வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label E-mail. Show all posts
Showing posts with label E-mail. Show all posts

Wednesday, October 12, 2011

உடல் பயிற்சி செய்பவர்களுக்கு !!!

தினமும் தேக பயிற்சி, டயட், யோகா என்று தங்கள் உடல் மேல் அதிகம் அக்கரை செலுத்தும் நண்பர்களுக்காக வந்த மின்னஞ்சல். அனுப்பியவர் நாகேஷ்வர். அதன் தமிழாக்கம்.

**

தினமும் நடப்பதும், சைக்கிளில் செல்வதும் உடலுக்கு நல்லது என்கிறார்கள். அப்படியென்றால், எல்லா போஸ்ட்மென்களின் உடல் சீரும் சிறப்புமாகவும் இருக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க நீச்சல் அடிப்பது நல்லது. அப்படியென்றால், சுறா மீன் தினமும் நீந்திக் கொண்டு தான் இருக்கிறது. மீன், தண்ணீர் இரண்டையும் தவிர எதையும் சாப்பிடுவதில்லை. அப்படி ஏன் சுறா குண்டாக இருக்கிறது?

தினமும் ஓடினால் சக்கரை வியாதி குறையும் என்கிறார்கள். அதிகம் ஓடும் முயல் ஏன் 15 வருடங்கள் வாழ்கிறது?

ஆமை ஓடுவதில்லை. அதிகம் நடப்பதில்லை. எதுவுமே செய்வதில்லை. ஆனால், 450 வருடங்கள் வரை உயிருடன் இருக்கிறது.

**

மின்னஞ்சல் இத்தோடு முடிகிறது.

இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ......

உடல்பயிற்சிக்கு குட்பை !
உணவிற்கும், தூக்கத்திற்கும் ஹாய் ! ஹாய் !!

Thursday, July 28, 2011

நியாயமான முடிவு ?

ஒரு கிராமத்தில் இரண்டு ரயில் தண்டவாளம் இருக்கிறது. முதல் தண்டவாளம் பழுதடைந்து, இயங்கப்படாமல் இருக்கிறது. மற்றொன்று சீராக இயங்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ரயில் இரண்டாவது தண்டவாளத்தில் தான் வந்து செல்லும்.

கூட்டமாக நான்கு குழந்தைகள் ரயில் வே தண்டவாளத்தில் விளையாட வருகிறார்கள். ஒரு குழந்தை பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடலாம் என்று சொல்ல, மற்ற மூன்று குழந்தைகள் மறுத்ததோடு இல்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கும் தண்டவாளத்தில் விளையாட செல்கிறார்கள். முதல் குழந்தை மட்டும் இயங்கும் தண்டவாளத்தில் விளையாட பயந்து, பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடுகிறது.



குழந்தைகள் அழகாக சிரித்து விளையாடிக் கொண்டு இருக்கும் போது ரயில் ஒன்று வேகமாக வருகிறது. விளையாடிக் கொண்டு இருக்கும் மூன்று சிறுவர்களும் ரயில் வருவதை கவனிக்கவில்லை. அடுத்த தண்டவாளத்தில் தனியாக இருக்கும் சிறுவனும் ரயில் வருவதை பார்க்கவில்லை. ரயில் வேகமாக மூன்று சிறுவர்களை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது.

அந்த சமயத்தில் நீங்கள் அங்கு வருகிறீர்கள். வேகமாக வரும் ரயிலை பக்கத்து தண்டவாளத்தில் மாற்ற வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி செய்தால் தனியாக இருக்கும் சிறுவன் இறந்து விடுவான். எதுவும் செய்யவில்லை என்றால் மூன்று சிறுவர்கள் இறந்துவிடுவார்கள். இப்போது, மூன்று சிறுவர்களை காப்பாற்ற நினைப்பீர்களா ? ரயில் போகட்டும் என்று சும்மா இருப்பீர்களா ?

