வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, March 31, 2015

தி.க தோழர்களே சமக்கால பிரச்சனைக்கு வருவோம் !!

பெரியாரால் பல சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கடவுள் மறுப்பு, பெண் சுதந்திரம், தாழ்த்தப்பட்டவர்களாக போராடியது என்று பட்டியலிட்டே போகலாம். அவர் அப்போதைய போராட்டங்கள் அந்த காலத்தில் முதன்மை பிரச்சனையாக இருந்தது. அதனால், மக்களின் ஆதரவு இருந்தது. பலர் வரவேற்றார்கள். 

ஆனால், நாற்பது வருடங்கள் கடந்து இன்னும் அதே பிரச்சனையை திராவிடக் கழகத் தோழர்கள் முன்னேடுத்து செல்வதை ஏற்புடையதாக தெரியவில்லை. ‘கடவுள் மறுப்புடையவன்’ கோயில் பக்கம் போவதில்லை. கோயிலுக்குள் அனுமதிக்கப்படாதவனுக்கே அது பெரிய விஷயமாக தெரியவில்லை. 

“என்னை கோயிலுக்கு அனுமதிக்கலனப் போடா.தலைக்கு மேலே ஆயிரம் வேலை இருக்கு. மூனு வேல சாப்பாட்டுக்கே பிரச்சனையா இருக்கு. இதுல கோயில் வேறய்யா !!” என்று அடுத்த விஷயத்திற்கு சென்றுவிடுகிறான். அப்படி இருக்கும் போது தற்போதிய போராட்டம் பெரிய பாதிப்பு ஏற்படுத்த போவதில்லை. 

பெரியாரின் கொள்கையைப் படி சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்டவர்கள் ‘தாலி’ என்பது ‘Optional’ ஒரு விஷயமே. கட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. கலவியின் போதும், கணவன் – மனைவி சண்டையின் போது தாலியை எடுத்தெறிவதும், அடக்கு கடையில் வைப்பதும் அன்றாட விஷயமாக மாறிவிட்ட சூழலில் இருக்கிறோம். அதை ’தாலி அகற்றும் நிகழ்ச்சி’ என்று நடத்துவதில் சமூகத்தில் என்ன பாதிப்பு ஏற்படுத்தப் போகிறது. தாலியை விட பெண்கள் சுதந்திரத்திற்கு வேலியாக பல விஷயங்கள் தற்காலத்தில் இருக்கிறது. அதை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது. 



பெண் சுதந்திரத்திற்காக போராடிய பெரியார் தற்போது இருந்திருந்தால்… 

** பெண் உடை மாற்றுவதை ரகசியமாக படம் பிடிக்கும் கேமிராக்களை உடைத்து எறிய வேண்டும் என்று போராட்டம் நடத்திருப்பார். 

** ஹோட்டல், ஜவுளிக்கடை, ஹோட்டல், ரெஸாட்டுகளில் சோதனை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பார். அந்தரங்கத்தை ரகசியமாக படம் பிடிக்கும் நிறுவனத்தை மூட போராட்டம் நடந்திருக்கும். 

** பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் ஆண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்கிற சட்டத்தை கொண்டு வர போராடியிருப்பார். 

பெரியாரால் பெண்கள் வீட்டில் இருந்து சுதந்திரம் அடைந்துவிட்டார்கள். ஆனால், சமூகத்தில் சுதந்திரம் அடையவில்லை. அதற்கான போராட்டத்தை இவர்கள் கையில் எடுக்க வேண்டும். தற்காலத்தில், தாலி ஒரு அலங்கார பொருள் மட்டுமே !!! 

தமிழக அரசு நடத்தும் டாஸ்மார்க்கிலே மாட்டு இறைச்சி கிடைக்கிறது. டாஸ்மார்க் மூடப்பட வேண்டும் என்று போராட்ட நடந்துவதற்கு பதிலாக, “மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் தேவையா ?” என்கிற கேள்வி எழுகிறது. 

