமாய் இருந்தவர் ஜான் மில்டன் தான் !!

இன்று, பலர் சாத்தானை பற்றியும், சாத்தானை அழிப்பது பற்றியும் மாயா ஜால கதைகள் வந்துக் கொண்டு இருக்கிறாது. ‘Lord of the Rings’, ‘Harry Potter’ போன்ற கதைகளுக்கு 'Paradise Lost' நூல் மூலம் பிள்ளையார் சுழி போட்டவரும் நமது ஜான் மில்டன் தான்.

இன்று எல்லா ஆங்கில பாட புத்தங்களிலும் மில்டன் பாடல் இல்லாமல் இல்லை. 'On his blindness' பாடலை படிக்காத மாணவன் இருக்க முடியாது. அவரின் சோனட் (Sonnet) கவிதைகள் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் புத்தகத்திலும் இருக்கும். இன்றும் மேல்நிலைப்பட்டங்களுக்காக பலர் மில்டனின் கவிதைகளை ஆராய்ச்சி செய்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டில் மில்டன் பெருமையுடன் நினைத்து பார்க்கும் வேளையிலும் மில்டன் கவிதைகளை கடும் விமர்சனம் செய்யும் செய்திகளும் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன. யார் என்ன சொன்னாலும் இந்த கவிதை உலகில் மில்டன் என்றுமே ஒரு மைக்கல். அதை யாராலும் மறுக்கவும் முடியாது... மறைக்கவும் முடியாது.

12.மில்டனின் மற்ற படைப்புகள்

Defensio pro Populo Anglicano -மில்டன் லத்தின் மொழியின் எழுதிய கவிதைகள். 1651ல் வெளியிடப்பட்டது. முதல் சார்லஸ் மன்னரின் மரண தண்டனை விதித்ததையும், அலிவர் க்ரம்வெல் பொது நல அரசை ஆதரித்தும் மில்டன் லத்தின் மொழியில் எழுதியிருந்தார்.

History of Britain- ஜாம் மில்டன் அவர்கள் இந்த படைப்பை 1670ல் எழுதினார். சிவில் யுத்ததின் நியாயங்களையும், சிவில் யுத்தம் நடத்திய வரலாறு குறித்தும் எழுயிருக்கிறார். இந்த நூலை எழுத மில்டன் 1649ல் தொடங்கியிருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் முதல் நான்கு அத்தியாயங்களை 1649லே எழுதினார். பிறகு 1650ல் மேலும் இரண்டு அத்தியாயங்கள் எழுதினார். இருபது வருடங்கள் முன் இந்த நூலை எழுத தொடங்கியிருந்தாலும், இந்த நூலில் முதல் பதிப்பு 1670ல் தான் வெளி வந்தது.

Of True Religion - 1673ல் இந்த நூலை வெளியிட்டார். மதங்களை பற்றிய தன் கருத்துகளையும், மதம் பெயர் திருசபையில் குருமார்க்கள் செய்தும் கொடுமைகளை பற்றியும் இந்த நூலில் கூறியுள்ளார்.

Samson Agonistes(1671) - பிரடைஸ் ரீகைன் வெளிவந்த அதே ஆண்டில் வெளிவந்தது. மில்டன் பொதுவாக நாடக கதைகளை பற்றி எழுதியதில்லை. ஆனால், இந்த முழுக்க முழுக்க நாடக கதையை தன் பாடல்கள் மூலம் எழுதியிருக்கிறார். இந்த கதையில் வரும் சாம்சன் ஒரு குருடன். கண் பார்வை இழந்து வேதனை இருந்த மில்டன் தன் சோகத்தை சாம்சன் கதாப்பாத்திரத்தில் கூறியிருக்கிறார். அதனாலையே சாம்சன் நாடக்கதை படிக்கும் போது நம்முக்கூட கண்ணீர் வரும் அளவிற்கு சோகத்தை கொட்டி இருப்பார் மில்டன். பிரடைஸ் ரீகைன் எழுதும் போதே இந்த நூலை எழுதினாலும், பிரடைஸ் ரீகைன் வெளி வந்த பிறகே சாம்சன் நூலை வெளியிட்டார்.

L'Allegro - 1631ல் எழுதியது. மில்டன் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான உற்சாகம் கொண்ட பாடல்களை எழுதியிருந்தார்.'L'Allegro ' லத்தின் மொழியில் மகிழ்ச்சியான மனிதன் என்பது பொருள்.

Il Penseroso - இது 1631ல் மில்டன் எழுதியது தான். 'L'Allegro ' நூலுக்கு எதிர்மதரையாக எழுதியுள்ளார்.

Tetrachordon - மில்டன் 1645ல் எழுதியது. Areopagitica பிறகு மில்டன் எழுதிய படைப்பு.

Colasterion - ' Tetrachordon ' நூலுடன் இந்த படைப்பை வெளியிட்டார். இரண்டு படைப்புகளும் விவாகரத்து பற்றி மில்டன் எழுதியது.

மில்டனின் கவிதைகள் - மில்டன் பல சூநிலையில் எழுதிய கவிதைகளை தொகுப்பாக இந்த நூலை அன்ரூ மார்வல் 1673ல் வெளியிட்டார். இந்த தோக்குப்பில் மில்டன் எழுதிய லத்தின் மற்றும் ஆங்கில மொழியில் எழுதிய கவிதைகள் இரண்டு தொகுக்க பட்டுள்ளது.கோமஸ், லிசிடஸ் நூலில் இருந்த சில கவிதைகள் இதைல் இடம் பெற்றன.

11. 'உதவியாளர்' அன்ரூ மார்வல்

மில்டன் வாழ்க்கை தொடக்கத்தின் அத்தியாயங்களில் பல பக்கங்கள் வேறும் கருப்பு பக்கங்களாகவே இருந்தன. முதல் திருமணத்தில் வந்த கசப்பு, இரண்டு மனைவிகள் இழப்பு, 'பிரடைஸ் லாஸ்ட்' நூலின் எதிர்ப்பு, கண் பார்வை இழந்தது - இப்படி பட்டியலிட்டு கொண்டே போகலாம்.தன் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போகுமோ என்று இருந்தவரு அன்பு காட்டியவர் அவரது மூன்றாவது மனைவி எலிசபத் மின்ஷூல். ஆனால், குருடனாய் இருந்த மில்டனுக்கு எழுத உதவியது அவரது மனைவி இல்லை !!

மில்டன் பிறக்கும் நல்ல உடல் நிலையில் தான் பிறந்தார். இடையில் வந்த உடல் நல குறைவால் தன் கண் பார்வை இழத்தவர் அதிகம் கவலை பட்டது தன் எழுத்து பணியை பற்றியது தான். பிறவி குருடராக இல்லாதவர் எப்படி எவ்வளவு படைப்பு படைக்க முடியும் என்ற வியப்பு வருவது சரி தான். அந்த வியப்புக்கு காரணமாய் இருந்தவர் அன்ரூ மார்வெல் என்ற கவிஞர். ஜான் மில்டன் உணர்வுகளை தன்னுள் வாங்கிக் கொண்டு, அவர் சொல்வதை எழுதுவார். அன்ரூ மார்வல் மில்டனுக்கு துணையாக உதவியதால் கண்ணில்லாதது அவருக்கு ஒரு குறையாக தெரியவில்லை. ஜான் மில்டனை பாராட்டும் போது அன்ரூ மார்வலை பாராட்டாமல் இருக்க முடியாது.

அன்ரூ மார்வல் மார்ச் 31, 1621 ஆ ண்டு பிறந்தார். ஜான் மில்டனிடம் வந்து சேர்ந்த முதல் உதவியாளர் அன்ரூ மார்வல் தான். பதினெடாவது வயதிலே கேம்பிரிட்ஜ்யில் உள்ள ட்ரினிடி கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றவர். சிறுகாலத்திலே உலகத்தின் பெரும் பகுதியை பார்த்தவர். நான்கு மொழிகளை கற்றவர். மில்டனால் அதிகம் ஏர்க்கப்பட்டவர்.

மில்டன் முழுமையாக கண் இஅழந்த நிலையில், 1657ல் மார்வல் மில்டனிடம் உதவியாளராக சேர்ந்தார். மாதம் 200 பௌன்ட் சம்பளம். மில்டன் ஒலிவர் கிரோம்வெல் சபையில் லத்தின் செயலாளராக இருந்த போது மில்டனுக்கு மார்வல் மிகவும் உதவியாக இருந்துள்ளார்.அதன் பின் 1660ல் மீண்டும் இரண்டாம் சார்லஸ் மன்னராக வந்த போது மில்டனுக்கு பக்க பலமாகவும் இருந்தார். சார்லஸ் மன்னராக வந்த பிறகு மில்டன் சிறையில் அடைததோடு இல்லாமல் பல படைப்புகள் மக்கள் முன் எறிக்க உத்தரவிட்டார். அன்ரூ மார்வல் பேசிய பிறகு இரண்டு நூல்கள் (ஏகொன்க்லஸ்டேஸ் (Eikonklastes) மற்றும் டிபேன்சியோ(Defensio))மட்டும் எரிக்கப்பட்டது. மில்டனும் தண்டனையில்லாமல் விடுதலையானார். அதுமட்டுமில்லாமல், 'பிரடைஸ் லாஸ்ட்' இரண்டாம் பதிப்பில் வெளி வர அதிகம் உதவியவர் அன்ரூ மார்வல்.
அன்ரூ மார்வலும் ஒரு கவிஞர் தான். தன் கற்பனையை கலக்காமல் ஜான் மில்டன் சொல்வதை அப்படியே எழுதுவார். இந்த பணியை சாதான ஒரு எழுத்தாளர் செய்யலாம். ஆனால், எழுதும் போது கவிஞர்களுக்கு என்று சொந்த கற்பனைகள் வரும். தன்க்கென்று சொந்த கற்பனைகளை மறந்து ஜான் மில்டனின் கண்ணாகவும், எழுத்துக்கோளாகவும் இருந்தவர் அன்ரூ மார்வல்.

10. மில்டன் ஒரு நாத்திகனா ?

நாம் முன்பே பார்த்தது போல் புராட்டஸ்டண்ட் மக்கள் கத்தோல்க் கிறித்துவ மதத்திற்கு மாற ம றுத்தவர்களை ப டுகொலை செய்ததை மில்டன் எதிர்த்தார். அதனால், மில்டன் மன்னராட்சியை எதிர்த்தும், கத்தோலிக் மத குருக்களை எதிர்த்தும் எழுதினார். அ தனால், பலர் மில்டன் கடவுள் நம்பிக்கையற்ற பழுத்த நாத்திகவாதி என்றே கருதினர்.

