வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, April 20, 2015

காதல் கபடி !

Note : Inspired from பட்டுக்கோட்டை பிரபாகரின் “முதலாம் காதல் யுத்தம்” (சிறுகதை)


“விஷயம் தெரிஞ்சிடுச்சுல. அவன எப்படியாவது கட் பண்ணிடு” என்று போனின் எதிர்முனையில் குரல் கேட்டது. 

“என்ன.. கொலையா?” ஷாக்கானாள். 

 “கட் பண்ணனுமானா… கழட்டிவிடனும் சொன்னேன். இப்படி டியூப் லைட்டா இருக்க.அதான் அவன் உன் தலைமே நிக்குறான்” 

” சரி டி. “நாம லவ் பண்ண அப்புறம், எதுக்கு அவங்கள தனியா கொலை பண்ணனும்”. 

தனது தோழி இப்படி சொன்னதும் சொப்ணாவுக்கு சிரிப்பு வந்தது. எக்காரணத்திற்காகவும் தினேஷ்யிடம் சிரித்துவிடக் கூடாது என்பது தோழி யோசனை சொல்லியிருந்தாள். 

”சரி ! நா பேசிட்டு உனக்கு கால் பண்ணுறேன்.” என்று போன்னை துண்டித்தாள். சொப்ணாவுக்கு தினேஷ் மேல் கோபமாக இருந்தாள். அவள் தோழியின் யோசனை கேட்டப்பிறகு கோபம் அதிகமாகியிருந்தது. தினேஷ் பார்க்கிங் லாட்டில் வண்டியை வைத்துவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான். அப்போது, கதவு திறக்கும் போது தினேஷ் மீது கதவு இடித்தது.

”சாரி சார்… சாரி சார்…” என்று பதட்டமாக ஹோட்டல் சேகியூரிட்டி கூறினான்.  
தினேஷ் கோபப்படாமல் சிரித்தப்படி “இட்ஸ்.. ஒகே” என்று நகர்ந்தான். எதையுமே கூலாக கையாள வேண்டும் என்று நினைப்பவன். தினேஷ் சொப்ணா அமர்ந்திருக்கும் டேபிள் நோக்கி வந்தான். 

 “ஹாய் ! சொப்ணா” என்று கூறி சிரித்துக் கொண்டே அமர்ந்தான். சொப்ணா முகத்தில் புன்னகையில் இல்லை. எரிச்சல் குடி புகுந்திருந்தது. எதோ விபரிதமாக பேசப் போகிறாள் என்பதை அவள் முகத்தில் தெரிந்தது. ஆனால், கோபத்தில் சொப்ணா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். 

”என்ன சொப்ணா ! வரச் சொல்லிட்டு எதுவும் பேசாம இருக்க” என்றான். 

 ”Can we breakup?” என்றாள் சொப்ணா. 

 “வாட் ?” தினேஷூக்கு அதிர்ச்சியாக இருந்தது. 



“நாம பிரிஞ்சடலாமானு இங்கிலீஷ்ல கேட்டேன்?” பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள். 

எந்த விஷயத்தையும் ஒன்று இரண்டு முறை சொன்னால் தான் தினேஷ் செய்வான் என்பது சொப்ணாவுக்கு தெரியும். ஆனால், பிரிய வேண்டும் என்பதை கூடவா இரண்டு முறை சொல்ல வேண்டும் என்பது சொப்ணாவுக்கு எரிச்சலாக இருந்தது. 

 ”நான் பேசிட்டேன் தினேஷ். நீ தான் இப்போ பேசமா இருக்க?” 

‘காபி சாப்பிடலாமா?’ என்கிற கேள்விக்கு ‘சரி’ என்றோ, ‘வேண்டாம்’ என்றோ, கேள்வி தன் கேள்விக் குறியை அணிவதற்கு முன்பே பதிலைச் சொல்லிவிட முடியும். பல நாள் கைகளை வருடி கடற்கரை ரசித்த காதலியை எந்த காரணம் இல்லாமல் பிரியவதற்கு என்ன பதில் கூற முடியும். எப்போதும் போன்ற சந்திப்பு என்று தான் தினேஷ் நினைத்தான். இறுதி சந்திப்புக்காக சந்திப்பு என்பதை தினேஷ் எதிர்பார்க்கவில்லை. 

 இப்படி ஒரு முடிவுக்கு வர காரணம் என்ன ? இந்தக் கேள்விக்கு எப்படி உடனே பதில் சொல்வது? அதற்குக்குள் சர்வர் வந்து நின்றான். 

”சார் ! யுவர் ஆர்டர்” 

இரண்டு கேள்விகளுக்கு எந்த கேள்விக்கு பதிலளிப்பது தினேஷ் முழித்தான். 

முதலில் சர்வரை அனுப்புவோம் என்று, “இரண்டு ஸ்வீட் கார்ன் சூப்” என்றான்.  
“இல்ல.. எனக்கு ஸ்வீட் கார்ன் வேண்டாம். டோமேட்டோ ஹாட் சூப்” என்றாள்.

சர்வர் இருவரை பார்த்து சிரித்தான். அவன் சொப்ணாயை பார்த்து வழிந்தது, தினேஷ் கோபத்தை வர வழைத்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தான். 

 “ஹலோ ! சொல்யாச்சுல. ஸ்விட் கார்ன், டோமேட்டோ ஹாட் சூப் கொண்டு வாங்க..” என்று கூறி தினேஷ் சர்வரை அனுப்பினான். 

சர்வர் சென்ற பிறகு, “என்னோட இண்டர்ஸ்ட் தெரியாம நீயே எப்படி ஆர்டர் பண்ணுவ” என்று சொப்ணா சீறினாள். 

“உனக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்குமே சொன்னேன்.” 

“இப்போ புடிக்கல..” 

 “ஸ்வீட் கார்ன் சூப்பா… இல்ல நானா ?” என்றான் தினேஷ். 

சொப்ணா முறைத்தாள். 

“ஏன் சொப்ணா. என்னாச்சு ?” சொப்ணா மௌனமாக இருந்தாள். 

தினேஷ் மீது இருக்கும் கோபத்தை வெளியே காட்டிவிடக் கூடாது எச்சரிக்கை உணர்வா அல்லது பொது இடம் என்கிற உணர்வா என்று தெரியவில்லை. பேசும் ஒவ்வொரு வார்த்தையை வீணாக்கக் கூடாது, அதே சமயம் சொல்ல வந்தது சரியாக சொல்லிவிட வேண்டும் என்பதில் சொப்ணா கவனமாக இருந்தாள். 

 ”நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”. கோபம் இப்போது அதட்டலாக மாறியிருந்தது. 

 ”நீயும் தான் சொல்லலை. பேசாம இரண்டு பேரும் காரணம் சொல்ல வேண்டாம். அப்படி சூப் குடிச்சுட்டு, பீச்சுக்கு போவோமா” என்றான். 

சொப்ணா தினேஷிடம் ரசிப்பது இந்த குணத்தை தான். எந்த பிரச்சனையையும் கேப்டன் தோனி போல் நடந்துக் கொள்வான். ஆனால், தற்சமயம் இந்த குணம் சொப்ணாவை கோபத்தை அதிகப்படுத்தியது. 

”நாம பிரியலாம் சொல்றேன். அதுக் கூட உனக்கு விளையாட்ட தெரியுதா..? 

“என்ன காரணம் சொல்லாம நீ பேசும் போது, எப்படி ரியாக்ட் பண்ணனும் தெரியல..” 

”காரணம் தெரியாதா?” 

”உன் மனதுசுல இருக்குற காரணம் தெரியாது.” 

” வசந்தி. அவ தான் காரணம். தோழி, தங்கச்சி மாதிரி சொல்லி தப்பிக்க பாக்காதே !” 

சொப்ணா கோபமாக பேசுவதை பக்கத்து டேபிள் இருக்கும் குழந்தை அமைதியாக பார்த்தது. தினேஷ் அந்த குழந்தையை பார்த்து சிரித்து ஒன்றும் நடக்காதது போல் காட்டிக் கொள்ள நினைத்தான். 

“கொஞ்சம் அமைதியா பேசு. இது ஹோட்டல். மத்தவங்க பாக்குறாங்க. அசிங்கமா நினைக்கப் போறாங்க” 

”நீ நடந்துக்கிட்டது அசிங்கமா இல்ல, நான் பேசறதுதான் அசிங்கமா இருக்கா?”

”ஒ.கே. ஒரு காலத்துல நா அவள காதலிச்சேன். அப்புறம் பிரிஞ்சிட்டோம். நா தேவதாஸ் அலையாம உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும் நினைக்கிறது தப்பா ? ”

“நீ பண்ண தப்ப நியாயப்படுத்தா தினேஷ்?”

”தப்பே பண்ணல்ல. எப்படி நியாயப்படுத்த முடியும்!” சொப்ணாவின் கையில் ஹோட்டல் மேஜை மீது தட்டு மீது இருந்தது. கோபத்தில் தினேஷ் தலை உடைத்துவிடலாமா என்று யோசித்தாள். செய்த தவறை விட அவன் பேசிய நியாயம் தான் அவளுக்கு உருத்தலாக இருந்தது. சொப்ணா தினேஷிடம் இதற்கு மேல் பேச வேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது. 

”காதல் தப்பில்லனா. ரெண்டாவது காதல். மூனாவது காதல் எப்படி தப்பாகும் ?”

“பொறுக்கி தனத்துக்கு இப்படி ஒரு விளக்கத்த யாராலும் கொடுக்க முடியாது “

“இது பொறுக்கி தனம்னா. ஒரு கம்பேனியில வேலைவிட்டு அனுப்பும் போது இன்னொரு கம்பேனிக்கு வேலைக்கு போறவங்களும் பொறுக்கிங்களா ?”

 “அப்போ நா போனாலும் இன்னொருத்திய லவ் பண்ணுவ...” 

“சார் ! ஹார்ட் சூப் இல்ல. வேற ஏதாவது சூப் ?” சர்வர் இடையில் நுழைந்தான். மீண்டும் இரண்டு கேள்வி. எதற்கு பதில் சொல்வது ?. 

”சொப்ணா ! வேற எதாவது சூப் வேணும்னா சொல்லு…” என்று தினேஷ் கேட்டான். “நீ பதில் சொல்லாத வரைக்கும் சர்வர் உன்ன பார்த்து வழிவான்” என்று தினேஷ் மனதில் சொப்ணாக்கு சொல்லுவதுப் போல் சொல்லிக் கொண்டான். 

 “எனக்கு ஹாட் சூப் தான் வேணும்” என்று சொப்ணா உறுதியாக கூறினாள்.

“மேடம் ! எல்லா சூப்புமே ஹாட்டா தான் இருக்கும்”. சொப்ணா கோபம் இன்னும் தலைக்கேறியது. 

 “இருக்குற பிரச்சனையில் இவன் வேற நேரம் காலம் தெரியாம மொக்கை பொடுறான்.” ஒரு வேலை சொப்ணாவை பிரிய நேர்ந்தால் கண்டிப்பாக இந்த சர்வரை ஒரு வழி செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ”யோவ் ! நான் ஆர்டர் பண்ண ஸ்வீட் கார்ன் சூப் மட்டும் கொண்டு வா…” என்று சர்வரிடம் கோபமா கூறி அனுப்பினான். 

பக்கத்து டேபிள் குழந்தை கையில் இருப்பதை சாப்பிட்டப்படி கூர்மையாக கவனிக்கிறது. சர்வர் சென்றப் பிறகு, “பி பிராக்டிக்கல் சொப்ணா” தினேஷ் அவளை சமாதானப்படுத்த முயற்சித்தான். 

”நமக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் மறைச்சிருப்பியா?” மீண்டும் அதே கேள்வியை சொப்ணா கேட்டாள். 

”ஷ்யூர்! சொல்லுற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்ல.” 

”ஆமா. பல பேர காதலிக்கிறது ஆம்பளைகளுக்கு பெரிய விஷயம் இல்லாம இருக்கலாம். பொம்பளைக்கு அப்படியில்ல” 

”நீ எவ்வளவு கோபப்பட்டு பேசினாலும் இந்த விஷயத்துல எனக்கு கோபம் வராது சொப்ணா”. தினேஷ் சிரித்துக் கொண்டே கூறினான். 

”என் கோபம் நியாயமானது நீ ஒத்துக்கிற” 

”அர்த்தமில்லாத கோபம். நா பெரிசா எடுத்துக்கல” 

”முதல் காதல் விஷயத்த விட நீ பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு.” 

”உன் கேள்வி தாக்குதல்ல இருந்து என் தற்காப்பு பண்ணிக்குறேன்.” 

”செஞ்ச தப்புக்கு சாரி சொல்லும் நாகரிகம் இல்ல. குறைஞ்ச பட்சம் வசந்தி பிரிஞ்ச காரணத்தையாவது விளக்கி நியாயப்படுத்துவ எதிர்ப்பார்த்தேன். அதுவும் செய்யல. யூ டிஸ் அப்பாயிண்டட் மீ” 

”காரணத்த தெரிஞ்சு என்ன பண்ணப் போற சொப்ணா ?” 

“எந்த காரணத்துக்காக வசந்திய பிரிஞ்சியோ அதே காரணத்துக்காக என்ன பிரிய மாட்டேனு என்ன நிச்சயம் தினேஷ்.” 

 சொப்ணா வார்த்தையில் பிரிந்துவிடலாம் என்று கூறினாலும், உள்ளத்தில் அப்படி நினைக்கவில்லை என்பது இந்த கேள்வியில் உணர முடிகிறது. இன்செக்யூராக உணர்கிறாள். வசந்தி பிரிந்ததைப் போல அவளை பிரிந்துவிடக் கூடாது நினைக்கிறாள் என்பது தினேஷுக்கு புரிகிறது. தானும் எக்காரணத்திற்காகவும் கோபத்தில் வார்த்தையைக் கொட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். 

”முடிவா என்ன சொல்ல வர தினேஷ்.” 

 “பிரியுற முடிவ மாத்திக்க சொல்லுறேன். சேன்ஜ் யூவர் டிசிஷன் சொல்றேன்.”

“அவர்ஸ் இருந்து யுவர்ஸ் ஆயிடுச்சு. அது தான் டிசிஷன்.” 

”இந்த முடிவுல உனக்கு சந்தோஷம் இருக்குனு நீ சொல்லு.” 

“மனசுக்கு புடிச்ச பொண்ணுக்கிட்ட பொய் சொன்னது உன் மனச உருத்தவே இல்லை. இப்படிப்பட்ட ஆள் கூட வாழனும் நினைக்கிறியா?” 

”மனசுக்கு புடிச்ச பொண்ணு கஷ்டப்படக் கூடாது மறைச்சேன். தப்பு நீ நினைக்கிறீயா?” 

சொப்ணா மவுனமானாள். 

 “என் காதல் விஷயம் தெரிஞ்சுல நீ சந்தோஷ்ப்பட்டியா. இந்த நிமிஷம் வைக்கும் உன்னையும் கஷ்டப்படுத்தி, என்னையும் கஷ்டப்படுத்துற. அப்படிப்பட்ட விஷயத்த உன் கிட்ட எப்படி சொல்ல சொல்லுற.” 

 ”வாழ்க்கை முழுக்க உனக்கு சந்தோஷம் தரனும் நினைச்சேன். அது தப்புனு சொல்லுறீயா? நா சாரி சொல்லுறதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, நா சொன்னது அப்புறம் நீ நார்மல்ல இருக்க மாட்ட. நா சொல்லப் போற சாரிய விட நா மறைச்சதுல இருந்த காதல்ல நீ மொதல்ல புரிஞ்சிக்கனும். ”

சொப்ணாவின் கண்கள் மெல்ல கலங்க தொடங்கியது. 

 ”வாழ்க்கை முழுக்க நாம நிறைய சாரி சொல்லுற தருணங்கள பாக்கனும் ஆசைப்படுறேன். ” சொப்ணாவால் எதுவும் பேசமுடியவில்லை. 

சர்வர், “ஒன் ஸ்வீட் கார்ன் சூப்” என்று தினேஷ் முன் வைக்கிறான். 

சொப்ணா தினேஷின் அனுமதியின்றி எடுக்கிறாள். ”இன்னொரு பவுல் கொண்டு வாங்க…" என்று சர்வரிடம் கூறினாள். 

சர்வர் , “இன்னொரு ஸ்வீட் கார்ன் சூப்பா?” “இல்ல... Empty bowl. நாங்க ஒன் பை டூ சாப்பிடுறோம்” என்று சிரித்தப்படி கூறினாள். தினேஷ்வும் சிரித்தான். சர்வர் தலை சொரிந்துக் கொண்டு சென்றான். 

“சூப் ஒன் பை டூ ஒ.கே. நீ கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்ல..”

”நாம என்ன பேசினோம்?” 

”பிரிஞ்சிடலாமானு கேட்டியே…” 

”அப்படி பேசுனோமா ?” என்று குறும்பாக சொல்லி பக்கத்து டேபிளை பார்த்தாள். பக்கத்து டேபிளில் இருக்கும் குழந்தை அவர்களை பார்த்து கைத்தட்டி சிரித்தது. 

சொப்ணா பிரெண்ட் போன் செய்தாள், அவள் எடுக்காமல் அந்த அழைப்பை தூண்டித்தாள்.

கல்லூரி நாட்களில் மனோகருடன் இருந்த காதலை தினேஷிடம் கூறிவிட வேண்டும் என்று சொப்ணா பல நாட்களாக நினைத்தாள். கடைசி வரை தினேஷிடம் சொல்லக் கூடாது என்று இப்போது முடிவெடுத்தாள். தினேஷ் மீது இருக்கும் காதல் ஒரு காரணம். ஆண்கள் என்றுமே ஆண்கள் என்பது இன்னொரு காரணம்.

Thursday, November 13, 2014

உங்கள எப்படி கூப்பிடுறது ?

அஞ்சலிலியை எதுக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் அழைத்து வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அவளுக்கு உதவி செய்கிறேனா, பிரச்சனை கொடுக்க போகிறேனா என்பது கூட புரியவில்லை. அவள் கேட்டாள் என்பதற்காக அவளுக்காக செய்கிறேன்.

"என்ன கல்யாணம் பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"

இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இருந்தாலும் அவளின் உடல் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. பதினாறு, பதினெழு வயது தான். யாராக இருந்தாலும் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசை வரும்.

"எதுக்கு சிரிக்கிறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?"

 "அப்படியில்ல. சும்மா தான் சிரிச்சேன்."

"நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள்.

என்னுடன் வந்ததில் இருந்து பல முறை இந்த கேள்வியை கேட்டு விட்டாள். அவளாகவே அதற்கு பதில் சொல்லிக் கொண்டாள். நான் எதுவும் பேசவில்லை. சொல்லவும் விருப்பமில்லை.

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா !! " நான் அவளை பார்த்து முறைத்தேன். எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் பெயர் சொல்லி அழைப்பதை என்னால் ரசிக்க முடியவில்லை.

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?"

"நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ"

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" அஞ்சலி கேட்டாள்.

**

"சங்கர் ! ஃப்ரீயா இருக்கியாடா?" மதன் குரலில் ஓர் எதிர்பார்ப்பு கலந்து இருந்தது.

"ஃப்ரீயா தான்டா இருக்கேன் ! "

"சரஸக்கா வீட்டுல புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கு, சூப்பர்  கம்பேனி தரா. நானே ரெண்டு வாட்டி போனேன். நீ வரீயா."

"போடா ! நானே டென்ஷன்ல இருக்கேன்."

"என்னாச்சு ?"

"ரெண்டு வாரம் முன்னாடி பாண்டிக்கு போகும் பொது சூப்பர் பிகர் கம்பேனி கொடுத்தா. காண்டம் கட்டானது கூட தெரியாமா பண்ணியிருக்கேன். அப்போ தெரியல. இப்போ நினச்சா பயமா இருக்கு."

"ஒண்ணுமாகாது. இப்போ எல்லாம் நம்பல விட பொண்ணுங்க உஷார். டென்ஷனாகாத. சரஸக்கா வீட்டுல இருக்குற பொண்ண இரண்டு வாரத்துல சிங்கப்பூர் பேக்-அப் பண்ணுறாங்க. ஒரு வாட்டி ஜாலிய இருந்துட்டு வரலாம்."

சங்கர் மனசு சபலப்பட்டது. இரண்டு வாரம் முன்பு நடந்தை நினைத்து கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை விட மனமில்லை.

 "சரிடா போகலாம்."

 **

"அக்கா... அக்கா..."

"போடா தேவுடியா மகனே. இன்னொரு வாட்டி அந்த பொண்ண பத்தி பேசிட்டு இங்க வந்த உன்ன கொன்னுடுவேன்."

சரஸ்வதி அக்கா கோபமாக போனை வைத்தாள். 'அக்கா' அப்படி சொல்லி பழகிவிட்டது. அந்த வார்த்தைக்கு அவள் தகுதியற்றவள். மாமா வேலை செய்பவள். இருந்தாலும், என்னை போன்ற திருமணமாகாவதர்களின் உடல் பசியை தீர்த்து வைக்க பல பெண்களை வைத்திருக்கிறாள். அதற்காகவது அவளை 'அக்கா' என்று அழைக்க வேண்டியதாக இருக்கிறது.

அங்கு இருக்கும் எல்லா பெண்களை நிர்வாணமாக பார்த்திருக்கிறேன். ஆனால், அஞ்சலியிடம் நிர்வாணத்தை மீறி என்னை பாதித்திருக்கிறது. கண்டிப்பாக காதல் இல்லை. இப்போது, அதற்கு தகுதியானவன் நான் இல்லை. ஆனால், என்னால் அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாளா என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 "இன்னொரு தபா அந்த சங்கர் பய வந்தா சேத்துகாதீங்க..." கோபமாக லோகுவிடம் சொல்லிவிடு சாரஸ்வதி தனது இரண்டு அடியாட்களோடு சிங்கப்பூர் பார்ட்டியை பார்க்க வெளியே சென்றாள்.

எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. சரஸ்வதி அக்காவை சந்திக்க அவள் இடத்திற்கே சென்றுவிட்டேன்.

"டேய் ! உன்னதா அக்கா வர வேண்டாம் சொல்லிட்டாங்கள. அப்ப எதுக்கு மறுதாப வந்த..." லோகு என்னை வழி மறித்தான்

"இல்ல அண்ண. போன வாட்டி பணம் தரல. அந்த கோபம் தான் அக்காவுக்கு. இதோ பாருங்க போன வாட்டி வந்ததும் சேர்த்து இப்போ பணம் கொண்டு வந்திருக்கேன்."

 "சரி... சரி.. கொடு." என்று பணத்தை வாங்கி லோகு எண்ணி பார்த்தான்.

"எதுக்கு 5000 அதிகமா கொடுத்திருக்க."

 "அந்த அஞ்சலி பொண்ண ஒரு நாள் கூட்டிட்டு பொய் ஜாலிய இருக்கலாம் தான்."

"என்னது ஓவுட்டிங்க.. அப்போன 10000 ரூபாய் அச்சே."

"என்ன அண்ணே ! ரெகுலர் கஸ்டமர் அட்ஜஸ்ட் பண்ணமாட்டிங்களா..?"

"வேணும்னா இங்கையே இராத்திரி புல்லா இரு. வெளியே அனுப்ப முடியாது"

முடியாத காரியம். எப்படியாவது அஞ்சலியை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும். வேறு வழியில்லை அவன் கேட்கும் பணத்தை கொடுத்தேன். இது வரை செய்து வந்த பாவத்திற்கு அது பிராயிசித்தம்.

**




"என்ன சார் ஹோட்டல்லுக்கு போகலையா. இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க ?"

"ஒரு டெஸ்ட் எடுத்துட்டு போகலாம்..." என்றேன். அஞ்சலி உள் மனதில் சந்தோஷம்.

"அப்போ என்ன காப்பாத்த போறீங்களா...?"

"உனக்கு ப்ளட் டெஸ்ட் தான் கூட்டிட்டு வந்தேன். நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத."

அஞ்சலி உள்ளுக்குள் நம்பிக்கையிருந்தது. எப்படியாது இந்த நரகத்தில் இருந்து விடுபடுவோம் என்று.

சங்கர் தன்னை காப்பாற்றுவான் என்று நம்பினாள். தன்னை திருமணம் செய்துக் கொண்டால் சரி. வைத்துக் கொண்டாலும் சரி. பிரச்சனையில்லை. வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது. அவ்வளவு தான்.

ஒரு வேளை சரஸ்வதி மாதிரி வேறு யாரிடமாவது தன்னை விற்றுவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தாள். அது பிரச்சனையாக இருக்க போவதில்லை. இப்போது வாழ்கிற வாழ்க்கையை இன்னொரு இடத்தில் வாழப்போகிறோம். ஆனால், சரஸ்வதி வீட்டில் இருந்தால் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். தனது இளமையும், பணத்தை முழுவதுமாக அபகரிக்கப்படும். மீண்டும் இந்தியாவுக்கு வருவது, தனது அம்மாவை தம்பியை பார்ப்பது நடக்காத காரியம். அதனால், தன்னிடம் வரும் கஸ்டமர்களை ஒவ்வொரிடம் இங்கிருந்து அழைத்து செல்லும் படி கெஞ்சுவாள். அவர்கள் சொல்லுவதை எல்லாம் செய்வாள்.

ஆனால், அவளால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. சரஸ்வதிக்கு நெருக்கமானவர்கள் அவள் சொன்னதை போட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஒரு சிலர் அவள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முடிந்தவரை அவளை அனுபவிப்பார்கள்.

இப்போதைக்கு அஞ்சலிக்கு ஒரே வழி சங்கர் நம்பித்தான் ஆக வேண்டும். ப்ளேட் டெஸ்ட் ரிஸல்ட் வந்தது. சங்கர் நிம்மதி பெருமூச்சு விட்டான். அஞ்சலியை தனது பைக்கில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்றான்.

**

"அறிவுக்கெட்ட முண்டோம். அந்த சங்கர இங்க சேக்காத சொன்னா. ஒக்காலி அவன் கூட அனுப்பி வச்சிருக்க..."

"இல்லக்கா ! அவ போன வாடி தர வேண்டிய பணத்த கொடுத்தான்."

 "ஓ....தா.. அவள சிங்கப்பூர் பார்ட்டிக்கு இரண்டு லட்சம் விலை பேசி வச்சிருக்கேன்"

"எங்கக்கா போகப் போறான். ஆச தீர்ந்ததும் இங்க வந்து விட்டாகனும்."

"மயிரு... அவன் ஆசப்பட்டு கூட்டிட்டு போகல. காப்பாத்தனும் கூட்டிட்டு போயிருக்கான். அவன் பிரண்ட் மதன் தெரியும்ல."

 "தெரியும்க்கா..."

 "அவன வச்சி அந்த பையன தேடுங்க.. பஸ் ஸ்டெண்ட், ரயில்வே ஸ்டேஷன் இருக்குற நம்ப ஆளுங்க கிட்ட சொல்லிவை. ஓடுகாலி சிறுக்கி இன்னைக்கு இராத்திரிக்குள்ள வந்தாகனும்"

**

"உங்கள என்ன கூப்பிடுறது?" அஞ்சலி கேள்விக்கு எப்படி சொல்வது.

'அண்ணா' என்று சொல்ல முடியாது. எங்கள் உறவு அப்படியில்லை. பண்ணிரண்டு வயது இடைவேளை உள்ள ஆண், பெணுக்கு அண்ணன், தங்கை தவிர வேறு நாகரிகமாக உறவு சமூகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். வண்டி கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் வந்து நின்றது.

"என்ன கல்யாண பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"

"எதுக்கு சிரிக்கீறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?" 

"அப்படியில்ல. சும்மா தான் சிரித்தேன்."

 "நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள். 

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா" நான் அவளை பார்த்து முறைத்தேன். 

எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் வைத்து அழைப்பது என்னால் ரசிக்க முடியவில்லை. 

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கு வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?" 

 "நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ" 

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" 

அஞ்சலி கேட்டாள். என்னால் பதில் கூற முடியவில்லை. பதில் கூற நேரமும் இல்லை. சரஸ்வதி அக்காவுக்கு பஸ் ஸ்டெண்டிலும், ரயில் நிலையத்திலும் ஏஜெண்ட்டுகள் அதிகம். நிறைய கஸ்டமர்கள் இங்கிருந்து தான் பிடிப்பாள். நாங்கள் வந்திருபது கண்டிப்பாக இந்நேரம் அவளுக்கு தெரிந்திருக்கும். அதற்குள், அஞ்சலியை பாதுகாப்பாக ஒரு பஸ்ஸில் ஏற்றி விட வேண்டும்.

"நீ எந்த ஊருக்கு போக ஆசைப்படுற..."

"உங்க ஊருக்கு தான்."

"நா உன் கூட வரல. வரவும் முடியாது. இந்தா பணத்த வச்சிக்கோ.." என்று என் கையில் இருக்கும் ஐயாயிரத்தை தந்தேன்.

"இந்த தொழில விட்டு நல்ல படியா வேற வேலைய பாத்துக்கோ. சரஸ்வதி அக்கா மாதிரியான ஆளுங்க உன் வயசையும், உடம்பையும் எப்படி பணம் பண்ணலாம் தான் யோசிப்பாங்க..."

 "உங்களுக்கு என்கிட்ட இருந்து எதுவுமே வேண்டாம்னா. எதுக்கு என்ன காப்பாதுனீங்க..." அவள் தடுமாற்றம் தெரிந்தது. கொஞ்சம் காதல் கலந்திருப்பதாக தெரிந்தது. ஆனால், அதையெல்லாம் உணர்ந்து அவளிடம் அன்பாக பேச நேரமில்லை. சரஸ்வதி அக்காவின் ஆட்கள் வருவது போல் தெரிந்தது. அஞ்சலியை ஆந்திராவுக்கு போகும் பஸில் ஏற்றிவிட்டேன்.

அவளின் கண்கள் கலங்கி இருந்தது. அதை துடைக்கவோ, ஆறுதல் சொல்லவோ தோன்றவில்லை. அவள் பாதுகாப்பாக சென்றாள் போதும். சரஸ்ஸக்காவின் ஆட்கள் என்னை பார்த்துவிட்டார்கள். இங்கிருந்து நான் ஓட வேண்டும். அப்போது தான் என்னை துறத்திக் கொண்டு வருவார்கள். அஞ்சலிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஓடத் தொடங்கினேன்.

சரஸ்வதியின் ஆட்களும் என்னை தொரத்தத் தொடங்கினர்.அவர்களை ஏமாற்றிவிட்டு என் வண்டியை எடுக்க சென்றேன். என் வாண்டியை அவர்கள் நோட்டம் விட்டிருப்பார்கள் என்பதை நான் யோசிக்கவில்லை. கழுத்தில் பலமாக ஒருவன் தாக்கினான். நான் மயக்கமானேன். அவர்களின் மாருதி வண்டியில் ஏற்றினான். அங்கிருந்த பயணிகளும், காவலர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தண்ணியடித்தவனை தூக்கிக் கொண்டு செல்வது போல் சென்றனர்.

 சரஸ்வதி அக்கா அந்த வண்டியில் இருந்தாள். கோபமாக என்னை அறைந்தாள்.

"தேவிடியா மவனே... பத்து நிமிஷம் படுத்தானு அவள காப்பாதுறீயா. எங்கடா அவ."

 "சொல்ல முடியாது."

 மீண்டு அடிவிழுந்தது. நெற்றி போட்டில் லோகு துப்பாகி வைத்தான். அப்பவும் சொல்லவும் முடியாது என்றேன்.

"அவள விலை பேசிட்டேன். உனக்கு வேண்ணும்னா வேற பொண்ண எடுத்துக்க. வீணா லவ்வு கிவ்வு சொல்லி, அவளுக்காக அடி வாங்கி சாகதடா..."

எனக்கு சிரிப்பு தான் வந்தது.  ’காதல்’ அந்த வார்த்தைக்கு தகுதியற்றவன் நான்.

"இன்னும் கொஞ்ச நாள்ல எயிட்ஸால சாகப்போறேன். எனக்கு லவ்வா... போடி. தேவுடியா முண்டோம்" என்று அலட்சியமாக சொல்லி, என் தலையில் வைத்த லோகுவின் துப்பாக்கியை நானே அழுத்திக் கொண்டேன்.

வண்டியில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் அங்கு வந்தனர்.

'உங்கள எப்படி கூப்பிடுறது' என்ற அவளின் குரல் மட்டும் என் காதில் ஒளித்துக் கொண்டே இருக்கிறது. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவுக்கு நாகரிகமான பெயரை நீங்களாவது சொல்லுங்கள் !!!

Tuesday, May 27, 2014

பத்து நிமிட காமம் !!

“கார்த்திக் சார் ! இன்னைக்கு கன்பார்ம்மா வந்திருவீங்களா !” கொஞ்சம் சலிப்புடனே வினோத் குரல் இருந்தது.

பல முறை வருவதாக சொல்லி பயந்துக் கொண்டு எதாவது வேலையிருப்பதாக சொல்லி சமாளித்துவிட்டேன். உள்ளுக்குள் ஆசை இருக்கும் அளவிற்கு பயமும் இருக்கிறது. ஆனால், இந்த முறை கண்டிப்பாக சென்றாக வேண்டும். எவ்வளவு நாள் தான் அடக்கி வைத்துக் கொள்வது. இந்த முறை சென்று விட வேண்டும்.

வேசி, விலைமகள், பரத்தை, விபச்சாரி என்று பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்பவளுக்கு தமிழில் இத்தனை பெயர்கள். வேசன், விலைமகன், பரத்தன், விபச்சாரன் என்ற வார்த்தைகள் தமிழில் இல்லை என்று சொல்கிறார்கள். எனக்கு என்னவோ ‘இல்லை’ என்பதை விட, நாம் பயன்படுத்தவில்லை என்ற தோன்றுகிறது.

தமிழ் இலக்கியம், வார்த்தைகள் பேசும் அளவிற்கு நான் மிக பெரிய அறிவாளியல்ல.. உத்தம புத்திரன் அல்ல. விலைமாதுவிடம் செல்ல வேண்டும் என்று ஆறு மாதமாக ஆசைப்பட்டு, ஒரு மாதமாக முயற்சி செய்து, ஒரு வாரமாக பயந்து.. இப்போது தைரியமுடன் செல்ல இருக்கும் சராசரி இருபத்தியைந்து வயது இளைஞன் தான்.



வினோத் வரச் சொன்ன இடத்திற்கு சரியாக வந்தேன். தெருமுனையில் வண்டியில் வண்டியை நிறுத்தச் சொல்லி வந்துவிட்டான். சினிமாவில் வருவது போல் ஏதோ சந்து சந்தாக அழைத்து செல்லப் போகிறானோ என்று தோன்றியது. ஆனால், தெருவின் இடது பக்கத்திலே அவன் சொன்ன வீடு இருந்தது.

வீத விதமான பெண்கள், கவர்ச்சிகரமான உடையில் நம்மை பார்வையாளே அழைப்பார்கள் என்ற எதிர்பார்த்தேன். குறிப்பாக தொப்புள் தெரியும் படி புடவை கட்டியிருப்பார்கள் என்று நினைத்தேன். அனைத்து கற்பனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஒரு சாரசரி நடுத்தர வீட்டில், மூன்று பெண்களுடன் ஒரு அம்மா இருந்தான். மூன்றுமே பார்க்க அழகாக இல்லை. மூன்றும் பிடிக்கவில்லை. இருப்பதில் யார் சிறந்தவர்கள் என்று தேர்வு செய்ய வேண்டிய நிலை.

திருமணத்துக்கா பெண் பார்க்கிறோம். ஒரு மணி நேரத்துக்கு தானே ! அதுவும் இல்லாமல் அந்த மூன்று பெண்களை முகத்தைப் பார்க்க எனக்கு மாதிரியாக இருந்தது. உள்ள வரும் வரை இருந்த பயம் குற்றவுணர்வாக இருந்தது.

என் ஆண் திமிரு தான் இவர்களுக்கு சாப்பாடு போட போகிறது. இந்த கடையில் பொருள் சரியில்லை என்று சொல்லி வேறு கடைக்கு செல்வது போல் இங்கு முடியாது. வினோத் போன்ற ஆட்களை மாமா பயல் என்று சொன்னாலும், இவனை போல ஆட்களை தேடுவது கடினம். இவனை மாதிரியான ஆட்களால் மட்டுமே இருந்த இடத்தில் காரியத்தை சாதிக்க முடியும்.

எதிர்காலத்தில் மாமா வேலை பார்க்கும் வினோத் பெரிய ஆளாக வருவான். ஆனால், கௌரவம், உழைப்பு, நேர்மை என்று பேசுபவர்கள் வினோத் அளவுக்கு உயர முடியாது என்பது நிதர்சன உண்மை.

இருப்பதிலே பார்ப்பது கொஞ்சம் சுமராகவும், பார்க்க 20 வயது போல இருக்கும் பெண்ணை தேர்ந்தெடுத்தேன். அந்த அம்மா என்னை ஒரு அறைக்கு போகச் சொன்னார். பெண்ணுக்கு பதிலாக வினோத் உள்ளே வந்தான்.

”அந்த பொண்ணு சின்ன பொண்ணுனால 1000 ரூபா ரேட் ஜாஸ்தி.” என்றான்.

முதல் முறை செய்யும் போது கொஞ்ச சின்ன வயது பெண்ணாக இருக்கட்டுமே. சந்தோஷத்திற்கு ஏது விலை என்று கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டேன். பேரம் பேச தோன்றவில்லை. இந்த இடத்தில் பேசவும் தோன்றவில்லை.

என் முதல் இரவு கனவோடு கட்டிலில் அமரலாம் என்று இருந்தேன். ஆனால், அந்த அறையில் கட்டில் இல்லை. சுருட்டப்பட்ட மெத்தை மட்டும் இருந்தது. கீழே செய்ய போகிறோமா என்று நினைப்பதற்குள்ளே, அந்த பெண் அறைக்கு வந்தாள்.

அறையில் தாபல் சரியாக இல்லை. பேருக்கு என்ற போடப்பட்டுயிருந்தது. உள்ளே எதாவது பிரச்சனை, அலறல் சத்தம், அதிகம் நேரம் எடுத்துக் கொள்வது போன்ற சமயங்களில் உடைத்து உள்ளே வர முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

அந்த பெண் கிட்ட வரும் போது தெரிந்தது, என் தோள் கீழே உயரம். அதனால், அவளின் நெற்றி வேர்வையோடு ஒரு முத்தம். நான் சொல்வதற்கு முன்பே அவள் ஆடைகளை கலைக்க தயாராள்.

“இருங்க கொஞ்சம் பேசலாம்.”

ஒரு கனம் அவளுக்கு புரியவில்லை. இங்கு வந்து பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போல் அவளது பார்வையிருந்தது.

பணத்திற்கு வந்தவளிடம் காதலையும், அன்பையும் எதிர்பார்க்க முடியாது தான். அதே சமயம் பணத்திற்காக படுக்க வரும் எல்லாப் பெண்களாலும் நடிக்க முடியாது என்பது அவள் பார்வையில் தெரிந்தது.

காதலோடு அனைத்தேன். அவளுக்கு பிடிக்கவில்லை. கொடுத்த காசுக்கு செய்யாமல் எப்படி இருப்பது. அவள் கழுத்தில் முத்தம். பெண் உறுப்புகளில் தடவினேன். அவள் என்னை தொடுவது எல்லாம் தடுப்பது போல் இருந்தது.

சீக்கிரம் செய்யலாமே என்பது போல் அவளது செய்கையிருந்தது. அவளின் ஒவ்வொரு செய்கையில் என் ஆர்வத்தை குறைப்பது போல் தான் இருந்தது. பேசாமல் வெளியே சென்றுவிடலாமா என்ற எண்ணம். பணம் கொடுத்தாகிவிட்டது. கொடுத்த பணத்தை திரும்பி பெற முடியாத இடம்.

நான் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஆடைகளை கலைத்து விட்டு நிர்வாணமாக நின்றாள். சில அணைப்புகள், முத்தங்கள், விளையாட்டுகளுக்கு பிறகு நான் செய்ய நினைத்த காரியத்தை இரண்டாவது நிமிடத்தில் செய்துவிட்டாள்.

ஒரு பெண் நிர்வாணமாக இருக்கும் போது நான் மட்டும் ஆடையை கலைக்காமல் எப்படி இருப்பது. என் ஆடைகளை ஒவ்வொருன்றாக கலைத்தேன். என் வேற்றுடல் அவளை எந்த விதத்திலும் உணர்ச்சி வசப்படுத்தவில்லை. பல ஆண்கள் உடலை பார்த்த கண்களுக்கு நான் வித்தியாசமாக தெரிய நியாயமில்லை தான். எனக்கு முதல் பெண் நிர்வாணத்தை நேரடியாக ரசிக்கிறேன்.

 என் தலையை கொய்து, சில தீண்டல் எல்லாம் செய்ய வேண்டுமென்றே செய்தாள். அவள் ஒவ்வொரு தொடுதலிலும் செயற்கை தனம் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் யோசித்துக் கொண்டு இருக்க முடியவில்லை. கிடைத்த ஒரு மணி நேரத்தில் முடிந்தவரை அவளை அனுபவிக்க வேண்டும்.

அதே சமயம், எனக்கு ஏதாவது பேச வேண்டும் போல் இருந்தது. இந்த அணைப்பில் என்ன பேசுவது என்று புரியவில்லை.

“முதல்ல இப்படி பண்ணுவோம். அப்புற வேற மாதிரி பண்ணுவோம்.”

”இல்லைங்க… ஒரு வாட்டி மேல செய்யக் கூடாது. செஞ்சா வர சவுட்ல கதவு தட்டுவாங்க..”

அடப்பாவிங்களா.. ஒரு வாட்டிதானே. என்னிடம் ஒரு மணி நேரம் என்று கூறினானே. நுகர்வோர் வழக்கு போட முடியாதது. கர்ணனுக்கு கிடைத்த நாகஸ்திரம் போல் ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும். இரண்டாவது முறை பயன்படுத்த நினைத்தாலும், அதற்கான உரிமையில்லை.

முடிந்த அளவுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டே செய்ய வேண்டும் தோன்றியது. 

”இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது. ரொம்ப ரிஸ்க்” என்றாள்.

 நான் எதுவும் கேட்காமல் அவளாக எதற்காக இப்படி சொன்னாள். இவளை அனுபவிக்கும் இன்பத்தை ஒரு நிமிடம் கூட தர மாட்டேன் என்கிறாள். காசு கொடுத்து ஒட்டுக் கேக்குறாங்களா என்ற பயம் தோன்றியது.

கொடுத்த காசுக்கு முடித்துவிட்டு கிளம்ப வேண்டியது தான் நல்லது. சந்தோஷமாக செய்ய வேண்டிய உறவை காசுக்காக செய்யும் போது சில குறைகள் இருக்க தான் செய்யும். அந்த உறவே மிக குறையாக இருந்தது.

உதட்டில் முத்தம் கொடுத்தேன் துடைத்துக் கொண்டாள். மீண்டும் உதட்டில் முத்தம் கொடுக்கக் கூடாது என்றாள்.

ஆடையில்லாமல் நான் நெருங்கும் முன்பே எனக்கு ஆண்ணுறை மாட்டிவிட்டாள். விந்து அவள் உடலில் பட அவள் விரும்பவில்லை.

 “செய்யும் போது போடுறேனே. இப்போ எதுக்கு..”

 “இல்ல எனக்கு இன்பென்ஷன் அச்சுனா கஷ்டம். அடுத்தது யாரும் வரமாட்டாங்க.” என்றாள்.

 அவள் பெண்ணுருப்பில் விரல் வைக்க அனுமதிக்கவில்லை, கிட்டதட்ட உடலுறவில் எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களைப் போன்ற விலைமாதுக்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். தன் உடல் தான் முதலீடு என்பதால் மிக கவனமாக செயல்படுகிறாள்.

அவள் அங்கங்கள் என்னை திருப்தி படுத்துவது போல் இல்லை. முடிந்த அளவுக்கு செய்தேன். கால் மனது திருப்தியோடு ஆடைகளை மாற்றிக் கொண்டேன்.

"கார்த்திக் இதெல்லாம் உனக்கு தேவையாடா” என்று உள்ளூர நினைத்துக் கொண்டேன்.

“எனக்கு டிப்ஸ் கொடுப்பீங்களா !” என்று ஒரு மாதிரி சிரித்தப்படி கேட்டாள். இது வரை நடித்ததில் மிக சிறந்த நடிப்பு இதுவாக தான் இருந்தது. வெளியே வரும் போது தான் புரிந்தது அவள் என்னை ஒரு முறைக் கூட முத்தம் கொடுக்கவில்லை.

அவளுடன் கொண்ட காமம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவளுக்காக நான் கொடுத்த பணம் வீண் தான். ஆனால், அவள் ஒரு மிக பெரிய காரியம் செய்திருக்கிறாள். அவள் அப்படி செய்திருப்பது அவளுக்கே தெரியாது.

என்னுடன் இருந்த பத்து நிமிடத்தில் அவள் என்னை மீண்டும் மனிதனாக்கியிருக்கிறாள். இனி பக்கத்து வீட்டில் இருந்து விளையாட வரும் சிறுமி, யூவதியை தவறாக பார்க்க தோன்றாது. பழகும் சக தோழிகளிடம் தவறான எண்ணத்தில் தொட தோன்றாது. அவர்களின் அங்கங்கள் என்னை வசீகரிக்கத்தாலும், இந்த பெண்ணின் உருவம் வந்து போகும். இல்லை என்றால் இன்னொரு முறை இங்கு வந்து செல்ல வேண்டியது தான்.

எனக்கு வரப் போகும் மனைவிக்கு துரோகம் செய்கிறேனா, இங்கு வந்து நோய் பெறப் போகிறேனா என்பது பற்றி எனக்கு கவலையில்லை.

வருத்தமுமில்லை. நான் சாகும் போது என்னால் எந்த பெண்ணும் உடலால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாள். நான் யாருக்கும் பாதிப்பு கொடுக்காத மனிதனாக சாகுவேன். அதற்காகவாவது மாதம் ஒரு முறை வந்து போகவது எனக்கு தவறாக தெரியவில்லை.

Monday, June 17, 2013

தப்பு !!

எதோ பெயர் தெரியாத கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் கண்மணியும், கருப்பனும் பள்ளி முடிந்து மரத்தடி நிழலை நோக்கி நடந்தனர்.

“கண்மணி ! இப்போ எல்லாம் என் கூட நடந்து வரவே மாட்டீங்கர...”

 “போடா... ! குத்த வெச்சதில்ல இருந்து அம்மா எந்த பசங்களோட பேசாத பலகாதனு சொல்லிக்கிட்டே இருக்கா....” வாடிய முகத்துடன் கருப்பன்,

“நா வேணும்னா பொண்ணா மாறட்டா....!”

 “போடா கிறுக்கா... கொஞ்சமாவது அறிவிருக்கா....”

 “ஏன் அப்படி சொல்லுற”

 “குத்த வெச்சதுல இருந்து எவ்வளவு கஷ்டம் தெரியுமா. உடம்பு வலிக்கும். சில சமயம் நடக்குறதுக்கு கஷ்டமா இருக்கும். எங்க போனாலும் துணைக்கு யாராவது கூட்டிட்டு போகனும்னு சொல்லுறாங்க... பையனா இருந்தா எவ்வளவு ஜாலி தெரியுமா !!”

 கருப்பன் அமைதியாக கண்மணி சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்தான். 

“சரி விடு ! எங்க வீட்டுல இருந்து ஜிலேப்பி கொண்டு வந்திருக்கேன். சாப்பிடு.” 

கருப்பன் கண்மணியிடம் இருந்து ஜிலேப்பி வாங்கி சாப்பிட்டான்.

 “என்டா ! நா பெரிய மனுஷியானா மாதிரி, நீ எப்போ பெரிய மனுஷனாவ...” 

“தெரியுல்ல... அப்படி நடந்தா உனக்கு செஞ்ச மாதிரி எனக்கு செய்வாங்களா ?” 

கருப்பன் சொன்னதை கேட்டு கண்மணிக்கு சிரிப்பு வந்தது. இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது கண்மணி அருகில் தேள் வருவதை கருப்பன் பார்த்தான்.

 “கண்மணி தேளு !!!”

 தேளை பார்த்ததும் கண்மணி எழுந்திருக்கும் போது கீழே விழுந்தாள். அவள் பாவாடை மேல வர, தேள் அவளை கண்மணியின் காலை நோக்கி வருகிறது. கருப்பன் தேளை கையில் எடுத்து வீசினான்.

 அப்போது அவர்கள் பள்ளி ஆசிரியை ஜமுனா வர, அவரின் பார்வைக்கு கருப்பன் கண்மணியை தொடுவதுப் போல் தெரிகிறது.

 “டேய் ! என்னடா பண்ணுற. மொலச்சு மூனு இலக் கூட விடல்ல... பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக்குற..” என்று சொல்லி கருப்பனை அடிக்கிறாள். அவனின் பதிலுக்காக அவள் காதிருக்கவில்லை.

 “நா ஒண்ணும் பண்ணல்ல மிஸ்... நா ஒண்ணும் பண்ணல்ல....”

 ஜமுனா மாணவனை அடிப்பதை பார்த்த தலைமை ஆசிரியர் அவரை தடுகிறார். 

“மேடம்...! என்னாச்சு... ஏன் அவன இப்படி போட்டு அடிக்கிறீங்க..?”

 “இவன் செஞ்ச காரியத்துக்கு அடிக்காம என்ன பண்ணுறது...”

 மேலும் கருப்பனை அடித்தாள்.

 “ அவன எதுக்காக அடிக்கிறேனு சொல்லிட்டு அடிங்க...?”

 “அந்த பொண்ணு பாவடா விலகியிருக்கு அத தொட போண்ணான்..”

 “ ஐயோ இல்ல மிஸ். கண்மணி கால் கிட்ட தேள் வந்துச்சு அத எடுக்க போண்ணேன். வேணும்னா கண்மணி கிட்ட கேளுங்க...”

 “ஆமாம் மிஸ். தேள் என்ன கடிக்க வந்திச்சு. கருப்பன் தான் தூக்கிப் போட்டான்.”

ஜமுனாவுக்கு தன் தவறு புரிகிறது.

 “மேடம் ! பார்த்தீங்களா இப்ப நீங்க தான் தப்பு பண்ணியிருக்கிங்க. அப்படியே இவங்க தப்பு பண்ணுறதா நினைச்சா. கூப்பிட்டு நம்பிக்கையா நாலு வார்த்த பேசுங்க. சந்தேகப்பட்டு அடிக்கிறதால நாலு பேருக்கு தெரியாம தப்பு செய்ய தோணும். இதுவே அவங்க மேல நம்பிக்கை வச்சு பேசுங்க... அந்த நம்பிக்கையே அவங்க தப்பு பண்ண விடாது !” என்றார்.

 ஜமுனா தன் தவறை உணர்ந்து, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். தலைமை ஆசிரியரும் கருப்பனுக்கும், கண்மணிக்கும் இதைப் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி சென்றார்.

 "கண்மணி ! நீ பெரிய மனுஷியாகமலே இருந்திருக்கலாம் "

 "எல்லாரும் ஒரு நாள் பெரியவங்களாக தானே பொறாங்க. ஆமா, அங்க கை வெச்சா என்னடா தப்பு ?" என்றாள் கண்மணி.

Tuesday, April 9, 2013

அப்பா !

அந்த பிஞ்சு மனதில் இத்தனை பெரிய ஏமாற்றத்தை ராஜா எப்படி விதைத்தான் ? வாங்கும் சம்பளத்தில் இப்போது அவனால் வாங்கி தர முடியாதவனில்லை. ‘இது தேவையில்லை’ என்று நினைத்த எண்ணம் தான் அவன் மகன் அவன் மீது நம்பிக்கையில்லாமல் போனது.

ஒவ்வொரு மகனுக்கும் அப்பா தான் முதல் கதாநாயகன். முதல் வில்லன். ஆனால், ஏனோ ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு வில்லனாக மட்டுமே இருந்திருக்கிறான் என்று நினைக்கும் போது அவன் மீது அவனுக்கே கோபமாக இருந்தது.

 “அப்பா ! வாங்கி தரமாட்டார்” என்ற எண்ணம்.



மகனிடம் ‘முடியும்’ என்று சொல்ல முடிந்த விஷயத்தை ‘முடியாது’ என்று சொல்லுவது அப்பாவுக்கு மட்டுமே தெரியும் அவனுடைய வலி. ஆரம்பத்தில் தனது சம்பளத்தில் இயலாமையை மகன் மீது கோபமாக காட்டியிருக்கிறான். ‘பணம் இல்லை’ என்று சொல்ல தைரியமில்லாமல் அடித்திருக்கிறான். ஒரு வேலை தன் மகனுக்கு வாங்கி தராமல் இருக்க பலகிவிட்டேனோ என்ற சந்தேகம் அவனுள் எழுந்தது.

உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் வெளியில் எதிரிப் போல் பழகுவது அப்பா – மகன் உறவில் தான். தருணுக்கு எட்டு வயது தான் ஆகிறது. அவன் கேட்பது எல்லாம் தந்து விட வேண்டும் என்றே ஆசை. ஆனால், தன் சம்பளத்தில் ஒரு பங்கை அம்மா, அப்பாவுக்கும், இன்னொரு பங்கை தன் குடும்ப செலவுக்கும் சரியாக இருக்கிறது. காதலித்து திருமணம் செய்ததால் சொந்த வீட்டிலே தனிக்குடித்தனம். அப்பா, அம்மா மாடியில், ராஜாவின் குடும்பம் கீழ் வீட்டில்.

அம்மா தனது மகனை தட்டி பறித்த எண்ணத்தில் ராஜாவின் மனைவியிடம் பேசமாட்டாள். அப்பா ராஜாவுக்கு சாதகமாக பேசவும் மாட்டார். எதிர்க்கவும் மாட்டார். சொந்த வீட்டில் அப்பா அம்மாவுடனே மூன்றாவது மனிதன் போல் வாழ்க்கிறான். அவர்களுக்கும் பணம் கொடுத்து, தங்களுக்கும் பணம் செலவு செய்து மீதி பணம் சேர்த்து வைப்பது என்பது மன்மோகன் இரண்டு மணி நேரம் பேச சொல்வதற்கு சமம். இப்படி, இருக்கும் நிலையில் மகன் கேட்பதெல்லாம் ராஜாவால் எப்படி வாங்கி தர முடியும்.

ஓடி ஆடி விளையாடும் வயதில் மடியில் கணிணியை வைத்து விளையாடுகிறார்கள். ஆனால், தருண் கேட்டது சைக்கிள்.

ஒரு முறை மனைவியுடன் வெளியே செல்லும் போது தருணை அழைத்து சென்று இருந்தான். அப்போது ஒரு கடையில் சைக்கிளை ஆசையாக தடவிப்பார்த்துக் கொண்டு இருந்தான். மனைவி "சைக்கிள் வேண்டுமா ?" என்று கேட்டதற்கு, "அப்பா வாங்கி தரமாட்டார்" என்று அவன் சொன்ன பதில் அவனை மிகவும் பாதித்தது.

மற்ற வீட்டில், எழு எட்டு வயது குழந்தைகள் ஒரு பொருளை எப்படியாவது அடம் பிடித்து வாங்கிவிடுவார்கள். ஆனால், தருண் தன்னிடம் ஆசையாய் சாக்கலெட் கூட கேட்டதில்லை. அவன் கேட்ட பொருளெல்லாம் மறுத்ததற்கு, அவனிடம் இருந்து அவன் எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு இருக்கிறான் என்று புரிந்திருந்தது.

இதுவரை கடன் அட்டை வேண்டாம் என்று இருந்த அவன், தன் மகனுக்காக கடன் அட்டை வாங்கினான். மகளிடம் / மகனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால், பெரும்பாலும் அப்பாக்கள் கடன் வாங்க வேண்டியதாக இருக்கிறது.

தன் நண்பன் ஒருவன் சைக்கிள் ஹோல்சேல் கடைக்கு 'சைக்கிள் விலை குறைவாக இருக்கும் என்று அழைத்து சென்றான். தருண் ஆசையாய் தடவிப் பார்த்த சைக்கிளை விட விலை உயர்ந்த, அழகான சைக்கிள் அங்கு இருந்தது.
 முதல் முதலாக வாங்கிய கடன் அட்டையில், தருணுக்காக சைக்கிள் வாங்கினான்.

கடன் அட்டை தேய்க்கும் போது கொஞ்சம் உருத்தலாக இருந்தாலும், தருணின் சந்தோஷத்திற்கும் எதுவும் பெரிதாக தெரியவில்லை. வாங்கிய புது சைக்கிலை என் நண்பன் வண்டி பின் அமர்ந்து எடுத்து வந்தேன்.

கடைசி தேர்வு முடித்து வீட்டுக்கு வந்த தருணின் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க மிகந்த ஆசையாக இருந்தது.

புது சைக்கிளைப் பார்த்ததும் அப்பா "என்னடா ! தருணுக்கா சைக்கிள்"

“இந்த சைக்கிள் ஓட்டுறதுக்கு வீட்டுல வேற பசங்க இருக்காங்களா....” என்றான் ராஜா.

 “நல்ல இருக்குடா.. !”

அப்பாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, என் மனைவி கீழ வர "என்னங்க புது சைக்கிள் வாங்குனீங்களா ?"

ஆமாம் என்பது போல் தலையாட்டினான். "நேத்து வீட்டு செலவுக்கு பணம் கேட்கும் போது இல்ல சொன்னீங்க.. இப்போ எப்படி ? "

"கிரடிட் கார்ட் வச்சி வாங்கினேன்".

"எதுக்கு கடன் வாங்கி சைக்கிள் வாங்குன... என் கிட்ட கேட்டுருந்தா நா தந்திருக்க மாட்டேன்" என்று ராஜாவின் அப்பா பாசமாய் கூற, “நீயா..! உன்னால எனக்கு எந்த உதவியும் பண்ண முடியாது. நீ எனக்கு பணம் தரப் போறீயா ? " என்று அப்பாவை ஏளனமாகப் பார்த்துவிட்டு தருணின் பள்ளியில் இருந்து வருவதற்காக காத்திருந்தான்.

Friday, July 27, 2012

மரியம் மிஸ்

ஏன் மரியம் மிஸ் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் ? எவ்வளவு கஷ்டப்பட்டு தேர்வு எழுதினேன். பிரசாத்துக்கு மட்டும் முழுசாக பத்து மதிப்பெண் போட்டிருக்க, எனக்கு மட்டும் 2 மதிப்பெண்.

மரியம் மிஸ் ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கிற பையன், படிக்காத பையன் என்று இரண்டாக பிரித்துவிடுவார். அப்படி அவர் மனதளவில் பிரித்துவிட்டால், வருடம் முடியும் வரை அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். அவர் பார்வையில் நான் படிக்காத பையன். படிக்கிற பையன் பேப்பரில் பார்த்து அதிக மார்க் போடுவார். என்னைப் போன்ற படிக்காத பையன் தப்பி தவறி நன்றாக எழுதினால் கூட குறைவான மார்க்கில் இருந்து கொஞ்சம் அதிகமாக போடுவார். அவ்வளவு தான்.


இந்த தேர்வுக்கு கஷ்டப்பட்டு தேர்வுக்கு வரக்கூடிய முக்கியமான கேள்கிகளை படித்து வந்தேன். என் நேரம். நான் படிக்காத கேள்விகள் வந்து தொலைத்தது. வழக்கம் போல் முன் பக்கம் அமர்ந்திருக்கும் நன்றாக படிப்பவன் பிரசாத் பேப்பரை காப்பி அடித்து எழுதினேன். அப்படி இருந்தும், மரியம் மிஸ் இருக்கும் ஒரு தலை பட்சத்தால் இந்த முறையும் பெயிலாகிவிட்டேன்.

ஐந்து மதிப்பெண் இருந்தால் போதும், பாஸ்ஸாகி விடுவேன். பேப்பரில் கையில் வைத்திருந்த போது, என் அருகில் வந்த பிரசாத் “என்ன பிரதாப் ! எவ்வளவு மார்க் ?” என்றான்.

அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் தொல்லையே இது தான். அடுத்த தேர்வு வரை அவர்கள் செய்யும் அலும்பு தாங்க முடியாது. என் பேப்பரை வாங்கி பார்த்தான்.

”என்னடா ! கரேட்டா தானே எழுதியிருக்க... “ என்றான்.உன்ன பார்த்து தானே எழுதினேன். கரேட்டா இல்லமா எப்படி இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

“மரியம் மிஸ் கிட்ட பேசி நான் மார்க் வாங்கி தரேன் வா !” என்று அவனாகவே மிஸ்ஸிடம் அழைத்து சென்றான். எதோ பாஸ்ஸானால் சரி தான்.

“மிஸ் ! பிரதாப் கரேட்டா தான் எழுதியிருக்கான். கம்மியா மார்க் போட்டிருக்கீங்க !!” என்று என் பேப்பரை கொடுத்தான்.

இதுவே நான் கொடுத்திருந்தால் என் பேப்பரை வாங்கிக் கூட பார்க்க மாட்டார்கள். படிக்கும் பையன் பேப்பர் கொடுத்தாலே மிஸ்ஸிடம் தனி மரியாதை தான். இரண்டு மூன்று பேப்பரை நன்கு ஏற இறக்க பார்த்தார். தான் ஏன் சரியான பதிலுக்கு குறைந்த மதிப்பெண் போட்டிருக்கிறோம் என்ற சந்தேகம் மிஸ்ஸுக்கு வந்ததிருக்கும்.

பிரசாத் இடது கையில் இருக்கும் அவனது பேப்பரை வாங்கி என் பேப்பரோடு ஒப்பிட்டு பார்த்தார்.

“ஏன்டா ! பிரசாத் பேப்பர பார்த்து காப்பி அடிச்சதும் இல்லமா. மார்க் கேக்க அவனை கூட்டிட்டு வர...”

படிக்கிற பையனுகளிடம் பிரச்சனையே இது தான். நமக்கு நல்லது செய்றேன் சொல்லி வம்பில் மாட்டிவிடுவார்கள்.

“ உன்ன அப்படியே விட்டுருலாம் பார்த்தேன். நட பிரின்ஸ்பல் ரூமுக்கு...”

Wednesday, July 18, 2012

பசியில்ல...!!

 குழந்தை பிறந்தவுடன் கணவர்-மனைவி இருவருக்குள் ஒரு சிறுமன பிரிவு ஏற்ப்படும். குழந்தை பார்த்துக் கொள்வதில் சண்டை வரும் என்பார்கள். ஆனால், எங்கள் வீட்டில் குழந்தை பிறந்ததும் எனக்கும், என் அம்மாவுக்கும் தான் பிரிவு ஏற்ப்பட்டது.

என் பெற்றோருக்கு ஒரே மகன் நான். எனக்கு மழை பிடிக்கும் என்பதாலோ என்னவோ ‘வருண்’ என்று பெயர் வைத்தனர். ’பசி’ எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. பசி எடுக்கும் முன்பே சரியான நேரத்தில் சாப்பாடு வைத்துவிடுவார்கள். சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் ஏதாவது நொறுக்கு தினி வேறு. அம்மாவிடம் "பசியில்ல" என்ற வார்த்தை சொன்னது தான் அதிகம்.



எனக்கு நல்லது என்பதை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வார்கள். அவர்களுக்கு பிடித்தது எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால், எனக்கு பிடித்தது எது என்று அவர்கள் கேட்டதில்லை. அவர்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்ற அவர்களுக்கு பிடித்ததை எல்லாம் எனக்கு பிடித்ததாக மாற்றிக் கொண்டேன். என் திருமணம் உட்பட !

என்னுடன் படித்தவர்கள் எல்லோரும் காதல் திருமணம் செய்துக் கொள்ள நான் பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டேன். அப்பாவின் விருப்பத்தை விட அம்மாவின் விருப்பம் தான் எனக்கு மிக முக்கியமாக தெரிந்தது. அம்மாவுக்கு அந்த பெண்ணை பிடித்ததால் திருமணத்திற்கு சம்மதித்தேன். திருமணம் ஆன புதிதில் மாமியார் – மருமகளுக்குள் பெரிதாக சண்டை வந்ததில்லை. எல்லாம் எனக்கு குழந்தை பிறந்தவுடன் மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.

என் மனைவி குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்பதில் ஆரம்பித்தது சண்டை. யாரும் பிறக்கும் போதே அம்மாவாக, அப்பாவாக பிறப்பதில்லை. குழந்தைகள் கற்க கற்க நாமும் பெற்றோராக ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். வயதான பெற்றோருக்கு பொருந்தும்.

”டேய் வருண் ! அவ என்ன குழந்தைக்கு சரியா பால் கொடுக்க மாட்டேங்கிறா ?”.

மனைவியை கேட்டால், “இப்ப தான் ஒரு மணி நேரம் முன்னாடி கொடுத்தேன். அவங்க தூங்கிட்டு இருந்தாங்க. அடுத்த வாட்டி பால் கொடுக்கும் போது அவங்கள எழுப்பி பால் கொடுக்குறேன்.” என்பாள்.

வழக்கமாக எல்லார் வீட்டில் நடக்கும் சண்டை தான். இரண்டு சம வயதில் இருக்கும் பெண்களுக்கு ஒத்துவராத போது, 20 வருட வயது இடைவேளை இருப்பவர்களுக்குள் எப்படி ஒத்துவரும்.

அப்பா எப்போதும் அம்மா பக்கம் தான். ரிட்டையர்ட் ஆனவருக்கு மனைவியின் ஆறுதல் அவருக்கு அதிகமாக தேவைப்பட்டது.அம்மாவிடமும், மனைவியிடமும் சேர்ந்தாற்போல் நல்ல பெயர் எடுத்த எந்த ஆண்மகன் உலகில் இல்லை என்பதால், நானும் 'நல்ல பெயர்' வாங்க முயற்சியில் ஈடுப்படவில்லை. அவர்களின் சண்டைக்குள் நுழைவதுமில்லை.

அடுத்த பிரச்சனை சமையல் கட்டில் தொடங்கியது. ஆரம்பத்தில், அம்மா மட்டுமே சமைப்பாள். கொஞ்ச நாட்களில் என் மனைவியும் சேர்ந்து சமைக்க தொடங்க, சுத்தமாக சமையல் அறையை வைத்துக் கொள்ளவில்லை. என் மனைவி சமையல் சரியில்லை என்று இன்னொரு பிரச்சனை. முதலில் அம்மா சமையல் மட்டும் தான் இருந்தது. இப்போது, அம்மா, மனைவி இருவர் சமையல். ஒருவர் சாதம் வைத்தால், மற்றவர் சாம்பார் வைப்பார். இருவர் போட்டியில் சாப்பாடு எவ்வளவு கேவலமாக இருந்தாலும், நானும், அப்பாவும் சாப்பிட பழகிக் கொண்டோம்.

ஆபிஸில் இருந்து வீட்டுக்கு வந்ததும் அம்மா பிரச்சனை ஆரம்பிப்பாள்.

“ஏம்மா நிம்மதி கெடுக்குற ?” கோபத்தில் கேட்டதற்கு, “பெத்த மகனோட நிம்மதிய அம்மா கெடுப்பாங்களா ? “ எங்கள் சண்டைக்குள் அப்பா நுழைவார்.

பெத்த மகனுக்கு பால் கொடுக்கவில்லை என்று அம்மா சண்டை போடுபொதெல்லாம் அப்பா அமைதியாக இருப்பார். ஒரு கட்டத்தில் சண்டை வரும் போதெல்லாம் எங்கள் தனிக்குடித்தனம் போக சொல்லி மேலும் பிரச்சனை வெடிக்கும்.

அப்பா, “நானா உன்ன வீட்ட விட்டு போக சொல்ல மாட்டேன். நீயா போகுறது உன் இஷ்டம்” என்பார்.

என் மனைவி, “உங்க அப்பாவுக்காக பொருத்துக்கலாம். பேரன் இல்லாம உங்க அப்பாவுக்கு கஷ்டமா இருக்கும். அவங்க ஒரே பையன தனிக்குடித்தனம் கூட்டிட்டு போன நாளைய சொந்தக்காரங்க என்ன தான் தப்பா பேசுவாங்க. உங்க அம்மா பண்ணது பெரிசா தெரியாது.” என்றாள்.

அப்பாவும், என் மனைவியும் தனிக்குடித்தனம் போக விரும்பினாலும், எங்கள் சொந்தக்காரர்கள் யாரும் தவறாக பேசக்கூடாது என்ற எண்ணம் தான் அதிகமாக இருந்தது.

ஒவ்வொரு சமயமும் சண்டையில் முடிவில் தனி குடித்தனம் பிரச்சனை ஆரம்பிக்கும். போக போக... “தனிக் குடித்தனம்” போக வைக்கவே பிரச்சனைகள் வெடிக்கும். இவர்கள் பிரச்சனையில் நான்கு வருடங்கள் போனதே தெரியவில்லை. வேலையில் அதிகம் கவனம் செலுத்தமுடியவில்லை. ஒரு கட்டத்தில் என் சொந்த வீட்டுக் கூட எனக்கு வாடகை வீடாக தெரிந்தது. வீட்டு செலவுக்கு நான் கொடுக்கும் பணம்…. ‘வாடகை’ எனக்கு தோன்றியது. அம்மாவிடம் பணத்தை கொடுத்து வந்த நான் என் அப்பாவிடம் மாத பணத்தை கொடுத்தேன். ஏதாவது ஒரு பிரச்சனை வெடிக்க, வீட்டில் இருப்பது எனக்கும் பிடிக்காமல் போனது. தனியாக சென்று விடலாம் என்பது தான் சரியான முடிவு.


அப்பா அப்போது சொன்ன அதே பதில் தான். என் மனைவி அப்பாவுக்காக ஆரம்பத்தில் சொன்னவள், “உங்க வீட்டு ஆளுங்கல கூப்பிட்டு தனிக்குடித்தனம் போவோம். தனியா போனதுக்கு அப்புறம் நான் தான் ப்ளான் பண்ணி உங்கள தனியாக கூட்டிட்டு வந்தேன் சொல்லுவாங்க”. அவளுக்கும் வீட்டில் இருக்க விருப்பமில்லை. என் மனைவிக்கு ஒரே பிரச்சனை. தன்னை யாரும் தப்பாக சொல்லிவிடக் கூடாது.

அம்மாவுக்கு மருமகளோடு ஒத்துபோகமாட்டேன் என்ற ஈகோ. நான் மனைவி சொல் பேச்சு ஆடுகிறேன் என்பாள். சொல்லப்போனால், திருமணத்துக்கு பிறகு தான் என் இஷ்டப்படி இருக்க தொடங்கினேன். நான் அம்மாவிடம் பேசும் போது, மனைவியை ஒரு வார்த்தைக் கூட பேசவிட மாட்டேன்.

“பொம்மளைய பேசவிட்டு வேடிக்கை பாக்குறான்” இன்னொரு வார்த்தை அம்மா வாயில் இருந்து பேச்சு வரும். ஆனால், அப்பா அம்மாவை பேச தடுப்பதில்லை.

ஒரு சமயத்தில், “ எத்தன வாட்டி வீட்ட வீட்டு போக சொல்லுறது. ரோஷம் கெட்டவன். இங்கையே தங்கி தின்னுக்கிட்டு இருக்குறது. அம்பளையா நீ “ என்று கேட்டாள் அம்மா. அதன் வார்த்தை அர்த்தம் புரிந்து தான் பேசுகிறார தெரியவில்லை. வார்த்தைகள் கொட்டிக் கொண்டே இருந்தாள். வாழ்க்கையே வெருத்து போவதுப் போல் இருந்தேன்.

எதனால் நான் அம்மாவுக்கு எதிரியாக தெரிகிறேன் ? நான்கு வருடங்களாக அம்மாவிடம் பேச்சை குறைத்த நான் ஒரேடியாக வெருக்க தொடங்கிவிட்டேன். நான் தனி குடித்தனம் செல்ல முடிவு எடுத்து, நண்பர்கள் ஒரு சிலரிடம் வீடு பார்க்க சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்து அப்பா, " நான் இருக்குற வைக்கும் இந்த வீட்டுல இருங்க. அதுக்கப்புறம் உங்க இஷ்டப்படி இருங்க."

அவரிடம் என்ன சொல்லுவது ? நாங்கள் என்னவோ தனிக்குடித்தனம் போக துடிப்பது போல் அப்பா பேசினார். இவ்வளவு உயிராக வளர்த்த அம்மா என்னை ஒரேடியாக வெருக்கிறார். அம்மாவை சமதானப்படுத்த முடியாத அப்பா, ஒவ்வொரு முறையும் என்னை சமாதானம் படுத்தினார். ஒவ்வொரு முறையும் நான் சமாதானம் ஆகும் போதும், அடுத்த அவமானத்திற்கு தயாராக வேண்டியதாக இருந்தது.

என்னுடைய கோபத்தை அம்மாவின் சமையல் மீது காட்டினேன். அம்மா சமைப்பதை தவிர்த்து, மனைவி சமைப்பதை மட்டும் சாப்பிடுவேன். என் மகனின் பள்ளி விடுமுறையில், என் மனைவி மகனுடன் அவள் அம்மா வீட்டு சென்றாள். அம்மாவின் சமையலைத் தான் சாப்பிட்டாக வேண்டும். வெளிப்படையாக அம்மாவின் சமையலை சாப்பிடாமல் இருக்க முடியாது. அப்படி செய்தால், அடுத்த பிரச்சனை தொடங்கும். வெறுப்போடு குறைவாக சாப்பிட்டேன்.

சிறு வயதில் அம்மாவின் பாசத்தால் குறையுள்ள சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டேன். இப்போது, ருசியாக இருந்தாலும் அம்மாவின் சாப்பாடு எனோ பிடிப்பதில்லை. அம்மாவின் நான்கு வருட வார்த்தைகளும், சண்டைகளும் அம்மாவிடம் எனக்கு பெரிய இடைவேளையை உருவாக்கிவிட்டது.

அலுவலக வேலை இரவு 11 மணி வரை வேலை செய்து வீட்டுக்கு வந்தேன். சாப்பிடக் கூட நேரமில்லை. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் எந்த ஓட்டலும் இல்லை. எல்லாம் முடி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் ஏதாவது சாப்பிடலாம் என்று இருந்தேன்.

அம்மாவிடம் " பசிக்குது சாப்பாடு இருக்கா ? " கேட்டால் எதாவது எடுத்துக் கொள்ள தோன்றியது. எனக்கு அம்மா இப்போது மூன்றாவது மனுஷி தான். கதவை திறந்தது, " ஏன் இவ்வளவு நேரம். ஏதாவது சாப்பிட்டியா ? " என்று அம்மா கேட்டாள்.

" ஆபிஸ் வேலை ஜாஸ்தி. அங்கையே சாப்பிட்டேன்." என்றேன்.

 என் முகத்தை பார்த்து கண்டு பிடித்து விட்டார் என்று நினைக்கிறேன்.


 "சாப்பிட நா ஏதாவது செஞ்சி தரட்டா ?" என்றாள்.

உள்ளுக்குள் ஒரு மாதிரியாக இருந்தது.

”பசியில்ல..." என்றேன்.

Tuesday, June 5, 2012

நண்பேன்டா !!!

"அறிவு கெட்டவங்க... போன் பேசிக்கிட்டே வண்டிய ஓட்டுறது. யார் மேலாவது இடிக்க வேண்டியது." என்று சாலையில் போகிற கிழவர் பைக்கில் செல்லும் ஜெகனை திட்டிக் கொண்டு இருந்தார்.

காதில் ப்ளூ டுத் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு வண்டி ஒட்டும் ஜெகனுக்கு சாலையில் அவனை யார் திட்டினாலும் கேட்க போவதில்லை.

"சும்மா...சும்மா... எத்தன வாட்டிடா தேங்க்ஸ் சொல்லிட்டே இருப்ப !" என்று வண்டி ஓட்டிக் கொண்டு கேட்டான் ஜெகன்.


எதிர்முனையில், " நீ பண்ண உதவிக்கு என்னால தேங்க்ஸ் மட்டும் தான் இப்போ சொல்ல முடியும். கை மாற வேற எதுவும் செய்ய முடியாதுடா..." என்றான் ஜெகனின் நண்பன் வினோத்.

"டேய் ! ரொம்ப சென்டிமெண்ட்டா பேசற...."

"நீ மட்டும் இல்லனா. என் குடும்பமே என்ன அயிருக்கும் நினைச்சுக் கூட பார்க்க முடியல..."

ஜெகன் பேசிக் கொண்டு வரும் போது சாலை ஓறமாய் இருந்த ட்ராபிக் போலீஸ் ஜெகனை கை காட்டி நிறுத்தினார்.

ட்ராப்பிக் போலீஸ் "ஹெல்மட் மாட்டாம, போன் பேசிட்டு வண்டிய ஓட்டுற.... ரூ.1000 பைன் எடு"

 "ஸார் ! ஹெல்மட் போடாததுக்கு வேணும்னா ரூ.100 பைன் போடுங்க... நா போன் பேசல்ல..."

"என்ன பார்த்த குருடன் மாதிரி தெரியுதா. நீ தான் பேசி கிட்டே வந்தத நா பார்த்தேன்."

" நான் பேசல சார் ! பாடிட்டே வந்தேன்." என்றான்.

"நக்கல்லா ! உன் போன எடு." என்று போனை வாங்கி போலீஸ் கான்ஸ்டெபிள் பார்த்தார். கடைசி ஒரு மணி நேரமாக ஜெகன் யாருக்கும் போன் செய்யவில்லை. அவனிடம் வேறு ஏதாவது போன் இருக்கிறதா என்று கூட சோதனை செய்து பார்த்தார். அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை.

ரூ.1000 சொல்லி ரூ.500 கரக்கலாம் என்று இருந்த கான்ஸ்டெபிளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. வந்தவரை லாபம் என்று ரூ.100 பைன் போட்டார். ஜெகன் மறக்காமல் ரசீதை கேட்டு வாங்கி கொண்டான்.

பணத்தை கட்டிவிட்டு பைக் எடுத்தான்.

"என்னால மறுபடியும் உனக்கு பண செலவு" என்றான் வினோத்.

"மறுபடியும் முதல்ல இருந்தா...!" என்று சொல்லிக் கொண்ட ஜெகன் வண்டியை சுடுக்காட்டில் நிறுத்தினான்.

"உன்ன மாதிரி பிரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும். என் கடன எல்லாம் அடைச்சுட்ட . என் குடும்பம் நிம்மதியா இருக்குறதுக்கு நீ தான் காரணம்"

" நீ பண்ண காரியத்துல உன் குடும்பம் நிம்மதியா இருக்கும்னு நினைக்கிறீயா ! பண பிரச்சனனு எனக்கு ஒரு வார்த்த சொல்லியிருந்தா. நா உதவி செஞ்யிருக்க மாட்டேன். இப்போ எல்லா பிரச்சனை முடிஞ்சு போச்சு. நீ பண்ணது மாத்தமுடியுமா" என்று கோபமாக கேட்டான் ஜெகன்.

"மாத்த முடியாது தான். இனி புரிஞ்சு என்ன பண்ணபோறேன். என்ன சுடுகாடுல வரைக்கு வந்து விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டா. நா போறேன்டா" என்று சொல்லி நடந்தான் வினோத்.

கொஞ்சம் தூரம் சென்றதும், "ஜெகன் ! என் குடும்பத்த பத்திரமா பார்த்துகோடா !!" என்று கூறி தன் கல்லறைக்குள் மறைந்தான்.

ஜெகன் கண்ணில் நீர்ப்பட அவனையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

Thursday, May 10, 2012

விபச்சாரம்


ஸ்டார் ரூம்மில் புக் செய்து வோட்கா, ஸ்காச், ரம் எல்லாம் ஏற்பாடு செய்த வாடிக்கையாளர் வராத சந்தோஷத்தில் இருந்தாள் தீப்தி. எப்போதும் அறைக்குள் நுழைந்ததும், ப்ளைட் பிடிக்கும் அவசரத்திலே வாடிக்கையாளர்கள் நடந்துக் கொள்வார்கள். ஆனால், இந்த முறை ப்ளைட் லேடானதால், ஒரு நாள் பெரிய பணக்கார வாழ்க்கை வாழும் சந்தர்ப்பம். எதோ ஒரு பிஸினஸ் டீல்காக வரும் வெளிநாட்டு விருந்தினரை சந்தோஷப்படுத்த உள்ளூர் பணக்காரர் செய்த ஏற்பாடு. யார் வீட்டு பணமோ அனுபவிப்போம் என்று இருந்தாள் தீப்தி.

அறையில் இருந்து போர் அடித்ததால், கீழ் இருக்கும் பர்மிட் ரூம்முக்கு சென்றாள். தன்னை போல் மட்டும் அல்லாமல், பெரிய பணக்கார பெண்களும் ஆண்களுக்கு போட்டியாக வோட்காவை குடித்துக் கொண்டு இருந்தனர். பெரும்பாலான பெண்கள் நடுத்தர வயதில் இருப்பவர்கள். யாரும் கணவனுடன் வரவில்லை என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.

தான் தங்கியிருக்கும் ரூம் கணக்கில், தீப்தி ஒரு வோட்காவை ஆர்டர் செய்தாள். அப்போது, தனியாக அமர்ந்திருந்த ஒரு ஆண் தன்னை உற்று நோக்குவதை கவனித்தாள். தீப்தி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


 
வோட்கா வந்ததும் ஒரு க்ளாஸ்ஸில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தாள். அவளை வைத்த கண் மாறாமல் அந்த ஆள் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்தாள்.

இன்று, ஒரு நாள் ஆண் துணையில்லாமல் தூங்கலாம் என்று இருந்த தீப்தி, பெரிய ஓட்டலில் கிடைக்கும் பெரிய வாடிக்கையாளரை விட்டுவிட மனம் வரவில்லை. சும்மா தனியாக பெரிய அறையில் தூங்குவதற்கு, பெரிய வாடிக்கையாளர் பிடித்து வைப்போம் என்று நினைத்தாள் தீப்தி.

மீண்டும் பணக்கார வாழ்க்கை இந்த வாடிக்கையாளர் மூலம் கிடைக்கலாம். யார் கண்டது, பெரிய ஆளாக இருந்தால் வெளிநாட்டுக்கு கூட துணைக்கு அழைத்து செல்லலாம். பணத்துக்கு பணம், சந்தோஷத்திற்கு சந்தோஷம்.

அவளாகவே வழிய சென்று அந்த ஆண்ணின் டேபிலில் அமர்ந்தாள்.

”ஹாய் ! ஐ எம் தீப்தி “ என்று தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டாள்.

“ஐ எம் ஷாம். ஆர் யூ வெயிட்டிங் பார் சம்படி ?” என்று கேட்டான்.

“இல்ல...யூ..?” என்று கேட்க, அவனும் இல்லை என்று மறுத்து இருவரும் வோட்கா, ரம் என்று குடித்துக் கொண்டு இருந்தனர்.

தீப்தி பேச பேச பதிலளித்தானே தவிர அவனாக எதுவும் கேட்கவில்லை. பேசவில்லை. ஒரு கட்டத்தில் தானே அதைப் பற்றி எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தாள்.

“ஷல் வீ கோ டூ ரூம் ?” என்று ஷாம் கேட்க, தீப்தி முன்பே கேட்டிருக்க கூடாதா ? இவ்வளவு நேரம் இதற்கு மொக்கை போட வேண்டியதாக இருந்தது என்று நினைத்துக் கொண்டாள்.

எப்போது வாடிக்கையாளரிடம் பணம் விஷயம் பேசிய பிறகு தான் தீப்தி செல்வாள். ஆனால், பெரிய ஓட்டலில் ரூம் எடுத்திருப்பவன், இவனிடம் பேரம் பேசினால் நன்றாக இருக்காது. கண்டிப்பாக பெரிய அமௌண்ட் கிடைக்கும் என்று தீப்திக்கு தோன்றியது. அவனுடன் குடிப்போதையில் சென்றாள்.

எனோ தன் ரூம்முக்கு போக வேண்டாம் என்று ஷாம் மறுத்தான். சரி ! இருக்குகவே இருக்கிறது வெளிநாட்டு விருந்தினர்காக காலியாக இருக்கும் ரூம். தீப்தியும், ஷாமும் குடி போதையில் அறைக்குள் நுழைந்தனர்.

தான் பார்த்த வாடிக்கையாளர்களில் ஷாம் மிகவும் விஷயம் உள்ளவன். பெண்களிடம் அதிகம் பழகுபவனாலே அவளது அந்தரங்க தேவையை புரிந்துக் கொள்ள முடியும். ஷாமும் அப்படி பட்டவன் தான். என்ன சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது.

