வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, July 22, 2010

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு !

இந்தியாவில் அதிக கேமிரா விற்கும் நிறுவனம் எது ?

நீங்கள் சோனி, கேனான், நிக்கான் என்று பதிலளித்தால், அது தவறு. இதில் யாருமே இல்லை. நோகியா தான் அதிக கேமிரா விற்கிறார்கள். ஆனால், அவர்கள் கேமிரா விற்பனையாளர்களாக தெரிவதில்லை. செல்போன் விற்பனை செய்பவர்களாக தெரிகிறார்கள்.

செல்போனோடு கேமிராவருவதால் கேமிரா விற்பனை குறைந்து போயிருக்கிறது. செல்போனிலே கேமிரா இருப்பதால் பலர் தனியாக கேமிராவை வாங்குவதில்லை. கேமிரா வாங்க வேண்டும் என்று இல்லை. செல்போனை கூட வாங்கலாம் என்பது தான் இன்றைய நிதர்சனம்.

இந்தியாவில் அதிக கேமிரா இசை பாடல்கள் விற்பனை செய்யும் நிறுவனம் எது ?

HMV இல்லை. ச-ரி-க–ம. அதும் இல்லை. ஏர்டெல் தான். காலர் டுயூன் என்ற பெயரில் ஒவ்வொரு நொடிக்கு பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். பல இசை ஆல்பம் நிறுவனங்களை விட ஏர்டெல் அதிகமாக சம்பாதிக்கிறது. அதுவும் நிமிடங்களில்..!



ஏர்டெல் இசை நிறுவனமில்லை. தொலைப்பேசி சேவை நிறுவனம் மட்டுமே. காலர் டியூன் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கொடுக்கும் சேவை. ஆனால், மற்ற இசை நிறுவனங்களை விட காலர் டியூனில் ஏர்டெல் லாபம் சம்பாதிக்கிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ-போன்', கூகிள் நிறுவனத்தின் 'அன்திராய்ட்' போன்ற வரவால் தங்கள் விற்பனை பாதிக்க படலாம் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிள், ஆப்பிள் செல்போன் விற்கும் நிறுவனமாக மாறபோகிறதா என்ன ? இல்லை.

நோக்கியாவுக்கும், கேனானுக்கு என்ன சம்பந்தம் ? ஏர்டெலுக்கும், எச்.எம்.விக்கும் என்ன சம்பந்தம் ? ஆனால் இதில் ஒரு நிறுவனத்தால் இன்னொரு நிறுவனத்தின் விற்பனை பாதிக்கிறது. மறைமுகமான போட்டியாளராக இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிக பெரிய யுத்த காவியம் என்று கேட்டால் 'மகாபாரதம்' என்று சொல்லுவார்கள். ஆனால், நாளை மிக பெரிய யுத்தம் இதுவாக தான் இருக்க முடியும். ஆம்... யார் நம் போட்டியாளர் ?

என் மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் " ஆப்பிள் நிறுவனம் சோனி நிறுவனத்துக்கு என்ன செய்தது, சோனி நிறுவனம் கோடாக் நிறுவனத்துக்கு என்ன செய்தது ?" . பதிலிது தான். சோனி நிறுவனம் ஒலியை விற்பனை செய்கிறார்கள். கோடாக் நிறுவனம் ஒளியால் படத்தை விற்பனை செய்கிறார்கள். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த இரண்டையும் உள்வாங்கி கொண்டு தனது கணினியில் ஒலி (sound) மற்றும் ஒளி (Light)யை காட்டுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கணினி சோனி, கோடாக் நிறுவனத்தை விழுங்கும் ஆபாயம் உள்ளது.



முன்பெல்லாம் கோடாக் பிலிம் வாங்கி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு இருந்தோம். டிஜிட்டல் காமிரா வந்ததும் கோடாக் பிலிம் வாங்குவது குறைந்துவிட்டது. காமிராவுக்காக தான் கோடாக் நிறுவனம் பிலிம் தயாரித்தது. ஆனால், பிலிம் இல்லாமல் காமிரா வரும் என்று கோடாக் நிறுவனம் யூகித்திருப்பார்களா ??

2008 ஆண்டில், பிரிட்டிஷ் ஆர்வேஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் யார் போட்டியாளராக இருந்தார்கள் தெரியுமா ? சிங்கபூர் ஆர்லைன்ஸ். இல்லை. இந்தியன் ஆர்லைன்ஸ். அதுவும் இல்லை. எச்.பி , சிஸ்கோ நிறுவனத்தின் டெலி கான்பிரன்ஸ் தான் பதில். யூகிக்க முடியாத பதில் தான். ரெசிஷன் சமயத்தில் நிறுவனங்களின் செலவுகளை குறைக்க பல மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் மேலதிகாரிகளை வெளியூர் அனுப்புவதற்கு பதிலாக, டெலிகான்பிரன்ஸ் முறையில் பேசி தங்கள் வேலையை முடித்துக் கொண்டனர். ரெசிஷன் சரியாகி மீண்டும் பழைய நிலையில் திரும்பினாலும், ஆர்லைன்ஸ்யை விட டெலிகான்பிரஸ் முறையை தான் பயன்படுத்துவார்கள்.

இந்திய மக்களுக்கு இரண்டு பொழுது போக்கு விஷயம், ஒன்று சினிமா. இன்னொன்று கிரிக்கெட். டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி நடந்த வரையில் சினிமாவுக்கும், கிரிக்கெட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கிரிக்கெட்டில் ஷேவாக், தோனி கடவுள் என்றால், சினிமாவில் ரஜினி, கமல் கடவுள். இரண்டும் வெவ்வேறாக தான் இருந்தது. ஆனால், 20-20 ஓவர் IPL ஆட்டம் வந்ததும் பல படங்கள் வெளியிட தயங்கினர். சில திரையரங்குகளில் 20-20 IPL கிரிக்கெட் ஆட்டத்தை பிரத்தியேக முறையில் ஒளிபரப்பினர். படங்களை திரையிட கூட திரையரங்கு கிடைக்கவில்லை. காரணம், 20-20 கிரிக்கெட், சினிமாவும் மூன்று மணி நேர பொழுது போக்கும் அம்சம் கொண்டது. 3 மணி நேரம் படம் பார்த்தால் என்ன ? கிரிக்கெட் பார்த்தால் என்ன ? ரசிகர்களின் எண்ணம் சினிமாவை ஓறம் கட்டியது.

முப்பது வருடங்களுக்கு முன்பு, கருப்பு வெள்ளை படம், டைப் ரைட்டர், ஃபௌன்ட்டன் பேன் பயன்படுத்தினர். இப்போது அது எல்லாம் நினைவு சின்னம் தான். கணினி வந்த பிறகு டைப் ரைட்டரை யாரும் பயன்படுத்துவதில்லை. விஞ்ஞான வளர்ச்சி பல கருவிகள் உருவாக்குகிறது மட்டுமல்ல, உருவாக்கின கருவிகளை அழித்தும் இருக்கிறது.

இன்று காலையில் சிக்கிரம் விழிக்க யார் ஆலாரத்தை நாடுகிறார்கள். எத்தனை பேர் வீட்டில் ஆலார கடிகாரம் இருக்கிறது. செல்போன் எடுத்தோமா , நேரத்தை செட் செய்தோமா... அவ்வளவு தான். காலையில் திரைப்பட பாடலோடு விழிக்கலாம். ஆனால், இதில் பாதிக்க பட்டது டைட்டன் நிறுவனம் தான். ஆலார கடிகாரத்தை டைட்டன் நிறுவனம் இப்போது தயாரிப்பது இல்லை.

நாளைய புத்தகங்களுக்கு பதிலாக ஈ -புக் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஏன் பாடம் சொல்லி தரும் ரோபோவாக இருக்க கூடாது ? ஆசிரியர், புத்தகம் இரண்டுமே தேவையில்லை. நினைத்தமாத்திரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம்.

நாளை ஆப்பிள் நிறுவனம் கதை சொல்லி இயந்திரத்தை தயாரித்தால் என்னாகும். எழுத்தாளர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளும். வணிகத்தில் தங்கள் போட்டியாளர்களை வைத்து தான் தங்கள் தயாரிப்பை நிர்ணயம் செய்தார்கள். ஆனால், இப்போது போட்டியாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது..... ‘யார் நம் போட்டியாளர் ?’ என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு !!

***

மேல் சொன்ன கட்டுரை ஐ.ஐ.எம், பெங்களூர் பிரோபஸர் டாக்டர் ஒய்.எல்.வி. மூர்த்தி அவர்கள் “Have breakfast .. or be breakfast” என்ற தலைப்பில் எழுதியது. இந்த கட்டுரை ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தமிழ் வடிவமாக்கியுள்ளேன்.

நான் படித்த சிறந்த தன்னம்பிக்கை கட்டுரைகளில் இதுவும் ஒன்று. பத்து முறைக்கு மேல் வாசித்தேன்.

Tuesday, July 20, 2010

ஐயப்பன் திருமணமாகாததற்கு இது தான் காரணமா ?

நமது புராண கதையில் எடுத்துக் கொண்டால், சிவன் அப்பாவி தனமாக வேண்டிய வரத்தை அரக்கர்களுக்கு கொடுத்துவிடுவார். விஷ்ணு தன் தந்திரத்தை பயன்படுத்தி அரக்கர்களை ஒழிப்பார். தேவர்களுக்கு பிரச்சனை வரும் என்று தெரியாமல் சிவன் தன் இஷ்டத்துக்கு வரம் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார். அப்படி, ஒரு அரக்கனிடம் அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை வெடித்து இறந்து விடுவதாக வரம் கொடுத்து விடுகிறார். கொடுத்த வரத்தை சோதித்து பார்க்க சிவன் தலையில் கை வைக்க அரக்கன் வருகிறான். விஷ்ணு விஜய் போல் எண்ட்ரி கொடுத்து பெண் வேடத்தில் அரக்கனை கொல்கிறார். விஷ்ணுவின் பெண் உருவத்தை பார்த்து சிவன் மயங்க, இருவருக்கும் 'ஐயப்பன்' என்ற ஆண் குழந்தை பிறக்கிறது. முதல் ஆண் – ஆண் உறவால் பிறந்த குழந்தை 'ஐயப்பன்' என்று புராண கதைகள் சொல்லுகிறது.



புராணத்தின் பல கதைகள் நம்பும் படியானது இல்லை. நல்லது மட்டும் எடுத்துக் கொண்டு கற்பனைகளை ஒதுக்கி வைக்க வேண்டிய கதைகள் பல உள்ளது. இதில் 'கே' உறவில் பிறந்த ஐயப்பன் என்பதை விட, இரண்டு ஆண்ணின் மகன் என்று கொஞ்சம் கௌரவமாக சொல்லுவோம். என்ன தான் அரசக் குடும்பத்தில் வளர்ந்தாலும், இரண்டு ஆண்களுக்கு பிறந்ததால் பெண்கள் மீது ஈர்ப்பு வராமல் திருமணம் செய்யாமல் இருந்தாரா என்ற சந்தேகம் வரலாம்.

விஞ்ஞான ரீதியாக இரண்டு ஆண்ணுக்கும், இரண்டு பெண்ணுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஆனால், லெஸ்பியன், கே தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு இவர்கள் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது. பலர் கே, லெஸ்பியன் போன்றவர்களை மன நோயாளியாக பார்ப்பதால் சட்டப்படி இவர்கள் குழந்தை தத்தெடுப்பதில் சிக்கல் உள்ளது.

இந்தியாவில், ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டியது இருந்தால் திருமணமான ஆண்,பெண் சேர்ந்து தத்தெடுக்கலாம் அல்லது திருமணமாகாத / தனிமையில் வாழும் பெண்கள் தத்தெடுக்கலாம். அதனால், கே, லெஸ்பியன் ஜோடிகள் சட்டப்படி குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. இவர்கள் தத்தெடுக்க மூன்று விதமான பிரச்சனைகளை நேரில் சந்திக்கிறார்கள்.

1. கே, லெஸ்பியன் பராமரிப்பில் வளர்ந்தால் அந்த குழந்தைக்கு தன் பால் உணர்வு குறித்து சந்தேகம் வரலாம். தன்னையும் அவர்கள் வளர்ப்பு பெற்றோர்களை போலவே எண்ணிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
2. குழந்தை கே, லெஸ்பியனுடன் வளர்ந்தால் சுற்றி இருக்கும் சமூகம் இவர்களை மனநோயாளிகளாக பார்ப்பது போல் அந்த குழந்தையை பார்க்கும். அதன் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.
3. கே, லெஸ்பியன் குழந்தைகள் பள்ளியிலோ அல்லது விளையாட்டிலோ அவர்களது நட்பு வட்டத்தில் கேலியாக பேசலாம். உதாசினம் செய்யலாம். இதனால், அந்த குழந்தைக்கு தன் மீது தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்புள்ளது.

கே, லெஸ்பியன் போன்றவர்கள் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு தனிமையாக்கப்பட்ட போதும், அவர்களுக்கு என்று குடும்பம் அமைத்து கொள்ள இது போன்ற நடைமுறை சிக்கல் உள்ளது.

இந்தியாவில் கே, லெஸ்பியன் பற்றின வெளிப்படையாக பேசாமல் இருப்பதால் அவர்களை பற்றி ஆராய்ச்சியோ, சர்வேவோ பெரிய அளவில் எடுக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் வெளிப்படையாக பேசப்படுவதால் அவர்கள் தத்தெடுத்து குழந்தைகளை பற்றின சர்வே ஒன்று வெளியீட்டு இருக்கிறார்கள்.

அதில், கே உறவில் ஈடுபடுபவர்கள் பெண் குழந்தையை தத்தெடுப்பதிலும், லெஸ்பியன் உறவில் ஈடுபடுபவர்கள் ஆண் குழந்தையை தத்தெடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கள் பால் இனத்தில் இருக்கும் குழந்தையை தத்தெடுத்தால் அம்மா, மகள் உறவை / தந்தை, மகன் உறவை கொச்சை படுத்துவார்கள் என்ற அச்சமே காரணமாம்.

இவர்கள் தத்தெடுக்கும் குழந்தைகள் யுவன்/யுவதியாக வளர்ந்த பிறகு செக்ஸ்யில் சாமான்ய யுவன்/யுவதி காட்டிலும் ஆர்வம் குறைவாக இருப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் தத்து குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி கே, லெஸ்பியன் பெற்றோர்கள் பேச தயங்குவதே காரணம் என்று கூறுகின்றனர். அதே சமயம், மற்ற யுவன் / யுவதிகளை விட சமூக காரியங்கள், உதவிகள் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

கே தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் தெளிவு இல்லாதவர்கள். லெஸ்பியன் தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் திறமையானவர்கள் என்ற இன்னொரு கருத்தும் உண்டு.

இப்படி, பல கருத்துகள் வெளியிட்டாலும் கே, லெஸ்பியன் ஜோடிகள் குழந்தைகள் தத்தெடுக்கும் உரிமையை சட்ட ரீதியான உரிமை வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

'செக்ஸ்' என்பது தனிப்பட்ட உரிமை. எந்த பெற்றோர்கள் வளர்த்த யுவன் / யுவதியாக இருந்தாலும் சரி, பெற்றோர்களின் வளர்ப்பு முறைக்கும், செக்ஸ்க்கும் சம்பந்தமில்லை. சுற்றமும், நண்பர்கள் சேர்கை தான் 'செக்ஸ்' பற்றிய விழிப்புணர்வும், மோகமும், புரிதலும் ஏற்ப்படுத்துகிறது என்பதை தான் நடைமுறையில் சந்திக்கிறோம். ‘செக்ஸ் பிடிக்கவில்லை’ என்றால் மருத்துவ ரீதியாக அனுக வேண்டிய ஒன்று தான். ஆனால், யார் மீது ‘செக்ஸ் ஈர்ப்பு’ வருகிறது என்பது மனது சம்பந்தப்பட்டது. இதற்கும், வளர்ப்பு முறைக்கும் சம்மந்தமே இல்லை என்பது தான் அமெரிக்க சர்வே வெளியீட்டுள்ளது.

விநாயகர் கூட தான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவரை சந்தேகப்படாமல் இருப்பவர்கள் ஐயப்பன் திருமணம் ஆகாமல் இருப்பதையும் சந்தேகப்பட கூடாது. அதே போல், அனிதாவுக்கும், கார்த்திக்கும் பிறக்கும் குழந்தையும், ஜானகி, மாலதி இருவரும் தத்தெடுக்கும் குழந்தையும், கௌஷிக், கருணாகரன் தத்தெடுக்கும் குழந்தையும் ஒன்று தான்.

**

ஐயப்பன், விநாயகர் என்று குறிப்பிட்டது புரிதலுக்காக மட்டுமே.... இந்து துரோகம் செய்துவிட்டேன் என்று பின்னூட்டம் போட்டு கட்டுரையை திசை திருப்ப வேண்டாம் என்று பணிவுடம் கேட்டு கொள்கிறேன்.

Wednesday, July 7, 2010

ஓரின சேர்க்கை - எதிரான வாதங்கள்

ஒரு முறை அமெரிகாவில் இருக்கும் என் நண்பனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, " அமெரிக்காவில் ஆண் - பெண் சேர்ந்து சுதந்திரமாக சுற்றும் அளவிற்கு ஆண் - ஆண், பெண் - பெண் சுற்றுவதில் இல்லை" என்றான். எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்தியாவை தவிர எந்த நாட்டையும் பார்க்காத எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். அதற்கு அவன் சொன்ன காரணம், " ஒரு ஆண் - ஆண் நெருக்கமாக பழகினால், அவர்கள் 'கே' என்று சந்தேகப்படுவார்கள்". இரண்டு பெண்கள் ஒரு வீட்டில் தங்கியிருந்தால் அவர்களுக்குள் 'உறவு' இருப்பதாக நினைப்பார்களாம். கே, லெஸ்பியன் ஜோடிகள் அமெரிக்காவில் பரவலாக வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் ஓரின சேர்க்கை வளர தொடங்கினால் உண்மையாக நண்பர்களாக பலகும் ஆண் - ஆண், பெண் - பெண் உறவுகள் கூட பெற்றோர், சுற்றத்தின் கண்களுக்கு சந்தேக பார்வையில் தெரிவார்கள்.

குடும்ப நிகழ்ச்சியில் ஒரு பெண் கலந்து கொண்டால், ' உங்க புருஷன் வரலையா ' என்று கேட்பார்கள். கணவன் வந்தால், ' பொண்டாட்டி வரலையா ' என்று விசாரிப்பார்கள். ஓரின சேர்க்கை வளர தொடங்கினால், ' புருஷன் வரலையா ' என்பதற்கு பதிலாக ' இவங்க புருஷன் ஆணா ? பெண்ணா ?' என்ற கேள்வி வரும். இரண்டு பேரில் 'யார் ஆண் மாதிரி இருப்பீங்க ?' போன்ற கேள்விகள் எதிர்காலத்தில் எழும் அபாயம் உள்ளது.



ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கிகாரமே கிடைத்தாலும், சமூக அங்கிகாரம் கிடைப்பது மிகவும் கடினம். மற்ற திருமணம் போல் ஓரின சேர்க்கை திருமணத்தை பார்க்க மாட்டார்கள். அவர்கள் தத்தெடுக்கும் குழந்தையின் எதிர்காலம் அதே நிலைமை தான். பெற்றோர்கள் பெயர் தெரியாமல் இருப்பதை விட ஒரு பால் இனத்தினரை விண்ணப்ப படிவத்தில் அம்மா, அப்பா நிரப்புவதற்கு சங்கடமாக இருக்கும். அந்த குழந்தையும் தன்னை தத்தெடுத்த பெற்றோர்களை புரிந்துக் கொள்வதில் சிரமம் இருக்கும். வெளியே சொல்லுவதற்கு தயங்கலாம்.

ஆண் - ஆண், பெண் - பெண் உடலுறவு வைத்துக் கொள்ளுவதில் மருத்துவ ரீதியாக உடல் தொல்லைகள் ஏற்ப்படும். ஒரு சில மருத்துவர்கள் இதை மறுத்தாலும், பலர் உடல் தொல்லை வரும் என்று நம்புகிறார்கள். ஓரின சேர்ர்கையாளர்களை மனநோயாளிகளாக பார்க்கும் பார்வையும் இன்னொரு காரணம்.

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணமே செய்துக் கொண்டாலும் சட்டப்படி அவர்கள் உறவுக்கு அங்கிகாரம் இல்லை. எதிர்காலத்தில் ஒருவருக்கு ஏதாவது நடந்தாலோ மற்றவர் அவரின் சொத்துக்களையோ, பணத்தையோ உரிமை கேட்க முடியாது.

ஓரின சேர்க்கை ஆதரிக்க தொடங்கினால், தங்கள் வம்சம் அந்த தலைமுறையோடு நினறுவிடும் என்ற பெற்றோர்களின் பயப்படுகிறார்கள். அதனால், தங்கள் மகள்/ மகன் பற்றி உண்மை தெரிந்ததும் அவர்களை அடித்தோ அல்லது மிரட்டியோ திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்ற பெற்றோர்களின் நிலைமை இன்னும் மோசம். ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர் என்று தெரிந்தால் மற்றவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

பல வருடங்களாக வாழும் கணவன், மனைவிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு பிரியும் போது எந்த அங்கிகாரம் இல்லாமல் ஒன்றாக வாழும் ஆண் - ஆண், பெண் - பெண் மட்டும் எவ்வளவு நாள் ஒத்த கருத்தோடு வாழ முடியும். ஒரு சிலர் ஆரம்பத்தில் இருக்கும் தைரியம் வாழும் போது இருப்பதில்லை. இருவரில் யாரோ ஒருவர் மனம் மாறி எதிர்பால்வினரை திருமணம் செய்து கொண்டு இயல்பாக வாழ நினைத்தால், மற்றவர் வாழ்க்கை பாதிக்கப்படும். ஓரின சேர்கையாளர்கள் நீண்ட நாள் ஒன்றாக வாழ்வதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்தியாவில், 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற பண்பாட்டில் வாழ்பவர்கள். நடைமுறையில், பல பெண்களுடன் ஒரு ஆண் உறவு வைத்துக் கொண்டாலும், ஒரு பெண் கணவனுக்கு தெரியாமல் கள்ளகாதல் இருந்தாலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற வாசகம் நம் எல்லோர் மனதில் பதிந்து ஒன்று. 'ஒருவனுக்கு ஒருவன்', 'ஒருத்திக்கு ஒருத்தி' என்ற வாசகம் மாற்றி பேச யாருக்கும் மனவராது.

ஆதரவான வாதங்களையும், எதிரான வாதங்களையும் இரண்டு பக்கம் ஆராய்ந்தால் ஒரு விஷயம் மிக தெளிவாக தெரிகிறது.

ஓரின சேர்க்கை எதிர்ப்பவர்கள் ' உடல்' சம்பந்தப்பட்ட உறவாக பார்க்கிறார்கள்.
ஓரின சேர்க்கை ஆதரிப்பவர்கள் 'உணர்வு' ரீதியாக பார்க்கிறார்கள்.


இரண்டு பக்கத்தில் நீங்கள் எந்த பக்கம் என்று முடிவு செய்வதை விட, முதலில் நாம் புரிந்து கொள்வோம்.

Tuesday, July 6, 2010

ஓரின சேர்க்கை - சாதகமான வாதங்கள்

ஜூ 27,2010.

சென்னை கடற்கரையில் ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினர். பலர் தன் உரிமைக்காக கோஷங்கள் எழுப்பினர். வானவில் கொடிகளை கையிலேந்தி நடந்தனர். அந்த பேரணியில் வயதானவர்களை பார்த்ததும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி. பரப்பரப்பான தகவல்களை சேகரிக்க அவர்களிடம் நெருங்கிய போது தான் தெரிந்தது அவர்கள் ஓரின சேர்க்கையாளரின் பெற்றோர்கள் என்று !

அந்த போராடத்தில் பங்கு பெற்ற ஒரு அம்மா, " என் பையன் 'கே'னு போன மாசம் தான் தெரியும். எனக்கும், என் கணவனுக்கும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. கொஞ்ச நாள்ல எங்கள நாங்களே சமாதானம் பண்ணிகிட்டோம். அவன் 'கே' நால என் மகன் இல்லனு சொல்ல முடியுமா !" என்றார். மேலும், " என் மகன் சமூக விரோதியில்ல. சமூக பார்வையில வித்தியாசமான பாலுணர்வு உள்ளவன். அவன் உணர்வ நாங்க புரிஞ்சிகிட்ட மாதிரி அவன் மாதிரி இருக்குறவங்களோட பெற்றோரும் புரிஞ்சிக்கனும். என் பையன போல இருக்குறவங்களுக்கு ஆதரவுக்காக எங்க பங்க்கு போராடுறோம்" என்று பெருமையாக கூறினார்.
ஒரு லெஸ்பியன் பெண், " நான் பாலுணர்வால் வித்தியாசமானவள். ஒருவனுடைய திருமதியானவள் என்பதை விட நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு பெண்கள் மீது வரும் ஈர்ப்பு கூட ஆண்கள் மீது வரவில்லை" என்றாள். " பதினெட்டு வயதானவர்கள் தங்கள் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கலாம் என்று சட்டமே சொல்லும் போது, அவர் ஆணாக இருந்தால் என்ன ? பெண்ணாக இருந்தால் என்ன ?. எதிர்பாலினரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி இந்த சமூதாயம் கட்டுப்படுத்தலாம் ?" என்று குரல் உயர்த்தியே பேசி இருக்கிறார்.

ஓரின சேர்க்கையை ஆதரிக்க தொடங்கிவிட்டால் பல குடும்பங்களின் அடுத்த தலைமுறை இல்லாமல் போகும் என்று கேட்டதற்கு, ஒரு லெஸ்பியன் பெண் " உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாங்கள் இந்தியாவை முதல் இடத்தை அடைய உதவுவதற்கு விருப்பமில்லை. மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஓரின சேர்கை உதவி தான் செய்கிறது." இந்த பெண் ஒரு ஆஸ்ரமத்தில் இருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்கிறார். தன் வாரிசாக அந்த குழந்தையின் மீது பாசம் காட்டுகிறார். 'அனாதை' என்ற வார்த்தை ஓரினசேர்க்கையாளர், திருநங்கையர் போன்றவர்களால் குறைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர் பேச்சில் இருந்தது.

**


காதலை கொண்டாடும் படங்களில் இந்த வசனம் இல்லாமல் இருப்பதில்லை.

" லவ் அது ஒரு பிலிங்"
" உலகத்துல காதலிக்காதவங்க யாருமில்ல "
" காதல மறந்திட்டு யாரும் நிம்மதியா வாழ முடியாது"
“ஒருவர் மீது அன்பு, அறவனிப்பு, காதல், பாசம் காட்ட மனசு இருந்தால் போதும். பண காசு தேவையில்லை”

ஆக, காதலிக்க இரண்டு மனது, இரண்டு உயிர் தேவைப்படுகிறது. காதலிக்கும் இரண்டு மனது ஆணும், பெணும் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த இரண்டு மனதும் ஆண்களுடையதாகவோ, பெண்களுடையதாகவோ இருப்பதால் தான் பிரச்சனையே !

இன்று ‘Living together’ கலாச்சாரம் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. திருமணமாகல் ஒரே வீட்டில் ஆண், பெண் தங்குகிறார்கள். எந்த நிபந்தனையில்லாமல் ஒன்றாக வாழ்வதால் இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாளைக்கே பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால், பிரிவதற்கு குழந்தை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதில் ‘Living together’ ஜோடிகள் நினைக்கிறார்கள். ‘Living together’ பற்றி விமர்சிக்காதவர்கள், ஏன் ஓரின சேர்கை திருமணத்தை எதிர்க்க வேண்டும் ? என்று நினைக்க தான் தோன்றுகிறது.

