வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, June 10, 2011

காமம் இருந்த பொழுது

கிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், கணவனால் திருப்தியடையாதவர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் என்று பலர் சஞ்சலிக்கும் இருப்பிடம். நானும் என் மனைவிக்கு துரோகம் செய்ய இங்கு வருவேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை.

என் பெயர் சேகர். மார்க்கெட்டிங் சேல்ஸ் எக்ஸ்கிட்டிவ். பல முறை மனைவியால் ஏமாற்றப்பட்டவன். மனைவியால் ஏமாற்றப்பட்டவன் என்றவுடன் என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டால் என்ற அர்த்தமில்லை. மனைவி செய்ய வேண்டிய சராசரி கடமை எனக்கு செய்யாததால் ஏமாற்றப்பட்டவன்.எனக்கும், காமினிக்கும் திருமணமாகி ஐந்து வருடமாகிறது. பெற்றோர்களால் பார்த்து செய்த திருமணம். தஞ்சாவூர் அருகே இருக்கும் ஊரில் காமினி படித்து, வளர்ந்தவள். எங்களுக்கு திருமணமாகி 1825 நாட்களில் ஐம்பது முறை உறவு வைத்திருந்தாலே அதிகம். மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதை கணக்கு வைத்து சொல்கிறானே... மிக கேவலமான ஆள் என்று என்னை நீங்கள் நினைக்கலாம். தப்பில்லை. காம ஆசைகள் உச்சத்தில் இருக்கும் போது கூட மனைவி மறுத்தலால், என் ஏமாற்றத்தை எண்ணிக்கையை எண்ண வேண்டியதாகிவிட்டது.

திருமணம் ஆன இரண்டாவது மாதத்திலே காமினி கர்ப்பமாகிவிட்டாள். குழந்தைக்கு எதுவுமாகக் கூடாது என்று அவள் பயந்தாள். குழந்தை பிறக்கும் ஒன்பது மாதவரை எங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. குழந்தையை விட அந்த உறவு எனக்கு பெரிதாக தெரியவில்லை. சிஸ்ரிங் மூலம் பெண் குழந்தை பிறந்தது. கத்திப்பட்ட உடம்பு என்பதால் காமினியை நான் குழந்தை பிறந்து நான்கு மாதம் வரை தொந்தரவு செய்யவில்லை. அதன் பிறகு நான் தொட்டப்போது அவள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் கரு உருவாகிவிடுமோ பயந்தாள். காண்டம் பயன்படுத்தலாம் என்றேன். காண்டம் முழுமையான பாதுகாப்பு இல்லை என்று காண்டம் கவரில் குறிப்பிட்ட்தை காட்டினாள். 90 சதவிகிதம் பாதுகாப்பாக இருந்தாலும், 10 சதவிகிதத்தில் மீண்டும் கருவுற்றால் கரு கலைக்க வேண்டும் அல்லது குழந்தையை மீண்டும் சுமக்க வேண்டும் என்று பயந்தாள்.

மளிகைப் பொருள், மருந்துப் பொருள் வாங்கும் போதெல்லாம் எக்ஸ்பெரி டேட் பார்த்து வாங்கும் போது பாராட்டியதில் பின்விளைவு என்றே தோன்றியது.

டாக்டர் எக்ஸ், அந்தரங்கம் போன்ற சனிக்கிழமை இரவு டி.வி நிகழ்ச்சியை காட்டி காமினி சம்மதிக்க வைத்து உறவுக் கொள்வேன். ஒன்றை வருடம் கலித்து என் மனைவியுடன் நான் சந்தோஷமாக இருந்தேன். அதன் பிறகு பெரிய அவஸ்தை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலை நாங்கள் படுத்த படுக்கை துணி எல்லாம் தொய்க்கப் போட்டாள். பல் விளக்கும் முன்பே காலையில் என்னை குளிக்க சொன்னாள்.

”நாம என்ன பாவ காரியமா செய்தோம்”

“நாம சுத்தமா இல்லேனா குழந்தைக்கு ஆகாது” என்றாள்.

இத்தோடு முடியவில்லை. போட்டிருந்த துணி தலைக்கு குளிக்கும் முன்பு நனைக்க வேண்டும். மறந்துப் போய் வேறு துணியை தொட்டுவிட்டால் அதையும் நனைக்க வேண்டும். கிட்டதட்ட சாவு வீட்டுக்கு சென்று வந்தால் என்ன செய்ய வேண்டுமா உறவு வைத்த பிறகு செய்ய வேண்டும் என்றாள். அன்று இரவு அனுபவித்த சந்தோஷம் அடுத்த நாள் காமினி போடும் கேடுப்பிடியில் தொலைந்துவிடும். காமினி மனம் கஷ்டப்படக்கூடாது என்று அவள் சொல்லப்படியே செய்தேன். நாளாக நாளாக.... இரவு வைத்துக் கொண்ட உறவு விடியற்காலை 5, 6 மணியானது. உறவு வைத்துக் கொண்ட பிறகு போட்ட துணியை தவிற வேறு துணியை நனைக்க வேண்டாமே என்பதற்காக தான்.