மில்டன் நாத்திகன் என்று உறுதி செய்தும் வகையில் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலும் அமைந்தது. சாத்தான் மனிதனை வெல்வதும், சாத்தான் கடவுளை எதிர்த்து புடட்சி செய்வதும் போன்ற நூலில் வரும் கட்டங்கள் மில்டன் ஒரு நாத்திகன் என்ற வாதத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் இருந்தது.

பொய்யான குருமார்க்கர்களை தன் எழுத்து மூலம் மிகவும் சாட்டியவர் மில்டன். பொய்யான குருமார்க்கர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்வார்கள் என்று உணர்ந்தவர். தங்கள் நலனுக்காக யார் காலிலும் விழ வருத்தப்பட மாட்டார்கள், அதே சமயம் யார் காலையும் வார அஞ்ச மாட்டார்கள் என்று மில்டன் கூறுவார். பொய்யான குருமார்க்கர்களை பலர் ஏமாற்றி ஆலத்திற்குள் நுழைந்தவர் என்று சாட்டினார். மில்டனின் ஆரம்ப காலப்பாடல்களில் பொய்யான குருமார்கர்களை சாட்டி பல பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படி சமய சீர்த்திருத்தம் செய்த மில்டன் பலர் நாத்திகன் என்று முத்திரை குத்தி அவரின் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலை எதிர்த்தார்கள். ஆனால், உண்மையில் மில்டன் நாத்திகன் இல்லை என்பது தான் உண்மை.

மில்டன் ஆரம்ப காலத்தில் ஆலய பாதரியாராக வர தான் விருப்பபட்டார். அதன் போக்கை வேறுத்து தன் கவனத்தை இலக்கியத்தில் திசை திருப்பினார். அது மட்டுமில்லாமல், இறுதிகாலத்தில் அவர் எழுதிய பாடல்கள் இறை நம்பிக்கை அடிப்படையாக கொண்டது.

எதற்கு எடுத்துக்காட்டாக மில்டன் எழுதிய 'கோமஸ்'(1634) என்ற நாடக நூலை சொல்லலாம். கோமஸ் என்ற மந்திரவாதி காட்டில் ஒரு பெண்ணின் பாடல் ஒலி கேட்டு அவளை மனைவியாக அடைய விரும்புகிறான். அதனால் அவளை கவர்ந்து செல்கிறான். அந்த பெண்ணை தேடி போகும் சகோதரர்கள் களைத்து போகிறார்கள். அப்பொது ஒரு தேவதை அந்த பெண்ணின் சகோதரர்கள் முன் தோன்றி அந்த மந்திரவாதியை எந்த ஆயுதங்களாலும் கொல்ல இயலாது என்கிறாள். அந்த மந்திரவாதி கயில் இருக்கும் மது கிண்ணத்தை உடைக்க வேண்டும் என்ற யோசனையை சொல்கிறாள். அந்த சகோதரர்களும் மந்திரகிண்ணத்தை உடைக்கிறார்கள். கோமஸ் பயந்து தப்பி ஓடுகிறான். ஆனால், மந்திரவலை பிணைந்து இருக்கும் சகோதரியை மீட்க முடியவில்லை. மீண்டும் அந்த தேவதை அவர்கள் முன் தோன்றி அந்த பெண்ணை மந்திர வலையில் இருந்து அவிழ்த்து விடுகிறாள். இது மில்டனின் இசை நாடக கதை. இந்த கதையில் மில்டன் கோமஸ் என்ற மந்திரவாதியை புனித ஆவியாக கருதப்படும் தேவதை வீழ்த்த உதவுவதை சொல்கிறார். இந்த நூலை படிப்பவர்கள் மில்டன் கடவுள் நம்பிக்கை உடையவர் என்று தான் சொல்வார்கள்.

'பிரடைஸ்ட் லாஸ்ட்' காவியத்தை எதிர்த்தவர்கள் மில்டனின் 'பிரடைஸ்ட் ரீகைன்' வர வேற்றனர்.'பிரடைஸ்ட் ரீகைன்' காவியத்தில் மனித இனம் எப்படி சாத்தானை வென்று சொர்க்கத்திற்கு மீண்டும் செல்கிறது என்பதை விழக்குகிறார். 'பிரடைஸ்ட் ரீகைன்' காவியம் 'பிரடைஸ்ட் லாஸ்ட்' அளவிற்கு பெரிய நூல் இல்லை என்றாலும் 'பிரடைஸ்ட் ரீகைன்'மில்டனின் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலுக்கு இரண்டாம் பாகமாக இருந்தது.

ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய பாடல்களை நியாயம் படுத்துவது போல் இறுதிகாலத்தில் இறைப்பாடல்களை எழுதியுள்ளார் என்று பலர் கூறுவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மில்டன் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. தனது லட்சியமான பாதரியார் ஆவதை துரந்தவர். ஆலய குருமார்க்கர்கள் மன்னருக்கு துணையாக இருந்தது மில்டனுக்கு பிடிக்கவில்லை.

மில்டன் ஆலய மூடநமிக்கைகளை எதிர்த்து பல பாடல்கள் எழுதினார். ஆனால், மதவெறியர்கள் மில்டனை நாத்திகராக பிரதிபலித்து அவர் எழுதிய பாடல்களை புறக்கணித்தனர்.

மில்டன் 'பிரடைஸ்ட் லாஸ்ட்' நூலில் எழுதிய பின்னனியை பலரும் சிந்திப்பதில்லை. அந்த நூலில் சாத்தான் கடவுளை பழிவாங்கும் வகையில் புரட்சி வேளை செய்வதாக ஜான் மில்டன் கூறியுள்ளார். கடவுளுக்கு பதிலாக சார்லஸ் மன்னரையும், சாத்தான் பதிலாக மக்களையும் மனதில் வைத்து தான் எழுதினார். இதை தெரிந்தும் இன்னும் சில பேர் மில்டன் ஒரு நாத்திகர் என்று தான் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

கடவுளை எதிர்த்து பல பாகங்களாக எழுதி விட்டு 'பிரடைஸ் ரீகைன்' காவியம் மூலம் சரி செய்ய பார்க்கிறார் என்று ஒரு சிலர் கூறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மில்டன் பொய்யான குருமார்க்கர்களை எதிர்த்தார். மதங்களை எதிர்க்கவில்லை.குருட்டு தனமாக மதத்தை பின்பற்றுபவர்களை எதிர்த்தார். தெய்வத்தை பழித்து ஒரு போதும் எழுதவில்லை.

9. பிரடைஸ் லாஸ்ட் ( சொர்க்க நீக்கம் )

குடும்பத்தை பற்றி நடக்கும் பட்டி மன்றங்களில் பெரும்பாலிம் ஜான்மில்டனின் பிரடைஸ் லாஸ்ட் மற்றும் பிரடைஸ் ரீகைன் நூல் பெயர் அடிப்படும். ஒரு பட்டி மன்றத்தில் ஆண்களுக்கு ஆதரவாக பேசும் பேச்சாளர் " ஜான் மில்டன் மனைவி கூட வாழும் போது பிரடைஸ் லாஸ்ட் என்னும் உலக காவியத்த எழுதினாரு...அவர் மனைவிய விட்டு போனதும்.... பிரடைஸ் ரீகைன் இன்னொரு காப்பியத்த எழுதியிருக்காரு..." என்று பேசினார். இது போதுவாக நகைச்சுவைக்காக பட்டி மன்றத்தில் பேசுவார்கள். ஜான் மில்டன் அண்ணாதுரை அவர்கள் ஒர் இரவில் 'ஒர் இரவு' நூலை எழுதியது போல் 'பிரடைஸ் லாஸ்ட் ' காப்பியத்தை எழுதவில்லை. மில்டன் பிரடைஸ் லாஸ்ட் நூலை எழுத எத்தனையோ ஆண்டுகளை செலவிட்டார். பல ஆண்டுகள் எழுதி வெளியீட்ட நூலுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால்,அதுவுமில்லை. அந்த காப்பியத்தை யாரும் வாங்க முன் வரவில்லை. அது மட்டுமில்லாமல் பலர் அந்த காப்பியத்தை வெளிவரக் கூடாது என்று தான் எதிர்த்தார்கள். மில்டனுக்கு பல மிரட்டல்களை சந்திக்க வேண்டியது இருந்தது.

உலகப் புகழ் பெற்ற 'பிரடைஸ் லாஸ்ட்' வெளிவந்து பதினோரு வருடங்களில் மூவாயிரம் பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டது. ஆனால், அதை பற்றி மில்டன் கவலைப்படவில்லை. எண்ணிக்கை குறைந்த போதிலும் தகுதி படைத்த வாசகர்கள் கிடைத்தை நினைத்து ச்ந்தோஷப்பட்டார். குறைவான பிரதிகள் விற்கப்படுவதை நினைத்து ஒரு நாள் கூட வருத்தப்பட்டதில்லை. வாசகர்களின் எண்ணிக்கைகளை விட அவர்களின் அறிவுத்திறமை தான் விரும்புவார்.

உலகப்புகழ் பெற்ற பிரடைஸ் லாஸ்ட் காவியம் ஏன் அதிகம் விற்கப்பட்டாமல் இருந்தது ? பலரும் எதிர்க்கும் அளவிற்கு அப்படி என்ன 'பிரடைஸ் லாஸ்ட்' காப்பியத்தில் என்ன எழுதினார் ?

'பிரடைஸ் லாஸ்ட்' முன்னுரையாக எழுதப்பட்ட வரிகள் பழைய கவிதை மரபினையை கைவிட்டதை கூறுகிறார். அது மட்டுமில்லாமல் எதுகை மோனையைத் தவிர்த்து செய்யுள் முறையில் இக்காவியத்தை எழுதியுள்ளார். இப்படி மில்டன் செய்திருப்பது ஆங்கில மொழிக்குப் புதியது.செய்யுள் வடிவமாக இருந்தாலும் படிப்பதற்கு எளிமையாக இல்லமல் மிகவும் கடினமாக இருக்கும்.

முதல் பதிப்பில் பத்து நூல்களாக 1667ல் வெளிவந்தது. அதன் பின் இரண்டாவது பதிப்பில் பன்னிரண்டு நூல்களாக 1674ஆம் ஆண்டு வெளிவந்தது.பிரடைஸ் லாஸ்ட் நூலில் முக்கிய கதாப்பாத்திரங்களாக லுசிபையர் என்னும் சாத்தானும், ஆதாம், ஏவாள் மற்றும் கடவுள் வருகிறார்கள்.

