வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 29, 2013

சாயாவனம் - சா.கந்தசாமி

ஒரு படைப்பு காலம் கடந்து நிற்கும் என்பதற்கு இந்த படைப்பு ஒரு உதாரணம். சுமார் நாற்பது வ்ருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நாவல், இன்றைய காலக்கட்டத்தில் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

விஞ்ஞானிக்கு பிறகு நடக்கப்பதை கணித்து சொல்பவன் படைப்பாளியாக தான் இருக்க முடியும். விஞ்ஞானி கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கணித்து சொல்கிறான். ஆனால், ஒரு படைப்பாளி மனிதர்களை வைத்து எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க கூடும் என்ற சாத்தியங்களை முன்பே கணித்து எழுதுகிறான். அந்த காலக்கட்டத்தில் வாசிக்கும் போது ஒரு கற்பனை கதையாய் தெரியலாம். ஆனால், அந்த சம்பவம் நிகழும் போது எப்படி இவர் முன்பே கணித்து இருக்கிறார் என்பது எல்லோரையும் வியக்க வைக்கும்.


'சாயாவனம்' - அந்த வகையில் சேர்ந்த நாவல்.

ஒரு மனிதன் வனத்தை அழித்த கதையை, நாற்பது ஐந்து  ருடங்கள் முன்பே எழுதப்பட்டிருக்கிறது. இன்று மனிதன் தனது சுயநலத்திற்காக எத்தனையோ மரங்களை, செடி கொடிகளை வெட்டி சாய்ப்பதற்கு நவீன கருவிகளை கண்டுபிடித்திருக்கிறான். ஆனால், நாற்பது ஐந்து வருடங்கள் முன்பு கோடாளி, அருவாள் மட்டுமே நம்பி வனத்தை அழிக்கும் காட்சியை கண் முன்னே கொண்டு வருகிறார்.

சக்கரை ஆலை தொடங்குவடற்காக சாயாவனத்தின் மரங்களை அழிக்கும் வேலையில் ஈடுப்படுகிறான் சிதம்பரம். அவனுக்கு உதவியாக அந்த ஊரில் தேவர் நட்பு கிடைக்கிறது. தனக்கு வேலை ஆக வேண்டும் என்பதற்காக தேவரின் அக்கா மகன் என்ற போர்வையில் சிதம்பரம் வருகிறான். தனது வனத்தில் வேலை செய்ய வெளியூரில் இருந்து ஆட்கள் கொண்டு வராமல், ஐயர் பண்ணையில் வேலை செய்பவர்களை வைத்து வேலையை முடிக்கிறான்.

முங்கில் மரங்களை வெட்ட காலத்தை குறைக்க, முங்கில் காட்டை எரிக்கிறான். அதற்கு, தேவரும் உதவி செய்கிறார். 'கறும்பு இந்த நிலத்தில் விளையாது' என்று ஆரம்பத்தில் ஒரு சிலர் சொல்லுவதை புரக்கணித்து, சக்கரை ஆலைக்காக வனம் அழிக்கப்படுகிறது. ஆனால், அந்த சக்கரை ஆலைக்காக கறும்பு கொண்டு வர நடை முறை சிக்களை சந்திக்கிறான். 

மனிதனுக்கும், மரத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் மனிதன் தான் வெல்கிறான். ஆனால், மரம் இறுதிவரை போராடி மனிதனை தோற்கடிக்க விரும்புகிறது. மரம் மனிதனை எளிதாக வெற்றிப் பெற செய்வதில்லை என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது.

சாகித்திய விருது பெற்ற சா.கந்தசாமி அவர்களின் 'முதல் நாவல்' என்பது குறிப்பிடதக்கது.


வாங்க....

சாயாவனம்

சா.கந்தசாமி
காலச்சுவடு  பதிப்பகம்
ரூ.150


Tuesday, May 28, 2013

ஹைக்கூ கவிதைகள் - 13

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
சதுரங்கங்கத்தில் !

**

ஊழலை ஒழிக்க
மக்கள் தற்கொலை
முந்தைய ஆட்சிக்கு ஓட்டு !!

**

குடும்பங்கள்
காந்தி வழியில்
பிரச்சனைக்கு உண்ணாவிரதம் !!