திராவிடக்கழக போராட்டத்தை விமர்சிக்கும் ’சும்மா’ நண்பர்கள், தற்போதைய நிகழ்க்கால பிரச்சனையை பற்றி போராடப்போவதில்லை. ’சும்மா’ நண்பர்கள் சிந்திக்கப் போவதில்லை. அவர்களுக்கு திராவிடக் கட்சிகளை விமர்சிப்பது தான் பிரதான நோக்கம். அரசியல் நோக்கம் இருக்கிறது. 

அதே சமயம், போராடும் திராவிடத் தோழர்கள் தேவையான பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பாமல், எந்த தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு விஷயத்திற்கு போராட்டத்தையும், நேரத்தையும் செலவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. போராட்டுபவர்கள் தங்களுக்காக இல்லாமல், தங்களை எதிர்த்து பேசுபவர்களுக்கும் சேர்த்து தான் போராடுகிறார்கள். அதில் அரசியல் நோக்கம் இருக்கக் கூடாது.

பெரியாரின் போராட்டங்கள் அப்படி தான் இருந்தது. தற்போதைய சமக்காலப் போராட்டங்கள் அப்படி நடக்கவில்லை.

Friday, March 27, 2015

அடைக்கபட்ட கதவுகளின் முன்னால்…

22 வருடகளுக்கு மேல் முடிவதையாத ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் புத்தகம். 

இராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் பிரபாகரன் உயிரோடு (?) இல்லை. அதை செய்த சிவராசன், தனு உயிருடன் இல்லை. கொலைக்கு உடந்தையாக இருப்பவர்களை மட்டும் இத்தனை வருடங்கள் சிறையில் இருக்கிறார்கள். 




பேரறிவாளன் குற்ற மற்றவன், குற்றவாளி என்கிற வாதம் தேவையில்லாதது. இனி அதைப் பற்றி பேசி எந்த பலனுமில்லை. தனது பாதி வாழ்க்கையை சிறையில் தண்டனையாக கழித்தவனுக்கு உதவியாக இருக்கப் போவதுமில்லை. அவனின் மிச்ச வாழ்க்கையாவது தன்னுடன் இருக்க வேண்டும் என்கிற ஒரு தாயின் விருப்பத்தை புரிந்துக் கொள்ள இந்த நூல் உதவுகிறது. 

ஈழத்துக்கு பிறகு பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் உயிர்கள் தான் தமிழ்நாட்டில் அதிக அரசியல் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த அரசியலுக்கும், இவர்களின் வழக்கும் முடிவுக்கு வரவருவதாக தெரியவில்லை. 

மூவர் உயிரின் அரசியலுக்கு பின்னால் ஒரு தாயின் போராட்டம் இருக்கிறது. தனது மகனை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற போராட்டம். 

அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கிறது. இதில் எது வெல்லும் என்று அவரவர் பண பலத்தை பொருத்தது. இந்த நியாயங்களுக்கு நடுவில் ஒரு அபலத் தாயின் குரல் சராசரி மக்கள் காதில் படுவது மிகவும் கடினம். அப்படி காதில் வாங்கியவர்கள் முடிந்தவரை நான்கு காதுகளுக்கு எடுத்துச் செல்லலாம். 

இதில் இந்த தாய் வெற்றி பெற்றாலும், இழந்த 22 வருடங்கள் மீண்டு வரப்போவதில்லை என்கிற சோகம் இருந்துக் கொண்டே இருக்கும்.

Wednesday, March 25, 2015

Naanu Avanalla, Avalu - கன்னடப் படத்திற்கு தேசிய விருது !

கன்னட சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் இரவல் வாங்குபவர்கள் என்ற கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏற்கனவே, ‘லூசியா’ படம் என்னை மிகவும் பாதித்திருந்தது. 

இப்போது, ”Naanu Avanalla, Avalu” படம் தமிழில் “நான் வித்யா” புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. தோழி Living Smile Vidya பாத்திரத்தை ஏற்று நடித்த சஞ்சாரி விஜய்க்கு சிறந்த நடிகனுக்காக தேசிய விருது பெற்றிருக்கிறார். 