தமிழ்படங்கள் நடக்கும் சென்சார் கட் செய்யப்படும் எல்லா காட்சிகளும் அந்த அறைக்குள் அரங்கேறியது.

இரவு இரண்டு மணி வரை முழித்து இருந்தாலும், காலையில் எட்டு மணிக்கே ஷாம் எழுந்து தீப்தியை எழுப்பினான்.

”தீப்தி ! நான் காலேஜ் கிளம்பனும். ரூ.5000 பணம் கொடுத்திங்கனா போவேன்.”

“வாட் யூ மின் ???”

“ விளையாடதீங்க தீப்தி ! ஒரு நைட்க்கு 5000 வாங்குவேன். நானும் நேத்து என்ஜாய் பண்ணேன். அட் லீஸ்ட் ரூ.3000 ஆவது கொடுங்க…!!”

“ ஹோ காட்… யூ கிகலோ** !!!”



** gigolo - பணத்திற்காக பெண்ணிடம் கலவியில் ஈடுபடுப்வன். விபச்சாரன் ( இப்படி ஒரு வார்த்தை தமிழில் இருக்கிறதா தெரியவில்லை.)

Friday, April 20, 2012

துப்பாக்கி : விஜய் படத்தின் கதையல்ல

”காவேரி... ஹரி..” என்று வீரிட்டப்படி தூக்கத்தில் இருந்து எழுந்தான் அஸ்வின். யாரோ தன் வீடு புகுந்து தன் மனைவி, மகனை துப்பாக்கியால் சுடுவது போல் இருந்தது.

அஸ்வின் விழித்து எழுந்த போது காவேரி ஹரியை ஸ்கூலுக்கு துணி மாட்டிக் கொண்டு இருந்தாள்.

“ சீக்கிரம் எழுந்திறீங்க... என்ன இவ்வளவு நேரம் தூக்கம். ஹரிய ஸ்கூல்ல விடனும்” கத்தியபடி காவேரி வீட்டு வேலை செய்தாள்.

“குட் மார்னிங் டாடி.. “ ஹரி ஸ்கூலுக்கு ஷூ மாட்டிக் கொண்டு இருந்தான்.

“என்ன இவ்வளவு சீக்கிரம் ஸ்கூலுக்கு...?”

“டாடி... இப்ப டைம் 8 ஆவுது...”

“வாட்... 9 மணிக்கு கமிஷனரை மீட் பண்ணனும் “ என்று சொல்லி அவசர அவசரமாக பல் விளக்கி குளித்தான். 8.20 க்குள் தன் காலை கடனையெல்லாம் முடித்துக் கொண்டு வெள்ளை, கருப்பு பெண்ட் போட்டுக் கொண்டான். தன் துப்பாக்கியை இருப்பில் சொருகி, அதற்கு மேல் கருப்பு ஜாக்கெட் ஒன்றை மாட்டான்.

”டாடி எனக்கு உங்க துப்பாக்கி சுடுறதுக்கு... சொல்லி தரீங்களா ? “

“ உனக்கு எதுக்கு துப்பாக்கி ஷூட் பண்ணுறது...?”

”நீ இல்லாத போது யாராவது வந்தா... நான் சண்டை போடுறதுக்கு...”

“ என்ன மீறி உங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது...” என்று ஆசையாய் சொன்னப்படி தன் மகனுக்கு முத்தம் கொடுத்தான்.

“காவேரி... நான் களம்புறேம். கமிஷ்னர் எனக்காக வெயிட் பண்ணுவாரு...”

”கொஞ்சம் சாப்பிட்டு போங்க...”

அஸ்வின் செல்போன் மணி ஒளித்தது.

“அஸ்வின் களம்பியாச்சா... உங்களுக்காக வழக்கமா மீட் பண்ணுற ரெஸ்டாரண்ட்ல வெயிட் பண்ணுறேன். இன்னும் ஹாப் நவர்ல பெரிய ஆபிஸர் எல்லாம் வருவாங்க... நீங்க இல்லாம நல்ல இருக்காது...”

“ஒகே ஸார்.... இன்னும் 10 நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்...” என்று சொல்லி போனை வைத்தான்.

“சாரிம்மா...! நான் சாரோட சாப்பிடுறேன். இன்னைக்கு ஹரிய ஆட்டோவில நீ ஸ்கூல்ல விட்டுடு..” என்று தன் போலீஸ் ஜிப்பில் ஏறினான்.

”டாடி...டாட்டா “ ஹரி கை அசைக்க அஸ்வின் கை அசைத்தப்படி வண்டியில் சென்றான்.



*

சுற்று புறம் பார்த்து, சற்று பதட்டத்துடன் ரெஸ்டாரண்ட்க்குள் நுழைந்தான்.

“குட் மார்னிங் சார் !”

“வெரி குட் மார்னிங் “ நாற்காலியில் அமர சொல்லுவது போல் கை காட்டி பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான் அந்தோனி.

“யுவர் ஆர்டர் ப்ளிஸ்” என்று வெய்ட்டர் நிற்க, “10 மினிட்ஸ் “ என்றான் அந்தோனி.

பசியிருந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் அஸ்வின்.

“சார்.. இந்த ஹோட்டல... தந்தூரி சிக்கன் நல்லா இருக்கும்”

அந்தோனி பேப்பர் படித்தப்படி தலையசைத்து, மீண்டும் பேப்பர் படித்தான்.

“கிரில் சிக்கன் கூட ரொம்ப நல்லா இருக்கும்”
“ம்ம்ம்..” என்று சொன்னப்படி மீண்டும் பேப்பர் படித்தான்.

“சாப்பிட்டு...சுடா காபி குடிச்சா..ரொம்ப சூப்பரா இருக்கும்”

படித்துக் கொண்டு இருந்த பேப்பரை எடுத்து வைத்து, “ஹாப் கிரில் சிக்கன் கொண்டு வாப்பா..” என்று வையிட்டரிடம் சொன்னார்.

“சரி..! ஏதாவது கத சொல்லு...” என்றார் அந்தோனி.

ஒன்றும் புரியாமல் விழித்தவாரு அஸ்வின் இருந்தான்.

“எப்படியும் சிக்கன் வர வரைக்கும் ஏதாவது பேசி என்ன பேப்பர் படிக்க விட மாட்ட. பேசாம ஒரு கதை சொல்லு..”

“ஒரு ஹாணஸ்ட் போலீஸ் ஆபிஸர்...”

“அக்‌ஷன் ஸ்டோரியா...?”

“அக்‌ஷன், செண்டிமெண்ட்...”

“ம்.. சொல்லு...”

“ துத்துக்குடியில பெரிய ரௌடிய போலிஸ் குருப்போட போய் நம்ம ஹீரோ அரஸ்ட் பண்ணுறாரு. அடுத்த நாள் அந்த ரௌடிய கோர்ட் கூட்டிட்டு போகும் ஒரு கேங் போலீஸ் வேன் அட்டாக் பண்ணுறாங்க. இரண்டு போலீஸ்காரங்க மேல் தலையில பலமான அடி. நம்ப ஹீரோ கன் எடுத்து இரண்டு பேரு ஷூட் பண்ணுறாரு... அதுல அந்த பெரிய ரௌடியும் ஒருத்தன்”

“என்னையா அக்‌ஷன் மட்டும் தான் இருக்கு. செண்டிமெண்ட் இல்ல..!”

“இருங்க.. நம்ப ஹீரோ ஹூட் பண்ணதுல அந்த ரௌடி செத்துட்டான். ஒரு வாரம் களிச்சு ஹீரோவுக்கு கமிஷ்னர் பார்ட்டி வைக்குறாங்க.. அந்த நேரத்துல, அந்த ரௌடியோட மச்சான் மதுரையில இருந்து பெரிய ரௌடி படைய வச்சி சரியா 10 மணிக்கு ஹீரோ வீட்டுல அடிக்க சொல்லுறான். ஹீரோவோட ஒயிப், பையன் செத்துடுறாங்க..”

“உடனே.. நம்ம ஹீரோ அந்த ரௌடியோட மச்சான கொல்லுறானா...?”

“இல்ல... ஒரு வருஷமா வேலைக்கு போகமா.. அவங்க செத்த அதே நாள்ல, அதே நேரத்துல, அன்னைக்கு போட்டிருந்த அதே ட்ரெஸ் போட்டுட்டு கொல்லனும் வெயிட் பண்ணுறான். அவன்கிட்டையே வேலை சேர்ந்து அவன் கூட இருந்த ஒவ்வொருத்தரையும் பிரித்து அவங்களை கொள்ளுறான்.

" அன்னைக்கு மட்டும் அந்த நேரத்துல, அவன் வீட்டுல இருந்திருந்தா அவங்கள சாக விட்டுருக்க மாட்டான்”

அந்தோனிக்கு சேலசாக எதோ போறி தலையில் தட்டுவது போல் இருந்தது.

9:59 மணி இருந்து சரியாக 10 மணியடிக்க...

தன் இடிப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து அஸ்வின் அமரை சுட்டுக் கொலை செய்கிறான்.

”டாடி எனக்கு உங்க துப்பாக்கி சுடுறதுக்கு... சொல்லி தரீங்களா ? “ என்று தன் மகன் அவனிடம் கேட்டது அவன் காதில் ஒளித்துக் கொண்டே இருந்தது.

தன் செல்போன் எடுத்து, “ கமிஷ்னர் சார் ! என்னோட லாங் லிவ் இன்னையோட முடியுது. நான் மறுபடியும் வேலையில ஜாயின் பண்ணுறேன்” என்ற சொன்னபடி நடந்தான்.

***

ஒரு குறும்படத்திற்காக சொன்ன கதை, படம் எடுக்காததால் சிறுகதையாக மாற்றிவிட்டேன்.

Thursday, April 5, 2012

நான் மகளானேன் !

என் அம்மாவை கொன்று விட வேண்டும் போல் இருந்தது. அவளால் என் தோழிகள் எவ்வளவு அவமானம். எவ்வளவு கிண்டல். அவளால் என் கல்லூரியில் தலை நிமிர்ந்து நடக்கக் கூட முடியவில்லை. ஒரு சாயலில் நான் அம்மா மாதிரி இருப்பதால், என் தோழிகளுக்கு என்னை பார்த்ததும் அம்மா ஞாபகம் வந்து சிரித்துவிடுவார்கள். ரம்யாவை ஏன்டா வீட்டுக்கு அழைத்து சென்றோம் என்று நினைக்கும் அளவிற்கு என் அம்மாவைப் பற்றி பரப்பி விட்டாள். என் அம்மாவின் சைகையை பார்க்க என் தோழிகள் ஒரு முறை வீட்டுக்கு வந்தனர்.

"என்ன நதியா ! இவங்க தான் உன் பிரண்ட்ஸா உள்ள வாங்க..." என்று உள்ளே கையசைத்து அழைத்தாள்.

அப்போதே ஒருத்தி சிரித்து விட்டாள்.

"வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா ?" வார்த்தைக்கு ஏற்றவாரு கையசைத்து கேட்டார்.

இப்போது இன்னொருத்தி சிரித்தப்படி பதிலளித்தாள்.

"என்னம்மா சாப்பிடுறீங்க ?” விரல்களை சேர்த்து வாய்க்கு கொண்டு சென்று கேட்டார்.

"இப்போ எதுவும் வேண்டாம் ஆன்ட்டி ? என்றாள்.

"நீங்க பேசிட்டு இருங்க, நான் உள்ளே போய்ட்டு சாதம் வடிச்சிட்டு வரேன்” என்று சைகையில் சொன்னப்படி உள்ளே சென்றார்.

அம்மா உள்ளே சென்றதும், " உங்க அம்மா பரத நாட்டியம் டான்ஸரா ! சொல்லவயில்ல...!!" என்று கிண்டலாக ஒருத்தி கேட்டாள்.

சிறு குழந்தைப் போல் கையசைத்து பேச வேண்டாம் என்று பல முறை அம்மாவிடம் சொல்லியிருப்பேன். அம்மா சிறுவயதில் இருந்தே இது பழகிவிட்டது. மாற்ற முடியவில்லை என்பாள். அதைப் பற்றி இன்னும் பேசினால், அழுதுவிடுவார்.



அப்பாவுக்கு அம்மா சைகை காட்டி பேசுவது பிடிக்கும். சில சமயம் அப்பா அம்மாவை கேலி செய்தாலும், அம்மாவின் குழந்தைதனத்தை ரசிப்பார். ஆனால், மகளான எனக்கு அவமானமாக இருந்தது. அம்மாவால் என் கல்லூரியில் நான் கேலிப் பொருளாக இருப்பது வருத்தமாக இருந்தது.

அம்மாவை வைத்து கல்லூரியில் என்னை கேலி செய்வதை அப்பாவும், அம்மாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாராவது என்னை அம்மாவுடன் ஒப்பிட்டு பேசினாலே கோபம் வரும் அளவிற்கு அம்மா மீது வெருப்பு வந்தது.

நாளுக்கு நாள் அம்மா மீது கோபம் வளர்ந்ததே தவிற அன்போ, அனுதாபமோ வரவில்லை.

மாலை அலுவலகம் முடிந்தது அப்பா கொஞ்சம் பதட்டமாக வீட்டு வந்தார்.

"என்ன டென்ஷன வருறீங்க ?" என்று வழக்கமான தன் கையசைவில் அம்மா கேட்டார்.

"உங்க அம்மாவுக்கு சிரீயஸ். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க..." என்றார்.

கண்ணில் நீருடன் என்னவானது கேட்டார். டாக்டர் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னதை அப்பா சொன்னார். ஊருக்கு செல்ல துணிகளை என்னை எடுத்து வைக்க சொன்னார்.

அம்மா அழுதப்படி உட்கார்ந்திருந்தார். அம்மாவை தேற்றவோ, ஆறுதல் சொன்னவோ எனக்கு தோன்றவில்லை. அப்பா சொன்னமாதிரிகளை துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தேன்.

இரவு, பஸ்ஸில் எங்க சொந்த ஊரான ஆரணிக்கு சென்றோம். என் பாட்டியை ஐந்தாவது படிக்கும் போது பார்த்திருக்கிறேன். அவர் முகம்க் கூட எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. என் பாட்டிக்கு சரியாக காது கேட்காது, வாய் பேச்சு வராது என்று தெரியும். அப்பா டெல்லி, மும்பை, சென்னை என்று வேலை மாற்றமாகிக் கொண்டு இருந்ததால் அம்மாவின் சொந்த ஊருக்கே நான் செல்லவில்லை.

என் பாட்டி வீட்டு அடைந்ததும் சொந்தக்காரர்கள் வாசப்படி நின்றுக் கொண்டு இருந்தார்கள். அது வரை துக்கத்தை தொண்டையில் அடைத்து வைத்த அம்மா, வாய் விட்டு அழ ஆரம்பித்தார். மாமா, அத்தை என்று அம்மாவை சுழ்ந்துக் கொண்டு அழுதார்கள்.

அம்மா உள்ளே நுழைந்ததும் பெரியம்மாவை கட்டி பிடித்து அழத் தொடங்கினார். அவர்கள் இருவரும் தங்கள் அம்மாவைப் பற்றி சொல்லி அழும் போது தான் ஒன்று கவனித்தேன்.

பெரியாம்மாவும் அம்மா மாதிரி வார்த்தைக்கு செய்கை செய்து அழுதார். அவர்கள் அழுது தொண்டை அடைத்துக் கொண்டதால் பேசுவது சரியாக புரியவில்லை. ஆனால், சைகை செய்தது என்ன சொல்ல நினைத்து அழுகிறார்கள் புரிந்தது.

அப்போது மாமா அப்பாவிடம், " சின்ன வயசுல எங்க அம்மாவுக்கு இவங்க இரண்டு பேரை தான் ரொம்ப பிடிக்கும். நான் பேசுறதக் கூட இவங்க ரெண்டு பேரு தான் அம்மாவுக்கு சைகையில புரிய வைப்பாங்க. இப்போ எங்க அம்மா இல்ல. ஆனா, இவங்களால சைகையில பேசாம்ம இருக்க முடியல.." என்று அழுதுக் கொண்டு சொன்னார்.

சைகையில் அம்மா, பெரியம்மா பேசுவதற்கு காரணம் என் பாட்டி ஊமை, காது கேளாமல் இருந்தது காரணம் என்பதை புரிந்துக் கொண்டேன். தன் அம்மா மீது எவ்வளவு பாசம் இருந்திருந்தால் சைகை மொழி தங்கள் இரத்தத்தில் உரும் அளவிற்கு இருவரும் வளர்ந்திருப்பார்கள்.

பசிக்கும் போது உணவு கேட்க , தன்னை குளிப்பாட்ட, வெளியே அழைத்து செல்ல, தலை சீவிவிட என்று வாத்தைகள் அல்லாமல் சைகையால் பாட்டிக்கு புரிய வைத்திருப்பார். என் உணர்வை அம்மாவுக்கு புரிய வைக்க நான் பெரிய முயற்சி எடுக்கவில்லை. ஆனால், தன் வாழ்க்கையில் பாதி நாள் உடல் மொழி தன் அம்மாவுடன் அன்பு, பாசம், தேவையை பரிமாறியிருக்கிறார்.