என்ன முடிவு நீங்கள் எடுப்பீர்கள் ??

மூன்று சிறுவர்கள் உயிரை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு சிறுவன் உயிர் பெரியதில்லை. ஒரு சிறுவன் உயிர் போனாலும் மூன்று சிறுவர்களை காப்பாற்றுவேன் என்று பலர் பதில் அளிப்பார்கள். நானும் அப்படிதான் பதிலளித்தேன். ஆனால், அது தவறான முடிவு.

அஜாக்கிரதையாக ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்களுக்காக பாதுகாப்பாக விளையாடும் சிறுவனை எப்படி நாம் பலிக் கொடுக்க முடியும் ? ஆபத்தான தண்டவாளத்தில் விளையாடியது அந்த மூன்று சிறுவர்களின் தவறு. அதற்கான தண்டனை மரணம் என்றால் அதை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். இரண்டாவது தண்டவாளம் பழுதடைந்து இயங்கப்படாமல் இருக்கிறது. மூன்று சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் ரயில் பாதையை மாற்றினால், ரயிலில் வரும் நூறு பேர் உயிர்களுக்கும் யார் உத்தரவாதம் கொடுப்பார்கள்.

மூன்று முட்டாள் சிறுவர்களுக்காக ஒரு சிறுவனை பலிக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்கள் ரயில் எந்த நேரமும் வரலாம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் பொறுப்பு.

இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல... ஒரு அலுவகத்திலும், அரசியலிலும், நாட்டிலும் பெரும்பான்மையில் லாபத்திற்காக சிறுபான்மை நசுக்கப்படுகிறார்கள் இல்லையென்றால் தண்டிக்கப்படுகிறார்கள். எந்த பக்கம் நியாயம் இருக்கிறது என்று அலசப்படுவதில்லை.

**

மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் தங்கரங்கனுக்கு நன்றி :)

Friday, October 29, 2010

Reaction and Response



ஹோட்டலில் ஒரு பெண் மீது கரப்பான்பூச்சி அவள் மீது விழ, கத்தி ஆரபாட்டம் செய்துவிட்டாள். கத்தக்கள்ளி, குச்சுபுடி என்று பல நடனங்கள் ஆடியும் அவள் உடலில் இருந்து அது அகரவில்லை. அவள் பக்கத்தில் இருக்கும் கணவன் தட்டி விட, அந்த கரப்பான் இன்னொரு பெண் மீது பவ்வியமாக அமர்ந்தது.

அந்த பெண் செய்தது இரண்டு மடங்கு நடனமாடி கரப்பான்பூச்சி தள்ளிவிடுகிறாள். அந்த கரப்பான் காபி கப் எடுத்து வரும் சர்வர் மீது கால் மேல் கால் போடாத குறையாக ஏறிக்கொண்டது.

அவன் அசரவில்லை. பொறுமையாக இருந்தான். அதன் அசைவுகளை தீவிரமாக கவனித்தான். தன் கையில் காபி கப்பை வைத்துவிட்டு, அது தப்பிக்க முடியாத நேரம் பார்த்து பிடித்து தூக்கி வெளியே ஏறிந்தான்.

அந்த ஹோட்டலில் நடந்த கலாட்டாவுக்கும் கரப்பான்பூச்சிக்கும் ஏதாவும் சம்மந்தமுண்டா ? இல்லை.

கரப்பான்பூச்சி தூக்கி ஏறிய சர்வர் காட்டிய நிதானத்தை அந்த இரண்டு பெண்மணிகள் காட்டவில்லை.

எந்த பிரச்சனையையும் நம் உடனே எதிர்விளைவை காட்டுவதிற்கு பதிலாக நாம் பொறுமையாக கையாள வேண்டும்.

வீட்டில் அப்பா திட்டுயதும், வாடி சென்று குழந்தைகள் அழுகிறது.

