வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, March 27, 2009

தேர்தல் 2009 : தி.மு.க நகைச்சுவை

அன்பழகன் : கலைஞரே ! தமிழ் ஈழம் மீட்க நாம என்ன செய்ய போறோம் பல பேரு ரொம்ப ஆவலா இருக்காங்க...

கலைஞர் : பக்கத்து ஸ்டேட்டு 'திருப்பதி'ய மீட்க முடியாத நம்பல.... 'ஈழம்' மீட்போம் நம்புற ஜனங்கள என்னனு சொல்லுறது...

****

அழகிரி : அப்பா... பேசாம ஸ்டாலின தமிழ் நாட்டு முதல் அமைச்சரா அறிவிச்சிடுங்க... நான் வேற மாநிலத்துக்கு முதல் அமைச்சராயிடுறேன்.

கலைஞர் : என்னால 'தமிழ் நாட்ட’ மட்டும் தான் பங்கு போட்டு தர முடியும். இந்தியாவ 'நேரு குடும்பம்' பங்கு போட்டுக்கும்.

****

ஆற்காடு வீராசாமி : எங்கள் ஆட்சியில் தான் தமிழ் நாடு பிரகாசமாக ஒளி வீசி ஏறிந்தது....

அந்த சமயத்தில் மின் வெட்டு நடக்க...

ஆற்காடு வீராசாமி : என் பெயரை கெடுக்க எதிர் கட்சி செய்யும் செயல்.. இதற்கு அஞ்ச மாட்டேன்.

****

கலைஞர் : நம்ப 'கலைஞர்' ச்சனேல மக்கள் விரும்பி பார்க்குறாங்க...?

கலைஞர் டி.வி மேனேஜர் : நாம இலவசமா டி.வி கொடுத்தும் மக்கள் எல்லாரும் 'சன் டி.வி'ய தான் பார்க்குறாங்க... 'கலைஞர் டி.வி' யாரும் பாக்குறதில்ல...

****

நடிகை நமீத நடிக்கும் 'ஜகன் மோகினி' ஆடியோ கேஸட் வெளியீட்டு விழாவில்.... கலைஞர் பாராட்டு தெரிவிக்கிறார்...

கலைஞர் : படத்துக்கு படம் 'உடல் எடையோடு' நடிப்பும் ஏறிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு 'கலைமாமணி' விருது அளிக்க எங்கள் அரசு சிபாரிசு செய்யவிருக்கிறோம்.

ஜெயமாலினி நடித்த 'ஜகன் மோகினி' படத்தை பத்து தடவை மேல் பார்த்திருக்கிறேன். நமீதா நடிக்க விருக்கும் இந்த படத்தை இருபது முறை பார்ப்பேன் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு காட்டியிருப்பார்.... நான் சொல்வது நடிப்பை காட்டியிருப்பார். நீங்கள் வேறு ஏதாவது அர்த்ததில் பொருள் கொள்ள வேண்டாம்.

****

சட்டசபையில் கலைஞர்...

இதுவரைக்கும் மற்றவர்கள் எழுதிய புத்தகத்திற்கு அரசுடைமையாக்கிய எங்கள் அரசு... முதல் முறையாக நான் எழுதிய புத்தகங்களை அரசுடைமையாக்க விருக்கிறேன். அதற்கு மானியமாக.. இருபது கோடியை என் குடும்பத்திற்கு அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இதனால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அது உங்களுக்கே தெரியும்.

Thursday, March 26, 2009

விடுதலைப் புலிகள் : ஒரு அறிமுகம்

1970 ஆம் ஆண்டு பிரபாகரன் தலைமையில் புதிய தமிழ் புலிகள் (Tamil New Tigers - TNT) என்ற இயக்கத்தை சிங்கள அரசுக்கு எதிராக தொடங்கினார். TNT தொடர்ந்து TELO, EROS என்று ஒவ்வொரு இயக்கங்களும் இலங்கை அரசுக்கு எதிராக தோன்றின. இந்த இயக்கங்கள் சிங்கள அரசுக்கு எதிராக கலவரம், தாக்குதல் என்று நடத்தி வந்தது. 1976 ஆம் ஆண்டு டி.என்.டி. என்ற பெயரை எல்.டி.டி.ஈ (LTTE) என்று மாற்றினர். LTTE என்றால் Liberation Tiger of Tamil Eelam. ஈழத்தமிழர்களுக்காக தனி தேசம். அது தான் தமிழ் ஈழம். LTTE க்கு மட்டுமல்ல இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு தமிழர்களுக்கும் கனவு தேசம் அது தான். இன்று வரை அந்த கனவு தேசத்துக்காக உயிர் கொடுக்கிறார்கர்கள்.1983 ஆம் ஆண்டு 'கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படும் அந்த கொடுரூர சம்பவம் இலங்கை தமிழர்களை கண்ணீர் கடலில் முழ்கடித்தது. தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவோடு தான் சிங்களர்கள் வீட்டில் இருந்து கிளம்பினர். கண்ணில் பட்ட தமிழர்களை எல்லாம் கொன்று குவித்தனர். லீட்டர் கணக்கில் பெட்ரோல், தமிழர்களின் உடலை பதம் பார்த்தது. தமிழ் பெண்களை உடனே கொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை; அவர்களை கற்பழித்து மூச்சு தினற கொடுமை செய்து கொன்றனர். அவர்கள் சிறுமிகளை கூட விட்டு வைக்கவில்லை. இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட தமிழ் பெண்கள் ஏராளம். அன்று நடந்த கலவரத்தால் வீடு, குடும்பம் இழந்து ஒரு லட்ச தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இடம் தேடி வந்தனர். அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னால் முடிந்த வரையில் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்தார். பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கைக்கு நிவாரண உதவி அளித்தார். அன்றைய அரசியல் காரணமாக இலங்கையை எதிர்க்க இந்தியா விரும்பவில்லை.

இலங்கை அரசு தமிழர்கள் அதிகமாக வசிக்கும் யாழ்ப்பாணத்தின் மீது பொருளாதார தடை விதித்தது. அந்த சமயத்தில் இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார். அவர் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டது மட்டுமில்லாமல் இந்திய அமைதி காக்கும் படை (IPKP) என்ற படையை இலங்கைக்கு அனுப்பினார். இந்திய படையின் வரவால் விடுதலை புலிகளுக்கு எரிச்சலை தந்தது. தமிழகத்தில் இருந்து வரும் உதவியை அவர் முடக்கி வைத்திருந்தார். (புதுமைபித்தன் தனது வாழ்க்கை குறிப்பில் ராஜீவ் காந்தி 'தமிழ் ஈழ' பிரச்சனையில் எம்.ஜி.ஆரை மிரட்டியதை கூறிப்பிட்டுயிருக்கிறார்.)

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தற்கொலை படையில் இருக்கும் பெண்ணை வைத்து தமிழகத்தில் கொன்றனர். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு அமெரிக்கா, இந்தியா நாடுகளில் எல்.டி.டி.ஈ இயக்கத்தை தடை செய்தனர்.

இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் எத்தனையோ பேச்சு வார்த்தைகள் இது வரை நடந்து விட்டது. ஆனால், எந்த ஒரு பேச்சு வார்த்தையும் அவர்களின் சண்டைக்கு மூற்று புள்ளி வைக்கவில்லை.

26 டிசம்பர், 2004 சுனாமி இலங்கையை தாக்கியதில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. எல்.டி.டி.ஈயினர் உடனே நிவாரணப் பணியில் இறங்கினர். சர்வதேச அமைப்புகளில் இருந்து எல்.டி.டி.ஈ உதவிக்கரம் நீட்டினர். அதிபர், பிரதமர் என்று இலங்கையில் ஆட்சி நடத்தினாலும் அவர்களுக்கு போட்டியாக இலங்கை தமிழர்களை காக்கும் பிரபாகரம் வடக்கு, கிழக்கு பகுதியில் ஆட்சி நடப்பது தான் நிதர்சன உண்மை.

சுனாமி அலை ஒய்ந்து நிம்மதி பெரு மூச்சு விடுவதற்குள் அடுத்த கலவரம் வெடிக்க தொடங்கியது. இவர்கள் சண்டையை விளக்கி கொண்டே போனால் இந்த கட்டுரை பக்கம் நிரம்பிக் கொண்டே இருக்கும். இவர்கள் சண்டையை இரண்டு வரியில் சொல்ல வேண்டும் என்றால்....

"இலங்கை தமிழர்களை ஒழிப்பது சிங்களர்களின் லட்சியம்.
தமிழ் ஈழ தேசத்தை பெறுவது தமிழர்களின் லட்சியம். "
இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் வரை
இலங்கையில் கலவரம் வெடித்துக் கொண்டு தான் இருக்கும்.

அங்கு எந்த சமயத்தில் வெடிகுண்டு வெடிக்குமோ என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விடுதலை புலிக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் உயிர் இழப்புகள் மட்டும் நிச்சயம். அவர்களின் மரணத்தை தகவல் தொடர்பு மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. இரத்த வாடையே போது தாக்குதல் நடந்ததை பற்றி தெரிந்துக் கொள்வார்கள். அங்கு காற்றை சுவாசித்ததை போலவே இரத்த வாடை சுவாசித்தவர்கள் அதிகம். அவர்களின் பேனா மை கூட சிவப்பு நிறமாக தான் இருக்கும். பல வெடிகுண்டுகள், சமாதான பேச்சு வார்த்தைகள் எல்லாம் நடந்து ஈழ தமிழர்களுக்கு விடியல் என்பது கனவாகவே இருக்கிறது.

கட்டுரைக்கு உதவிய நூல் :

விடுதலைப் புலிகள் - மருதன்
கிழக்கு பதிப்பகம்

Saturday, March 21, 2009

தேர்தல் 2009 : அ.இ.அ.தி.மு.க நகைச்சுவை

டாக்டர் : வெரி குட்.. நல்ல இம்ரூவ்மன்ட்... உங்க உடம்புல் இருக்குற கொலஸ்ட்ரால் குறைஞ்சிடுச்சு...

ஜெ : தாங்க்ஸ் டாக்டர்... இலங்கை தமிழர்களுக்காக் உண்ணாவிரதம் அறிவிச்சு... சாப்பாடாம நீங்க சொன்ன டையட் பாலோ பண்ணேன்.

டாக்டர் : எக்ஸலண்ட்.... அரசியலுக்கு அரசியல்.... டையட்டுக்கு டையட்...

****

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஓட்டு போட அ.தி.மு.க தொண்டர்கள் ஜெமினி படத்தில் இருந்து 'ஓ...போடு பாட்டை போட்டு பிரச்சாரம் செய்தார்கள். இருந்தும், அவரால் மட்டுமல்ல.... அந்த தொகுதியில் யாராலும் வெற்றி பெற முடியவில்லை.

காரணம் விசாரித்தில்... மக்கள் அனைவரும் '49 ஓ' போட்டு விட்டார்களாம்.

****

தொண்டர் : போன வாட்டி பெரிய அளவு வாக்கு வித்தியாசத்துல் ஜெய்ச்சீங்களே... இப்ப எதுக்கு உங்களுக்கு சீட் தரல...

முன்னாள் எம்.எல்.ஏ : என் ஜாதகத்துல சனி தோஷமாம். நான் தேர்தல்ல நின்னா ஜெய்க்க மாட்டேனு 'அம்மா' சொல்லிட்டாங்க. அதான் சீட் கிடைக்கல்ல...

****

தொண்டர் 1 : அந்த நடிகர் நம்ம கட்சியில அஞ்சு வருஷமா இருந்திட்டு... எதுக்கு மறுபடியும் பழைய கட்சிக்கே போய்ட்டாரு...?

தொண்டர் 2 : பொட்டி வாங்கும் போது நம்ம கட்சியில குறைஞ்சது அஞ்சு வருஷம் இருப்பேனு 'பாண்ட் பேப்பர்ல காண்ட்ராக்ட்' கையெழுத்து போட்டு தான் சேர்ந்தாரு...

Thursday, March 19, 2009

தேர்தல் 2009 : பா.ம.க நகைச்சுவை

பா.ம.க எம்.எல்.ஏ பத்திரிகையாளரிடம்: தமிழ் படத்தில் நடிக்கும் நடிகை கும் ஸ்ரீ மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறார். தன் கவரிச்சி நடனத்தால் மக்கள் மனதில் ஆபாச எண்ணங்களை உருவாக்குகிறார். அவரை நடிப்பை எதிரித்து 'கலாச்சார சீரழிவு' வழக்கு தொடர போகிறேன்.

இந்த வழக்கை பற்றி கும் ஸ்ரீயிடம் பத்திரிகையாளர் கேட்ட போது

கும் ஸ்ரீ : இது வரைக்கும் நான் யாருனு தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியாம இருந்தது. ஆனா... பா.ம.க எம்.எல்.ஏ மேடைக்கு மேடை என்ன பத்தி பேசி ரொம்ப நல்ல விளம்பரம் படுத்தினாங்க...! இப்போ நான் நடிச்ச 'கும்மா குத்து' படம் சுப்பர் ஹிட். அது மட்டுமில்ல... எனக்கு ஹிந்தி படம் வாய்ப்பு எல்லாம் வர ஆரம்பிச்சிருக்கு... நான் இவ்வளவு பிரபலம் ஆனதுக்கு காரணமே அந்த எம்.எல்.ஏ. தான். அவருக்கு என்னைக்கும் நன்றி கடன் பட்டுயிருக்கேன்.

****

ராம்தாஸ் : தமிழ் நாட்டுல இனி பிசா, பர்கர் தடைவிதிக்கனும்.

தொண்டர் : எதுக்கு பிசா, பர்கர் மேல் இவ்வளவு கோபம் ??

ராம்தாஸ் : இன்னை பல பேரு பிசாவும், பர்கரும் சாப்பிடுறதுனால யாரு இட்லி, தோசை சாப்பிடுறது இல்ல.... இப்படியே போச்சுனா தமிழ்நாட்டு உணவு வழக்கம் மாறியிடும்.

ஐ.டி. வேலை செய்யுற பசங்க, பொண்ணுங்க எல்லாம் இத சாப்பிட்டு ரொம்ப குண்ட இருக்காங்க. மாரடைப்பு, கொலுப்பு எல்லாம் வருது. இப்ப நா எது சொன்னாலும் 'கலைஞர்' காமெடியா எடுத்துகுறாரு... காதுல வாங்கிறது இல்ல.

தொண்டர் : தலைவரே பெண்கள பத்தி சொல்லாமா விட்டுங்க...??

இராத்திரி நேரத்துல பெண்கள் தனியா வரக்கூடாது... அதுக்கு 'BPO', 'call center' வேலை எல்லாம் ஒழிக்கனும். 9 மணிக்கு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

தொண்டர் : $%R#$%$#

****

அன்புமணி ராம்தாஸ் 'நடிகர்' பரூக் கானிடம் : நீங்க சினிமாவுல தண்ணியடிக்கிற மாதிரி நடிக்கிறத வன்மையா கண்டிக்கிறேன்.

பரூக் கான் : சினிமாவுல நான் குடிச்சது சர்பத்.... இரண்டும் ஒரே கலரா இருக்குறதால கொழம்பிட்டிங்க நினைக்கிறேன்.

****

தயாரிப்பாளர் சங்கம் ராம்தாஸ் அவர்களுக்கு 'கலைமாமணி' விருது கொடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தார். இதை கேள்விப்பட்ட ஒரு பிரமுகர் தயாரிப்பாளர் சங்கமிடம் பற்றி கேட்க அவர்கள்....

ரஜினி நடிச்ச 'பாபா', கமல் நடிச்ச 'விருமாண்டி' படம் எல்லாம் பெரிய கஷ்டமாகுற நிலைமையில இருந்தப்போ... ராம்தாஸ் அந்த படத்துக்கு 'நடிகர்கள' எதிரித்து பேச பேருல விளம்பரம் பண்ணாரு... 'பெரியார்' படம் என்னாகுமோ பயந்தப்போ கூட குஷ்பு நடிக்க கூடாது சொல்லி அவங்களும் பிரபலமாகி எங்களுக்கும் விளம்பரம் தேடி கொடுக்குறாங்க... தயாரிப்பாளர்களும் பெரிய அளவுக்கு நஷ்ட வரல்ல... அவருடைய கலை சேவைய பாராட்டி கௌரவிக்க 'கலைமாமணி' கொடுக்க சிபாரசு செஞ்சிருக்கோம்.

****

பத்திரிக்கையாளர் : எப்படி ஜெய்க்கிற கட்சியா பார்த்து போய் கூட்டனி வச்சிக்குறீங்க...

ராம்தாஸ்: நாங்க கூட்டனி வச்சிக்கிற கட்சி ஜெய்க்குது... அத தெரிஞ்சிக்கோங்க..

பத்திரிக்கையாளர் : ( பன்ச் டைலாக்குல விஜய்காந்த மிஞ்சிட்டாரு....)

Wednesday, March 18, 2009

தேர்தல் 2009 : பா.ஜ.க நகைச்சுவை

அத்வானி : என்ன நடந்தாலும் சரி... தமிழ் நாட்டுல 10 சீட்டாவது ஜெய்க்கனும்... எந்த கோயில்ல கட்டுறதா சொன்னா ஓட்டு போடுவாங்க...

ஆலோசகர் : கோயிலுக்கு பதிலா... பாலம் கட்டித்தரதா சொல்லுங்க... கண்டிப்பா 3 சீட்டாவது கிடைக்கும்...

அத்வானி : அப்படியா... இப்பவே 'பாலம்' கட்டி தரோம்னு பிரச்சாரத்த ஆரம்பிச்சிடுறேன்.என்ன பாலம் கட்டலாம்...?

ஆலோசகர் : 'இராமர் பாலம்'

****

பா.ஜ.க : நாங்க ஆட்சிக்கு வந்தா... ஒரு லட்ச பேருக்கு ஐ.டி வேலை வாய்ப்பு கொடுப்போம்.

பத்திக்கையாளர் : ஐ.டி. துறையே நஷ்டத்துல நடக்கும் போது உங்களால எப்படி இவ்வளவு வேலை உருவாக்க முடியும்.

பா.ஜ.க: நான் ‘ஐயப்பன் டீ’ (ஐ.டீ) கடையை ஒவ்வொரு மாநிலத்தில தொடங்கி...அதுல வேலை கொடுப்போம்னு சொன்னேன்.

****

பா.ஜ.க : இன்னும் எத்தன வருஷமா... ராமர் கோயில் கட்டுறத சொல்லி ஓட்டு கேக்குறது...

தொண்டர் : இந்த வாட்டி... தாஜ் மஹால் இடிச்சிட்டு சிவன் கோயில் கட்டுவோம் சொல்லாமா...

பா.ஜ.க : அடபாவி... கிடைக்குற இரண்டு மூன்னு ஓட்டு கிடைக்காதே...

****

பா.ஜ.க : தமிழ் நாட்டுல எந்த கடவுள் பத்தி பேசினா ஓட்டு அதிகமா விழும்.

தமிழ்நாடு பா.ஜ.க : இங்க 'கடவுள் இருக்கு' சொல்லுறவங்கள விட 'கடவுள் இல்லைனு' சொன்னா தான் ஒரளவு ஓட்டு விழும். அப்படி ஒரு புரட்சிய ஒரு பெரியவரு (பெரியார்) பண்ணிட்டு போய்ட்டாரு....

****

பத்திரிக்கையாளர் : யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்கலானா... என்ன பண்ணுவீங்க...

பா.ஜ.க : மூன்றவது அணியோட சேர்ந்து ஆட்சி அமைப்போம்... இல்லனா காங்கிரஸோட சேர்ந்து ஆட்சி அமைப்போம்.

பத்திரிக்கையாளர் : அப்போ யார் பிரதமரா இருப்பாங்க...??

பா.ஜ.க : முதல் இரண்டரை வருஷம் எங்க 'அத்வானி' பிரதமரா இருப்பார். அடுத்த இரண்டரை வருஷம் அவங்க இருக்கட்டும்.... இதுல முதல் இரண்டரை வருஷம் நாங்க ஆட்சி பண்ணுவோம் விஷயத்துல ரொம்ப உறுதியா இருக்கோம்.

பத்திரிக்கையாளர் : அப்போ இரண்டரை வருஷத்துல இன்னொரு தேர்தல் வரும் சொல்லுங்க...

Tuesday, March 17, 2009

தேர்தல் 2009 : காங்கிரஸ் நகைச்சுவை

காங்கிரஸ் : என்ன நடந்தாலும் சரி... இந்த தேர்தல்ல நாம தோக்க கூடாது... என்ன பண்ணலாம்.

ஆலோசகர் : நாம தேர்தல்ல கலந்துக்காம... புரக்கனிக்கனும்.

****

தொண்டர் : 1..2..3

காங்கிரஸ் : அணு ஒப்பந்தம் போட்டாச்சே.. பின்ன என்ன..123 சொல்லுற..

தொண்டர் : இந்த தேர்தல்ல நாம ஜெய்க்க போற சீட்ட சொன்னேன்.

****

சோனியா : அடுத்த தடவ ஆட்சிக்கு வந்தா 'ஈழம்' உருவாக உதவனும்

காங்கிரஸ் பிரமுகர் : என்ன திடீர் இந்த முடிவு.?

சோனியா : நேரு 'இந்தியாவிலிருந்து பாகிஸ்தான பிரிச்சாரு...
இந்திரா காந்தி 'பாகிஸ்தான்ல இருந்து பங்கலாதேஷ் பிரிச்சாங்க...
நான் எதையும் பிரிக்காம இருந்தா... நாளைய சரித்திரம் பிரிக்க தெரியாத நேரு குடும்பத்து மருமகள்னு தப்பா சொல்லுவாங்க.. அதான் இந்த முடிவு..

****

சிதம்பரம் : எங்க ஆட்சியில தான் பங்குசந்தை 21000 புள்ளிகள் வரைக்கும் போச்சு.

பத்திரிக்கையாளர் : ஆனா...இப்போ வீழ்ச்சி அடைஞ்சு 8000 புள்ளிகள் தான் இருக்கு...

சிதம்பரம் : எங்க ஆட்சி முடிஞ்சி தேர்தல் வரதினால இந்த வீழ்ச்சி. மீண்டும் எங்க ஆட்சி மக்கள் ஆதரவு கொடுத்தா பங்குசந்தை 40000 புள்ளிகள் வரைக்கும் போகும்.

****

ஜி.கே.வாசன் : இந்த தேர்தல்ல தோனி தலைமையில பிரச்சாரம் பண்ண வேண்டியது தான்.

தொண்டர் : அவரு இந்திய கிரிக்கெட் கேப்டன் ஆச்சே...

ஜி.கே.வாசன் : அவர் தலைமையில 'இந்திய கிரிக்கெட் அணி' ஜெய்க்கும் போது 'இந்திய காங்கிரஸ்' ஜெய்க்காதா...??

தொண்டர் :$%#%

ஒவ்வொரு கட்சியின் பற்றிய தேர்தல் நகைச்சுவைகள் தொடரும்....

Monday, March 16, 2009

கலீலியோ கலீலி

அந்தக் காலத்தில் கணிதம் படித்தவருக்கு சிறப்பான வேலை என்பது கிடையாது. கணிதம் படிப்பதால் நாட்டில் மதிப்பும் இல்லை; வேலை வாய்ப்பும் இல்லை. கணிதம் கற்றால் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாட வேண்டியதுதான் என்று கலீலியோவின் தந்தை அவருடைய கணிதப் படிப்புக்குத் தடை விதித்து மருத்துவப் படிப்பில் சேர்த்து விட்டார். ஆனால் அவருக்குக் கணிதத்தில் இருந்த ஆர்வம் மருத்துவப் படிப்புடன் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தையும் சேர்த்துப் படிக்க வைத்தது.

அந்தக் காலத்தில் அரிஸ்டாட்டில் எழுதிய அனைத்தையும் ஆதரித்துப் படித்து வந்தனர். இந்த நிலையில் அரிஸ்டாட்டில் எழுதியதைப் படித்த கலீலியோ அதில் பல தவறான கோட்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னார். இதனால் வெறுப்படைந்த கல்லூரிப் பேராசிரியர்கள் இது குறித்து அவரது தந்தைக்கு கடிதம் அனுப்பினர். அவரும் கணிதத்தைக் கைவிட்டு மருத்துவம் படிக்க வலியுறுத்திக் கடிதம் எழுதினார். ஆனால் கலீலியோ அக்கடிதத்தைக் கண்டு கொள்ளாமல் அரிஸ்டாடில் செய்திருந்த பல தவறை சரி என்று ஒத்துக் கொள்ளாமல் அதிலிருக்கும் தவறைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யத் துவங்கினார்.இதன் வழியாக பெண்டுலத்தின் ஊசல் ஒரே கால அளவில் ஆடுவதை வைத்து நேரம் பார்க்கப் பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது. அதுதான் பெண்டுலம் ஊசல் கடிகாரம். இப்படி அவர் கண்டுபிடித்ததால் வெறுப்படைந்த பேராசிரியர்கள் மருத்துவத்தில் அவரைத் தேர்வடைய விடாமல் தோல்வியடையச் செய்தனர். இதனால் அவருக்கு அடுத்து வயிற்றுப் பிழைப்புக்கு என்ன தொழில் செய்யலாம் என்ற யோசனையும் தோன்றியது. அரைகுறை மருத்துவப் படிப்பால் யாருக்கும் வைத்தியம் செய்ய முடியாது. மன்னருக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் மூலம் கணிதப் பாடத்தில் பேராசிரியராக பணி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அங்கும் கணிதமே படிக்காத ஒருவர் பேராசிரியராகப் பணியில் இருப்பதா என்று போட்டியில் பொறாமையில் பாதிக்கப்பட்டார். வாழ்க்கையை ஓட்ட போதிய பணமில்லாமல் கஷ்டப்பட்டார்.

கலீலியோ பாடம் நடத்தும் போது அதில் மாணவர்கள் ஆர்வமில்லாமல் இருந்து வந்தனர். அப்போது அரிஸ்டாட்டிலின் தத்துவத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்ட இதுவே தருணம் என்று முடிவு செய்து அதிக எடையும் குறைவான எடையும் உள்ள பொருள்கள் ஒரே நேரத்தில் பூமியை வந்தடையும் என்று செய்து காண்பித்தார். ஆனால் அவரது சோதனை வெற்றியைப் பாராட்டாமல் அரிஸ்டாட்டிலின் பழைய புராணமே பாடப்பட்டது.

இப்படியே கன்னர் காம்பஸ் தத்துவத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார். இந்நிலையில் அவருக்கு மரினா கம்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டில் வர்ஜினா என்கிற பெண் குழந்தையும், அதற்கடுத்த ஆண்டு லிவியா என்கிற பெண் குழந்தையும் பிறந்தன. அதற்குப் பிறகு ஐந்து வருடங்களுக்குப் பின்பு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குத் அவரது தந்தை வின்சென்ஸிசோ பெயரை வைத்தார்.

இந்த நிலையில் அவருக்கும், மரின கம்பாவிற்கும் குடும்ப வாழ்க்கையில் சண்டை ஏற்படத் துவங்கியது. அவர்களுக்குள் பிரிவு வந்தது. மகனை மரின கம்பாவிடம் விட்டுவிட்டு மகள்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ப்ளாரன்ஸ் நகருக்குப் போனார். அங்கிருந்த போது தியரி ஆஃப் மோசன் எனும் நீரில் மிதக்கும் பொருள்கள் நகர்வதைக் குறித்து கண்டுபிடித்தார். இதை போலோ சர்பி என்ம் கணித மேதைக்கு அனுப்பி வைத்தார். அதில் அவர் பல குறைகளைக் கண்டு சொன்னார். கலீலியோ மீண்டும் அதுகுறித்து ஆராய்ச்சி செய்து அந்தக் குறிப்புகளை எல்லாம் தொகுத்து "டிமோட்டோ" எனும் நூலை எழுதினார்.

அதன்பிறகு ஹேன் லிப்பர்ஷே கண்டுபிடித்த டெலஸ்கோப் குறித்து மேலும் ஆய்வு செய்தார். அதன் மூலம் விண்வெளியை ஆய்வு செய்யத் துவங்கினார். மில்கி வே எனும் பால்வெளி வீதியைக் கண்டுபிடித்தார். விண்வெளி குறித்த பல தகவல்களைக் கண்டு சொன்னார். நெப்டியூன் கிரகத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார். கலீலியோ புதிய டெலஸ்கோப்பைக் கண்டறிந்து அனைவருக்கும் விண்வெளியைக் காட்டினார். அசந்து போனார்கள்.

இதுபோல் மைக்ரோஸ்கோப், , தெர்மா மீட்டர் என்ரு மருத்துவத்துறைக்கும் சில கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார். கலீலியோவின் கண்டுபிடிப்புகளில் "சூரியக் கரும்புள்ளி" என்பதும் முக்கியமானது. இந்நிலையில் கிறித்துவ மதத்தில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களைத் தெரிவிப்பதாகக் கலீலியோ மீது குற்றம் சுமத்தப்பட்டது. எப்படியொ அதிலிருந்து மீண்டு வெளியே வந்தார். ஆனாலும் அடுத்தும் பல குற்றச்சாட்டுகளை அவர் மீது சில திருச்சபைகள் சுமத்தின. தான் எழுதிய அஸ்ஸையர் என்ற நூலை வெளியிட்டார். அதில் அரிஸ்டாட்டிலின் கொள்கையில் இருந்த தவறுகள் பற்றி விளக்கமாக எழுதியிருந்தார்.

அடுத்து "கோப்பர்னிகன் தியரி" எனும் நூலை எழுதி அவருடைய நண்பரான போப் எட்டாம் அர்பனிடம் வெளியிட உதவும்படி கேட்டுக் கொண்டார். அவர் மதக் கொள்கைகளைத் தாக்காமல் மிகவும் கவனமுடன் எழுதவேண்டும் என்று சொன்னார்கள். அவரும் நூலை எழுதி முடித்து விட்டார். அந்தக் காலத்தில் நூல்கள் வெளியிட திருச்சபையின் அனுமதி பெற வெண்டும். அந்த நூலைப் படித்த திருச்சபையினர் அந்தப் புத்தகத்தை நிறுத்திவிடும்படி சொன்னார்கள். இந்த நூலைப் பார்த்ததும் பொப் எட்டாம் அர்பன் கோபம் தலைக்கேறியது. அந்த நூலில் பைபிளுக்கு எதிரான கருத்துக்கள் பல் இருந்தன.