என் அம்மா அவரின் அம்மா மீது வைத்த பாசம், நான் பாதிக்கூட வைக்க வில்லை என்பதை உணர்ந்தேன். ஒரு நிமிடம் என் மீது எனக்கே கோபமாக இருந்தது.

மரணம் தன் சர்பாக கண்ணீர், துயரம் என்று எதையாவது விட்டு செல்ல விரும்புகிறது. ஆனால், என் பாட்டியின் மரணம் என் அம்மா மீது பாசத்தை வளர வைக்க அடித்தளமாக இருந்தது.

Wednesday, March 21, 2012

ஊழல்

அன்-ரிசர்வ் பெட்டியில் இடம் பிடிக்க வரிசையாக அவரவர் கையில் பெட்டியுடன் நின்றுக் கொண்டு இருந்தார்கள். இடம் பிடிப்பது முடியாத காரியம் கூட்டத்தை பார்த்தவுடன் புரிந்துக் கொண்டேன். நிற்க இடம் கிடைத்தால் நல்லது என்று தோன்றியது.

என் முன் நிற்பவர் ஒரு நாளிதழ் படித்துக் கொண்டு இருந்தார். ரயில் வரும் வரை படிக்கலாம் என்று அவரிடம் பேப்பர் கேட்டேன். தான் படிப்பதை என்னிடம் கொடுத்து, வாரப் புத்தகத்தை படிக்க எடுத்தார்.

“பெருசா நியூஸ் இல்ல சார். எல்லா பக்கமும் லஞ்சம், ஊழல் தான். இத காசு கொடுத்து வாங்கி படிக்கனும்னு தலையில எழுதியிருக்கு...”

” அப்போ எதுக்கு பேப்பர் வாங்குனீங்க...?”

”நாமல எப்படி ஏமாத்துனாங்கனு தெரிஞ்சிக்க வேண்டாம் !!!”



அவரை பார்த்தால் எந்த கட்சியும் சேர்ந்தவில்லை என்று தோன்றியது. சராசரி பிரஜையின் கோபம் தான் அவரிடமும் இருந்தது. வெள்ளை வேட்டி, கட்டம் போட்ட சட்டை. பார்ப்பதற்கு கிராமத்து ஆள் போல் தெரிந்தார். ரயிலில் வந்ததும் அடித்து பிடித்து ஏறினேன். கூட்டத்தில் அந்த மனிதர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

விழுப்புரம் வந்ததும் தன் குடும்பத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அந்த மனிதரை அழைத்து வாங்கின பேப்பரை கொடுத்து டீ குடிக்க அழைத்தேன்.

"உக்கார இடம் கிடச்சுதா ?"

"மேல ஏறினதும் எட்டு பேருக்கு இடத்த போட்டுடேன்." என்று பெருமையாக சொன்னார்.

"அவ்வளவு இடம் புடிச்சிங்களே ! யாரும் சண்டைக்கு வரலையா ?"

"இரண்டு மூனு பேரு கத்துனாங்க.. நான் காதுல வாங்கிக்கல " என்றார்.

“சாதான ஆள் நீங்க... உங்க குடும்பத்துக்கு இத்தன இடத்த புடிக்கும் போது. பதவியில இருக்குறவன் செஞ்ச மட்டும் ஏன் உங்களுக்கு கோபம் வருது ? " என்றேன். சிரித்துக் கொண்டு அவர் எந்த பதிலும் சொல்ல வில்லை. இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்வார் என்றே தோன்றியது.

Thursday, January 19, 2012

வீர விளையாட்டு !

தற்கொலையை கோழைத்தனம் என்று சொல்பவர்கள் கூட மரணத்தோடு விளையாடுவதை வீர விளையாட்டு என்கிறார்கள். இந்த விளையாட்டில் உயிரை ஏன் துச்சமாக கருதுகிறார்களோ தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு விளையாட்டு விளையாடி விட வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லி மார் தட்டுபவர்கள் யாரும் களத்தில் குதிப்பதில்லை. பெண்களை கவர நினைப்பவர்களும், பரிசு தொகைக்கும் தான் களத்திற்கு வருகிறார்கள். சில சமயம் ஆணுக்குறிய அடையாளத்தையும் இழக்கிறார்கள்.

கல கலவென்று இருந்த என்னையும் இந்த வருட களத்தில் குதிக்க வைத்துவிட்டனர். எனக்கு இந்த விளையாட்டில் விருப்பமே இல்லை. ஆனால் என்ன செய்வது ? ஒவ்வொரு வருடத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவன் கலந்துக் கொள்ள வேண்டுமாம். இந்த வருடம், என் குடும்பத்துக்காக நான் களம் இறங்கியிருக்கிறேன்.



என் சித்தப்பா இந்த விளையாட்டில் இறந்ததாக அம்மா ஒரு முறை கூறியிருக்கிறார். அவரை சின்ன வயதில் பார்த்த ஞாபகம். களத்தில் வந்தவுடன் அவர் என் கண் முன் தெரிவது போல் இருந்தது. வீர விளையாட்டில் மரண பயத்தோடு களத்தில் இருந்தேன்.

'ஜல்லிகட்டு நடத்த கூடாது சொன்னாங்க... விடுவாங்களா நம்ப ஆளுங்க… நடத்தி காட்டிடோம்ள..' என்று விளையாட்டை நடத்துபவர்கள் பேசிக் கொண்டார்கள். அவர்களின் பெருமையில் என் உயிர் உஞ்சலாடிக் கொண்டு இருந்தது. எனக்கு சங்குதுவது போல் ஆட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு இளைஞர்களும் முட்டி மோதிக் கொண்டு இருந்தார்கள். நான் ஓடியதில் ஒருவன் மேல் ஏறி ஓடினேன். மிதிக்க கூடாத இடத்தில் மிதித்து விட்டேன். ' அவன் நிலைமை என்னவோ' என்ற கவலையுடன் நான்கு கால்களில் நிற்காமல் ஓடினேன்.

**

இந்த மாதம் 'பொதிகை மின்னல்' (ஜனவரி 2012) மாத இதழுக்காக நான் எழுதிய ஒரு பக்க கதை.

Tuesday, January 10, 2012

நூறடி ரோடு !!

கடவுளுக்கு மிக அருகில் இருந்து ஒரு குரல் கேட்டது. சரக்கடித்து கொண்டு, நூறடி ரோட்டில் நீண்ட நேரம் வண்டி ஓட்டிய கலைப்பில் தன் அறையில் இருக்கும் விநாயகர் படத்தை பார்த்தான் அரவிந்த். பாதி தூக்க கலக்கத்தில் கண்களை பாதி விழித்தவாரு பார்த்தான்.

“ஏய் ! எந்திரிடா...!”

தன்னை தவிற யாரும் இல்லாத அறையில் விநாயகர் படத்தில் இருந்து எப்படி சத்தம் வந்திருக்கும் என்ற அச்சம். போதையில் தள்ளாடிக் கொண்டு பாத்ரூம் கதவை திறந்து லைட் போட்டான். யாருமில்லை.

ஒரு வேளை, வண்டி ஓட்டிய கலைப்பு, போதை மயக்கத்தில் பிரம்மையாக இருக்குமோ என்று உள்ளுக்குள் நினைத்தான்.

“ஏன்டா செஞ்சே ?” என்ற அசூரக் குரல் ஒலித்தது.

“ஆ..!!!” பயத்தில் விரிட்டான். அரவிந்த் மூன்று மடங்காக மூச்சை உள்ளும், வெளியிலும் இழுத்தான். பிரம்மையல்ல.... யாரோ தன் அறையில் தான் இருக்கிறார். தான் தங்கும் அறை, பாத்ரூம் தவிற வேறு எந்த அறையும் இல்லாத சாதான பேட்சுலர் அறை. கதவும் சரியாக பூட்டியிருக்கிறது. யாரும் உடைத்துக் கொண்டு வந்திருக்க முடியாது. யார் தன்னை மறைந்திருந்து மிரட்டுவது என்று நினைத்து முடிப்பதற்குள் ஒரு உருவம் கட்டில் கீழ் இருந்து வெளியே வந்தது.

”வேஏ... !“ மீண்டும் அலறல்.

வந்தது பெண் உருவம். ரோஸ் சுடிதார். பகலில் வந்து இருந்தால் அந்த பெண்ணிடம் கடலை போட்டுயிருப்பான் அரவிந்த். நடு இரவில், பயமுறுத்திக் கொண்டு, தனக்கு தெரியாமல் தன் அறையில் இருப்பதை பார்த்ததும் நடுக்கம் தான் மிஞ்சியது.

”யாரும்மா நீ...? எப்படி என் ரூம்க்குள்ள வந்த ? “

அந்த உருவம் எதுவும் பேசவில்லை. கண்களில் குரோதம் இருந்தது. கொலைவெறி தெரிந்தது. அரவிந்த் தைரியம் வரவழைத்துக் கொண்டு, “ ஏன் முறைக்குற ! இப்ப பதில் சொல்லுறியா போலீஸ்க்கு போன் போடட்டா ?” என்று சொல்லி தன் செல்போன் எடுக்க சென்றான்.

தன் செல்போன் சுக்குநூறாக உடைந்திருந்தது. அந்த பெண் உருவத்தின் வேளையாக இருக்கும். உள்ளுக்குள் பயம் பெருகியது. தொண்டைக்குழிக்குள் எதோ உருத்தியது. வெளியே சென்று கீழ் வீட்டுக்கார்ர்களை உதவிக்கு அழைக்கலாம். ராத்திரி நேரம் ஒரு பெண் வீட்டுக்கு வந்த்தை தப்பாக நினைப்பார்கள். பயத்தில் என்ன என்னவோ சிந்தித்துக் கொண்டு இருந்தான் அரவிந்த்.



”ஏன்டா ! செஞ்சே ? “ என்றது உருவம்.

“என்ன சொல்லுற...?”

“வண்டிய ஏன்டா வேகமா ஓட்டுன...”

“ச்சே...! “ சற்று பெருமூச்சு வாங்கிக் கொண்டு, “இத கேக்குறத்துக்கா நடு ராத்திரியில் வந்த. காலையில கேட்கக்கூடாது” சற்று பயம் குறைந்து தனது நக்கல் பாணியில் பதிலளித்தான்.

”திமிரு..! நீ கொழுப்பெடுத்து போய் நூறடி ரோட்டுல புகுந்து புகுந்து போவ... சடன் ஓவர்டேக் பண்ணும் போது எத்தன பேர் பயப்படுவாங்க தெரியுமா ??”

“ரோடுனா நாலு பேரு அப்படி தான் வண்டி ஓட்டுவாங்க...அதுக்கு என்ன இப்போ ?”

அந்த உருவத்துக்கு கோபம் அதிகரித்தது.

“எதுவாக இருந்தாலும் காலையில பேசலாம். இப்ப வெளியே போ...!!” என்றான் அரவிந்த்.

“நீ தைரியமா கட் அடிச்சு ஓவர்டேக் பண்ணுவ. பயத்துல மத்தவங்க கண்ரோல் விட்டு கீழ விழுவாங்கனு யோசிக்க மாட்ட... அப்படி விழுந்தவங்க பின்னாடி வேகமா வர வண்டியில அடிப்பட்டு சாகமாட்டாங்க....”

“யாரோ செத்த மாதிரி பேசுற....”

“அமான்டா...!! செத்துட்டாங்க....!” என்று அரவிந்தை அந்த உருவம் ஓங்கி அறைந்தது.

மறுநாள், அரவிந்தின் இறங்கல் செய்தி செய்திதாளில் வந்தது. பக்கத்து தாளில், இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் தடுமாறி கீழே விழுந்ததால் பின்னாடி வந்த லாரியில் அடிப்பட்டு தன் நான்கு வயது மகளோடு இறந்த செய்தி அச்சடிக்கப்படிருந்தது. இறக்கும் போது அந்த பெண் ரோஸ் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.

Monday, January 9, 2012

காதல் திருமண அழைப்பிதழ் !!



காட்சி 1

இடம் : சென்னை, தமிழ்நாடு.

கதாநாயகனாகிய நான் அண்ணா நகரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன்.

கதாநாயகியாகிய என்னவள் மைலாப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டதேயில்லை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியாது. மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டு இருந்தோம்.


காட்சி 2

இடம்: திருச்சி, தமிழ்நாடு.

நாயகன், நாயகியாகிய நாங்கள் ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தோம். இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் எங்களுக்குள் எந்த பினைப்பும் தோன்றவில்லை. ஆனால், இறுதி ஆண்டில் தோன்றியது..... அந்த ‘காதல்’..... அதுவும் ஒரு சண்டையில். தொடங்கியது சண்டை என்றாலும்.... உறவு தொடர்ந்துக் கொண்டு இருப்பது காதலில்........

காட்சி 3

கதையின் இறுதி கட்டம்

நான் - ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

என்னவள் - வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

இப்பொது மீண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று சண்டை போட முடிவு எடுத்திருக்கிறோம். இந்த முறை வாழ்நாள் முழக்க சண்டை போட போகிறோம். ஆனால், அது இனிமையான சண்டை !

இது வரை ரகசியமாக இருந்த காதல் கதை.... இன்று எல்லோரின் கண்களுக்கு.... உங்கள் ஆசிர்வாதத்தோடு இசை நிகழ்ச்சியுடன் !!

இருப்பதியோறாம் நூற்றாண்டில் ரோமியோ, ஜூலியட் நடிக்கும்

“மற்றுமொரு காதல் கதை”

நாங்கள் எங்களின் திருமணத்திற்கு அன்புடன் அழைக்கிறோம். இந்த முறை எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத ஷேக்ஸ்பியர் இல்லை. எங்கள் தலையெழுத்தை நாங்களே எழுதிக் கொண்டோம்.

பெற்றோர்கள் ஆதரவில்லாத எங்கள் காதலுக்கு, ரசிகர்களாகிய நண்பர்களும், உறவினர்களும் வருகை தந்து இந்த காதல் கதை நீண்ட நாள் வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

இருப்பதியோறாம் நூற்றாண்டின் ரோமியோ, ஜூலியட்.

முதல் காட்சி ( திருமணம் நாள்) 21 ஆகஸ்ட், 2009. காலை 9 முதல் 10.30 மணி வரை

சிறப்பு காட்சி ( வரவேற்பு நாள்) 20 ஆகஸ்ட்,2009. மாலை 6.30 முதல் 9 மணி வரை

இடம் : இந்திரலோகம்

தலைமை : தேவந்திரன்

வாழ்த்தி ஆசிர்வதிப்பவர்கள் : பிரம்மா, சிவன், விஷ்ணு

திருமண மண்டப்பதிற்கு வரும் வழி

வேகமாக வண்டி ஓட்டி விபத்தில் வரலாம். விஷம் குடித்து எங்களை போல் தற்கொலை செய்துக் கொள்ளலாம். மலை உச்சிக்கு சென்று கீழே விழலாம்.

எங்கள் நண்பர் எமன் அங்கிருந்து சரியான நேரத்திற்கு திருமணத்திற்கு அழைத்து வருவார்.

அவசியம் குடும்பத்தோடு வாருங்கள் !!

****

நான் எழுதிய "என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

35வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைக்கும் !!!

பாலவசந்தா பதிப்பகம் : ஸ்டால் எண் - 416 - 417
டிஸ்கவரி புக் பேலஸ் : ஸ்டால் எண் - 334
புதுப்புனல் : ஸ்டால் எண் - 442

Friday, June 10, 2011

காமம் இருந்த பொழுது

கிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், கணவனால் திருப்தியடையாதவர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் என்று பலர் சஞ்சலிக்கும் இருப்பிடம். நானும் என் மனைவிக்கு துரோகம் செய்ய இங்கு வருவேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை.

என் பெயர் சேகர். மார்க்கெட்டிங் சேல்ஸ் எக்ஸ்கிட்டிவ். பல முறை மனைவியால் ஏமாற்றப்பட்டவன். மனைவியால் ஏமாற்றப்பட்டவன் என்றவுடன் என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டால் என்ற அர்த்தமில்லை. மனைவி செய்ய வேண்டிய சராசரி கடமை எனக்கு செய்யாததால் ஏமாற்றப்பட்டவன்.



எனக்கும், காமினிக்கும் திருமணமாகி ஐந்து வருடமாகிறது. பெற்றோர்களால் பார்த்து செய்த திருமணம். தஞ்சாவூர் அருகே இருக்கும் ஊரில் காமினி படித்து, வளர்ந்தவள். எங்களுக்கு திருமணமாகி 1825 நாட்களில் ஐம்பது முறை உறவு வைத்திருந்தாலே அதிகம். மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதை கணக்கு வைத்து சொல்கிறானே... மிக கேவலமான ஆள் என்று என்னை நீங்கள் நினைக்கலாம். தப்பில்லை. காம ஆசைகள் உச்சத்தில் இருக்கும் போது கூட மனைவி மறுத்தலால், என் ஏமாற்றத்தை எண்ணிக்கையை எண்ண வேண்டியதாகிவிட்டது.