**

சமூகத்தில்
அங்கிகரிக்கப்படாத விதவை
முதிர்கன்னி !

**

என்னோடு இருந்தும்
என்னை தனிமையாக்கி விடுகிறாய்
செல்போன் உரையாடலில் !

Friday, May 24, 2013

ஹைக்கூ கவிதைகள் - 12

கூடாங்குளம்
ஒரு அரசியல்வாதியை உருவாக்கியது
அப்துல் கலாம் !

**

கூடாங்குளம்
ஒரு தலைவனை உருவாக்கியது
உதயகுமார் !

**

இருபதாம் நூற்றாண்டின்
ராஜபக்சே
ஹிட்லர் ! 

**
இருப்பதியன்றாம் நூற்றாண்டின்
ஹிட்லர்
ராஜபக்சே !

**
இரண்டு நாடுகள் ஆடும்
டென்னிஸ் பந்து
அகதி !

**
இன்றைய தேவை
இஸ்லாம் மதத்தில்
பெரியார்.

**
பல புத்தகங்களை படித்த
மனநிறைவு
பெரியாரின் பேச்சு !

Thursday, May 23, 2013

இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?

தமிழர்கள் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால்  "இராஜீவ் காந்தி படுகொலை" என்று எளிதில் பதிலளித்துவிடுவோம். அதேப் போல், சீக்கியர் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால் "இந்திரா காந்தியின் படுகொலை" என்று தான் சொல்ல வேண்டும்.எண்பதுகளில், தொன்னூறு தொடக்கத்தில் ஆப்கானில் அமெரிக்கா இஸ்லாமியதீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டு இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தான் சீக்கிய தீவிரவாதத்தை இந்தியாவில் வளர்த்து வந்தது. பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதற்காகவும், தங்கள் தலைவரைக் கொன்றதற்காகவும், இரண்டு சீக்கியர்கள் இந்திரா காந்தியை கொலை செய்தனர்.ஆனால், அதன் பின்னால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ இருக்கிறது என்று இந்த நூல் சொல்கிறது.

இந்திரா காந்தி மீது என்ன விமர்சனங்கள் இருந்தாலும், இந்திய இறையாண்மையை அமெரிக்காவுக்கு தலைவனங்காமல் பாதுகாத்தவர். அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் சோவித்துடன் கைகோர்த்தவர். இந்தியா பாகிஸ்தான் அணு உலை சோதனையை தடுக்க திட்டமிடுவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. ஒரு வேலை இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், சோவியத்துக்கு எதிராக ஆப்கானுக்கு உதவ தங்களால் முடியாமல் போகுமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறார்கள்.

ஆப்கான் போராட்டம் பாதிக்கப்பட்டால், சோவியத் கை மேலோங்கும். அதனால்,சீக்கியர்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் அந்நிய சக்திகள் தங்களுக்கு சாதகமாகபயன்படுத்தி கொன்றார்கள் என்கிறது இந்த நூல்.

விறுப்பு விறுப்பு நிறைந்த நாவல் போலவே எழுதியிருக்கிறார் தாரிக் அலி. இடையே , இந்திராகாந்தியின் பகடி செய்வது போல் வசனங்களும் எழுதியிருக்கிறார்.

இன்று, அமெரிக்காவுக்கு அடிவருடும் இந்தியா, முப்பது வருடங்கள் முன்பு அமெரிக்கா,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை எதிர்த்து போராடி இந்தியாவை நிமிர செய்த ஒரு இரும்பு பெண்மணி மரணத்தை திரை வடிவமாக காட்டுகிறார் இந்த நூலின் ஆசிரியர்.


நூலை வாங்க.....

இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?
தாரிக் அலி
மதுரை பிரஸ்
ரூ.160.

Monday, May 20, 2013

இரண்டு நூல் விமர்சனம்

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
கோபிநாத் 

சுயமுன்னேற்ற புத்தகங்கள் படிப்பதற்கு சரியான நேரம் வேண்டும், அதற்கான மனநிலையில் படிக்க வேண்டும் என்று சமீபத்திய கடலூர் பயணம் உணர்த்தியது. கடலூருக்கு சென்று ஒரு நாள் வீணாக்கிவிட்டோமோ என்ற மனநிலையில் தான் “ ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!” படித்தேன்.

இந்த உலகம் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. நாம் தான் எவ்வேறு கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து ஸ்வாரஸ்யமாக்கி கொள்ள வேண்டும் என்ற சிந்தனை பிடித்திருந்தது. குறிப்பாக, கோபியின் நண்பர் தாமஸ் “தினமும் செல்லும் பாதை இருந்து வேறு பாதையில் அலுவலகத்துக்கு சென்று பாருங்கள்” என்று சொல்லும் போது… சின்ன சின்ன விஷயங்கள் நம்மை ஸ்வாரய்மாக்க காத்துக் கொண்டு இருக்கிறது. பிறகு, ஏன் ஸ்வாரஸ்யம் இல்லை என்று வருந்த வேண்டும்.

“ஒன்றுமே செய்யாமல் ஒரு நாள் வீணாக்கி விட்டோமே!” என்று வருந்திய நேரத்தில் உருப்படியாக செய்தது இந்த புத்தகத்தை வாசித்தது தான். 

வாங்க.... 

 ***

அபிதா – 
லா.ச.ரா 

 தனது பழைய காதலி சகுந்தலை அழகை உரித்து வைத்தது போலவே அவளது மகள் ‘அபிதா’ இருக்கிறாள். மகள் வயதில் இருக்கும். ஆனால், மகளாக நினைக்க தோன்றவில்லை. காதலியின் மகளாக இருந்தாலும், அவளைப் போலவே இருப்பவளை எப்படி மகளாக பார்க்க முடியும் ?. காதலா ? காமமா ? என்று ஒன்றும் புரியாத உறவின் வெளிப்பாடு. காதலியிடம் பேச முடியாத வார்த்தைகளை அவள் மகள் உருவத்தில் இருப்பவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை.

இப்படி விபரித ஆசைகளுடன் வீட்டுக்கு விருந்தினராக வந்தவனை வெகுளிதனமாக உபசரிக்கிறாள் அபிதா. ஒரு கட்டத்தில் தான் காதலித்தது சகுந்தலையா ? அவளது மகள் அபிதாவா ? என்ற சந்தேகிறது மனம்.

தமிழில் வாசிக்க வேண்டிய நாவல் வரிசையில் ‘அபிதா’ வுக்கு மிக முக்கிய இடம் உண்டு. இலக்கிய ஆர்வமுடையவர்கள் கண்டிப்பாக இந்த நாவலை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்.

வாங்க....

Thursday, May 16, 2013

RAW (7) : காலிஸ்தான் - சீக்கியர்களின் கனவு தேசம்

“கோபம் என்பது இருளாய்யும். அழிவையும் பிரயோகிப்பவர் மீதே திரும்பச் செலுத்தும் ! தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்."
-குருநானக் தேல், ராக் கான்ரா, 1299

“பஞ்சாப் இந்தியாவின் உணவுக் களஞ்சியம்” என்று பெயர் பெற்ற மாநிலம். வடமேற்குப் பகுதியில் இருக்கும் பஞ்சாப்பில் ஒரு மாதம் விளைவதை ஒரு வருடம் இந்தியர்கள் சாப்பிடலாம் என்று சொல்லும் அளவிற்கு விவசாயத்தில் அவர்களது உழைப்பு இருந்தது. தெற்கே ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களும், கிழக்கே உத்தராஞ்சலும், வடக்கே ஜம்மு மற்றும் காஷ்மீரும், மேற்கே பாகிஸ்தானும் உள்ளது.

உணவுக்கு மட்டுமல்ல, அவர்கள்து வீரமும் உலகறிந்தது. அந்த வீரமும், அவர்களது கோபமும் இந்தியாவுக்கு எதிராக திரும்பும் போது தான், இந்திய பாதுகாப்புக்கு சவாலானது. இன்று, இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்தியா எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு என்பதுகளிலும், தொன்னூறு தொடத்திலும் சீக்கிய தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டது. இந்தியாவை எதிர்த்து பேசும் சீக்கியனை ‘காலிஸ்தான் போராளி’ என்ற சந்தேகத்துடன் பார்த்தது.

