வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, December 4, 2008

விலைக்குறையாத பெட்ரோல்

சமிபத்தில் என் நண்பர் ஒருவர் கைபேசியில் எனக்கு அனுப்பிய செய்தி (எஸ்.எம்.எஸ்)...

“கடவுள் உன் மகிழ்ச்சியை
பெட்ரோல் விலைப் போல் உயர்த்தட்டும்
உன் சோகத்தை
நடிகையன் ஆடைப்போல் குறைக்கட்டும்”

நடிகையின் ஆடையால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த ஒரு நஷ்டமுமில்லை. ஆனால் பெட்ரோல் உயர்வால் பல தரப்பட்ட மக்கள் பாதிக்க படுகிறார்கள். அதனால் மிகப் பெரிய விவாதிக்க குரிய விஷயம் பெட்ரோல் உயர்வு தான்.

காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களின் விலையும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில் இதை ஏற்றி செல்லும் போக்குவரத்துக்கு பெட்ரோல், டிசல் இன்றியமையாத தேவையாகிவிட்டது. அதே போல் நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவையான பேரூந்து, ஆட்டோ, இரு சக்கிர வண்டி என அனைத்து தேவைகளும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது.

சரியாக கணக்கு போட்டு பார்த்தால் நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்தியாவில் விலை ரூ. 21 முதல் ரூ. 27 வரை விற்கலாம்.

கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நூகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.

நவம்பர் 15 ஆம் தேதி, பாக்கிஸ்தானில் பெட்ரோல் விலை பத்து ரூபாயும், டிசல் விலை மூன்று ரூபாயும் இறங்கி உள்ளது.

பாகிஸ்தானில் மட்டும் குறைவான விலை... நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு உயர்வான விலை ? ஏனென்றால், மற்ற நாடுகளில் மானியங்கள் கிடையாது. அங்கெல்லாம் எண்ணை நிறுவனத்தை அரசு நடத்தவில்லை. தனியார் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்க மாட்டார்கள். அவர்களால் குறைவாக விற்க முடியும் என்றால் நம்மாலும் விற்க முடியும்.

இதில் நமக்கு மானியம் வழங்குகிறது என்று சொல்வது நம்மிடம் பிடுங்கி நமக்கே பிச்சையிடுவது போல் இருக்கிகறது.

பீளு கிராஸ் மட்டும் தடை விதிக்காமல் இருந்தால் காருக்கு பதிலாக ஒரு குதிரையில் வாங்கி அதில் பேர் சவாரி செய்திருக்கலாம்.

இன்று, ஒரு பேரல் கச்சா எண்ணை $45 கீழ் இறங்கியுள்ளது. ஆனால், $140 இருக்கும் போது ஏறிய பெட்ரோல் விலை, நம் நாட்டில் இன்னும் குறையாமல் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தான் பெட்ரோல் விலையை குறைப்பார்களோ !!!

2 comments:

சிவகுமார் சுப்புராமன் said...

இதில் அரசாங்கம் மட்டும் தனியாக முடிவெடுக்க முடிவெடுக்க முடியாத நிலை, ஏனெனில் இதில் பல பண முதலைகளின் முதலீடுகள் உள்ளது, அவர்களையும் கலந்தாலோசித்து (கெஞ்சி கூத்தாடி) தான் விலை மறுநிர்ணயம் செய்ய வேண்டும். இங்கு மலேசியாவில் பெட்ரோல் விலை RM1.92-ல் இருந்து RM2.80 க்கு விலையேற்றம் கண்டு தற்பொழுது மீண்டும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் RM1.90 ஆகியுள்ளது. இது மக்களுக்கான அரசு. இந்தியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே ஜால்ரா போடும் அரசாங்கம் உள்ளது. எனவேதான் விலை குறைக்க இவ்வளவு தயக்கம்.

உங்கள் புத்தகங்கள் மலேசியாவில் வாங்க வேண்டுமெனில் எங்கு கிடைக்குமென குறிப்பிட முடியுமா குகன். (sivastar@gmail.com)

சிவகுமார் சுப்புராமன் said...

தற்பொழுதான் தங்களின் கவிதைகளை படித்துவிட்டு வருகிறேன், இயன்றவரை எழுத்துப்பிழைகளை தவிர்த்திட முயற்சி செய்யுங்கள் குகன்.

மற்றபடி கவிதை முதல் நகைச்சுவை வரை அனைத்தும் அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails