வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, February 27, 2010

2010 - 11 மத்திய பட்ஜெட் - ஒரு பார்வை

2010-11 ஆம் ஆண்டிற்க்கான மத்திய பட்ஜெட்டை இன்று திரு.பிரணாப் முகர்ஜி சமர்பித்தார். இப்பட்ஜெட்டில் மாத சம்பளதாரர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி, சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை உயர்கிறது. தங்கம், வெள்ளி, சிகரட், கார்கள், டிவி, ஏ.சி. விலை உயர்கிறது. செட் டாப் பாக்ஸ், சி.டி., எலக்ட்ரிக் கார், பொம்மை, வேளாண் உபகரணங்கள் ஆகியவற்றின் விலை குறையும்.

2010-11ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் தாக்கல் செய்தார். அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவித்தார்.

அதன்படி, ரூ.5 லட்சம் வருமானம் வரை 10 சதவீதம் வரி செலுத்தினால் போதும். ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீதமும் 8 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமும் வரி கட்டினால் போதும். இதனால் வரி செலுத்துவோரில் 60 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் ரூ.20 ஆயிரமும் ரூ.8 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.50,000ம் சேமிக்க முடியும்.

விவசாயிகளுக்கு 5 சதவீதத்தில் பயிர்க் கடன் கிடைக்கும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக கிராம வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மேம்படுத்துவது, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்.

பட்ஜெட்டில் ரூ.11,08,749 கோடி செலவினம் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.6 சதவீதம் கூடுதல்.

திட்டச் செலவுகளுக்கு ரூ.3,73,092 கோடியும் திட்டமில்லாச் செலவுகளுக்கு ரூ.7,35,657 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திட்டச் செலவுக்கு 15 சதவீதமும் திட்டமில்லாச் செலவுக்கு 6 சதவீதமும் ஒதுக்கீடு அதிகரிப்பு.

நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதம். இது ரூபாய் மதிப்பில் ரூ.3,81,408 கோடியாக இருக்கும்.

2011-12ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாகவும் 2012-13&ல் 4.1 சதவீதமாகவும் இருக்க இலக்கு நிர்ணயம்.

நிகர சந்தைக் கடன் ரூ.3,45,010 கோடி.

நிகர வரி வருவாய் ரூ.7,46,651 கோடி. வரியில்லா வருவாய் ரூ.1,48,118 கோடியாக இருக்கும்.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.25,000 கோடி திரட்டப்படும்.

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.16,500 கோடி வழங்கப்படும்.

டிசம்பர் 2009 வரை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 127 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நான்கு அம்ச உத்தி கையாளப்படும். வேளாண் விளைச்சலை அதிகரிப்பது, சேதத்தை குறைப்பது, கடன் ஆதரவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கும் முக்கியத்துவம் ஆகியவை இதில் அடங்கும்.

வேளாண் கடனுக்கான இலக்கு ரூ.3,25,000 கோடியிலிருந்து ரூ.3,75,000 கோடியாக அதிகரிப்பு.

குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ஒரு சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1,73,552 கோடி ஒதுக்கீடு. இது திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 46 சதவீதமாகும். சாலை கட்டமைப்புக்கான ஒதுக்கீடு 13 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்திய அடிப்படை கட்டுமான நிதி நிறுவனம் மார்ச் 2011&ல் ரூ.20,000 கோடியை எட்டும்.
மின் துறைக்கான ஒதுக்கீடு 2 மடங்கிற்கு அதிகமாக உயர்த்தப்பட்டு ரூ.5,130 கோடியாக உள்ளது.

அடிப்படை கட்டுமானத் துறைக்கு கூடுதல் வரிச் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை கண்டறியும் ஆய்வுக்கு உதவ தேசிய தூய்மை எரிசக்தி நிதியம் அமைக்கப்படும்.

சமூக மேம்பாட்டிற்கான செலவினம் ரூ.1,37,674 கோடி. இது திட்டச் செலவில் 37 சதவீதம்.

கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.66,100 கோடியாக அதகரிப்பு.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்ட ஒதுக்கீடு ரூ.40,100 கோடியாக அதிகரிப்பு.

பாரத் நிர்மாண் திட்ட ஒதுக்கீடு ரூ.48,000 கோடி.

பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய நிதி ரூ.7,300 கோடியாக அதிகரிப்பு.

குடிசைகளில் வாழ்வோர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான ராஜீவ் வீட்டு வசதி திட்டத்திற்கான ஒதுக்கீடு 700 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1,270 கோடியாக உள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர் தேசிய சமூக பாதுகாப்பு நிதி ரூ.1,000 கோடி முதலீட்டில் அமையும்.

ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் மகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்.

சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் அமைச்சகத்துக்கு ஒதுக்கீடு 80 சதவீதம் அதிகரிப்பு. ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.

சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிப்பு. ரூ.2,600 கோடி ஒதுக்கீடு.

ஒட்டுமொத்த பொது கடன் நிலை மற்றும் அதை குறைப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய அறிக்கை 6 மாதத்தில் வெளியிடப்படும்.

அன்னிய நேரடி முதலீடுகளை எளிமைப்படுத்தும் வகையில் முதல் முறையாக உரிமை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மையப்படுத்தப்படும்.

2008-09&ல் எண்ணெய் மற்றும் உர பத்திரங்களுடன் 7.8 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2009-10&ம் ஆண்டில் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது.

நிதி சட்டங்கள் மாற்றியமைக்கப்படும். நிதித் துறை சட்டத் திருத்த ஆணையம் அமைக்கப்படும்.

பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் ஆணையத்துக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு.

இந்தத் திட்டத்துக்கு தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.

ராணுவத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,47,344 கோடியாக அதிகரிப்பு.

உரிய காலத்துக்குள் நீதி வழங்குவதற்காக தேசிய நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் இயக்கம் அமைப்பு.