‘காலிஸ்தான்’ சீக்கியர்களின் கனவு தேசம். காலிஸ்தான் என்றால் தூய்மையின் தேசம் என்று பொருள். சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப்பை ‘காலிஸ்தான்’ என்று தனி நாடாக பிரித்து தர வேண்டும் என்பது தான் காலிஸ்தான் போராளிகள் கோரிக்கை.

இந்திய அரசாங்கம் இவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவோ, உரிமைகளை மறுக்கும் அளவிற்கு நடந்துக் கொண்டதில்லை. இந்திய பாதுகாப்பும் முக்கிய பங்காக இராணுவம், ராவில் சீக்கிய கணிசமானவர்கள் பணிபுரிகிறார்கள். அப்படி இருந்தும் இவர்களுக்கு ‘தனி நாடு’ கோரிக்கை எப்படி தோன்றியது ?

1909ல் ஹிந்து – முஸ்லீம் மத அடிப்படையில் தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டும் போதே லேசாக சீக்கியர்களுக்கு ‘தனி தொகுதி’ என்ற எண்ணம் தோன்றியது. 1944ல் ஜின்னாவுடன் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியாவின் வட மேற்கில் ( பஞ்சாப்) மற்றும் வடகிழக்கில் முஸ்லிம்கள் வாழும் பகுதி, சுதந்திரத்திற்கு பிறகு மக்கள் விருப்படி தனிநாடாகவோ அல்லது இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவித்தனர். அப்போது, ‘ஆஸாத் பஞ்சாப்’ என்ற தனி நாடு வேண்டுமென்று அகாலி தள் தலைவர் தாரா சிங் அறிக்கை விட்டார். 1946 ஜூலையில், ‘இந்தியாவின் வடக்குப் பகுதியில் சீக்கியர்கள் சுதந்திரத்தை அனுபவிக்க ஒரு தனி பகுதி ஒதுக்கப்படும்’ என்று நேரு உறுதி அளித்தார். ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை யுத்தம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள் என்று ஒரு லட்சம் பேர் இறந்தார்கள். அந்த சமயத்தில் சீக்கியர்களுக்கு தனி தேசம் அவர்களுக்கும், இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்காது என்று கைவிடப்பட்டது. அது அகாலி தளத்தினருக்கு அதிருப்தியாக இருந்தது.

பஞ்சாப்பில் நடந்த பொது தேர்தலில் 1952, 57, 62 ல் காங்கிரஸ் தான் வெற்றிப் பெற்றது. அதுமட்டுமில்லாமல், ‘தனி தேசம்’ கேட்கும் அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்படும் என்று நேரு அறிவித்திருந்தார் (தென்னகத்தில், ‘திராவிட நாடு’ என்ற கோரிக்கை இதனால் கைவிடப்பட்டது). இதனால், ‘பஞ்சாபி சுபா’ என்ற தனி மாநில கோரிக்கையை முன் வைத்தனர்.

1966ல் இந்திரா காந்தி பிரதமரானதும் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ் என்று மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, ‘பஞ்சாபி சுபா’ கோரிக்கை வெற்றிப் பெற்றது. அதன் பின் அங்கு நடந்த தேர்தலில் அகாலி தள் தலைமையிலான கூட்டனி தான் வெற்றிப் பெற்றது. ஆனால், அவர்களால் முழுமையாக ஆட்சி செய்ய முடியவில்லை.அகாலி தளத்தினரை ஒடுக்க பிந்த்ரன்வாலே என்ற தீவிர சீக்கிய மதவாதியை காங்கிரஸ் பயன்படுத்த நினைத்தது. சீக்கிய மத போதகர். சீக்கியர்களின் மறுமலர்ச்சிக்கு காரணமாக கருதப்பட்டவர் தான் பிந்த்ரன்வாலே. இவர் காலிஸ்தான் கொள்கையை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவுமில்லை. .அதுமட்டுமில்லாமல் இவர் அகாலி தளத்தினத்தின் செயல்பாடுகளோடு ஒத்துப்போகவில்லை.

காங்கிரஸ் ஆதரவாக 1980ல் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அகாலி தள் தங்கள் செல்வாக்கை உயர்த்த நினைத்து செயல்பட்டது எல்லாம் தோல்வியில் முடிந்தது. பிந்த்ரன்வாலே ஆதரவாளர்கள் அவர்களை ஏளனமாக பார்த்தனர். 

இருவருமே பொற்கோயிலை மையமாகக் கொண்டு அரசியலில் ஈடுப்பட்டனர். ‘யார் பெரியவன்’ என்று இவர்களுக்குள் நடந்த சண்டையில் பல வன்முறை சம்பவங்கள் நடந்தது. இதில், பிந்த்ரன்வாலே செல்வாக்கு உயர்ந்தது. பின்னாளில், தன் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள பிந்த்ரன்வாலே 'காலிஸ்தான்' கொள்கை கையில் எடுக்க வேண்டியதாக இருந்தது.

சீக்கியர்களில் ஒரு பிரிவாக நிரங்காய்கள் தங்களின் மதகுரு பிறந்த நாளை கொண்டாடும் போது பிந்த்ரன்வாலே தனது ஆதரவாளர்களுடன் அவர் மீது தாக்குதல் நடத்தினார். சீக்கிய தீவிரவாதத்தின் முதல் தாக்குதல் என்று அப்போது தெரியவில்லை. அதன் பின், பல வன்முறைகள் பிந்த்ரன்வாலே ஆதரவாளர் ஈடுப்பட்டனர். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், பிந்த்ரன்வாலே எதிராக எழுதிய லாலா ஜெகத் ( பஞ்சாப் கேசரி ஆசிரியர்) அவரது ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டது, அவரை கைது செய்ய வேண்டியதாக இருந்தது. 

பிந்த்ரன்வாலே செப்டம்பர் 20ம் தேதி ஒரு மணிக்கு சரணடைவதாக கூறினார். கைதாகவதற்கு முன் ஒரு மதக்கூட்டத்தை நடத்தவும் அனுமதி கேட்டார். அவரது கோரிக்கை ஏற்க்கப்பட்டது. அவர் கூறிய நேரத்தில் போலீஸ் கைது செய்ய சென்ற போது, அவரது ஆதரவாளர்கள் கையில் துப்பாக்கி, வாள், ஈட்டி என்று பல ஆயுதங்களுடன் திரண்டு இருந்தனர். போலீஸ் பிந்த்ரன்வாலே ஆதரவாளர்களை தாக்க தொடங்க, அங்கு பெரிய கலவரம் வெத்தது. இதில் 11 காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.

அன்று மாலையே ஜலந்தர் மார்கெட்டில் மூன்று ஹிந்துக்கள் சீக்கியர்களால் கொல்லப்பட்டார்கள். கைதான பிந்த்ரன்வாலேவும் சிறைசாலையில் அடைக்காமல் அரசு மாளிகையில் வைக்கப்பட்டார். அடுத்த 25 நாள்களில் பல வன்முறைகள் சம்பவங்கள் நடந்தது. செப்டர் 29ல் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு பிந்த்ரன்வாலேவை விடுதலை செய்ய மிரட்டல் விடுத்தனர்.

அக்டோபர் 15 அன்று , பிந்த்ரன்வாலே விடுதலை செய்யப்பட்டார். லாலாஜி கொலை வழக்கில் பிந்த்ரன்வாலேவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அப்போதைய உள்துறை அமைச்சர் ஜையில் சிங் தெரிவித்தார். பிந்த்ரன்வாலே இந்தியாவுக்கு பெரிய அச்சுருத்தலாக இருப்பார் என்பது அப்போது தெரியாமல் போனது.

மேம்போக்காக பார்த்தால், உள்துறை விவகாரமாக தான் தெரியும். சீக்கியர்கள் என்ற மதவாதிகள் செய்ய வன்முறை தாக்குதல். போலீஸ், சிபிஐ அதிகப்படியாக ஐ.பி அமைப்பு கவனிக்க வேண்டும். இதில் பெரிய அளவில் அச்சுருத்தல் இல்லை என்ற தோன்றும். ஆனால், ரா இவர்களை உளவு பார்க்க வேண்டிய அவசியமாக இருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் வலுவாக இருந்தது.

1947ல் இந்திய பிரிவினைப் போது சீக்கியர்கள் பலர் வெளிநாடுகளில் குடியெறினர். குறிப்பாக, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பல சீக்கியர்கள் சென்றனர். அங்கு பணியாற்றுபவர்கள் சந்தித்த மிக பெரிய சவால் தாடியை மழிக்க வேண்டும் மற்றும் டர்பன் அணியக் கூடாது என்று இருந்தது. குறிப்பாக, பிரிட்டன் போக்குவரத்து நிறுவனத்தில் இப்படி வற்புறுத்தினர். இந்திய தூதரகத்திடம் முறையிட்ட போது, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்கு இந்தியா தலையிடுவதில்லை என்றது.

வெளிநாட்டில் வாழும் யூத மக்களின் மத உணர்வுகளுக்கு குறுக்கிட்டு வந்தால், இஸ்ரேல் அந்த நாட்டோடு பேசி பிரச்சனை தீர்க்கும். ஆனால், இந்தியா அப்படி நடந்துக் கொள்ளவில்லை என்பது சீக்கியர்களுக்கு வருத்தம் தந்தது. யூத மத நம்பிக்கை தார்மீக பொறுப்பு ஏற்க்கும் இஸ்ரேல், இந்தியா தங்கள் மத நம்பிக்கையை மதிக்கவில்லை என்று நினைத்தனர்.

 பாகிஸ்தானில் உள்ள 'நான்கானா சாஹிப் குருத்வாரா' போன்ற சீக்கியப் புனிதத் தலங்களுக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் சீக்கியர்கள் சென்று வர இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றனர். ஆனால், இந்தியா பேச்சு வார்த்தை நடத்த தயக்கம் காட்டியது. இதனால், காலிஸ்தான் என்ற தனி தேச பிரச்சாரத்தை வெளிநாட்டில் வாழும் சீக்கியர்கள் ஆதரத்தினர். ஆதரவு குரல் மட்டுமில்லாமல் நிதி உதவி செய்தார்கள். இதனை, ரா கவனிக்க வேண்டியதாக இருந்தது.

அடுத்த காரணம், பிந்த்ரன்வாலே பின் இருக்கும் பாகிஸ்தானின் உளவுத்துறையின் ஐ.எஸ்.ஐ ஆதரவு. இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லிம்கலால் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டதை மறந்து, பிந்த்ரன்வாலே பாகிஸ்தானோடு கைகோர்த்துக் கொண்டார்.

முக்தி ஃபௌஜ் என்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்து கிழக்கு பாகிஸ்தானில் இந்தியாவின் ரா என்ன செய்ததோ, பிந்த்ரன்வாலேவைக் கொண்டும், மற்ற சீக்கிய தீவிரவாதிகளைக் கொண்டும் பஞ்சாப்பில் பாகிஸ்தான் செய்ய நினைத்தது. அந்த நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் கே – கே ( காலிஸ்தான் – காஷ்மீர் ) என்று ஐ.எஸ்.ஐ பெயர் வைத்தனர்.

Wednesday, May 8, 2013

RAW (6) : சொந்த விமானத்தை எரித்த இந்தியா -2

 இந்திய – பாகிஸ்தான் பிரிவினை விவாதத்தின் போது ஜின்னாவிடம் கேட்கப்பட்ட கேள்வி, “ இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து தனி தேசம் உருவானால், ஏதேனும் ஒரு முன்றாவது நாடு இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தால், பாகிஸ்தான் இராணுவம் என்ன செய்யும்?” என்று கேட்டனர்.

அதற்கு, ஜின்னா “எதிரிகளைத் தோற்கடிக்க, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவோடு கைகோர்த்து போரிடும்” என்றார். இன்றைய அரசியல் சூழ்நிலை இதற்கு நேர் எதிராக இருக்கிறது. உனக்கு இந்தியாவை பிடிக்காதா, அப்படி என்றால் எனக்கு நீ நண்பன் என்ற தத்துவத்தில் தான் பாகிஸ்தான் நடந்துக் கொள்கிறது.பங்களாதேஷ் தேசத்தை உருவாக்க இந்தியா உதவியது என்பது சரித்திரம் மட்டுமல்ல. ரா என்ற உளவு நிறுவனத்தை உருவாக்கிய வெற்றி என்றும் கூட சொல்லலாம். காரணம், இந்தியா பாகிஸ்தான் என்ற ஒற்றை எதிரியை மட்டும் சமாளிக்கவில்லை. தெற்காசியப் பகுதியில் இந்தியா மாபெரும் சக்தியாக வளர்வதை அனுமதிக்கக் கூடாது என்ற பார்வையில் இருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனுக்கும், சீனா அதிபர் மா சே துங் இடையிலான ரகசிய உறவு அப்போது தான் உதயமானது. இந்த தொடர்புகளுக்கு பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்களும் உதவினார்கள். இந்திய வடகிழக்கு பகுதியில் கலவரத்தை உருவாக்கி இந்திய இராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப சீனா உதவியது. கிழக்கு பாகிஸ்தானில் இந்தியா வன்முறையை தூண்டிவிடுகிறது என்று சர்வதேச அளவில் எதிர்ப்பலைகளும் அமெரிக்கா பரப்பியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்தியா வெற்றிப்பெற்றுயிருக்கிறது.

ஐ.நா சபையில் இந்தியா கிழக்கு பாகிஸ்தானில் வன்முறையை தூண்டிவிடுவதாக அமெரிக்க, சீனா தீர்மானம் கொண்டு வந்தப் போது ரஷ்யா தனது “வீட்டோ” அதிகாரத்தை பயன்படுத்தி அதை முறியடித்து இந்தியாவுக்கு உதவியது. இதனால், அமெரிக்கா இந்தியாவை ரஷ்யாவின் நட்பு தேசமாக பார்த்ததோடு இல்லாமல், இந்தியாவை பற்றின ரகசிய தகவல்களை சேகரிக்க தனது உளவுப்பிரிவையும் பயன்படுத்தியது.

இந்தியாவுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். எந்த உளவு நிறுவனம் நினைத்தாலும் ஒரு தேசத்தை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. தகவலை சேகரிக்க முடியும். அதை செயல்படுத்த வழிகள் வகுக்க முடியும். செயல்படுத்த ரகசியமாக முறைகளை கையாள முடியும். ரா உளவுத்துறையும் அதை தான் செய்தது.

 1971ல் மேற்கு பாகிஸ்தான் எதிராக யுத்தத்தில் ரா கிழக்கு பாகிஸ்தானுக்கு செய்த உதவிகள் :-
1. அரசுக்கும் இராணுவத்திற்கு தகவல்களை சரியான நேரத்தில் கொடுத்தது.
2. வங்கதேசப் போராட்ட வீரர்களுக்கு ரகசியமான பயிற்சி முகாமில் பயிற்சி அளித்தது.
3. மேற்கு பாகிஸ்தானில் பணியாற்றிய வங்க மொழி பேசும் அரசு ஊழியர்களை தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வங்கதேசப் போராட்ட வீரர்களுக்கு உதவுவதாக கூறி ரகசிய தகவல் பெற்றது.
4. கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்படும் வங்காளிகள், இந்தியாவுக்கு அகதிகளாக வெளியேறுபவர்கள் போன்றோர்களை ஊடகத்திற்கு முன் நின்றுத்தி மேற்கு பாகிஸ்தான் எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது.

அதுமட்டுமில்லாமல், மேற்கு – கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையான ரகசிய தகவல் பரிமாற்றத்தை இந்தியாவின் மானிட்டரிங் பிரிவு வெகு சிறப்பாக இடைமறித்து கேட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் தொலைத்தொடர்பில் ஏகப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததால், அவர்கள் பயன்படுத்தும் ரகசிய குறியீடுகள் சர்வ சாதாரணமாக உடைக்கப்பட்டன. இன்னும் சில தகவல்கள் ராவை தேடி வந்துக் கொடுத்தார்கள். தங்களிடம் இருக்கும் தகவலை இந்திய உளவுத்துறைக்கு கொடுப்பது தங்கள் கடமை என்று வங்க தேச மக்கள் முன்வந்தார்கள்.

பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிக்கு கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பங்கு முக்கிய காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. வங்கதேசத்திற்கு விடுதலையை இந்தியா வாங்கித் தந்தது என்று சொல்லுவது தவறு. இந்தியா உதவியது என்று தான் சொல்ல வேண்டும். சுதந்திரமாக இருக்கும் ஆசையும், உறுதியும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு இல்லாவிட்டால் அவர்களால் இதை அடைந்திருக்க முடியாது.

1968ல் உருவான ரா, இரண்டரை வருடத்தில் ரகசிய நடவடிக்கைகளில் திறமைப் பெற்றுவது என்பது குறைவான காலம். இருந்தும் ரா அமைப்பு மிக சிறப்பாக செயல்ப்பட்டது.

அமெரிக்கா, சீனா போன்ற பெரிய நாடுகளின் மறைமுக பகையையும், பாகிஸ்தான் என்ற நேரடி எதிரியை சமாளித்து தான் இந்திய வங்க தேசத்திற்கான போரில் வெற்றிப்பெற்றது.

'பங்களாதேஷ்' என்ற தேசத்தை உருவாக்கியதோடு பிரச்சனை முடிந்ததுவிட வில்லை. அமெரிக்காவின் நிக்ஸன் நிர்வாகத்தின் நல்லாசியுடன் யாஹ்யா இந்தியாவை சிதறடிக்கும் ரகசிய முயற்சியில் இறங்கியது. அதற்கு தோதாக பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் ‘காலிஸ்தான்’ என்ற தனி தேசக் கோரிக்கை இருந்தது.

Tuesday, May 7, 2013

நான் இலக்கியவாதி அல்ல !

ஒரு முறை எழுத்துலக நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன். என்னை தவிர மற்றவர் அனைவரும் இலக்கியவாதிகள். நான் இலக்கிய நூலை வாசிப்பவன். அப்போது “விபச்சாரத்தை” பற்றின பேச்சு வந்தது.

ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம், “நீ எத்தன தடவ போயிருக்க ?” என்று விளையாட்டாக கேட்டார்.

 “நா எதுக்கு போனும், அதை விட சுவையான இலக்கியம் படிக்கிறேனே ! ” என்றார்.

“ நல்ல இலக்கியத்தை விட ஒரு பெண் கொடுக்கும் சுகம் பெருசில்ல… ” என்று விளக்கம் தந்தார்.

ஒரு பெண் கொடுக்கும் சுகம் ஒரு இரவு வரைக்கும் தான். ஆனால், நல்ல இலக்கிய நூல் கொடுக்கும் பாதிப்பு வாழ்நாள் வரை தொடர்ந்து வரும். குறைந்த பட்சம் இரண்டு நாளாவது நம்முள்ளே அந்த பாத்திரங்கள் குடித்தனம் நடத்தும். கதையை மாற்றியமைக்க தோன்றும். சில பாத்திரங்களோடு பேசுவோம். இருந்தாலும், அந்த நண்பர் கொடுத்த விளக்கம் எனக்கு கொஞ்ச நெருடலாக இருந்தது.

“ நீங்க சொல்லுறத எத்துக்குறேன். ஆனா , நீங்க சொல்லுற நல்ல இலக்கியம் ஏதாவது பெண்ண தாங்கி தான் இருக்கு. ஒரு பெண்ணோட உணர்வு, பெண் மேல இருக்குற உணர்வு ஒதுக்கி வச்சி நல்ல இலக்கிய நூல் யாரும் கொடுத்ததில்ல. அப்படி கொடுக்கனும் நினச்சா அது ஆன்மீக புத்தகமா தான் இருக்கும்.” என்றேன்.

“குகன் ! நீங்களும் இலக்கியவாதி வந்துட்டு இருக்கீங்க…” என்றார்.

இலக்கியவாதிகளின் பிரச்சனையே இது தான், ஒருத்தன் நல்ல இருந்தா அவனையும் இலக்கியவாதியாக்கிடுவாங்க…. எஸ்கேப்… !!

LinkWithin

Related Posts with Thumbnails