வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label படித்ததும் பார்த்ததும். Show all posts
Showing posts with label படித்ததும் பார்த்ததும். Show all posts

Monday, August 9, 2010

படித்ததும் பார்த்ததும் - 9.8.10

'எந்திரன்' பாடல் வெளியீட்டு விழாவில் படத்திற்கு 150 கோடி செலவு செய்ததாக சங்கர் கூறியிருந்தார். விளம்பரம், பாடல் வெளியீட்டு என்று இன்னும் போஸ்ட் பிரோடக்ஷன் வேலையில் 20, 30 கோடி செலவு செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறதாம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழியில் வெளியாகும் படங்களுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் கிடையாது என்று கருத்து நிலவிவருகிறது. அதற்கான விடை செப்டம்பர் மாதம் தெரிந்துவிடும்.

**

திரும்ப வராத கடந்த காலம்
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துகள்களில் அடிக்கடி கேள்ப்படும் எழுத்தாளரின் பெயர் 'தஸ்தயேவ்ஸ்கி'. நூலகங்களுக்கு சென்ற போது தஸ்தயேவ்ஸ்கியின் 'திரும்ப வராத கடந்த காலம்' புத்தகம் கிடைத்தது. கற்பனை உலகில் வாழும் இளைஞன் ஓர் இரவில், நாஸ்தென்கா என்ற பெண்ணை பார்க்கிறான். அவர்களுக்குள் ஏற்ப்படும் உரையாடல் அடுத்த மூன்று நாள் இரவு அவளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. மூன்றாவது நாளில் நாஸ்தென்காவின் காதலை கேள்விப்படும் அந்த இளைஞன், அடுத்த நாள் இரவு தன் காதலை சொல்கிறான். இறுதியில் அவள் காதலை ஏற்ற்க் கொள்கிறாளா என்பது முடிவு. நான்கு இரவுகள் நடக்கும் கதையில் இருவருக்கு நடக்கும் உரையாடல் கவிதை நடையில் உள்ளது. ஆரம்பத்தில், கற்பனை உலகில் வாழும் போது வீடு, மரம் அவனிடம் பேசுவது போன்ற வரிகள் அஃறினைக்கு கூட உயிர் கொடுத்திருக்கிறார்.

விலை : 60, பக்:112
பரத் பதிப்பகம்
1-A, விஸ்வாஸ் ப்ளாட்ஸ்
2,3, பிள்ளையார் கோயில் தெரு,
நெசப்பாக்கம், சென்னை - 78
Pக்: 24719795

***

ஒரு படம் பண்ணனும்

நாளைய இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷக்காக நின்ஜா டீம் இயக்கிய படம். தன்னமிக்கையை பற்றி சொல்லும் ஒரு நகைச்சுவை குறும்படம். விரைவில் 'கருணா'வுக்கு ரசிகர் மன்றம் இணையத்தில் தொடங்கினாலும் தொடங்குவார்கள் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு மனிதன் இயல்பாக சிரிக்க வைக்கிறார்.

Monday, August 2, 2010

படித்ததும் பார்த்ததும் - 2.8.10

எமர்ஜன்சி காலத்தில் உணவு பொருள் வீணாக்கக்கூடாது என்ற சட்டம் கொண்டுவந்தார்கள். திரைப்படத்தில் சண்டை காட்சியில் பழம், பால் கீழே கொட்டுவது போன்ற காட்சிகளை தவித்து போலி உணவு பொருட்களை தான் பயன்படுத்துகிறார்கள். இப்படி உயிர் வாழ தேவையான உணவு பொருளை போராட்டம் என்ற பெயரில் யாருக்கும் பயன்படுத்தாமல் வீணாக்கியிருக்கிறது 'சிவ சேனா' கட்சி. மும்பையில் நடந்த ஒரு போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பை காட்ட 50,000 லிட்டர் பாலை கீழே கொட்டியுள்ளது. பசியால் தினமும் இந்தியாவில் ஐம்பதுக்கு மேற்பட்ட பேர் இறப்பதாக ஒரு புள்ளி விபரம் சொல்லுகிறது. இது போல், உணவு பொருளை வீணாக்குபவர்கள் மீது கட்சி பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசும், மத்திய அரசும் என்ன செய்துக் கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.

மேலும் படிக்க


***

எவ்வளவோ பண்ணுறோம் இத பண்ணமாட்டோமா

ஒரு அமெச்சூர் குறும்படம். உடல் எடை குறைப்பதை நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள். என்னை போல் குண்டாக இருந்தவர்கள் உடல் எடை குறைக்க பட்டபாடை பார்க்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.



***

இணையத்தில் புத்தகம் வாங்க வணிக தளம்


புத்தக கடை வைத்திருப்பவர்கள் வணிக தளம் வைத்திருப்பது தேவையான ஒன்றாக மாறிவருகிறது. இதில், நம் பதிவு நண்பர் 'டிஸ்கவரி புக் பெலஸ்' வேடியப்பன் அவர்கள் ஒரு தளம் தொடங்கியிருக்கிறார்.இனி பதிவர் புத்தகம் வாங்க கே.கே நகர் போக தேவையில்லை. இணையத்தில் வாங்கலாம்.

அந்த தளத்தை பார்க்க

Monday, July 26, 2010

படித்ததும் பார்த்ததும் - 26.7.10

ஓரின சேர்கை பற்றி எழுதி வரும் தொடர்களுக்கு பெரிதாக பின்னூட்டம் இல்லை என்றாலும், அதை பற்றி வாசகர்கள் பலர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் மின்னஞ்சலில் ஒன்று தெளிவாக புரிந்தது. ஓரின சேர்கையை ஆதரிப்பதாகட்டும், எதிர்ப்பதாகட்டும் வெளிப்படையாக சொல்ல தயங்குகிறார்கள். உள்ளூர சிறு அச்சம் இருப்பதை சில வாசகர்களின் மின்னஞ்சலில் புரிந்துக் கொள்ள முடிந்தது.

குறிப்பாக, ஒரு மின்ஞ்சல் என்னை அதிர வைத்துவிட்டது. 'ஓரின சேர்கை பற்றி எழுதுறீங்களே ! ஒரு வேல... அவங்க தான் நீங்களுமா' என்று கேட்டிருந்தார்.

தொடர் தொடங்கும் முன்பே "ஓரின சேர்கை பற்றி ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. அவர்களை பற்றி புரிந்து கொள்ளவும், அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள தான் எழுதுகிறேன்" என்று சொல்லியிருந்தேன்.

தயவு செய்து இது போன்ற மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம். தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நான் அவன் இல்லை !!!

--

Rescaling Transnational "Queerdom": Lesbian and "Lesbian" Identitary–Positionalities in Delhi in the 1980s
- Paola Bacchetta

ஒரின சேர்க்கை பற்றி எழுதிய தொடருக்கு இந்த கட்டுரை மிகவும் உதவியாக இருந்தது. எங்கும் ஆணாதிக்கம் நிரம்பியிருக்கும் உலகில், "தான் ஒர் லெஸ்பியன்" என்று ஒரு பெண் சொல்லுவதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும், மன உறுதி இருக்க வேண்டும் என்ற கூறூகிறார். பல இடங்களில் நடந்த லெஸ்பியன் தற்கொலைகள், வாழ்ந்துக் கொண்டு இருக்கும் லெஸ்பியன் மேற்கொள் எழுதியிருக்கிறார்.

அந்த கட்டுரையை வாசிக்க... இங்கே

--

நேற்று (25.7.10), ஒரு டி.வி நிகழ்ச்சியில் பேச என்னை அழைத்திருந்தார்கள். காலை 9 மணிக்கு வந்துவிட்டால், 15 நிமிடங்களில் பேசிவிட்டு சென்றுவிடலாம் என்றனர். வழக்கத்துக்கு மாறாக ஞாயிறுகிழமை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு (ஞாயிறு என்றால் மதியம் தான் குளியல்) 8:40 அவர்கள் சொன்ன இடத்தில் இருந்தேன்.

பேப்பரில் எழுதி இதை தான் பேச வேண்டும் என்று சொல்லாத குறை. தலைப்பை கொடுத்து விட்டு எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று பதினைந்து நிமிடத்துக்கு விளக்கம் கொடுத்தார்கள். சென்று விடலாம என்று கூட தோன்றியது. என்னை அழைத்த நண்பர் மிகவும் நெருங்கியவர் என்பதால் பொருத்துக் கொண்டேன்.

சில தோழில்நுட்ப காரணங்களால் 10:30 மணிக்கு தான் ஷூட்டீங் தொடங்கியது. அமைதியாக இருந்தேன். கொஞ்ச நேரத்தில் என்னை போலவே பேச பலர் வருவதை பார்த்தேன். என்னை அழைத்த நண்பர் பிஸியாக இருந்ததால் எதுவும் அவரிடம் பேச முடியவில்லை. 11:30 மணியானது. எனக்கு பின் வந்தவர்கள் ஒரு சிலர் பேசிவிட்டு செல்வதை கவனித்தேன். நான் வந்திருக்கும் நிகழ்ச்சிக்கு தான் அவர்களும் வந்திருப்பதை தெரிந்ததும் கோபம் தலைக்கேறியது. காலதாமததிற்கு காரணத்தை கேட்க, 'டி.வி ஷூட்டிங்னா அப்படி தான். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' என்றார்.

இது பற்றி முன்பே தெரிந்தவர், பதினைந்து நிமிடத்தில் சென்றுவிடலாம் என்று என்னிடம் சொல்லியிருக்க கூடாது. காலையில் சாப்பிடமால் எந்த இடத்துக்கு சென்றது கிடையாது. அரை மணி நேரத்தில் வந்து விடலாம் என்று நினைத்ததற்கு நல்ல பாடம் கிடைத்தது.

ஐந்து நிமிடம் டி.வியில் வருவதற்கு அரை நாள் இழந்துவிட்டேன். இன்னும் காத்திருந்து விடுமுறை நாளை இழக்க விரும்பவில்லை. அந்த பொது இடத்தில் என் நண்பர் மீது கோபத்தை காட்ட விருப்பமும் இல்லை. எனக்கு அவசரமாக வேலை இருப்பதாக சொல்லி வந்துவிட்டேன்.

சாரு அந்த டி.விய திட்டுறது தவறு இல்லை என்பதை அனுபவம்யுர்வமாக உணர்ந்தேன்.

***

"கவிதை உலகம்" - கவிதை தொகுப்புக்கு தேர்வான கவிதைகள் கீழே



1.கனவு பலிக்குமா..? - அமுதா ப. பாலகிருஷ்ணன்
2.தமிழன் - கார்முகிலோன்
3.இந்தியா ஒளிர்கிறது - எஸ்.செல்வராஜ்
4.வறுமையும் கல்வியும் - இளையராஜா
5. தாய்மை காப்போம் ! - அருட்கவிஞர் காசி
6. நன்றி பயவா வினை - த.கருணைச்சாமி பி.இ.
7. வானம் வசப்படும் - மு.வேடியப்பன்
8. தமிழ் மொழி செம்மொழி - சி. உண்ணாமலை
9. ஆலமரம் - கே.கிருஷ்ணன்
10. வாய் - க.சிவசண்முகம் 11. அர்த்தமுள்ள இந்துமதம் ! - நங்கவள்ளி
12. பூனைக்கு மணிக்கட்டுவது யார்?- கிருஷ்ணசாமி
13. போகர் சித்தர் (பழனி) - பா.பிரதாப்
14. உண்மை இல்லை - சாப்டூர் சதுரகிரியான்
15. பணம் - எஸ்.ராஜேந்திரன்
16. இறந்தவனின் புகழ் - இ.நி. நந்தகுமாரன்
17. பெருமை - ந.முராரி
18. பாட்டும் ! பாவையும் ! - பெ.து. இராதா
19. மறவேனே ! - க.காத்தப்பன்
20. காகித ஆசை - பி. காமகோடி
21. குடியரசு - பு.மகேந்திரன்
22. கவிவிழி - இரா.சக்திவேல்
23. காதல் விடை பெற்றால் ! - எல். காந்தி
24. கவிதையே..! நீ தானோ! – ஷாலினி
25. மணம் வீசும் மலர்கள் - து.செ.கவியரசு
26. பேரறிஞர் வள்ளுவர் -செ.வெங்கடேசன்
27. அன்பே எங்கே இருக்கிறாய் ? -டி.கோபிசந்துரு
28. மனித நேயம் - பி. ராஜசோழன்
29. என தருமை - புதுயுகன்
30. அவலத்தின் பிஞ்சுகள் - அன்னை சிவா
31. அன்பு தேவதையே ! - ஜன்னி அந்தோணிராஜ்
32. இதோ கடவுள் - ஓட்டேரி செல்வக்குமார்
33. புதியதோர் உலகம் - ஓட்டேரி செல்வக்குமார்
34. உலகமகா உண்மை - ஓட்டேரி செல்வக்குமார்
35. நம் காதல் - கோ.கணேஷ்
36.தமிழ்! தமிழ் !! தமிழே! - 'அய்யம்பேட்டை' ராஜா
37.ஹைக்கூ கவிதைகள் - P.Mathar
38. விழியுற்ற மனிதன் - ஆ.முத்துராமலிங்கம்
39. காதல் - யாழ் அகத்தியன்
40. ஹைக்கூ கவிதைகள் - பிரதீப் பாண்டியன்
41.முரண்கள் - என்.விநாயக முருகன்
42. கிராமம் தேடி - Rajakamal
43. பூனைகளும், சில நியதிகளும் - சேரல்
44. மண்ணியல் - சேரல்
45. கனவு சாம்பல் - நேசமித்ரன்
46. ஞாபகங்கள் இல்லாது - செல்வராஜ் ஜெகதீசன்
47.நட்புக்காலம் - மகிழினி சரவணன்
48. கடவுள் பேசுகிறேன்.. - K.R.P.Senthil kumar
49. நினைவின் நாணம் - Safeer Hafiz
50.அவள் - கலாநேசன்
51.கூண்டுக்கிளி - எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
52.கண் விருந்து கலை - ப.தங்கவேலன்
53.சாத்தானின் தாசியன் - பொன்.வாசுதேவன்
54.அம்மா - மணிஜீ
55.ஒரு அழகான குடிசை - Subburajan Mylandan
56. குட்டி குட்டி கவிதைகள் - நவயுக தமிழச்சி.
57.வேண்டும் வரம் – அகல்விளக்கு
58. உயிர்மிருகம் - நிலாரசிகன்
59. துய‌ர‌த்தின் ம‌ர‌ம் - லாவண்யா சுந்தரராஜன்

கவிதை தொகுப்பு விரைவில் வெளிவர உள்ளது. தேதி, மற்ற விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

Monday, July 12, 2010

படித்ததும் பார்த்ததும் - 12.7.10

ஒரு மாதக பரவியிருந்த 'FIFA' ஜூரம் நேற்றோடு முடிந்தது. இந்த கால்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயினை விட அதிகம் பெயர் வாங்கியது ஆக்டோபஸ் என்று தான் நினைக்கிறேன். இனி நம் நாட்டில் ஆக்டோபஸ் ஜோசியம் ஆரம்பமாகும்.

***
Same sex marriage Pro & Con - A Reader
Andrew Sullivan

ஓரின சேர்கை பற்றி இணையத்தில் எழுதும் தொடருக்காக நூலகத்தில் இருந்து நான் எடுத்த புத்தகம். புரியும் படியாக ஆங்கில மொழி, எளிதில் படித்து முடித்துவிடலாம். ஆனால், அமெரிக்க மக்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதிய புத்தகம். அமெரிக்க சட்டங்கள் ஓரின சேர்க்கைக்கு எப்படி சாதகமாகவும், பாதகவும் போன்ற விளக்கங்களை கொடுத்துள்ளார்.

கிறிஸ்துவம், யூத மதம் ஓரின சேர்ர்கைக்கு எதிர்க்கும் காரணத்தையும் எழுதியுள்ளார். இஸ்லாமிய நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு மரண தண்டனை மற்றும் இன்னும் கொடுமையான தண்டனை வழங்குகிறார்கள். அதை பற்றி எந்த விமர்சனமோ, விளக்கமோ கொடுக்கவில்லை.அமெரிக்காவில் ஓரின சேர்க்கை எல்லாம் சகஜம் என்று நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

***

'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியை எப்படியோ போராடி தொடர்ந்து மூன்று வார இறுதி சுற்று படங்களை பார்த்தேன்.

'அனு அனுவாய்' என்ற குறும்படம் பார்வையில்லாதவன் கற்பனை உலகம், பார்வை வந்த பிறகு மாறியிருப்பதை அழகான காதல் கதை மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னொரு குறும்படம் (பெயர் தெரியவில்லை), படகில் திசை மாறி இலங்கை இராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் மீனவர்களை பற்றிய படம். உதவிக்காக காத்திருக்கும் மீனவனை, படகையும் காட்டி படம் முடியும் போது பார்வையாளர் மனதில் துயரம் ஒட்டிக்கொள்ளும்.

கத்தி - திருவிழாக்களில் கத்தி வீசி வாழும் மனிதர்களை பற்றிய கதை. சினிமா இயக்குனர்கள் கூட இதுவரை யோசிக்காத கதை களம்.

ஒரு ஷாட் - பெண்ணை கடத்தும் நான்கு ரௌடிகள் போலீஸால் சுட்டு கொல்லப்படுவதை ஒரே ஷாட்டில் நல்ல ஆக்ஷன் படமாக இருந்தது.

சுயம்பு - ஒரு போராளியை பற்றி வரலாறு குறும்படம். போராளி இறந்தாலும் போராட்டம் இறப்பதில்லை என்று உணருத்தும் படம்.


ரேணுகா, ரவி நடித்த குறும்படம் 'Forward, Backward' என்று கதை முன்னோக்கி, பின்னோக்கி செல்கிறது. மருமகள் வரும் முன் பெற்றோர்களின் மனநிலையும், மாமியாரை சந்திக்க போகும் மனமகள் மனநிலை அழகான பெயின்டிங் போல் எடுத்த படம். என் பேவரிட் 'ஜனனி' நடித்த படம். சிறந்த நடிகை விருந்து அவருக்கு தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஒரு தொலைக்காட்சி நடிகைக்கே கிடைத்தது.