நிலா ரசிகனின் 'யாரோ ஒருத்தியின் டைரி குறிப்பு' புத்தகத்தில் 'லெஸ்பியன்' பற்றி எழுதிய சிறுகதைக்கு ஒரு வாசகி மின்னஞ்சல் எழுதியதை தனது தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வாசகி, சிறு வயதில் ஒரு ஆண்ணால் பாலியல் தொல்லை அனுபவித்திருக்கிறாள். வளர்ந்த பிறகு அவளுக்கு ஆண்கள் மீதே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தன் தோழியுடன் தான் வாழ்ந்துவருதையும் குறிப்பிடிருந்தார். இந்த வாசகி போல் பல சிறுதிமகள் பாலியல் தொல்லைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆண்களை வெறுக்க காரணமானவனை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லாத போது அந்த பெண்ணின் உணர்வுக்களுக்கு பூட்டு போடுவது எந்த வகையில் நியாயம்.

பலர் ஓரின சேர்க்கையாளர்களை மனநோயாளிகள் என்று கூறுகிறார்கள். இதுவரை ஓரின சேர்க்கை பற்றி படித்த புத்தகங்கள், நண்பர்கள் மூலம் சேகரித்த தகவலில் நான் புரிந்து கொண்டது அவர்கள் மன நோயாளிகள் அல்ல. மனநோயாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று ஒன்று சேர வெருக்கும் போது அவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்கள் அடித்து, மிரட்டி திருமணம் செய்து வைக்கிறார்கள். சுற்றத்தின் உதாசின பார்வையும், மிரட்டலும் தங்கள் உணர்வை மறைக்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் உணர்வுகளை கொன்று வாழ்கிறார்கள். தன்னம்பிக்கை, தைரியம் உள்ளவர்கள் தங்கள் பாலுணர்வை வெளிப்படுத்தி துணிச்சலாக வாழ்க்கிறார்கள்.

ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் யாரும் பணமோ பொருளோ எதிர்பார்க்கவில்லை. 'இவர்களும் மனிதர்கள் தான்' என்ற அங்கிகாரத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்.

திருமணமான ஆண் - பெண் இருவரையும் குடும்பமாக பார்க்கும் சமூகம், ஆண் - ஆண் , பெண் - பெண் என்று ஒன்றாக வாழ்பவர்கள் குடும்பமாக பார்க்க வேண்டும் என்பது தான் இவர்களின் போராட்டம்.

****

அடுத்த பதிவில் ஓரின சேர்க்கை பற்றி எதிரான வாதங்ககளை பார்ப்போம்.

Saturday, February 27, 2010

2010 - 11 மத்திய பட்ஜெட் - ஒரு பார்வை

2010-11 ஆம் ஆண்டிற்க்கான மத்திய பட்ஜெட்டை இன்று திரு.பிரணாப் முகர்ஜி சமர்பித்தார். இப்பட்ஜெட்டில் மாத சம்பளதாரர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி, சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை உயர்கிறது. தங்கம், வெள்ளி, சிகரட், கார்கள், டிவி, ஏ.சி. விலை உயர்கிறது. செட் டாப் பாக்ஸ், சி.டி., எலக்ட்ரிக் கார், பொம்மை, வேளாண் உபகரணங்கள் ஆகியவற்றின் விலை குறையும்.

2010-11ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் தாக்கல் செய்தார். அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவித்தார்.

அதன்படி, ரூ.5 லட்சம் வருமானம் வரை 10 சதவீதம் வரி செலுத்தினால் போதும். ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீதமும் 8 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமும் வரி கட்டினால் போதும். இதனால் வரி செலுத்துவோரில் 60 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் ரூ.20 ஆயிரமும் ரூ.8 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.50,000ம் சேமிக்க முடியும்.

விவசாயிகளுக்கு 5 சதவீதத்தில் பயிர்க் கடன் கிடைக்கும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக கிராம வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மேம்படுத்துவது, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்.

பட்ஜெட்டில் ரூ.11,08,749 கோடி செலவினம் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.6 சதவீதம் கூடுதல்.

திட்டச் செலவுகளுக்கு ரூ.3,73,092 கோடியும் திட்டமில்லாச் செலவுகளுக்கு ரூ.7,35,657 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திட்டச் செலவுக்கு 15 சதவீதமும் திட்டமில்லாச் செலவுக்கு 6 சதவீதமும் ஒதுக்கீடு அதிகரிப்பு.

நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதம். இது ரூபாய் மதிப்பில் ரூ.3,81,408 கோடியாக இருக்கும்.

2011-12ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாகவும் 2012-13&ல் 4.1 சதவீதமாகவும் இருக்க இலக்கு நிர்ணயம்.

நிகர சந்தைக் கடன் ரூ.3,45,010 கோடி.

நிகர வரி வருவாய் ரூ.7,46,651 கோடி. வரியில்லா வருவாய் ரூ.1,48,118 கோடியாக இருக்கும்.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.25,000 கோடி திரட்டப்படும்.

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.16,500 கோடி வழங்கப்படும்.

டிசம்பர் 2009 வரை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 127 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நான்கு அம்ச உத்தி கையாளப்படும். வேளாண் விளைச்சலை அதிகரிப்பது, சேதத்தை குறைப்பது, கடன் ஆதரவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கும் முக்கியத்துவம் ஆகியவை இதில் அடங்கும்.

வேளாண் கடனுக்கான இலக்கு ரூ.3,25,000 கோடியிலிருந்து ரூ.3,75,000 கோடியாக அதிகரிப்பு.

குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ஒரு சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1,73,552 கோடி ஒதுக்கீடு. இது திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 46 சதவீதமாகும். சாலை கட்டமைப்புக்கான ஒதுக்கீடு 13 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்திய அடிப்படை கட்டுமான நிதி நிறுவனம் மார்ச் 2011&ல் ரூ.20,000 கோடியை எட்டும்.
மின் துறைக்கான ஒதுக்கீடு 2 மடங்கிற்கு அதிகமாக உயர்த்தப்பட்டு ரூ.5,130 கோடியாக உள்ளது.

அடிப்படை கட்டுமானத் துறைக்கு கூடுதல் வரிச் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை கண்டறியும் ஆய்வுக்கு உதவ தேசிய தூய்மை எரிசக்தி நிதியம் அமைக்கப்படும்.

சமூக மேம்பாட்டிற்கான செலவினம் ரூ.1,37,674 கோடி. இது திட்டச் செலவில் 37 சதவீதம்.

கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.66,100 கோடியாக அதகரிப்பு.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்ட ஒதுக்கீடு ரூ.40,100 கோடியாக அதிகரிப்பு.

பாரத் நிர்மாண் திட்ட ஒதுக்கீடு ரூ.48,000 கோடி.

பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய நிதி ரூ.7,300 கோடியாக அதிகரிப்பு.

குடிசைகளில் வாழ்வோர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான ராஜீவ் வீட்டு வசதி திட்டத்திற்கான ஒதுக்கீடு 700 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1,270 கோடியாக உள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர் தேசிய சமூக பாதுகாப்பு நிதி ரூ.1,000 கோடி முதலீட்டில் அமையும்.

ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் மகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்.

சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் அமைச்சகத்துக்கு ஒதுக்கீடு 80 சதவீதம் அதிகரிப்பு. ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.

சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிப்பு. ரூ.2,600 கோடி ஒதுக்கீடு.

ஒட்டுமொத்த பொது கடன் நிலை மற்றும் அதை குறைப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய அறிக்கை 6 மாதத்தில் வெளியிடப்படும்.

அன்னிய நேரடி முதலீடுகளை எளிமைப்படுத்தும் வகையில் முதல் முறையாக உரிமை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மையப்படுத்தப்படும்.

2008-09&ல் எண்ணெய் மற்றும் உர பத்திரங்களுடன் 7.8 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2009-10&ம் ஆண்டில் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது.

நிதி சட்டங்கள் மாற்றியமைக்கப்படும். நிதித் துறை சட்டத் திருத்த ஆணையம் அமைக்கப்படும்.

பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் ஆணையத்துக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு.

இந்தத் திட்டத்துக்கு தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.

ராணுவத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,47,344 கோடியாக அதிகரிப்பு.

உரிய காலத்துக்குள் நீதி வழங்குவதற்காக தேசிய நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் இயக்கம் அமைப்பு.

வருமான வரி வரையறை: ரூ.1.6 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம். ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 20 சதவீதம். ரூ.8 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம்.

உள் கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ.20,000 கூடுதலாகக் குறைப்பு.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு உபரி வரி 10 சதத்திலிருந்து 7.5 சதமாகக் குறைப்பு.

குறைந்தபட்ச மாற்று வரி 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு.

சிறிய தொழில்களுக்கு உத்தேச வரிக்கான டர்ன்ஓவர் வரையறை ரூ.60 லட்சமாக அதிகரிப்பு.
தொழில்களுக்கு ரூ.60 லட்சம், பிரோஃபஷன் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமாக தணிக்கைக்கான டர்ன்ஓவர் வரையறை நிர்ணயிப்பு.

நேரடி வரி விதிப்பு திட்ட வருவாயில் ரூ.26,000 கோடி இழப்பு ஏற்படும். ஆனால், மறைமுக வரி மூலம் ரூ.46,500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

சேவை வரி விதிப்பு திட்டம் மூலம் நிகர வருவாயில் ரூ.3,000 கோடி லாபம்.

செய்திகளை ஆன்லைனில் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.

தனி நபர் வரி செலுத்துவோருக்கு சரல் 2 தயார்.

சேவை வரி 10 சதவீதமாகத் தொடரும்.

சில குறிப்பிட்ட புதிய சேவைகளுக்கு சேவை வரி விதிப்பு.

மைக்ரோ வேவ்அவன், இறக்குமதி சரக்குகள், மொபைல் தொலைபேசிகள், கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், விளையாட்டு பலூன்கள், மிளகு, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் வடிகட்டி ஆகியவற்றின் விலை குறைப்பு.

பொழுபோக்கு துறைக்கு சுங்கத் தீர்வையில் சலுகை.

அமெரிக்க டாலரைப் போல இந்திய ரூபாய்க்கு பிரத்யேக அடையாள முத்திரை.

சுத்தமான சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறப்பு சலுகை தீர்வை. ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.50 என்ற விகிதத்தில் எரிபொருள் தீர்வை.

மருத்துவக் கருவிகள் இறக்குமதிக்கு ஒரே மாதிரியான அடிப்படை தீர்வை & 5 சதவீதம்.

எலும்பு சிகிச்சையில் பயன்படும் செயற்கை மூட்டு, தட்டுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு.

பெட்ரோல், டீசலுக்கான கலால் தீர்வை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிப்பு.

வேளாண்மை அது சார்ந்த துறைகளில் பெருமளவு வரிச் சலுகை.

குளிர்ப்பதன நிறுவனங்களை அமைக்க இறக்குமதி திட்டங்களுக்கு சலுகை.

ட்ரெய்லர்கள், செமி ட்ரெய்லர்களுக்கு கலால் தீர்வையிலிருந்து முழு விலக்கு.

நன்றி : தமிழ்வணிகம்.காம்

Tuesday, September 29, 2009

போக்குவரத்து



பெரும் கூட்டத்துடன் '27C' திருவேற்காடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. கோயம்பேடு தாண்டியவுடன் பலரால் சரியாக மூச்சு கூட விட முடியவில்லை. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொள்வதும், மற்றவரின் வேர்வை நாற்றத்தை சுவாசிப்பதுமாக பெரூந்தில் பயணம் செய்தனர். சென்னையில் காலை பத்து மணி பேரூந்து பயணம் என்றால் ‘நரகம்’ என்று எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. அந்த கூட்ட நெரிசலிலும் சந்தோஷமாக பத்து கல்லூரி மாணவர்கள் வந்தனர்.

புட் போர்ட்டில் பஸ்யை தட்டி கொண்டு, ‘வந்தனம் வந்தனம்... அள்ளி புசு சந்தனம்’ என்று 'கானா' பாடலை பாடி நரக பேரூந்தில் உல்லாசமாக பயணம் செய்தனர்.

*

“எவ்வளவு நேரம் தான் பஸ்ஸீக்காக காத்திருக்கிறது” - தன் பக்கத்தில் இருந்தவரிடம் ஒரு முதியவன் புலம்பினார்.

அவரைப் போல் பலர் பெரூந்துநிலையத்தில் காத்திருந்தனர்.

அதில் பயணம் செய்த நடுத்தர வயதினர் ஒருவர் " படிக்கிற பசங்களா இது...! எங்க இதுங்க உருப்பட போகுது...." என்று கடிந்துக் கொண்டார். அவர் சொல்வதை கேட்டு பக்கத்தில் இருந்த இன்னொரு நடுத்தர வயதவரும் அந்த மாணவர்களை பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்.

கண்டேக்டர் அந்த மாணவர்களிடம் பேரூந்து அடிப்பதை நிருத்த சொல்லியும் அவர்கள் நிருத்தவில்லை. அதில் வந்த நடத்தர வயதினர்களும் அவர்களை திட்டுவதை நிருத்தவில்லை. பேரூந்து ஒவ்வொரு இடத்தில் நிற்க்கும் போதும் பேரூந்துக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்த கல்லூரி மாணவர்களுக்கும் வரவில்லை. இப்படி பல 'இல்லை' நகர பேரூந்துக்களுக்கு பொருந்தும்.

*

பெரும் பாலானவர்கள் தி.நகர் செல்பவர்களாக இருந்ததால் அந்த பேரூந்தில் கூட்டம் சிறிது கூட குறையாமல் இருந்தது. எந்த வசை சொற்களுக்கும் கவலைப்படாமல் அந்த மாணவர்கள் ஸ்ருதி குறையாமல் பாடி கொண்டு இருந்தனர். ஒரு வழியாக அந்த பேரூந்து மாலிங்கபுரத்தில் வந்துதது. புதிதாய் கட்டிய மேம்பாலத்தின் மெதுவாக ஏற தொடங்கியது. அந்த மேம்பாலத்தில் பாதி இடத்தை தாண்டிய நிலையில், வெட்கப்படும் கன்னிப்பெண் போல் பேரூந்து திடீர் என்று நின்றது.

'27C' பின் தொடர்ந்த எல்லா வண்டிகளும் நின்றன. பொறுமை இழந்த சில வண்டிகள் எதிரில் வரும் வண்டியை பற்றி கவலைபடாமல் '27C' முந்திக் கொண்டு சென்றனர். அப்படி ஒரு கார் முந்த முயற்சிக்க எதிரில் வந்த ஆட்டோ செல்லும் வழியை மறைத்தது. ஆட்டோக்காரன் சரியான வழியில் வந்ததால் காருக்கு வழி கொடுக்காமல் இருந்தான். காரும் பின்னாடி எடுக்க முடியாமல் மற்ற வண்டிகள் நின்றுக் கொண்டு இருந்தன. பத்து நிமிடத்திற்கு மேல் அந்த மேம்பாலம் முழுக்க வண்டிகளால் நிரம்பி வழிந்தது. எல்லோருக்கும் வழி வேண்டும் என்றால் '27C' அந்த மேம்பாலத்தில் இருந்து செல்ல வேண்டும். அப்போது தான் மற்ற வண்டிகளுக்கும் செல்ல வழி கிடைக்கும்.

கண்டக்டர் தன் கையில் இருந்த விசிலை ஊதி பயணம் செய்த அனைவரையும் பேரூந்தை தள்ள அழைத்தார். அது வரை பேரூந்தில் பாடி கலாட்டா செய்த மாணவர்கள் இறங்கி தள்ள வந்தனர். பேரூந்தில் நின்று பயணம் செய்த சில பேர் தங்கள் அலுவலகம் அருகில் இருப்பதால் இறங்கி நடந்தே சென்றனர். அமர்ந்திருந்த சிலர் இறங்கி தள்ள முன் வந்தது இறங்க, நின்று வந்தவர்கள் அந்த இடத்தில் அமர்ந்தனர். மேம்பாலத்தின் இன்னும் எந்த வண்டியும் முன்னே செல்லவில்லை.

போக்குவரத்து காவல் அதிகாரி வந்து கத்த, ஒரு சிலர் மனமுவந்து இறங்கி வந்து தள்ளினார்கள். பின்னாடி நின்ற வண்டிகள் ஹாரன் அடித்துக் கொண்டு இருந்தனர். அது வரை கல்லூரி மாணவர்களை திட்டிய நடுத்தர வயதினர்கள் ஹாரன் அடிக்கும் வண்டிகளை திட்ட தொடங்கினர். ஒரு சிலர் மனது மாறி பேரூந்தை தள்ள இறங்கியதால் மெல்ல மெல்ல முன்னே சென்றது. பாட்டு பாடிய கல்லூரி மாணவர்கள் பேரூந்தை தள்ள, அந்த நடுத்தர் வயதினர்கள் இளைஞர்கள் முதுகில் சவாரி செய்யும் அரசியல்வாதி போல் அமர்ந்துக் கொண்டு வந்தனர்.

Thursday, February 12, 2009

ஒரு ரூபாய் பாக்கி!

"ஹலோ...! சந்திருவா... நா மணி பேசுறேன்...இந்த சண்டேக்கு எங்க போகலாம்..."

"எங்க போலாம்னு நீயே சொல்லு...."

"ம்... வண்டலூர் ஜீ-விற்க்குப் போவோம்... அங்கே போய் ரொம்ப வருசமாச்சு..."

"சரி ! நீ அப்படியே அடையாறிலிருந்து ராஜ் பவன்கிட்ட வந்திடு. நான் பைக்கில் அங்க வந்து பிக்கப் செய்துக்கிறேன்.."

"ஒ.கே ! சந்திரு..."

மணியுடன் பேசிய சந்திரு தன் செல்போனை பாக்கெட்டில் போட்டபடி திரும்பி பார்த்தான் . அவன் அம்மா கோபத்தோடு நின்றாள்.

"என்னம்மா கோபமா பார்க்குறீங்க...?" என்றான் சந்திரு.

"வாரத்துக்கு ஒரு நாள் வர்ற சண்டேயில கூட வீட்டில தங்காம அப்படி என்னடா சுத்துற... வாரம்தோறும் சண்டேயில் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கனும்னு... நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். லீவுல வீடு தங்கறதேயில்ல... ஊர் சுத்தறதை ஒரு கொள்கையாவே வச்சிருக்கியா..."

"சும்மா... வாரத்துக்கு ஒரு ரிலாக்ஸ் வேண்டாமாம்மா..."

"ஊரில இருக்குறவங்க...எல்லாம் உங்கள மாதிரி தான் இருக்காங்களா... வாரத்திற்கு ஒரு நாள் கொடுக்கிற லீவுலயும் இப்படி சுத்தப் போறது நல்லாவா இருக்கு..." அம்மா கோபத்துடன் வெடித்தாள்.

"மத்தவங்கள பத்தி எனக்கு கவல இல்லம்மா..! வார லீவுல கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாமுன்னுதான் நானும் மணியும் இப்படி எங்கேயாவது போறோம்... இந்த இளம் வயசுல சுத்தாம வயசான காலத்திலயா சுத்தப் போக முடியும்." என்று பதிலுக்கு இவனும் அம்மாவிடம் வாக்குவாதம் செய்தான்.

சந்திரு தன் அம்மாவுடன் பேசிக் கொண்டே தனது பேண்ட் சர்ட்டை மாற்றிக் கொண்டான்.

பைக் சாவியைக் கையில் எடுத்து சுழற்றியபடி " அம்மா... கோவிச்சுக்காதம்மா... நாங்க இன்னைக்கு வண்டலூர் ஜீ-விற்குப் போயிட்டு வந்துடுறோம். மதியம் அப்படியே வர்ற வழியில சாப்பிட்டு வந்துடுவோம். நீ நைட்டுக்கு மட்டும் டிபன் பண்னி வச்சா போதும்மா... அப்பா கிட்டயும் நீங்களே சொல்லிடுங்க...' என்றபடி கிளம்பினான்.

ராஜ் பவனுக்கு அருகில் நின்றிருந்தான் மணி.

"சந்திரு... ஏண்டா லேட்டு..." என்றான் மணி.

"ஒன்னுமில்லடா... வழக்கம் போல வீட்டுல அம்மா அட்வைஸ் பண்ணாங்க..."

"சரி...சரி...விடு..எல்லோர் வீட்டிலயும் இருக்கிறதுதானே...!" என்றபடி பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டான் மணி.

அந்த பைக் வண்டலூரை நோக்கிச் சென்றது.

வண்டலூர் ஜீ-வில் சண்டே என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

சந்திரு பைக்கை அங்கிருந்த ஸ்டாண்டில் நிறுத்துவதற்காகக் கொண்டு சென்றான்.

ஸ்டாண்டிலிருந்த காண்டிராக்டர் பைக்கை அங்கே நிறுத்துவதற்காக நான்கு ரூபாய்க்கான ரசீது ஒன்றை அவனிடம் கொடுத்தார்.

சந்துரு தனது பர்ஸிலிருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.

"என்னிடம் நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லை... சில்லரையாகக் கொடுங்க..."என்றார் அந்த ஸ்டாண்டிலிருந்தவர்.

"என்னங்க... இவ்வளவு கார் பைக் இங்கே நிறுத்தியிருக்காங்க... நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லைங்கிறீங்க..." என்றான் சந்திரு.

"இங்க வர்ற எல்லோரும் நூறும் ஐநூறுமாக் கொடுத்தா சில்லரைக்கு நான் எங்கே போறது..."

"தொழில் செய்ற நீங்க சில்லரை வாங்கி வச்சுக்கனும்..." என்றான் சந்திரு.

"நான் எவ்வளவு சில்லரையைத்தான் வாங்கி வச்சுக்கிறது...?"

"டேய் சந்திரு... ஏண்டா அவருகிட்ட தேவையில்லாமல் சண்டை போட்டுக்கிட்டிருக்க...." என்றபடி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஸ்டாண்டிலிருந்தவரிடம் கொடுத்தான் மணி.

அந்த ஸ்டாண்டுக்காரர், "சார் ஒரு ரூபாய் சில்லரை இல்லையே..."என்றார் மணியிடம்.

மணியும் உடனே "இருக்கட்டும் பரவாயில்லை...நீங்களே வச்சுக்குங்க..." என்றபடி "வாடா சந்துரு...போகலாம்" என்றான்.

"ஹலோ... பாக்கி ஒரு ரூபாயைக் கொடுங்க..." என்றான் சந்திரு.

"சார் சில்லரையில்லன்னு... நான் சொல்றேன்... நீங்க வேணும்னா நான்கு ரூபாயைக் கொடுங்க..." என்றபடி அந்த ஐந்து ரூபாய் நாணயத்தைச் சந்திருவிடம் திருப்பிக் கொடுத்தான்.

"நூறு ரூபாயைக் கொடுத்தாலும் சில்லரை இல்லேங்கிறீங்க...ஐந்து ரூபாயைக் கொடுத்தால் அதுக்கும் பாக்கி ஒரு ரூபாய் இல்லேன்னு சொல்றீங்க..."

"சார் நீங்க பிரச்சனை பண்ணனும்னே வந்திருக்கீங்களா... எனக்கு அடுத்த கஸ்டமர் காத்துக்கிட்டு இருக்காங்க..."

"பாக்கி ஒரு ரூபாயைக் கொடுன்னு கேட்டா...அது உங்களுக்குப் பிரச்சன பண்ணுற மாதிரி இருக்கா..."

"அப்போ... நீங்க சரியான சில்லரையத் தாங்க..."

"எங்க கிட்ட சில்லரயில்ல..."

"என்ன சார் உங்களோட பெரிய தொந்தரவா இருக்கு... நீங்க சில்லரை மாத்திட்டு வாங்க..."

"நான் ஏன் சில்லரை மாத்திட்டு வரனும்? நீங்க போய் சில்லரைய மாத்தி பாக்கி ஒரு ரூபாயைக் கொடுங்க"

"சார் ஒரு ரூபாய் நாணயம் சில்லரையாத் தர மாட்டாங்க... எல்லாம் காயின் பாக்ஸ் போனிற்குத் தேவைன்னு அதைக் கொடுக்க மாட்டேங்கிறாங்க..."

"எதைச் சொன்னாலும் ஒரு ரூபாய் தரக் கூடாதுன்னு நீங்க ஒரு முடிவோட இருக்கிறீங்க... நானும் ஒரு ரூபாயை வாங்காமல் போறதில்லன்னு முடிவெடுத்துட்டேன்..." என்ற சந்திருவை " விடுடா சந்திரு...ஒரு ரூபாய் தானடா... வாடா போகலாம்" என்றபடி இழுத்தான் மணி

ஸ்டாண்டில் தனது பைக்கை நிறுத்த வந்திருந்த மற்றொருவர் அவரது பைக்குக்கு தன்னிடமிருந்து ஒரு ரூபாய் நாணயமாக நான்கு நாணயங்களை அவரிடம் கொடுத்து, "இந்தாங்க...எனது பைக்குக்கு ரசீதைக் கொடுங்க...அவருக்கும் பாக்கி ஒரு ரூபாயைக் கொடுத்து அனுப்புங்க..." என்றார்.

வேகமாக அந்த நாணயங்களைப் பெற்றுக் கொண்ட அவர், ஒரு ரூபாயை சந்திருவிடம் கொடுத்து "நீங்க முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க சார்" என்றார்.

நாங்க இடத்தைக் காலி பண்றது இருக்கட்டும். இப்படியே ஒவ்வொரு பைக்குக்கும் ஒரு ரூபாய் எடுத்தால் உங்களுக்கு தினசரி இப்படி வர்ற ரூபாய் நூறு இருநூறுன்னு கிடைக்கும் அப்படித்தானே..." என்று விடாமல் அவரிடம் மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தான் சந்திரு.

அந்த ஸ்டாண்டுக்காரர் அடுத்து நிறுத்தப்பட்ட பைக்குகளுக்கு ரசீது கொடுப்பதற்காக நகர்ந்தார்.

"ஏன் சந்திரு அவருதான் பாக்கி ஒரு ரூபாயைக் கொடுத்திட்டாருல்ல...அப்புறம் ஏன் சண்ட போடுற..." என்ற மணி சந்திருவின் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தான்.

"இப்படி ஒரு ரூபாய் சில்லரை தட்டுப்பாடு வருதுன்னா...அந்த ஒரு ரூபாய்க்கு சரியான மதிப்புள்ள மிட்டாய் அல்லது வேறு ஏதாவது பொருளைக் கொடுக்கலாமில்ல... இவங்க வேணுமின்னே பாக்கியைக் கொடுக்கிறதில்ல...பைக்கு வைத்திருக்கிறவனெல்லாம் ஒரு ரூபாயைத் திருப்பிக் கேட்டுக்க மாட்டான்னு... நினைக்கிறாங்க...." என்று சற்று தள்ளி நின்றிருந்த அந்த ஸ்டாண்டுக்காரர் காதில் படும்படி சத்தமாகச் சொன்னான்.

சந்திருவின் சத்தத்தை அந்த ஸ்டாண்டில் பைக் நிறுத்த வந்த யாரும் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. அவர்கள் ஒரு ரூபாய் பாக்கியை வாங்க அக்கறை காட்டியதாகவும் தெரியவில்லை. ஐந்து ரூபாயாகக் கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

சந்திரு அருகிலிருந்த கடைக்குச் சென்று இருபது ரூபாய்க்கு வாழைப் பழங்களை வாங்கி தனது நூறு ரூபாயை மாற்றி சில்லரை பெற்றுக் கொண்டான்.

"என்னடா இவ்வளவு பழம் நமக்கெதுக்குடா?" என்கிற மணியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வண்டலூர் ஜீ-விற்குள் செல்வதற்கான நுழைவுச்சீட்டைப் பெற்று வந்தான்.

அவர்கள் வண்டலூர் ஜீ-விற்குள் சென்றனர்.

மரத்தில் தாவித் திரிந்து கொண்டிருந்த குரங்குகளைப் பார்த்த சந்திரு தான் வாங்கி வந்திருந்த பழங்களை ஒவ்வொன்றாக பிரித்து அங்கிருந்த ஒவ்வொரு குரங்கிற்கும் ஒன்றாக வீசி எறியத் துவங்கினான். அவைகளும் அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டு அடுத்த மரத்திற்குச் சென்று தின்னத் தொடங்கியது.

சந்திருவை வியப்பாக பார்த்தான் மணி.

"என்னடா மணி, அப்படிப் பார்க்கிற... பாக்கி ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேரம் சண்டை போட்ட சந்திரு இப்படி இருபது ரூபாய்க்கு வாழைப் பழத்தை வாங்கி வந்து குரங்குக்கு வீசி எரிந்து கிட்டிருக்கானேன்னுதானே..."

மணியிடமிருந்து எந்த பதிலுமில்லை.

சந்திரு மணியிடம் தொடர்ந்தான்.

"நாம எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம். இப்படி வாயில்லா ஜீவன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம். ஏன் தானமோ, தர்மமோ கொடுக்கலாம். ஆனா ஒரு ரூபாய் கூட ஏமாற கூடாது..."

அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த மணியிடம், "இப்படித்தாண்டா மக்கள் எதிலும் அக்கரையில்லாமல் இருக்கிறாங்க... ஒரு ரூபாய்தானே, இரண்டு ரூபாய்தானேன்னு விட்டுடுறாங்க... ஒரு பொருள் வாங்கினாலும் அதில போட்டிருக்கிற விலையைக் காட்டிலும் ஒன்றிரண்டு கூட சொன்னாலும் அதை ஏனென்று கேட்காம வாங்கிட்டுப் போகிறாங்க... பஸ்ஸில் சில்லரைக்காசைக் கேட்டு வாங்குறதில்லே... ரேசன் கடையில் வாங்குற பொருளில் எடை குறைந்தாலும் கேட்கிறதில்ல... எதையும் இவங்க திருப்பிக் கேட்காமல் இருக்கிறதால தவறுகள் கூடிக்கிட்டே போகிறது.

தாங்கள் வாங்குற சம்பளம் போக இப்படி எக்ஸ்ட்ரா வருமானம் வரும்னு அவங்களும் தவறைத் தைரியமாச் செய்துக்கிட்டு இருக்காங்க... நாம் செய்யும் இந்த சின்ன தவறு அவர்களைப் பெரிய தவறுக்கு கொண்டு போகுது... மக்கள் எப்போதுதான் தங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருப்பாங்களோ... அப்போதுதான் தவறும் தொடராது...! ஏமாற்றமும் வராது...! " என்று வருத்தத்துடன் சந்திரன் புலம்பிக் கொண்டே வந்தான்.

"அவனது புலம்பலில் ஒரு உண்மையும் இருக்கிறது." என்று நினைத்த மணியின் மனதிற்குள் " இனி நம்முடைய பணத்தைத் தேவையில்லாமல் எங்கும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது." என்கிற எண்ணம் மேலிட " சந்திரு, நீ செய்தது சரிதாண்டா...ஒரு ரூபாய்தானேன்னு நாம் விட்டு விடும் நமது சிறிய தவறு. அவர்களைத் தொடர்ந்து தவறு செய்ய வைத்து விடுகிறது." என்றான்.

இருவரும் வண்டலூர் ஜீ-வைச் சுற்றிவிட்டுத் திரும்பி பைக்கை எடுப்பதற்காக வந்தனர்.

அங்கே அந்த ஸ்டாண்டுக்காரர் பைக்கை நிறுத்திவிட்டு ரசீது வாங்கும் ஒருவரிடம், "சார், நீங்க கொடுத்த ஐந்து ரூபாயில் மீதி ஒரு ரூபாய் பாக்கிக்கு என்னிடம் சில்லரை இல்லை... இந்தாங்க அதுக்குப் பதிலாக ஒரு ரூபாய் சாக்லேட்" என்று ஒரு சாக்லேட்டை கொடுக்க, அதை வாங்கிய அந்த பைக்குக்காரர் அதைத் தனது குழந்தையிடம் கொடுக்க அது சிரித்தவாறே மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டது.

சந்திருவுக்கு தனது ஒரு ரூபாய் பாக்கிக்கான வாக்குவாதம் இப்போது அந்த ஸ்டாண்டுக்காரரிடம் ஏதோ ஒரு புதிய மாறுதலை உருவாக்கியிருப்பதைப் போல் தெரிந்தது.


நன்றி : முத்துகமலம்.காம்

Tuesday, February 10, 2009

இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள் ???

சென்ற வாரம் ஒரு மலேஷியாவில் இருந்து வாசகி தன் மகளின் பள்ளியில் பேச்சு போட்டி நடப்பதாகவும், அதற்கான தலைப்பில் 'கட்டுரை' எழுதி தர முடியுமா என்று கேட்டுக் கொண்டார். நம்மையும் ஒரு நல்ல பதிவர் (??) என்று நம்பியிருக்கிறார் என்பதற்காக ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதி மின்னஞ்சல் அனுப்பினேன்.இதற்கு முன் அந்த வாசகி யார் என்று கூட தெரியாது. எதோ என் பதிவு அவர்களுக்கு பிடித்திருக்கலாம். கேட்டுவார். நானும் எழுதி கொடுத்து விட்டேன். அவர் மகள் வெற்றி பெற்றாரா என்று கூட தெரியவில்லை.

அவர் என்னிடம் கேட்ட தலைப்பு " இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள்". இந்த தலைப்பை படித்ததும் எனக்குள் பல கேள்விகள். இந்த போட்டிகள் நடத்துவதால் பங்கு பெற வேண்டும் என்பதற்காக பலர் தங்கள் கற்பனை தட்டி எழுதுகின்றனர். ( வெற்றியை முக்கியமாக கருதுவதில்லை.)

எந்த வித உள் நோக்கமில்லாமல் உண்மையாகவே இலக்கிய போட்டிகள் நடத்தி எழுத்தாளர்களை ஊக்கவிக்கிறார்களா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே என் மனதில் உள்ளது. 1000, 5000 ரூபாய் என்று ஒரு சிறுகதைக்கோ அல்லது கவிதைக்கோ கொடுக்கிறார்கள். வெற்றி பெற்ற எழுத்தாளர்களும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், போட்டி நடத்துபவர்கள் என்ன பயன் பெறுகிறார்கள். எந்த லாபம் இல்லாமல் போட்டி நடத்துவார்களா...! இல்லை அவர்கள் போட்டி நடத்துபது மூலம் தேடிக் கொள்ளும் விளம்பரமா என்று புரியவில்லை.

ஒரு எழுத்தாளர் பார்வையில் எழுதிய கட்டுரையை கீழே குறிப்பிட்டுள்ளேன். எந்த வார்த்தைகளும் மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன்.


-----

இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள்

ஒரு திறந்த மைதானத்தில் பதினொரு பேர் கொண்ட இரு அணி வீரர்களை எந்த இலக்கும், விதிமுறைகளும் இல்லாமல் பந்தை இரண்டு பக்கமும் அடிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்....? அவர்கள் பந்தை அடித்தப்படி விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அந்த விளையாட்டுக்கு முடிவு என்பதே கிடையாது. பார்வையாளர்களும் அந்த விளையாட்டை பார்க்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கும் அலுப்பு தட்டிவிடும். ஆனால், இதே விளையாட்டை காலளவு, விதிமுறைகள், இலக்கு என்று நிர்ணயம் செய்து விளையாடினால் ரசிகர்கள் திரண்டு வந்து பார்ப்பார்கள். இரண்டு அணிகளும் பந்தை தங்கள் இலக்கை நோக்கி அடித்து விளையாடுவார்கள். ரசிகர்களும் கைதட்டி ஆராவாரம் செய்வார்கள்.

இலக்கிய போட்டிகளும் அப்படி தான். ஒவ்வொரு எழுத்தாளனும் எழுத்து துறையில் நுழையும் போது 'கவிதை' என்ற நுழைவு தேர்வு மூலம் தான் உள்ளே வருகிறான். காலம் செல்ல செல்ல வளர்ந்த நிலையில் கட்டுரை, சிறுகதை, புதினம் என்று அவனது எழுத்துக்களும் வளர்ச்சி அடைகின்றன. ஒரு நல்ல எழுத்தாளரால் எல்லாமே எழுத முடியும். ஆனால், அவன் எதில் சிறந்து விளங்குகிறான் என்பதை இலக்கிய போட்டிகள் தான் அவனுக்கு உணர்த்துகிறது. இலக்கிய போட்டிகளில் வளர்ந்த எழுத்தாளர்கள் ஒருவனின் கவிதையோ அல்லது சிறுகதையோ தேர்வு செய்யும் போது எழுத்துலகில் மிக பெரிய அங்கிகாரம் கிடைக்கிறது. அவன் எழுதிய அந்த படைப்புக்கும் வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுகிறது.

எந்த ஒரு எழுத்தாளனையும் இலக்கிய போட்டிகள் போல் வாசகர்களிடம் எதுவும் கொண்டு செல்வதில்லை. புகழ் பெற்ற இதழிலோ அல்லது நாளேடுகளிலோ எழுதுபவர்கள் குறிப்பிட்ட வாசகர்கள் வரை தான் சென்றடைகிறார்கள். ஆனால், இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற படைப்புகள் பெரும் அளவில் வாசகர்களின் ஆதரவு கிடைக்கிறது. இன்றும், சாகித்ய அகாதமி விருது, தமிழ அரசு விருது பெற்ற நூல்கள் வாசகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு பெற்றுள்ளது. அந்த நூலின் விற்பனைக்கும் இலக்கிய போட்டியின் முடிவுகள் உதவுகிறது.

இலக்கிய போட்டிகள் எழுத்தாளனை அங்கிகரிப்பதோடு அல்லாமல் வாசகனுக்கு நல்ல படைப்புகள் எளிதில் சென்றடைய வழி வகுத்துக் கொடுகிறது.

---

எழுத்தாளர் பார்வையில் இலக்கிய போட்டிகள் மிகவும் முக்கியம். ஆனால், போட்டிகள் நடத்துபவர்களின் பார்வையில் தேவை விளம்பரம் மட்டும் தானா...அல்லது அதையும் மீறி ஏதாவது ஒன்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா !!

ச்ச.. யாரை தான் சந்தேகம் படனும் அறிவிருக்கா... எதோ காசு இருக்குறவங்க போட்டி நடத்துறாங்க ! எழுத்தாளர் போட்டியில் கலந்துக் கொள்ளுறான். உனக்கு என்ன வந்தது.இப்படினு நீங்கள் கேட்கலாம். அப்படி கேட்டாலும் அதில் உண்மை இருக்கிறது. இருந்தாலும், என் சந்தேகம் நியாயமாக தான் எனக்கு படுகிறது. நீங்க என்ன சொல்லுறீங்க... ????

Monday, February 2, 2009

வாய்தா வாங்கும் வழக்குகள்

நம் நாட்டில் விசாரனை முடிந்து எல்லா வழக்குகளுக்கும் தீர்ப்பு வருவதற்கு முன்னூறு ஆண்டுகள் ஆகும். தீர்ப்புகள் தள்ளிச் செல்லவே நீதி மன்றங்கள் மீது நம்பிக்கை இழக்கிறோம். நீதி மன்றங்கள் சரியாக இயங்கினால் தான் எந்த நாட்டையும் முன்னேற்ற முடியும். அதை சரியாக வழி நடத்த தெரியாமல் தான் நாம் தடுமாறிக் கொண்டு இருக்கிறோம்.

ஆரபு நாட்டில் திருடுபவர்களுக்கு தூக்கு தண்டனையாம். ஒருவன் இயலாமை காரணமாக திருடும் போது காவல் துறையிடம் பிடிப்பட்டு விடுகிறான். அவனை தனியாக தண்டித்தால் யாருக்கும் தெரியாது என்று மக்கள் மத்தியில் தூக்கிலிட்டு கொன்றார்கள். அந்த திருடனின் மரணத்தை மக்கள் கூட்டமாக வந்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்பொது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவன் தன் பணம் பரிப்போனதாக அலருகிறான். எந்த கடுமையான தண்டனை வைத்தாலும் தவறு செய்பவர்கள் தவறு செய்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

நம் நாட்டில் தீர்ப்புகள் தாமதமாய் வருவதால் நல்லவர்களை கூட தீய வழி செல்ல வழி வகுக்கிறார்கள். 1996ல் ஒரு மானைக் கொன்ற வழக்குகாக ஒரு நடிகனுக்கு 2006ல் எழு வருடம் தண்டனை வழங்கப் பட்டது. அந்த நடிகர் மானைக் கொள்ளாமல் இருந்திருந்தால் இடைப்பட்ட காலத்தில் அந்த மானே வயதாகி இறந்திருக்கும்.

1983 ஆம் ஆண்டு ஒருவன் ஒரு குடும்பத்தையே வெட்டிக் கொலை செய்து இருக்கிறான். அவனுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியும் உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ஜனாதிபதி கருணை மனு என்று இருபது வருடம் கடந்து 2003ல் தான் அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவெற்றப் பட்டது. அவனை தூக்கில் இடும் போது அவனுக்கு வயது ஐம்பத்தியெட்டு. இன்னும் சில நாள் அவனே வயதாகி இறந்திருப்பான்.

உடல் சரியில்லை என்று மருத்துவ மனையில் சேர்பவனும், நீதிக்காக நீதி மன்றத்தில் வழக்குப் போட்டவனும் நிம்மதியாக இருப்பதில்லை. காரணம் ஒரு புறம் பணம் செலவாய் செல்லும், மறுபுறம் அங்கும் இங்கும் அலைந்து திரிய வேண்டும். மருத்துவமனைக்கும், நீதி மன்றத்திற்கும் செல்லாதவனே நிம்மதியாக வாழ்கிறான்.