பலர் மில்டனின் 'பிரடைஸ் லாஸ்ட்' காவியத்தை எதிர்த்த முக்கிய காரணம் அவர் சாத்தானை மையமாக வைத்து எழுதியிருந்தார். சாத்தானிடம் மனிதன் எப்படி வீழ்ச்சி அடைந்தான் என்பதை பன்னிரண்டு நூல்களாக 'பிரடைஸ் லாஸ்ட்' காவியத்தில் எழுதினார். சாத்தான் வெற்றி பெரும் கதையை யாராலும் எற்றுக் கொள்ள முடியவில்லை. மனிதனின் வீழ்ச்சிக்கு காரணமாய் இருந்த சாத்தனிடமிருந்து தன் கதையை தொடங்கிருக்கிறார் மில்டன். சாத்தான் கடவுளை எதிர்த்து புரட்சி செய்த காரணத்திற்காக விண்ணுலகிலிருந்து விரட்டப்படுகிறான். தனக்கு உதவியாய் இருந்த தேவர்களும் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். சாத்தானுக்கு அடுத்தப்படியாக இருக்கும் பெயல்செபு என்பவனுடன் கடவுளை வீழ்த்த சாத்தான் ஆலோசனை நடத்தினான். தன்னுடன் இருக்கும் வீழ்ந்து கிடப்பவர்களிடம் புதிய விண்ணுலகத்தை வெற்றி பெற ஊக்கப்படுத்துகிறான். கடவுளை வெற்றிப் பெற ஆலோசனை நடத்த மண்டபம் கட்டுகிறார்கள். இது எல்லாம் 'பிரடைஸ் லாஸ்ட்' வரும் முதல் நூலின் சுருக்கம்.

இரண்டாவது நூலில் கட்டப்பட்ட மண்டபத்தில் நடந்த ஆலோசனைகளை பற்றி விவரிக்கிறார். அந்த ஆலோசனையில் கடவுளை வெல்ல இன்னொரு யுத்தத்தை பற்றியும், கடவுள் உருவாக்க போகும் இன்னோரு உலகத்தை பற்றியும் பேசினார்கள். புதிய உலகம் கடவுள் உருவாக்கும் செய்தியை உறுதி செய்து கொள்ள சாத்தான் புரப்படுகிறான். அது வரை நரத்தில் இருந்த சாத்தான் வெளியே வந்து புதிய உலகம் பார்க்க வருகிறான். சாத்தானுடன் இருந்த தேவர்களும் அவனை வழி அனுப்பி வைக்கிறார்கள்.

முன்றாவது நூலில் கடவுள் சாத்தான் வருவதை தன் தீர்க்க தரிசனத்தால் தெரிந்து கொள்கிறார். மனிதன் சாத்தானை வெல்ல ஆற்றல் இருந்தும் சாத்தான் மனித குலத்தை வெற்றி கொள்ள போவதை உணர்கிறார். மனிதன் வீழாமல் இருக்க வேண்டும் என்றால், அவன் குற்றம் புரியாமல் இருக்க வேண்டும். மனிதன் குற்றம் புரிந்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. ஆதனால், மனிதனுக்கான தண்டனை ஏற்றுக் கொள்ள கடவுள் தேவகுமாரணை அனுப்புகிறார்.

நான்காம் நூலில் சாத்தான் தேவன் உருவத்தில் புதிய உலகத்தை அடைகிறான். அங்கு வசிக்கும் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் அறிவுக்கனி உண்ண தடையிருப்பதை சாத்தான் தெரிந்து கொள்கிறான். ஏவாள் காதில் தீய உரைகள் நிகழ்த்தும் போது அங்கு இருந்த காவலாளிகளிடம் மாட்டிக் கொண்டு, இறுதியில் சாத்தான் அஞ்சி ஒடுவதாக முடிகிறாது.

ஐந்தாவது ஏவாள் தான் கண்ட கெட்ட கனவை ஆதாமிடம் கூறுவதும், அதற்கு ஆதாம் ஆறுதல் கூறுவதாக தொடங்குகிறது. மனிதனின் எதிரி மிக அருகில் தான் இருக்குறான் என்று சில தேவர்கள் ஆதாமுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். மனிதனை கடவுளிடம் இருந்து பிரித்து கடவுக்கு எதிராக தன் பக்கம் மனிதனை சேர்த்துக் கொள்ளும் தீய சக்தி பற்றி இங்கு விவரிக்கிறார்.

ஆறாவது நூலில் தேவர்கள் சாத்தானின் புரட்சியை பற்றி விளக்குவதில் தொடங்குகிறார். சாத்தான் எதிர்க்கும் போரில் தேவ குமாரர்கள் வெல்ல வேண்டும் என்று கடவுள் விரும்புவதாக கூறுகிறார். ஏழாவது நூலில் ஆதாமுக்கு உலகத்தை பற்றி தேவர்கள் கூறும் அறிவுரை தொடர்கிறது. ஆதாமுக்கு உலகத்தை பற்றி எழும் சந்தேகங்களை தேவர்கள் நிவர்த்தி செய்வதாக எட்டாவது நூல் அமைகிறது.

இவ்வளவு பெரிய காவியத்தில் திருப்புனையாக இருப்பது ஒன்பதாம் நூலில் அமைகிறது. சாத்தான் பாம்பு வடிவத்தில் ஏவாளுக்காக காத்திருக்கிறான். தோட்ட வேலைக்காக வந்த ஏவாளிடம் அவளை புகழ்ந்து பேசுகிறான். ஒரு பாம்பு பேசுவது ஏவாளுக்கு மிக பெரிய விஷயமாக இருந்தது. பாம்புக்கு எப்படி பேசும் திறன் வந்தது என்று ? ஏவாள் கேட்டாள். அதற்கு பாம்புருவில் இருந்த சாத்தான் தடை செய்யப்பட்ட அறிவுகனியை உண்டதால் பேச முடிந்தது என்று கூறுகிறார். மலைப்படைந்த ஏவாள் அந்த கனியை உண்ண ஆசைப்படுகிறாள். மனதில் இருந்த பயத்தால் அது வரை தொட தங்கிய ஏவாள், சாத்தானின் இனிமையான வார்த்தைகளின் தூண்டுதலில் பேரில் அந்த கனியை உண்டாள். அந்த கனியை உண்ட ஏவாள் ஆதாமுக்கும் கொண்டு செல்கிறாள். ஆதாம் அதிர்ச்சி அடைக்கிறான். எனினும் ஏவாள் மீது உள்ள காதலாலும், அவள் கட்டாய படுத்தியதாலும் ஆதாமும் அந்த கனியை உண்கிறான். அதன் பின் ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லிக் கொள்கிறார்கள்.

பத்தாவது நூலில் புதிய உலகிற்கு வந்த தேவர்கள் குற்றம் செய்த ஆதாமையும், ஏவாளையும் தண்டிக்கிறார்கள். இருவரையும் சொர்க்கத்தை விட்டு விரட்டியடிக்க உத்தரவிடுகின்றனர். கருணையை வேண்டி ஆதாமும், ஏவாளும் கடவுளை வேண்டினர். மனிதனை வென்ற சாத்தான் தன் வெற்றியை தன் கூட்டத்தினறிடம் கூறுகிறான். சாத்தான் கூட்டத்தினர் அவனை பாராட்டாமல் சாத்தானை திட்டினர். சற்று நேரத்தில் சாத்தான் உட்பட அந்த கூட்டத்தில் அனைவரும் பாம்பாக மாறினர்.

பதினொன்றாம் நூலில் ஏவா ளும் ஆதாமும் பிராத்தனை செய்ததில் கடவுள் கருணை புரிகிறார். இருவரையும் சொர்க்கத்தில் இருந்து வழி அனுப்ப மைக்கேல் வருகிறார். மைக்கேல் ஆதாமிடம் தேவக்குமாரன் மனிதகுலத்தில் பிறந்து சாத்தானை வென்று மனிதகுலத்தை பாவத்தில் இருந்து மீட்பான் என்று மைக்கேலுக்கு ஆறுதல் கூறுகிறார்.

இறுதி நூலில் ஆறுதல் அடைந்த ஆதாமும், ஏவாளும் சொர்க்கத்தை விட்டு வெளியெறினர். மைக்கேல் இருவரும் வழி நடத்தி சொர்க்கத்தை விட்டு வெளியே அனுப்பினார். இருவரும் வருகாலத்தை பற்றி கனவு கண்டு சொர்க்கத்தை விட்டு வெளியே வந்தனர்.

இது தான் பன்னிரண்டு நூல்களின் சாரம். இப்பொது புரிந்திருக்கும் ஏன் பலர் 'பிரடஸ் லாஸ்ட்' நூலை எதிர்த்தார்கள் என்று. சாத்தான் மனிதனை வென்ற கதை. குற்றத்திற்கு தண்டனையாக மனிதன் சொர்க்கத்தை விட்டு வெளியேறியது. சாத்தானை நாயகன் அளவிற்கு உயர்த்தி எழுதியது. இப்படி பல காரணங்களால் 'பிரடைஸ் லாஸ்ட்' காவியத்தை எதிர்த்தனர்.'பிரடைஸ் லாஸ்ட்' பிறகு மில்டன் எழுதிய நூல்களை யாரும் எதிர்க்கவில்லை என்பது குறிப்பட தக்கது.

இக்காலத்தில் 'சாத்தானின் கவிதைகள்' என்று நூலை எழுதிய சல்மான் ருஸ்டி எதிர்ப்புகளை விட மில்டனுக்கு அதிகம். இக்காலத்திற்கே இப்படி என்றால் அக்காலத்தின் மக்களின் மனம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஒரு சிலர் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலை கூட எறித்தார்கள். அன்று பலரு எதிர்த்த நூல் இன்று ஆங்கிலத்தில் மிக பெரிய இதிகாசமாக கருதப்படுகிறது. நல்ல நூல் காலம் கழிந்து தான் அங்கிகாரம் கிடைக்கும் என்பதற்கு 'பிரடைஸ் லாஸ்ட்' நூல் ஒரு உதாரணம்.

8. மில்டனின் எழுத்து

ஒருவன் எப்படி கவிஞனாகினான் என்று யாராலும் கூற முடியாது. படித்தால் எந்த துறையில் வேண்டுமென்றாலும் நுழைந்து விடலாம். கவிஞனாகுவது படிப்பு, பட்டம் என்று எதுவும் தேவையில்லை. ஏழாவது படித்த முத்தையா ஒரு கண்ணதாசனாக மாறியது போல் உலகத்தில் இருக்கும் அனைத்தையும் ரசிக்க தெரிந்தவன் தான் சிறந்த கவிஞனாகுகிறான்.

மில்டன் ஒரு புரட்சிகரமான எழுத்டாளர் தான். மீண்டும் மன்னராட்சி மலர்ந்த பிறகு அரசசியலில் இருந்து விளகி கொண்டார். பிறகு மில்டன் காதல், ஆன்மீகம் பற்றி பாடல் எழுதினார். பார்வை இழந்த மில்டனுக்கு இறுகாலத்தில் காதல் பற்றி எழுத உத்வேகமாய் இருந்தவர் அவரின் மூன்றவ்து மனைவி தான்.

மில்டனின் கவிதை திறமை உலகிற்கு காட்டிய 'பிரடைஸ் லாஸ்ட்' நூலில் சாத்தானின் நிலையினை மிக அழகாக கூறுப்பிடுகிறார். தன்னுடன் வீழ்ந்து கிடக்கும் தேவர்களை எழுப்ப முனையும் போது தன்னையும் மீறி கலங்கி போய் விடுகிறான். இந்த கட்டத்தில் சாத்தானை நாயகன் அளவிற்கு உயர்த்தி எழுதியிருப்பார்.

ஆங்கிலத்தில் உவமைகளை அதிக பயன்படுத்தியவர் மில்டன் தான். தான் கூற வருவதை அதற்கு நிகரான பொருட்களுடன் ஒப்பிட்டு மிக எளிதாக படிப்பவர்களுக்கு புரிய வைப்பார். மில்டனின் கவிதையில் காணப் பெறும் கவர்ச்சியே அவருடைய உவமைத்திறனாக தான் இருக்கும். சில உவமைகளை விளக்கும் போது உவமானத்தை பற்றிய வர்ணனை, படிக்கும் உவமேயத்தை மறக்கும் அளவிற்கு இருக்கும். இன்னொரு இடத்தில் சாத்தானுக்கும், மைக்கேலுக்கும் நடக்கும் போரில் இரண்டு கிரகங்கள் ஒன்றோடோன்று மோதிக் கொள்வது போல் இருந்தது என்று மில்டன் வர்ணிக்கிறார்.

ஒரு சிலர் மில்டனின் உவமை திறனை கடுமையாக விமர்சித்து வந்தனர். மில்டனுடைய உவமையில் எடுத்துக் கொண்டு பொருளை விட்டு விலகி செல்வது போல் உள்ளது என்று குறைக் கூறுவாரகள். சில இடங்களில் அப்படி தெரிந்தாலும் சரியான நேரத்தில் மில்டன் உரிய பொருளை நம் முன் கொண்டு வந்து நிருத்தி விடுவார். இன்று யாராவது ஆங்கிலத்தில் உவமைகள் கவிதை எழுதினால் மில்டன் நடை என்று சொல்லும் அளவிற்கு மில்டனின் உவமைகள் இருக்கும்.

'பிரடைஸ் லாஸ்ட்' நூல் சாத்தானின் கேடயத்தை நிலவுடன் ஒப்பிட்டுகிறார். ஜூபிட்டர் என்னும் கடவுளுடன் சாத்தான் போரிடும் போது சாத்தானை கடல் வாழ் மிருகத்துடன் ஒப்பிட்டுகிறார். இந்த இடத்தில் சாத்தானை மறந்து விட்டு கடல் வாழ் மிருகத்தை பற்றி விவரமாக கூற ஆரம்பிக்கிறார் மில்டன். எட்டு வரிகளில் அந்த மிருகத்தை விளக்கிய பிறகு மீண்டும் சாத்தானை நினைவு கூர்ந்து சாத்தானை பற்றி விவரிக்கிறார். 'பிரடைஸ் லாஸ்ட்' நூலில் சாத்தானுக்கு ஒவ்வொரு உவமைகளையும் மில்டன் நன்கு யோசித்து எழுதியிருக்கிறார். ஆனால், மில்டன் இந்த உவமைத்திறனை அவருக்கு எதிரியாக இருந்தது. மில்டன் சாத்தானுக்கு பல உவமைகள் எழுதியதால் பலர் 'தமது அறிவுத் திறமையை தேவையற்ற முறையில் வெளிக்காடி இருக்கிறார்' என்று மில்டனை குற்றம் சாட்டினர்.

மற்றவர்கள் வேண்டுமால் இரவில் பேய் வரும் என்று பயம் வரலாம். ஆனால், கவிஞனுக்கு இரவில் தானே கற்பனை திறன் அதிகமாகும். மில்டன் எழுத முடிவு செய்துவிட்டால் இரவில் விழித்தாவது எழுதி விடுவார்.

மில்டன் எப்பொதும் கவிதையை முன்பே யோசனைசெய்தோ அல்லது திட்டமிட்டோ எழுதியதில்லை. உள்ளத்தில் வெளிப்பாடு கவிதை என்று நன்கு உணர்ந்தவர் மில்டன். ‘தானாய் வந்தால் தான் கவிதை, நாமாக வர வழைத்தால் கட்டுரை’ என்பார். 'முன் கூட்டியே ஆழ்ந்து எண்ணிப் படப்பதை விட மனதில் நொடிப் பொழுதில் வரும் சிந்தனையை கவிதையாக எழுத வேண்டும்' என்று மில்டன் அடிக்கடி கூறுவார். அப்படிப்பட்ட கவிதைகள் தான் மனதை தொடும் என்பார். எழுத வேண்டுமே என்பதற்காக ஒரு பொதும் மில்டன் எழுகியதில்லை.

மில்டனின் உள்ளத்தில் வெளிப்பாட்டாக இந்த வரிகளை உதாரணத்திற்கு சொல்லலாம்.

".... Thus with the year
Seasons return, but not to me returns
day or the sweet approach of Evin or Mor
or sight of vernal bloom or summer's rose;
or flocks or herds or human face divine
But cloud instead and even during dark
surround me........"

'பருவங்கள் மாறி வரும் கால ஒட்டத்தில் எனக்கு பகலோ, காலையோ அல்லது இனிமையான மாலை வேளையின் வரவோ தெரிவதில்லை. கோடையில் மலரும் ரோஜா, வசந்தகாலத்தின் மொட்டு, மனிதனின் தெய்வீக முகம் எதுவுமே என் கண்ணுக்கு தெரிவதில்லை. என்னை சுற்றி இருள் மட்டுமே உள்ளது' என்று 'பிரடைஸ் லாஸ்ட்' நூலில் மறைமுகமாக தன் குருட்டு தன்மை நினைத்து வருந்துகிறார். கலைஞனும், கவிஞனும் சோகத்தில் இருக்கும் போது தான் அவர்களின் உண்மையான திறமஒ வெளிப்படும் என்று சொல்வார்கள். மில்டன் வருத்ததில் பல கவிதை எழுதியதால் அவர் இயற்றிய கவிதை சோகத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

இக்காலத்தில் மட்டுமல்ல அ க்காலத்தில் கதாநாயகனின் வீரத்தையும், பலத்தையும் பற்றி தான் பலர் பாடி வந்தனர். அப்பொது கதாநாயகனின் யுத்தங்களையும், சாகசங்களையும், புத்தி கூர்மையும் பற்றி எழுதினர். இப்பொது கதாநாயகனின் சண்டை 'சாங்காக'(SONG) எழுதுகிறார்கள். ஆனால், மில்டன் தன் படைப்புகளை வீரகாவியமாக கருதினாலும் நாயகனின் உடல் பலத்தையோ அல்லது வீரத்தையோ அதிகம் புகழவில்லை. நல்ல குணமும், வெற்றியும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே ! பல இடங்கலில் நாயகர்களின் துக்கம், சோகம் சூழ்ந்து கொண்டு இருபதை போல் எழுதியிருப்பார்.

மில்டன் எழுதுவதற்கு உத்வேகமாக இருந்தவர் ஷேக்ஸ்பியர். அவர் பற்றி மில்டன் தன் எழுத்துக்களில் சொல்லாமலில்லை. 1632ல் ‘On Shaekspeare’ என்ற படைப்பை எழுதினார். மில்டன் தன்னுடைய அலெக்ரோ என்னும் பாடலில் 'இனிமையான ஷேக்ஸ்பியர்!' என்று அழைக்கிறார். ஷேக்ஸ்பியர் மரணத்தின் போது 'ஷேக்ஸ்பியருக்கு நினைவு சின்னம் எதற்கு' என்று கேள்வி எழுப்புகிறார். 'ஷேக்ஸ்பியர் எலும்புகளின் மேல் அடுக்கப்பட்ட கோபுரம் எதற்கு ? அவரது தேவீக அஸ்தியில் நடசத்திரத்தின் கீழ் பிரமிடு வடிவ கோபுரம் எதற்கு ? நினைவுகளுக்கெல்லாம் வழித் தோன்றல் ஷேக்ஸ்பியர் ! பெரும் புகழுக்கு வாரிசு ஷேக்ஸ்பியர் ! நம் எல்லோருடைய வியப்பிலும் நிலைத்திருக்கக் கூடிய நினைவு சின்னம் ஒன்று ஷேக்ஸ்பியர். நம் எண்ண ஒட்டங்களில் அவர் எப்போது உஇருடன் இருப்பார்" என்று ஷேக்ஸ்பியரின் மரணத்திற்கு பாடினார் மில்டன்.
மில்டனின் எழுத்துக்களை பற்றி சொல்லும் போது அவருடைய சோனட் (Sonnet) கவிதை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. சோனட் கவிதை... எங்கோ கேள்வி பட்டது போல் உள்ளதா...!! ஆங்கில பாடங்கலில் சோனட் கவிதை படிக்காமல் யாராலும் அடுத்த வகுப்புக்கு போக முடியாது. பதினான்கு வரிகள் கொண்ட கவிதை. பெரும் பாலான தன் சோகங்களை அழகாக சோனட் கவிதையில் சொல்லியிருப்பார். சோனட் கவிதை எழுதுயவர்களின் கவிஞர் பட்டியலில் எடுத்து பார்த்தால் மில்டனுக்கு தனியிடம் உண்டு.
கண்ணில்லாத மில்டன் உலகத்தை எப்படி ரசித்திருப்பார் என்ற சந்தேகம் எழக்கூடும் ? அவரால் ரசிக்க முடியாவிட்டாலும் உணர்வுகளை புரிந்துக் கொள்ள கூடியவர். அதனால் தான் அவரின் எழுத்துகளில் ஜீவன் இருக்கும்.மில்டன் படைப்புகளில் போதுவாக சோகம், விரக்தி எப்பொதும் சூழ்ந்து இருக்கும் என்பது பறுக்க முடியாத உண்மை.

7. மில்டன் மனைவிகள் !

கவிஞனுக்கும் நடிகனுக்கும் மனைவியாக வாக்கப்படுவது ரொம்ப கொடுமை. நடிகம் நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வருவார்; மனைவிக்கு துரோகம் செய்ய அதிக வாய்ப்புகள் உண்டு; சம்பாதித்த பணம் ஒரே சமயத்தில் இழக்க சந்தர்ப்பம் அதிகம்; இதையெல்லாம் நடிகனுக்கு மனைவியாக போகும் பெண் மனதில் வைத்துக் கொண்டு தங்களை இந்த சூழ்நிலைக்கு தயார் படுத்திக் கொள்ள கட்டாயத்தில் இருப்பார்கள்.

அதே போல் கவிஞனுக்கு மனைவி என்பது அதை விட கடினம். அதுவும் முழு நேர கவிஞன் என்றால் சொல்லவே வேண்டாம். அது மிக மிக கொடுமை. இதற்கு உதாரணம் நம் பாரதியின் செல்லம்மா தான். இருபதாம் நூற்றாண்டில் தலை சிறந்த கவிஞன் என்று பெயர் எடுத்த பாரதியார் காக்கை, குயில் பசிக்கு செல்லம்மா இரவலாக வாங்கி வந்த ஆகாரத்தை போடுவார். செல்லம்மா வறுமையிலே வாழ்ந்தார். " இந்த மனுஷன கட்டி என்ன சுகத்த கண்டேன்" என்று மற்ற பெண்கள் போல் புலம்பி கணவனை விட்டு தாய் வ்ட்டுக்கு போகவில்லை. பாரதி புரட்சி பாடல்கள் எழுதும் பொழுதும், அவர் இறக்கும் போது அவருடன் தான் இருந்தார்.

கவிஞனுக்கு வறுமை என்று எழுதப்படாத நீதி. பாரதிப் போல் மில்டனும் புரட்சி கவிஞன் என்றாலும் பாரதிக்கு இருந்த வறுமை மில்டனுக்கு இல்லை. பாரதியை காட்டிலும் மில்டனுக்கும் எல்லாம் மூன்று மடங்கு அதிகம். மனைவியும் உட்பட !!

மில்டனின் வாழ்க்கையில் மூன்று மனைவிகளும் ஒருவர் மரணத்திற்கு ஒருவர் என்று வந்தார்கள். முதல் கோணம் முற்றிலும் கோணல் என்பது போல் முதல் மனைவியும், அவர்களின் மூலம் பிறந்த பெண் குழந்தைகளாலும் மில்டன் தன் வாழ்க்கை இறுதி கட்டம் வரை நிம்மதில்லாமல் தவித்தார்.

1642ஆம் ஆண்டு மில்டன் மெரி பவல் என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். மில்டனுக்கு முதல் திமணம் நடக்கும் போது அவர்க்கு வயது முப்பத்தி முன்று ! மண ப்பெண்ணாக இருந்த மெரி பவலின் வயது 16 !! பல பொருத்தங்கள் பார்த்து நடக்கும் திருமணத்தில் எத்தனையோ பிரச்சனைகள். மெரி பவல் விட இரண்டு மடங்கில் வயதில் முத்தவர் மில்டன். பிரச்சனைகளை பற்றி சொல்லவா வேண்டும்.

பதினாறு வயதிலே திருமணமானதால் கணவன் மனம் புரிந்துக் கொண்டு மெரி பவலால் நடந்துக் கொள்ள முடியவில்லை. தனக்கு பிடித்தை கூட சரியாக சொல்ல தெரியாத வயதில் கணவருக்கு பிடித்ததை எப்படி புரிந்து செய்ய முடியும். இவர்கள் இல்லற வாழ்க்கையில் எதோ வாழ வேண்டுமே என்று தான் இருவரும் வாழ்ந்தார்கள். வயது வித்தியாசம் கூட மெரி பவலுக்கு பெரிதாக தெரியவில்லை. அந்த சமயத்தில் மில்டன் இங்கிலாந்து மன்னராட்சியை எதிர்த்து சில புரட்சி கவிதைகளையும், செயல்களிலும் ஈடுப்பட்டு வந்தார். மில்டனின் இந்த பணி மென்ரி பவலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.பல முறை சொல்லி பார்த்தார், கெஞ்சி பார்த்தார். மில்டன் கேட்டதாக தெரியவில்லை. நாட்டுக்காக தன்னால் முடிந்த வரை எதையாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் மில்டன். "இனி என்ன சொல்லியும் இந்த ஆளுக்கு புத்தி வராது ! நாம கிளம்புனா நம்மல கூப்பிட பின்னாடியே வருவாரு" என்று மெரி பவல் நினைத்தார். தன் பெட்டி படிக்கை எல்லாம் மூட்டைகட்டி கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்றார் மெரி பவல். இது எல்லாம் அவர்கள் திருமணமாகி ஒரு மாதத்தில் நடந்தது.பின்னாடியே தன்னை அழைக்க மில்டன் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், நடந்த்தே வேறு !!

'அக்னி நடசத்திரம்' ஜனகராஜ் போல 'என் பொண்டாட்டி ஊருக்கு போய்டா' என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். தன் பொது பணிகளை எந்த தடங்கள் இல்லாமல் செம்மையாக நடக்கும் என்று கருதினார்.

விவாகரத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினார். திருமணம் ஆன ஓர் ஆண்டில் "திருமணம் நாமே தேடிக்கொள்ளும் சங்கிலி" என்று கூற தொடங்கிவிட்டார்.1643ல் ‘Discipline of Divorce’ திருமணத்தை பற்றி தன் மனதில் இருந்த பல வாதங்களையும், கசப்பான அனுபவங்களையும் எழுதினார்.

அப்படி இப்படி என்று மூன்று வருடங்கள் உருண்டது. சிவில் யுத்தமும் ஒரு வழியாக ஒய்ந்தது. அது வரை வராத மெரி பவல் மீண்டும் மில்டனிடம் வந்து சேர்ந்தார். அதன் பிறகு இவர்கள் வாழ்க்கை சுமுகமாக இருந்தது. மில்டன், மெரி பவல் இருவருக்கும் அனி (1646), மெரி (1648), ஜான்(1651), டெபுரா(1652) என்று நான்கு குழந்தைகள் பிறந்ததார்கள். மில்டன் இல்லற வாழ்க்கையிலும் அலை அடித்து ஒய்ந்த பிறகு மெரி பவல் பிரசவத்தில் புயலே வந்து தாக்கியது. நானகாவது பிரசவத்தில் வந்த உடல் ரிதியான பிரச்சனையால் டெபுரா பிறந்தவுடன் மெரி பவல் மே 5, 1652 இறந்தார். என்ன தான் மனைவியுடன் பல மன கசப்புகள் இருந்தாலும் பெரி பவலின் மரணம் மில்டனை மிகவும் பாதித்தது. மனைவி இழப்பின் சோகம் போவதற்கும் மில்டனுக்கு இன்னொரு இடி விழுந்தது. மில்டனின் பதினைந்து வயது மகன் ஜான் இறந்தான். முதல் மகள் அனி பிறந்தவுடன் சிறிது நாட்களில் மில்டனின் தந்தையும் இறந்தார். மீண்டும் தன் வாழ்வில் நெருங்கியவர்களின் தொடர் இழப்பு.தனக்கு சொந்தமான்வர்களின் ஒவ்வொருவரின் மரணத்தை பார்த்து மன ரிதியாக மில்டன் இறந்துக் கொண்டு இருந்தார். எந்த உறவுகளும் இல்லாத மில்டன் மூன்று மகள்கள் வைத்து வளர்க்க சிரமாக இருந்தது.

அது மட்டுமில்லை ! மில்டனுக்கு அவரின் மகள்களுக்கு மன கசப்பு இருந்தது. இவர்களுக்கும் எதாவது ஒரு காரணதிற்கு சண்டை வந்து கொண்ட இருக்கும். வயதாக் ஆ க மில்டனுக்கு பார்வை மங்க தொடங்கியது. மகள்கள் கொடுக்கும் தொல்லை ஒரு புறம், கண்ப் பார்வை பிரச்சனை மறு புறம். என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார். பல சமயம் பொறுமையாகவும் இருந்தார் ! முடியவில்லை. தனக்கு இன்னொரு துணை வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் மில்டன். தனக்கு துணையின் அவசியத்தை உணர்ந்த மில்டன் நவம்பர் 2, 1656 கத்திரின் வுட்குக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண் பார்வை முழுமையாக இழந்த மில்டனுக்கு கத்திரின் நல்ல வாழ்க்கை துணையாக திகழ்ந்தார். ஆனால், இந்த வாழ்க்கையும் மில்டனுக்கு நிலைக்க வில்லை. மில்டனுடன் முழுசாக இரண்டு வருடம் கூட வாழ அவருக்கு கொடுத்து வைக்கவில்லை. பிப்ரவரி 2, 1658 அன்று கத்திரின் இறந்தார்.

இவர்கள் இருவருக்கும் கத்திரின் ( மகளின் பெயரும் கத்திரின் தான்) என்ற நான்கு மாத பெண் குழந்தையும் அப்பொது இருந்தது.

மில்டனின் இரண்டாவது திருமணத்தை கடுமையாக பேசி மில்டன் மனதை அவரது மகள்கள் காயப்படுத்த தொடங்கினர். "இவருக்கு இந்த வயசுல கல்யாணம் தெவையா ?" என்று வசை சொல்லில் பேசினர். இங்கிலாந்தில் மீண்டும் மன்னராட்சி மலர்ந்தது போல் மில்டனின் வாழ்க்கையில் மீண்டும் துயரம் சூழ்ந்தது கொண்டது. அவருக்கு வேறு வழி தெரியவில்லை. இன்னொரு திருமணம் செய்துக் கொண்டார். 1662ஆம் ஆண்டு எலிசபத் மின்ஷுல் என்பரை மணந்தார்.

கண்ணிருப்பவர்களுக்கே திருமணம் நடக்கும் கஷ்டமாக இருக்கும் போழுது மில்டன் மட்டும் கண் பார்வை இழந்து பிறகு இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார். அதுவும் தான் பெற்ற மகள்களை எதிர்த்து !!

மில்டனின் மூன்றாவது திருமணம் அவரின் இறுதி காலம் வரை ஆறுதலாக இருந்தது. தான் பெற்ற மகளிடம் பிரிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவரால் 'பிரடைஸ் ரீகைன்' என்ற சிறாப்பான படைப்பை படைக்க முடிந்தது.

எந்த பொருளையும் அதிகமாய், ஆழமாய் ரசித்தால் தான் கவிதை வரும். மில்டன் எடுத்துக்காட்டாக சொல்லி பல கவிஞர்கள் வாழ்க்கையை அதிகமாக ரசிக இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்வதை பார்க்கிறோம். ஆரம்பத்தில் மில்டனின் தனிப்பட்ட வாழ்க்கை அவரின் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலுக்கு அடிப்படையாக் இருந்தது. அதன் பின் கிடைத்த மன நிம்மதியில் 'பிரடைஸ் ரீகைன்' எழுத தூண்டியது. மற்றவர்களின் வாழ்க்கைக்களை விட ஒரு கவிஞனின் வாழ்க்கையின் பெண் எப்போதுமே முக்கிய பங்கு வகிக்கிறார்.

6. சிவில் யுத்தம்

மில்டன் வெறும் எழுத்தாளர் மட்டுமில்லை. தன் எழுத்துக்கள் மூலம் விழுந்து கிடக்கும் மக்களை ஊக்கப்படுத்தியவர். தந்து 'பிரடைஸ் லாச்ட்' நூலில் சாத்தான் தன் சகாக்களை ஊக்கப்படுத்துவது போல் மக்களை ஊக்கப்படுத்துகிறார். சாத்தான் கடவுளுக்கு எதிரா செய்ய போகும் புரட்சியை மக்களும் மன்னரை எதிர்த்து செய்ய வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடந்த மன்னராட்சியை கருத்தி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அதை எதிர்த்து புரட்சி கோடியை பிடித்தவர் மில்டன். தன் கவிதையிலும், பாடலிலும் தன் நாடு மன்னரின் கீழ் வாடுவதை படம் பிடித்து காட்டுகிறார். மன்னராட்சியை எதிர்த்து பல கட்டிரைகளையும் எழுதியிருக்கிறார்.

மில்டனை போல் மன்னரின் கொடுமைகளை கண்டு கோதித்தவர் அலிவர் கிரம்வெல். மில்டனிடம் கவித்திறன் இருந்தது போல் அலிவர் கிரம்வெலிடம் வீரம் இருந்தது. அலிவர் கிரம்வெல் ஒரு எளிமயானா குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பது குழந்தைகளுக்கு தந்தை. அன்பு மனைவி எலிசபத்துடன் சந்தோஷமான வாழ்க்கை. ஹன்டிங்டன் சட்டசபையில் உறுப்பினராக 1628 தெர்வு செய்ய பட்டார். முதல் சார்லஸ் மன்னரால் சட்டசபையின் உறுப்பினர்கள் கலைக்க பட்டு சர்வாதிகார மன்னராட்சி செய்தார்.

இங்கிலாந்து மன்னராட்சி முதல் சார்லஸ் மன்னரால் பலர் படுகொலை செய்யப் பட்டதில் மில்டன் கோபமுற்றால். அந்த சமயத்தில் மில்டனால் கோபம் மட்டுமே படமுடிந்தது...? மன்னரை எதிர்த்து போர் சேய்யும் அளவிற்கு படைபலமில்லை. ஆனால், அலிவர் கிரம்வெல் மன்னருக்கு எதிராக படை திரட்டிக் கொண்டு இருந்தார். அவரை போல் பலரும் மன்னர் மேல் கடுங்கோபத்தில் இருந்தார். அவரகளை எல்லோரையும் ஒன்று சேர்த்தார் ஒலிவர் கிரம்வெல். இந்த சமயத்தில் மில்டனுக்கும், அலிவர் கிரம்வெலுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. மில்டனின் கவித்திற்மையை அலிவர் கிரம்வெல் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

ஒரு பக்கம் அலிவர் புரட்சி படைகள் திரட்டிக் கொண்டிருக்க, இனோரு பக்கம் மில்டன் மக்கள் விழிப்புணர்வு கவிதைகளும், பாடல்களும் எழுதி தூண்டு சிட்டில் பிரசுரம் செய்து மக்களுக்கு கொடுத்துக் கொண்டு இருந்தார். மக்களும் மன்னருக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். எரிச்சல் அடைந்த முதல் சார்லஸ் தன்னை பற்றி தவறான எழுதுவதை தடை செய்ய புதிய சட்டம் ஒன்று கொண்டு வந்தார்.

அந்த சட்டம் என்னவென்றால் எழுத்தாளர் தாங்கள் எழுதும் புத்தகம் பிரசுரம் ஆகும் முன்பு முதலில் அரசாங்கமிடம் கொடுத்து அனுமதி லைசன்ஸ் வாங்கிய பிறகே பிரசுரமாக்க வேண்டும். அரசாங்கத்துக்கு எதிராக இருக்கும் வார்த்தைகளை நீக்கவோ அல்லது புத்தகத்துக்கு தடை விதிக்கவோ அரசுக்கு முழு உரிமை உண்டு. அரசாங்கம் அனுமதியில்லாமல் யாரும் புத்தகம் பிரசுரம் செய்ய கூடாது என்ற தடையும் விதித்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் திரைப்படங்களுக்கு 'சென்சார் போட்' மாதிரி அன்று புத்தகங்களுக்கு சென்சார் போட் அமைத்தார் முதல் சார்லஸ் மன்னர்.

இந்த சட்டம் அமலுக்கு வந்ததும் கோதித்துபோனார் மில்டன். எழுத்தாளர் சுகந்திரத்தை சீகுழைக்கும் சட்டத்தை எதிர்த்தார். இங்கிலாந்து பாராளமன்றத்தில் தன் எதிர்ப்பை தெரிவித்தார். புத்தக சென்சார் அனுமதி சட்டத்தால் நல்ல புத்தங்கள் பாதிக்கப்படும் என்பதையும், எழுத்தாளரின் ஊக்கம் பாதிக்கப்படும் என்பதையும், புத்தகத்தின் உண்மையான நிறம் கெடும் என்றெல்லாம் கூறிபார்த்தார். நல்ல புத்தகங்கள் வெளிவராமல் தடுப்பது கொலைக்கு சமம் என்று வாதாடினார். மில்டனின் வார்த்தைகளுக்கு இங்கிலாந்து பாராளமன்றம் சேவி சாய்க்கவில்லை. இங்கிலாந்து எழுதிய சட்டம் எழுதியது தான் என்ற முடிவில் இருந்தது. ஆனால், மில்டன் சோர்ந்து விடவில்லை. 1644ல் எரோபேஜிடிகா ('Areopagitica’) என்ற தலைப்பில் இங்கிலாந்து பாராளமன்றத்தின் புத்தக லைசன்ஸ் சட்டத்தை எதிர்த்து பேசியதை ஒரு தூண்டுசிட்டில் பிரசுரம் செய்து வெளியிட்டார். சிவில் யுத்ததின் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது மில்டன் இதை செய்ததால் சார்லஸ் மன்னர் எரிச்சல் அடைந்தார்.

அலிவர் கிரம்வெல் தன் படைகளை திரட்டிக் கொண்டு சார்லஸ் மன்னரை தாக்க தயார் நிலையில் இருந்தார்கள். 22,000 பேர்கள் கொண்ட படை பதினொன்று பிரிவுகளாக இங்கிலாந்தை நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது. அந்த பதினொன்று பிரிவில் ஒரு பிரிவை ஒலிவர் கிரம்வெல் தலைமை தாங்கினார்.இங்கிலாந்தை சுற்றி வலைத்து தாக்கினார். இறுதில் ஒலிவர் கிரம்வெல் வென்றார். முன்று வருடங்களாக நடந்த முதல் சிவில் யுத்தம் 1645ல் முடிவுக்கு வந்தது.

பல புரட்சியகளும், போராட்டங்களும் நடந்த பிறகு இங்கிலாந்தில் பொது நல அரசு நிலவியது. சிவில் யுத்தம் மில்டனின் கவித்திறனை இருபது ஆண்டு வெளியே வரவிடாமல் செய்தது. அலிவர் கிரோம்வெல் ஆட்சி பொருப்பு ஏற்றுக் கொண்ட பிறகு தான் மில்டனின் திறமை உலகிற்கு தெரிய தொடங்கியது. முதல் சார்லஸ் மன்னர் இறந்த பிறகு "The Tenure of Kings and Magistrates (1649)" என்ற நூலை எழுதினார். மக்களின் மன பார்வைகளையும், மன்னராட்சிக்கு துணையாக தண்டிக்க பட்டதையும் மில்டன் வர வேற்று எழுதியிருந்தார். அலிவர் கிரோம்வெல் இங்கிலாந்தில் மன்னராட்சியை ஒழித்து பொருப்பேறுக் கொண்டார். தன்னுடன் மில்டனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அலிவர் கிரோம்வெல். மில்டனை அழைத்து விரும்பும் பதவியை எடுத்துக் கொள் என்றார்.

மில்டனும் மறுக்காமல் மக்களை ஊக்கவித்ததின் பலனாக இங்கிலாந்தின் லத்தீன் செயலாளராக பதவி ஏற்றார். மக்களும் மில்டனை ஏற்றுக் கொண்டனர். தனது பதவி காலத்தில் மில்டனும் மக்களுக்காக பல தொண்டுகள் செய்தார்.

அலிவர் கிரம்வெல் ஆட்சி அமைத்ததும் இங்கிலாந்தின் பாதுகாப்பு சுவராக இருந்தார். ஆட்சி பொருப்பெற்ற பின்பு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாட்டில் படை எடுத்து வெற்றியும் கண்டார். எப்பேர் பட்ட வீரனாக இருந்தாலும் மரணத்திடம் தோல்வியை தழுவி தான் ஆ க வேண்டும். 1658ல் அலிவர் கிரம்வெல் இறந்தார்.அலிவர் கிரம்வெல் இருந்தவரை பொது நல ஆட்சி சிறப்பாக இருந்தது. ஆனால், அவரது மரணத்துக்கு பின் இரண்டாம் சார்லஸ் மன்னர் 1660ல் மீண்டும் இங்கிலாந்தில் மன்னராட்சி கொண்டு வந்தார்.

மில்டன் பதவிக்காகவும், பணத்திற்காகவும் யாருக்கும் புகழ் மாலை சுடியதில்லை. தனக்கு பிடித்தால் மட்டும் தான் அவர்களை பற்றி பாட்டு எழுதுவார். அலிவர் கிரம்வெல் மரணத்திற்கு பிறகு அவர் தொடங்கி வைத்த பொது நல ஆரசை பற்றி " The Ready and Easy Way to Establish a Free Commonwealth " என்ற நூலை எழுதினார்.
இந்த முறை இரண்டாம் சார்லஸ் மன்னர் விழித்துக் கொண்டார்.மன்னராட்சி மலர்ந்த அடுத்த நோடியில் மில்டன் கைது செய்யப்பட்டார். அது மட்டுமில்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அவர் எழுதிய இரண்டு நூலகளான ஏகொன்க்லஸ்டேஸ் (Eikonklastes) மற்றும் டிபேன்சியோ (Defensio) எறித்தனர்.எனினும் சிறையில் இருந்த மில்டனை சிறிதுகாலம் கழித்து விடுதலை செய்தனர்.

தண்டனையில்லாமல் விடுதலை அடைந்த மில்டன் மன்னராட்சி வெறியர்கள் தாக்குவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர். விளகி சென்றவனை அடிப்பது ஏன் என்று அப்படி எந்த சம்பவமும் நிகழவில்லை. அது மட்டுமைல்லாமல் 'ஜான் மில்டன் எப்பொது வேண்டுமானாலும் கொல்லப்படலாம்' என்ற வத்ந்தியும் பரவியிருந்தது.

அரும்பாடு பட்டுப் போராடித் தியாகங்கள் பல செய்து தூக்கி எறியப்பட்ட மன்னராட்சி மீண்டும் இங்கிலாந்தில் வந்ததை நினைத்து மனம் நொந்திருந்தார். மீண்டும் புரட்சி செய்ய மில்டன் உடல் ஒத்துழைக்கவில்லை. அலிவர் கிரம்வெல் போல் வீரனுமில்லை. கண் பார்வை மங்கி வந்த காரண்த்தால் அரசியலில் இருந்து தன் கவனத்தை இலக்கியத்தில் மாற்றினார். தன் மூன்றாவது மனைவியை அழைத்துக் கொண்டு லண்டனில் உள்ள பன் ஹில் இடத்துக்கு சென்றார்.

உண்மையை சொல்ல போனால் மில்டன் அரசியலில் கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால் இன்னொரு பெரும் காப்பியத்தை படைத்திருப்பார். அரசியல் நெருக்கடி, சிறை தண்டனை இப்படி மில்டனின் படைப்புகளுக்கு வேகத்தடையாக இருந்தது. இதனாலையே அவர் திறமை காலம் கலிந்து உலகிற்கு தெரிந்தது என்று கூட சொல்லலாம். பல ஆண்டுகள் அரசியலில் அவர் செய்த செலவு அவரிடம் இருந்து இன்னும் நல்ல படைப்புகள் நம்மால் பார்க்க முடியவில்லை.

5.பீட்மாண்டில் நடந்த துயரம்

பதினெழாம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னராட்சியில் எத்தனையோ கொடுமைகள் நடத்தின. 'நியாயம்' என்ற வார்த்தை மன்னராட்சியில் இல்லை. 'சர்வதிகாரம்' என்ற வார்த்தை தான் மேலோங்கி இருந்தது. அங்கு நடந்த கொடுமைகளை தட்டிக் கெட்டவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டனர். போராடியவர்கள் எல்லாம் கொலை செய்ய பட்டனர். இப்படி பல கொடுமைகள் நடந்து கொண்டு இருந்த மன்னராட்சியில் ஒரு புது சட்டம் கொண்டு வந்தார்கள்.

அந்த சட்டம் என்ன்வென்றால் மக்கள் எல்லோரும் கத்தோலிக் கிறிஸ்த்துவ மதத்துக்கு மாற வேண்டும் அன்பது தான். இந்த சட்டத்தை இங்கிலாந்து மன்னராட்சி மக்களுக்கு எதிராக கொண்டு வந்தது. இச்சட்டத்தை மறுப்பவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டளாஇயும் விதித்தது.

ஆனால்,புராட்டஸ்டண்ட் மக்கள் கத்தோலிக் கிறிஸ்துவ மதத்துக்கும் மாறவில்லை. நாட்டை விட்டும் போகவுமில்லை. கட்டாய மதமாற்றத்தை புராட்டஸ்டண்ட் மக்கள் முழுமையாக புறக்கணித்தனர். கோதித்து போன மன்னர் சார்லஸ் புராட்டஸ்டண்ட் மக்களை மிக குரூரமாக தண்டித்தனர். 1655ல் மன்னரை எதிர்த்த மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். அ துவரை நாட்டை விட்டு வெளியேற மறுத்த மக்கள் உயிருக்கு பயந்து வெளியேற தொடங்கினர். மன்னரின் படுகொலையில் இருந்து தப்பிக்க நினைத்தாலும் கடும் பனிமலையின் லுளிராலும், பட்டினியாலும் பலர் இறந்தனர். பீட்மாண்டில் புராட்டஸ்டண்ட் மக்கள் படுகொலை செய்த சம்பவம் மில்டனை மிகவும் பாதித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக மிலம் பாடல் மட்டும் எழுதவில்லை, போராடவும் செய்தார். இன்றும் ஆங்கில அக்ராதியில் 'Protestant' என்றால் எதிர்ப்பாளார் என்ற ஆர்த்தம் பார்க்கிறோம். அதற்கு காரணம், அன்று பீட்மாண்டில் புராட்டஸ்டண்ட் மக்கள் மன்னரை எதிர்த்தது தான்.

4.மில்டனின் பயணம்...

மில்டன் கவிதை, பாடல் எழுதுவதில் மட்டுமில்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர். 1637ல் மில்டனின் தாய் சாரா ஜெர்பி மரணத்தால் மிகுந்த சோகத்தில் இருந்தார். அம்மாவின் நினைவுகள் அவரை வாடிக்கொண்டு இருந்தது. தனக்கு ஒரு மாறுதல் வேண்டும் என்று விரும்பினார். தன் மன மாற்றத்திகாக மில்டன் பிரான்ஸ் மற்றும் இட்டாலி நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றார்.

ஒரு கவிஞனுக்கு புத்தம் படிப்பதை கிடைக்கும் சிந்தனையை விட நான்கு ஊர்களை பார்த்து வரும் சிந்தனை அதிகம். கவிஞனின் கற்பனை உலகளவு செல்லும். மில்டன் இந்த பயணம் அவர் எழுத்துக்களுக்கு உதவிகவும் இருந்தது.

பாரிஸ்,நைஸ்,பிசா, பிலாரண்ஸ், ரோம்,வெனிஸ்,மிலன் இன்னும் பல இடங்களுக்கு மில்டன் பயணம் செய்தார். விடுமுறை நாடகளில் பயணம் செய்த மில்டன் தன் சிந்தனைக்கு விடுமுறை கொடுக்கவில்லை. பயணத்தின் மதத்தின் மீது அவருக்கு இருந்த சந்தேகங்களை நிபர்த்தி செய்து கொண்டார். ஹூகோ க்ரோடியஸ் என்பவரிடம் தன் சந்தேகங்களை கேட்டார். ஹூகோ க்ரோடியஸ் ஒரு கவிஞர், நாடக ஆசிரியர், சட்டம் படிதவர். மில்டன் ஹூகோ க்ரோடியஸ் செல்வு செய்த நாடகள் எதிர்காலத்தில் அவர் எழுத்துகளுக்கு மிக உதவியாக அமைந்தது.

1638ல் மில்டன் பிலாரண்ஸ் ஊரை அடைந்த போது சரித்திரம் போற்றும் பெரும் விஞ்ஞானியை சந்தித்தார். அதுவும் அவர் இருக்கும் சிறையில்...

அந்த விஞ்ஞானி வேறு யாருமில்லை. கலிலியியோ. உலகம் உருன்டை என்று சொன்ன அதே கலிலியியோ தான். இயற்கையை கடவுளாக பார்த்தவர்களின் மத்தியில் இயற்கையில் இருக்கும் விஞ்ஞானத்தை பார்த்தவன் கலிலியோ. அதற்கு பரிசாக கிடைத்து சிறை வாசம். கலிலியோவிடம் விஞ்ஞான ரிதியான விஷயங்களை பற்றி மில்டன் பேசினார்.

கலிலியியோவை சந்தித்ததை தன் நூலில் பதவு செய்தார். தன து 'பிரடைஸ் லாஸ்ட்' நூலில் கடவுள் சாத்தான் வருவதை கலிலியியோ கண்டுபித்த தொலை நோக்கும் கருவி (Telescope) மூலம் பார்த்ததாக கூறுகிறார். கலிலியியோ சந்தித பிறகு மில்டனுள் இருந்த நாட்டு பற்று வெளி வர தொடங்கியது.

எந்த எழுத்தாளரும் எழுத்துப்பணியை முழு நேர வேலையாக செய்ய முடியாது. தன் ஜீவனத்திற்காக யோசித்துக் கொண்டு இருந்தார் மில்டன். அப்போது மில்டன் சீனியர் தன் கையில் இருந்த பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை மூலதனமாக கொண்டு மில்டன் தனியாக ஒரு பள்ளியை தொடங்கினார். தன் உறவினர்களின் குழந்தை, மற்ற குழந்தைகளுக்கும் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார். மில்டன் பள்ளிக்கூடம் நடத்திய காலத்தில் தான் “Of Education” என்ற படைப்பை எழுதினார்.

3.மில்டனின் நண்பர்கள்

மில்டனின் பள்ளியின் நேருங்கிய என்று சார்லஸ் டியோடடி தான் சொல்ல வேண்டும். சார்லஸ் டியோடடி லண்டனின் உள்ள மருத்துவரின் மகன்.டியோடடியிடம் பல விஷ்யங்களை மில்டன் பகிர்ந்துள்ளார். உதாரணத்திற்கு, ஒரு சுவையான விஷயம். மில்டன் பள்ளி பருவத்தில் எமிலி என்ற பெண்ணை காதலித்தார். எல்லோருக்கும் பள்ளி பருவத்தில் வரும் அதே ஈர்ப்பு தான் எமிலி அழகின் மீது மில்டனுக்கும் வந்தது. எமிலி அழகை பற்றி கவிதைகளும் எழுதியிருக்கிறார். தன் காதல் அனுபவங்களை டியோடடியிடம் சொல்லுவார். எமிலி பற்றிய போதிய விபரங்கள் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் டியோடடியிடம் எந்த அளவில் நெருங்கி பழகிருக்கிறார் என்று இந்த நிகழ்ச்சியை உதாரணமாக சொல்லலாம்.

மில்டன் பிலாரன்ஸ் பயணத்தில் ஒரு சென்ற போது அதிர்ச்சியான செய்தி வந்தது. சார்லஸ் டியோடடியின் மரணம் தன் அந்த செய்தி. முதல் காதலும், முதல் நட்பும் நெஞ்சில் பசுமையான நினைவுகளாக இருக்கும். சார்லஸ் டியோடடியும் மில்டன் மனதில் வாழ்ந்துக் கொண்டு இருந்தார்.

மில்டனுக்கு நண்பர்கள் என்று எடுத்துக் கொண்டால் விரலை விட்டு எண்ணி விடலாம். படிப்பு, எழுத்து என்று கவனம் செலுத்திய மில்டன் நேரத்தை செலவு செய்ய விரும்பவதில்லை. பள்ளியில் டியோட்டி எப்படி மில்டனுக்கு நண்பரோ கல்லூரியில் மில்டனுக்கு எட்வர்ட் கிங் என்பவர் நண்பராக இருந்தார்.