மேல் சொன்ன ஏழு குறும்படங்கள் சித்தியாசமான தொழில்நுட்பம், கதை களம், படமாக்கிய விதம் போன்ற வகையில் சிறப்பான படங்கள். ஆனால், விருது கிடைத்தது 'நெஞ்சுக்கு நீதி' (கலைஞரின் சுய வாழ்க்கை புத்தகத்தின் தலைப்பு) குறும்படத்துக்கு கிடைத்தது. ஒரு நல்ல நகைச்சுவை படமாக ஏற்றுக் கொள்ள முடிகிறதே தவிர இறுதி சுற்றில் வெற்றி பெரும் அளவிற்கு இந்த படத்துக்கு தகுதி உண்டா என்று தெரியவில்லை.

இந்த குறும்படத்திற்கு விருது வழங்கி ஒரு கமர்ஷில் பட இயக்குனரை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல இயக்குனரை அல்ல...!

விருது வழங்கியவர் இயக்குனர் ஷங்கர் என்பதால் என்னவோ !!

***

தவிர்க்க முடியாத காரணத்தால் நாகரத்னா பதிப்பக சாரிப்ப்பில் வெளியீட இருக்கும் 'கவிதை உலகம்' முடிவை இந்த வாரம் வெளியீட முடியவில்லை. அடுத்த வாரம் வெளியீடப்படும். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Monday, July 5, 2010

படித்ததும் பார்த்ததும் - 5.7.10

இன்று ( 5.7.10) பெட்ரோல் உயர்வை நாடு தழுவிய பந்த் நடப்பதாக எதிர்கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால், சென்னையில் வழக்கம் போல் எல்லா வண்டிகள் செயல்ப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. எப்போதும் போல் கேட்கும் (அ)நியாய விலைக்கு மேலும் 20 ரூபாய் கேட்கிறார்கள். ஸ்ட்ரைக் சமயத்தில் ஆட்டோ ஓட்டுறது எவ்வளவு பெரிய ரிஸ்க். அதுக்கு தான் ரூ.20 யாம் !!!

**
மனம் கொத்தி பறவை

இலக்கிய எழுத்தாளர்களுக்கு ஜனரக பத்திரிகைகள் வாய்ப்பு தருவதில்லை என்று புலம்பிய சாரு நிவேதிதா, இப்போது ஆனந்த விகடனில் 'மனம் கொத்தி பறவை' என்ற தலைப்பில் புதிய தொடர் எழுதுகிறார். நீத்து சந்திரா, அமீர் போன்ற நடிகர்களுடன் 40 நோடிகள் நடனமாடிய அனுபவத்தை எழுதியிருக்கிறார். நடிகனான எழுத வாய்ப்பு கிடைக்குமோ ?

**

நிஜம் நீதி
சுஜாதா

மிருகங்களை வைத்து நீதி கதைகளை 'நக்கீரனில்' சுஜாதா தொடராக எழுதினார். பின்பு, மேலும் பல கதைகள் சேர்த்து ' நீதி கதைகள்' என்ற பெயரில் புத்தகமாக உயிர்மை வெளியீட்டுள்ளது. 1998 ஆண்டிலேயே 'நிஜம் நீதி' என்ற தலைப்பில் பாரதி பதிப்பகம் சுஜாதாவின் நீதிகளை வெளிவந்துள்ளன. மேற் சொன்ன இரண்டு புத்தகங்களை படித்தால், இந்த நூலை படிக்கும் போது உயிர்மை வெளியிட்ட தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் தெரிந்தது. இருந்தாலும், மறுமுறை வாசிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. முழுமையாக வாசித்த பிறகே புத்தகத்தை முடினேன். எழுதியவர் சுஜாதாவாயிற்றே !

**

நாகரத்னா பதிப்பக சார்பில் வெளியீட இருக்கும் 'கவிதை உலகம்' தொகுப்புக்கு எதிர்பார்த்ததை விட கவிதை வந்து கூவிந்துள்ளன. ஒரு வாரத்தில் பதிவர்களிடம் மட்டும் 50 கவிதைகள் வந்துள்ளது. தலைப்பு எதுவும் கொடுக்காததால் பெரும்பாலான கவிதைகள் 'காதல்' சம்மந்தமான கவிதைகள் அனுப்பியிருந்தார்கள்.

இலக்கிய வட்டத்தில் இருந்து மேலும் 50 கவிதைகள் வந்துள்ளது. ஒவ்வொரு கவிதைகளை தேர்வு செய்தவற்கே ஒரு வாரம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். தேர்ந்தெடுத்த கவிதைகள் அடுத்த வாரம் பதிவில் அறிவிக்கப்படும்.

கவிதை அனுப்பியவர்களுக்கு நன்றிகள் பல..!!

Monday, June 28, 2010

படித்ததும் பார்த்ததும் - 28.6.10

நேற்று (27.6.10) சென்னை கடற்கரை அருகே ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் குரல் போராட்ட சமயத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை. இன்றைய (28.6.10) இந்து நாளேடில் இரண்டாவது பக்கத்தில் ஓரினசேர்க்கையாளர்களின் போராட்டத்தின் செய்தி வெளிவந்துள்ளது. இவர்களில் குரல் இந்த முறையாவது அரசு காதுகளுக்கு கேட்க வேண்டும்.

***
பெரம்பூர் பகுதியில் 'தாய்மண் இலக்கிய கழகம்' என்ற அமைப்பை மூப்பது வருடங்களாக 'அருமையார்' என்பவர் நடத்திவருகிறார். 85 வயது. பக்கா தி.மு.க காரர். வீடு முழுக்க அண்ணா, கலைஞரோடு ஐம்பது வருடங்கள் முன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருக்கும்.

தி.மு.க காரராக இருந்தாலும் மேடை தோறும் கலைஞரை திட்டாமல் இருக்கமாட்டார். காரணம், தன் பெண்ணை தலைவர் கொள்கைப்படி தமிழ் படிக்கவைத்தார். ஆனால், தலைவரோ ஆங்கில பள்ளியில் படிக்க வைத்தார். தமிழ் தெரியாத பல பணக்காரர்கள் மட்டுமே மந்திரியாக இருக்கிறார்கள் என்ற கோபம். திருக்குறளை தெரியாதர் மந்திரியாக கூடாது என்று சொல்லுவார். தமிழ் படித்தவனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று பல வருடங்களாக அவர் நடத்து சிற்றிதழில் எழுதிவருகிறார்.

செம்மொழி மாநாட்டில், கலைஞர் 'தமிழ் படித்தவனுக்கு அரசு வேலையில் முன்னுரிமை' என்ற அறிவித்துள்ளார். இருந்தும், பாதிக்கப்பட்ட இவரின் மனம் மாறவில்லை. பழ.கருப்பையா எழுதிய கட்டுரையை தனது இதழில் எழுதி கலைஞரின் மீது இருக்கும் கோபத்தை காட்டியுள்ளார்.

88 வயது கலைஞரின் சாதனை போற்றும் சமயத்தில், அவரை எதிர்க்கும் 85 வயதுக்காரரின் குரல் மக்களுக்கு எப்போது கேட்க போகிறது ?

***
இலக்கிய நகைச்சுவை

பல பேர் ஒரு புத்தகத்தை படித்தால் - இலக்கியம்
ஒருவரே பல முறை படித்து புரியவில்லை என்றால்
பின் நவீனத்துவ இலக்கியம்

(சத்தியமா இது என்னுடைய நகைச்சுவை இல்லை.)

***

We can bookயில் மேலும் இரண்டும் புத்தகங்கள் சேர்ந்துள்ளன. அதுவும் விருது பெற்ற புத்தகங்கள்.

மில்
ம.காமுத்திரை
விலை.150, பக்கங்கள்:272
சுஜாதா நினைவு பரிசு போட்டியில் சிறந்த நாவல் பரிசு பெற்ற புத்தகம்.



**
நீர்வலை
எஸ்.ஷங்கர்நாராயணன்
விலை.70. பக்கங்கள்:160
2006 யின் தமிழ அருசு விருது பெற்ற நாவல்



இரண்டு புத்தகங்கள் சேர்த்து ஆர்டர் செய்பவர்களுக்கு கோரியர் செலவு இல்லை.

Monday, June 21, 2010

படித்ததும் பார்த்ததும் - 21.6.10

ஜூனியர் விகடனில் வந்த செய்தி.

ஜூன் 26 அன்று, ஓரின சேர்க்கையாளர்கள் சென்னை கடற்கரை அருகே மாபெரும் பேரணி நடத்த சென்னை காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். 'இவர்களுக்கு அனுமதி அளித்தால் அதை எதிர்த்து சென்னை கடற்கரையில் நாங்கள் எதிர்ப்பு தேரிவிப்போம்' என்று 'இந்து மக்கள் கட்சி'யை சேர்த்த கண்ணன் தெரிவித்துள்ளார். யாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் சென்னை காவல்துறையினர் உள்ளனர்.

***

செம்மொழி மாநாடு சில விமர்சனங்கள்

நேற்று ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்த போது செம்மொழி மாநாடு பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. செம்மொழி மாநாடு பாடலை ஏன் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்தார்கள் ? இளையராஜாவுக்கு கொடுத்திருக்க வேண்டும். சோ 'துக்ளக்' ல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்த ஆஸ்கர் விருதை திரும்ப பெற வேண்டும் என்று எழுதியிருப்பதாக கூறினார்.

*

செம்மொழி புத்தக கண்காட்சி நாகரத்னா பதிப்பக புத்தகங்களை இடம் பெற இரண்டு பதிப்பகங்களை அனுகிய போது அவர்கள் 'செம்மொழி மாநாடு அரசியல் மாநாடு போல் இருக்கும். ஸ்டால் போட்டால் நஷ்டம் ஏற்ப்படும்' என்று கருத்து தெரிவித்தார்.

*

ஒருவர் '15 வருடங்களாக பதிவு செய்த்து நடத்தி வரும் பல முக்கிய இலக்கிய அமைப்புகளுக்கு வாய்ப்பு தரவில்லை' என்று குறைப்படுக் கொண்டார்.

எந்த ஒரு நிகழ்ச்சியும் எல்லோரும் திருப்தி படுத்தி நடத்தி விட முடியாது. ஆனால், நிகழ்ச்சி நடத்தும் முன்பே பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சொம்மொழி மாநாடு முடிந்ததும் இன்னும் பல விமர்சங்கள் ஏழும் என்று நினைக்கிறேன். பொருத்திருந்து பார்ப்போம்.


***

லால்கர் - ஒரு மூன்றாவது பார்வை

அதிகாரவர்த்திற்கும், போராடும் மக்களுக்கும் இடையே மாட்டி சிக்கி தவிக்கும் இடங்களில் லால்கரும் ஒன்று. அரசாங்க பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாதிக்கப்படுவதும், மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் நக்ஸல்பாரி தாக்குதலிலும் அழியப்படும் மக்களின் மூன்றாவது பார்வை தான் இந்த புத்தகம்.

சந்தோஷ் ராணா, குமார் ராணா போன்ற எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பும், அ.மார்க்ஸ்ஸின் கட்டுரை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள.

விலை.30. பக்கங்கள் : 56
புலம் வெளியீடு

***

இலக்கிய நகைச்சுவை


ஒரு புத்தகத்தை பார்த்து எழுதினால் - திருட்டு
பல புத்தகங்களை பார்த்து எழுதினால் - திரட்டு !

***

வரும் ஜூன் 26, அனைத்ந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், பெரம்பூ கிளை சார்பாக நடத்தப்படும் இலக்கிய கூட்டத்தில் நான் எழுதிய நான்கு சிறுகதைகள் விமர்சனம் செய்யவிருக்கிறார்கள். நேரம் இருக்கும் நண்பர்கள் வரலாம்.

இடம் :
V.O.C ஆரம்ப பள்ளி ,
பட்டேல் ரோடு,
பெரம்பூர், சென்னை - 11.

நிகழ்ச்சியில் அன்று, நான் எழுதிய 'என்னை எழுதிய தேவதைக்கு' (விலை.55/-) மற்றும் நடைபாதை (ரூ.40) இரண்டு நூலும் சேர்த்து ரூ.70 (~30% கழிவு) கிடைக்கும்.

Monday, June 14, 2010

படித்ததும் பார்த்ததும் - 14.6.10

ஜீ தமிழ் டி.வி யில் ஞாயிறு காலை 9:30 மணி 10: 30 மணி வரை "மக்களின் மனசாட்சி" நிகழ்ச்சி ஒளிப்பரப்புகிறார்கள். சென்னை மா நகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மக்களின் குறைக் கேட்டு நிபர்த்தி செய்கிறார். ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளித்ததில் அரசாங்கம் ஒவ்வொரு பகுதிக்கு ஒதிக்கிய நிதி பற்றிய விபரங்களை சொல்லுகிறார்.

முதல் பாதி மக்கள் புகாரும், இரண்டாவது பாதியில் மக்கள் புகாரின் எதிரோலியாகவும் ஒளிப்பரப்பாகிறது.

இது ஒரு நேரடி ஒளிப்பரப்பு. 044- 3919 4113 எண்ணுக்கு தொடர்பு கொண்டு சென்னை மக்கள் தங்கள் குறைகளை மேயரிடம் சொல்லலாம்.

****
கம்யூனிசம் நேற்று - இன்று - நாளை

வருடக்கணக்கில் படித்த ஒரே புத்தகம் இந்த புத்தகமாக தான் இருக்கும். 2007ல் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கியது. இன்னும், படித்த முடித்த பாடில்லை. அதிக தகவல் கொண்ட புத்தகம். கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், பாட புத்தக நடையில் இருப்பதால், இரண்டு, மூன்று அத்தியாயம் படித்ததும் அலுப்பு தட்டுகிறது. அதிக தகவல் கொண்ட புத்தகம் என்பதால், புத்தகத்தை படிக்காமல் எடுத்து வைக்கவும் மனமில்லை. தினமும் இரண்டு அத்தியாயமாவது படித்து இந்த வருடத்திலாவது முடிக்க வேண்டும் நினைக்கிறேன்.

விலை.80, பக்கங்கள் : 450
நக்கீரன் வெளியீடு

***

என்ன பதிவு போடலாம் என்று இருந்த பலருக்கு பதிவர் சண்டை உதவியாக இருந்துள்ளது என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரின் பதிவு படிப்பதற்குள் தாவு கிளிந்துவிட்டது. இரண்டு பேர் சண்டை எப்படி ஜாதி கலவரம், மத கலவரமாக மாறுமோ அந்த அளவுக்கு பதிவர்களுக்குள் கூட நடக்கும் என்று சமிபத்திய நிகழ்வு காட்டியுள்ளது.

யாரோ, ‘பொட்டிக்கடை’ என்று சொல்லு மாதிரி இருக்கு... அதுக்குள்ள அடுத்ததா... ஆள விடுங்கடா சாமி...!!

***

12.6.10 அன்று, எல்.எல்.ஏ நூலகத்தில் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் 19ஆம் ஆண்டு விழா நடைப்பெற்றது. ஆண்டு விழாவுக்காக பெரிய அளவு கூட்டமில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகவும் தொய்வாக நகர்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்பே புத்தக ஸ்டால் போட அனுமதி வாங்கி, அதற்கான வேலை செய்திருந்தேன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு புத்தகம் விற்பனை ஆகவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை. அதிக புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்த்தது கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது.

வெளியூரிலும் 'நாகரத்னா புத்தக கண்காட்சி' நடத்த திட்டமிட்டுள்ளேன். வெளியூரில் நடக்கும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் அனுப்பினால் கமிஷன் அடிப்படையில் புத்தக கண்காட்சி நடத்தலாம். நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Monday, June 7, 2010

படித்ததும் பார்த்ததும் - 7.6.10

விஜய் டி.வி 6ல் இருந்து 26வது இடம்

ஜூனியர் சூப்பர் சிங்கர், ஜூனியர் ஜோடி நெ.1 என்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் குழந்தைகளின் திறமையை விட அவர்களின் கண்ணீரை காட்டுவதில் நெ.1 ஆக விஜய் டி.வி இருக்கிறது. ரியால்டி ஷோ என்ற பெயரில் சினிமா படம் போல் நடத்தும் இது போன்ற நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. இதுவரை, வீட்டில் உள்ளவர்கள் பார்த்த நிகழ்ச்சியை குழந்தையை 'Pre-K.G' சேர்த்த பிறகு விஜய் டி.வி 6 ல் 26 வது இடத்திற்கு மாற்றிவிட்டனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் குழந்தைகளின் மனதை பாதிக்கும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை.

வன்முறை, காமம் மட்டும் குழந்தைகளை பாதிப்பதில்லை... அவர்களின் தன்னம்பிக்கை அழிக்க நினைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் கூட அவர்களை பாதிக்குமாம்.

****

சில்வியா
விலை.70, பக்கங்கள் : 110

சில்வியா பிளாத் என்னும் கவிஞர் சிறுவயதில் தற்கொலை செய்து கொண்டு போவதற்கு முன் பிரமிப்பூட்டும் சில கவிதைகள் எழுதினார். அவருக்கு 'Bipolar disorder' என்ற மன நோய்யும் இருந்தது.

சில்வியா ப்ளாதின் வாழ்க்கைக் குறிப்பு வாசித்த அனுபவத்தை வைத்து தன் கணேஷ், வசந்த் கதாபாத்திரங்கள் கொண்டு சுஜாதா அவர்கள் குறு நாவால் உருவாக்கியிருக்கிறார். சுஜாதாவின் எழுத்து நடையை பற்றி விமர்சனம் செய்ய இன்னும் நான் வளரவில்லை.

'சில்வியா' குறுநாவலோடு ஏழு சிறுகதைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சுஜாதா அவர்கள் இறுதி நாட்களில் வெளிவந்த நூல்களில் இந்த நூலும் ஒன்று. (டிசம்பர்,2006).

வயதானாலும் சிங்கத்தின் எழுத்தில் குறையில்லை.

***
இந்தியா முழுக்க இருக்கும் காவல்கள் பற்றி புள்ளி விவரத்தை ஹிந்து நாளேடு வெளியிட்டுள்ளது. மார்ச் 31,2010 வரை ஒரு லட்ச இந்திய மக்களுக்கு 160 காவலர்கள் பணிபுரிகிறார்களாம். அதிக பட்சமாக நக்சலைட் நிரம்பி இருக்கும் ஜார்கண்ட், சட்டிஸ்கார்ஹ் போன்ற பகுதியில் ஒரு லட்ச மக்களுக்கு 205 காவலர்கள் இருக்கிறார்களாம்.

இதில் வேதனையான விஷயம், இன்னும் 3,35,000 இடங்கள் காவல்த்துறையில் நிரப்ப படாமல் உள்ளதாம்.