திருமணம் ஆன இரண்டாவது மாதத்திலே காமினி கர்ப்பமாகிவிட்டாள். குழந்தைக்கு எதுவுமாகக் கூடாது என்று அவள் பயந்தாள். குழந்தை பிறக்கும் ஒன்பது மாதவரை எங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. குழந்தையை விட அந்த உறவு எனக்கு பெரிதாக தெரியவில்லை. சிஸ்ரிங் மூலம் பெண் குழந்தை பிறந்தது. கத்திப்பட்ட உடம்பு என்பதால் காமினியை நான் குழந்தை பிறந்து நான்கு மாதம் வரை தொந்தரவு செய்யவில்லை. அதன் பிறகு நான் தொட்டப்போது அவள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் கரு உருவாகிவிடுமோ பயந்தாள். காண்டம் பயன்படுத்தலாம் என்றேன். காண்டம் முழுமையான பாதுகாப்பு இல்லை என்று காண்டம் கவரில் குறிப்பிட்ட்தை காட்டினாள். 90 சதவிகிதம் பாதுகாப்பாக இருந்தாலும், 10 சதவிகிதத்தில் மீண்டும் கருவுற்றால் கரு கலைக்க வேண்டும் அல்லது குழந்தையை மீண்டும் சுமக்க வேண்டும் என்று பயந்தாள்.

மளிகைப் பொருள், மருந்துப் பொருள் வாங்கும் போதெல்லாம் எக்ஸ்பெரி டேட் பார்த்து வாங்கும் போது பாராட்டியதில் பின்விளைவு என்றே தோன்றியது.

டாக்டர் எக்ஸ், அந்தரங்கம் போன்ற சனிக்கிழமை இரவு டி.வி நிகழ்ச்சியை காட்டி காமினி சம்மதிக்க வைத்து உறவுக் கொள்வேன். ஒன்றை வருடம் கலித்து என் மனைவியுடன் நான் சந்தோஷமாக இருந்தேன். அதன் பிறகு பெரிய அவஸ்தை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலை நாங்கள் படுத்த படுக்கை துணி எல்லாம் தொய்க்கப் போட்டாள். பல் விளக்கும் முன்பே காலையில் என்னை குளிக்க சொன்னாள்.

”நாம என்ன பாவ காரியமா செய்தோம்”

“நாம சுத்தமா இல்லேனா குழந்தைக்கு ஆகாது” என்றாள்.

இத்தோடு முடியவில்லை. போட்டிருந்த துணி தலைக்கு குளிக்கும் முன்பு நனைக்க வேண்டும். மறந்துப் போய் வேறு துணியை தொட்டுவிட்டால் அதையும் நனைக்க வேண்டும். கிட்டதட்ட சாவு வீட்டுக்கு சென்று வந்தால் என்ன செய்ய வேண்டுமா உறவு வைத்த பிறகு செய்ய வேண்டும் என்றாள். அன்று இரவு அனுபவித்த சந்தோஷம் அடுத்த நாள் காமினி போடும் கேடுப்பிடியில் தொலைந்துவிடும். காமினி மனம் கஷ்டப்படக்கூடாது என்று அவள் சொல்லப்படியே செய்தேன். நாளாக நாளாக.... இரவு வைத்துக் கொண்ட உறவு விடியற்காலை 5, 6 மணியானது. உறவு வைத்துக் கொண்ட பிறகு போட்ட துணியை தவிற வேறு துணியை நனைக்க வேண்டாமே என்பதற்காக தான்.

காமம் வீட்டில் நேரம், காலம் கிடையாது என்பார்கள். என் வீட்டில் மட்டும் உறவு வைத்துக் கொள்ள நேரம் உண்டு. நாள் உண்டு. ஆம் ! மாத விலக்கு வந்து 25 நாட்கள் பிறகு உறவுக்கே சம்மதிப்பாள். 16-24 நாட்களில் உறவு வைத்துக் கொண்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புண்டாம்.

அடுத்த குழந்தை வேண்டாம் என்பதற்காக சராசரி கணவனுக்கு கிடைக்க வேண்டிய சந்தோஷம் எனக்கு கிடைக்கவில்லை. சந்தோஷம் கிடைத்த நாளில் அடுத்த நாளில் நிலைப்பதில்லை.

காமம் மட்டுமே திருமண வாழ்க்கை என்று நான் சொல்லவில்லை. அவளின் அன்பு மேல் துளிக் கூட எனக்கு சந்தேகமில்லை. என்னை தவிற இன்னொரு ஆண்ணை நினைத்துப் பார்க்க மாட்டாள். அவள் மீது எனக்கு என்று நம்பிக்கை உண்டு. ஆனால், உறவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காவிட்டால் திருமண வாழ்க்கை எப்படி கசந்து போகிறது என்பதை அனுபவப்புர்வமாக உணர்ந்தேன்.

உறவுக்காக இன்னொரு திருமணம் செய்து என் மனைவியை உயிருடன் கொலை செய்ய விரும்பவில்லை. இன்னொருத்தரின் மனைவியுடன் கள்ள உறவு வைத்து அடுத்த குடும்பத்தை கெடுக்க நினைக்கவில்லை. அதே சமயம் என் மனைவியின் பயத்தையும் என்னால் போக்கவும் முடியவில்லை. அந்த சந்தோஷம் பல நாட்களாக எனக்கு மறுக்கப்பட்டுயிருக்கிறது. அதன் விளைவு தான் இப்போது கிழக்கு கடற்கரை சாலை விடுதியில் இருக்கிறேன்.

என் நண்பன் குமார் அடிக்கடி விபச்சாரி வீடுகளுக்கு செல்வான். அவன் மூலமாக தான் கிழக்குக் கடற்கரை சாலையில் அறை எடுத்தேன். குமார் அனுப்பிய பெண் வந்தாள்.

அவள் பெயர் ? கேட்கவில்லை. கேட்டாலும் உண்மையான பெயர் வராது.

புதுப்பெண் போல வெட்கப்பட்டாள். அவளின் சேர்க்கைத்தனத்தில் அவள் புதியவள் அல்ல என்று தெரிந்தது. வாடிக்கையாளர் புதுப்பெண்ணை தொடுவதுப் போல் நினைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் வெட்கப்படுவாளாம்.

எதற்கு தேவையில்லாமல் வெட்க நடிப்பு என்றேன். வெட்கத்தை தூக்கிப் போட்டு என் தோள் மேல் கைப் போட்டு பேசினாள். வெட்கம் இல்லாமல் ஒரு பெண்ணை ரசிக்க முடியாது என்று அப்போது தான் உணர்ந்தேன். ஒர் இரவுக்கு வெட்கம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.

அவள் அனுமதியுடன் அவளின் ஆடைகளை கலைத்தேன். பெண்ணின் நிர்வாணம் எனக்கு புதியது இல்லை என்றாலும் மனைவியை தவிற இன்னொரு பெண்ணின் நிர்வாணத்தை பார்ப்பது முதல் முறை. அவளை கட்டில் படுக்க வைத்து பாம்புப் போல் அவள் உடல் மேல் எளிந்தேன். முத்தமிட்டேன். என் ஒவ்வொரு அசைவுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தாள். ஆனால், என்னுடைய எந்த தீண்டலுக்கும் அவள் தன் உணர்ச்சியை காட்டிக் கொள்ளவில்லை. வேறுமையாக படுத்துக் கிடந்தாள்.

” என்ன பிடிக்கலையா....!” என்றேன்.

அவள் சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“பணம் வாங்குனதுக்கு அப்புறம் பிடிக்கலைனு சொன்னா விட போறிங்களா...! இன்னைக்கு நீங்க நாலாவது கஸ்டமர் அதான் பிலிங் அதிகம் காட்ட முடியல...” என்றாள்.

எந்த உணர்வும் இல்லாமல் பிணம்ப் போல் படுப்பவளை அனுபவிக்க மனம் வரவில்லை. விபச்சாரியிடன் கூட நான் எதிர்பார்க்கும் சந்தோஷம் மறுக்கப்படுகிறது. என் ஆடையைப் போட்டுக் கொண்டு வெளியே அறையை விட்டு வெளியே வந்தேன்.

Tuesday, February 1, 2011

அறிவாளியும், நாதாரியும்

வெளியே செல்லும் முன் பத்து ஐந்து நிமிடம் மௌனமாக இருக்க வேண்டும் என்று ராஜகோபால் பல முறை சொல்லியும் பத்மா கேட்பதில்லை. கிளம்பும் போது எதையாவது மறந்து வைத்து விடுவான். இல்லை என்றால் கோபமாக வண்டி ஓட்டுவான். வெளியே செல்லும் முன் கிடைக்கும் பத்து நிமிட அமைதி தான் ஞாபகமாக எல்லாவற்றையும் எடுத்து செல்லவும், அமைதியாக வண்டி ஓட்டவும் உதவும். அது பத்மாவுக்கு புரிவதில்லை.

எப்போதும் வெளியே செல்லும் போது தான் எதையாவது பேசிக் கொண்டே இருப்பாள். இன்றும் அப்படி தான். பத்மா திட்டுவதை காதில் வாங்கிக் கொண்டே வெளியே வந்தான் ராஜகோபால். அவள் திட்டுவது புதுசு இல்லை என்றாலும், இன்று கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டாள்.

காலை, ராஜகோபாலிடம் படித்த மாணவன் அவன் வீட்டுக்கு வந்திருந்தான்.

" ஸார் ! நா ஜோசப். உங்க கூட படிச்ச ஸூடண்ட். என்ன தெரியுதா !" என்றான்.

" உள்ள வாப்பா. வருஷத்துக்கு இர நூறு பேரு என் கிட்ட படிக்கிறாங்க. எல்லாரையும் ஞாபகம் வச்சிக்க முடிய மாட்டிங்குது" சிரித்தப்படி தன் மாணவனை வரவேற்றான் ராஜகோபால்.

"இல்லனா மட்டும் இந்த மனுஷன் ஞாபகம் வச்சு எல்லாத்தையும் செஞ்சிடுவான்" என்று ராஜகோபலின் மனைவி உரக்க திட்டியபடி அடுப்பங்கரையில் பாத்திரத்தை உருட்டினாள்.

வந்த மாணவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், ராஜகோபாலுக்கு பலகிவிட்டது. ஜோசப் மெதுவாக உள்ளே நுழைந்தான்.

" நீ எந்த பெட்ச்ல என் கிட்ட படிச்ச..."

"2003 பெட்ச். உங்க க்ளாஸ்ல நா தான் நாதாரி பையன்"

தன் வகுப்பில் அதிகம் கேள்வி கேட்கும் மாணவனை ’அறிவாளி’ என்றும், அதிகம் சேட்டை செய்யும் மாணவனை ’நாதாரி பயல்’ என்று அழைப்பது ராஜகோபாலின் வழக்கம். இப்படி, அவர் வகுப்பு எடுக்கும் ஒவ்வொரு க்ளாஸிலும் ஒரு அறிவாளியும், நாதாரி பயலும் கண்டிப்பாக இருப்பார்கள். அந்த வகுப்பில் இரண்டு மாணவர்களுக்கு பிரோகிதர் இல்லாமல் அதுவே பட்ட பெயராக நாமம் சுட்டப்படுவார்கள்.

வகுப்பில் நுழைந்ததும், அறிவாளி மாணவனிடம் எதாவது படிக்க சொல்லி அவன் கேள்வி கேட்பதை தடுப்பார். நாதாரி மாணவனை அடிக்காமல் அந்த வகுப்பை விட்டு வெளியே போக மாட்டார். அவன் எப்போ சேட்டை செய்வான் என்று அவர் பிரம்பு காத்துக் கொண்டு இருக்கும்.

தன்னை ’நாதாரி’ என்று ஜோசப் சொன்னதும் ராஜகோபாலுக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் தான் ஆசிரியரானது போல் இருந்தது. தன் வார்த்தைக்கு மதிப்பில்லாத வீட்டில் தன் பழைய பாடத்தை கேட்ட மாணவனை பார்க்கும்ப் போது தொழைந்த சந்தோஷம் கிடைத்தது போல் உணர்ந்தார்.

"பத்மா ! காபி கொண்டா ". அமர்ந்தப்படி கொஞ்ச அதிகார தோரனையில் மாணவனுக்கு காபி கேட்டான்.

“பிரிஸ்பால் ஸ்டிபம் எங்கே இருக்காரு தெரியுமா ஸார் ?”

“அவரு ரிடையர் ஆயிட்டு, பையனோட அமெரிக்காவுல செட்டில் ஆய்ட்டாரு”

ராஜகோபாலும், ஜோசப்பும் தங்கள் பழைய கதைகளை பேசிக் கொண்டு இருந்தனர்.

பதினைந்து நிமிடமாகியும் ராஜகோபால் பத்மாவிடம் சொன்ன காபி வரவில்லை. இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது முகம் தெரியாத ஒருவன் உள்ளே நுழைந்தான்.

"யாருப்பா நீ"

" ஸார் ! இவன் தான் ரமேஷ். நம்ம க்ளாஸ் அறிவாளி. என் கூட தான் வந்தான்"

" ஓ...அப்படியா ! எப்படிப்பா இருக்க. உள்ள வராம ஏன் வெளியேவ இருந்த "

" இல்ல சார். கார் வைக்க இடமில்ல. வச்சிட்டு வரதுக்கு நேரமாச்சு"

"ஸார் ! நேரமாச்சி. நான் வரேன்." காபிக்காக காத்திருந்த ஜோசப் சமையலறையில் பத்மாவுக்கு கேட்குபடி சொன்னான்.

"இருப்பா.... பத்மா....". இது வரை மனைவியை அழைத்த குரல் கத்துவது போல் மாறியது.

முகம் கடுகடுப்புடன் இரண்டு காபி டம்பலரை வந்து வைத்து விட்டு சென்றாள். வந்த மாணவர்களை பார்த்து ஒரு புன்முறுவல் சிரிப்புக் கூட சிரிக்கவில்லை.

ஜோசப்பும், ரமேஷூம் காபியை குடித்த வேகத்தில், ஜோசப் தன் திருமண பத்திரிகையை நீட்டினான்.

“அவசியம் குடும்பத்தோட என் கல்யாணத்துக்கு வரனும்” என்றான்.

அழைப்பிதழ் வைத்த இரண்டு நிமிடத்தில் ஜோசப்பும், ரமேஷூம் சென்றனர்.
மனைவியிடம் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்று கேட்கும் தைரியம் ராஜகோபாலுக்கு இல்லை. அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்துக் கொள்ள , " பத்மா ! எனக்கும் ஒரு காபி !" என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் முகம் சிவப்பாய் இருந்ததை பார்த்தான்.

" காபி பொடியில்ல. வந்தவங்களுக்கு போட்டு கொடுத்திட்டேன். அவங்களால எனக்கும் காபியில்ல..."

வாழ்க்கை முழுவதும் மாணவர்களுக்கு தமிழ் வகுப்பு எடுத்துவிட்டு, மனைவிக்கு தமிழ் பன்ப்பாடு தெரியாமல் போனதை இந்த வயதுக்கு மேல் சொல்லி என்ன பயன்.

" இந்த மனுஷன ஞாபக வச்சி இரண்டு பேரு வந்துட்டா பெரிய மனுஷன் நினைப்பு. போய் காபி பொடி வாங்கிட்டு வாங்க " என்று கணவனை விரட்டினாள்.

பத்மா கோபமாக பேசினாலும், உண்மை தான். வேலை ஓய்வு பெற்ற பிறகு எந்த மாணவன் தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டு வந்திருக்கிறான். யார் தன்னை நினைவில் வைத்துக் கொண்டு இருக்க போகிறார் என்று நினைத்தப்படி காபி வாங்க சென்றான்.

**

சிங்கப்பூர் விமான நிலையம்.

முரளி தன் குழந்தையுடன் சிங்கப்பூர் ஆர்லைஸ் விமானத்தை பிடிக்க சென்றுக் கொண்டு இருந்தான். விமானம் பிடிக்கும் நோக்கத்தில் தங்கள் பெட்டியை இழுத்துக் கொண்டு சென்ற போது ரவி மீது மோதிவிடுகிறது.

" ஆ....."

" ஸாரி சார் ! தெரியாம பட்டுடிச்சு...." என்றாள் முரளியின் மனைவி.

மனைவி வரதாததை திரும்பி பார்த்த அவளின் கணவன் முரளி, " என்னம்மா ஆச்சு...!" கொஞ்சம் பதற்றத்துடன் வந்தான்.

அடிப்பட்டவன் கொஞ்சம் நேரத்தில் அடையாளம் கண்டுக் கொண்டான் முரளி.

" டேய் அறிவாளி ! நீயாடா......"

ரவி முகம் கொஞ்சம் மாறியது. தன்னுடன் பள்ளியில் படித்த முரளி என்று அடையாளம் கண்டுக் கொண்டான்.

" ஏய் ! நீ நாதாரி பய தானே "

தன் கணவன் ’நாதாரி’ என்று ரவி சொன்னதும் கோபம் வந்ததும். முரளி தன் மனைவியிடம் ரவியை பற்றி சொல்கிறான்.

கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தனர்.

"அது என்ன அறிவாளி, நாதாரி பட்ட பேரு " என்று முரளியின் மனைவி கேட்க, " அந்த பேர எங்களுக்கு வெச்சதே எங்க ராஜகோபால் சார் தான்" என்றான் முரளி.

LinkWithin

Related Posts with Thumbnails