மில்டன் எளிதில் ஒருவருடன் பழகி விட மாட்டார். அப்படி பழகிவிட்டால் அவரை சுலபமாக மறந்து விட மாட்டார். நாம் முன்பே பார்த்தது போல் தாமஸ் யங் மறக்காமல் தனது “Of Reformation” படைப்பை சமர்பித்தார்.
எட்வர்ட் கிங்கும் ஒரு கவிஞர் தான். மில்டனை விட இரண்டு வயது முத்தவர். இந்த வயது வித்தியாசங்கள் இவர்களின் நட்புக்கு தடையாக இல்லை. இருவரும் பல மணி நேரம் கவிதை, பாடல் பற்றி எல்லாம் பேசுவார்கள். எட்வர்ட் கிங்யிடம் பழகும் போது புத்தகத்தை படிப்பது போல் உணர்வு மில்டனுக்கு ஏற்ப்படும்.

1637ல் தன் குடும்பத்துடன் சுற்றுலா பயணத்திற்காக கப்பலில் சென்றுக் கொண்டு போது எட்வர்ட் கிங் பயணம் செய்த கப்பல் பாறையில் மோதியது. அதில் பயணம் செய்த எட்வர்ட் கிங் இறந்தார்.மில்டனின் அம்மா இறந்த அதே ஆண்டு ! தன்னை நேசித்த ஒவ்வொருவரும் மரணத்தை தழுவதில் மிகுந்த மன வேதனையில் இருந்தார். 1638ல், தனது 'லிசிடஸ்' படைப்பை எட்வர்ட் கிங்க்கு சமர்பித்தார். எட்வர்ட் கிங் மரணத்தின் போது அவர் மனம் பட்ட வேதனையை எல்லாம் அந்த நூலில் சொல்லிருப்பார்.

மில்டன் வாழ்க்கையில் எந்த உறவுமே அதிகமாக நிலைத்ததில்லை. அவராக தேடிக் கொண்ட நண்பர்களும் மரணம் பிரித்துக் கொண்டு இருந்தது.

2. மில்டனின் படிப்பு

பொதுவாக உலக புகழ் பெற்றவர்கள் எல்லாம் தங்கள் பள்ளி வாழ்வில் மிகவும் சுட்டிதனமாகவும் அல்லது பள்ளி வாழ்வை விரும்பாதவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், ஜான் மில்டன் அப்படியில்லை. படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவர்.

மில்டனின் தந்தை தான் அவருக்கு முதல் ஆசிரியர். சில கடிதங்களை கொடுத்து அவ்வபோது படிக்க சொல்வார். வீட்டுல் நாம் சொல்லி கொடுத்தாலும் முறையாக ஒருவர் சொல்லி கொடுத்தால் தான் பாடம் புரியும் என்று மில்டன் சீனியர் நினைத்தார்.

மில்டன் ஆரம்ப பள்ளியை வீட்டில் இருந்து கொண்டே படிக்க தொடங்கினார். தாமஸ் யங் என்பவர் மில்டனின் வீட்டில் வந்து தினமும் பாடம் எடுப்பார். தாமஸ் யங் மில்டனுக்கு ஒரு ஆசிரியராக மட்டுமில்லாமல் நல்ல நண்பனாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார். மில்டன் பதினொராவது வயதில் தாமஸ் யங் வெறு இடத்தில் ஆசிரியர் வேலை கிடைத்ததால் லண்டனை விட்டு சென்றார். மில்டன் அவரை விட்டு பிரிந்தாலும் அவர் மேல் இருந்த குரு பக்தியில் தன் படைப்பான ‘Of reformation’ கவிதையை தாமஸ் யங்க்கு சமர்பித்தார்.

அதன் பிறகு மில்டன் சீனியர் தன் மகனை லண்டனில் உள்ள சென்ட் பால் பள்ளியில் சேர்த்தார். சென்ட் பால் பள்ளியில் தான் ஜான் மில்டன் லத்தின் மற்றும் கிரேக்க மெழிய கற்றார். அங்கு கற்ற அந்த மொழிகள் தான் அவரை மிக பெரிய கவிஞராக உருவாக்கியது. சென்ட் பால் பள்ளியில் ஜான் மில்டனுக்கு கிடைத்த நல்ல நண்பர் தான் சார்லஸ் டியோட்டி.

மில்டன் மிக பெரிய படிப்பாளி. எப்போது புத்தகம் கையுமாக தான் இருப்பார். நண்பர்களுடன் ஊரை சுற்றுவது, வெட்டி கதை பேசுவது எதையும் விம்பாதவர். அப்படியே நண்பர்களிடம் பேசினாலும் பற்றிதான் பேசுவார். மில்டனின் சகோதரர் கிரிஸ்டபர் ஒரு முறை மில்டனை பற்றி கூறுகையில் மில்டன் இரவு 12, 1 மணி வரை படிப்பார் என்று கூறியிருக்கிறார். அந்த கடின உழைப்பு தான் தன் பதினைந்தாவது வயதில் முதல் படைப்பை படைக்க முடிந்தது.

1625ல் பள்ளி படிப்பை முடித்தவுடன் மில்டன் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் மற்ற மாணவர்களுடன் பேசுவது, அரட்டை அடிப்பது பொன்ற விஷ்யங்களில் மில்டன் ஈடுபாடு செலுத்தியதில்லை. பெரும் பாலும் கல்லூரியில் அவர் தனிமையில் தான் கழித்தார். மில்டன் எப்போது படிப்பார், எந்த நேரத்தில் படிப்பார் என்று அவருடன் அறையில் இருப்பவருக்கு தெரியாது. நல்லிரவில் விளக்கு போட்டு கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு இருப்பார் மில்டன். மில்டனுடன் தங்கியிருந்தவர்களுக்கு அவர் படிக்கும் நேரம் கஷ்டமாகவே இருக்கும். "இ வ ன் படிக்கிறதுக்கு.... நம்ம தூக்கத்த கெடுக்குறாடா..." என்று மில்டனின் அறையில் இருப்பவர்கள் புலம்பிக் கொள்வார்கள்.

எப்படியோ ஒரு வழியாக 1629ல் பி.ஏ பட்டத்தினையும், 1632ல் எம்.ஏ., பட்டத்தினையும் பெற்றார்.

ஆலயங்களில் பணிபுரிய அவர் முன்னதாக விரும்பிய போதிலும், அக்காலத்திய ஆலயப்பணியின் போக்கினை வெறுத்தார். வேறு எந்த பணியிலும் ஏடுபட மனமில்லாதவராக இருந்த மில்டன், தன் இலக்கியங்களைக் கற்பதில் தம் நேரத்தை செல்விட்டு வந்தார். ஆறு ஆண்டுகளாக இடைவிடாது நூலகளைக் கற்றதால் சிறந்த கவிதை எழுதும் புலமை பெற்றார். இந்த காலத்தில் தான் கோமஸ், லிஸிடஸ் நூல்களையும் எழுதினார்.

1.ஜான் மில்டன் - பிறப்பு



இந்தியாவில் மிக பெரிய இதிகாசங்களாக இன்று வரையும் கருதப்படுவது ஒன்று இராமயணம்; இன்னொன்று மகாபாரதம். இந்த இரண்டு இதிகாசங்களை வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. இரண்டுமே கடவுளை நாயகர்களாக கொண்ட இதிகாசங்கள். ஆனால், ஒருவரே இரண்டு இதிகாசங்கள் எழுதியிருக்கிறார். அதுவும் முதல் இதிகாசத்தில் கடவுளை எதிர்க்கும் சாத்தானை கதாநாயகனாக கொண்ட இதிகாசக்கதை. சாத்தானை நாயகனாக்கும் துணிச்சல் அந்த காலத்தில் அப்படி ஒருத்தருக்கு இருந்ததா....?

ஆ ங்கிலத்தில் உள்ள இந்த இதிகாசங்கள் கவிதை வடிவத்தில் உள்ளன. இதை இயற்றியவர் கண்ணில்லாத ஜான் மில்டன் என்பவர். அவர் எழுதிய சொர்க்க நீக்கம் (Paradaise Lost) மற்றும் மீண்ட சொர்க்கம் (Paradaise Regain) ஆங்கிலத்தில் இன்று வரை மிக பெரிய இதிகாசங்களாக கருதப்படுகிறது. மில்டன் வேறும் கவிஞர் மட்டுமல்ல... இங்கிலாந்து மன்னரை எதிர்த்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர். நமக்கு பாரதி எப்படியோ இங்கிலாந்துக்கு ஜான் மில்டன்.

ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த படியான எழுத்தாளார் யார் என்று கேள்வி வந்தால்... அதற்கு பதில் ஜான் மில்டன் என்பார்கள். நாடகத்தை நீக்கிவிட்டு பார்த்தால் ஆங்கிலத்தில் சிறந்த கவிஞர் ஜான் மில்டன் தான்.

ஜான் மில்டன் தந்தை பெயரும் ஜான் மில்டன் தான். பொதுவாக தாத்தா பெயர் தான் பேரனுக்கு வைப்பார்கள்... இங்கு தந்தை பெயர் மகனுக்கு. ப்ரவயில்லை...இவரை ஜான் மில்டன் சீனியர் என்று அழைப்போம். மில்டன் சீனியர் மிக கைதெர்ந்த இசை மேதை. அவர் தன் வாழ் நாளில் இசைக்காக பல பாராட்டுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். அந்த காலத்தில் மிக பெரிய இசை மேதையாக கருதப்பட்ட ஹென்றி லாவிஸ்யுடம் நட்பு கொள்ளும் அளவிற்கு அவர் இசையில் புகழ் வாய்ந்தவராக இருந்தார்.

மில்டன் சீனியர் மனைவியின் பெயர் சாரா ஜெர்பி.அவர் ஒரு எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் கதை,கவிதை எழுதும் எழுத்தாளர் அல்ல. ஒருவர் சொல்லுவதை அப்படியே எழுதி கொடுக்கும் வேலை. அக்காலத்தில் கணக்கு எழுதவதோ, பத்திரம் எழுத வழக்கறிஞர்களோ கிடையாது. வியாமபர ரிதியாக இருந்தாலும் சரி, சட்ட ரிதியாக இருந்தாலும் சரி...யார் என்ன எழுத சொல்கிறார்களோ அப்படி எழுதி கொடுக்க வேண்டும். இன்று நாம் பத்திர பதிப்பு அலுவகத்தில் அப்படிப்பட்ட ஆட்களை நாம் பார்க்கிறோம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் செய்யும் சமூக வேலைகளுக்கு பணம் வாங்கி கொள்வார்.

மில்டன் சீனியரும், சாரா ஜெர்பியும் தங்கள் இல்லற வாழ்க்கையை லண்டனில் உள்ள பிரட் ஸ்டிரிடில் என்ற இடத்தில் தொடங்கினர். இன்பமான அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு சாட்சியாக டிசம்பர் 8, 1608 பிறந்தவர் தான் நமது நாயகன் கவிஞர் ஜான் மில்டன்.

LinkWithin

Related Posts with Thumbnails