முதலாளி நம்மை திட்டிய பிறகு வேலையில் கோபத்தை காட்டி மேலும் தவறுகள் செய்கிறோம். நாம் தவறுகள் செய்வதற்கும், நம்மை திட்டியவர்களுக்கு எந்த சம்மந்தமில்லை. நாம் காட்டிய எதிர்விளைவு தான் காரணம்.

மேல் குறிப்பிட்ட பிரச்சனையில் பெரிதாக தெரிந்தது. காரணம், அந்த பெண் எதிர்விளைவை உடனே காட்டியது தான். சர்வர் பொறுமையாக கையண்டதால் பிரச்சனை மேலும் வளராமல் இருந்தது.

வரி விலக்கில்லாத ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால்

We should not react in life, we should always respond.
Reactions are always instinctive whereas responses are always intellectual


***

மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் சந்திருவுக்கு நன்றி :)

Wednesday, October 27, 2010

மின்னஞ்சலில் வந்த நகைச்சுவை

ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் " நெத்து நா தாஜ் ஹோட்டல்ல நாஸ்தா துண்ணேன்"

"மெய்யாலுமா !" என்று வியந்தான் இரண்டாம் பிச்சைக்காரன்.

"நெத்து ஒரு மவ ராசன் 100 ரூபா பிச்ச போட்டாரு. அந்த தூட்ட வச்சு சோலா ஹோட்டல்ல 1000 ரூபாய்க்கு துண்ணேன். சப்லையரு தூட்ட கேட்க இல்ல சொன்னேன்."

" அடி பின்னியிருப்பாங்களே ! "

" இரண்டு அடி அடிச்சு போலீஸ்கிட்ட விட்டுட்டாங்க "

"அப்புறம் ??"

" என் கிட்ட இருந்த 100 ரூபா கொடுத்தேன். விட்டுட்டான் "

***

கணவன் மனைவி இடையே பெரிய சண்டை.

கோபத்தில் மனைவி தன் அம்மாவிடம் போனில், " எனக்கும் அவருக்கும் மறுபடியும் பெரிய சண்ட. நா உன் கூட வந்திருக்கேன்" என்றாள்

" இல்லம்மா... ! உன் புருஷன் செஞ்ச தப்புக்கு வருத்தப்படனும். நா வந்து உன் கூட தங்குறேன் " என்றாள்.

***


கடவுளை கேட்டால் எதுவும் கிடைக்கும் என்று அம்மா சொல்ல, அப்பாவிடம் கேட்க பயந்து கார்த்திக் என்ற சிறுவன் ஐந்நூறு ரூபாய் கேட்டு கடவுளுக்கு கடிதம் எழுதினான்.

ஆனால், எந்த விலாசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ரொம்ப நேரம் யோசித்தான். எந்த அட்ரஸ் போட்டால் சீக்கிரம் போகும் என்று யோசித்து கடைசியில் நிதியமைச்சருக்கு அனுப்புகிறார். அவர் அலுவலகத்தில் கடிதத்தை பார்த்து நிதி அமைச்சருக்கு தெரிவிக்கின்றனர்.

சிறுவன் மனது புண் படக்கூடாது என்பதற்காக கடவுள் பெயரில் இர நூறு ரூபாய் அனுப்பி வைக்கிறார்.

கொஞ்ச நாட்களில் அந்த சிறுவனிடம் இருந்து பதில் வருகிறது. நிதி அமைச்சர் ஆர்வமாக திறந்து படித்தார்.

அன்புள்ள கடவுளுக்கு,

நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்தது.

எதற்கும் வரி போடும் அரசாங்கம், நீங்கள் அனுப்பிய ஐந்நூறு ரூபாய்க்கு ரூ.300 வரி வாங்கி கொண்டு தான் அனுபியிருக்கிறார்கள்.

அன்புடன்,
கார்த்திக்

Wednesday, March 24, 2010

MTC பஸ்ஸின் கஸ்டமர் சர்வீஸ்

சமிபத்தில் வந்த மின்னஞ்சலின் தமிழாக்கம். பஸ்ஸில் பயணம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக பயணுள்ளதாக இருக்கும்.

***

நான் சென்னை தொரைப்பாக்கத்தில் வேலை செய்கிறேன். ஜெயின் கல்லூரியில் இருந்து டைடல் பார்க் வரை பஸ்ஸில் வருவேன். அங்கிருந்து ட்ரெயின் பிடித்து வீட்டுக்கு செல்வேன். கேளம்பாக்கத்தில் ( 19B,21H) வரும் பஸ் பெரும்பாலும் டைடல் பார்க்கில் நிற்காது. அதனால், நான் T51 பஸ் மட்டும் டைடல் பார்க் நிறுத்தத்தில் நிற்பதால் அதில் ஏறி வருவேன். சமிப காலமாக 19B பஸ் கூட டைடல் பார்கில் நிற்க தொடங்கியது.



இன்று 9.28 டைடல் பார்க் ட்ரெயின் பிடிப்பதற்காக அவசரமாக 8:30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டேன். ஜெயின் கல்லூரியில் இருந்து 19B பஸ்ஸை சரியாக 8:45 மணிக்கு ஏறினேன். கன்டக்டரிடம் டைடல் பார்க்க்கு டிக்கேட் கேட்ட போது பஸ் அங்கு நிற்காது என்றார். ஒன்று சிக்னலில் இறங்க வேண்டும் அல்லது டைடல் பார்க்கின் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்க வேண்டும். நான் பல முறை பேசியும் வாதாடியும் கன்டக்டர் கேட்பதாகயில்லை. நான் தினமும் 19Bயில் தான் வருகிறேன் என்று சொல்லியும் அவர் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார். என் மொபைலில் 'MTC' பஸ் பற்றிய கம்ப்ளைன்ட் நம்பர் (98843 01013) ஒன்றை வைத்திருந்தேன். அந்த நம்பருக்கு போன் போட்டு கன்டேக்டர் வழக்கமான ஸ்டாப்பிங்கில் பஸ் நிறுத்த முடியாது என்று கூறியதை கூறினேன்.

எதிர் முனையில் இருப்பவர் கன்டக்டரிடம் போனை கொடுக்க சொன்னார். ஆனால், கன்டக்டர் போன் வாங்கி பேச மறுத்துவிட்டார். பிறகு, என்னுடன் பேசியவர் பஸ் ரிஜிஸ்ட்ரெஷன் நம்பர் கேட்டார். இப்போது பஸ் எங்கு இருக்கிறது என்ற விபரத்தையும் கேட்டார். நான் கந்தன்சாவடியில் இருப்பதை கூறினேன். கொஞ்ச நேரத்தில் அவர்களை அழைத்து பேசுவதாக கூறினார். நான் எப்படி இவர்களை தொடர்பு கொள்வார்கள் என்ற ஆர்வத்தில் இருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், Wireless transmeter மூலம் டிரைவரிடம் பஸ் நிறுத்த கத்தினார். பஸ் டிரைவருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இது அவருக்கு முதல் அனுபவமாக கூட இருக்கலாம். பஸ் டிரைவர் வண்டியை நிறுத்தி transmeter யில் பேசுவதை கேட்டார்.

எதிர்முனையில் பஸ் டைடல் பார்க்கில் ஏன் நிறுத்துவதில்லை என்று கேட்டார். அதற்கு டிரைவர் டைடல் பார்க்கில் பஸ்ஸில் நிறுத்துவதாகவும், சென்ற முறை கூட நிறுத்தியதாகவும் கூறினார். பிறகு, எதிர்முனையில் இருப்பவர் கன்டக்டர் அழைத்து ஏன் பயணியிடம் அப்படி பதிலளித்ததாக கேட்டார். கன்டக்டரால் ஒன்றும் பேசமுடியவில்லை. நிலைமை புரிந்துக் கொண்ட டிரைவர் எதிர்முனையில் இருப்பவரிடம் கன்டக்டர் புதியவர் என்று சொல்லி சமாளித்தார். பிறகு, எதிர்முனையில் இருப்பவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு, பஸ் டைடல் நிறுத்ததில் நிற்கும் என்று கூறினார். நான் நன்றி கூறிவிட்டு என் இடத்திற்கு வந்தேன்.


என்னுடன் பயணம் செய்த பயணிகள், டிரைவர், கன்டக்டர் அணைவரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். ஒரு சிலர் என்னிடம் கம்ப்ளைன்ட் எண்ணை வாங்கிக் கொண்டனர். எனக்கும், டிரைவர், கன்டேக்டர் உட்பட இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

அரசாங்கத்தை குறை சொல்லும் நேரத்தில் இது போன்ற செயல்களை குறிப்பிட்டு பாராட்டலாமே.

Complaint Phone no. for MTC bus: 9884301013,9445030516, 9383337639

Forward மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் சிதம்பரம் அவர்களுக்கு நன்றி !!

Wednesday, March 3, 2010

சச்சினின் 'ஆப்பு' ரைசல்



சமிபத்தில் சச்சின் 147 பந்தில் 200 ரன் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை புரிந்தார். அப்படி சாதனை செய்த சச்சினை ஐ.டி துறையில் இருப்பவர்கள் அவருக்கு அப்ரைசல் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை.

மேனேஜர் : 200 ரன் எப்படி எடுத்திருக்க...

சச்சின் : பேட்டுல அடிச்சு

மேனேஜர் : அது இல்ல... 200 ரன்ல எத்தன 4, 6 அடிச்ச

சச்சின் : 25 * 4 (100), 3 * 6 (18) அடிச்சேன்

மேனேஜர் : அப்போ 28 பால்ல 118 ரன் எடுத்திருக்க...! அப்புறம் எப்படி எல்லாம் ரன் எடுத்த

சச்சின் : 12 இரண்டு ரன் ( 24), 58 ஒரு ரன் (58) எடுத்தேன்.

மேனேஜர் : மொத்ததுல 98 பால்ல 200 ரன் எடுத்திருக்க..

சச்சின் : ஆமா...!

மேனேஜர் : அப்படினா 49 பால்ல ( 147 - 98) நீ வெஸ்ட் பண்ணியிருக்க... ஒரு பாலுக்கு ஒரு ரன் எடுத்திருந்தாலும் 49 ரன் இன்னும் எடுத்திருக்கலாம். நீ நல்ல வேல பண்ணியிருந்தாலும், நாங்க எதிர்பார்த்த அளவுக்கு பண்ணல. அதனால என்னுடைய ரேட்டிங் 3 மூனு தான். இன்கிரிமென்ட் கிடையாது.

சச்சின் : $*$**

***

எமதர்மராஜர் ஒருவனிடம் வந்து " பத்து வருடத்திற்கு எந்த நொய் நொடி வராது. நீ சந்தோஷமாக சுந்திர பறவை போல் வாழலாம்" என்கிறார்.

அவர் சொல்வதை நம்பி அவனும் வெளியே வந்து விபத்தில் சிக்கி உயிர் துறக்கிறான்.

நரகத்தில் வந்து தன்னிடம் "ஏன் பொய்" சொன்னதாக கேட்கிறான். அதற்கு எமதர்மராஜர் " மன்னிச்சிடுப்பா ! மாச கடைசி. பத்து பேரையாவது போட்டு தள்ளனும்" என்றார்.

***

சாப்ட்வேர் கம்பெனி புதிதாக ஒருவன் வேலைக்கு சேர்கிறான். அவன் அமர்ந்திருக்க்கும் இடத்தில் ஏ.சி சரியாக வேலை செய்யவில்லை. போன் எடுத்து

அவன் : ஏ.சி. சரியா வேலை செய்யல்ல... என்னையா வேல செய்றீங்க...!

(எதிர்முனையில்) நீ யார் கிட்ட பேசுற தெரியுமா !

அவன் : தெரியாது !

(எதிர்முனையில்) இந்த கம்பெனி Vice President கிட்ட...

நீ யார் கிட்ட பேசுற தெரியுமா...

(எதிர்முனையில்) தெரியாது !

அவன் : நல்ல வேல... ( போனை வைத்திவிட்டான்)

(மின்னஞ்சலில் வந்த ஆங்கில நகைச்சுவையின் தமிழாக்கம் )

Wednesday, September 23, 2009

கமலஹாசன் ஒரு தீர்க்கத்தரிசியா ???

சமிபத்தில் எனக்கு வந்த Forward மெயிலில் ….

சமீப நாட்களாக கமல்ஹாசன் குறித்து இணையத்தில் உலவும் செய்தி.



'கமல் 1978-ல் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் கில்லராக நடித்திருந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, அதே போல பெண் களைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ ராமன் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டான்.

1988-ல் 'சத்யா'வில் வேலையில்லா இளைஞனாக நடித்தார் கமல். 90-கள் முழுக்க நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம்.

1992-ல் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி ஓடுவதாக 'மகாநதி'யில் கதை. 1996-ல் நிஜமாகவே ஃபைனான்ஸ் கம்பெனிகள் முதலீடுகளை லபக்கி ஓடின.

2000-ல் இந்து-முஸ்லிம் கலவரம் குறித்த 'ஹேராம்' படம் வெளியானது. 2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலை.

2003-ல் 'அன்பே சிவம்' படத்தில் ஒரு காட்சியில் கமல் சுனாமி பற்றி பேசுவார். 2004-ல் நிஜமாகவே வந்தது சுனாமி.

2006-ல் 'வேட்டையாடு விளையாடு' படம் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றியது. தொடர்ந்த நாட்களிலேயே நொய்டாவில் மொனீந்தர், சதீஷ் என்னும் தொடர் கொலைகாரர்கள் பிடிபட்டனர்.

இப்போது 'தசாவதாரம்' படத்தில் அமெரிக்காவில் இருந்து உலகை அழிக்கும் கிருமி இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதாகச் செல்லும் கதை. இப்போது அமெரிக்காவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சல் கிருமிகள்தான் உலகெங்கும் பரவுகின்றன!'

இந்த மெயில் படித்தவுடன், "எப்படி எல்லாம் உக்காந்து யோசிக்கிறாங்களோ " நினைச்சேன்.

இப்போது கமல் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படம் வந்துள்ளது. அதே சமயம், அண்ணா பிறந்த நாளுக்காக கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் ஈடுப்பட்ட 10 தீவிரவாதிகளை தமிழக அரசு விடிவித்துள்ளது.

உண்மையிலே, கமல் ஒரு தீர்க்கத்தரிசியாக இருந்தால் வெளியான தீவிரவாதிகளில் நிலைமை....???

அட பாவிங்களா !!!!!!!

என்னையும் உங்கள மாதிரி யோசிக்க வச்சிட்டிங்களே !!!

Tuesday, July 28, 2009

குழந்தை சொன்ன நகைச்சுவை கதை



எதிர் நாட்டு படையெடுப்பில் மன்னர் செய்வதறியாமல் இருந்தார். எதிரியின் படைகள் 2000 பேர்கள். தன்னிடம் இருப்பதும் வேறும் 500 மட்டும் தான். எதிரி முற்றுகையிட்டால் எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் குழம்பி போய் இருந்தார். அப்போது அவர் குழப்பத்தை தீர்க்க ஒரு முனிவர் வந்தார்.

மன்னர் தன் நிலைமையை முனிவரிடம் சொன்னர். அதற்கு, முனிவர் " படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுங்கள்" என்கிறார். மன்னர் வியப்பாக முனிவரை பார்த்தார். போர் வர போகிறது. யுத்த திட்டங்கள் வகுத்தாக வேண்டும். இவர் என்னவென்றால் தன் படை வீரர்களுக்கு "விளக்கெண்ணெய் கொடுக்க சொல்கிறாரே !" என்று குழம்பினார்.

எப்படியும் 2000 பேர் கொண்ட படை வீரர்களை சமாளிப்பது கடினம். முனிவர் சொல்லுவதை செய்து பார்ப்போம் என்று தன் படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் விளக்கெண்ணெய் குடித்த படை வீரர்கள் பத்து பத்து பேராக கழிவறை சென்று வந்தனர். இதை பார்த்த மன்னருக்கு பயம் மேலும் அதிகரித்தது.

எதிரி படை வந்து விட்டதாக மன்னருக்கு செய்தி வருகிறது. எதிரி நாட்டு மன்னரிடம் ஒரு தூதுவன் சமாதானம் பேச அனுப்பியிருந்தான். மன்னருக்கு ஒரு ஆச்சரியம். சண்டைக்கு என்று வந்தவன் எப்படி சமாதானம் பேச ஆள் அனுப்புகிறான் புரியாமல் குழம்பி நின்றான். அப்போது தூதுவன் " ஒற்றன் மூலம் உங்கள் படை பலத்தை பார்த்தோம். பத்து பத்து பேராக உள்ளேவும் வெளியே வருவதை நோட்டம் விட்டோம். உங்கள் படைபலம் 5000 பேர் என்று தெரிந்த பிறகு தான் சமாதானம் பேச வந்திருக்கிறோம்" என்றான்.

மன்னை புக்கையுடன் சமாதானம் பேசினார்.

"அன்றிலிருந்து விளக்கெண்ணெய் குடித்தால் எல்லா பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது." - இப்படி ஒரு கதை சொன்னது பகுத்தறிவாளரோ அல்லது எழுத்தாளரோ இல்லை. ஐந்தாவது படிக்கும் சிறுவன்.

குழந்தை எழுத்தாளர் பற்றி நடந்த பயிற்சி பட்டறை முனைவர். நடராஜன் அவர்கள் சொன்ன தகவல். குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நகைச்சுவை திறன் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொன்ன கதை இது.

Sunday, April 19, 2009

சிறுவன், சிறுமி - நீதி கதை

மின்னஞலில் வந்த ஆங்கில கதையின் தமிழாக்கம்….

ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாட வருகிறார்கள். சிறுவன் கோலி குண்டுகளுடனும், சிறுமி இனிப்புகளுடனும் வந்தார்கள்.

சிறுவன் சிறுமியிடம் கோலி குண்டுகளுக்கு இனிப்பு மாற்றிக் கொள்ளலாம் என்று கூறுகிறான். சிறுமியும் அதை ஏற்றுக் கொள்கிறாள்.

சிறுவன் பெரிய கோலிகளை சிறுமிக்கு தெரியாமல் தன்னுடன் வைத்து கொண்டு சிறிய கோலிகளை சிறுமிக்கு கொடுக்கிறான். ஆனால், சிறுமி தன்னுடன் இருக்கும் எல்லா இனிப்புகளையும் சொன்னப்படி சிறுவனுக்கு கொடுத்துவிடுகிறாள்.

இரவு தூங்கும் போது…

சிறுமி நிம்மதியாக தூங்குகிறாள். ஆனால், சிறுவன்… தன்னை போல் அவளும் பெரிய இனிப்பை மறைத்து வைத்துக் கொண்டு சிறிய இனிப்பு தன்னிடம் கொடுத்திருப்பாளோ என்ற சந்தேகத்துடன் தூங்காமல் இருக்கிறான்.

நீதி : - நாம் சதவீதம் உண்மையாக இல்லாமல் இருந்தால், மற்றவர் நூறு சதவீதம் உண்மையாக இருந்தாலும் அவர்கள் மேல் நமக்கு சந்தேகம் வரும்.

LinkWithin

Related Posts with Thumbnails