***

ஜூன். 3 உலக தமிழ் புத்தக தினமாக அறிவித்த பிறகு கூடிய விரைவில் ஜூன் மாதம் புத்தகக் கண்காட்சி நடத்த படலாம் என்று தோன்றுகிறது. இந்த வருடம் இல்லை என்றாலும் அடுத்த வருடம் நடைப்பெறலாம்.

வருடம் இரண்டு முறை புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டும் என்று பலரது விருப்பம் அடுத்த வருடம் நடைமுறைக்கு வரலாம். பொருத்திருந்து பார்ப்போம்.

Monday, May 31, 2010

படித்ததும் பார்த்ததும் - 31.5.10

பிரபல தொலைக்காட்சி ஒன்று, தனது டி.வி நிகழ்ச்சிக்காக பல ஜோடிகளை அழைத்து போட்டிகள் நடத்தினர். போட்டியில் வெற்றிப்பெற்ற தம்பதியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதில், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் கலந்து கொண்டு முதல் பரிசு வென்றார். முதல் பரிசு வழங்குவது போல் படம் எடுத்து விட்டு, பரிசுடன் வெளியே வரும் போது ஒருவர் தடுத்தார். பரிசு பொருளை வீட்டுக்கு அனுப்புவதாக சொல்லி, கொடுத்த பரிசு பொருளை வாங்கி கொண்டார். அன்று ஐந்து வாரத்திற்கு சேர்த்து நிகழ்ச்சியை படம் பிடித்ததில் , முதல் பரிசுக்கு ஒரே பெட்டியை பயன்படுத்தியுள்ளார்கள் என்று பிறகு தான் என் நண்பருக்கு தெரியவந்துள்ளது.

முதல் பரிசு பெற்ற தம்பதியருக்கு பரிசு பொருளே வரவில்லையாம். டி.வியில் அவர்களை காடியது தான் மிச்சம்.

பரிசு மழை, பம்பர் பரிசு என்று அறிவித்து பல போட்டிகள் நடத்தி தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்கிறார்கள். உண்மையில் பரிசு பொருள் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு கிடைக்கிறதா என்று விசாரனை செய்ய தனி குழுவே தேவைப்படும் போலிருக்கிறது.

***
சுட்டாச்சு சுட்டாச்சு
பக்கங்கள் : 286
விலை.120

காங்கிரஸ் ஆதரவாளாரான எம்.ஆர்.ராதா தி.மு.க தொண்டரான எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கு பற்றின விசாரணை புத்தகம். இந்த கொலை முயற்சிக்கு பிறகு மருத்துவமனையில் இருந்தபடி எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றார். தி.மு.க முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. காமராஜர் கல்லூரி மாணவரிடம் தோல்வியுற்றார்.

இரண்டு திரை கலைஞர்களுக்குள் இருக்கும் அரசியல் கருத்து வேறுபாடு, தமிழ அரசியல் மாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒரு காரணமாக இந்த சம்பவத்தை சொல்லலாம்.

நந்தா என்ற கதாப்பாத்திரத்தை புகுத்தி கற்பனை நடையில் உண்மை சம்பவத்தை மிக ஸ்வாரஸ்யமாக கொடுத்துள்ளார் சுதாங்கன்.

எம்.ஆர்.ராதா - என்.எஸ்.கே விவகாரம் எம்.ஆர்.ராதாவின் குணத்தை அறிந்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தகவலாக இருந்தாலும், இந்த புத்தகத்திற்கு தேவையில்லாதது.
எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படிப்பது போல் சில இடங்களில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை பற்றிய புத்தகம் என்பதால் படித்த கேள்வி - பதில், தேவையில்லாத கேள்விகள் என்று எல்லாவற்றையும் படிக்க வேண்டியதாக உள்ளது. படிக்கும் வாசகனுக்கே இப்படி இருக்கும் போது விசாரணைக்கு பதில் அளித்தவருக்கு எப்படி இருந்திருக்கும்.

***

நேற்று ஜெயா டி.வி நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தன் ஒரு நாள் முழுக்க செய்யும் வேலையை பற்றி பட்டியல் போட்டாள். ஸ்கூல், டூஷன், பியனோ க்லாஸ் என்று பல வகுப்பு இருப்பதால், அரை மணி நேரம் தான் தன்னால் டி.வி பார்க்க முடிகிறது என்று குறைப்பட்டு கொண்டாள்.

பெரியவர்களை விட சிறுவர், சிறுமியர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்ற உண்மையை அப்போது தான் புரிந்தது.

நேரமின்மையை பற்றி பேச பெரியவர்களை விட சிறுவர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது.

***

நாகரத்னா பதிப்பக சார்பில் 'கவிதை உலகம்' என்ற கவிதை தொகுப்பு நூல் போட இருக்கிறோம். படைப்புகள் அனுப்ப விரும்புவோர் 'nagarathna_publication@yahoo.in' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

தலைப்பு : எழுத்தாளர் விரும்பும் தலைப்பில் எழுதலாம்

கவிதை 24 வரிக்குள் இருக்க வேண்டும். ஹைக்கூ, மரபு, புதுக்கவிதை என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 30.6.10

Monday, May 24, 2010

படித்ததும் பார்த்ததும் - 24.5.10

முன்பெல்லாம் திரையரங்கிற்கு போகாதவர்கள் 30,40 ரூபாய் கொடுத்தாவது திருட்டு விசிடி, டிவிடி வாங்கி படம் பார்ப்பார்கள். ஆனால், இப்போது அந்த செலவு கூட இல்லாமல் யூ-டியூப் போன்ற இணையதளத்தில் புதுபடங்களை இலவசமாய் திரையிடுகிறார்கள். 'ஜக்குபாய்' படம் வந்த பிறகு இணையதளத்தில் படம் வர அதிக கெடுபிடி இருக்கும் என்று எதிர்பார்த்தால், முன்பை விட சீக்கிரமாகவே இணையத்தில் படம் வருகிறது.

சமீபத்தில் வெளிவந்து, இரண்டாவது வார தொடக்கத்திலே இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், கோரிப்பாளையம் போன்ற படங்கள் இணையத்தில் கிடைக்கிறது. திரை உலகினர் இதை தீவிரமாக எடுத்து கொண்டால் நல்லது.

***

பிரபாகரன் பேசுகிறார் ( வீரம் விளைந்த ஈழம் - 2)அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
பக்.176, விலை.140

ஹிட்லர் இறந்த பிறகு, உலக நாடுகளில் இருந்து ஜெர்மனுக்கு வர வழைத்து, மரண மூகாம் பற்றியும், ஹிட்லரின் கொடுமை பற்றியும் பதிவு செய்தனர். ஜெர்மானியர்களை கொண்டு யூத உடல்களை அப்புரப்படுத்தினர். இப்படி எல்லாம் செய்யாமல் போனால் நாளைய சங்கதியர்களுக்கு ‘யூத இன படுகொலை’ பற்றி தெரியாமலே போயிருக்கும். 'யூத இன படுகொலை' ஹிட்லரோடு முடிந்தது என்று தைரியமாக சொல்லும் அளவிற்கு இந்த வரலாறு பதிவுகளே உதவியிருக்கிறது.

யூதர்களுக்கு பிறகு அதிகமாக இன படுகொலை செய்யப்பட்ட இனம் 'தமிழர்' இனம் தான். ஈழ யுத்த நடக்கும் போதே ஹிந்து நாளேடு, சோ, ஞாநி போன்றவர்கள் ஈழத்தில் அப்படி ஒரு யுத்தமே நடக்கவில்லை என்று தான் பேசினார்கள். இன்னும், 20,30 வருடங்களில் ராஜபாக்ஷே பெரிய நாயகனாக கருதப்படலாம். தமிழர் இன படுகொலை நடக்கவில்லை என்று தமிழர்களே வாதாடலாம்.

அப்படி எல்லாம் நடக்காமல் இருக்க இது போன்ற சில வரலாற்று பதிவு நூல்கள் தேவை. ஈழ போராட்ட வரலாறு குறிப்பு சேகரிப்பில் நக்கீரன் குழுமத்துக்கு தனி பங்கு உண்டு. அதே சமயம் அவர்களின் நம்பக தன்மையை விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக இருப்பார்கள்.

ஈழ யுத்தத்திற்கு பிறகு அரசியல்வாதிகளே மறந்து விட்ட நிலையில் நக்கீரன் குழுமமாவது ஈழத்தை பற்றி பரப்புகிறார்கள்.

****

ஜூலை மாதத்தில் இருந்து அடித்தல் திருத்தல் கொண்ட காசோலைகளை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. முன்பு, காசோலையில் பெயர், தேதி, பணம் போன்ற விபரங்களில் தவறு இருந்தால் அடித்து திருத்தி விட்டு கையெழுத்து போடுவார்கள். வங்கிகளும் ஏற்றுக் கொள்ளும். இனி அப்படி நடந்தால், புது காசோலை தான் கொடுக்க வேண்டும். காசோலை ஏமாற்று வேலையை தவிர்க்க ஆர்.பி.ஐ இந்த புது அறிவிப்பை அறிவித்துள்ளது.

