கவிஞனுக்கும் நடிகனுக்கும் மனைவியாக வாக்கப்படுவது ரொம்ப கொடுமை. நடிகம் நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வருவார்; மனைவிக்கு துரோகம் செய்ய அதிக வாய்ப்புகள் உண்டு; சம்பாதித்த பணம் ஒரே சமயத்தில் இழக்க சந்தர்ப்பம் அதிகம்; இதையெல்லாம் நடிகனுக்கு மனைவியாக போகும் பெண் மனதில் வைத்துக் கொண்டு தங்களை இந்த சூழ்நிலைக்கு தயார் படுத்திக் கொள்ள கட்டாயத்தில் இருப்பார்கள்.
அதே போல் கவிஞனுக்கு மனைவி என்பது அதை விட கடினம். அதுவும் முழு நேர கவிஞன் என்றால் சொல்லவே வேண்டாம். அது மிக மிக கொடுமை. இதற்கு உதாரணம் நம் பாரதியின் செல்லம்மா தான். இருபதாம் நூற்றாண்டில் தலை சிறந்த கவிஞன் என்று பெயர் எடுத்த பாரதியார் காக்கை, குயில் பசிக்கு செல்லம்மா இரவலாக வாங்கி வந்த ஆகாரத்தை போடுவார். செல்லம்மா வறுமையிலே வாழ்ந்தார். " இந்த மனுஷன கட்டி என்ன சுகத்த கண்டேன்" என்று மற்ற பெண்கள் போல் புலம்பி கணவனை விட்டு தாய் வ்ட்டுக்கு போகவில்லை. பாரதி புரட்சி பாடல்கள் எழுதும் பொழுதும், அவர் இறக்கும் போது அவருடன் தான் இருந்தார்.
கவிஞனுக்கு வறுமை என்று எழுதப்படாத நீதி. பாரதிப் போல் மில்டனும் புரட்சி கவிஞன் என்றாலும் பாரதிக்கு இருந்த வறுமை மில்டனுக்கு இல்லை. பாரதியை காட்டிலும் மில்டனுக்கும் எல்லாம் மூன்று மடங்கு அதிகம். மனைவியும் உட்பட !!
மில்டனின் வாழ்க்கையில் மூன்று மனைவிகளும் ஒருவர் மரணத்திற்கு ஒருவர் என்று வந்தார்கள். முதல் கோணம் முற்றிலும் கோணல் என்பது போல் முதல் மனைவியும், அவர்களின் மூலம் பிறந்த பெண் குழந்தைகளாலும் மில்டன் தன் வாழ்க்கை இறுதி கட்டம் வரை நிம்மதில்லாமல் தவித்தார்.
1642ஆம் ஆண்டு மில்டன் மெரி பவல் என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். மில்டனுக்கு முதல் திமணம் நடக்கும் போது அவர்க்கு வயது முப்பத்தி முன்று ! மண ப்பெண்ணாக இருந்த மெரி பவலின் வயது 16 !! பல பொருத்தங்கள் பார்த்து நடக்கும் திருமணத்தில் எத்தனையோ பிரச்சனைகள். மெரி பவல் விட இரண்டு மடங்கில் வயதில் முத்தவர் மில்டன். பிரச்சனைகளை பற்றி சொல்லவா வேண்டும்.
பதினாறு வயதிலே திருமணமானதால் கணவன் மனம் புரிந்துக் கொண்டு மெரி பவலால் நடந்துக் கொள்ள முடியவில்லை. தனக்கு பிடித்தை கூட சரியாக சொல்ல தெரியாத வயதில் கணவருக்கு பிடித்ததை எப்படி புரிந்து செய்ய முடியும். இவர்கள் இல்லற வாழ்க்கையில் எதோ வாழ வேண்டுமே என்று தான் இருவரும் வாழ்ந்தார்கள். வயது வித்தியாசம் கூட மெரி பவலுக்கு பெரிதாக தெரியவில்லை. அந்த சமயத்தில் மில்டன் இங்கிலாந்து மன்னராட்சியை எதிர்த்து சில புரட்சி கவிதைகளையும், செயல்களிலும் ஈடுப்பட்டு வந்தார். மில்டனின் இந்த பணி மென்ரி பவலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.பல முறை சொல்லி பார்த்தார், கெஞ்சி பார்த்தார். மில்டன் கேட்டதாக தெரியவில்லை. நாட்டுக்காக தன்னால் முடிந்த வரை எதையாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் மில்டன். "இனி என்ன சொல்லியும் இந்த ஆளுக்கு புத்தி வராது ! நாம கிளம்புனா நம்மல கூப்பிட பின்னாடியே வருவாரு" என்று மெரி பவல் நினைத்தார். தன் பெட்டி படிக்கை எல்லாம் மூட்டைகட்டி கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்றார் மெரி பவல். இது எல்லாம் அவர்கள் திருமணமாகி ஒரு மாதத்தில் நடந்தது.பின்னாடியே தன்னை அழைக்க மில்டன் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், நடந்த்தே வேறு !!
'அக்னி நடசத்திரம்' ஜனகராஜ் போல 'என் பொண்டாட்டி ஊருக்கு போய்டா' என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். தன் பொது பணிகளை எந்த தடங்கள் இல்லாமல் செம்மையாக நடக்கும் என்று கருதினார்.
விவாகரத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினார். திருமணம் ஆன ஓர் ஆண்டில் "திருமணம் நாமே தேடிக்கொள்ளும் சங்கிலி" என்று கூற தொடங்கிவிட்டார்.1643ல் ‘Discipline of Divorce’ திருமணத்தை பற்றி தன் மனதில் இருந்த பல வாதங்களையும், கசப்பான அனுபவங்களையும் எழுதினார்.