சஞ்சாரி விஜய் நடித்த மற்றொரு படமான “ஹரிவு” படத்திற்கு சிறந்த கன்னட படத்திற்கான விருது பெற்றுள்ளது. அந்த படத்தின் கதையை விக்கியில் படித்ததுமே, இது போன்ற படங்கள் கன்னடத்தில் எடுக்கிறார்களா ? என்று பிரமிக்க வைக்கிறது. 

”Naanu Avanalla, Avalu, Harivu இரண்டு படத்தை இந்த வார இறுதியில் பார்த்து விட வேண்டும்.

Monday, March 23, 2015

தொலைந்து போனவர்கள் !!

சென்ற சனிக்கிழமை பள்ளி நண்பர்கள் சந்திப்பு நடந்தது. சென்ற வருடம் செப்டம்பரில் நடந்த முதல் நிகழ்வில் 19 பேர் கலந்துக் கொண்டோம். இந்த முறை ஒன்பது பேர் மட்டுமே !! 

எண்ணிக்கை முக்கியமில்லை. பள்ளி நண்பர்களின் சந்திப்பு தான் மிக முக்கியமாகனது. பள்ளிக்காலத்தில் எனக்கு இருந்த முகத்தை இது போன்ற நிகழ்வுகள் தான் நினைவுப்படுத்துகிறது. 

நான் எப்படி இருந்தேன் என்பதை அவர்கள் சொல்லும் போது தான் நான் எப்படி மாறியிருக்கிறேன் என்று உணர முடிகிறது. என்னை நானே சுய பரிசிலனை செய்ய வேண்டியதாக இருக்கிறது. நான் மட்டுமல்ல... பள்ளியில் இருப்பது போல் யாராலும் கடைசி வரை இருக்க முடியாது. 

ஒவ்வொரு மாற்றத்திற்கும் நம்மை சுற்றியிருக்கும் சொந்தம், உறவு, அலுவலகம், வியாபாரம் என்று பல காரணங்கள் இருக்கிறது. வாழ்க்கையில் சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் மாறித்தான் ஆக வேண்டும். நாம் மாறாமல் இருந்தால் ஏமாற்றப்படுவோம் என்பது தான் நிதர்சன உண்மை. 

இந்த நிகழ்வின் போது சா.கந்தசாமியின் “தொலைந்து போனவர்கள்” மனதில் வந்து போனது. 



தாமோதரன் தனது பள்ளி நண்பர்களை மீண்டும் சந்தித்து, பள்ளி நாட்களில் எடுத்துக் கொண்ட புகைப்படம் போல் ஒன்று எடுத்துக் கொள்ள விரும்புகிறான். ஆனால், பள்ளி நாட்களில் இருந்த நட்பு அப்படியே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேலைகள். எதிர்பாராத நட்பின் சந்திப்பைக் கூட அலட்சியமாக பார்க்க வைக்கிறது. பாவம் தாமோதரன். அவம் மட்டும் அப்படியே இருக்கிறான் என்று நினைக்கும் போது, ராமசாமி பாத்திரம் தோள் மேல் கை போடுகிறான். “ச்சீ கைய எடு” என்று சொல்லும் வாக்கியத்தில் அவனும் பழைய நண்பனாக இல்லை என்றே தெரிகிறது. 

நகர வாழ்க்கையிலும், பொருளாதார வாழ்க்கையிலும் எத்தனையோ நண்பர்கள் இருப்பார்கள். உண்மையில் அவர்களோடு நாம் நாமாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. ஆனால், பள்ளி, கல்லூரி காலத்து நண்பர்களிடம் நாம் நாமாக நடந்துக் கொள்ள முடியும். அப்படி கிடைத்த வாய்ப்பிலும் நம்முடைய தற்போதைய ஸ்டேடஸ், பணப்பலத்தை காட்ட நினைப்பவர்கள் தன்னுடைய முகத்தை தொலைக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை தான் காட்டுகிறது. 

பள்ளி நண்பர்கள் சந்திப்பில் வர முடியாமல் போக நியாயமான காரணம் இருக்கலாம். ஆனால், இதுப் போன்ற சந்திப்பில் கலந்துக் கொள்ளும் போது நமக்கு உற்சாகம் பிறக்கும். மற்ற வேலையில் உத்வேகமாய் செயல்பட முடியும் என்பது அனுபவப் புர்வமாக உணர்கிறேன். 

இவ்வளவு சொல்லும் நான் அடுத்த நிகழ்வுக்கு வர முடியாமல் போகலாம். ஆனால், அப்படி ஒன்று எக்காரணத்திற்காகவும் நடந்து விடக் கூடாது என்பது தான் என் விருப்பம்.

Thursday, March 5, 2015

ராமராஜனாகும் சிவகார்த்திகேயன் !!

காட்சிப்பிழை இதழா ? நிழல் இதழா ? என்று சரியாக நினைவில் இல்லை. ‘மான் கராத்தே’ வெற்றியின் போது, சிவ கார்த்திகேயன் ஒரே மாதிரியான படங்களை நடிப்பதால் மற்றொரு ராமராஜனாக மாறிவிடுவார் என்று குறிப்பிட்டிருந்தனர். அதனால் என்னவோ தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முன்னிருத்திக் கொள்ளும் முயற்சியில் “காக்கி சட்டை” படத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. வழக்கமான வில்லன் சதிதிட்டத்தை முறியறிக்கும் பழைய மசாலா கதை தான். (ஆக்ஷன் கதை என்றால் தமிழ் சினிமாவில் இது தவிர வேறு இல்லை)



பலரை கலாய்த்து பழகிய சிவ கார்த்திகேயனுக்கு, தான் என்ன செய்தால் மக்கள் கலாய்ப்பார்கள் என்பது நன்றாக தெரிந்திருக்கிறது. அறிமுகக் காட்சியிலும், இறுதிக் காட்சியிலும் காக்கி சட்டை போட்டுக் கொள்கிறார். மற்றப்படி படம் முழுக்க சாதாரண உடை தான். பன்ச் டைலாக் பேசும் போது ரஜினி, அஜித்தை துணைக்கு அழைத்துக் கொள்கிறார். சண்டைக் காட்சியில் கூட இருட்டிலும், மழை நடுவில் சண்டை போடுகிறார். (சண்டைப் போடுவது சிவகார்த்திகேயன் தானா என்பது சந்தேகமாக இருக்கிறது)

மற்றப்படி தனது காமெடியை நம்பித்தான் மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்.
தன் மீது இருக்கும் இமேஜ்யை மாற்ற நினைப்பது மிகப் பெரிய காரியம். தனது முந்தைய பாணியை முழுவதும் கைவிட்டு நடித்தால் தான் அது சாத்தியமாகும். சிவ கார்த்திகேயன் ”காக்கி சட்டை” படத்தில் செய்யவில்லை என்று தோன்றுகிறது.

தெலுங்கு நடிகர் சுனில் நூறு படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகனாக நடித்தவர். இரண்டு படங்களில் நகைச்சுவை நாயகனாவும் நடித்திருக்கிறார். தான் நாயகனாக நடிக்கும் மூன்றாவது படத்தில் இறுதி காட்சியில் வில்லனை அடிக்க வேண்டும் என்பதற்காக சிக்ஸ்-பேக் வைத்துக் கொண்டார். அந்த படத்தில் நகைச்சுவை பகுதியை அலிக்கான் சுமந்து நடிக்க வைத்தார். தனது வழக்கமான நடிப்பில் மாறுப்பட்டு நடித்தார்.

சிவகார்த்திகேயன் தனது இமேஜ்யை மாற்ற விரும்பினால், அப்படி வித்தியாசமான முயற்சி செய்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் சிவகார்த்திகேயன் இன்னொரு ராமராஜன் தான்.

LinkWithin

Related Posts with Thumbnails