கலீலியோவின் மீது மத விரோதக் குற்றம் சுமத்தப்பட்டது. விசாரண நடத்தப்பட்டது. "பூமி சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுகிறது" என்று முதலில் சொன்ன கிறித்துவ மதத் துறவி கியோடர்னோ புருனோவை கம்பத்தில் கட்டி உயிருடன் எரித்தனர். அதே போல் கலீலியோவும் "பூமி சூரியனைச் சுற்றவில்லை" என்று சொல்ல வேண்டும் என விசாரணை மன்றம் வலியுறுத்தியது. ஆனால் அறுபத்தேழு வயதான கலீலியோ அப்படிச் சொல்ல மறுத்தார். பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றுதான் சொன்னார். விசாரணை மன்றம் அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

ஒன்பது ஆண்டுகள் வரை வீட்டுக் காவலில் இருந்த கலீலியோ கண்பார்வை இழந்தும் தன் மாணவர்கள் உதவியுடன் இரண்டு நூல்களை எழுதினார். கடைசியில் அவருடைய எழுபத்தெட்டாம் வயதில் மரணமடைந்தார். கலீலியோவின் உடலை பாசிலிகா புனித மடத்தில் அடக்கம் செய்ய போப் எட்டாம் அர்பனும் மற்ற குருமார்களும் எதிர்ப்பு தெரிவிக்க அருகிலுள்ள சாதாரண மக்களுக்கான அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சூரியக் கரும்புள்ளியுடன் பல இயற்பியல் உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொன்ன கலீலியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறித்துவமதத்திற்கு இது ஒரு கரும்புள்ளிதான். இதற்காக 1992 ஆம் ஆண்டில் பொப் இரண்டாம் ஜான் பால் மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்க விசயம்தான்.

வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பவர்கள் சென்னை, Prodigy வெளியிட்ட, குகன் எழுதியிருக்கும் இந்தக் கலீலியோ கலீலி எனும் தலைப்பிலான விஞ்ஞானியின் வாழ்க்கைப் போராட்டத்தைப் படித்துப் பாருங்கள். எழுதியிருப்பவரைப் பாராட்டத் தூண்டும். வாழ்க்கையில் எதையாவது நாமும் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டும்.


நன்றி : முத்துகமலம்.காம்

முகவரி :

கிழக்கு பதிப்பகம்
- Prodigy வெளியீடு -
(Prodigy, An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

Friday, March 13, 2009

எல்லாம் நடந்த பிறகு.....

போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு காவலாளிகளும் மௌனமாக இருந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஆண்களும் சரி, அரையாடையில் பெண்களும் சரி காவல் நிலையத்தில் நிற்பதை தங்கள் கௌரவத்திற்கு கேடாக நினைக்கவில்லை. தாங்கள் செய்தது நியாயம் என்ற நினைத்துக் கொண்டு இருந்தார்கள். மனதில் துளிக் கூட குற்ற உணர்வு இல்லை. இன்ஸ்பெக்டர் சுந்தரம் கமிஷ்னர் கார்மேகம் வந்து விசாரிப்பதற்காக காத்துக் கொண்டு இருந்தான். பிடிப்பட்ட எல்லோரும் பெரிய இடத்தில் சேர்ந்தவர்கள். கார்மேகம் உத்தரவுப்படி தான் அந்த ஆண்களையும், பெண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தான். அதனால், அவர் வந்துப் பார்த்துக் கொள்ளட்டும் நமக்கு ஏன் பெரிய இடத்து வம்பு என்று இருந்தான்.

"அரையாடையில் இருந்த பெண் ஒருத்தி ... நாங்க என்ன பெருசா தப்பு பண்ணிட்டோம். எல்லோரும் செய்றத தான் நாங்களும் செஞ்சோம்.. இது என்ன பெரிய தப்பா.... ராத்திரி வேளையில போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தா... எங்கள பத்தி என்ன நினைப்பாங்க..."

"எம்மா ராத்திரி வேளையில இந்த மாதிரி தப்பு எல்லாம் பண்ணலாம்.... போலீஸ் ஸ்டேஷன்ல நிக்கிறது கௌரவக் குறைச்சால தெரியுதா உங்களுக்கு.." என்றான் சுந்தரம்.

அந்த காவல்நிலையத்தில் டெலிபோன் மணி ஓயாமால் அடித்துக் கொண்டே இருந்தது. சுந்தரம் அமைதியாக இருந்தான்.

"சார்... போன் எடுக்கவா.." என்றான் கான்ஸ்டேபில்.

"வேண்டாம்... யார் போன் பண்றாங்க நமக்கு எப்படி தெரியும்... இவங்கள விட சொன்னா அப்புறம் அந்த கமிஷ்னர் கிட்ட யார் பதில் சொல்றது..."

சுந்தரம் பேசிக் கொண்டு இருக்கும் போது கார்மேகம் அந்த காவல் நிலைத்திற்கு நுழைந்தான். கமிஷ்னர் வருவதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அங்கு இருக்கும் எல்லா காவலளர்களும் கார்மேகத்திற்கு சலுயூட் அடித்தார்கள்.

"இந்த மரியாதைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... கொடுக்குற வேளைய கடமையா நினைச்சு செய்யுங்க.. பயந்துக்கிட்டு செய்யாதிங்க..."

கார்மேகம் நல்ல கட்டுமஸ்தான உடம்பு.போலீஸ்குரிய கம்பீரம். நேர்மை இவன் இரத்தமென்றால், கடமை இவனுடைய நாடி துடிப்பு.

"சார்... நாங்க என்ன தப்பு பண்ணோம் நினைச்சு இங்க வந்து கூட்டிட்டு வந்திங்க..." பிடிப்பட்ட பெண்கள் கூட்டத்தில் இருந்த விமலா கார்மேகத்திடம் கோபமாக கேட்டாள்.

"நீ என்ன தப்பு பண்ணேணு உனக்கே தெரியாத அளவுல நீ இருக்க.... அரைகுறையா டிரஸ் பண்ணி ஆடுற... அப்போ உன் மானத்தை பத்தி கவலப்படாதவ ... இப்போ மட்டும் உன் மானத்தை பத்தி நீ யோசிக்கிறாயா ?"

"நாங்க மாசம் இருபது ஆயிரம் சம்பாதிக்கிறோம்...எங்க சம்பாதியத்துல ஆடுறோம். அது எங்க இஷ்டம். உங்களுக்கு என்ன வந்தது... நாங்க நடு ரோட்டுல ஆடலைய... ஸ்டார் ஒட்டல...தான் டான்ஸ் பண்ரோம்... அதுல என்ன தப்பு.."

"நீ தண்ணி அடிச்சு... அரைகுறையா டிரஸ் பண்ணி டான்ஸ் ஆடும் போது மத்தவங்க உன் உடம்பை பார்க்கும் போது உனக்கு கூச்சமா இல்ல...."

"அத பத்தி கவல பட வேண்டியது நான்... என்ன கல்யாணம் பண்ணிக்க போறவன்... நீங்க இல்ல.."

இதற்கும் மேல் விமலாவிடம் பேசினால் தனக்கு தான் மரியாதை கேடும் என்பதால்... மற்றவர்களை விசாரித்தான். விமலாவின் தோழி ஸ்வேதாவை விசாரித்தான். அவள் வட இந்திய பெண் என்பதால் தமிழ் தெரியவில்லை. அரை அடையில் நின்ற பாதி பெண்களுக்கு தமிழ் தெரியவில்லை. ஒரு சிலர் ஆந்திரம், பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து இங்குள்ள கணினித்துறையில் வேலை செய்கிறவர்கள்.

கார்மேகம் சென்னையில் இருக்கும் ஆண்கள், பெண்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்திற்கு வர சொல்கிறான்.
விமலாவின் ஆண் நண்பனான சுரேஷ் என்பவனை கார்மேகம் விசாரிக்கும் போது "நாங்க படிச்சவங்க... நல்லது எது ? கெட்டது எது ? எங்களுக்கு தெரியும். நாங்க யாரும் எந்த பொண்ணுங்க கிட்டடையும் தப்ப நடந்துக்கல... நீங்க வேணும் எல்லா பொண்ணுங்க கிட்டயும் கேட்டு பாருங்க..."
எந்த பெண்ணும் யாரும் தங்களிடம் தவறாக நடந்துக் கொண்டதாக சொல்லவில்லை.

"நாங்க எப்படி போனா உங்களுக்கு என்ன.... ராத்திரி ஸ்டார் ஒட்டல டான்ஸ் அடக் கூடாதுனு சட்டம் எதாவாச்சி இருக்கா என்ன ? எங்கள பெத்தவங்ககளே இதப்பத்தி எங்ககிட்ட கேக்கிறது கிடையாது... நீங்க யாரு இதை பத்தி கேக்க...." என்றாள் விமலா.

தமிழ் பண்பாடை மறந்து போனவர்களுக்கு நினைவுட்டலாம்... ஆனால், விரும்பாதவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது.


விமலாவின் பெற்றோர்கள், சுரேஷ்யின் பெற்றோர்கள் மற்றும் அந்த நட்சத்திர ஒட்டலில் ஆடும் போது பிடிக்கப்பட்ட மற்றவர்களின் பெற்றோர்களும் காவல்நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.

கார்மேகம் அவர்கள் பெற்றோர்களிடம் சொல்லி அவர்களை திருத்த நினைத்தான்.

"எங்க பசங்க என்ன தப்பு பண்ணாங்க...."

"ராத்திரி ஸ்டார் ஒட்டல்ல ... பீர் கூச்சிக்கிட்டு...டான்ஸ் ஆடுனாங்க..... அதுவும் அரைகுAயா டிரஸ் வேற.... அதுக்கு தான் போலிஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வர சொன்னேன்..."

"அவங்க என்ன குடிச்சு ... நடு ரோட்டுலயா அடுறாங்க.... கவர்மென்ட் பர்மிஷன் கொடுத்த ஒட்டல்ல தான் ஆடுறாங்க... அதுல என்ன பெரிய தப்பா... நீங்க எப்படி ராத்திரி வேளையில போலீஸ் ஸ்டேஷன்ல கூட்டுக்கிட்டு வரலாம்...."

கார்மேகத்திற்கு தூக்கிவாரிப் போட்டது. நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.

"எங்க பெத்தவங்க நீங்களே உங்க பசங்கலுக்கு நல்ல புத்திமதி சொல்லறத விட்டு இப்படி பொறுப்பில்லாம பேசுறிங்க..."

"என் பொண்ணு பீர் அடிச்சு சுத்துறது எங்க வீட்டு விஷயம்.... நாங்க தான் அவங்க கண்டிக்கனும்.... நீங்க யாரு... ராத்திரி வேளையில என் பொண்ண ஸ்டேஷனுக்கு கொண்டுவந்ததுக்கு மேல் இடத்துல கம்ப்ளைண்ட் பண்ணா என்னாகும் தெரியுமா..."

"இதோ பாருங்க ரொம்ப பேசுரீங்க..... தப்பு நடந்தது அப்புறம் வரது விட முன்னாடியே தடுக்கலாம் நினைச்சேன்... அது தப்புனு புரியுது... சட்டப்படி ஒரு ஒட்டல்ல டான்ஸ் அடுறது தப்பில்ல தான்... ஆனா ஒரு பொண்ணு குடிச்சிட்டு ஆடுறது வீட்டுக்கு மட்டுமில்ல நாட்டுக்கும் நல்லது இல்ல... சொன்ன உங்களுக்கு புரியாது.... பட்டாதான் உங்களுக்கு புரியும்"

விமலா சம்பளத்தால் தான் நடுத்தரமாக இருந்த அவர்கள் குடும்பம் சற்று வசதியான நிலைக்கு வந்தது. அதனால், அவள் என்ன செய்தாலும் அவர்கள் பெற்றோர்கள் எதுவும் கேட்க மாட்டார்கள். மற்றவர்களின் பெற்றோர்கள் சமானாமாக பேசி சென்றார்கள். இந்திய பொருளாதாரத்தில் வளர உதவுவதும் கணினித்துறை. இந்தியாவின் பண்பாட்டை மாற்றிக் கொண்டு இருப்பதும் கணினித்துறை. பெற்றோர்களே கேட்காத போது நாம் சொன்னால் யார் மதிப்பார்கள் என்று கார்மேகமும் அமைதியாக இருந்தான்.

இந்த நிகழ்ச்சி அடுத்த வாரத்தில் சனிக்கிழமை இரவு இரண்டு பெண்கள் நட்சத்திர ஒட்டல் அறையில் கற்பழிக்கப்பட்டதாக செய்தி சுந்தரத்திற்கு செய்தி வருகிறது. ஒருத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மற்றொருத்தி கற்பழிக்கும் போது இறந்துவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் வேறு யாரில்லை... சென்ற வாரம் காவல் நிலையத்தில் இருந்த வட இந்திய பெண் ஸ்வேதா. கற்பழிக்கும் போது இறந்த பெண் ... விமலா. அவர்களை கற்பழித்தவர்கள் சுரேஷ் மற்றும் அவனுடைய நான்கு நண்பர்களும்.

விமலா மரணச் செய்தி கேட்டவுடன் அவள் தந்தை மயங்கி விழுந்துவிட்டார். விமலாவின் உடலை வாங்க அவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். விமலாவின் உடலை வாங்க வந்த உறவினர் ஒருவர் போலீஸ் காகிதங்களில் கையேழுத்துயிட்டு வாங்கினார். அந்த உறவினர்..

"எல்லா நடந்தது அப்புறம் தான் போலீஸ் என்போதும் வரும்.... இவங்க நினைச்சா இந்த மாதிரி நடக்கிறத தடுக்க முடியும்.... எப்போ யார் கிட்ட லஞ்சம் வாங்கலாம் தான் இவங்க இருக்காங்க.." என்று மற்றவனிடம் புலம்பிக் கொண்டு இருந்தான். எல்லா புலம்பல் வார்த்தைகளையும் காதில் வாங்கிக் கொண்டு சுந்தரம் அமைதியாக இருந்தான்.

நன்றி : தமிழோவியம்.காம்

( நான் எழுதிய 'நடைபாதை' சிறுகதை நூலில் 1வது சிறுகதை)

Thursday, March 12, 2009

இலங்கை வரலாறு : ஒரு அறிமுகம்

தினமும் தீபாவளி வெடி போல் இலங்கையில் ஏதாவது ஒரு இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துக் கொண்டு இருக்கிறது. பல அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். நம் அரசியல்வாதிகளும் அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். உண்ணாவிரதம், போராட்டம் என்று பல நாடகங்கள் சமிபத்தில் நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இவர்களுக்கு எத்தனை பேருக்கு இலங்கையின் உண்மையான வரலாறு தெரியும் என்று தெரியவில்லை. அவர்களுகாக....

இன்று இலங்கை வரலாறு பற்றி கேட்டால் இரத்தத்தால் எழுதப்பட்டது என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், இந்த இரத்த வரலாறுக்கு வயது ஐம்பத்தி இரண்டு மட்டுமே !! அதற்கு முன் அமைதி, இயற்கை அழகு, வணிகம், விளையாட்டு என்று எல்லா நாடுகளை போல தான் இலங்கையும் இருந்தது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே இலங்கயில் குடியேற ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு இலங்கையின் இயற்கை அழகு கண்ணை உருத்தாமல் இல்லை. அன்றைய இலங்கையை சிலோன் என்று தான் அழைப்பார்கள். ஆங்கிலேயர்கள் சிலோனின் தேயிலை, காபி தோட்டத்தில் வேலை செய்ய சிங்களர்களை அழைத்த போது யாரும் வேலை செய்ய முன்வரவில்லை. ஆனால், அதை பற்றி ஆங்கிலேயர்கள் கவலைப்படாமல் மலிவான வேலைக்காரர்களான தமிழர்களை அழைத்து வந்து வேலை வாங்கினர். பஞ்சத்தில் இருந்த தமிழர்களுக்கும் மிகுந்த சந்தோஷம். எங்கோ சென்று வேலை செய்வதை விட தமிழ் நாட்டில் அருகில் இருக்கும் சிலோனில் சென்று வேலை செய்வது பாக்கியமாக கருதினார்கள். அவர்களுக்கு சிலோன் ‘இன்னொரு தமிழ் நாடாக’ தான் தெரிந்தது.

1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியை அரசாங்க மொழியாக அறிவித்தனர். அதை சிங்களர்கள் எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் அரசு பதவியில் வேலைக் கொடுத்த போது சிங்களர்களை விட தமிழர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த மாற்றங்களுக்கு தமிழர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

தமிழர்களின் வேலை திறமையை பார்த்த பிரிட்டன் அரசு 1931 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கியது. அரசாங்க பதவியில் உயர் பதவியும் அளித்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட தமிழர்களை பார்த்து சிங்களர்கள் மனதில் வெடித்துக் கொண்டு இருந்தனர். வெள்ளையர்களை எதிர்த்து போராடும் தைரியம் அவர்களுக்கு இல்லை. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிக தீவிரமாக சுதந்திர போர் இலங்கையில் நடக்கவில்லை. வெள்ளையர்களுக்கு அடங்கி தான் இருந்தார்கள். அதனால் தானோ இலங்கை இலங்கையாகவே இருந்தது.

பிரிட்டன் இந்தியாவுக்கு விடுதலை அளித்த கையோடு இலங்கைக்கும் பிப்ரவரி 4,1948 அன்று சுதந்திரத்தை அளித்தது. சுதந்திர இலங்கைக்கு முதல் பிரதமராக டான் ஸ்டிபன் செனனாயகே (Don Stepen Senanayake) இருந்தார். அந்த சமயத்தில் பல துறையில் தமிழர்கள் முன்னேறி இருந்தார்கள். சிங்களர்களால் தமிழர்களுடன் போட்டி போட முடியவில்லை. வெள்ளையர்கள் இலங்கையை விட்டு சென்றவுடன் சிங்களர்களின் உண்மையான உருவம் தெரிய தொடங்கியது.

விடுதலைக்கு பிறகு தமிழர்கள் மீது சிங்களர்களுக்கு கோபம் அதிகமானது. நாளடைவில் அந்த கோபம் வெறியாக மாறியது. சுதந்திரம் பெற்று ஒரு ஆண்டு முடிவதற்குள் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குரிமையை பறித்தது. 1956 ஆம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட சாலமன் பண்டரநாயகா சிங்கள மொழியை அரசாங்க மொழியாக சட்டபூர்வமாக அங்கிகரித்து அறிவித்தார். தமிழர்கள் இதை எதிர்த்து போராடினர். விளைவு.... தமிழர் - சிங்களர் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது. சிறுபான்மை தமிழர்கள் பலர் சிங்களர்களால் கொல்லப்பட்டனர். அதிபர் சாலம் பண்டரநாயகா புத்த பிக்குவால் சுட்டு கொல்லப்பட்டார். அதன் பின் இலங்கையில் நடந்த எல்லா சம்பவங்களும் இரத்தத்தால் எழுதப்பட்டவை. மருந்துக்கு கூட “அமைதி” என்ற வார்த்தை அங்கு நிலவியதில்லை.

Wednesday, March 11, 2009

தொலைந்தவர்கள்

9.30 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டும். அப்பொது தான் அவன் காலையில் சென்னையில் இருக்க முடியும். செந்தில் பெங்களூரில் உள்ள சாஃட்டுவேர் நிறுவணத்தில் வேலையில் செய்கிறான். சனி, ஞாயிறு வந்ததும் சென்னைக்கு வந்து விடுவான்.

9.25க்கு ரயில்வே ஸ்டேஷனில் அவசரமாக ஏறும் போது ஒரு உருவம் மீது இடித்துவிடுகிறான்.

"சாரி சார் !"

"ஹாய் செந்தில் .. உன்ன பார்ப்பேன் நினைக்கல "

செந்தில் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

"என்ன தெரியுல"

செந்தில் சற்று யோசித்து.." ஏய் நீ சிவா தானே..எப்படி இருக்க"

"ம்ம்ம்.... நல்ல இருக்கேன்...நீ எப்படி இருக்க"

" நல்ல இருக்கேன்.. இங்க சாப்டுவேர் கம்பேனியிலே வேலை செய்றேன்.ஆமா நீ எங்க இங்க..."

"ஒரு வேலை விஷயமா.. வந்தேன்."

"சரி..டைம் ஆச்சி வா போவோம்."

இருவரும் ஒரே ரயில் பெட்டியில் பயணம் செய்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு 7 வருடம் கழித்து இருவரும் இன்று தான் சந்திக்கிறார்கள். இருவரும் பள்ளியில் படித்த உயிர் நண்பர்கள். இன்று ஒருவருக்கொருவர் எந்த திசையில் இருக்கிறோம் என்று தெரியாமல் வாழ்கிறார்கள். கணிபொறி யுகத்தில் சில சந்திப்புகள் கூட விபத்துப் போல் தான் நடக்கிறது.

"அமா.. சிவா நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க.."

"நான் எம்.ஏ ஆங்கீலம் முடிச்சேன். கிராமத்துல அப்பாவுக்கு உதவியா விவசாயம் பார்த்தேன். இங்க ஒரு கம்பேனி இன்டர்வியூகாக வந்தேன், உனக்கு வேலைப் எப்படி போகுது...?"

"நல்ல போகுது..."

"ஆமா... நம்ம ஸ்கூல்ல படிச்சாலே பத்மா... இப்போ என்ன பண்றா...?"

"அவ.. மாமா பையனே கல்யாண பண்ணிக்கிட்டா... சொந்த ஊருல செட்டுலைய்டா..."

"சரி விடு.. நம்ம சந்தானம் சார் எப்படி இருக்காரு..."

"அவர பார்த்து ரொம்ப நாளாச்சு...."

இருவரும் தங்கள் பள்ளி கதைகளை பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் பள்ளிப் பருவத்தில் பார்த்த தாவணி அழகிகள், வகுப்பெடுத்த ஆசிரியர்கள், சக நண்பர்கள் எல்லாம் கதைகளை பேசிக் கொண்டு சென்னை வரை வந்தனர். இருவரும் அவர்கள் வாழ்ந்த நாட்களை நிளைத்து பேசிக் கொண்டு இருந்தார்கள். வேறு என்ன செய்வது மீண்டும் அந்த நாட்கள் சென்று வாழ முடியவில்லை ?

நினைவலைகள் ஒடிக் கொண்டு இருக்கும் போது சென்னை என்னும் கரை வந்துவிட்டது. இருவரின் நினைவலைகளும் ஒய்ந்தது.

"சரி சிவா ! எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. கண்டிப்பா நீ வரனும்...."

"ஹாய் ! வாழ்த்துக்கள்...இவ்வளவு நேரம் சொல்லவே இல்ல..."

"நம்ம ஸ்கூல் கதையில சொல்ல மறந்திட்டேன்" என்று சொல்லி முடித்து தன் திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்தான். சிவா வாங்கிக் கொண்டு பிறகு, இருவரும் கூட்ட நெரிசலில் ஒவ்வொரு திசை சென்றனர்f.

கூட்ட நெரிசலில் செந்தில் கொடுத்த அழைப்பிழை சிவா தவரவிட்டான். சிவாவுக்கு செந்தில் திருமணம் எங்கு நடக்கிறது என்று கூட தெரியாது. இருவரில் யாரும் போன் நம்பர் கூட கேட்கவில்லை. விபத்தாய் வந்த இவர்கள் சந்திப்பு இன்னொரு சிறு விபத்தில் இவர்களின் அடுத்த சந்திப்பு தடுக்கப் பட்டது. எனோ தொலைந்த இவர்கள் நினைவுகள் இன்று சந்தித்து மீண்டும் தொலைந்தது. ஆழைப்பிதழ் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிவா அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

( நான் எழுதிய 'நடைபாதை' சிறுகதை நூலில் 2வது சிறுகதை)

Tuesday, March 10, 2009

காதலுடன் ஒரு உரையாடல்

பல வருடங்கள் பிறகு என்னை எழுத வைத்த காதலை இன்று தான் சந்தித்தேன். நீண்ட நாள் நண்பனை பிரிந்து இன்று தான் சந்தித்தது போல் ஒர் உணர்வு. இது வரை எத்தனையோ கிறுக்கல்கள் கிறுக்கியிருந்தாலும் அதற்கு எல்லாம் உத்வேகமாய் இருந்தது காதல் தான். அந்த காதலை பற்றி முழுமையாக நான் எழுதியதில்லை. நான் மட்டுமல்ல.. காதலை யாருராலும் முழுமையாக எழுத முடியாது. காரணம், காதல் அவ்வளவு அழகனாது.... அதே சமயத்தில் புதிரானது.

ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் காதல் ஒவ்வொரு விதமாக தொன்றும். அதை முழுமையாக அறிந்துக் கொண்டவர்கள் யாருமில்லை. உலகில் உள்ள எல்லா பெண்களில் மனதை அறிந்தவனாலே காதலை பற்றி அறிந்துக் கொள்ள முடியும். அப்படி இந்த உலகில் யாருமில்லை.

இதோ என்னை எழுத வைத்த காதலோடு சில உரையாடல்கள்.

நானும் காதலும்

காதல் : வா.. நண்பா பார்த்து நீண்ட நாட்கள் ஆனது.... நலம் தானா..?
நான் : நலம் தான்... உன் நலம் எப்படி ?

காதல் : என் நலம் உனக்கு தெரியாதா ?... என்னை ஒரு காதல் ஜோடி என்னை புனிதப்படுத்தினால்.... பத்து காதல் ஜோடிகள் காமத்திற்காகவே காதலிக்கிறார்கள். ‘காதல்’ என்றால் ‘காமம்’ என்று சொல்லும் நாள் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது.
நான் : உன் அச்சம் தேவையில்லாதது... காரணம், காதலுக்கு மறு பெயர் தான் காமம் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.

காதல் : என்ன சொல்கிறாய் ? வள்ளுவர் அப்படியா சொன்னார்...?
நான் : ஆமாம்... காமத்துப்பாலில் 25 ஆதிகாரங்களே எழுதியிருக்கிறார். அதில் ‘காதல்’ வார்த்தைக்கு அவர் ‘காமம்’ என்ற வார்த்தையை தான் தான் பயன் படுத்தியிருக்கிறார். காதலில் காமமில்லை என்றால் அதில் சுவையிருப்பதில்லை நண்பா...

காதல் : ஆனால்... காமம் மட்டும் காதல்ல... அன்பும் காதல் தான்.
நான் : உண்மை தான்.... அன்பு + காமம் = காதல். காதலில் இரண்டும் வேண்டும். இரண்டுமே சரிபாதியாக இருக்க வேண்டும். அன்பு அதிகமானால் அது நட்பு. காமம் அதிகமானால் அது வேறும் தேக உணர்வு.

காதல் : அடே அப்பா... காதலுக்கு நல்ல தான் விளக்கம் சொல்கிறாய்...
நான் : இன்று பல பேர் உன்னை தவறாக புரிந்துக் கொண்டு... தவறாகத் தான் நடந்துக் கொள்கிறார்கள்.... அதனாலே காதல் என்னவென்றால் உனக்கே மறந்து விட்டது...

காதல் : உண்மை தான். இன்று உண்மை காதல் என்னவென்று தெரியாமல் காதலிப்பதால்... எனக்கே உண்மை காதல் எதுவென்று தெரியாமல் மறக்கடித்து விட்டனர்.
நான் : சரி... என்ன செய்வது.... காலத்தின் மாற்றங்களில் இதுவும் ஒன்று தான்.

காதல் : நீ கூட என்னை கண்டுக் கொள்வது இல்லையே உன்னை என்ன செய்வது....
நான் : ஐய்யோ... நான் யாரை காதலித்து ஏமாற்ற வில்லையே... காதலை காதலிக்கும் காதலன் நான்.

காதல் : எனக்கு தெரியும். ஆனால் காதலை பற்றி இப்பொழுது எல்லாம் நீ எழுதவில்லையே....
நான் : உன்னை பற்றி எழுதினால் தான்... ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று அர்த்தமா.... என்னை எழுத வைத்ததே நீ தானே

காதல் : அந்த நன்றி இருப்பதால் தான் நீ என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய்... மற்றவர்கள் என்னை கண்டுக் கொள்ளவது இல்லை...
நான் : ஓ..அதான் என்னை கண்டுகொள்ள வில்லை என்றாயோ....

காதல் : ஆமாம்... எதோ தனிமை ஆகிவிட்ட உணர்வு.... என்னை வைத்து எழுத தொடங்கிய கவிஞர்கள் எல்லாம்.... இப்பொது பெண்னை பற்றி எழுதுவதும், கதாநாயகனுக்கு பாட்டு எழுதுவதும் தான் இருக்கிறார்கள்.
நான் : எல்லோரும் அப்படியில்லை... காலத்தால் அழியாத காதல் பாடல்களை எழுதிய கண்ணதாசன் தான்... இன்று எல்லா கவிஞர்களுக்கும் குரு....

காதல் : ஆ.. அவரா... என்னை அதிகமாக வாழ்த்தி பாடியவரும் அவரே.... என்னை அதிகமாக வதைத்து பாட்டு எழுதியவரும் அவரே....
நான் : கதைக்கு எற்ற சூழ்நிலைக்கு பாட்டு எழுதும் தலைமை பாடாசிரியர் அவர்... அவரை குறைக் கூறாதே...

காதல் : நான் யாரையும் குறைக் கூறவில்லை.... என் வேதனை கூறுகிறேன்.
நான் : அப்படி என்ன உன் வேதனை ?

காதல் : தமிழில் முதலில் ‘அ’ எழுதி தமிழை கற்றுக் கொள்வதுப் போல் கவிதை எழுத கற்று கொள்ளும் கவிஞர்கள் முதலில் என்னை பற்றி தான் எழுதுகிறான். ஆனால் வளர்ந்த பிறகு என்னை பற்றி கண்டு கொள்வதேயில்லை...வாழ்வியல், உரைநடை, சரித்திரம், விஞ்ஞானம் என்று தங்கள் திறமையை வேறொன்றில் நிருப்பிக்க நினைக்கிறார்கள். அதன் பிறகு என்னை பற்றி மீண்டும் எழுதுவதில்லை.
நான் : உன்னை பற்றி எழுதுவது சுலபம்...’கிறுக்கல்’ கூட காதலில் கவிதை தான். ஆனால், நீ சொன்ன வாழ்வியல், உரைநடை, சரித்திரம், விஞ்ஞானம் எல்லாம் படித்து உணர்ந்துக் கொள்ளும் அறிவு இருப்பவர்களாலே எழுத முடியும். தங்கள் திறமை உலகிற்கு காட்ட நினைப்பது தவறு ஒன்றும் இல்லையே...

காதல் : நான் தவறு என்று சொல்லவில்லை... ஆனால் மீண்டும் என்னை பற்றி எழுதுவதில்லை என்றே என் வருத்தம்...
நான் :அதை எல்லாம் எழுதிய பிறகு அவர்களுக்கு வயது ஐம்பதை தாண்டி இருக்கும்... அப்பொது அவர்களுக்கு காதலை விட ஆன்மீகம், சமுதாய சிந்தனை தான் மனதில் அதிகம் நிறைந்துயிருக்கும்....

காதல் : அப்படி என்றால் வளர்ந்த பிறகு என்னை பற்றி எழுதமாட்டார்களா....
நான் : அப்படி சொல்லவில்லை.... வளரும் சமயத்தில் ‘காதல்’ மட்டுமே மனதில் நிறைந்துயிருக்கும்... வளர்ந்த பிறகு உன்னை மருந்துக்கு என்று இரண்டு, மூன்று பக்கங்கள் மட்டுமே எழுதுவார்கள்... மற்ற பக்கங்களில் தங்கள் சமுதாய, அறிவியல் சிந்தனைக் காட்ட தான் நினைப்பார்கள்.

காதல் : இன்றைய தமிழ் திரைப்படத்தில் கவர்ச்சிக்கு நடிகை ஒரு பாடலில் ஆடிவிட்டு செல்வதுப் போல் சொல்கிறாய்.... என்னை முழுமையாக வளர்ந்தவர்கள் யாரும் எழுதுவதில்லை.... அதற்கு சமாதானம் கூறு....
நான் : உன் கடமையை மறந்து நீ பேசுகிறாய்....
காதல் : எது என் கடமை?
நான் : கவிஞர்களை உருவாக்குவதே உன் கடமை.... அதை நீ சரியாக செய்.... எந்த கவிஞனும் உன்னை மறக்க முடியாது. காரணம், நீ இல்லாமல் கவிதையில்லை... புரிந்துக் கொள் ! உன் வருத்தம் தேவையில்லாதது....

காதல் : அப்பொது ஏன்... காதல் கவிதை தொகுப்புகள் அதிகமாக வருவதில்லையே....
நான் : எனக்கு சிரிப்பு தான் வருகிறது... நீ பேசுவது சிறு பிள்ளை தனமாக உள்ளது ( வடிவேலு சொல்வது போல் ) ... ஒவ்வொரு கவிதையிலும் அன்னை மீது உள்ள காதல், மண்ணின் மீது உள்ள காதல், பெண்ணின் மீது உள்ள காதல் என்று உன்னை பற்றி தான் எழுதுகிறார்கள்...

காதல் : யாரோ மீது இருக்கும் காதலைத் தான் எழுதுகிறார்கள். என் மீது காதல் பற்றி யாரும் எழுதவில்லையே...
நான் : தண்ணீருக்கு தரையில் நடக்க ஆசை வந்ததுப் போல் உள்ளது... நீ மனித உறவுகளில் ஜீவ நாடி... உன்னையும், மனித உறவுகளையும் பிரித்துப் பார்க்க முடியாது... நீயும் உன்னை பிரித்துப் பார்க்காதே...

காதல் : ஆ.... நன்றாக பேச கற்றுக் கொண்டாய்.... உன்னை இப்படி பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி....
நான் : என்ன ...உன் கவலை திர்ந்ததா...?

காதல் : எனக்கு கவலையா... நீண்ட நாள் கழித்து உன்னை பார்க்கிறேனே... அன்று உன்னை பார்த்தது போல் அப்படியே இருக்கிறாயா... மாறிவிட்டாயா என்று சோதித்து பார்த்தேன்...
நான் : ஓ... இது உன் சோதனையா.... என்ன தெரிந்துக் கொண்டாய்...

காதல் : உன்னிடம் நல்ல மாற்றம் தெரிகிறது.... காதலை விட காலம் உன்னை நன்றாகவே மாற்றி இருக்கிறது... நம்பிக்கை இழக்காமல் என்னை தேற்ற பொறுமையாய் பதிலளித்தாய்.... தன்நம்பிக்கை வளர்த்துயிருக்கிறாய்....
நான் : மிக்க நன்றி.... உன்னை நான் மறக்கவில்லை என்று மிக விரைவில் தெரிந்துக் கொள்வாய்....

காதல் : எப்படி..?
நான் : இதோ... ‘என்னை எழுதிய தேவதைக்கு..’ தலைப்பில் ஒரு தொகுப்பை தொடங்கிள்ளேன்..... ஒவ்வொரு காதல் சூழ்நிலைகளை என்னை நாயகன் இடத்தில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன்...

காதல் : வாழ்த்துக்கள்... உன் எழுத்துப்பணி தொடரட்டும்....யார் அந்த தேவதை
நான் : நீ தான் அந்த தேவதை...

காதல் : நான் பெண்பால் இல்லை... எப்படி நான் தேவதையாக முடியும் ?
நான் : தெரியும். ஆண்ணுக்கு நீ பெண்பால். பெண்ணுக்கு நீ ஆண்பால். அதனால் தான் உன்னை இரு பால்களும் விரும்புகிறார்கள்.

காதல் : உன்னிடம் பேசிக் கொண்டு இருந்தால்... எனக்கே உன் மீது காதல் வந்துவிடும்... நான் வருகிறேன்.
நான் : சரி நன்றி காதலே.... உன்னை மீண்டும் சந்திக்கிறேன்.

காதல் : ஐய்யோ... மறுபடியும் உன்னை சந்திப்பதா....

பயந்தப்படி எங்கோ நீ எங்கோ மறைந்துக் கொண்டாய். நீ விளையாட்டாக அப்படி சொன்னாலும் உனக்கு என் மீதுள்ள காதலால் தானே என்னிடம் உரையாட வந்தாய்.

ஒவ்வொருவரிடம் காதல் உரையாடிக் கொண்டு தான் இருக்கிறது. அதை உணர்ந்தவர்கள் மட்டுமே கவிஞர்களாக உருமாருகிறார்கள். அதை உணராதவர்கள் கவிஞர்களின் கவிதையை படிக்கிறார்கள்.

Friday, March 6, 2009

இட ஒதுக்கீடு

கவிதை நிகழ்ச்சி. ஒவ்வொரு மூன்றாவது ஞாயிறுக்கிழமை தோறும் கவிதைப் போட்டி நடக்கும் அரங்கம். பரிசு பெரிய தொகையில்லை தான். வெற்றி பெருபவருக்கு முதல் பரிசு ஐம்பது ரூபாய் தான். ஆனால், இதில் பணம் முக்கியமில்லை. அங்கிகாரம் தான் முக்கியம்.

அறுபது, எழுபது பேர் கூடியிருக்கும் இடத்தில் நமது கவிதைக்கு பரிசு கிடைப்பதே பெருமை. வெற்றி தொகைக்காக எந்த எழுத்தாளரும் கவலைப்பட மாட்டார்.

அது வரை பத்து பேர் கவிதை படித்து விட்டனர். தலைப்பு : 'காத்திருப்போம்'. பதினொன்றாவதாக சரண் கவிதை படிக்க சென்றான். அவனது புனைப்பெயர் தமிழ் பிரியன். புனைப்பெயரில் அவனை அழைப்பார்கள்.

தன் கவிதை காகிதத்தை எடுத்துக் கொண்டு கவிதை படிக்க மேடையில் எறினான் தமிழ் பிரியன்.

" எத்தனையோ மதங்களை
இங்கு இறக்குமதி செய்துவிட்டு
இங்கு பிறந்த புத்தனை
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய பிறகு
மீண்டும் ஒரு புத்தன்
பிறக்க மாட்டாரா என்று காத்திருக்கிறோம் ! " - என்றான்.

எடுத்த எடுப்பிலே பல கைதட்டல்கள்...

அதன் பின்...

" ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வைத்து விட்டு
ஜாதி ஒழிய வேண்டும் என்று காத்திருக்கிறோம்.. ! "

- மீண்டும் கைதட்டல்கள் அரங்கம் நிரைந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் கவிதை படித்து மேடையில் இருந்து இறங்கினான் தமிழ் பிரியன்.

அவன் கவிதை படித்த பிறகு பல பேர் கவிதை படித்தனர். எல்லோரும் கவிதை படித்த பிறகு பரிசு கவிதை அறிவிக்கப் பட்டது. இந்த முறை தனது கவிதை பரிசு கவிதையாக தேர்வாகும் என்று எதிர்பார்த்தான். ஆனால், வேறு ஒருவரின் கவிதையை பரிசு கவிதையாக அறிவிக்கப்பட்டது. ஐம்பது பேர் கவிதை படிக்கும் பரிசு என்பது மிக பெரிய விஷயம். அவர்களின் கைதட்டல்கள் மிக பெரிய பரிசு என்று தன்னை தானே தேற்றிக் கொண்டான் தமிழ் பிரியன்.

அரங்கத்தை விட்டு தமிழ் பிரியன் வேளியெறும் போது ஒருவர் அவனிடம் பேச வந்தார்.

"தம்பி... என் பெரு எழிலவன் " என்றார்.

வயது ஐம்பது மேல் இருக்கும். தமிழ் பிரியன் இதற்கு முன் இந்த கவிதை நிகழ்ச்சியில் அவரை பார்த்ததில்லை. ஆனால், கவிதை நிகழ்ச்சியில் இது போன்ற அறிமுகங்கள் தமிழ் பிரியனுக்கு புதிதில்லை. அவனும் எழிலவனிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.

" என்ன பண்றீங்க...?" என்றார்.

" நான் சாப்ட்வேர் கம்பேனியில வேலை செய்றேன்..." - என்றான்.

" நல்லது... கவிதையில ரொம்ப ஈடுபாடு அதிகமா..." - எழிலவன்.

" ஆமா சார்... நம்மலுடைய எண்ணத்தையும், நினைவையும் கவிதை மாதிரி வேறு எதுலையும் பதிவு செய்ய முடியாது... கவிதை படிக்கிறது, எழுதுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் " - என்றான் தமிழ் பிரியன்.

" சந்தோஷம்... உங்க கவிதை முதல் கருத்து ரொம்ப பிரமாதம்.. ஆனா... இரண்டாவது கருத்து எனக்கு உடன்பாடுயில்ல..." - எழிலவன்.

" ஏன் சார்...?"

" தம்பி... ஜாதி அடிப்படையில இட ஒதுக்கீடு ஜாதி ஒழிக்க மருந்து... அது ஜாதிய வளர்க்குறதுயில்ல... எங்க வீட்டுல நான் தான் படிச்ச முதல் தலைமுறை... இன்னும், OBC, SC, ST இருக்குறவங்க படிக்காத தலைமுறைங்க கிராமத்துல இருங்காங்க... அவங்கல முன்னுக்கு கொண்டு வரதுக்கு தான் இந்த இட ஒதுக்கீடு புரிஞ்சுக்கோங்க..." - எழிலவன்.

" இதுனால எத்தனையோ திறமையான மாணவர்கள் பாதிக்க படுவாங்களே ! இத பத்தி யோசிச்சு பார்த்திங்களா...?" - தமிழ் பிரியன்

" வாய்ப்பு கொடுத்தா தான் திறமை வெளியவே தெரியும் !" - எழிலவன்

"இட ஒதுக்கீட்டால தாழ்த்தபட்டவங்க எல்லோரும் முன்னுக்கு கொண்டு வர முடியும் நினைக்கிறீங்களா...?" - தமிழ் பிரியன்

" இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவங்கள முன்னுக்கு கொண்டு வர ஒரு வழி தான்... அதுவே முழு வழினு சொல்ல முடியாது... இன்னும் பல வழிகள் அரசாங்கள் முயற்சி பண்ணிகிட்டு தான் இருக்கு..." - எழிலவன்

" நீங்க என்ன தான் சொன்னாலும்.... அதிகம் மார்க் எடுக்குற மாணவன் பாதிக்க படுறானே..." - தமிழ் பிரியன்

" தம்பி... OC மாணவனுக்கு எவ்வளவு மார்க் எடுக்கனும்...சொல்லுங்க.." - எழிலவன்

" 95 இல்ல 96 இருக்கும்..." - தமிழ் பிரியன்

" சரி BC மாணவனுக்கு ?" - எழிலவன்

" 92 இருக்கும்..." - தமிழ் பிரியன்

" OBCக்கு...?" - எழிலவன்

" 88 இருக்கலாம்..." - தமிழ் பிரியன்

" நாலு தலைமுறையா படிச்ச OC மாணவன் 95 மார்க் எடுக்கனும், முதல் தலைமுறையில படிக்கிற OBC மாணவன் 88 மார்க் எடுக்கனும்னு நீயே சொல்லுற...! இந்த கேள்விக்கு பதில் சொல்லு... இந்த இரண்டு மாணவனுக்கும் 7 மார்க் தான் வித்தியாசம். OC மாணவன வழிகாட்ட நிறைய பேர் அவன் குடும்பத்துல இருப்பாங்க... சொல்லி கொடுக்க ஆளுங்க இருப்பாங்க. ஆனா OBC மாணவனுக்கு அப்படி குடும்பத்துல யாரும் இருக்க மாட்டாங்க..."

எழிலவன் கொடுக்கும் விளக்கத்தை திகைப்புடன் கேட்டான் தமிழ் பிரியன். அவர் விளத்தை மேலும் கேட்க வேண்டும் என்று தான் தமிழ் பிரியன் மனதில் இருந்தது.

" இப்படி OBC, SC, ST னு இட ஒதுக்கீடு மூலமா படிச்சா, நாலு தலைமுறை கழிச்சு அவங்களும் முன்னுக்கு வந்திருப்பாங்க... அவங்க தலைமுறை முன்னுக்கு வந்ததுக்கு அப்புறம் இந்த இட ஒதுக்கீடு தேவையில்ல... இவங்க எல்லாம் முன்னுக்கு வர நாம இன்னும் நிறைய தலைமுறை காத்துக்கிட்டு இருக்கனும்..."

“இட ஒதுக்கீட்டால திறமை பாதிக்கப்படுது சொல்லுறவங்க... போட்டியில்லாத வரலாறு, அறிவியல் ஏன் படிக்க மாட்டிங்குறாங்க...? திறமை இருக்குறவங்க எது படிச்சாலும் முன்னுக்கு வர முடியும். அந்த காலத்துல ஏமாந்து இழந்த உரிமைய இட ஒடுக்கீட்டு பெருல மறு பங்கீடு பண்றோம்... அவ்வளவு தான். ” என்றான் எழிலவன்

"நீங்க சொல்லுறது உண்மை இருக்கு சார்... எனக்கு நல்ல புரிய வச்சிங்க.." - தமிழ் பிரியன்

" தம்பி உங்களுக்கு சின்ன வயசு... படிக்க நேரம் நிறைய இருக்கும்... நிறையா படிங்க... அப்போ தான் உங்களுக்கு உண்மை புரியும்... தப்பா பிரச்சாரம் கேட்டு குழம்பாதிங்க…. நான் உங்களுக்கு சொன்னது பத்து சதவீதம் கூட இல்லை..." -எழிலவன்.

" ரொம்ப நன்றி சார்..." - தமிழ் பிரியன்.

"சரி தம்பி... அடுத்த கவிதை நிகழ்ச்சியில பார்ப்போம் " என்றார்.

"பார்ப்போம் சார்..." என்று சொல்லி அந்த இடத்தை விட்டு தமிழ் பிரியன் நகர்ந்தான்.

"யப்பா..சரியான மொக்கை. பேசி...பேசி... என் டைம் வேஸ்ட் பண்ணிட்டான்..." என்று தமிழ் பிரியன் தன் மனதில் சொல்லிக் கொண்டு வண்டியை எடுத்தான். ஒரு இளைஞனுக்கு இட ஒதுக்கீடு பற்றி விளக்கி புரிய வைத்த சந்தோஷத்தில் அந்த இடத்தை விட்டு எழிலவன் நகர்ந்தான்.

---

சோலை பதிப்பகத்தின் 'கதைசோலை' என்ற சிறுகதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற சிறுகதை.

Thursday, March 5, 2009

ஒபாமா பராக் !

ஆர்.முத்துகுமார்

‘வெற்றி’ மூன்றெழுத்து ; ‘காதல்’ மூன்றெழுத்து ; ‘வீரம்’ மூன்றெழுத்து ; ‘கவிதை’ மூன்றெழுத்து ; ‘கடமை’ மூன்றெழுத்து ; இன்று உலகம் உச்சரித்து கொண்டு இருக்கும் அமெரிக்க அதிபர் 'ஒபாமா' பெயரும் மூன்றெழுத்து !

எதோ ‘கலைஞர்’ பாணியில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் தொடங்கிவிட்டேன். மன்னித்து விடுங்கள். ஒபாமாவுக்கு வருவோம். இப்போது தான் அதிபராக வெள்ளை மாளிகைக்கு நுழைந்து இருக்கிறார். அவர் முன்னே இருப்பது சவாலாக பிரச்சனைகள் மட்டுமே. எப்படி எதிர் கொள்ள போகிறார் ? என்ன செய்ய போகிறார் ? என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அதற்குள் பலர் (வை.கோ உட்பட) அவரை பற்றி பேசவும், எழுதவும் தொடங்கிவிட்டனர். இப்படி ஒபாமாவை பற்றி பலரும் பேசுவதற்கு ஒரே காரணம்.

எந்த வருடமும் இல்லாமல் எல்லா ஊடங்களும் 2008ல் அமெரிக்க அதிபர் தேர்தல் அதிக கவனம் செழுத்தியது. உலக மக்கள் அனைவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் மிக ஆர்வமாக கவனித்து வந்தனர். பலர் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் ஒரு வருடம் மேல் நடக்கும் என்பது இந்த முறை நடந்த தேர்தலில் தான் தெரிந்துக் கொண்டனர். இதற்கும் ஒரே காரணம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா தான் வெற்றி பெற வேண்டும் பலர் இறைவனிடம் பிரத்தானை நடத்தினர். இதற்கும் ஒரே காரணம் தான்.

ஒபாமா கறுப்பு இனத்தை சேர்ந்தவர். கறுப்பு இனத்தில் வந்து முதல் அமெரிக்க அதிபர் வர வேண்டும் என்பது தான். கடைசியில் அது தான் வெற்றிக்கரமாக நடந்தது. ஒபாமாவின் வெற்றி கறுப்பு இனத்தின் வெற்றி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வெற்றி. மறைந்த அம்பிரகாம் லிங்கன் கண்ட கனவின் வெற்றி. இப்படி ஒபாமாவின் வெற்றியை பற்றி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சமிபத்தில் சுமாராக நடந்த ‘32வது சென்னை புத்தக கண்காட்சியி’ல் ஒபாமா பற்றின புத்தகங்கள் நன்றாக விற்பனையானது என்று 'ஹிந்து' நாளேடு தெரிவித்து இருந்தது. நிச்சயமாக கிழக்கு பதிப்பகத்தின் 'ஒபாமா' நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒபாமா பராக் புத்தகத்திற்கு வருவோம்.

ஒபாமாவின் தாத்தா ஆன்யாங்கோ ஆரம்பத்தில் கிறிஸ்துவராக இருந்தாலும், தான்ஸானியாவுக்கு சென்றிருந்த போது அங்கே இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். அன்றிலிருந்து, இஸ்லாமியச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மற்றும் கொள்கைகள் மீது ஆன்யாங்கோவுக்கு ஆதீத ஈர்ப்பு ஏற்பட்டது. தன்னுடைய பெயரில் ஹூசைன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டார். இரண்டாவது மனைவியான அகுமு ஹபிபாவுக்கு பிறந்த முதல் ஆண் குழந்தை தான் பாரக் ஹூசைன் ஒபாமா (சீனியர்). ஒபாமாவின் தந்தை.

பராக் சீனியர் ஸ்டேன்லி ஆன் டந்காம் என்ற வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்தார். அவர்களின் காதலுக்கு பரிசாக ஆகஸ்டு 4, 1961 அன்று ஹவாயின் தலை நகர் ஹானலூலுவில் ஜூனியர் ஒபாமா பிறந்தார். ஒபாமாவின் முழு பெயர் பராக் ஹூசைன் ஒபாமா ! ஒபாமா இஸ்லாம் இனத்தை சேர்ந்தவர் என்று கூறுபவர்களுக்கு இது தான் பதில்.

தான் ஒரு கறுப்பன் என்பதால் ஒபாமா பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை. ஆனால், ஒரு பத்திரிக்கை செய்தி அவரை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு முறை ஒபாமா பத்திரிக்கை படிக்கும் போது அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின இளைஞன் ஒருவனுக்கு, தான் கறுப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தது. தன் தோலின் நிறத்தை மாற்றிக் கொள்ள ஒரு வேதிப் பொருளை தன் தோளின் மீது தடவிக் கொள்கிறான். அவன் தோல் வெந்து போய் மீக கொடூரமாகி விடுகிறது. இந்த செய்தியை படித்த நடுங்கி போய் விடுகிறார். இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.

ஆரம்ப வயதில் இருந்து இந்தோனேஷியாவில் படித்ததால் கறுப்பினத்துக்கு நடந்த கொடுமைகள் அவருக்கு தெரியாது. அதன் பிறகு ஹாவாயில் இருக்கும் புனாஹூ என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். இது வரை வெள்ளை, கறுப்பு நிற ஏற்ற தாழ்வு பார்க்காத ஒபாமா இங்கு தான் முதல் முதலில் பார்க்கிறார். ஆசிரியர்கள் கறுப்பு மாணவர்களை இரண்டாம் அல்லது மூன்றாம் தர மனிதர்களாக பள்ளியில் நடத்துவது ஒபாமாவுக்கு வருத்தம் அளித்தது. அந்த சமயத்தில் அவரின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்றிருந்ததால் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுயிருந்தார். இதனால் போதை பழக்கமும் ஏற்பட்டது.போதை பழக்கத்தில் தன்னை அடிமையாக்கி கொள்ளாமல் சற்று சுதாரித்துக் கொண்டு கூடைப்பந்தில் கவனத்தை செலுத்தினார். ஒபாமா வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களை திரைப்பட காட்சி போல் அழகாக ஆர்.முத்துகுமார் அவர்கள் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகத்தில் ஒபாமாவை பற்றி சொன்ன தகவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது.

இந்தோனேஷியாவில் இராமாயணம் மிகவும் பிரபலம். ஒபாமா இந்தோனேஷியாவில் படிக்கும் போது அவருக்கு அனுமானை மிகவும் பிடிக்கும்.


சட்டம் படித்த ஒபாமா தற்காலிகமாக சிட்லி ஆஸ்டின் என்ற சட்ட நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். அவருக்கு பயிற்சியளிப்பதற்காக மிஷல் ராபின்சன் என்று கறுப்பின பெண் நியமிக்கப் படுகிறார். ஆசிரியை - மாணவர் என்று தொடங்கிய பழக்கம், மெல்ல மெல்ல நடபாக வளர்ந்து காதல் உருமாறுகிறது. அவரையே திருமணம் செய்துக் கொள்கிறார்.

'Dream from My father’ என்ற புத்தகத்தை 1995 ஒபாமா எழுதி வெளியிட்டார். ஒபாமாவுக்கு எழுத்தாளர் என்ற இன்னொரு முகமும் உண்டு...!!

தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா தான் கறுப்பினத்தை சேர்ந்தவன் என்றோ, கறுப்பின பிரதிநிதியாகவோ முன் நிறுத்திக் கொள்ளவில்லை. பொருளாதரத்தில் வீழ்ந்து இருக்கும் அமெரிக்காவை மீட்பதை பற்றி தான் பிரச்சாரம் செய்கிறார். அமெரிக்காவின் தேர்தல் முறைகளையும் மிக எளிமையாக புரியவைத்திருக்கிஆர். முத்துகுமார். ( சாதி பெயரை வைத்து ஓட்டு கேட்டும் இந்திய அரசியல்வாதிகள் இதை ஒபாமாவிடம் இருந்து கற்க வேண்டிய விஷயம் )

இன்று ஒபாமாவை அதிபராக பார்க்கும் நாம், கிளிண்டன் தேர்தல் போட்டியிடும் போது ஒரு தொண்டனாக ஈடுப்பட்டை அழகாக காட்டியுள்ளார். கறுப்பின பெண்ணான கரோல் மோஸ்லி பிரான் என்பவர் சிகாகோவிலிருந்து அமெரிக்க மேலலையான செனட் தேர்தல் களத்தில் இருந்தார். கறுப்பர்கள் வாக்குகள் எல்லாம் இந்த வேட்பாளருக்கு தான் கிடைக்கும் என்று ஒபாமாவுக்கு நன்றாக தெரியும். ஆனால், பல கறுப்பர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாமல் இருந்தனர். ஒபாமாவின் திவிரமான பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் பதினைந்தாயிரம் வாக்காளர்களை பதிவு செய்ய வைத்தார். அவர் பதிவு செய்து வைத்த வாக்களார்கள் தான் கரோல் மோஸ்லி பிரா தானை தேர்தலில் வெற்றி பெற வைத்தது.

ஒபாமாவை பற்றி சுவையாக தகவல்களில் மத்தியில் ஒரு அதிர்ச்சியான தகவல்களையும் எழுதியிருக்கிறார். டேனியல் கோலர்ட், பால் ஷ்லெசல்மன் என்ற இரண்டு வெள்ளை இனத்தவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமாவை கொல்ல திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறனர். இன்னும், அமெரிக்காவில் வெள்ளை இன வெறியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி..! விஞ்ஞானம் வளர்ந்து விட்ட போதுலும் இன்னும் சிலரது மனது பிற்போக்காக சிந்தித்துக் கொண்டு இருக்கிறது.

விருவிருப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் ஒபாமா புத்தகத்தில் வேகத்தடையாக மூன்றாவது, எட்டாவது அத்தியாயம் இருக்கிறது. கறுப்பர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்குவதில் கொஞ்சம் நீளத்தை தவிர்த்திருக்கலாம். 'ஒரு நாடகம் நடக்கிறது' அத்தியாயத்தில் ஆபிரஹாம் லிங்கன், மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) என்று சொல்லும் இடை சொருகல் போல் உள்ளது. ஒபாமா வாழ்க்கை வரலாற்றில் ஒட்டவில்லை. மற்றப்படி இந்த புத்தகத்தில் குறை என்று சொல்லுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. அதே சமயம், புத்தகம் முடிந்து விட்டது என்று ஆர்.முத்துகுமார் அமைதியாக இருந்து விட முடியாது. இனி வரும் காலத்தில் (குறிப்பாக இந்த ஆண்டில்) ஒபாமா எடுக்க போகும் முக்கியமான முடிவுகள், திட்டங்கள், அறிவிப்புகள் பின் சேர்க்கை செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.

எது எப்படியோ ! ஒடுப்பட்ட கறுப்பினத்தில் இருந்து ஒபாமா என்ற கறுப்பர் அதிபராகியிருக்கிறார். இது ஒபாமாவின் வெற்றி மட்டுமல்ல. கறுப்பினத்தின் வெற்றி ! அவர்களால் இனி எதையும் சாதிக்க முடியும்.

'Yes, they can !'

நூலை வாங்க...

முகவரி

கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

அறிவியல் புனைகதை : கனவே கலைந்து விடாதே

என் தேகத்தை அசைக்க முடியாமல் படுத்து கிடந்தேன். எழுபது, எண்பது கிலோ எடையுள்ள் உருவம் ஒன்று என் உடல் மீது ஊடுருவது போல் இருந்தது. அந்த உருவம் மெல்ல மெல்ல என் பெண் உருப்புக்களை சுவைத்துக் கொண்டு இருந்தது. அந்த உருவத்தை தள்ளி விட நினைத்து என்னால் முடியவில்லை. அந்த உருவத்தின் கரங்கள் என் கரங்களோடு பின்னி பினைந்து அசைக்க முடியாமல் இருந்தேன். இது வரை என் உடலை எந்த ஆணும் தீண்டியதில்லை. அந்த உருவம் தீண்டியதில் ஆண் என்று உணரமுடிந்தது. என் பெண்மையை காப்பாற்றி கொள்ள கத்தினேன். எதுவும் பலனில்லை. என் தேகத்தை அந்த உருவம் அனுபவித்துக் கொண்டு இருந்தது. தன் வேட்கையின் உச்சக்கட்டத்தை தீர்த்துக் கொள்ள அந்த உருவம் முயற்சி செய்தது. இந்த முறை மேலும் பலமாக கத்தினேன். மூடப்பட்டிருந்த அறை கதவுகள் வேகமாக திறந்து. இரண்டு உருவங்கள் உள்ளே நுழைந்தன. இதற்கு முன் அந்த இருவரை எங்கோ பார்த்தது போல் இருந்தது. என் பெண்மையை காப்பாற்ற, அந்த இருவர் உருவத்தை அடிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அந்த இருவர் என்னை தட்டி எழுப்ப தொடங்கியது.

" அனிதா.... அனிதா... என்னம்மா ஆச்சு உனக்கு.... எதுக்கு கத்துன...?? " என்று பதட்டத்துடன் ஒரு பெண் குரல் கேட்டது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தேன். என் அறையில் பாதுக்காப்பாய் தூங்கி கொண்டு இருந்திருக்கிறேன். என் வலது பக்கத்தில் பதட்டத்துடம் அம்மா இருந்தார். இடது பக்கம் சாந்தமாய் என் அப்பா சீதாராமன் நின்றுக் கொண்டு இருந்தார். என் பெண்மை யாரோ சுரையாடுவது போல் கனவு கண்டுயிருக்கிறேன் என்பதை உணர எனக்கு கொஞ்சம் நேரமானது.

" என்னடி.... கெட்ட கனவா ? வீடே இரண்டாகுற மாதிரி கத்துன... " பயந்தப்படி அம்மா கேட்டார்.

" கெட்ட கனவும்மா... யாரோ என்ன கெடுக்குற மாதிரி கனவு. எனக்கு பயமா இருக்கு..." என்று கனவில் நடந்ததை என் பெற்றோர்களிடம் மறைக்காமல் கூறினேன்.

" போடி... அடுத்த வாரம் கல்யாணம். அந்த பயம் இந்த மாதிரி கனவா வருது. மனசுல பகவான வேண்டிட்டு தூங்கு..." என்று ஆறுதலாக அம்மா கூறினாள்.

ஆனால், இது போன்ற கனவு பயம் எனக்கு புதிதில்லை. சிறு வயதில் இருந்தே எனக்கு கெட்ட கெட்ட கனவுகள் தான் வரும். பள்ளியில் படிக்கும் போது டீச்சர் அடிப்பது போல் வரும், பல்லி, கரப்பான் எல்லாம் என் மேல் ஏறி கடிப்பது போல் வரும், பருவம் அடைந்த பிறகு வகுப்பில் இரத்தம் கசிவது போல் வரும். நான் கனவு பயத்தில் கத்தி எழும் போது அம்மா பதட்டம் அடைவாள். எனக்கு பேய் பிடித்திருக்குமோ என்று பல கோயிலுக்கு அழைத்து சென்று மந்திரித்து காயத்து எல்லாம் கட்டிவிட்டார். அடுத்த நாள் இரவில் அந்த கோயில் புசாரி என்னை கொலை செய்வது போல் கனவு வரும். இந்நாள் வரை கனவு பயம் என்னை விடவே இல்லை.

சில சமயம் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறா என்ற சந்தேகம் எழும். நான் பைத்தியமில்லை என்பதை என் அப்பா உறுதி செய்வார். அவர் ஒரு மனதத்துவ டாக்டர். நோயை குணப்படுத்த மருந்தை விட மனதை தான் அதிகம் நம்புவார். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் நான் தான் என் பெற்றோர்களுக்கு இளவரசி. என் கனவு பயம் தான் அவர்களுக்கு கவலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது.

அம்மா கடவுளை வேண்டிவிட்டு என் நெற்றியில் விபூதி பூசினாள்.

" எதபத்தியும் யோசிக்காம அமைதியா தூங்கு...." என்றாள் அம்மா.

அப்பா எதுவும் பேசாமல் அமைதியாக என்னை பார்த்தார். அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

" அப்பா..! எனக்கு பயமா இருக்கு... என் கூடவே இருங்கப்பா..."

தன் மகள் அனிதா இன்னும் குழந்தையாக தான் இருக்கிறாள் என்பதை சீதாராமன் உணர்ந்தான். தன் மனைவியை அனுப்பி விட்டு மகளுக்கு ஆறுதலாக அவள் அருகில் அமர்ந்தான்.

" என்னடா... உனக்கு ஒண்ணும் ஆகாது... நாங்க இருக்கோம்ல்ல...." என்றான் சீதாராமன்.

" எனக்கு பைத்தியமா அப்பா... ஏன் எனக்கு மட்டும் அடிக்கடி இப்படி நடக்குது.... " என்று கேட்டேன். ஒவ்வொரு முறை நான் பைத்தியம் என்று சந்தேகம் வந்தால் என் தந்தையிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். என் தந்தையும் எனக்கு பதில் அளித்து அளித்து அசந்து போவார். ஏதாவது ஒரு காரணம் கூறி என்னை தேற்றுவார். ஆனால், இந்த முறை எனக்கு என்ன வியாதி என்று வெளிப்படையாக கூறினார். இன்று தான் எனக்கு என்ன வியாதி என்று தெரிந்துக் கொண்டேன்.

" உனக்கு பைத்தியம் இல்லம்மா... இத டிரீமிங் டிஸார்டர் சொல்லுவாங்க... அதனால தான் உனக்கு கெட்ட கனவு வருது. வேற ஒண்ணுமில்ல..." என்று சீதாராமன் கூறினான்.

" எதனால வருதுனா??.... இதுக்கு டிரிட்மென்ட் இல்லையா... ஏன் இவ்வளவு நாள் எந்த மருந்து எனக்கு கொடுக்கல்ல...." கண்ணீர் கலந்த குரலில் நான் கேட்டேன்.

" இது வியாதி கிடையாதுமா... ராபிட் ஐய் மூவ்மென்டால வருது... நிறைய பேருக்கு 'டிரீமிங் டிஸார்டர்' பிரச்சனை இருக்கு. ஆனா, யாரும் பெருசா எடுத்திக்கிறது இல்ல. இந்த கனவு இரண்டு, மூனு நாளைக்கு ஞாபகம் இருக்கும் அவ்வளவு தான். அப்புறம் நாமே மறந்திருவோம்..." என்று மருத்துவ ரீதியாக இருக்கும் 'டிரீமிங் டிஸார்டர்' பற்றி விளக்கினார்.

" அப்போ இத குணப்படுத்த முடியாதா....?" என்று என் மனதில் ஆழமாய் பதிந்த கேள்வியை கேட்டேன்.

" டிரீமிங் டிஸார்டர் வியாதியே இல்லாத போது... மருந்து எப்படிம்மா...?? தியானமும், மனச சந்தோஷமா வெச்சிக்கிறதும் தான் இதுக்கு மருந்து. கனவு மனுஷனோட கற்பனை குதிரை. அத மனுஷன் தான் கட்டி வைக்கனும். மருந்து, மாத்திரை கிட்ட அந்த பொறுப்ப கொடுத்த நம்ப மனசே நம்ப பேச்ச கேட்காது..."

தந்தை சீதாராமனின் விளக்கத்தை கேட்டவுடன் நான் புன்முருவலோடு பார்த்தேன். என் மனதில் இருந்த பயம் மெல்ல மெல்ல விலகியது. அப்பா சொல்வதிலும் உண்மை இருக்கிறது. எப்படி மனிதனின் கற்பனை மருத்துவத்தால் தடுத்து நிருத்த முடியும். இயல்பு வாழ்க்கை நடக்காததை பலர் கனவில் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். எனக்கு இப்படி ஒரு கனவு வருகிறது என்றால், என் மனதில் வன் புணர்ச்சிக்கு ஆசைப்படுகிறேனா...?? அடுத்த வாரம் திருமணம் என்பதால் எனக்கு இப்படி ஒரு கனவு வந்திருக்கலாம். எனக்குள்ளே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லிக் கொண்டேன்.

" அப்பா! தியானம், மனச சந்தோஷமா வச்சிக்கிறது தவிர கெட்ட கனவு வராம பார்த்துக்க இன்னொரு வைத்தியம் இருக்கு..." என்றேன்.

" என்ன வைத்தியம்...." ஆரவமாக அப்பா கேட்டார்.

" தூங்காம்மா இருக்கனும்..." என்று கூறி குறும்பா சிரித்தேன்.

" அடி உன்ன.... இராத்தி நேரத்துல கடி ஜோக் சொல்லிட்டு... எத பத்தி கவலப்படாம தூங்கும்மா...." என்று கூறி விட்டு, போர்வை என்னை போர்த்திவிட்டு அப்பா தன் அறைக்கு சென்றார். வெடிக்கையாக பேசினாலும் மனதுக்குள் பயம் இருக்க தான் செய்கிறது. எதற்கும் என் அறையில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்து விடுகிறேன்.

நல்ல வேளை. யாருமில்லை. தைரியமாக தூங்கலாம். கனவு மட்டும் வரகூடாது என்று சொல்லி கொண்டே தூங்கினேன்.

ஒரு வாரம் உருண்டோடியது. நாட்கள் எப்படி போகிறது என்று சொல்ல முடியவில்லை. என் திருமணம் சிறப்பாக நடந்தது. அப்பா, அம்மா கண்களில் ஆனந்த கண்ணீரை பார்த்தேன். உறவினர்கள், நன்பர்கள் வாழ்த்திவிட்டு சென்ற பிறகு முதல் இரவுக்கு தேவையான அழங்காரம் என் அறையில் நடந்துக் கொண்டு இருந்தது.

என் கணவர் பெயர் சேகர். ஒரு கணிணி நிறுவனத்தில் வேலை செய்கிறார். நல்ல சம்பளம். பல இடங்கள் வரன் பார்த்து செய்து வைத்த திருமணம். இத்தனை நாள் சேர்த்து வைத்த என் இளமையை சேகருடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். இல்லை..இல்லை... சேகருக்கு கொடுக்க போகிறேன். என் இன்பமும், துன்பமும் ‘அவன்’ தான். மன்னிக்கவும் ‘அவர்’ தான். திருமணம் ஆன பிறகு எப்படி தான் 'அவன்' 'அவராக' மாறுகிறது என்பதை அப்பாவிடம் மன தத்துவ ரீதியான விளக்கத்தை கேட்க வேண்டும்.

மனதில் பல கனவுகளுடன் என் அறைக்கு சென்றேன். அங்கு சேகர் எனக்காக காத்திருந்தார். என்னுடைய அறையாக இருந்தாலும், உள்ளே நுழைவதற்கு பயமாக இருந்தது. சந்தோஷம் கலந்த பயத்துன் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தேன். சேகர் என் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி கட்டில் அருகில் வைத்தார். சேகர் கைகளால் என் கையை பிடித்து கட்டிலில் உக்கார வைத்தார். அவரது கண்கள் என் தேகத்தை மேய்ந்து கொண்டு இருந்தன.

" என்னங்க அப்படியே பார்க்குறீங்க...." என்று கேட்டேன்.

"இன்னைக்கு எவ்வளவு அழகா இருக்க.... உன்ன அப்படி கடிச்சு சாப்பிடலாமா இருக்கு..." என்று கூறியப்படி என் அருகில் வந்தார்.

"நீங்க தொடும் போது ஒரு மாதிரியா இருக்கு. கொஞ்சம் நேரன் ஏதாவது பேசுவோமே !" பயத்தில் கூறினேன். அவரது தீண்டல் பிடித்திருந்தாலும், முதல் முறை என்பதால் எனக்கு பயமும் இருந்தது.

" கல்யாணத்து முன்னாடியே எல்லா பேசியாச்சு... இங்க வந்து பேசியும் நம்ப டைம்ம வேஸ்ட் பண்ண விரும்பல்ல..." என்று சொல்லிவிட்டு கட்டில் படுக்க வைத்தார். வார்த்தைகளுக்கும், ஆடைக்கும் அவசியம் அற்று போயின. வியர்வை ஆறாக ஓடின. அறையின் நிசப்தத்தை என் இதய துடிப்பு கலைத்தன. எங்கள் மூச்சு காத்து புயல் போல் அறையில் பரவியது.

எனக்கு போன வாரம் வந்த கனவு ஞாபகம் வந்தது. இதே போல் தான் ஒரு உருவம் என்னை அனுபவிப்பது போல் கண்டேன். இப்போது என் கணவர் என்னை அனுபவிப்பத்து கொண்டு இருக்கிறார். ஒரு வேளை நான் காணும் கனவு நிஜமாக நடக்கிறதா... என்று யோசித்தேன். என் கனவு எல்லாம் நிஜமாக நடக்கிறதா என்று எனக்குள்ளே கேட்டு பார்த்தேன்.

" ஆ...ஆ........ஆ..." என்று விரிட்டு கத்தினேன். வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எழுந்தேன். படுக்கையில் சேகர் இல்லை. என்னை சுற்றி மருத்துவ முகாமே அமைத்தது போல் இருந்தது. என் கண் எதிரே இரண்டு கம்ப்யூட்டர் மானிடர் ஓடிக் கொண்டு இருந்தது. மனித இயந்திரங்கள் அங்கும், இங்கும் அசைந்துக் கொண்டு இருந்தன. சேகர் இங்கு இருப்பதாக தெரியவில்லை. என் கைகள் அசைக்க முடியாமல் இரண்டு பக்கமும் பாடிலில் க்லுகோஸ் ஏறிக் கொண்டு இருந்தது. அது மட்டுமில்லாமல், என் கைகள் தோள் சுருங்கி காணப்பட்டன. இரண்டு விரலுக்கு நகமே இல்லை. தலை முடியில் இருந்து உதிர்ந்த முடி வெள்ளையாக இருந்தது. என்ன நடந்தது...? என் கணவர் சேகர் எங்கே... ? அப்பா, அம்மா எங்கே....? நினைத்து கொண்டு இருக்கையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.

" என்ன பாட்டிம்மா... தூக்கம் தெழுஞ்சிருச்சா..." என்றான்.

" நீ யாரு..." என்றேன். நான் பேசும் உதடுகள் அசைக்க மிகவும் சிரம்ம பட்டேன்.

" என் பேரு மதன். இங்க வேளை செய்யுற டாக்டர். நீங்க என்னோட பெஷன்ட் பாட்டிம்மா..." என்றான்.

" நான் பாட்டியில்ல. எனக்கு இருபது வயசு தான் ஆகுது...." கோபமாக கூறினேன்.

" ஓ.... இன்னும் கனவு உலகத்துல இருந்து வெளியே வரலைய்யா... இது 2108 ஆம் வருஷம். உங்களுக்கு நூற்றி இருபது வயசு ஆகுது. உங்க பேரங்க மெடிக்கல் ரிசர்ச்காக உங்கள இருபது வருஷம் முன்னாடி டோனேட் பண்ணியிருக்காங்க..."

" எனது..?? என்ன டோனேட் பண்ணிட்டாங்களா...!!! " அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டு இருந்தான் மதன். எனக்கு என்னவோ மாய உலகத்தில் இருப்பது போல் இருந்தது. எனக்கு ‘நூற்றி இருபது வயது’ என்று அவன் சொல்வதை நம்ப முடியவில்லை. இப்போது தான் என் கணவர் சேகர் என்னை கட்டிலில் தள்ளி இன்ப சுகத்தை கொடுத்தார். நான் அந்த இன்ப சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் இத்தனை வருடங்கள் எப்படி கடந்து வர முடியும் ? எனக்கு எத்தினை குழந்தைகள் பிறந்தார்கள் ? அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது ? என் பேரன், பேத்திகள் என்னை எதுக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கு தத்துக்கொடுக்க வேண்டும் ? எனக்கு எதுவுமே நினைவில் இல்லை.

ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் கேள்வியாக தான் இருந்தது. குழப்பங்கள் மட்டுமே நிரம்பி வழிந்தது. என் தந்தை அருகில் இருந்தால் குழப்பத்தை தீர்த்து வைப்பார். அப்பா இங்கு இருப்பதாக தெரியவில்லை. சேகர் எங்கே...?? இவ்வளவு நேரம் இங்கு தானே இருந்தாய்.. சேகர்... சேகர்... மனம் என் கணவரை தேடியது.

" இவ்வளவு நேரம் உங்க கணவர் சேகரோடவா இருந்தீங்களா....? " என்றான்.

" ஆமாம். அவரு இப்போ எங்க...?" என்று ஆவலுடன் கேட்டேன்.

" அவரு செத்து அம்பது வருஷம் ஆகுது. இவ்வளவு நேரம் நீங்க இருந்தது கனவு...." என்றான் மதன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.” என் கணவர் இறந்து விட்டாரா ?” , "நான் கனவோடு வாழ்ந்தேனா.... எப்படி முடியும் ? நான் நிஜம். என் அப்பா சீதாராமன் நிஜம் . என் கணவர் சேகர் நிஜம். எல்லாம் கனவு என்று சொல்கிறான் இந்த முட்டாள் மதன்." என்று எனக்குள்ளே கூறிக் கொண்டேன்.

" நான் முட்டாள் இல்ல பாட்டிம்மா.." சிரித்துக் கொண்டே கூறினான் மதன்.

நான் மனதுக்குள் நினைப்பது இவனுக்கு எப்படி தெரியும். இதற்கு முன்பு நான் சேகருடன் இருந்ததை நினைத்தையும் கண்டு பிடித்தான். நான் நினைப்பது எப்படி அவனுக்கு தெரிந்தது…?

" ரொம்ப குழப்பிக்காதிங்க பாட்டிம்மா. நீங்க, உங்க அப்பா சீதாராமன், சேகர் எல்லாரும் நிஜம் தான். உங்களுக்கு கனவு கொடுக்கும் இயந்திரம் பொருத்தியிருக்கோம். இருபத்திரண்டாம் நூற்றாண்டு கொடுமையா வியாதிகளுல 'டிரீமிங் டிஸார்டர்' ஒண்ணு. கனவு வராம எப்படி தடுக்கனும் ஆராய்ச்சி பண்ணி மிஷின் கண்ணு பிடிக்க போறோம். அதுக்கு உங்கள எங்களுக்கு டோனேட் பண்ணியிருக்காங்க. "

‘டிரீமிங் டிஸார்டர்’ இருபத்திரண்டாம் நூற்றாண்டின் கொடுமையான வியாதியா....!!!! எனக்கு தலையே சுற்றியது.

" உங்க உடம்புல சிலிகோன் சிம் ஒண்ணு பொருத்தி இருக்கோம். உங்க கனவுகள், உள் மனது பேசும் வார்த்தைகள், எண்ணங்கள் எல்லாம் எனக்கு கேட்கும்..." என்றான்.

அடப்பாவி இது வேறையா... இவனுக்கு தெரியாமா நான் எதுவும் நினைக்க கூட முடியாதா... எல்லாம் என் தலையெழுத்து என்று என்னை நானே நொந்துக் கொண்டேன்.

" எப்படி இவ்வளவு வருஷம் நான் சாகமா இருக்கேன்....?"

" உங்க உடம்புக்கு நல்லா இருக்க நாங்க மருந்து கொடுக்குறோம். கனவு உங்கள ரொம்ப இளமையா வச்சிட்டு இருக்கு. மனுஷன் தன்னோட முதுமை நினைக்கும் போது தான் மரணமே வருது. உங்க கனவு உங்கள இருபது வயசுல வாழ வைக்கிறதாளா நீங்கள இவ்வளவு வருஷம் இருக்கீங்க.."

கனவு காண்பதை வியாதி என்கிறான். அதே சமயம் அந்த கனவு தான் என் மனதை இளமையாக வைத்துக் கொண்டு நீண்ட நாள் வாழ வைத்ததாக கூறுகிறான். ஜிலேப்பி போல் அவன் சொல்லுவது ஒன்று புரியாமல் இருந்தது.

"ஜிலேப்பி.. இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?" என்று ஒரு இயந்திரமிடம் கேட்டான் மதன்.

" இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இனிப்பு வகை உணவு. அதை எப்படி செய்வது என்ற குறிப்புகள் என் டேடா பேஸ்ஸில் இல்லை. " என்றது இயந்திரம்.