காமம் வீட்டில் நேரம், காலம் கிடையாது என்பார்கள். என் வீட்டில் மட்டும் உறவு வைத்துக் கொள்ள நேரம் உண்டு. நாள் உண்டு. ஆம் ! மாத விலக்கு வந்து 25 நாட்கள் பிறகு உறவுக்கே சம்மதிப்பாள். 16-24 நாட்களில் உறவு வைத்துக் கொண்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புண்டாம்.

அடுத்த குழந்தை வேண்டாம் என்பதற்காக சராசரி கணவனுக்கு கிடைக்க வேண்டிய சந்தோஷம் எனக்கு கிடைக்கவில்லை. சந்தோஷம் கிடைத்த நாளில் அடுத்த நாளில் நிலைப்பதில்லை.

காமம் மட்டுமே திருமண வாழ்க்கை என்று நான் சொல்லவில்லை. அவளின் அன்பு மேல் துளிக் கூட எனக்கு சந்தேகமில்லை. என்னை தவிற இன்னொரு ஆண்ணை நினைத்துப் பார்க்க மாட்டாள். அவள் மீது எனக்கு என்று நம்பிக்கை உண்டு. ஆனால், உறவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காவிட்டால் திருமண வாழ்க்கை எப்படி கசந்து போகிறது என்பதை அனுபவப்புர்வமாக உணர்ந்தேன்.

உறவுக்காக இன்னொரு திருமணம் செய்து என் மனைவியை உயிருடன் கொலை செய்ய விரும்பவில்லை. இன்னொருத்தரின் மனைவியுடன் கள்ள உறவு வைத்து அடுத்த குடும்பத்தை கெடுக்க நினைக்கவில்லை. அதே சமயம் என் மனைவியின் பயத்தையும் என்னால் போக்கவும் முடியவில்லை. அந்த சந்தோஷம் பல நாட்களாக எனக்கு மறுக்கப்பட்டுயிருக்கிறது. அதன் விளைவு தான் இப்போது கிழக்கு கடற்கரை சாலை விடுதியில் இருக்கிறேன்.

என் நண்பன் குமார் அடிக்கடி விபச்சாரி வீடுகளுக்கு செல்வான். அவன் மூலமாக தான் கிழக்குக் கடற்கரை சாலையில் அறை எடுத்தேன். குமார் அனுப்பிய பெண் வந்தாள்.

அவள் பெயர் ? கேட்கவில்லை. கேட்டாலும் உண்மையான பெயர் வராது.

புதுப்பெண் போல வெட்கப்பட்டாள். அவளின் சேர்க்கைத்தனத்தில் அவள் புதியவள் அல்ல என்று தெரிந்தது. வாடிக்கையாளர் புதுப்பெண்ணை தொடுவதுப் போல் நினைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் வெட்கப்படுவாளாம்.

எதற்கு தேவையில்லாமல் வெட்க நடிப்பு என்றேன். வெட்கத்தை தூக்கிப் போட்டு என் தோள் மேல் கைப் போட்டு பேசினாள். வெட்கம் இல்லாமல் ஒரு பெண்ணை ரசிக்க முடியாது என்று அப்போது தான் உணர்ந்தேன். ஒர் இரவுக்கு வெட்கம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.

அவள் அனுமதியுடன் அவளின் ஆடைகளை கலைத்தேன். பெண்ணின் நிர்வாணம் எனக்கு புதியது இல்லை என்றாலும் மனைவியை தவிற இன்னொரு பெண்ணின் நிர்வாணத்தை பார்ப்பது முதல் முறை. அவளை கட்டில் படுக்க வைத்து பாம்புப் போல் அவள் உடல் மேல் எளிந்தேன். முத்தமிட்டேன். என் ஒவ்வொரு அசைவுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தாள். ஆனால், என்னுடைய எந்த தீண்டலுக்கும் அவள் தன் உணர்ச்சியை காட்டிக் கொள்ளவில்லை. வேறுமையாக படுத்துக் கிடந்தாள்.

” என்ன பிடிக்கலையா....!” என்றேன்.

அவள் சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“பணம் வாங்குனதுக்கு அப்புறம் பிடிக்கலைனு சொன்னா விட போறிங்களா...! இன்னைக்கு நீங்க நாலாவது கஸ்டமர் அதான் பிலிங் அதிகம் காட்ட முடியல...” என்றாள்.