அப்படி இப்படி என்று மூன்று வருடங்கள் உருண்டது. சிவில் யுத்தமும் ஒரு வழியாக ஒய்ந்தது. அது வரை வராத மெரி பவல் மீண்டும் மில்டனிடம் வந்து சேர்ந்தார். அதன் பிறகு இவர்கள் வாழ்க்கை சுமுகமாக இருந்தது. மில்டன், மெரி பவல் இருவருக்கும் அனி (1646), மெரி (1648), ஜான்(1651), டெபுரா(1652) என்று நான்கு குழந்தைகள் பிறந்ததார்கள். மில்டன் இல்லற வாழ்க்கையிலும் அலை அடித்து ஒய்ந்த பிறகு மெரி பவல் பிரசவத்தில் புயலே வந்து தாக்கியது. நானகாவது பிரசவத்தில் வந்த உடல் ரிதியான பிரச்சனையால் டெபுரா பிறந்தவுடன் மெரி பவல் மே 5, 1652 இறந்தார். என்ன தான் மனைவியுடன் பல மன கசப்புகள் இருந்தாலும் பெரி பவலின் மரணம் மில்டனை மிகவும் பாதித்தது. மனைவி இழப்பின் சோகம் போவதற்கும் மில்டனுக்கு இன்னொரு இடி விழுந்தது. மில்டனின் பதினைந்து வயது மகன் ஜான் இறந்தான். முதல் மகள் அனி பிறந்தவுடன் சிறிது நாட்களில் மில்டனின் தந்தையும் இறந்தார். மீண்டும் தன் வாழ்வில் நெருங்கியவர்களின் தொடர் இழப்பு.தனக்கு சொந்தமான்வர்களின் ஒவ்வொருவரின் மரணத்தை பார்த்து மன ரிதியாக மில்டன் இறந்துக் கொண்டு இருந்தார். எந்த உறவுகளும் இல்லாத மில்டன் மூன்று மகள்கள் வைத்து வளர்க்க சிரமாக இருந்தது.
அது மட்டுமில்லை ! மில்டனுக்கு அவரின் மகள்களுக்கு மன கசப்பு இருந்தது. இவர்களுக்கும் எதாவது ஒரு காரணதிற்கு சண்டை வந்து கொண்ட இருக்கும். வயதாக் ஆ க மில்டனுக்கு பார்வை மங்க தொடங்கியது. மகள்கள் கொடுக்கும் தொல்லை ஒரு புறம், கண்ப் பார்வை பிரச்சனை மறு புறம். என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார். பல சமயம் பொறுமையாகவும் இருந்தார் ! முடியவில்லை. தனக்கு இன்னொரு துணை வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் மில்டன். தனக்கு துணையின் அவசியத்தை உணர்ந்த மில்டன் நவம்பர் 2, 1656 கத்திரின் வுட்குக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண் பார்வை முழுமையாக இழந்த மில்டனுக்கு கத்திரின் நல்ல வாழ்க்கை துணையாக திகழ்ந்தார். ஆனால், இந்த வாழ்க்கையும் மில்டனுக்கு நிலைக்க வில்லை. மில்டனுடன் முழுசாக இரண்டு வருடம் கூட வாழ அவருக்கு கொடுத்து வைக்கவில்லை. பிப்ரவரி 2, 1658 அன்று கத்திரின் இறந்தார்.
இவர்கள் இருவருக்கும் கத்திரின் ( மகளின் பெயரும் கத்திரின் தான்) என்ற நான்கு மாத பெண் குழந்தையும் அப்பொது இருந்தது.
மில்டனின் இரண்டாவது திருமணத்தை கடுமையாக பேசி மில்டன் மனதை அவரது மகள்கள் காயப்படுத்த தொடங்கினர். "இவருக்கு இந்த வயசுல கல்யாணம் தெவையா ?" என்று வசை சொல்லில் பேசினர். இங்கிலாந்தில் மீண்டும் மன்னராட்சி மலர்ந்தது போல் மில்டனின் வாழ்க்கையில் மீண்டும் துயரம் சூழ்ந்தது கொண்டது. அவருக்கு வேறு வழி தெரியவில்லை. இன்னொரு திருமணம் செய்துக் கொண்டார். 1662ஆம் ஆண்டு எலிசபத் மின்ஷுல் என்பரை மணந்தார்.
கண்ணிருப்பவர்களுக்கே திருமணம் நடக்கும் கஷ்டமாக இருக்கும் போழுது மில்டன் மட்டும் கண் பார்வை இழந்து பிறகு இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார். அதுவும் தான் பெற்ற மகள்களை எதிர்த்து !!
மில்டனின் மூன்றாவது திருமணம் அவரின் இறுதி காலம் வரை ஆறுதலாக இருந்தது. தான் பெற்ற மகளிடம் பிரிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவரால் 'பிரடைஸ் ரீகைன்' என்ற சிறாப்பான படைப்பை படைக்க முடிந்தது.
எந்த பொருளையும் அதிகமாய், ஆழமாய் ரசித்தால் தான் கவிதை வரும். மில்டன் எடுத்துக்காட்டாக சொல்லி பல கவிஞர்கள் வாழ்க்கையை அதிகமாக ரசிக இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்வதை பார்க்கிறோம். ஆரம்பத்தில் மில்டனின் தனிப்பட்ட வாழ்க்கை அவரின் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலுக்கு அடிப்படையாக் இருந்தது. அதன் பின் கிடைத்த மன நிம்மதியில் 'பிரடைஸ் ரீகைன்' எழுத தூண்டியது. மற்றவர்களின் வாழ்க்கைக்களை விட ஒரு கவிஞனின் வாழ்க்கையின் பெண் எப்போதுமே முக்கிய பங்கு வகிக்கிறார்.
No comments:
Post a Comment