" பரவாயில்லை” என்று இயந்திரமிடம் கூறிவிட்டு “என்ன பாட்டிம்மா.. இனிப்பு வேணும்மா..." என்று கூறி இரண்டு மாத்திரை நீட்டினான் மதன்.

"என்னது இது...?" வினாவினேன்.

"இனிப்பு மாத்திரை" என்றான்.

"ஐயோ.... எனக்கு ஒரே குழப்பமா இருக்கே....." என்று தலையில் கை வைத்துக் கொண்டேன்.
முதுமையில் மறதி சகஜம் தான். ஆனால், என் கணவரின் மரணம், எனக்கு பிறந்த குழந்தைகள், பேரன், பேத்திகள் என்று எல்லோரையுமே மறந்து விட்டேன்.

‘நூற்றி இருபது’ வயதில் நான் வாழ்வதே அதிசயம் என்ற போது, இவர்கள் மறந்தது பெரிதாக தெரியவில்லை. என்னை ஆராய்ச்சிக்கு தத்து கொடுத்தவர்களை நினைவில் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறேன். என் கணவர் சேகரின் மரணத்தை மறந்ததை தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அப்பா சொன்ன சில வார்த்தைகள் காதோரம் ஒலித்துக் கொண்டு இருந்தது " கனவு மனுஷனோட கற்பனை குதிரை. அத மனுஷன் தான் கட்டி வைக்கனும். மருந்து, மாத்திரை கிட்ட அந்த பொறுப்ப கொடுத்த நம்ப மனசே நம்ப பேச்ச கேட்காது..."

இங்கு ‘முட்டாள்’ மதன் கனவை மிஷின் மூலம் தடுக்க பார்க்கிறேன் என்று நினைத்தேன். இருப்பத்தி ஓறாம் நூற்றாண்டில் படித்த சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அதை விட மிகையாகவே நேரில் பார்க்கிறேன். தூக்கம் கண்களில் குடிப்புக தொடங்கியது. கனவு மெல்ல மெல்ல என் தூக்கத்திற்குள் நுழைந்தது.

சேகர் என்னை நோக்கி வருகிறார். அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தார். நான் சேகரை ஆசையோடு அனைத்துக் கொண்டேன். இருவரும் இன்ப உலகத்திற்கு சென்றோம்.

என் கனவில் சல்லாபம் செய்வதை ‘முட்டாள்’ மதன் கேட்டுக் கொண்டு இருந்தான்.

----

அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டிக்காக எழுதியது. போட்டி முடிவு வழக்கம் போல் உத்திக்கிச்சு...

Monday, March 2, 2009

ரைட் சகோதரர்கள்

வானத்தில் பறக்க வேண்டும். வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. இந்த ஆசைகள் எத்தனை பேருக்கு நிறைவேறி இருக்கிறது? பலருக்கும் அந்த ஆசைகள் காற்றாகப் போய்விட்டது. அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. ஏனென்றால் பலரும் தங்கள் ஆசையைச் செயல்படுத்த, வாழ்க்கையில் முன்னேற்றமடைய, முயற்சிகள் எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் ரைட் சகோதரர்கள் பறக்க நினைத்தார்கள். பறந்தார்கள், பலரையும் பறக்க வைத்து விட்டார்கள்.

மில்டன் ரைட் தன் குழந்தைகள் விளையாட வாங்கி வந்த பறக்கும் பொம்மை, அவருடைய குழந்தைகளில் வில்பர் ரைட் மற்றும் ஆர்வில் ரைட் ஆகிய இருவரிடத்திலும் வானில் பறக்கும் புதிய விசையைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தோற்றுவிக்க அந்த முயற்சியில் இறங்கினர். அவர்கள் முயற்சியில் எத்தனையோ தடைகள் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் மாற்றி தங்கள் ஆர்வத்தை விடாமல் தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டேயிருந்தனர்.

வாழ்க்கையை ஓட்டத் தேவையான பணத்திற்கு அவர்கள் பழைய சைக்கிள்களை வாங்கி புதிய சைக்கிள்களாக மாற்றும் சைக்கிள் மெக்கானிக்குகளாக பணிபுரிந்தாலும் பறக்கும் பொருளை உருவாக்கும் எண்ணத்திலிருந்து கீழிறங்காமல், கல்யாணம் எதுவும் முடித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். இவர்களின் எண்ணத்திற்கு உறுதுணையாக இவர்களின் சகோதரி காத்ரீன் ரைட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் உதவி வந்தார்.கடைசியில் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பிரான்ஸில் இருக்கும் "வி மென்ஸ்" என்ற இடத்தில் வில்பர் ரைட் சகோதரர்கள் தயாரித்த விமானத்தில் நாற்பத்தைந்து வினாடிகள் வானில் பறந்து காட்டினார். அதன் பிறகு ரைட் சகோதரர்கள் 1909-ல் ரைட் கம்பெனி என்ற பெயரில் விமானம் தயாரிக்கும் கம்பெனியைத் துவக்கினர். இக்கம்பெனியில் விமானம் தயாரிக்க துவக்கத்தில் இருந்து உதவி வந்த சார்லி டைலரைக் கவுரவப்படுத்தும் விதமாக முக்கியப் பொறுப்பு கொடுத்து அளவுக்கு அதிகமான சம்பளமும் கொடுத்து வந்தார்கள். இப்போதெல்லாம் காரியம் முடிந்ததா அவனைக் கழற்றிவிடு என்றிருக்கும் நிலையில் ரைட் சகோதரர்கள் பழசை மறக்காத உத்தமர்கள்தான்.

இந்த உத்தம சகோதரர்களை ரைட் சகோதரர்கள் எனும் தலைப்பில் குகன் எழுதியிருக்கிறார். இந்த நூலை சென்னை, Prodigy வெளியிட்டிருக்கிறது. தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலைத் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் தங்கள் நூலகங்களுக்கு வாங்கி ரைட் சகோதரர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

நூலை வாங்க...

கிழக்கு பதிப்பகம்
- Prodigy வெளியீடு -
(Prodigy, An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நன்றி : முத்துகமலம்.காம்

Sunday, March 1, 2009

என்னால தாங்க முடியலே சார்...!

"சீக்கிரம் வாம்மா பார்கவி.... ரெயில் கிளம்பப் போகுது..." - தன் மனைவியை அவரப்படுத்திக் கொண்டே விரைந்தான் சினிவாசன்.

"குழந்தைய வாங்கிக்கோங்க... என்னால வேகமா நடக்க முடியல..." - குழந்தையை நீட்டினாள் பார்கவி.

"வாடா செல்லம்... நாம போவோம்... இந்த அம்மா வேண்டாம்..." என்று கூறியபடி தன் குழந்தையை வாங்கினான்.

வெள்ளிக்கிழமை என்றால் எழும்பூர் ரெயில்வே நிலையத்தின் கூட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இரண்டு நாள் விடுமுறை என்றாலே ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது. புத்தாண்டு விடுமுறை வேறு... எழும்பூர் நிலையம் முழுக்க வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வாங்கி பலர் காத்துக் கொண்டு இருந்தனர்.

நல்ல வேளை சீனிவாசனுக்கு கடைசி நிமிடத்தில் டிக்கேட் கன்ஃபார்ம் ஆனது. சேர்ந்து கிடைத்த இந்த நான்கு நாள் லீவை திருச்சியில் இருக்கும் தன் பெற்றோர்களுடன் கழிக்க தன் மனைவி, குழுந்தையுடன் செல்கிறான்.

ராக்போர்ட் ட்ரெயின் புறப்படும் நேரத்தில் சீனிவாசன், பார்கவி ரயிலை பிடித்தனர்.

"பார்கவி ! கோச் நம்பர் எஸ்-10 தானே...சீட் நம்பர் என்ன...?"

"கோச் நம்பர் எஸ்-10 தான் கொஞ்சம் இருங்க... டிக்கெட்டைப் பார்த்து சீட் நம்பரைப் சொல்றேன்..." என்றபடி தன் பையில் இருந்து டிக்கெட்டை எடுத்து, " 51, 52...ங்க " - என்றாள்.

கோச் நம்பர் எஸ்-10க்குள் ஏறி தங்கள் சீட்டை சரிபார்த்தபடி இருவரும் அமர்ந்தனர். குழந்தை அம்மாகிட்ட போக வேண்டும் என்பது போல் கையை அம்மாவை நோக்கிக் காண்பித்ததால் பார்கவியிடம் குழந்தையைக் கொடுத்தான்.

பின்பு தங்கள் சீட்டுக்கு அடியில் தாங்கள் கொண்டு வந்த பேக்குகளைப் பத்திரப்படுத்தினான்.

இவர்கள் இருந்த சீட்டிற்கு எதிர்புறத்தில் ஒரு முதியவரும் இருந்தார். அவருக்கு அனேகமாக அறுபது வயதிருக்கும்.

"சார், நீங்க எங்க இறங்குவீங்க....?" - என்றான் சினிவாசன்.

"நான் ஸ்ரீ ரங்கத்துல இறங்கனும் தம்பி... நீங்க...?" - என்றார் முதியவர்.

"நான் திருச்சி ஜங்ஷன்ல இறங்குவேன். நீங்க இறங்கும் போது நாங்க தூங்கிட்டு இருந்தா... எங்கள எழுப்புறீங்களா..."

"கண்டிப்பா எழுப்புறேன்... உங்க பெர் என்ன...?" - என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

"சீனிவாசன்... நீங்க..." -

"என் பெயர் நாராயணன். ரிட்டையர்டு BHEL எம்பிலாயி..." - பெருமையுடன் கூறினார் நாராயணன்.

இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில், பார்கவி தன் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது சினிவாசன் கையில் இருந்த நாளிதழை வாங்கி நாராயணன் படித்தார்.

"இன்னைக்கு எல்லா பேப்பர்லையும் ஒக்கேனக்கல் பிரச்சனை தான்... இந்த சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருந்து நல்ல பப்ளிசிட்டி தேடிக்கிறாங்க.."

சீனிவாசன் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். ஆனால், நாராயணன் சும்மா இருக்கவில்லை.

"இந்த சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருந்தா காவேரி, ஒக்கேனக்கல் பிரச்சனை தீர்ந்திடுமா... தண்ணி இல்லைன்னா தண்ணி இருக்குற ஊராகப் பார்த்து போக வேண்டியது தானே.... என்ன சார் நான் சொல்லுறது..." - என்று அவரது கருத்துக்கு சீனிவாசனிடம் ஆதரவு தேடினார்.

அந்தப் பெரியவரின் கருத்து தவறாகத் தோன்றவே சீனிவாசன் அமைதியாக இருக்க விரும்பவில்லை. நாராயணன் மீது கோபத்துடன் பேசினான்.

"சினிமாக்காரங்க உண்ணாவிரதம் இருக்குறது அவங்க எதிர்ப்பைக் காட்ட... பப்ளிசிட்டிகாக இல்ல. முதல்ல அத தெரிஞ்சிக்கோங்க. தமிழ் நாட்டுல இருந்துகிட்டு, தமிழ்நாட்டுச் சாப்பாடு சாப்பிட்டு தமிழன் அடிவாங்குறத பார்த்து நமக்குத்தான் ரோஷம் வரல. அவங்களாச்சும் தமிழ் உணர்வோட இருக்காங்களேன்னு... சந்தோஷப்படுங்க சார்"

"தம்பி நான் என்னோட அபிப்ராயத்த சொன்னேன்...அதுக்கு ஏன் இப்படிக் கோபப்படுறீங்க...?"

"எது அபிப்ராயம்...? தண்ணி இல்லைனா தண்ணி இருக்குற ஊரைப் பார்த்து போகறதா... இங்க தான் ! நாம பொறந்தோம்...இங்கதான் வாழ்ந்தோம்... இது நம்ம ஊருங்கிற உணர்வு வரனும்... அந்த உணர்வு இல்லாம உங்கள மாதிரி இருந்தா... கர்நாடகா, கேரளா, ஆந்திரா இப்படி எல்லாரும் தமிழனை மட்டம் தட்டுவாங்க... கன்னடக்காரனுக்கு மொழி வெறி இருக்கும் போது... நமக்கு தமிழ் உணர்வாவது இருக்க வேண்டாமா...?" மேலும் கோபத்துடன் பேசினான் சீனிவாசன்.

"பயங்கற தமிழ் வெறியனா இருப்பான் போல " என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு நாராயணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

ரயில் விழுப்புரம் வந்து அடைந்திருந்தது. அந்த ரயில் நிலையத்தில் ஐந்து நிமிடங்களாவது நிற்கும் ஏதாவது சாப்பிடுவதற்கு வாங்கலாம் என்று நினைத்தான்

அப்போதுதான் அவனின் மொபைல் ஒலித்தது. தன் மோபைலை எடுத்துப் பேசினான்...

"ஹலோ... செப்பும்மா. இப்புடு விழுப்புரம்ல வுண்டா... இக்க ட்ரெயின் வொச்சேதானிக்கு இரண்டு கென்ட சேப்பு அவுனும்..." என்றான் சீனிவாசன்.

சீனிவாசன் சரியாக சிக்னல் கிடைக்காமல் மெதுவா அந்த இடத்தை விட்டு நகர்ந்து போயிருந்தாலும் சற்று உரக்க கத்தியதில் அவனுடைய பேச்சு நாராயணன் காதில் விழுந்தது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மெதுவாக நகர்ந்த போதுதான் அவன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.

நாராயணன் சற்று தயக்கத்துடன் கேட்டார், " சார்... நீங்க தெலுங்கா...?"

"ஆமாம்... சீனிவாச ராவ்..." என்றான்.

"தெலுங்கா இருக்கீங்க.... தமிழனப் பத்தி தப்பாச் சொன்னா உங்களுக்கு அதிகமாக் கோபம் வருதே...?" - என்றார் மெதுவாக.

"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே... இந்தத் தமிழ்நாட்டுலதான். தமிழ் நாட்டில சாப்பிட்ட சோறு என் உடம்புல இரத்தமா ஓடுது... அந்த நன்றி உணர்ச்சி பல தலைமுறையா இங்கேயே வாழ்ந்த தமிழனுக்கு இல்லாததுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்... இதுக்காக கன்னடமொழி பேசுறவங்களோ இல்லை வேறு மொழி பேசுறவங்களோ எனக்கு எதிரிகளில்லை... நாமெல்லோரும் இந்தியர்கள்தான். மொழி வழியில் பாகுபாடுகளிருக்கலாம். அதே சமயம் ஒரே நாட்டுக்குள்ள எந்தப் பாகுபாடுமில்லாமல் ஓடி வருகிற நதியை மொழியாலும், ஒரு சில அரசியல் லாபத்துக்காகவும் பிரித்தாளும் நிலையை என்னால தாங்க முடியலே சார்..." என்றான் சீனிவாசன்.

"யோசித்துப் பார்த்தால் நீங்க சொல்றது சரின்னுதான் படுது..."என்று சொன்னபடி நாராயணன் தூங்கிப் போனார்.

ஆனால் அதற்குப் பின்பு சீனிவாசனுக்குத் தூக்கம் வரவேயில்லை.

ரயில் ஸ்ரீ ரங்கம் வந்திருந்தது.

சீனிவாசன் நாராயணனை எழுப்பி, "சார் ஸ்ரீ ரங்கம் ஸ்டேசன் வந்துடுச்சு" என்றான்.

"சரியான சமயத்தில என்னை எழுப்பி விட்டுட்டீங்க...ரொம்ப நன்றி தம்பி..." என்றபடி ஸ்ரீ ரங்கம் ஸ்டேஷனில் இறங்கினார் அந்தப் பெரியவர் நாராயணன்.


நன்றி : முத்துகமலம்.காம்

LinkWithin

Related Posts with Thumbnails