எந்த உணர்வும் இல்லாமல் பிணம்ப் போல் படுப்பவளை அனுபவிக்க மனம் வரவில்லை. விபச்சாரியிடன் கூட நான் எதிர்பார்க்கும் சந்தோஷம் மறுக்கப்படுகிறது. என் ஆடையைப் போட்டுக் கொண்டு வெளியே அறையை விட்டு வெளியே வந்தேன்.

11 comments:

Anonymous said...

@ குகன் - மிகவும் அருமையான ஒரு சிறுகதை. அனைவரும் படிக்க வேண்டியக் கதை என்பேன் . குறிப்பாக பெண்களும், ஆண்களும், இளைஞர்களும் ....

பாலியல் உறவு மட்டும் தான் வாழ்வு இல்லை .. ஆனால் பாலியல் உறவு இல்லை எனில் வாழ்வே இல்லை.. இது தான் உண்மை ..

பாலியல் கல்வியின்மையால் - நமது நாட்டுப் பெண்கள் பலர் இக்கதையில் வரும் மனைவி போல இருப்பது தான் உண்மையே !!!

வெறும் குழந்தைப் பெற ஒரு முயற்ச்சியாக பாலியல் உறவைப் பார்ப்பதன் விளைவு !! சிலவேளைகளில் கணவர்கள் கூட மனைவியைக் கவனிக்காமல் அலைபவர்களும் உண்டு ,அதாவது வேறு பணிகள் நிமித்தமாக !! இது ஒருவித மனச்சிக்கலை உண்டு பண்ணும் என்பதாகப் படித்துள்ளேன் !!!

எந்தவொரு சராசரி ஆணுக்கும் - பாலியல் தொழிலாளியிடம் திருப்தி இருக்காது - செயற்கைத் தனத்தில் கிளர்ச்சி வராது - பலரோடு படுத்த உடல் என்ற வெறுப்பும் வரும் !!!

இக்கதையில் வந்த கதாநாயன் செய்யத் தவறியது மனைவியைக் கூட்டிக் கொண்டு, ஒரு மனநல ஆலோசகரிடம் செல்லாமல் விட்டதே !!! பல நேரங்களில் இதையெல்லாம் எப்படி டாக்டர் கிட்ட என யோசிப்போம் ! இதற்குத் தான் முதலில் டாக்டர் கிட்டப் போகணுமே !!!

பல நேரங்களில் வேறுவித பாலியல் சிக்கல்கள், சிறுவர் பாலியல் வன்முறைகள், கற்பழிப்புகள் போன்றவைக்கு இப்படியான '''' பாலியல் வறட்சியே '''' காரணமாக அமைகின்றது.

நன்றிகள் சகோ !

கோவை நேரம் said...

நெகிழ்ச்சியான கதை .பெண்களும் அறியப்பட வேண்டும் .

எல் கே said...

பல படிப்பினைகள் உள்ளன. நல்ல புனைவு

kumar said...

சிலபேர்க்கு உடல் உறவில் அதிகம் விருப்பம் இருக்கும். சிலபேர்க்கு இதில் நாட்டம் இருக்காது.
உடல் உறவுக்கும் முன்னர் தொடுதல், வருடுதல் போன்றவை இதன் மாதிரி உள்ளவர்களை மனம் மாற்றம் செய்யும். கணவன் இதற்கு துணை செய்ய வேண்டும். அதாவது அவர் உடல் உறவு கொள்ளும்போது உச்சகட்டம் அடையும்போது அவர் விந்தணுக்களை வெளியே செலுத்தவேண்டும். இவ்வாறு அனால் கருத்தரிக்க வாய்ப்பில்லை.

--
KUMAR.M

N.H.பிரசாத் said...

நல்ல கதை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

எந்த உணர்வும் இல்லாமல் பிணம்ப் போல் படுப்பவளை அனுபவிக்க மனம் வரவில்லை. //

இதேதானே பெண்ணுக்கும்..?

எண்ணங்கள் 13189034291840215795 said...

பல நேரங்களில் வேறுவித பாலியல் சிக்கல்கள், சிறுவர் பாலியல் வன்முறைகள், கற்பழிப்புகள் போன்றவைக்கு இப்படியான '''' பாலியல் வறட்சியே '''' காரணமாக அமைகின்றது.//

அதே

சனாதனன் said...

nice frend:)

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

hoos ganesan said...

சந்தோச தேடுதல் எப்போதுமே தொடா்கின்றன கிடைக்காத பட்சத்திலும்

hoos ganesan said...

சந்தோச தேடுதல் எப்போதுமே தொடா்கின்றன கிடைக்காத பட்சத்திலும்

LinkWithin

Related Posts with Thumbnails