இன்றைய இளைஞர்கள் (என்னையும் உட்பட) வழக்கறிஞர் தொழிலை பெரிதாக நினைப்பதில்லை. எல்லோரும் மருத்துவம், பொறியியல் பற்றியே சிந்திக்கிறார்கள். மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், வா.உ.சிதம்பதரார் பிள்ளை போன்றவர்கள் வழக்கறிஞர் தொழிலில் இருந்து தான் வந்தார்கள். ஆனால், இன்று பெரும் பாலும் அந்த படிப்பை விரும்பி படிப்பதில்லை. மருத்துவம், பொறியியல் கிடைக்காதவனே வழக்கறிஞர் படிப்பை படிக்கிறான். வேறு வழியில்லை எதாவது படித்தாக வேண்டும் என்று வழக்கறிஞர் படிப்பாகிவிட்டது.

சரி வாய்தா வாங்கும் வழக்குகளை பற்றியும், மாணவர்கள் வழக்கறிஞர் விரும்பி படிக்கவில்லை என்பதையும் செய்திதாள்கள், தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இதை எப்படி சரி செய்வது....???

நம் நாட்டில் காவல்துறை மட்டுமே இருபத்தி நான்கு மணி நேரம் இயங்குகிறது. நீதி மன்றங்கள் அல்ல. கொலை, திருட்டு, மற்றவரை ஏமாற்றுவரு இப்படி இருபத்தி நான்கு மணி நேரத்தில் எந்த தவறு வேண்டுமானாலும் நடக்காலம் என்பதற்காக காவல்துறை ஒவ்வொரு மணி நேரம் பணியாற்றுகிறார்கள். ஆனால் தவறு செய்தவனுக்கு விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு நீதி மன்றங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 வரை. ( பிரமாண பண்டிகை நாளில் 11.30 மணிக்கு நீதி மன்றம் தொடங்கும்).

மக்களுக்கு தேவையான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும். அப்பொது தான் தீர்ப்பை மற்றவர்களுக்கும் மதிப்பார்கள். காலம் கடந்து கடவுளே தீர்ப்பு வழங்கினாலும் அந்த கடவுளை கூட தூக்கி எறியும் காலமட் இது. அதனால் நீதி மன்றங்கள் இருபத்தி நான்கு மணி நேரம் இயங்க வேண்டும். இன்னும் தெளிவாய் சொல்ல போனால் 24 X 7 மணி நேரம் நீதி மன்றங்கள் மக்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டும்.

ஏன் சாத்தியமில்லை....? இரவு நேரத்தில் தாய் பசு இறந்த தன் கன்றுக்காக மனுநீதி சோழனிடம் செல்லவில்லை. மனுநீதி சோழன் இரவு நேரம் என்று வழக்குக்கு வாய்தாவா கொடுத்தார் ? அந்த வழக்கில் விசாரித்து தவறு செய்தவன் மகனென்று பார்க்காமல் தேரில் ஏற்றி கொல்லவில்லை. அந்த காலத்தில் இருபத்தி நான்கு மணி நேரம் நீதி மன்றங்கள் நடந்தன. நீதிபதிகளாக அரசர்கள் இருபத்தி நான்கு மணி நேரம் தீர்ப்பு வழங்கினார்கள். காலம் கடக்க வெள்ளையன் வந்து நம்மை ஆட்சி செய்ய நீதி மன்றத்திற்கு நேரமும், சனி, ஞாயிறு விடுமுறை என்று விதித்து விட்டான். அதையும் நாம் மறக்காமல் தொடர்கின்றோம்.

இன்று பல தனியார் நிறுவனமும் அதிகம் லாபம் காண்பது இருபத்தி நான்கு மணி நேரம் உழைப்பு தான். ஒரு நாளை மூன்று எட்டு மணி நேரங்களாக பிரித்து, ஒவ்வொரு எட்டு மணி நேரமும் ஒவ்வொரு ஊழியர்கள் உழைக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Shift basis work என்பார்கள். நம் நீதி மன்றங்களும் அப்படி இயங்க வேண்டும்.

நீதி மன்றத்தில் இருபத்தி நான்கு நேரம் வழக்குகள் விசாரித்தால் எல்லா வழக்குகளும் தீர்ப்பு கிடைக்கும். அப்படி என்றால் இப்பொது இருக்கும் நீதிபதிகளை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். அவர்களுக்கு எற்றார் போல் ஒரு நாளைக்கு எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து வேலை செய்யலாம்.

வழக்கறிஞர்கள் எண்ணிக்கை உயர்த்த மாணவர்கள் மத்தியில் வழக்கறிஞர் தொழிலை பற்றி உயர்வான எண்ணத்தை பெருக்க வேண்டும். மருத்துவம் போல் வழக்கறிஞர் தொழில் சேவை என்று உணர்த்த வேண்டும்.

நம் நாட்டில் சிறைசாலையில் இருக்கும் கைதிகளில் இருபது சதவீதம் மட்டுமே தீர்ப்பு வழங்கப் பட்டவர்கள். மீதி எண்பது சதவீத கைதிகள் தீர்ப்புகளுக்காக நீதி மன்றங்களுக்கு அலைத்தும் செல்வதுமாய் இருக்கிறார்கள். இந்திய சிறைசாலையில் சுமராக எண்பது லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு நாளுக்கு நீதி மன்றத்திற்கு அலைத்து செல்லும் செலவு பத்து ரூபாய் என்று வைத்துக் கொண்டால் எண்பது லட்சத்திற்கு எட்டு கோடி செலவாகிறது. வருடத்துக்கு ஒரு கைதியை சுமராக இருபது முறை நீதி மன்றத்திற்கு அலைத்து செல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட எண்பது லட்ச கைதிகளுக்கு 160 கோடி செலவாகிறது. கைதிகளுக்காக தேவை இல்லாமல் இத்தனை கோடி செலவு செய்கிறார்கள். தீர்ப்புகள் தள்ளிப் போடுவதால் அரசாங்கத்திற்கு இத்தனை கோடி செலவாகிறது. குறைவான காலத்தில் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினால் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் செலவுகள் குறையும்.

( தாய் மண் (இலக்கிய மாத இதழ்) : மார்ச், 2007 )

Thursday, December 18, 2008

சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள்

பிரபல கார்ப்ரேட் நிறுவனம் ஒரு நடிகனுக்கு பத்து கோடி சம்பளம் கொடுத்து பெரிய அளவில் படம் தயாரிக்கிறார்கள். அந்த படமும் பெரிய வெற்றி படமாக அமைந்து விடுகிறது. அதன் பிறகு அந்த நடிகனின் சம்பளம் பத்து கோடியாக மாறிவிடுகிறது. சிறு தயாரிப்பாளர்கள் அந்த நடிகனிடம் நெருங்க கூட முடியாது. இப்படி ஒவ்வொரு நடிகனின் சம்பளம் கார்ப்பேரட் நிறுவனத்தின் உதவியால் சம்பளம் உயர்வதை பார்த்த சிறு தயாரிப்பாளர்கள் புதுமுகங்களை வைத்து படம் எடுக்கும் சூழ்நிலை வருகிறது. ஒரு சில தயாரிப்பாளர்கள் போட்டி போடாமல் ஒதுங்கி விடுகிறார்கள். சில வருடங்கள் பிறகு அந்த நடிகனை வைத்து தயாரித்த கார்ப்ரேட் நிறுவனத்தின் படங்கள் தோல்வி அடைகின்றன. அந்த கார்ப்ரேட் நிறுவனம் தயாரிப்பு செலவை குறைக்க நடிகனின் சம்பளத்தை குறைக்கிறார்கள். அந்த நடிகன் தன் சம்பளத்தை பத்து கோடியில் இருந்து ஒரு பைசா கூட குறைக்க மனமில்லை. அதனால், அந்த கார்ப்ரேட் நிறுவனம் புதுமுகங்களையும், குறைவாக சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்கிறார்கள். எந்த தயாரிப்பாளர்களும் அந்த நடிகனின் சம்பளத்தை பார்த்து அவரை நெருங்குவதில்லை. இனி திரையுலகில் அவர் நீடிக்க வேண்டும் என்றால் அந்த நடிகன் தன் சம்பளத்தை குறைத்தாக வேண்டும். அது தான் அவனுக்கு இருக்கும் ஒரே வழி. இப்போது இருக்கும் மென்பொருள் பொறியியலாளர்களின் நிலைமையும் அதுவே !

மேலே குறிப்பிட்டுள்ள நடிகனின் சம்பளம் ஏற்றமும், இறக்கமும் காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் இப்படி ஒரு வீழ்ச்சியை சந்திப்பது இரண்டாவது முறை. (ஒரு சில இளைய பொறியியலாளர்களுக்கு 2000,2001 ஆண்டில் இப்படி ஒரு வீழ்ச்சி தெரிந்திருக்க வாய்ப்பில்லை). பல கார்ப்ரேட் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இளசுகளுக்கு சம்பளத்தை அதிகமாக கொடுத்தனர். அதிக பணம் வருவதால் கார், வீடு, மனை என்று வங்கி கடன் மூலம் வாங்கிவிட்டனர். இப்பொது இருக்கும் பொருளாதார வீழ்ச்சியால் எந்த நிறுவனத்தாலும் அதிக சம்பளம் கொடுக்க முடியவில்லை. கொடுக்கும் சம்பளத்தில் வங்கி கடன், செல்வுகளுக்கு போதவில்லை. விளைவு... தற்கொலை.

ஐந்து எண்களில் சம்பளத்தை வாங்கியவர் மீண்டும் நிலைமை சீராகும் வரை நான்கு எண்கள் சம்பளத்தை வாங்க தோன்றுவதில்லை. மனம் சிறு குழந்தையை போல் ஐந்து எண்கள் நாடுவதால் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் உழியர்களை அனுப்பிவிட்டு குறைவான சம்பளத்தில் குறைந்த தகுதியுள்ளவனை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கிறார்கள். அனுபவமுள்ள ஒருவனுக்கு கொடுக்க படும் சம்பளத்தை ஆறு புதியவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். இது போன்ற சம்பளங்கள் ஒர் இரு நடிகர்களுக்கு நடக்கும் போது பெரிதாக தெரிவதில்லை. ஆனால், ஒட்டு மொத்த மென்பொருள் துறைக்கே இப்படி ஒரு பாதிப்பு வந்ததால் எல்லோருடைய பார்வையும் இதன் மேல் இருக்கிறது.

இந்திய பொருளாதாரமே சரிவை சந்திக்கும் போது மென்பொருள் பொறியியலாளர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்கப்படும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள். அப்போது தான் அவர்கள் வேலை செய்யும் நிறுவங்கள் இயங்க முடியும். இன்னும் பழைய சம்பளத்தை எதிர்பார்த்தால் ஜெட் ஏர்வே, சதியம், டி.சி.எஸ் என்று உழியர்களை வெளியே அனுப்பும் நிறுவனத்தின் பட்டியலிட வேண்டியது தான்.

சரி ! இன்னும் எனக்கு ஐந்து எண் சம்பளம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இனிப்பு, சிற்றுண்டி போன்ற கடைகள் வைக்கலாம். கிண்டலாக சொல்லவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மிட்டாய், அடையார் ஆனந்த பவன் ஆரம்பமே சின்ன இனிப்பு கடைதான். சரவண பவன், அஞ்சப்பர் ஆரம்பம் சிற்றுண்டி தான். இவர்கள் வளர்ச்சி அண்ணா எழுதிய 'ஒர் இரவு' போல் வந்து விடவில்லை. இந்த நிலையை தொட அவர்களுக்கு ஒரு தலைமுறை உழைப்பு தேவைப்பட்டது. இன்று அந்த ஸ்தாபனத்தின் இரண்டவாது, மூன்றாவது தலைமுறையை பார்க்கிறோம்.

அவர்களை போல் களத்தில் இறங்கி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பின் பலனை அடுத்த தலைமுறை அனுபவிக்கட்டும். இந்த தலைமுறையில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பளத்தை குறைத்து கொள்ள தான் வேண்டும். அதுவும் இல்லை என்றால் மென்பொருள் துறையை விட்டு வெளியே வந்து வேறு துறையில் கொடுக்கும் நியாயமான சம்பளத்தை வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டியது தான். இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். நானும் ஐந்து எண்கள் சம்பளம் வாங்கும் (வாங்கிய) மென்பொருள் பொறியியலாளர் தான்.

Tuesday, December 9, 2008

நல்ல அனுகுமுறை வெற்றிக்கு அச்சானி

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். பலர் வாழ வேண்டும் என்பதற்காக வாழ்க்கிறார்கள். வேலையை செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். தங்கள் தாங்களே கட்டாயப்படுத்தி தங்கள் கடமையை செய்கிறார்கள். இன்னும் ஒரு சில பேர் தங்கள் கடமைகளை மற்றவர் மூலம் நிரைவேற்ற நினைக்கிறார்கள். தங்கள் எண்ணங்களை வரும் தலைமுறைக்கு திணிக்கப்படுவதுமாக இருக்கிறார்கள். யாரிடம் எப்படி அனுகுவது என்றே தெரிவதில்லை.

சிறந்த கருத்துள்ள நூலை எழுதினாலும், நூலகத்தில் மற்றவர்கள் எடுத்து படிக்கும் அளவிற்கு நூலின் அட்டை வடிவம் இருக்க வேண்டும். தமிழை உயிர் என்று மதித்தாலும், வியாபாரத்திற்காக வெளிநாட்டாவர்களிடம் பேசும் போது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் விழாவிற்கு நேரில் சென்று அழைப்பித்ழ் வைத்தே அழைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு காரியங்களிலும் அனுகுமுறை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. எவ்வளவு செயல் திறன் கொண்டவர்களாக இருந்தாலும் நல்ல அனுகுமுறை மிகவும் முக்கியம்.