****

தெனாவட்டு, தீ படங்களை விட 'சுறா' சன் குழுமத்திற்கு அதிக நஷ்ட கொடுத்த படம் என்று நினைக்கிறேன். சன் குழுமம் ஒரு படம் வாங்கினால், குறைந்தது இரண்டு மாதம் விளம்பரம் ஓடும், ஆறு வாரமாவது சன் டாப் 10 மூவியில் முதல் இடம் இருக்கும். ஆனால், 'சுறா' வெளிவந்து ஒரு மாததிற்குள் தன்னுடைய அடுத்த படமான 'சிங்க' த்தை வெளியிடுகிறார்கள். இதனால், படம் வெளிவந்து இரண்டாவது வாரத்தில் இருந்து 'சிங்கம்' முதல் கொடுக்க, 'சுறா' இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

விஜய்யால் வந்த நஷ்டத்தை சூர்யா 'அயன்' போல் லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறாரா என்று பார்ப்போம்.

Monday, May 17, 2010

படித்ததும் பார்த்ததும் 17.5.10

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று (16.5.10) ஞாயிறு அன்று காலமானார். இதுவரை 1000 மேற்பட்ட சிறுகதைகள், 800 மேற்பட்ட நாவல் எழுதுயுள்ளார். பல இல்லத்தரசிகள் விரும்பி வாசித்த நாவல்களில் அனுராதா ரமணனின் நாவல் மிக முக்கியமானது.

இவர் எழுதிய ஒரு சில படைப்புகள் திரை வடிவமும் பெற்றள்ளது. அதில் குறிப்பாக...

சிறை , கூட்டுபுழுக்கள் - ஆர்.சி. சக்தி இயக்கியுள்ளார்.
ஒரு மலரின் பயணம் - முக்தா சினிவாசன் இயக்கியுள்ளார்.
ஒரு வீடு இரு வாசல் - கே. பாலசந்தர் இயக்கியுள்ளார்.

இன்னும் சில படைப்புகள் தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது. 1976 ஆண்டு, எம்.ஜி.ஆர் திரு கரங்களால் 'சிறை' சிறுகதைக்கு தங்க பதக்கம் வாங்கியுள்ளார்.

பதிவர்களின் சார்ப்பாக அனுராதா ரமணன் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்போம்.

***

உலக சினிமா - பாகம் I & II

வில்லனை அடித்து வீழ்த்துவது, நாற்பது வயதில் கல்லூரி செல்வது, அறுபது வயதிலும் இருபது வயது பெண்ணுடன் டூயட் பாடுவது போன்ற மசாலா படங்களை சாபமாக பார்ப்ப்பவர்களுக்கு 'உலக சினிமா' ஒரு வர பிரசாதம். உலக சினிமாவை தமிழ் படுத்தும் போது கதையை மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால், உணர்வுகளை கொட்டை விடுகிறார்கள்.

ஒரு எழுத்து படம் பார்க்கும் தொற்றத்தை கொடுக்க முடியும் என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது. பார்க்காத பல படங்களை காட்டியுள்ளது.

முதல் பாகத்தில், E.T குறிப்பிட்டதை உலக சினிமாவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஒரு ‘Science Fiction' படமாக தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இரண்டாவது பாகத்தில், Moolaade, Where is my fiend's home, The day I become woman, Postman போன்ற படங்களை பற்றிய கட்டுரைகள் படத்தை பார்த்து ஏற்ப்படுத்தும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது.

தமிழ் சினிமாவில் இருந்துக் கொண்டு எப்படி உலக சினிமாவை பற்றி இவ்வளவு அழகாக எழுதிருக்கிறார் என்று ஆரம்பத்தில் படிக்கும் போது வியப்பாக இருந்தது. ஆனால், படிக்க படிக்க தான் உண்மை புரிந்தது. பசிப்பவனுக்கு தான் உணவின் அருமை தெரியும். அதே போல் ஒரு சராசரி ரசிகனை விட தமிழ் சினிமாவில் வேலை செய்பவருக்கு தான் ஆதங்கம், ஏக்கம், நல்ல படம் எடுக்க முடியாத கவலை இருக்கும். அந்த ஆதங்கத்தை செழியன் உலக சினிமா புத்தகத்தில் தனது எழுத்து மூலம் தீர்த்து உள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு பாகமும் ரூ.105. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.

***

கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்ட இங்கிலாந்து இது வரை சொல்லிக் கொள்ளும்படி பெரிய கோப்பையை வெல்லவில்லை. 92 உலக கோப்பை, குட்டி உலக கோப்பை (world knock-out championship) போட்டிகளில் இறுதி சுற்று வரை வந்து கோட்டை விட்டது. நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20/20 உலக கோப்பை போட்டியின் வெற்றியின் மூலம் இங்கிலாந்து தன்னை முன்னிலை படுத்தியுள்ளது.

மார்கன், பிட்டர்சன், கோலிங்வுட் போன்ற வீரர்களுக்கு ஐ.பி.எலை நல்ல பயிற்சி களமாக இருந்ததுள்ளது என்பது குறிப்பிடதக்கது..

***

இந்தியா உட்பட 17 வளரும் நாடுகள் உருபினர்களாக கொண்ட 'G-15' அமைப்புக்கு புது தலைவராக ராஜபாக்ஷே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமை பொறுப்பில் இருந்தவர் இரான் அதிபர் முகமத் அகமதினாஜாத். அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் ஒரு சில அதிபர்களின் இவரும் ஒருவர். நான் படித்த வரை இவர் மிக எளிமையானவர். இவர் இடத்தை ராஜபாக்ஷே நிரப்ப போகிறார்.

போதுவாக எதிரி வெற்றி பெற்றால் கூட வாழ்த்துபவன் நான். ஆனால், இந்த விஷயத்தில் என்னால் முடியவில்லை.

***

Monday, May 10, 2010

படித்ததும் பார்த்ததும் - 10.5.10

கடந்த வெள்ளிகிழமை நான்கு படங்கள் வெளிவந்து எந்த படம் பார்க்கலாம் என்ற குழப்பத்தில் எந்த படமும் பார்க்கவில்லை. 'நாரத கானா சபா'வில் சே.வி.சேகர் 5600வது மேடை நாடக நிகழ்ச்சிக்கு சேன்றிருந்தேன். கலைஞர், ஸ்டாலின், 'நல்லி' குப்புசாமி, 'திரிசக்தி' சுந்தராமன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முதன் முறையாக கலைஞர் பத்தடி தூரத்தில் இருந்து பார்த்தேன். அவர் பேசுவதற்காக இரண்டு மணி நேர நாடகத்தை ஒரு மணி நேரத்தில் எஸ்.வி.சேகர் முடித்துவிட்டார். நிகழ்ச்சி முடிவில் கலைஞர்களுக்கு கலைஞர் அவர்கள் விருது வழங்கினார்.

****

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 20/20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அரை இறுதி வாய்ப்பை இழந்தது. நமக்கும், பாகிஸ்தானுக்கு எவ்வளவு ஒற்றுமை.

2007 - ஒரு நாள் உலக கோப்பையில் இருவருமே முதல் சுற்றில் வெளியெறினர். இதில் பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோல்வி பெற்ற அடுத்த நாளில், இந்தியா பங்லாதேஷிடம் தோற்றது.

2007 - 20/20 உலக கோப்பையில் இருவரும் இறுதி ஆட்டத்தில் மோதினர். இதில் இந்தியா கோப்பையை கைபற்றியது. அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றது.

2010 - பாகிஸ்தான் நியூசிலாந்து அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அடுத்த நாள், இந்தியா வெஸ்ட் இன்டிஸ் அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

என்ன மாதிரியே அழுவுறானே ! இதான் ஒரே இரத்தம் சொல்லுறது !!

****

திரைக்கலை பிறந்த கதை

வாசகர்கள் பார்வைக்கு வராத நல்ல புத்தகம். சினிமாவில் முதல் கேமிரா கொண்டு இயக்கப்பட்ட படம் தொடங்கி கேமிராவும், திரைக்கலை வளர்ச்சியையும் பற்றி வரை சொல்லும் புத்தகம். உலகில் முதல் அசையும் படம், திரைகதை வடிவ படம், நகைச்சுவை படம் என்று பல தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. சினிமா பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்கலாம்.

இந்த புத்தகம் நூலகத்தில் கிடைத்தது. நூலக ஆணைக்கு பிறகு இந்த புத்தகம் மறு அச்சு செய்தார்களா என்று தெரியவில்லை. பாரதி புத்தகாலயம் விற்பனை உரிமை பெற்றுள்ளது.

****

நேற்று (9.5.10) அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் சார்பில் வாசுகி கண்ணப்பன் விருது வழங்கும் விழா மாம்பலம் சந்திரசேகர் மண்டப்பத்தில் நடந்தது. நாகரத்னா பதிப்பகம் சிறப்பு புத்தக கண்காட்சி அனுமதி பெற்று நடைப்பெற்றது. நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் நாகரத்னா பதிப்பக புத்தங்களை விட விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்கள் அதிகமாக விற்றதில் பதிப்பாளனாக சிறு வருத்தம். விற்பனையாளனாக சந்தோஷம்.

****

யுவராஜ் சிங் : தல ! நாம தோத்துட்டோமே இப்ப என்ன பண்ணுறது ?

தோனி : கவலப்படதா ! ரொம்ப 'ஐ.பி.எல்' விளையாடுனதால நாங்க ரொம்ப டையர்ட் ஆய்ட்டோம். அதனால உலக கோப்பையில சரியா விளையாட முடியல சொல்லி பேட்டி கொடுப்போம்.

ரைனா ஓடி வந்து " தல நாம மோசம் போய்ட்டோம் "

"'ஐ.பி.எல் விளையாடுனதால எங்களால நல்ல விளையாட முடிஞ்சதுனு' கெயல், பிட்டர்சன் பேட்டி கொடுத்திருக்காங "

தோனி : நாம் தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு உக்காந்து யோசிப்போம். அதுக்குள்ள என் வீட இடிக்காம இருந்தா நல்லா இருக்கும் !!

****

Monday, May 3, 2010

படித்ததும் பார்த்ததும் - 3.5.10

தேவதை, திரிசக்தி, தமிழக அரசியல் போன்ற இதழ்களை வெளியீட்டு வரும் திரிசக்தி குழுமம் , இப்போது மேலும் மூன்று இதழோடு வருகிறது. ஜோதிடம், சினிமா, இலக்கியம் போன்ற பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. பதிப்பகம் மூலம் மேலும் பல புத்தகங்களை வெளியீட இருப்பதாக தெரிகிறது.

விகடன் மார்க்கெட்டை பிடிக்க மிக தீவிரமாக திரிசக்தி இறங்கியுள்ளது. இது போன்ற போட்டிகளில் யார் வெற்றி பெற்றாலும் வாசகர்களுக்கு கண்டிப்பாக வெற்றி.

திரிசக்தி குழுமத்திற்கு வாழ்த்துகள் !!

***

சமிபத்தில் நாம்மக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்கள் எழுதிய "என் கதை" சுயவரலாறு படிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. தன் வாழ்க்கை கதையை இவ்வளவு எளிமையான நடையில் எழுதியிருக்கிறார். தமிழில் நேரடி சுயவரலாறு புத்தகங்கள் மிகவும் குறைவு. கலைஞரின் " நெஞ்சுக்கு நீதி", கண்ணதாசனின் "வனவாசம்", "மனவாசம்" என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். கண்டிப்பாக அந்த வரிசையில் "என் கதை" புத்தகமும் இடம் பெறும். முழுமையாக படித்துவிட்டு பதிவிடுகிறேன்.

***

1.5.10 அன்று நம் உரத்தசிந்தனை நடத்திய "எழுத்துக்கு மரியாதை" நிகழ்ச்சியில் நாகரத்னா பதிப்பகம் ஸ்டால் போடப்பட்டது. முன்பு விட அதிக அளவு புத்தகங்கள் பார்வைக்கு வைத்தும், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வராததால் விற்பனை சொல்லும் படியாக இல்லை. ஆனால், இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொது தான் பதிப்பாளனாக கற்றுக் கொள்ள முடிகிறது.

***

சரத்குமார், நெப்போலியன் போன்றவர்களுக்கு பல வருடம் தவம் இருந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்கள். ஆனால், ஜே.கே.ரித்தீஷ் இரண்டு படங்களில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டார். அவரி விஜய் டி.வியின் வேடிக்கையான நேர்காணல்.

நான் மிகவும் ரசித்த கேள்வி பதில்...

கேள்வி : கானல் நீரை நீங்களாவது முழுசாப் பார்த்தீங்களா?
ஜே.கே: படத்தோட டைட்டிலுக்கு கீழே நானே ஒரு வரி போட்டிருப்பேன். கானல் நீர் – a true punishment.

கேள்வி : கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்குப் போட்டுக் காட்டல?
ஜே.கே: அவ்வளோ பெரிய தண்டனையை தலைவருக்குக் கொடுக்க விரும்பல.


நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க : இங்கே.

Monday, April 26, 2010

படித்ததும் பார்த்ததும் - 26.4.10

வரும் சனிகிழமை 1.5.10 அன்று, நம் உரத்தசிந்தனை வழங்கும் 'என்.ஆர்.கே விருது' மற்றும் சிறுகதை போட்டிக்கான பரிசு வழங்கும் விழா நடைப்பெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில், நான் எழுதிய 'முதியோர் இல்லம்' சிறுகதைக்காக பரிசு பெறுக்கிறேன்.

இடம் :
சீனிவாசா சாஸ்திரி அரங்கம்,
லஸ் கார்னர், மைலாப்பூர்.

***

இது வரை நூல் விமர்சனங்களை பற்றி எழுதிய எனக்கு, முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியில் நூல் விமரசனம் செய்ய அழைத்திருந்தார்கள். நான் விமர்சனம் செய்த புத்தகத்தின் பெயர் "அந்த கணத்தில்...". மருத்துவர் மோகன் பாலகிருஷ்ணன் எழுதியது. எனக்கு பிடிக்காத மணிமேகலை பிரசுரம் வெளியீட்டுள்ளனர். விமர்சனம் செய்ய வேண்டும் என்பதர்காகவே படிக்க வேண்டிய நிலைமை. பெரிதாக ஒன்று இருக்காது என்ற நம்பிக்கையுடன் தான் புத்தகம் எடுத்தேன். ஆனால், நான் நினைத்தளவிற்கு கவிதைகள் மோசமாகயில்லை. காதல், சமூகம் என்று இரண்டு வகையான கவிதைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார். ஒரு முறை தைரியமாக வாசிக்கலாம்.

மணிமேகலை பிரசுரம் ஒரு பதிப்போடு இந்த புத்தகத்தை முடக்கியிருப்பார்கள். இருந்தாலும், அந்த புத்தகத்தின் விபரம் இதோ...

அந்த கணத்தில்..
விலை.21 ( 1997 ஆண்டு வெளியீட்டது)
பக்கங்கள் : 110
மணிமேகலை பிரசுரம்

***

'இளைய தளபதி' விஜய் தீவிர தெலுங்கு படம் ரசிகர் என்பது பலர் அறிந்ததே. தெலுங்கு படம், பாடல் எல்லாம் தமிழுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நல்ல லட்சியத்தோடு படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அவரின் 'சுறா' படத்தில் விஜய் 'பில்லா' அஜித் கெட்டப்பில் ஸ்டைலாக வருகிறார். தீடிர் என்று அஜீத் ரசிகராக மாறிவிட்டாரோ என்று நினைக்கும் போது, தெலுங்கு 'பில்லா' வின் பின்னனி இசை வேறு.

இவரை போல் ஒரு சிக்கனமான நடிகர் தயாரிப்பாளருக்கு கிடைப்பது கடினம். தெலுங்கு படத்தின் கதை, இசை, திரைகதை என்று எடுத்து நடிப்பதால் தயாரிப்பாளருக்கு சம்பளம் கொடுக்கும் பணம் மிச்சமாகிரதாம்.

'சுறா' நம்மை வேட்டையாட... 'யூத்' கேட்டப்பில் ஏப்ரல் 30 வருதுங்கோ...!

***

நாகரத்னா பதிப்பக புத்தகங்கள் இப்போது திருச்சியிலும் கிடைக்கிறது.

Rasi publication
Tamil Sangam Buildings, Tiruchy-8

Guruji Books
136, W.B.Road, Tiruchy-8

National Book House
34, ராக்கின்ஸ் ரோடு,
திருச்சி ஜங்ஷன்.

மதுரை, சேலம், கோவை நண்பர்கள் கமிஷன் அடிப்படையில் நூல் விநியோகம் செய்ய தேவைப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்க. 9940448599.

Monday, April 19, 2010

படித்ததும் பார்த்ததும் - 19.4.10

'Indiblogger.in’ பற்றி ஹிந்து நாளேடு கட்டுரை வெளியீட்டுள்ளது. இந்த அமைப்பை உருவாக்கியவர்கள் பற்றியும், அதன் வளர்ச்சி குறித்தும், குழுவினர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். இதே போல், நம் தமிழ் பதிவர்களின் குழுமமும் வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

***

முத்துமீனாள் அவர்கள் எழுதிய 'முள்' நாவலை வாசித்தேன். தொழுநோய்யால் பாதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை.



நல்ல இலக்கிய படைப்பு என்று மார்த்தட்டிக் கொள்ளும் படையில்லை. ஆனால், கண்டிப்பாக ஒரு சுயவரலாறாக வாசிக்கலாம். பள்ளி பருவம், விடுதியில் தான் சந்தித்த ஒரின சேர்க்கை பெண்கள், தன் ஊர் தோழிகள் என்று கடந்து பாதைகளை மிக எளிமையான நடையில் விவரித்துள்ளார்.

திருமணமான பிறகு பள்ளி பருவத்தில் தனக்கு இருந்த எதிர்பால் இன கவர்ச்சி சொல்லியிருப்பது பாராட்ட கூறியது. இந்த நாவலை படித்தவர்கள் பெரிய சர்ச்சை கிலப்பாமல் இருப்பது பெரிய விஷயம்.

Kathy Acker எழுதிய Blood and Guts in High School Plus Two போன்ற நாவல் தமிழில் வரும் சூழல் இன்னும் வேகு தூரமில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது.

இந்த நூலை வாங்க... இங்கே

விலை.60. பக்கங்கள்.104
ஆழி பதிப்பகம்

***

ஒரு வழியாக ஐ.பி.எல் லீக் ஆட்டம் முடிவடைந்தது. எதோ ரீயால்டி ஷோப்போல் தான் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதுவும், லலித் மோடி சமிபத்திய விவகாரத்தை பார்த்தால், விரைவில் ஐ.பி.எல்லில் மெட்ச் பிக்ஸிங் பற்றி தகவல் கூட வெளிவரலாம். எது எப்படியோ சென்னை அரை இறுதிக்கு வந்தாச்சு !!!

***

சரித்திரம் தோற்றவனை மதிப்பதில்லை என்பது படித்திருக்கிறோம். ஆனால், அவர்கள் சுற்றத்தாரும் மதிக்காது என்பதை பிரபாகரனின் தாய் தமிழ்நாட்டுக்கு அனுமதி மறுத்த போது தெரிந்தது. தீவிரவாதிகளுக்கு கோடி கணக்கில் செலவு செய்து பாதுகாப்பு கொடுப்பவர்கள், ஒரு எண்பது வயது நபரால் என்ன பாதுகாப்பு நெருக்கடி வரும் என்று சரியா சொல்ல மறுக்கிறார்கள்.

பாகிஸ்தான், சீனாவில் இருந்து கூட மருத்துவ உதவி பெற இந்தியாவுக்கு வரலாம். இலங்கையில் இருந்து வர கூடாதா ??

மு.க. தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் புதிதில்லை. ஆனால், தன் வாரிசுகளுக்கு துரோகம் செய்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஆம் ! தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தி.மு.கவே வழி வகுத்துக் கொடுக்கிறது என்பது போல் சில நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று...!!

Monday, April 12, 2010

படித்ததும் பார்த்ததும் - 12.4.10

10 ஆண்டுகளாக ஏழை புற்று நோயாளிகளுக்கு 'ஸ்ரீ மாதா டிரஸ்ட்' சேவை செய்து வருகிறது. புற்று நோயில் "கடைசிக்கட்ட நோயாளிகள்" என்று ஒதுக்கப்பட்ட பல ஏழைகள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யலாமே !

நிர்வாகி : வி.இருஷ்ணமூர்த்தி (94440 01065)

உங்கள் நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி :

ஸ்ரீ மாத டிரஸ்ட்,
ராஜஸ்தானி தர்மசாலா,
பழைய கேன்சர் பேங்க் ரோடு,
காந்தி நகர்,
அடையாறு, சென்னை - 20
போன் : 2442 0727 / 2440 4950

**

9/11 தாக்குதல் பற்றி எத்தனையோ செய்திகள், விசாரனை,வதந்தி பற்றி கேள்விப்பட்டுயிருப்பீர்கள். சமிபத்தில் படித்த தகவல் என்னை அதிகம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, 9/11 தாக்குதலில் அமெரிக்காவில் சதி வேலை இருக்கிறது என்பது தான் அந்த தகவல்.

இரட்டை கோபுரத்தை மேல் பகுதியை தாக்கிய விமானம் எப்படி பக்கத்தில் இருக்கும் எந்த கட்டிடத்துக்கும் சேதாரமில்லாமல் உள்ளுக்குள்ளே சரிந்து விழுந்தது என்ற கேள்வி சிந்திக்க வைக்கிறது. இந்த தளத்தில் இருக்கும் பல தகவல்கள் நமையும் அமெரிக்கா மீது சந்தேகப்பட வைக்கிறது. அதே சமயம் குழப்பமாகவும் இருக்கிறது.

நீங்கள் படித்து குழம்புங்கள்.... இங்கே....

***

ஒரு போராளியின் நாட் குறிப்புகள் பயங்கரமானதகவும், இரத்த கரை படிந்ததாகவும், லட்சியத்தை நோக்கி பயணிக்கும் கதையாக தான் இருக்கும். ஆனால், எர்ன்ஸ்டோ கேகுவேராவின் 'மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்' ( கனவிலிருந்து போராட்டத்திற்கு - 1) நூல் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் குறிப்புகளாக இருந்தாலும் காதல், நட்பு போன்ற பல எண்ண ஓட்டங்களை பிரதிபலித்துள்ளது.

கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள் மட்டுமல்ல, அடுத்தவர் டைரி படிக்கும் ஆர்வமுடையவர்கள் கூட இந்த புத்தகத்தை படிக்கலாம்.

விலை. 90. பக்கங்கள் . 182
விடியல் படிப்பகம்
கோயம்புத்தூர் - 641015

***

இரண்டு வருடங்களாக 'வருது...வருது..' என்று சொல்லிக் கொண்டு இருந்த 'கேப்டன் டி.வி' ஒரு வழியாக (முன்னாள்) தமிழ் புத்தாண்டில் வரப் போகிறது. ஒரு கட்சியின் டி.வி எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. எப்படியோ அரசியலில் விட்ட பணத்தை இதில் எடுக்கிறார்களோ என்று பார்ப்போம்.

இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு பேசாம ஒரு ஐ.பி.எல் டீம் வாங்கியிருந்தா ஒரு வருஷத்துல லாபம் பார்த்திருக்கலாம்.

***

என்ன ஒரு சிந்தனை ?

வட இந்திய நடிகர்கள்
கிரிக்கெட்டில் முதலீடு போட்டு லாபம் பார்க்கிறார்கள் !
தென் இந்திய நடிகர்கள்
அரசியல் பற்றி பேசி லாபம் பார்க்க முயற்சிக்கிறார்கள் !!

Monday, April 5, 2010

படித்ததும் பார்த்ததும் - 5.4.10

நேற்று(4.4.10) காலை 9 மணிக்கு, விஜய் டி.வியில் புது டாக் ஹோ 'நாளும் நமதே' என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பினார்கள். அதில் ஒரு யுவதி, இந்தியாவில் 70% சதவீத இளைஞர்களுக்கு 'AIDS' இருப்பதாக சொன்னதும் என்னை தூக்கி வாரிப்போட்டது. பிறகு, Arrears In Different Subject என்ற விளக்கம் சொன்னவுடன் கூட்டத்தின் ஆரவார கை தட்டல்கள் ஒலித்தது.

ஒரு இளைஞன், "20 வருடங்கள் முன்பு அரசாங்கம் கல்வி நிறுவனங்களையும், தனியார் மது கடையையும் நடத்தியது. ஆனால், இப்போது அரசாங்கம் மது கடையையும், தனியார் கல்வி நிறுவங்களையும் நடத்தி வருகிறது" என்றார். இதற்கும் பலத்த கைதட்டல்.

இதுவும் இன்னொரு டாக் ஷோ என்று இல்லாமல் சில வித்தியாசமாக உத்தியை கையாண்டு இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் சிறப்பாக பேசிய நான்கு பேச்சாளரை தேர்வு செய்து அவர்கள் முன் உண்மையான பிரச்சனை முன் வைத்து தீர்வு கேட்கிறார்கள். இந்த பகுதி கண்டிப்பாக பேச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அரம்ப காலத்தில் விசுவின் 'அரட்டை அரங்கத்தை இயக்கிய 'உதயம்' ராம் அவர்கள் இந்த நிகழ்ச்சியை இயக்குகிறார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தேர்தல் அணையர் டி.என்.சேஷன் அவர்கள் கலந்துக் கொண்டார். தொகுத்து வழங்கியவர் மதன் பாப். ( நகைச்சுவை டைமிங் வர மாட்டேன் என்ற்கிறது.)

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள். தொடர்பு கொள்க.... 'உதயம்' ராம் - 94440 11105

***

நேற்று தினதந்தியில் 'போலி சாமியார்கள்' பற்றிய கட்டுரை படித்தேன். பிரேமானந்தா, ஷிவ் முராத் திவிவேதி, ஸ்ரீகுமார் முதல் சமிபத்திய நித்யானந்தா வரை குறிப்பிட்டு இருந்தார்கள். இதில், நடிகையுடன் தொடர்பு வைத்து கொண்ட சாமியார்களில் நிதியானந்தாவுக்கு சீனியர் சாமியார் பற்றி குறிப்பிடவில்லை. எல்லாம் 'அவாள்' செயல் என்று புரிகிறது.

***

ஒரு வழியாக புத்தக கண்காட்சி வாங்கிய எல்லா புத்தகங்களையும் படித்து முடித்தேன். 'Prodigy' வெளியீட்ட உலக எழுத்தாளர்களின் நாவல், சிறுகதை நூல்கள் மொத்தம் 24 நூல்களை வாசித்தேன். எல்லா நூல்களும் மிக நன்றாக எளிமையாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். சிறு வயதில் ஆங்கில பாட புத்தகங்களில் கேட்ட கதை, படிக்க தவறிய கதை மீண்டும் தமிழில் படிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்.

***

'IPL' கிரிக்கெட் காய்ச்சல் இணையத்தையும் விட்டு வைக்கவில்லை. நீங்களும் 'IPL' கிரிக்கெட் விளையாடலாம். கீழ் காணும் தளத்தும் உங்களுக்கு விருப்பமான ஒரு அணியை தேர்வு செய்து மற்ற ஏழு ஐ.பி.எல் அணியுடன் விளையாட வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு.

10 ஓவரில் 180 ரன் மேல் எடுக்க வேண்டும் என்று கடின இழக்கை கொடுக்கிறது. விளையாட விளையாட பழகிவிடும். அலுவலகத்தில் சும்மா இருப்பவர்கள் விளையாடி பாருங்கள்.

www.stickcricket.aol.in/gamepremierleague.php

LinkWithin

Related Posts with Thumbnails