வருமான வரி வரையறை: ரூ.1.6 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம். ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 20 சதவீதம். ரூ.8 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம்.

உள் கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ.20,000 கூடுதலாகக் குறைப்பு.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு உபரி வரி 10 சதத்திலிருந்து 7.5 சதமாகக் குறைப்பு.

குறைந்தபட்ச மாற்று வரி 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு.

சிறிய தொழில்களுக்கு உத்தேச வரிக்கான டர்ன்ஓவர் வரையறை ரூ.60 லட்சமாக அதிகரிப்பு.
தொழில்களுக்கு ரூ.60 லட்சம், பிரோஃபஷன் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமாக தணிக்கைக்கான டர்ன்ஓவர் வரையறை நிர்ணயிப்பு.

நேரடி வரி விதிப்பு திட்ட வருவாயில் ரூ.26,000 கோடி இழப்பு ஏற்படும். ஆனால், மறைமுக வரி மூலம் ரூ.46,500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

சேவை வரி விதிப்பு திட்டம் மூலம் நிகர வருவாயில் ரூ.3,000 கோடி லாபம்.

செய்திகளை ஆன்லைனில் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.

தனி நபர் வரி செலுத்துவோருக்கு சரல் 2 தயார்.

சேவை வரி 10 சதவீதமாகத் தொடரும்.

சில குறிப்பிட்ட புதிய சேவைகளுக்கு சேவை வரி விதிப்பு.

மைக்ரோ வேவ்அவன், இறக்குமதி சரக்குகள், மொபைல் தொலைபேசிகள், கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், விளையாட்டு பலூன்கள், மிளகு, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் வடிகட்டி ஆகியவற்றின் விலை குறைப்பு.

பொழுபோக்கு துறைக்கு சுங்கத் தீர்வையில் சலுகை.

அமெரிக்க டாலரைப் போல இந்திய ரூபாய்க்கு பிரத்யேக அடையாள முத்திரை.

சுத்தமான சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறப்பு சலுகை தீர்வை. ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.50 என்ற விகிதத்தில் எரிபொருள் தீர்வை.

மருத்துவக் கருவிகள் இறக்குமதிக்கு ஒரே மாதிரியான அடிப்படை தீர்வை & 5 சதவீதம்.

எலும்பு சிகிச்சையில் பயன்படும் செயற்கை மூட்டு, தட்டுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு.

பெட்ரோல், டீசலுக்கான கலால் தீர்வை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிப்பு.

வேளாண்மை அது சார்ந்த துறைகளில் பெருமளவு வரிச் சலுகை.

குளிர்ப்பதன நிறுவனங்களை அமைக்க இறக்குமதி திட்டங்களுக்கு சலுகை.

ட்ரெய்லர்கள், செமி ட்ரெய்லர்களுக்கு கலால் தீர்வையிலிருந்து முழு விலக்கு.

நன்றி : தமிழ்வணிகம்.காம்

Friday, February 26, 2010

வட்டி கொடுக்கும் சேமிப்பு வங்கி கணக்கு !இன்று மாத சம்பளம் வாங்குபவர்கள் பலருக்கு சேமிப்பு வங்கி கணக்கு வைத்திப்பார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை நம் வங்கி கணக்கில் 3.5% வட்டி என்ற பெயரில் ஒரு தொகை வங்கி போடும். வீட்டில் சும்மா இருக்கும் பணம் வங்கியில் போட்டால் எதோ வட்டியாவது வருகிறது என்று பல நடுத்தர வர்கத்தினர்கள் இருக்கிறார்கள். இப்படி இந்தியர்கள் பல கோடி ரூபாய் பணம் சேமித்து வைக்கும் வாடிக்கையாளர்கள் பயனடைவதை விட வங்கி லாபம் சம்பாதிக்கும் சுட்சமம் பலர் அறிந்திருக்க நியாயமில்லை.

முதலில் சேமிப்பு கணக்கில் எப்படி வட்டி கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

வங்கியின் சேமிப்பு வட்டி கணக்கு மிகவும் வினோதமாக இருக்கிறது. ஆதாவது, ஒரு மாதத்தில் 10 தேதி முதல் 30 ஆம் தேதி வரை எந்த தேதியில் குறைந்த பணம் இருக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு வட்டி கணக்கு போடுவார்கள்.

உதாரணத்திற்கு,

ஏப்ரல் 10 - வங்கி கணக்கில் பணமில்லை
ஏப்ரல் 11 - 30 - வங்கியில் 1,00,000 உள்ளது.


குறைந்த பணம் (0) எடுத்து வட்டி கணக்கு போட்டால், உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் இருக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கு எந்த வட்டியும் தராது.

அதே போல், மே 10 - 1,00,000 உள்ளது
மே 31 - எல்லா பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்தாகி விட்டது. வங்கியில் பணமில்லை
.

இப்போதும் உங்கள் சேமிப்பு வங்கி கணக்கிற்கு வட்டி கிடையாது. ஆதாவது, 51 நாள் வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் 1 லட்ச ரூபாய்க்கு எந்த பயனும் அனுபவிக்காமல் வங்கி மட்டும் லாபம் சம்பாதிக்கிறது.

உங்கள் பணம் உங்களுக்கு லாபம் கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.

மேல் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம்.

உங்கள் வங்கி கணக்கில் எப்ரல் 11ஆம் தேதி ஒரு லட்ச ரூபாய் போடுவதிற்கு பதிலாக எப்ரல் 10ஆம் தேதி போட வேண்டும். அதே போல் பணம் எடுக்க வேண்டியதாக இருந்தால் ஜூன் முதல் தேதியில் எடுத்து விட வேண்டும். அப்படி செய்தால், உங்கள் வங்கியில் இருக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கு வட்டி பெறலாம்.

இதுவரை எல்லா வங்கிகளும் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 3.5% வட்டி தருகிறோம் என்ற பெயரில் இப்படி தான் வட்டி வழங்கிவந்துள்ளது. இப்போது, RBI புது சட்டப்படி (April 1,2010 முதல்) எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர் வங்கி கணக்குக்கு தின வட்டி கொடுக்க வேண்டும். (Daily Interest - தமிழாக்கம் )

உதாரணத்திற்கு,
உங்கள் சேமிப்பு கணக்கில், எப்ரல் மாத கீழ் காணும் நாட்களில் இவ்வளவு பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஏப்ரல் 1 - Rs.500
ஏப்ரல் 10 - Rs.1000
ஏப்ரல் 25 - Rs.300

உங்கள் சேமிப்பு கணக்கு வட்டி = (500 * 3.5%* 9/365) + (1000 * 3.5%* 15/365) + (700 * 3.5%* 6/365) = Rs.2.04 கிடைக்கும்
.

இதற்கு முன்பு வட்டி கணக்கு படி உங்களுக்கு வட்டி பணம் Rs. 0.86 ( 300 * 3.5% * 30/365) கொடுப்பார்கள். புது கணக்கு படி வாடிக்கையாளருக்கு Rs.1.18 லாபம் கிடைக்கிறது. ஆனால், சேமிப்பு கணக்கில் வரும் வட்டியை இனிமேல் வருட வருமானத்தில் காட்ட வேண்டும் என்று புதிய வருமான வரி சட்டம் வரப்போவதாக தெரிக்கிறது. (PAN Card கொடுக்க வேண்டும்).

சந்தோஷத்திலும் ஒரு...... ஆப்பு !!

Monday, February 22, 2010

சிறப்பு புத்தகக் கண் காட்சி !

நாகரத்னா பதிப்பகத்தின் சிறப்பு புத்தகக் கண்காட்சி 'Discovery Book Palace' கே.கே.நகரில் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.

இதில் கீழ் காணும் நாகரத்னாவின் ஆறு நூல்களுடன்....

எனது கீதை (கட்டுரை) (சிறப்பு கழிவு:20%)
நடைபாதை (சிறுகதை) (சிறப்பு கழிவு:20%)
என்னை எழுதிய தேவதைக்கு (சிறுகதை) (சிறப்பு கழிவு:20%)
காந்தி வாந்த தேசம் (கவிதை)
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் (சிறுகதை)
டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் (சிறுகதை)

இருவாட்சி இலக்கியத்துறையின் பத்து நூல்களும் கிடைக்கும்.

இக்கண் காட்சிக்காக நாகரத்னா பதிப்பகம் இருவாட்சி இலக்கியத்துறையிடம் விற்பனை உரிமை பெற்றுள்ளது. இருவாட்சி இலக்கியத்துறை நூல்கள் பற்றிய ஒரு பார்வை.

மகாபுல்வெளி - ஆன்டன் செகாவ் ( தமிழில் : ம.ந.ராமசாமி) - ரஷ்ய நாவல்

சூரியனுக்கு சுப்ரபாதம் - ஆர்னால்ட் பென்னெட் ( தமிழில் : ஜெயந்தி சங்கர்) 'How to live on 24 hours a day' என்ற சுயமுன்னேற்ற நூலின் தமிழாக்கம்.

தைவான் நாடோடிக்கதைகள் - தமிழில்: மதுமிதா - 'Folk Tales of Taiwan' நூலின் தமிழாக்கம்.

எஸ். ஷங்கர்நாராயணனின் ('கேபிள்' சங்கர் இல்ல) மூன்று நூல்கள்.
வசீகரப் பொய்கள் ( சிறுகதை) - பாரத் ஸ்டேட் வங்கி பரிசு பெற்ற நூல்
இரத்த ஆறு - கார்கில் பின்னனியில் சில யுத்த கதைகள்
தொட்ட அலை தொடாத அலை (நாவல்)


சலாம் இசுலாம் - பதினேழு இஸ்லாம் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு. நாகூர் ரூமி, சல்மா, தோப்பில் முஹம்மது மீரான் போன்ற பிரபல எழுத்தாளர்களும் இதில் எழுதியுள்ளனர்.

ஓஹோ - தமிழ் ஹைக்கூவில் புரிதல் - செல்லம்மாள் கண்ணன்

துருவனின் இரண்டு நூல்கள்.
ஒருவன் மனது ஒன்பதடா - என்.ஆர்.கே இலக்கிய பரிசு பெற்ற நூல்
வளமுடன் வாழ்வோம் வா ! - வாழ்வில்யல் கட்டுரை நூல்

நிலாரசிகன் எழுதிய 'ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்' (கவிதை) நூலும் இந்த கண்க்காட்சியில் இடம் பெறுகிறது.

இடம் :
Discovery Book palace,
6, Munusamy salai,
West K.K.Nagar,
Chennai.

நேரம் :

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை

Tuesday, February 16, 2010

கேபிளுக்கும், பரிசலுக்கும் போட்டி !

பிப்ரவரி 14 அன்று கேபிள், பரிசல் புத்தக வெளியீட்டு விழா இனிதே நன்றாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சி வந்து எங்களை சிறப்பித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல...!

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்க... இங்கே

இதே போல் கோயம்பத்தூர் பதிவர் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் அறிவிப்பு வரும்.

**

வெளியீட்டு விழா முன்பே 'EZee Book Shop' இணையதளத்தில் பரிசல் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்து வீட்டு வருவதற்குள் கேபிள் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைத்தது.

நேற்று, இருவரின் புத்தகத்திற்கும் சமமான ( நம்பர் சொல்ல கூடாது, கண்ணு படும் !) ஆர்டர் கிடைத்துள்ளது. யாணை சாப்பிடும் போது எறும்புக்கு உணவு கிடைப்பது போல நடைபாதை, என்னை எழுதிய தேவதைக்கு... புத்தகத்திற்கும் ஆர்டர் கிடைத்துள்ளது.

இப்போது, கேபிள், பரிசல் இருவர் புத்தகத்தில் 'யார் Best Seller' என்பதில் EZee Book Shop தளத்தில் சரியான போட்டி நடக்கிறது. வாசகர்களுக்கு 10 % கழிவும் வழங்கப்படுகிறது.

***

நாகரத்னா பதிப்பகத்தின் 6 புத்தகங்கள் இப்போது ரூ.250 மட்டுமே ! EZee Book Shop தனது இணையத்தில் அதற்கான வசதி வழங்கியுள்ளது.

Book no.1 - என்னை எழுதிய தேவதைக்கு - குகன்
Book no.2 - காந்தி வாழ்ந்த தேசம் - நாகரத்னா வெளியீடு
Book no.3 - நடைபாதை - குகன்
Book no.4 - எனது கீதை - குகன்
Book no.5 - லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயண்
Book no.6 - டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா

புத்தகங்களை வாங்க

Thursday, February 11, 2010

‘முதியோர் இல்லம்’ - பரிசு பெற்ற கதை

நான் எழுதிய ‘முதியோர் இல்லம்’ கதை, நம் உரத்தசிந்தனை நடத்திய ‘சிறுகதை போட்டி’யில் பரிசு பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் 'மனசாட்சி சொன்னது' என்ற கதைக்கு 2008 பரிசு வாங்கினேன். இந்த கதை 'நடைபாதை' - சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

பரிசு பெற்ற முதியோர் இல்லம் கதை பதிவர்களுக்காக....

***

முதியோர் இல்லம்என்ன தான் சுந்திரமாக திறிந்தாலும், சிவகாமிக்கு இந்த இடம் திறந்த சிறைவாசமாக தான் இருந்தது. உறவுகள் இருந்தும் ஆனாதையாக வாழ்வது எவ்வளவு கொடுமை. வாழ்வும் வயதில் கணவனை இழந்து, இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து கரை சேர்த்ததற்கு அவளுக்கு கிடைத்த பரிசு 'முதியோர் இல்லம்' என்ற சிறை தான்.

"என்ன சிவகாமி அம்மா... காலையில இருந்து ஒன்னும் சாப்பிடாம இருக்கீங்க...?" என்று காமாட்சி பரிவுடன் கேட்டாள். இந்த முதியோர் இல்லத்தில் புதிதாக சேர்ந்தவள். மகள் திருமணத்தை முடித்து யாருக்கும் தொல்லைக் கொடுக்க கூடாது என்று அவளே இங்கு வந்து சேர்ந்து விட்டாள். இந்த இல்லத்தில் வந்து சேர்ந்ததில் கவலைப்படாத ஒரே ஜீவன் இவளாக தான் இருக்க முடியும்.

காமாட்சி வந்து சேர்ந்த பிறகு தான், அங்கு தங்கி இருந்த மற்றவர்கள் மனதில் புது நம்பிக்கை பிறந்து. குறிப்பாக சிவகாமிக்கு. தன் பிள்ளைகள் தொல் கொடுக்க வேண்டிய வயதில் சிவகாமிக்கு கிடைத்த சக வயது தொழி தான் காமாட்சி.

" என்ன சிவகாமி அம்மா... எதுவுமே பேசமாட்டீங்றீங்க.." என்றாள்.

"இன்னையோட நான் இங்க வந்து நாலு வருஷம் ஆகுது.." என்று கண்களில் நீர் தழும்ப சிவகாமி கூறினாள்.

" நாள் போற வேகத்துல இன்னுமா இந்த தேதி உங்களுக்கு ஞாபகம் இருக்கு.." என்றாள் காமாட்சி.

சிவகாமி எதுவும் பேசவில்லை. தன் வலி பற்றி அவளுக்கு தெரியாது. தெரிந்தாலும் பெரிதாக பாதிப்பு ஒன்று அவளுக்கு இருக்க போவதில்லை. சிவகாமியை போல பல கதைகள் காமாட்சிக்கு கேட்டு பழகிவிட்டது. ஆனால், சிவகாமி அப்படியில்லை. தன் கதையே பெரிய கதை என்று நினைத்து வருந்துக் கொண்டு இருந்தாள்.

சிவகாமி நினைவலைகள் பின்னோக்கி சென்றன.

தன் கணவன் அரசாங்க உத்தியோகம் பார்த்ததால், அவர் இறந்ததும் அந்த வேலை சிவகாமிக்கு கிடைத்தது. அந்த வேலை கிடைத்ததால் தன் இரண்டு மகன்களை நன்றாக வளர்த்தாள். முத்த மகன் பெயர் 'ராஜசேக'ர். இரண்டாவது மகனின் பெயர் 'ராஜமோகன்'. 'ராஜா' மாதிரி வளர்க்க வில்லை என்றாலும் பெயரிலாவது 'ராஜா' இருக்கட்டும் என்று வைத்துவிட்டாள்.

தன் முத்த மகன் ராஜசேகர், தன் மகன் சத்யா வெளிநாட்டு படிக்க கூட்டு குடும்பம் நடத்தும் வீட்டை விற்று பணம் தர சொன்னான். ஆனால், இளைய மகன் ராஜமோகன் முதலில் விற்க மறுத்தான். ஆனால், அவன் மனைவி தனி குடிதனம் போகுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்று அவனை சம்மதிக்க வைத்துவிட்டாள். தன் காலம் முடியும் வரை வீடு விற்க கூடாது என்று பிடிவாதமாக இருந்தவள் தன் பேரன் படிப்பு உதவியாக இருக்கும் என்று வீடு விற்க சம்மதித்தாள்.

வீடு விற்ற பிறகு பணத்தை பிரித்துக் கொண்டார்கள். ஆனால், சிவகாமியை.... ??

"அண்ண வீட்டில் இரும்மா" என்று தம்பியும், "தம்பி வீட்டில் இரும்மா" என்று அண்ணனும் கூறி, கடைசியில் அவளை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.

"சிவகாமி அம்மா... இந்த உலகத்துல தான் இருக்கீங்களா...." என்று காமாட்சி கூறியதும், தன் நினைவலைகளில் இருந்து விடுப்பட்டாள்.

"சின்ன வயசுல என் இரண்டு பசங்க பொம்மைக்காக சண்ட போடுவாங்க. நான் போய் சமாதானம் பண்ணுவேன். பேர பேத்தி கல்யாணத்த பார்க்கலாம்னு இருக்குறப்போ... சொத்துக்காக அடிச்சிக்கிட்டவங்க. அம்மாவ பத்தி யோசிக்கவே இல்ல..." என்று சொல்லும் போது சிவகாமி கண்கள் கழங்கியது.

" விடுங்க சிவகாமி அம்மா... பந்தயத்துல ஓட முடியாத குதிரைய சுட்டு கொல்லுற உலகம். வயசான மனுஷங்களுக்கு வாழ இந்த மாதிரி இடமாவது இருக்கே ! சந்தோஷப்படுங்க..." என்று ஆறுதலாக காமாட்சி கூறி சிவகாமியை தேற்றினாள்.

இவ்வளவு பெரிய வார்த்தை. பந்தயத்தில் ஓடும் வரைக்கு தான் குதிரைக்கு பெருமை. மனிதனுக்கு அப்படி தான். ஓட்டம் அடங்கி விட்டால், இறந்து விடுவது நல்லது. இல்லை என்றால் இது போன்ற இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று சிவகாமி மனதில் நினைத்துக் கொண்டாள்.

"சிவகாமி மேடம்... உங்கள பார்க்க யாரோ வந்திருக்காங்க..." என்றாள் காப்பாளர் சுதா.

இந்த நான்கு வருடங்களில் தன்னை யாரும் பார்க்க வராத போது இப்போது யார் வந்தது என்று சிவகாமி குழப்பமாக இருந்தது. சிவகாமி வெளியே வந்த பார்த்தும் தன்னை அறியாமல் வந்தவனை கட்டிபிடித்து முத்தமிட்டாள். வந்தன் அவள் பேரன் சத்யா.

சந்தோஷத்தில் சிவகாமியால் எதுவும் பேசமுடியவில்லை. அவன் பேரன் சத்யா நலம் விசாரித்தும் பதில் அளிக்காமல் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் காப்பாளர் சுதா அங்கு வந்தாள். "சிவகாமி மேடம். உங்க பேரன் உங்கள அழைச்சிட்டு போக தான் வந்திருக்காரு..." என்றாள்.

சிவகாமிக்கு என்ற சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆனால், சிவகாமி அந்த இடத்தை விட்டு வர அவளுக்கு மனமில்லை.

"பாட்டி..! எங்க அப்பா அம்மா பண்ண தப்புக்கு நான் பிராசித்தம் பண்ணுறேன். என் கூட வாங்க..." என்றான்.

"நான் வரல. இங்கையே என் கடைசி காலத்துல இருந்துடுறேன் " என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தை போல் கூறினாள். பல ஆறுதலான வார்த்தைகள் சத்யா கூறியும் சிவகாமி கேட்கவில்லை.

கடைசியில், " நீங்க இப்ப வரல... உங்களுக்கு கம்பேனியா எங்க அப்பா, அம்மாவையும் இங்க வந்து விட்டுவேன் " என்றான்.

" டேய் அப்படியெல்லாம் சொல்லாத. என் மகன் கேட்டா தாங்கமாட்டான் ! " என்று சிவகாமி கூறி, தன் மகனுக்கு இல்லாத அன்பும், பாசமும் தன் பேரனுக்கு இருப்பதை சந்தோஷப்பட்டாள்.

பிறகு, காப்பாளர் சுதா, காமாட்சி என்று பலர் சிவகாமியிடம் பேசி சம்மதிக்க வைத்தனர். சத்யா தன் பாட்டியை காரில் முன் பக்கம் அமர வைத்து ஓட்டி சென்றான்.

பிணங்களாக முதியோர் இல்லத்தை விட்டு செல்பவர்கள் மத்தியில், முதல் முறையாக உயிருடன் செல்லும் சிவகாமியை பார்த்து காப்பாளர் சுதா சந்தோஷப்பட்டாள்.

Wednesday, February 10, 2010

முன்பதிவு மற்றும் 'மீண்டும்' சிற்றிதழ்

டி.வி சேனல் எல்லாம் சன் டி.வி படம் வருவது போல் பார்க்கும் ப்ளாக் எல்லாம் கேபிள், பரிசல், நாகரத்னா நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பற்றி தான்.

பதிப்பாளராக சந்தோஷமாக இருந்தாலும் ஒரு பதிவராக இவர்கள் இருவரை பார்த்து பொறாமை படமால் இருக்க முடியவில்லை. குறுகிய காலத்தில் எழுத்து மூலம் மட்டுமில்லாமல் நட்பாலும் பலர் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். இவர்களின் முதல் புத்தகம் வெளியீடுவது என்பது மிக பெரிய பொறுப்பு.

இவர்கள் இருவரும் 14.2.10 அன்று எழுத்தாளராக தேர்வு எழுத போகிறார்கள். நான் பதிப்பாளனாக தேர்வு எழுத போகிறேன். நிகழ்ச்சிக்கு வந்து மதிப்பெண் வழங்க போவது நீங்கள் தான்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட புத்தகம் நன்றாக வந்துள்ளது. குறிப்பாக முன்பதிவு திட்டத்தை பற்றி சொல்ல வேண்டும்.

முதலில் கேபிள் இந்த திட்டத்தை பற்றி சொல்லும் போது எனக்கும் இருந்த யோசனையை கூறினேன். தபால் செலவே ரூ.25 - 30 வரும் போது எப்படி என்று தயங்கினேன். எதோ ஒரு புத்தக கடைக்கு பணம் தருவதை விட நம்மிடம் நேராக வாங்கும் வாசகர்களுக்கு கொடுக்கலாம் என்று கேபிள் சொன்னதின் பெயரில் இந்த முன்பதிவு திட்டத்திற்கு சம்மதித்தேன்.

இதுவரை 20 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் மூன்று பேர் நாகரத்னா பதிப்பகத்தின் எல்லா நூல்களையும் வாங்குவதாக கூறியுள்ளார்கள். ( ஏழு நூல் = ரூ.280 + தபால் இலவசம் )

இன்னும் இரண்டு தினம் (12.2.10 கடைசி நாள்) இருப்பதால் நாற்பது முதல் ஐம்பது முன்பதிவு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

**

பதிவுலகுக்கு வந்த பிறகு சிற்றிதழ் மீது எனக்கு இருந்த பார்வை வெகுவாகே குறைந்து விட்டது. 2008 வரை கல்வெட்டு பேசுகிறது, தாய்மண், உரத்தசிந்தனை, செங்கரும்பு என்று பல சிற்றிதழ்களில் எழுதியிருக்கிறேன். மாதம் ஏதாவது ஒரு இதழில் என் படைப்பு வருவது போல் பார்த்துக் கொண்டேன். வலைப்பதிவு தொடங்கிய பிறகு சிற்றிதழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. உடனுக்கு உடன் விமர்சனம், கருத்து கிடைத்து விடுவதால் சிற்றிதழில் எழுதுவது பெரிதாக எனக்கு தெரியவில்லை.

ஒரு சிற்றிதழ் ஆசிரியர் , " ஏன் படைப்புகள் அனுப்புவதில்லை ?" என்று மிக அக்கரையாக கேட்டார். அத்துடன் இருந்தால் பரவாயில்லை. "உங்கள் படைப்பு எதிலுமே வருவதில்லை.நான் எழுதுவதை நிருத்திவிட்டேனா ? " என்று கேட்டுவிட்டார்.(அந்த அளவுக்கு நான் நல்லவனில்லை). வலைப்பதிவு எந்த அளவுக்கு என்னை சிற்றிதழில் இருந்து தூரமாக்கிவிட்டது என்று பிறகு இப்போது தான் உணர்ந்தேன்.

ஒரு வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சிற்றிதழில் எழுத தொடங்கியிருக்கிறேன்.

1. 'உலக சினிமா’வை பற்றி ஆகஸ்ட்,09 முதல் கல்வெட்டு பேசுகிறது இலக்கிய மாத இதழில் எழுதி வருகிறேன். ( இதுவரை இதழில் வெளியான 'உலக சினிமா' கட்டுரைகள்)

Rabbit Roof fence
Spring, Summer, Fall, Winter... and Spring
Legend of 1900
A Beautiful Mind

2.குறும்படத்தை பற்றி இந்த மாதம் முதல் ‘நம் உரத்தசிந்தனை’ மாத இதழில் எழுத தொடங்கியிருக்கிறேன்.( இந்த மாதம் '....த்தூ' படத்தை பற்றிய கட்டுரை வந்துள்ளது. ) உங்கள் குறும்பட விமர்சனம் இடம் பெற உதயம்ராம் - 94440 11105 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு சிற்றிதழில் இணையதளத்தை பற்றி எழுத கேட்டுள்ளார்கள்.

மீண்டும் சிற்றிதழில் எழுத தொடங்கி இருப்பதால் பதிவு, பதிப்பகம் இரண்டும் கேடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

காதலன் / காதலிகிட்ட காதலை சொல்ல மறந்தால், 14.2.10 அன்று நம்ப நிகழ்ச்சிக்கு வந்திடுங்க...

Friday, February 5, 2010

பாஸ்டர்ட்

'Bastard...'

எந்த வார்த்தையாலும் நான் கோபப்பட மாட்டேன். ஆனால், இந்த ஒரு வார்த்தையில் நான் மட்டுமல்ல ! சராசரி அமைதியான மனிதனை கூட கோபப்பட வைத்துவிடும். இதை என்னிடம் நேரில் யாரவது சொல்லியிருந்தால் அவன் வாய்யை உடைத்திருப்பேன். 'பரதேஸி மகன்'. நான் பார்கிங் செய்த காரில் இந்த வார்த்தையை கிறுக்கி விட்டு சென்று விட்டான்.

புது வண்டி. பார்த்து பார்த்து வாங்கிய மெடலிக் கலர். இப்போது இந்த "தேவ..." வார்த்தை கிறுக்கியதால், குடும்பத்தோடு எடுத்து செல்ல மனம் வரவில்லை. பார்ப்பவர்கள் எல்லாம் கேலியாக கேட்பது ஒரு மாதிரியாக இருந்தது.புது காரை சர்வீஸ் சென்டரில் விட்டேன். கலர் மிகவும் விலையுயர்ந்தது. 20,000 ரூபாய் வரை செல்வாகும் என்று மெக்கானிக் கூறினான்.

என் மாத சம்பளமே அவ்வளவு. எதோ கஷ்டப்பட்டு லோனில் காரை வாங்கினேன். வண்டியை எடுக்கவும் முடியாமல், சரி செய்யவும் முடியாத இக்கட்டான நிலைமை.
இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்ய முடியுமா என்றேன். உங்கள் இன்ஷூரன்ஸ் கம்பேனியிடம் பேச வேண்டும் என்று சர்விஸ் சென்டரில் கூறினர்.

போன் போட்டு பேசினேன். 'சரவணன்' என்பவன் போன் எடுத்தான். என் வண்டியில் கிறுக்கிய விபரத்தை கூறினேன்.

"பரவாயில்ல சார் ! நீங்க போலீஸ் கம்லேன்ட் கொடுத்துட்டு, அந்த காபி என் கையில கொடுங்க. உங்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளைம நா பாத்துக்கிறேன்" என்றான்.

"அப்பாடா... இன்ஷூரன்ஸ் எடுத்தது நல்லதா போச்சு..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

என் நண்பன் சேகரை அழைத்துக் கொண்டு அவன் வண்டியில் போலீஸ் நிலையத்திற்கு சென்றேன்.

" கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. வந்திடுறேன் " நண்பனிடம் சொல்லி உள்ளே சென்றேன்.

வெளியே நிற்கும் போலீஸ்க்காரர் என்னை குற்றவாளியை பார்ப்பது போல் பார்த்தார். நான் பார்த்தும் பார்க்காதது போல் உள்ளே நுழைந்தேன். அங்கு நாற்பது வயது மதிக்க தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தான் 'ரைட்டர்' என்று பார்த்தது புரிந்துக் கொண்டேன்.

" சார் ! என் பெயரு சேகர். இந்த ஏரியா தான். நேத்து என் காருல யாரோ கெட்ட வார்த்தையில கிறுக்கி இருக்காங்க..." என்ற கூறினேன்.

திருப்பி போட்ட சட்டி போல் தோப்பையுடன், காதை குடைந்துக் கொண்டு இருந்தார்.

"கெட்ட வார்த்தனானா ?? " அலட்சியமாக கேட்டார்.

அந்த வார்த்தையை சொன்னேன்.

"தேவுடியா எழுதிருக்கான் சொல்லு..." என்று அதே அலட்சிய தோரதனையில் சொன்னார்.
நான் எதுவும் பேசவில்லை. நமக்கு வேலை நடக்க வேண்டும். அதுவரை பேசாமல் இருப்பது நல்லது. போலீஸ் ஸ்டேஷனில் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுவது என்னை மாதிரி சராசரி மனிதனுக்கு நன்மை.

சற்று நேரம் அந்த போலீஸ்க்காரர் யோசித்தார். அப்போது கையில் செல்போனுடன், வாயில் பீடா போட்டுக் கொண்டு பைஜமா, ஜிப்பா போட்டு ஒருவன் சிரித்துக் கோண்டே அமர்ந்தான்.
அதுவரை விரைப்பாக இருந்த ரைட்டர் முகத்தில் புன்னகை தாணவமாடியது.

"வாய்யா... மாரி...! எப்படி இருக்கு தொழிலு..?" என்று அவனை பற்றி விசாரித்தார். இவர்களுக்கு நான் இருப்பது இடஞலாக கூட தெரியவில்லை.

"எதோ போகுது ! ஒரு பார்ட்டி வைடிங்... இந்தா இந்த மாசம் மாமூல்..." என்று கையில் இருந்து 500 ரூயாய் கட்டு டெபிள் மீது வைத்தான்.

" இருப்பா ! ஒரு காபி குடிச்சிட்டு போ.."
" இல்லைய்யா ! அவசரமா போனும். பார்ட்டி போய்டா கஷ்டம். இன்னைக்கு மாமூல தரலன்னா. குட்டிய அள்ளிட்டு போய்டுவ. அதுக்கு தான் வந்தேன்" என்று சொல்லி, போலீஸ்காரர்.... இல்லை போலீஸ்காரனின் பதிலுக்கு காதிருக்காமல் சென்றான்.

வந்தவன் சென்ற பிறகு அந்த டைட்டர் என்னை பார்த்து, " போய்.. அங்க நில்லு. அப்பறம் குப்பிடுறேன் " என்றான்.

பொறுமையாக இருந்தேன்.இங்கு குற்றவாளி விருந்தினர் போல் நடத்தும் போது போலீஸ் மீது எனக்கு இருந்த அபிப்பிராயம் கொஞ்சம் குறைந்தது. அரை மணி நேரமாகியும் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

மீண்டும் டைட்டரிடம் சேன்றேன்.

"சார்...!"

" என்னையா..!" சலிப்புடன் கேட்டான்.

" என் வண்டிய யாரோ கிரிக்கிட்டான் சொன்னே ! அந்த விஷயம்ம்ம்ம்ம்ம்"

" அதுக்கு நா வந்து வண்டிய தொடைக்கனுமா..."

" இல்ல சார் ! நீங்க கம்லேன்ட் ஃபைல் பண்ண. அந்த காபி வச்சு இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்ணுவேன்"

" நாள் முழுக்க ஓட்டுற ஆட்டோக்கார கூட 100 டூபா செல்வு பண்ணி ரிப்பேர் பண்ணுறா. உன்ன மாதிரி ஆளுங்க தான் இன்ஷூரன்ஸ் அது இதுனு எங்க கிட்ட வந்து நீக்குது.."

என் பொறுமை இழந்தேன்.

" ஹலோ ! என்ன செலவு பண்ண முடியல்லனு தான் உங்கள் கிட்ட வந்தேன். அத விட்டு தேவையில்லா பேசாதீங்க..."

" என்னையா திமிரா ! போலீஸ் ஷ்டேஷன்ல குரல ரொம்ப உசத்தி பேசுற..."

" பிண்ண இர்ரெஸ்பான்சிபிலா பதில் சொன்னா "

" கொடுக்க முடியாது உன்னால பண்ண முடிஞ்சத பண்ணு...."

" எங்கையா இன்ஸ்பெக்டர். நா அவர் கிட்ட பேசிக்கிறேன்..."

" உனக்காக அவரு வர மாட்டாரு... போ...."

எனக்கு கோபம் தலைக்கேறியது. டெபிள் மீது இருக்கும் பேப்பர் வைட்டை பார்த்தேன். அவன் மடையை கவனித்தேன். ஒரே அடி.... அவ்வளவு தான்.

இப்படி நினைத்து முடிப்பதற்குள் ஒரு கான்ஸ்டெபிள் வந்து என்னை வெளியே இழுத்து சென்றான்.

" சார் ! விடுங்க... அவன் கிடக்குறான். இன்ஷூரன்ஸ் தானே நா வாங்கி தரேன்."
அரை நாள் முழுக்க இங்கு தேவுடு காத்ததற்கு இப்பது தான் நல்ல எனக்கு சாதகமான வார்த்தை காதில் விழுந்தது.

" ஃபார்மாலட்டிஸ் எல்லாம் பண்ணுவீங்களே....!" என்று சொல்லி தலையை சொறிந்தான்.என்னிடம் எதிர்பார்ப்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது. இவனுக்கு லஞ்சம் கொடுப்பதை விட என் அவன் கையில் இருந்த தூப்பாக்கி முனையில் இருக்கும் கத்தியை முறைத்தேன். என் உடம்பு சுடெரியது போல் இருந்தது. கத்தி எடுத்து ஒரே சதக்............!

நினைப்பதற்குள் என் நண்பன் என்னை வந்து என்னை இழுத்து சென்றான். வண்டியை என் சொந்த பணத்தில் சரி செய்து விடுவேன். இருந்தாலும், என் கோபத்தை எப்படியாவது காட்டியாக வேண்டும்.

நடக்கும் போதும் ஒரு கல் என் காலை தடுத்தது. பக்கத்தில் போலீஸ் ஹூன்டாய் கார் இருந்தது. இந்த முறை யோசிக்கவே இல்லை. அதே கெட்ட வார்த்தையை வண்டியில் எழுதிவிட்ட பிறகு தான் என் கோபம் கொஞ்சம் தனிந்தது.

'பாஸ்டர்ட்'

Thursday, February 4, 2010

'காந்தி வாழ்ந்த தேசம்' பற்றி முத்துகமலம்.காம்

50 கவிஞர்கள் எழுதிய 'காந்தி வாழ்ந்த தேசம்' கவிதை தொகுப்பு நூலை பற்றி முத்துகமலம்.காம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதன் லின்க் கீழே

http://www.muthukamalam.com/muthukamalam_puthakaparvai54.htm

நூலை வாங்க இங்கே...

Wednesday, February 3, 2010

ஹைக்கூ கவிதைகள் - 2

பல நாட்களாக குடியிருந்தும்
வாடகை தரவில்லை
கரப்பான் பூச்சி !!

**

'மரத்தை வெட்ட வேண்டாம்'
என்று எழுதியிருந்தது
அச்சடித்த காகிதத்தில் !

**

நிலவுக்கு வந்த
கோடி காதல் கடிதங்கள்
நட்சத்திரம் !

**

கடவுள் கூட நாத்திகன் தான்
தன் சிலையை
காப்பாற்றாமல் இருக்கும் போது !

****

என் கல்லூரி நாட்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள்.

புத்தகத்தை முன் பதிவு செய்ய... !

வரும் 14.2.10 அன்று கேபிள் சங்கர் எழுதிய 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் ' மற்றும் பரிசல்காரன் எழுதிய 'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் ' நூல் Discovery Book Palace யில் நடைபெறவுள்ளது. (தொடர்பாக பதிவு)

பொதுவாக முன் பதிவு முறை ஆங்கில புத்தகங்களுக்கு தான் பயன்படுத்துவார்கள். முதல் முறையாக தமிழ் புத்தகங்களுக்கு முன் பதிவு முறையை முயற்சி செய்ய போகிறோம்.

சென்னை வாசகர்களுக்கு
15% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

சென்னை தவிர தமிழ்நாட்டு வாசகர்களுக்கு
10% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

மற்ற மாநில வாசகர்களுக்கு
தபால் செலவு மட்டும் இலவசம்.

இரண்டு நூலின் விலை (சலுகை விலை இல்லாமல்) ரூ.100. இரண்டு புத்தகம் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு தான் இச்சலுகை ஏற்றுக் கொள்ளப்படும்.

கீழ் காணும் முறையில் புத்தகத்தை முன் பதிவு செய்யலாம்.

1.

பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 'Advance Book Order' என்று 'Subject' போட்டு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்புங்கள்.

2. Cheque (At par Only) / DD மூலம் பதிவு செய்ய விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

3. MO/eMO மூலம் பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்கள் முகவரியை பின்பக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டு, K.G.Kannan,Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

முன் பதிவு செய்ய கடைசி நாள் : 12.2.10

பதிவு செய்த வாசகர்களுக்கு வெளியீட்டு விழா (14.2.10) முடிந்த பிறகு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

Monday, February 1, 2010

காதலர் தின சிறப்பு அறிவிப்பு

வரும் காதலர் தினத்தை (14.2.10) முன்னிட்டு (நம்பள மாதிரி யூத் கொண்டாடம யார் கொண்டாடுறது) நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு சிறப்பு அறிவிப்பு.

ஒன்று

நாகரத்னா பதிப்பகத்தின் வெளியீடான 'என்னை எழுதிய தேவதைக்கு...' காதல் சிறுகதை நூல், 10% கழிவு விலையில் (ரூ.55 புத்தகம் ரூ.50க்கு) கீழ் காணும் புத்தக கடையில் கிடைக்கும்.

சென்னை:

Discovery Book Palace
No.6, Mahavir Complex,
1sr Floor, Munusamy salai,
West K.K.Nagar, Chennai - 600 078

New Book Lands,
T.Nagar, Chennai -17

Guru Arul
Patel Road,
Perambur, Chennai -11

திருச்சி:

குருஜி புக்ஸ்
136,W.B.Road, Tiruchy -620008

ராசி பப்ளிக்கேஷன்ஸ்
1&2, Tamil Sangam Buildings,
46-A, W.B.Road, Tiruchy - 620008

இரண்டு

14.2.10 அன்று பதிவுலக இரண்டு ஜான்பவான் நூல்களை நாகரத்னா பதிப்பகம் வெளியீடவுள்ளது.


லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயண் ( நம்ப 'கேபிள் சங்கர்' தாங்க) - விலை ரூ.50/-டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா ( பரிசல்காரனே தான்) - விலை ரூ.50/-நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இடம்:

Discovery Book Palace
No.6, Mahavir Complex,
1sr Floor, Munusamy salai,
West K.K.Nagar, Chennai - 600 078

அனைவரும் வருக !!!

LinkWithin

Related Posts with Thumbnails