மீனை பிடிக்க வேண்டும் என்றால் தூண்டிலில் அதற்கு பிடித்த பூளுவைத்தான் வைக்க வேண்டும். நமக்கு பிடிக்கும் என்று கோழி கறியை வைத்து மீன் பிடிக்க நினைத்தால் எந்த மீனும் மாட்டாது. ஒரு பெண்ணை கவர்வது என்றால் அவர்களுக்கு பிடித்தை செய்ய வேண்டும். நமக்கு பிடித்தை மற்றவர்களுக்கு செய்தால் யாருக்குமே நம்மை பிடிக்காமல் போகும்.
உலகப்புகழ் பெற்ற துணித்துவைக்கும் சோப்பு இருந்தது. அதன் விளம்பரம் உலகம் முழுக்க பிரபலம். ஆனால், அந்த சோப்பை அரபியநாடுகளில் யாரும் வாங்கவில்லை. அந்த விளம்பரப்படங்களில் முதல் படத்தில் அழுக்கு துணியையும், இரண்டாவது படத்தில் சோப்பால் துணி துவைப்பதும், முன்றாவது படத்தில் வெண்மையாக இருக்கும் துணியும் இருந்தது. எல்லா நாடுகளில் இந்த சோப்பு நன்றாக விற்கப்பட்டாலும், அரபிய நாடுகளில் விற்கப்படாதா காரணம், அவர்கள் வலது புறத்திலிருந்து இடதுப்புறமாக படிப்பது தான். உலகப்புகழ் பெற்ற சோப்பாக இருந்தாலும் அந்த நாட்டில் சோப்பை விற்க எப்படி அனுகுவது என்று தெரியவில்லை.

அரசியல், மருத்துவம், சட்ட அலோசனை, பக்தி இப்படி எல்லாவற்றிக்கும் விளம்பரங்கள் தேவை என்றாகிவிட்டது. சேவை என்று கருதப்பட்ட தொழிலெல்லாம் பணத்தேவையை நிபர்த்தி செய்யும் வேலையாக மாறிவிட்டது. சேவைத் தொழிலுக்கு எப்பொது விளம்பர அனுகு முறை தேவைப்பட்டதோ மக்களும் அந்த தொழிலையெல்லாம் வியாபாரம் என்று நினைக்க தொடங்கிவிட்டார்கள்.

சேவை அனுகுமுறை இருந்த வரையில் மருத்துவம், பக்தி, வழக்கறிஞர் தொழில்களெல்லாம் மதிக்கப்பட்டது. வியாபார ரிதியாக அனுகுமுறை தேவைப்பட்டதோ எல்லா தொழில்களும் பணம் சம்பாதிப்பதே குறிக்கொள்ளாக ஆகிவிட்டது.

இன்று நல்ல அனுகுமுறையே தொழிலாக தொண்டுள்ளார்கள். ஆங்கிலம் தெரியாமல் வேலையில் கடினமா ? கவலை வேண்டாம். ஒரு மாதத்தில் ஆங்கிலம் கற்கலாம். எங்களிடம் வாருங்கள். நாங்கள் கற்று தருகிறோம்.

நடிக்க ஆசையா ? எங்களிடம் வாருங்கள். நடிப்பு பயிற்சி அளித்து சின்னத்திரையில் நடிக்க உதவிச் செய்கிறோம்.

எங்களிடம் கணிப்பொறி கற்றுக்கொள்ளுங்கள். பயிற்சி முடித்ததும் வேலை கிடைப்பதற்கு நாங்கள் உத்தரவாதம்.

யாரிடம் எப்படி அனுகுவது என்று தெரியாதவர்களை வியாபார ரிதியாக அனுகுவது இன்றைய தொழிலாகிவிட்டது. பணம் இருந்தால் போதும் நம்மை தேடி வந்து அனுகுகிறார்கள்.

முன்பெல்லாம் வங்கியில் கடன் வாங்குவது குதிரை கொம்பாக இருக்கும். ஆனால், மாத சம்பளம் ரூ.5000 வாங்குபவர்களை கூட தேடி கண்டு பிடித்து கடன் தருவதாக அனுகுகிறார்கள். கடன் வாங்க நல்ல அனுகுமுறை சென்று, கடன் கொடுக்க நல்ல அனுகுமுறை தேவைப்படுகிறது.

பேச்சு, உடை, திறமை இவை எல்லாவற்றிற்கும் நல்ல அனுகுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல அனுகுமுறையால் மற்றவரை கவர்ந்துவிட்டால், அதன் பிறகு வரும் தவறுகள் கூட பெரிதாக தெரிவதில்லை.

இன்றைய இந்தியனுக்கு யாரை எப்படி அனுகுவது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை தேடும் போது தேர்வுக்கு நன்றாக படித்து தன் திறமையை முதன்மையாக வைத்து தேடுகிறான். அரசாங்கத்தில் வேலை தேடும் போது சிபாரிசுகளும், பணத்தையும் மூலதனமாக கொண்டு வேலையை தேடுகிறான்.

உலக வங்கி கூட இந்தியாவிற்கு கடன் தருவது மனிதர்களை மதிக்கும் நல்ல அனுகுமுறையே காரணம்.

(நன்றி : சிஃபி.காம்
http://tamil.sify.com/fullstory.php?id=14585769 )

Thursday, December 4, 2008

விலைக்குறையாத பெட்ரோல்

சமிபத்தில் என் நண்பர் ஒருவர் கைபேசியில் எனக்கு அனுப்பிய செய்தி (எஸ்.எம்.எஸ்)...

“கடவுள் உன் மகிழ்ச்சியை
பெட்ரோல் விலைப் போல் உயர்த்தட்டும்
உன் சோகத்தை
நடிகையன் ஆடைப்போல் குறைக்கட்டும்”

நடிகையின் ஆடையால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த ஒரு நஷ்டமுமில்லை. ஆனால் பெட்ரோல் உயர்வால் பல தரப்பட்ட மக்கள் பாதிக்க படுகிறார்கள். அதனால் மிகப் பெரிய விவாதிக்க குரிய விஷயம் பெட்ரோல் உயர்வு தான்.

காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களின் விலையும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில் இதை ஏற்றி செல்லும் போக்குவரத்துக்கு பெட்ரோல், டிசல் இன்றியமையாத தேவையாகிவிட்டது. அதே போல் நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவையான பேரூந்து, ஆட்டோ, இரு சக்கிர வண்டி என அனைத்து தேவைகளும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது.

சரியாக கணக்கு போட்டு பார்த்தால் நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்தியாவில் விலை ரூ. 21 முதல் ரூ. 27 வரை விற்கலாம்.

கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நூகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.

நவம்பர் 15 ஆம் தேதி, பாக்கிஸ்தானில் பெட்ரோல் விலை பத்து ரூபாயும், டிசல் விலை மூன்று ரூபாயும் இறங்கி உள்ளது.

பாகிஸ்தானில் மட்டும் குறைவான விலை... நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு உயர்வான விலை ? ஏனென்றால், மற்ற நாடுகளில் மானியங்கள் கிடையாது. அங்கெல்லாம் எண்ணை நிறுவனத்தை அரசு நடத்தவில்லை. தனியார் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்க மாட்டார்கள். அவர்களால் குறைவாக விற்க முடியும் என்றால் நம்மாலும் விற்க முடியும்.

இதில் நமக்கு மானியம் வழங்குகிறது என்று சொல்வது நம்மிடம் பிடுங்கி நமக்கே பிச்சையிடுவது போல் இருக்கிகறது.

பீளு கிராஸ் மட்டும் தடை விதிக்காமல் இருந்தால் காருக்கு பதிலாக ஒரு குதிரையில் வாங்கி அதில் பேர் சவாரி செய்திருக்கலாம்.

இன்று, ஒரு பேரல் கச்சா எண்ணை $45 கீழ் இறங்கியுள்ளது. ஆனால், $140 இருக்கும் போது ஏறிய பெட்ரோல் விலை, நம் நாட்டில் இன்னும் குறையாமல் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தான் பெட்ரோல் விலையை குறைப்பார்களோ !!!

Tuesday, November 4, 2008

உரையாடலில் ஒளிந்திருக்கும் ஆபத்து

நுணலும் தன் வாயால் கேடும் என்பார்கள்.

ஒரு சிலர் நல்லவர்களாகவே இருந்தாலும் அவர்களை கேட்டவர்களாக பிரதிபலிப்பது அவர்களுடைய நாவு தான். எங்கு எதை பேச வேண்டும் என்பது தெரியாது. பேச வேண்டடுமே என்பதற்காக பேசிவிட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்த இசைப்பாளர் மற்ற இசைப்பாளர்ப் போல் இல்லை. மிக குறைவான காலத்தில் நல்ல இசைகளை அமைத்துக் கொடுப்பார் என்றார். இவர் புகழ்வது போல் மறைமுகமாக யாரோ இசையாமப்பாளரை தாக்குகிறார் என்று புரிகிறது. அந்த இயக்குநர் இசையாமப்பாளர் பெயரை கூறிப்பிட்டு பேசியிருந்தால் அந்த பேச்சே அவருக்கு எதிரியாய் போயிருக்கும்.

அந்த இயக்குநருக்கு மேடையல் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது. சமிபத்தில் ஒரு நடிகை திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று பேட்டி அளித்தார். அந்த பேட்டியே அவர்களுக்கு எதிரியாய் போனது. அவர்களுக்காக கோயில் கட்டியவர்கள் கூட அவர்களை எதிர்த்து நின்றார்கள்.

செய்கையால் வரும் பிரச்சனையை விட நாவால் வரும் பிரச்சனை அதிகம். நாவால் வரும் விளைவுகளும் அதிகம். அதனால் தான் வள்ளுவர் கூட எதை அடக்க விட்டாலும் நாவை அடக்க சொன்னார்.

தெனாலிராமனுக்கு 'விகடகவி' என பெயர் எடுத்துக் கொடுத்ததும் அவருடைய நகைச்சுவை பேச்சு தான்.

அண்ணாதுரைக்கு 'பேரறிஞர்' என பெயர் கொடுத்ததும் அவருடைய திறமையான பேச்சு தான்.

எந்த சேவை செய்யாமல் அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் இருந்து ஓட்டுகள் வாங்கி தருவதும் அவர்களுடைய பேச்சு தான்.

வாயுள்ள புள்ள பொலச்சிக்கும் என்பார்கள். நாம் திறமையா, அளவோடு பேசினால் அதை விட மிக பெரிய பலம் இல்லவே இல்லை.

இன்று கணிப்பொறி துறையில் திறமையில்லாமல் ஆங்கிலம் பேச தெரிந்துக் கொண்டு தன் பிழப்பை நடத்துபவர்கள் பல பேர் உண்டு. திறமையிருந்தும் ஆங்கிலம் பேச தெரியாமல் பல வாய்ப்புகளை தவர விட்டவர்களும் உண்டு.

எதை எப்படி பேச வேண்டும் என்ற வரம்பு முறைகளை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

பெண்களிடம் சென்று வயதை கேட்பதும், ஆண்களிடம் சென்று சம்பளத்தை கேட்பதும், சிறுவர்களிடம் சென்று மதிப்பெண்கள் கேட்பதும் இப்படி கேட்டவருக்கு எப்படி இருக்குமோ என்று தெரியாது. ஆனால் கேட்டபவருக்கு தர்ம சங்கடமாக இருக்கும். அதுப் போன்ற கேள்விகளுக்கு போய்யான பதில் வரும் என்று தெரியாமே பலர் கேட்கிறார்கள்.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு போய்யான பதில் வரும் என்று தெரிந்தால் அந்த கேள்வியை கேட்காமலே தவிர்ப்பது நல்லது. அவர்கள் போய்யான பதிலளிக்கும் போது மனதில் நம்மை எத்தனை முறை வெடித்துக் கொண்டாரோ என்பது யாருக்கு தெரியும்.

ஒரு சிலர் திருமணத்துக்கு முன்பு என்ன நடந்ததோ அப்படியே மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி சொல்பவர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்களே தவிர நிம்மதியாக வாழ்வது அறிது தான். மனைவியையும், அன்னைக்கு வரும் சண்டைகளை சமாததான படுத்த பல பொய்கள் சொல்லியாக வேண்டிய நிலையில் இருப்பார்கள். கண்வர்கள் உண்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனைவிமார்கள் கூட , கணவர்கள் சொல்லும் உண்மைகளை நம்புவதில்லை.

இங்கு அமைதியாய் இருக்கும் மூட்டாள்கள் அறிவாளியாக காணப்படுகிறார்கள். அதிகமாய் பேசும் அறிவாளியே மூட்டாளாக தெரிக்கின்றான்.

காதலில் எடுத்துக் கொண்டால் கூட அதிகமாய் பேசும் ஆண்களை விட அமைதியாய் இருக்கும் ஆண்களை தான் பெண்கள் விரும்புவார்கள். காரணம், அதிகமாய் பேசும் ஆண்கள் தங்களை பற்றி விளம்பரம் செய்து கொள்வார்கள். ஆனால், அமைதியாய் இருப்பவர்கள் அப்படியில்லை. விளம்பரங்கள் வியாபாரத்திற்கு உதவலாம் காதலுக்கு உதவாது.

நம் நாட்டில் வாய் சொல்லில் வீரர்கள் பல பேர் உண்டு. பேசிய சாதித்து விடலாம் என்று பல பேர்கள் நினைப்பதால் கட்டப்படாத மேம்பாலம் பாதியிலே பல காரியங்கள் நிற்கிறது. அளவாய் பேச வேண்டும். அதற்குறிய செயல்கள் வேண்டும். இந்த இரண்டுமே என்றும் சிந்தனையில் இருக்க வேண்டும்.

(கல்வெட்டு பேசுகிறது, அக்டோம்பர்,2006 )

Monday, November 3, 2008

மனம் (+) மனம் (-) மனம் (!)

“அறிவுக்கும் மனசுக்கும்
சிக்கல் எற்படும் போது
நீ மனசு சொல்வதை மட்டும் கேள்
அறிவு சொல்வதை கேட்காதே !
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கும் உன்னை மட்டும் தான் தெரியும் !”
- விவேகானந்தர்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “Mind is fater than wind”. காற்றை விட அதி வேகமாய் மனம் செல்லும். சென்னையில் சில மணி நேரங்கள் தேவைப்படும். ஆனால், மனிதன் மனம் சென்னையில் இருந்துக் கொண்டு அமெரிக்காவுக்கு செல்வதைப் பற்றி யோசிப்பான்.

நூறு கிராம் தான் இதயம். ஆனால் அதில் டன் கணக்கில் ஆசைகள். பதவி, பெண், பொருள், பொன், புகழ், பணம், நிலம் இதிலேயே தன் மனதில் கவனம் செலுத்தி வருகிறான்.இவைகளை அடைவதற்காகவே பல முயற்சிகள் செய்து வருகிறான்.

விழித்திருக்கும் போது இதயத்துடிப்பு அதிகமாய் துடிக்கும். உறங்கும் போது அதை விட சற்றுக் குறைவாகவே இதயதுடிப்பு துடிக்கும். ஆனால், மனதில் இருக்கும் ஆசைகள் உறங்கும் போது கனவாய் உலாவருகிறது. விழித்த பிறகு அந்த ஆசைகள் மனதில் இரட்டிப்பாய் வளர்கிறது.

ஒரு முனிவர் பத்து வருடங்களாக தவம் செய்து தண்ணீரில் நடப்பதற்கு வரம் வாங்குகிறார்.வரம் வாங்கிய பிறகு யமுனை கரையை நடந்து சென்று நண்பனைப்பார்க்க செல்கிறார். முனிவர் நண்பனிடம் “நான் பத்து வருடங்களாக கடும் தவம் புரிந்து நீரில் நடந்து செல்ல வரம் வாங்கி வந்துள்ளேன். இப்பொதுக் கூட யமுனைக் கரையை நடந்தே கடந்து வந்தேன்” என்றார். அதற்கு அந்த நண்பர் “அவ்வளவுதானா .. இதற்கு பத்து ரூபாய் ஓடக்காரரிடம் கொடுருந்தால் அவன் யமுனைக் கரையை கடக்க உதவியிப்பான். இதற்காக பத்து வருடம் வீணாய் செலவு செய்து விட்டீரே” என்றார். அந்த முனிவர் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார்.

மற்றவர் நம்மை பாராட்டவே மனம் செயல் படுகிறது. நாம் செய்யும் வேலையை மற்றவர்கள் வியக்க வேண்டும் என்று ஒவ்வொரு வேலையும் செய்கிறோம். அதை யாரும் பாராட்டாத போது மனம் வாடுகிறோம்.

இளம் வயதில் உடலை வருத்திக் கொண்டு பணத்திற்காக மனம் உழைக்க சொல்லும். சற்று நரை வளர்த்த பிறகு உடல் நலத்திற்காக மனம் பணத்தை செலவு செய்ய சொல்லும். காலத்திற்கு ஏற்றதுப் போல் நம்மை அறியாமலே நம் மனது இயங்கும்.

நாம் மனதை ஆலயமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். குறைந்தது ஆலயத்தில் வெளியே கிடக்கும் செருப்பாக நம் மனம் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாரி, அசோகன், சோழ நாட்டு மன்னர்கள் இவர்கள் எல்லாம் நாட்டை ஆண்டு பெயர் எடுத்தவர்கள். விவேகானந்தர், ராம கிருஷ்ணர், சாக்ரடீஸ் இவர்கள் எல்லாம் தங்கள் மனதையாண்டு பெயர் எடுத்தார்கள். இன்றைய காலக் கட்டத்தில் நாட்டை ஆட்சி செய்து பெயர் எடுப்பதை விட மனதை ஆட்சி செய்து பெயர் எடுப்பது சுலபம். ஆதலால், மனதர்களே மனதை ஆட்சி செய்யுங்கள்.

( நன்றி : 'தாய் மண்' இலக்கிய மாத இதழில் ஜூலை,2006 வெளிவந்தது )

Friday, October 31, 2008

தொலைந்து போன தொழிற்கல்வி

'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற ஒர பழமொழி உண்டு. இது எதுக்கு பொருந்துதோ இல்லையோ .... நம் நாட்டின் கல்விக்கு பொருந்தும்.

எல்லா தேர்வு முடிவுகளை விட 10வது, 12வது தேர்வு முடிவுகளே மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்ப்பார்ப்aர்கள். இந்த தேர்வு மதிபெண்கள் வைத்தே எந்த கல்லூரியில் சேரலாம், என்ன படிப்பு படிக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும். அந்த மதிபெண்கள் வைத்து தான் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

ஒரு புறம் ஜாதி, மதம் இட ஒதிக்கீட்டில் திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும். மறுபுறம் தேர்வின் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது. தேர்வு முடிவு ஒரு சில மாணவர்களுக்கு வாழ்க்கை முடிவாகிவிடுகிறது. அந்த முடிவுக்கு வர காரணமாக இருப்பது மாணவர்களின் மனநிலை என்று சொல்லலாம். அந்த மனநிலை அவர்களுக்கு ஏற்பட்டது மிக பெரிய காரணம் அவர்களின் பெற்றோர்களும், கல்வி முறைதான் காரணம்.

தங்கள் பிள்ளைகளை ஊக்கவிக்க தெரியாத பெற்றோர்கள் கையாலும் முறையே மிக அபத்தமாக இருக்கும்.

“உன்னை யாருடனும் ஒப்பிடாதே .. அப்படி ஒப்பிட்டால் உன்னை நீயே அவமானம் படுத்திக் கொள்கிறாய்” - ஓஷோ

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு தங்கள் பிள்ளைகளை அவர்களே அவமானப்படுத்துகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் தன்னை நல்ல முறை ஊக்கவித்தார்கள். அதனால் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன் என்று சொல்கிறார்களே ! தவிர, மற்றவரோடு ஒப்பிட்டார்கள் அதனால் நல்ல படித்தேன் என்று யாரும் சொல்வதில்லை. பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளை மனதில் தாழ்வு மனப்பான்மை வருவதற்கு மிக முக்கிய காரணம். படிப்பு இல்லை என்றால் வவாழ்க்கையில்லை என்றுமங, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் ஆசையில் மன ஆழுத்தம் ஏற்படும் அளவிற்கு பேசுவதும் என்று பெற்றோர் செய்கிறார்கள். அதனால் ஒரு சில தோல்வி அடைந்த மாணவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களுக்கு அவமானத்தை தேடி கொடுத்து விட்டோமே என்று வருந்தி தற்கொலை செய்துக் கொள்கிறார்கள்.

ஒரு குற்றவாளி பெற்றோர் என்றால், இன்னொரு குற்றவாளி கல்வி முறைகள். புத்தகத்தில் இருப்பதை அப்படியே ஒரு வார்த்தை விடாமல் எழுதினால் அதிக மதிப்பெண்கள் என்ற கல்விமுறை. சிந்தனைகளுக்கு வேலைக் கொடுக்காமல், நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றலுக்கு முதலிடம் கொடுக்கும் கல்விமுறை மாற்ற வேண்டும். பெற்றோர்கள் ஒரு புறம் மன அழுத்தத்தை கொடுக்க, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள தங்களை தாங்களே மன அழுத்ததிற்கு உள்ளகுகிறார்கள்.

இந்த முறைகளை மாற்றவே தொழிற்கல்வி தொடங்கப்பட்டது. தொழிற்கல்வி முலம் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. ஓய்வு நேரத்தில் மாணவர்கள் வேலை செய்வார்கள்.

எனக்கு பள்ளி வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் தொழிற்கல்வி கற்றவர். பள்ளி விடுமுறையில் ஓய்வு நேரங்களில் வாட்ச் பழுது பார்த்து சிறு வருமானம் வந்ததை சொல்லிக் கொண்டு இருந்தார். தொழிற்கல்வி பெருமைகளை பற்றி சொல்லிக் கொணடடி இருந்த ஆசிரியர், என் வகுப்பு நண்பர் ஒருவர் “நீங்க பேசாம்ம வாட்ச் கடையல வேலை பார்த்து இருக்கலாம்.. நாங்க உங்க கிட்ட மாட்டமா தப்பிச்சு இருப்போம்” என்று சொன்னான். அதன் பிறகு அந்த மாணவன் ஆசிரியரிடம் உதை வாங்கியது வேறு விஷயம்.

இப்படி எந்த கவலையில்லாமல் வாழும் மாணவர்கள், தற்கொலை செய்துக் கொள்ள ஆசையா படுவார்கள். அதில் வரும் தோல்விகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நற்றாக படித்து தேர்வு எழுதி, தேர்வு முடிவு எதிராக வரும் போது மாணவர்கள் தற்கொலை வெய்துக் கொள்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இருக்கும். அந்த குற்ற உணர்ச்சியே தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.

ஒரு வேலை தொழிற்கல்வி கற்ற மாணவர்களாக இருந்தால், எப்படியாவது தொழில் செய்தாவது பெற்றோர்களின் கனவுகளை நிஜமாக நினைத்து இருப்பார்கள்.அவர்கள் மன அழுத்தங்களும் குறைந்திருக்கும். என்ன செய்வது பெற்றோர்கால் வரும் மன அழுத்தம், சிந்திக்க வைக்காத கல்வி கொடுக்கும் மன அழுத்தம், பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி.... முடிவு. பக்குவம் இல்லாத மனது தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.

( நன்றி : 'செங்கரும்பு' இலக்கிய மாத இதழில் பிப்ரவரி, 2007 வெளிவந்தது )

Monday, March 24, 2008

மறுக்கப்பட்ட மனிதநேயம்

உலகில் இரண்டாவது இடத்தில் நம் மக்கள் தொகை. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கொடுத்தோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன கொடுத்தோம் ?

மனித எண்ணிக்கைகள் தான் அதிகமே தவிர, மனித நேயத்தில் இல்லை. இன்று வாகன விபத்துக்கள் நடப்பது மிக சகஜமான விஷயமாகிவிட்டது. அதிலும் விபத்தில் பெரும் பாலும் இறப்பது இளைஞர்கள். இரு சக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் போது அவனிடம் இருக்கும் செயின், பணம், பொருள் எல்லாம் திருட நினைக்கிறார்களே தவிர அவனை மருத்துவமனையில் சேர்த்து உதவ நினைப்பதில்லை. அப்படியெ மருத்துவமனையில் சேர்த்தலும் போலீஸ், கோர்ட் எல்லாம் செல்ல வேண்டுமே என்று அஞ்சுகின்றனர். உதவுவதற்கு அஞ்சுகின்றனர், திருடுவதற்கு அஞ்சுவதில்லை. இப்படி நம் நாட்டில் மனித நேயம் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.

ஐந்து நிமிடம், பத்து நிமிடம் தாமதத்தில் எத்தனை உயிரை இழந்து இருக்கிறோம். பத்து நிமிடம் முன்னாடி வந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று மருத்துவர் கூறும் போது நாம் யாரை நோந்துக் கொள்வது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பற்றி கவலை படமுடியாத அவசர உலகத்தில் இருக்கிறோம்.

ஹைவேயில் லாரியை வேகமாக ஓட்டி ஒரு மனிதர் மீது இடித்து விடுகிறான். சுற்றி எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர மருத்துவமனையில் சேர்ப்பவர்கள் மிக குறைவானவர்கள் தன். அந்த வண்டி ஓட்டுனர் கூட அபராதம் மட்டும் கட்டிவிட்டு வெளiயே வந்துவிடுவான். இறந்தவர் குடும்பத்தை பற்றி யாரும் கவலைபடுவதில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உயிரை மதிக்காமல் தான் வண்டியை ஓட்டி செல்கிறான்.

மனிதர்களை பாதுகாக்கும் சட்டங்களை விட மான்களை பாதுகாக்கும் சட்டங்கள் சரியாகவே இயங்குகின்றன. காரணம், மானின் தோளுக்கு மதிப்பு உண்டு. ஆனால் மனிதனின் தோளுக்கும், உயிருக்கும் மதிப்பே இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மிஞ்சி இருக்கும் மனி நேயம்
இப்பொது பிச்சையாக மாறும் நேரம்

- என்று கருதி கை, கால் இருப்பவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். பேரூந்து நிலையம், பொது இடம் போன்ற இடத்தில் நின்று பேசுபவர்களiடம் அம்மா தாயே.. குழந்தைக்கு பசிக்குதுமா... தர்ம பிரபுவே... இப்படி எத்தனை வார்த்தைகளை சேகரித்து வைத்து இருக்கும் மனிதநேயத்தை காசாக மாற்றுவது தான் இவர்களது முதல் வேலை. நம் நாட்டில மனிதநேயத்தை காசாக மாற்ற பல வித்தைகளை கற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனிதநேயத்தை வளர்க்கத் தான் யாருமில்லை.

உதவி செய்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் தான் மனித நேயங்கள் செத்துக் கொண்டு இருக்கின்றன. உதவி செய்வது போல் ஏமாற்றுபவர்களை நாம் வாழ்வில் தினமும் பார்க்கிறோம். ஆனால் இரக்கப்பட்டு உதவி செய்ய செல்லும் போது நம்மை ஏமாற்றும் அனுபவமே மிகவும் கசப்பாக இருக்கிறது. இது போன்ற சில நிகழ்ச்சிகளால் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்குகிறோம். நம் நாட்டில் பாதி மனிதநேயங்கள் செத்ததற்கு மிகப் பெரிய காரணம் உதவி செய்ய வந்தவர்களை ஏமாற்றி லாபம் அடைவது தான்.

மிக இக்கட்டான நேரத்தில் பணம் வேண்டும் என்று காலில் விழாத குறையாக விழுந்து கெஞ்சுவார்கள். பணம் கொடுத்த பிறகு அவர்களிடம் பணம் வாங்க நம்மை அலைக்கடிப்பார்கள். கடன் வாங்குவது அவமானம் என்று கருதிய காலம் சென்று பணம் கொடுத்தால் திரும்பி வருமோ என்ற அச்சம் தான் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது.

இன்று உதவி செய்யச் சென்றாலும் அதில் வரும் ஆபத்துகளை மனதில் வைத்தே செல்ல வேண்டிய காலத்தில் இருக்கிறோம். எந்த அச்சமும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் மனிதநேயத்தை வளர விடுங்கள். இனியாவது மனிதனை மனிதனாய் வாழவிடுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails