வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 29, 2010

தேவன் என்னொரு எழுத்தாளர்

தேவன் என்று அழைக்கப்படும் ஆர்.மகாதேவன் 8.9.1913ல் திருவிடை மருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும், பின்னை கும்பகோணம் அரசாங்க கல்லூரியில் பி.ஏ பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பின், 'ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். பிறகு 1942ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டு காலம் அப்பத்திரிக்கையில் பல்வேறு எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். நகைச்சுவை நிறைந்த இவருடைய எழுத்துக்களில் 'துப்பறியும் சாம்பு', 'விச்சுவுக்குக் கடிதங்கள்', ராஜாமணி', 'கோமதியின் காதலன்' போன்ற படைப்புக்கள் மிக பிரபலமானவை.

'தேவன்' தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்து சிறந்த தொண்டாற்றியிருக்கிறார். பத்திரிக்கை எழுத்து துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் அவர் எழுதியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு, மே மாதம் 5ஆம் தேது 'தேவன் தம்முடைய 44வது வயதில் இறந்தார்.

அவர் எழுதிய 'ரங்கூன் பெரியப்பா' சிறுகதை நூலை படித்தேன். திரைப்பட சாராத ஒரு எழுத்தாளர் எப்படி ஐம்பது வருடம் மேல் நினைவில் இருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது.

'ரங்கூன் பெரியப்பா' நூலில், "பெண்கள் விஷயம்: தேவனின் நகைச்சுவை எழுத்தாளர் என்பதற்கு சாம்பிள். 'வரப்பிரஸாதி' கதை இன்னும் மேடை பேச்சுக்களில் பேசப்படும் நகைச்சுவை. நகைச்சுவை எழுத்தாளராக இருந்தவர், "மறக்க முடியாது" கதையில் எல்லா தேதியின் சம்பவங்களை சொல்லும் சங்கரன் தன் திருமண நாளை மறந்து போவதும், இதை காரணம் காட்டி அவர் மனைவி வருந்தி வீட்டை விட்டு செல்வதும், அதனால் அவருக்கு பைத்தியம் பிடிப்பதாக கதை முடிகிறது. சென்டிமென்ட் கலக்கியிருக்கிறார்.

சாரு நிவேதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களை நாம் கொண்டாடும் வேளையில் 'தேவன்' போன்ற எழுத்தாளரை நாம் மறக்க கூடாது.

தேவன் அவர்கள் எழுதிய நூல்களை அல்லயன்ஸ் மற்று கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுயிருக்கிறது.

Wednesday, April 28, 2010

எனது கீதை - எதிர்வினை

நீச்சல் தெரியாதவன், கைக் கொடுத்து தூக்கி விட ஆள் இல்லாதவன் தைரியமாக கடலில் குதித்தால் என்னவாகும் ? அப்படி ஒரு வேலையை தான் "எனது கீதை" நூலை எழுதி வெளியிட்டேன். எந்த திட்டம் போடாமல், வாசிப்பு பழக்கம் உள்ள நண்பர்கள் இல்லாமல், யார் கருத்தும் கேட்காமல் நூல் போட வேண்டும் என்ற வேகத்தில் வெளியிட்டது. வெளியீட்டு விழா உட்பட 17,000 ரூபாய் செய்தேன். ஆனால், வெளியீட்டு விழாவில் 3000 ரூபாய்க்கு மட்டுமே புத்தகம் விற்பனையானது.

அதன் பிறகு அடுத்த புத்தகம் ( நடைபாதை) போட எனக்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது. பதிப்பகம் தொடங்கிய பிறகு விற்பனையாகும் நூல்களோடு இதையும் சேர்த்து தள்ளிவிடுகிறேன். இலவசமாக போனால் கூட பாரவாயில்லை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு "எனது கீதை" எனக்கு கசப்பான அனுபவத்தை தான் கொடுத்துள்ளது.

நேற்று ஒரு வாசகரிடம் இருந்து வந்த கடிதம் படித்த பிறகு, என்னை சந்தோஷப்பட செய்ததோடு இல்லாமல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம், கடிதம் வந்திருந்த இடம் திருச்சி மத்திய சிறைசாலை.

அந்த கடிதம் கீழ்...

அன்புள்ள மேண்மைக்கு அய்யா உயர்திரு கு.கண்ணன், வெளியிட்டாளர் அவர்களுக்கு உங்கள் வெளியீடு மூலமாக நான் எனது கீதை புத்தகம் படித்தேன். மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

நான் தண்டனை சிறைவாசியாக 6 1/2 வருடங்களாக திருச்சி மத்திய சிறையில் இருந்து 'B.A' சமுகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். ஆகையால் அய்யா அவர்கள் 'உறங்காத உணர்வுகள்' (கவிதை) புத்தகம் ஒன்று எனக்கு அனுப்பி வைத்தால் நான் மற்றும் நண்பர்கள் படித்து இங்கு எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருப்போம்.

ஆகையால் அய்யா அவர்கள் எங்களுக்கு புத்தகம் அனுப்பி வைத்து உதவி செய்ய வேண்டும்.

- வி.செந்தில்குமார்.
மத்தியசிறை, திருச்சி
21.4.10


துரதிஷ்டவசமாக என்னிடம் 'உறங்காத உணர்வுகள்' பிரதிகள் இல்லை.

***

அடுத்து இன்னொரு கடிதம்.இந்த கடிதம் வந்து மூன்று ஆண்டுகள் மேலாகிறது. முகவரி போடாமல் பெயர் மட்டுமே குறிப்பிட்டு இந்த கடிதம் வந்தது.

தோழர் குகன் அவர்களுக்கு ரவிதாசனின் வணக்கம்.

என் திருமணம் 31.8.06 அன்று நடந்தது. என் திருமணத்தின் பரிசுப் பொருட்களாக வந்த புத்தகங்களில் தங்களின் "எனது கீதை"யும் உண்டு.

எட்டு மாதங்களுக்கு முன் தங்களின் புத்தகத்தை எடுத்து அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு, இது சீடம் பழக்கம் நிறைந்த ஆன்மீக புத்தகமாக இருக்கக் கூடும் என்று அலட்சியமாக வைத்துவிட்டேன்.

சென்ற வாரம், என்ன தான் எழுதியிருக்கிறது என்று எடுத்துப் படித்த போது, தங்களின் அரியத் தகவல் என் அகத்தைக் கவர்ந்தது. அற்புதமான நடை, எளிமை ஓட்டம். தலைப்பை நிரப்புவதற்கு நீங்கள் தேடித் தொகுத்த சான்றுகள். இவையாவும் உங்களை முதிர்ந்த எழுத்தாளராக காட்டுகிறது.

தங்களை தாழ்த்தி எடைப் போட்டத்திற்கு மன்னிக்கவும். தங்களின் நட்பு எனக்கு ஊக்கத்தை தரும் என்று நம்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

அன்புடன்,
ரவிதாசன்
14.8.07


செந்தில்குமாரின் கடிதம் படித்ததும், ரவிதாசன் கடிதம் நினைவுக்கு வந்தது. இவரை நேரில் சந்தித்த போது ஒரு விதவை பெண்ணை மணந்துள்ளார் என்பது தெரிந்தது.

இது போன்ற வாசகரின் பாராட்டு கிடைக்கும் போது எத்தனை தோல்வி பெற்றுயிருந்தாலும் அதை எல்லாம் மறக்க செய்து விடுகிறது.

புத்தகத்தை வாங்க... இங்கே.

Tuesday, April 27, 2010

மூன்று காதல் கவிதைகள்



பெண்ணே உன் அதிஷ்டம்

நான் உன்னை காதலிப்பது
என் இஷ்டம் !

என் காதலை எற்றுக்கொண்டால்
உனக்கு இல்லை நஷ்டம் !

காதலை ஏன் ஏற்றுக்கொள்ள
உனக்கு கஷ்டம் ?

என்னை நீ மறுத்தால் அது
உன்னுடைய துரதிஷ்டம் !

எந்த பெண்ணுக்கு உள்ளதோ ...
என்னை மணக்கும் பேரதிஷ்டம் !!

***

கவிதை

அவளை
நான் காதலித்தப் போது
என் விரல்
நுணிகள் கூடக் கவிதை எழுதும் !
என் பேனா
முனைக்கூட அவளைப்பாடும் !
தமிழ் எழுத்துக்கள்
எனக்கு தோழியாகும் !
ஒவ்வொரு வாக்கியமும்
காவியம் படைக்கும் !

அவள் என்னை காதலித்த போது
கவிதை எழுத மறந்து போக......
பேனாவில் மையிருந்தும் எழுத தயங்க.....
வார்த்தைகள் தெரியாமல் தமிழை மறக்க......
மௌனமே மொழியாய் மாறி விட ......

இதற்குக் காரணம் மட்டும்
கவிதையாய் வந்தது !
கவிதையே என்னை
காதலிக்கும் போது
கவிதை எழுத
வார்த்தைகள் வேண்டுமா என்றது?

காற்றில் வந்த என்
கவி ( தேவ ) தையின் வாசகங்கள் !
இதை விட
சிறந்த கவிதை இல்லை என்றது
கவிதையின் வர்தகங்கள் !

***

தேர்வு பிட்

என் சிந்தை முழுவதும்
நீயே நிரம்பி இருப்பதால்.......
தேர்வின் போது எனக்கு
உதவும் காகிதம் !

Monday, April 26, 2010

படித்ததும் பார்த்ததும் - 26.4.10

வரும் சனிகிழமை 1.5.10 அன்று, நம் உரத்தசிந்தனை வழங்கும் 'என்.ஆர்.கே விருது' மற்றும் சிறுகதை போட்டிக்கான பரிசு வழங்கும் விழா நடைப்பெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில், நான் எழுதிய 'முதியோர் இல்லம்' சிறுகதைக்காக பரிசு பெறுக்கிறேன்.

இடம் :
சீனிவாசா சாஸ்திரி அரங்கம்,
லஸ் கார்னர், மைலாப்பூர்.

***

இது வரை நூல் விமர்சனங்களை பற்றி எழுதிய எனக்கு, முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியில் நூல் விமரசனம் செய்ய அழைத்திருந்தார்கள். நான் விமர்சனம் செய்த புத்தகத்தின் பெயர் "அந்த கணத்தில்...". மருத்துவர் மோகன் பாலகிருஷ்ணன் எழுதியது. எனக்கு பிடிக்காத மணிமேகலை பிரசுரம் வெளியீட்டுள்ளனர். விமர்சனம் செய்ய வேண்டும் என்பதர்காகவே படிக்க வேண்டிய நிலைமை. பெரிதாக ஒன்று இருக்காது என்ற நம்பிக்கையுடன் தான் புத்தகம் எடுத்தேன். ஆனால், நான் நினைத்தளவிற்கு கவிதைகள் மோசமாகயில்லை. காதல், சமூகம் என்று இரண்டு வகையான கவிதைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார். ஒரு முறை தைரியமாக வாசிக்கலாம்.

மணிமேகலை பிரசுரம் ஒரு பதிப்போடு இந்த புத்தகத்தை முடக்கியிருப்பார்கள். இருந்தாலும், அந்த புத்தகத்தின் விபரம் இதோ...

அந்த கணத்தில்..
விலை.21 ( 1997 ஆண்டு வெளியீட்டது)
பக்கங்கள் : 110
மணிமேகலை பிரசுரம்

***

'இளைய தளபதி' விஜய் தீவிர தெலுங்கு படம் ரசிகர் என்பது பலர் அறிந்ததே. தெலுங்கு படம், பாடல் எல்லாம் தமிழுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நல்ல லட்சியத்தோடு படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அவரின் 'சுறா' படத்தில் விஜய் 'பில்லா' அஜித் கெட்டப்பில் ஸ்டைலாக வருகிறார். தீடிர் என்று அஜீத் ரசிகராக மாறிவிட்டாரோ என்று நினைக்கும் போது, தெலுங்கு 'பில்லா' வின் பின்னனி இசை வேறு.

இவரை போல் ஒரு சிக்கனமான நடிகர் தயாரிப்பாளருக்கு கிடைப்பது கடினம். தெலுங்கு படத்தின் கதை, இசை, திரைகதை என்று எடுத்து நடிப்பதால் தயாரிப்பாளருக்கு சம்பளம் கொடுக்கும் பணம் மிச்சமாகிரதாம்.

'சுறா' நம்மை வேட்டையாட... 'யூத்' கேட்டப்பில் ஏப்ரல் 30 வருதுங்கோ...!

***

நாகரத்னா பதிப்பக புத்தகங்கள் இப்போது திருச்சியிலும் கிடைக்கிறது.

Rasi publication
Tamil Sangam Buildings, Tiruchy-8

Guruji Books
136, W.B.Road, Tiruchy-8

National Book House
34, ராக்கின்ஸ் ரோடு,
திருச்சி ஜங்ஷன்.

மதுரை, சேலம், கோவை நண்பர்கள் கமிஷன் அடிப்படையில் நூல் விநியோகம் செய்ய தேவைப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்க. 9940448599.

Wednesday, April 21, 2010

கடன் நட்பை வளர்க்கும் !



இனி 'அவசரத்துக்கு யாருக்கும் பணம் தரக் கூடாது' என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் சங்கர். கொடுத்த பணம் எப்போ வருமோ என்று பல நாள் காத்திருக்கனும். நம் அவசர தேவைக்கு நம் பணமே உதவ முடியாமல் போகிறது. பொறுத்து பொறுத்து பார்த்தான். சங்கரால் முடியவில்லை.

"டேய் ! எப்படா பணம் தருவ...!" நேரில் கார்த்திக்கிடம் பல முறை கேட்டுவிட்டான்.

"ஸாரி மச்சி ! போன வாரம் அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... ஒரு மாசமா பயங்கர டைட்டுடா ",
“வண்டி லோன்”,
“மருந்து வாங்கனும்…!”

இப்படியே, மூன்று மாதங்ளாக கொடுத்த பணத்தை சங்கர் கேட்கும் போது கார்த்திக் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு இருந்தான். பையன் ஸ்கூல் பீஸ்காக பணம் வேண்டும் என்று சங்கரிடம் கேட்டான். படிப்பு விஷயம் என்பதால் சங்கரும் இரக்கப்பட்டு கொடுத்தான். வாங்கும் போது மனதில் இருந்த வேகம் கொடுக்கும் போது இல்லை.

கார்த்திக் சங்கர் பள்ளியில் படித்த நண்பன். ஒரு முறை தன் கல்லூரி நண்பன் ராஜேந்திரனை சந்திக்க சென்ற போது கார்த்திக்கை சந்தித்தான். கார்த்திக், ராஜேந்திரன் சிறுவயதில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்தவனாம். இப்போது கார்த்திக் ராஜேந்திரன் வீட்டு அருகில் இல்லை. ராஜேந்திரனிடம் கேட்டு வாங்கவும் முடியாது.

கார்த்திக்கை ஏதாவது கெட்ட வார்த்தை சொல்லி திட்டலாம் என்று தோன்றும். நட்பு முறிவதை பற்றி கவலையில்லை. கொடுத்த பணம் வராமல் போனால் என்ன செய்வது ? பணம் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

தீபாவளி செலவு, வீட்டு செலவு என்று சங்கர் கையை கடிக்க தொடங்க வேறு வழி தெரியாமல் கார்த்திக் வீட்டுக்கே சென்று விட்டான். வழக்கம் போல் அவன் வீட்டில் இல்லை. மனைவி குழந்தையும் வெளியே சென்று இருந்தார்கள். கார்த்திக்கின் அம்மா மட்டும் வீட்டில் இருந்தார்.

சங்கரை பார்த்ததும், " யாரு தம்பி நீங்க..." என்றார். வெளியே இருந்து தன் பெயரை சொன்னான்.

"உள்ள வாப்பா ! உன்ன பத்தி கார்த்திக் நிறைய சொல்லியிருக்கான் " என்று சொல்லி உட்காரு என்று நாற்காலி போட்டார்.

" கார்த்திக் வேல விஷயமா வெளியே பொயிருக்கான். வர இரண்டு மணி நேரம் ஆகுமே !" என்றார். இதை வெளியே இருக்கும் போதே சொல்லியிருக்கலாம் என்று சங்கர் மனதில் நினைத்துக் கொண்டான். இக்கட்டான இந்த சமயத்தில் அவன் அம்மாவிடம் நிலைமையை சொல்லுவது தவறில்லை என்று தோன்றியது.

" கார்த்திக் என் கிட்ட பணம் வாங்குனான். உடனே தரேனு சொன்னான். இன்னும் தர. அவன் கிட்ட பணம் குடுக்க சொல்லுங்க" என்றான்.

" புரியுதுப்பா...! அவ அப்பாவுக்கு போன வாரம் உடம்பு சரியில்ல. எனக்கும் நெத்து முழுக்க காய்ச்சல். இப்படியே செலவுக்கு மேல் செலவு வருதா. ஒண்ணும் முடியல. இப்ப கூட பக்கத்து வீட்டுல ஆயிர் ரூபா கடன் வாங்கி தான் ஓட்டிட்டு இருக்கோம்" என்று ஒரு சோக பட கதையை சொன்னார்.

பொதுவாக சங்கருக்கு சோக படங்களே பிடிக்காது. நண்பர்களுடன் 'அங்காடி தெரு' படத்தை பாதியிலே திரும்பி வந்து விட்டான். அப்படிப்பட்டவனிடம் பணம் கேட்டதற்காக சோக கதை சொல்லுவது பிடிக்கவில்லை. கார்த்திக் அம்மா பேசும் போதே அவசர வேலை இருப்பதாக சொல்லி எழுந்து வெளியே வந்துவிட்டான்.

அடுத்தவர் கஷ்டத்திற்கு பணம் கொடுத்து, நாம் தீபாவளி கொண்டாட முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் சங்கர் மனதில் ஓடியது. வேறு வழியே இல்லை. கார்த்திக் வழி பின்பற்ற வேண்டியது தான். போன் எடுத்தான். பணம் கேட்போம் என்று நினைத்து துண்டித்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் ஒரு புறம் இருந்தது.

நல்ல வேலை கார்த்திக் எடுத்தான்.

" ஹலோ ! மச்சி வண்டி ஒடிட்டு இருக்கேன். அஞ்சு நிமிஷம் கலிச்சு கால் பண்ணட்டா..." என்று போன்னை துண்டிக்க பார்த்தான்.

பணம் கொடுக்கவே யோச்சிப்பவன் போன் போட்டு பேசவா போகிறான். போன் இப்போது எடுத்ததே பெரிய விஷயம். அவனை விட்டு விட கூடாது.

" ஒரு நிமிஷம் கார்த்திக் ! என் வண்டி ஆக்ஸிடண்ட் அயிடுச்சுடா..." என்றான் சங்கர்.

சற்று பற்றத்துடன், "எப்போ ஆச்சு ! உனக்கு எதுவும் அடிப்படலையே...!" கேட்டான்.

" எனக்கு ஒண்ணுமில்ல.... வண்டிக்கு தான். பெரிய செலவு வெச்சிடுச்சு..." சங்கர் பதிலளித்தான்.

எதிர்முனையில் கார்த்திக் பேசாமல் அமைதியாக இருந்தான். பிறகு, " சரிடா ! இந்த வாரம் வந்து உன்ன வீட்டுல பார்க்குறேன்" என்று சொல்லி போனை துண்டிப்பதிலே குறியாக இருந்தான். ஆனால், சங்கர் விடுவதாக இல்லை.

"ஒரு நிமிஷம் கார்த்திக் ! எனக்கு அவசரமா பணம் வேணும். உன்னால பத்தாயிரம் ரூபா அரேன்ஜ் பண்ணி தர முடியுமா !" என்றான்.

கார்த்திக்க்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. போனை வைத்துவிடலாமா என்று கூட யோசித்தான்.

" நானே எவ்வளவு கஷ்டப்படுறேன் உனக்கு நல்ல தெரியும். உன் கிட்ட கூட அஞ்சாயிரம் வாங்கியிருக்கேன் " என்று கூறினான்.

நல்ல வேலை பணம் வாங்கியதை ஞாபகம் வைத்திருக்கிறான் என்று சங்கருக்கு ஆறுதலாக இருந்தது.

" தெரியும்டா. அதான் அரேன்ஜ் பண்ணி தர முடியுமானு கேட்டேன்" என்று சாமர்த்தியமாக பேசினான்.

" அவ்வளவு என்னால எப்படிடா. உனக்கு தர வேண்டிய அஞ்சாயிரத்த எப்படியாவது ஏற்பாடு பண்ணி கொடுத்துடுறேன். மீதி யார்கிட்டையாவது கேட்டு சொல்லுறேன்." என்றான்.

சங்கர் வயிற்றில் பால் உற்றியது போல் இருந்தது. எப்படியோ வாங்கிய பணம் வந்தால் சரி. " ஒ.கே டா ! நாளைக்கு காலையில நானே வீட்டுக்கு வந்து வாங்கிக்குறேன்" என்றான்.

" இல்ல மச்சி ! நானே வீட்டுக்கு வந்து பணம் தரேன் " சங்கர் வீட்டுக்கு வருவதை கார்த்திக் தடுப்பது போல் பேசினான். ஆனால், பல முறை கார்த்திக் வீட்டுக்கு வந்து பணம் தருவதாக சொல்லி வராமல் இருந்திருக்கிறான்.

"சரி டா ! காலையில வந்து கொடு. இல்லனா நா உங்க வீட்டுக்கு சாய்காலம் வந்து வாங்கிக்குறேன். பணம் அவ்வளவு அர்ஜென்ட். தப்பா நினைச்சுக்காதே...!" என்றான் சங்கர்.

கார்த்திக்கும் சம்மதித்தான். இருந்தும், சொன்னப்படி வீட்டுக்கு வந்து பணம் தருவானா என்ற சந்தேகம் உள்ளூர சங்கருக்கு இருந்துக் கொண்டு தான் இருந்தது.

வீட்டு காலிங் பேல் ஒலித்தது.

கார்த்திக் தான். சொன்னப்படி சரியாக வாங்கிய ஐந்தாயிரத்தை கொடுத்து விட்டான். பல மாதங்களாக இப்போ அப்போ என்று சொல்லி தருவதாக சொன்ன பண்ணத்தை ஒரு பொய் சொல்லி வாங்கிவிட்ட சந்தோஷத்தில் சங்கர் இருந்தான்.

இனிமேல், கார்த்திக் எவ்வளவு கஷ்டம் என்று சொன்னாலும் பணதர கூடாது. கார்த்திக்கு மட்டுமல்ல யாருக்கும் பணம் தர கூடாது என்ற முடிவுக்கு வந்தான் சங்கர்.

இரண்டு மாதமானது. கார்த்திக்கிடம் இருந்து எந்த போன் கால் வருவதில்லை. வண்டியில் செல்லும் போது எதரே ராஜேந்திரனை பார்த்தான்.

" என்ன ராஜ் ! எப்படி இருக்க..? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு !"

நல்லமாக இருப்பதை கூறினான். இரண்டு பேரும் தங்கள் வீட்டு, வேலை நலங்களை விசாரித்து முடித்தனர். கொஞ்ச நேரம் கலித்து சங்கருக்கு கார்த்திக் ஞாபகம் வந்தது.

" கார்த்திக பார்த்தியா ! எப்படி இருக்கான் " என்று விசாரித்தான்.

" அவன பத்தி பேசாத கோபமா வருது. இரண்டு மாசம் முன்னாடி அம்மாவுக்கு மலேரியா சொல்லி அஞ்சாயிரம் வாங்கிட்டு போனான். எப்போ கேட்டாலும் இப்போ தரேன். அப்போ தரேன் சொல்லுறான். ஏதாவது சொல்லி திட்டிடுவேன். கொடுத்த பணம் வரனுமே. அதான் அவன் கூட பிரண்டா இருக்கேன்" என்று அவன் கார்த்திக்கிடம் மாட்டிய கதையை சொன்னான்.

கடன் நட்பை முறிக்கும் என்று யார் சொன்னது ? இங்கே, கடன் தான் நட்பை வளர்கிறது என்று சங்கர் மனதில் நினைத்துக் கொண்டான்.

Monday, April 19, 2010

படித்ததும் பார்த்ததும் - 19.4.10

'Indiblogger.in’ பற்றி ஹிந்து நாளேடு கட்டுரை வெளியீட்டுள்ளது. இந்த அமைப்பை உருவாக்கியவர்கள் பற்றியும், அதன் வளர்ச்சி குறித்தும், குழுவினர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். இதே போல், நம் தமிழ் பதிவர்களின் குழுமமும் வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

***

முத்துமீனாள் அவர்கள் எழுதிய 'முள்' நாவலை வாசித்தேன். தொழுநோய்யால் பாதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை.



நல்ல இலக்கிய படைப்பு என்று மார்த்தட்டிக் கொள்ளும் படையில்லை. ஆனால், கண்டிப்பாக ஒரு சுயவரலாறாக வாசிக்கலாம். பள்ளி பருவம், விடுதியில் தான் சந்தித்த ஒரின சேர்க்கை பெண்கள், தன் ஊர் தோழிகள் என்று கடந்து பாதைகளை மிக எளிமையான நடையில் விவரித்துள்ளார்.

திருமணமான பிறகு பள்ளி பருவத்தில் தனக்கு இருந்த எதிர்பால் இன கவர்ச்சி சொல்லியிருப்பது பாராட்ட கூறியது. இந்த நாவலை படித்தவர்கள் பெரிய சர்ச்சை கிலப்பாமல் இருப்பது பெரிய விஷயம்.

Kathy Acker எழுதிய Blood and Guts in High School Plus Two போன்ற நாவல் தமிழில் வரும் சூழல் இன்னும் வேகு தூரமில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது.

இந்த நூலை வாங்க... இங்கே

விலை.60. பக்கங்கள்.104
ஆழி பதிப்பகம்

***

ஒரு வழியாக ஐ.பி.எல் லீக் ஆட்டம் முடிவடைந்தது. எதோ ரீயால்டி ஷோப்போல் தான் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதுவும், லலித் மோடி சமிபத்திய விவகாரத்தை பார்த்தால், விரைவில் ஐ.பி.எல்லில் மெட்ச் பிக்ஸிங் பற்றி தகவல் கூட வெளிவரலாம். எது எப்படியோ சென்னை அரை இறுதிக்கு வந்தாச்சு !!!

***

சரித்திரம் தோற்றவனை மதிப்பதில்லை என்பது படித்திருக்கிறோம். ஆனால், அவர்கள் சுற்றத்தாரும் மதிக்காது என்பதை பிரபாகரனின் தாய் தமிழ்நாட்டுக்கு அனுமதி மறுத்த போது தெரிந்தது. தீவிரவாதிகளுக்கு கோடி கணக்கில் செலவு செய்து பாதுகாப்பு கொடுப்பவர்கள், ஒரு எண்பது வயது நபரால் என்ன பாதுகாப்பு நெருக்கடி வரும் என்று சரியா சொல்ல மறுக்கிறார்கள்.

பாகிஸ்தான், சீனாவில் இருந்து கூட மருத்துவ உதவி பெற இந்தியாவுக்கு வரலாம். இலங்கையில் இருந்து வர கூடாதா ??

மு.க. தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் புதிதில்லை. ஆனால், தன் வாரிசுகளுக்கு துரோகம் செய்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஆம் ! தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தி.மு.கவே வழி வகுத்துக் கொடுக்கிறது என்பது போல் சில நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று...!!

Friday, April 16, 2010

இந்த மாதம் சிற்றிதழில் நான் எழுதியது

ஏப்ரல் மாத சிற்றிதழில் நான் எழுதிய படைப்புகள்

வட்டி கொடுக்கும் சேமிப்பு வங்கி கணக்கு - வெள்ளிநிலா, மாத இதழ்

**

Lemon Tree - உலக சினிமா விமர்சனம் - கல்வெட்டு பேசுகிறது, மாத இதழ்.

**

முதியோர் இல்லம் (சிறுகதை)
கோத்தி, எரிப்பொருள் - குறும்பட விமர்சனம்

- நம் உரத்தசிந்தனை, மாத இதழ்

**

ஹைக்கூ கவிதை

"மரத்தை வெட்டாதே"
வாசகம் கண்டேன்
அச்சடித்த காகிதத்தில்

சென்ற மாத கவி ஓவியா இதழில் நான் எழுதிய ஹைக்கூ கவிதைக்கு சிறந்த ஹைக்கூ கவிதை பரிசு பெற்றுள்ளது.

என் பதிவை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு நன்றி !!

Thursday, April 15, 2010

ஒரு குழந்தையின் டைரி : தொலைந்தவன் (பகுதி - 5)



நீங்கள் யாரவது சிறு வயதில் பள்ளியில் தொலைந்து போனதுண்டா ? மீண்டும் கிடைத்து பெற்றோர்களிடம் அடி வாங்கியதுண்டா ? ஒரு நாள் உங்களை பள்ளியில் எல்லோரும் தேடியதுண்டா ? இப்படி ஒரு அனுபவம் உங்களுக்கு இருந்தால் நிச்சயமாக நீங்கள் அதிஷ்டசாலி.

அன்று பள்ளி முழுக்க நீங்கள் தான் ஹீரோ. இவன் தான் அந்த பையன் ? என்று விசாரிப்பார்கள். “ஏன்டா தம்பி இப்படி பண்ண” என்று அறிவுரை கூறுவார்கள். டிச்சர், ஹெட்மாஸ்டர், பிரன்ஸ்பால் முதல் கொண்டு ஓவர் நைட் பிரபலமாகிவிடலாம்.

என்னுடைய சிறு வயதின் வீர சாகசங்கள் என்று சொல்ல விரும்பினால் குறிப்பாக இந்த சம்பவத்தை சொல்ல வேண்டும். சாகசத்திற்கு வயது என்று ஒரு தடையில்லை. இந்த சாதனையை நான் நிகழ்த்திய போது எனக்கு வயது ஐந்து ! ( யூ.கே.ஜி படித்த போது). ஓவர் நைட்டில் பள்ளி முழுக்க 'கண்ணனா..! யூ.கே.ஜி படிக்கிறானே அவன் தானே' என்று சொல்லும் அளவிற்கு கொண்டு சென்றது.

இன்று திருச்சியில் ரொம்ப நல்ல பெயர் வாங்கிய வெஸ்ட்ரி ஸ்கூலில் படித்துக் கொண்டு இருந்தேன். பள்ளி முடிந்ததும் ஆட்டோக்காரன் வந்து எல்லோரையும் அழைத்து சென்று வந்தார். எல்லோரும் ஆட்டோவில் ஏறினோம். கொஞ்ச நேரத்தில் நான் குடிக்க தண்ணி பிடித்து வருவதாக சொல்லி கிளம்பினேன். நான் சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொண்டாரா என்று தெரியவில்லை. நான் தண்ணி படித்து வந்த போது அங்கு ஆட்டோ இல்லை. அங்கும் இங்கும் தேடிப்பார்த்தும் என்னுடன் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் யாருமில்லை.

பள்ளி வெளியே வந்து பார்த்தேன். தெரிந்தவர்கள் யாருமில்லை. இன்னும் கொஞ்சம் தூறம் பார்க்கலாம் என்று நடந்து நடந்து தென்னூர் வந்துவிட்டேன். குறைந்தது என் பள்ளியில் இருந்து தென்னூருக்கு 3 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். ஐந்து வயது சிறுவன் பஸ், லாரி போகும் மெயின் ரோட்டில் நடந்து வந்தது இப்போது பெரிய விஷயம் இல்லை என்றாலும் அப்போது பெரிய விஷயமாக தான் எனக்கு தெரிந்தது.

என் பெரியப்பா வீடு தென்னூரில் இருப்பதால் அங்கு சென்றேன். நான் பள்ளியில் இருந்து பெரியப்பா வீட்டுக்கு செல்லும் நேரத்தில் ஆட்டோக்காரர் என்னை பள்ளி முழுக்க தேடியும் கிடைக்கவில்லை என்று என் அப்பாவுக்கு போன் போட்டு சொல்லியிருக்கிறார். அப்பா பள்ளி மேலாளரிடம் விசாரிக்க ஆளுக்கு ஒரு பக்கம் என்னை இரண்டு மணி நேரம் தேடியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த பெரியப்பா அப்பாவிடம் நான் அவர்கள் வீட்டில் இருக்கும் தகவலை கூறினார்.

அவ்வளவு தான் ! அன்று நான் வாங்கிய அடி இன்றளவும் மறக்காமல் ஒரு கட்டுரை எழுதும் அளவிற்கு செய்துள்ளது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த நாள் பள்ளியில் நான் தான் ஹீரோ ! பள்ளியில் வேலை செய்யும் அய்யம்மா முதல் பிரின்ஸ்பால் வரை என் பெயர் பிரபலமானது.

ஒரு முறை, அப்பா திருச்சியில் இருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கிய சமயத்தில் டி.சி வாங்கி சென்னை படிக்க பள்ளி தேடினோம். அப்போது திடீர் என்று அப்பா சென்னைக்கு செல்ல ஒரு வருடம் தள்ளி போனது. மீண்டும் அதே பள்ளியில் அட்மிஷன் கிடைக்க நான் செய்த இந்த சாதனை தான் எனக்கு உதவியது.

இன்று பல வீட்டில் குழந்தைகள் வீட்டிலே ஒழிந்துக் கொண்டு பெற்றோர்களை பதர வைப்பது குழந்தைகளுக்கு விளையாட்டாக இருக்கும். ஆனால், அவர்கள் கிடைக்கும் வரை பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய தவிப்பு கொடுக்கும் என்பதை என் மகன் கட்டில் அடியில் ஒழிந்துக் கொள்ளும் போது என்னால் உணர முடிந்தது.

Wednesday, April 14, 2010

குறும்படம் : இப்படிக்கு பேராண்டி, பூங்கா

இப்படிக்கு பேராண்டி

அடுத்த தலைமுறைக்கு அம்மா, அப்பா தவிர மற்ற உறவு முறைகளின் பெயர் தெரியுமா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு கூட்டு குடும்பம் மறைந்து தனி குடித்தனம் வளர்ந்து விட்டது. அப்படி, தனி குடித்தனம் நடத்து தம்பதியர்களின் பிள்ளைகள் தாத்தா, பாட்டி பாசத்திற்காக ஏங்கும் கதை தான் 'இப்படிக்கு பேராண்டி'.

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக, குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம். அதனாலே, குழந்தைகளின் உலகிற்கு சென்று வாழ்ந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். வகுப்பில் மற்ற பிள்ளைகள் தாத்தா பாட்டி சொன்னதை கேட்பதாகட்டும், தாத்தா பாட்டி வேண்டும் என்று போராட்டம் நடத்துவது போல் கற்பனை செய்வதாகட்டும், பெற்றோர்களுக்கு தெரியாமல் அறையில் செய்யும் குறும்பு வேலையாகட்டும். எல்லாம் குழந்தைகளின் மனம்.

குழந்தைகளின் மீது பெற்றோர்கள் தினிக்கும் கனவுகளுக்கும் நல்ல அறிவுரை கூறியுள்ளார். குழந்தைகளுக்கான குறும்படம் என்பதால் கதையில் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்திருக்க வேண்டும். இதில் நகைச்சுவைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

'இப்படிக்கு பேராண்டி' - பெற்றோர்கள் படிக்க வேண்டிய கடிதம்.

***

பூங்கா

'இப்படிக்கு பேராண்டி' நடித்த அதே சிறுவன், சிறுமி. பூங்காவில் விளையாட வேண்டும் என்ற கனவில் வாழும் சிறுவனுக்கு, பக்கத்து வீட்டில் வரும் அக்கா மூலம் அவன் வீட்டு அருகில் ‘பூங்கா’ வருகிறது. ஆனால், அதுவே அவன் தங்கி இருக்கும் வீட்டுக்கு ஏமனாகவும் மாறுகிறது.

குழந்தைகளுக்கான குறும்படம் என்று சொல்லி பெரியவர்களில் ஆதிக்கம் தான் தெரிகிறது. தனக்கு மனது கவலைப்படும் போது கோயிலுக்கு வந்து, கடவுள் முன் வேண்டி தரையில் எழுதுவதாகவும் கூறி அந்த கதாபாத்திரத்தின் முதிர்ச்சியை காட்டுகிறார். அதே சமயம் மனலில் பூங்கா வைத்து விளையாடும் போது மனதையும் காட்டியிருக்கிறார். இரண்டும் முரன்பாடாக உள்ளது.

ஏழை சிறுவன் 'பூங்கா' என்று சொல்லுவதில் பெரிதாக தெரியவில்லை. ஆனால், பணக்கார சிறுமி அதுவும் கான்வேன்ட்டில் படிப்பவள், 'பார்க்' என்று சொல்லாமல் 'பூங்கா' என்று சொல்லுவது செயற்கை தனம்.

தினமும் சிறுவனுக்கு படமும், சாக்லேட்டும் கொடுக்கும் அக்காவுக்கு, தான் ஆசையாக வளர்த்த நாய் கொடுத்து விட்டு செல்லும் காட்சி மனதை உறுக்க வைத்திருக்க வேண்டும். ஆனால், பெரிதாக அப்படி ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. சில வசனங்களுக்கு வேலை வைக்காமல் காட்சிகளிலே புரிய வைத்திருக்கிறார். குறிப்பாக, சிறுவன் வீட்டு விலை பேசும் போது சிறுவர்களின் சேஸ் விளையாட்டை காட்டி புரிய வைத்திருப்பதை சொல்லலாம்.

மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு குறும்படத்தை இயக்கியவர் தாண்டவக்கோன்.

குறும்படத்தை வாங்க விரும்புபவர்கள் கீழ் காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

தாண்டவக்கோன்
பூங்கா திரை தடம்,
6, திருவள்ளுவர் நகர்,
திருப்பூர் - 641 603
பேசி : 9360254206

Tuesday, April 13, 2010

இரண்டு நூல் விமர்சனம்



காந்தி வாழ்ந்த தேசம் மற்றும் என்னை எழுதிய தேவதைக்கு நூல் விமர்சனம் 'நம் உரத்தசிந்தனை', ஏப்ரல் மாத இதழில் வெளிவந்துள்ளது.

195 ரூபாய் மதிப்புள்ள 4 சிறுகதை தொகுப்பு நூல்களை 180 ரூபாய்க்கு வாங்க.... இங்கே

Monday, April 12, 2010

படித்ததும் பார்த்ததும் - 12.4.10

10 ஆண்டுகளாக ஏழை புற்று நோயாளிகளுக்கு 'ஸ்ரீ மாதா டிரஸ்ட்' சேவை செய்து வருகிறது. புற்று நோயில் "கடைசிக்கட்ட நோயாளிகள்" என்று ஒதுக்கப்பட்ட பல ஏழைகள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யலாமே !

நிர்வாகி : வி.இருஷ்ணமூர்த்தி (94440 01065)

உங்கள் நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி :

ஸ்ரீ மாத டிரஸ்ட்,
ராஜஸ்தானி தர்மசாலா,
பழைய கேன்சர் பேங்க் ரோடு,
காந்தி நகர்,
அடையாறு, சென்னை - 20
போன் : 2442 0727 / 2440 4950

**

9/11 தாக்குதல் பற்றி எத்தனையோ செய்திகள், விசாரனை,வதந்தி பற்றி கேள்விப்பட்டுயிருப்பீர்கள். சமிபத்தில் படித்த தகவல் என்னை அதிகம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, 9/11 தாக்குதலில் அமெரிக்காவில் சதி வேலை இருக்கிறது என்பது தான் அந்த தகவல்.

இரட்டை கோபுரத்தை மேல் பகுதியை தாக்கிய விமானம் எப்படி பக்கத்தில் இருக்கும் எந்த கட்டிடத்துக்கும் சேதாரமில்லாமல் உள்ளுக்குள்ளே சரிந்து விழுந்தது என்ற கேள்வி சிந்திக்க வைக்கிறது. இந்த தளத்தில் இருக்கும் பல தகவல்கள் நமையும் அமெரிக்கா மீது சந்தேகப்பட வைக்கிறது. அதே சமயம் குழப்பமாகவும் இருக்கிறது.

நீங்கள் படித்து குழம்புங்கள்.... இங்கே....

***

ஒரு போராளியின் நாட் குறிப்புகள் பயங்கரமானதகவும், இரத்த கரை படிந்ததாகவும், லட்சியத்தை நோக்கி பயணிக்கும் கதையாக தான் இருக்கும். ஆனால், எர்ன்ஸ்டோ கேகுவேராவின் 'மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்' ( கனவிலிருந்து போராட்டத்திற்கு - 1) நூல் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் குறிப்புகளாக இருந்தாலும் காதல், நட்பு போன்ற பல எண்ண ஓட்டங்களை பிரதிபலித்துள்ளது.

கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள் மட்டுமல்ல, அடுத்தவர் டைரி படிக்கும் ஆர்வமுடையவர்கள் கூட இந்த புத்தகத்தை படிக்கலாம்.

விலை. 90. பக்கங்கள் . 182
விடியல் படிப்பகம்
கோயம்புத்தூர் - 641015

***

இரண்டு வருடங்களாக 'வருது...வருது..' என்று சொல்லிக் கொண்டு இருந்த 'கேப்டன் டி.வி' ஒரு வழியாக (முன்னாள்) தமிழ் புத்தாண்டில் வரப் போகிறது. ஒரு கட்சியின் டி.வி எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. எப்படியோ அரசியலில் விட்ட பணத்தை இதில் எடுக்கிறார்களோ என்று பார்ப்போம்.

இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு பேசாம ஒரு ஐ.பி.எல் டீம் வாங்கியிருந்தா ஒரு வருஷத்துல லாபம் பார்த்திருக்கலாம்.

***

என்ன ஒரு சிந்தனை ?

வட இந்திய நடிகர்கள்
கிரிக்கெட்டில் முதலீடு போட்டு லாபம் பார்க்கிறார்கள் !
தென் இந்திய நடிகர்கள்
அரசியல் பற்றி பேசி லாபம் பார்க்க முயற்சிக்கிறார்கள் !!

Friday, April 9, 2010

உதவி தேவை !!

"நீங்க ப்ளாக் எழுதுவீங்களா ! அதுல நீங்க எழுதுனா நிறைய பேர் கமன்ட்ஸ் போடுவாங்க ! உங்க எழுத்த பத்தி நீங்களே தெரிஞ்சுக்குவீங்க..." என்று ஒரு சந்திப்பில் நண்பர் ஒருவர் கூறினார். அதன் பிறகு பல வலைப்பதிவுகளை வாசித்தேன். ஒரு எழுத்தாளனாக வர துடிப்பவனுக்கு ப்ளாகின் அவசியத்தை உணர்ந்தேன். அப்படி வலைப்பதிவின் முக்கியதுவத்தை சொன்னவர் முத்துராமன்.

கிழக்கு பதிப்பகத்தில் ஆரம்ப காலத்தில் எனக்கு அறிமுகமானவர். நெருங்கி பழக்கம் இல்லை என்றாலும், நான் எழுதிய "கலிலீயோ கலிலி" எடிட்டிங் பார்த்தவர் என்ற முறையில் பல முறை பேசியிருக்கிறோம்.

அவர் இப்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். டயாலிஸி்ஸுக்கான மருத்துவச் செலவு, கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு என்று லட்ச கணக்கில் ரூபாய் தேவைப்படுகிறது.

பலபேர் உதவினால் மட்டுமே சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் என்கிற நிலைமை. எனவே உங்களால் முடிந்த தொகையை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறு உதவியாக இருந்தாலும் அது நிச்சயம் நண்பரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இது தொடர்பாக உதவக்கூடிய டிரஸ்டுகளில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தாலும் சொல்லவும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com 9841489907
பாலபாரதி – kuilbala@gmail.com 99402 03132
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch –
A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :
முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

Thursday, April 8, 2010

தினமலர் விமர்சனம்


சங்கர் நாராயண் எழுதிய “லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகத்தை பற்றிய விமர்சனம் ஞாயிறு தினமலரில் (4.4.10) வெளிவந்துள்ளது.

நூல் வாங்க.... இங்கே

Wednesday, April 7, 2010

சமூக கவிதைகள்

பதிநான்கு

உழவர் எல்லாம் புன்னகை சிந்தும்
- ஜனவரி பதிநான்கு
தமிழர்கள் எல்லாம் பெருமைக் கொள்ளும்
- ஏப்ரல் பதிநான்கு
குழந்தைகள் உதட்டில் இனிப்பு மிதக்கும்
- நவம்பர் பதிநான்கு
காதலர்கள் எல்லாம் பூக்கள் ஏந்தும்
- பிப்ரவரி பதிநான்கு

மகிழ்ச்சியான உள்ளங்களை
அஞ்சி நடுங்க வைக்கும்
- டிசம்பர் ஆறு....... !!

***

அன்றும் இன்றும்

1940

தேவை - புரட்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள்
ஊதியம் - மரணம்
பரிசு - வீரத்தியாகி என்ற பட்டம்
பேன்ஷன் - இந்திய விடுதலை
பணியாற்றும் இடம் - இந்தியா

2010

தேவை - கணிப்பொறி கற்ற இளைஞர்கள்
ஊதியம் - மாதம் ஒரு லட்சம்
பரிசு - வெளிநாட்டு கிரீன் கார்ட்
பேன்ஷன் - சுக போக வாழ்க்கை
பணியாற்றும் இடம் - அமெரிக்கா

1940 ல்
நாட்டுக்காக வாழ்க்கையை இழந்தோம் |
2010 ல்
சுகபோக வாழ்க்கைகாக நாட்டை இழந்தோம் |

***



லஞ்சம்

கையேந்தி
யாசகம் கேட்டான்
பிச்சைக்காரன்
ஒன்றும் கிடைக்கவில்லை...


அதிகாரத்துடன்
அதட்டிக் கேட்டான்
அரசாங்க அதிகாரி
கிடைத்தது
ஒரு லட்சம் !

Monday, April 5, 2010

படித்ததும் பார்த்ததும் - 5.4.10

நேற்று(4.4.10) காலை 9 மணிக்கு, விஜய் டி.வியில் புது டாக் ஹோ 'நாளும் நமதே' என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பினார்கள். அதில் ஒரு யுவதி, இந்தியாவில் 70% சதவீத இளைஞர்களுக்கு 'AIDS' இருப்பதாக சொன்னதும் என்னை தூக்கி வாரிப்போட்டது. பிறகு, Arrears In Different Subject என்ற விளக்கம் சொன்னவுடன் கூட்டத்தின் ஆரவார கை தட்டல்கள் ஒலித்தது.

ஒரு இளைஞன், "20 வருடங்கள் முன்பு அரசாங்கம் கல்வி நிறுவனங்களையும், தனியார் மது கடையையும் நடத்தியது. ஆனால், இப்போது அரசாங்கம் மது கடையையும், தனியார் கல்வி நிறுவங்களையும் நடத்தி வருகிறது" என்றார். இதற்கும் பலத்த கைதட்டல்.

இதுவும் இன்னொரு டாக் ஷோ என்று இல்லாமல் சில வித்தியாசமாக உத்தியை கையாண்டு இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் சிறப்பாக பேசிய நான்கு பேச்சாளரை தேர்வு செய்து அவர்கள் முன் உண்மையான பிரச்சனை முன் வைத்து தீர்வு கேட்கிறார்கள். இந்த பகுதி கண்டிப்பாக பேச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அரம்ப காலத்தில் விசுவின் 'அரட்டை அரங்கத்தை இயக்கிய 'உதயம்' ராம் அவர்கள் இந்த நிகழ்ச்சியை இயக்குகிறார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தேர்தல் அணையர் டி.என்.சேஷன் அவர்கள் கலந்துக் கொண்டார். தொகுத்து வழங்கியவர் மதன் பாப். ( நகைச்சுவை டைமிங் வர மாட்டேன் என்ற்கிறது.)

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள். தொடர்பு கொள்க.... 'உதயம்' ராம் - 94440 11105

***

நேற்று தினதந்தியில் 'போலி சாமியார்கள்' பற்றிய கட்டுரை படித்தேன். பிரேமானந்தா, ஷிவ் முராத் திவிவேதி, ஸ்ரீகுமார் முதல் சமிபத்திய நித்யானந்தா வரை குறிப்பிட்டு இருந்தார்கள். இதில், நடிகையுடன் தொடர்பு வைத்து கொண்ட சாமியார்களில் நிதியானந்தாவுக்கு சீனியர் சாமியார் பற்றி குறிப்பிடவில்லை. எல்லாம் 'அவாள்' செயல் என்று புரிகிறது.

***

ஒரு வழியாக புத்தக கண்காட்சி வாங்கிய எல்லா புத்தகங்களையும் படித்து முடித்தேன். 'Prodigy' வெளியீட்ட உலக எழுத்தாளர்களின் நாவல், சிறுகதை நூல்கள் மொத்தம் 24 நூல்களை வாசித்தேன். எல்லா நூல்களும் மிக நன்றாக எளிமையாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். சிறு வயதில் ஆங்கில பாட புத்தகங்களில் கேட்ட கதை, படிக்க தவறிய கதை மீண்டும் தமிழில் படிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்.

***

'IPL' கிரிக்கெட் காய்ச்சல் இணையத்தையும் விட்டு வைக்கவில்லை. நீங்களும் 'IPL' கிரிக்கெட் விளையாடலாம். கீழ் காணும் தளத்தும் உங்களுக்கு விருப்பமான ஒரு அணியை தேர்வு செய்து மற்ற ஏழு ஐ.பி.எல் அணியுடன் விளையாட வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு.

10 ஓவரில் 180 ரன் மேல் எடுக்க வேண்டும் என்று கடின இழக்கை கொடுக்கிறது. விளையாட விளையாட பழகிவிடும். அலுவலகத்தில் சும்மா இருப்பவர்கள் விளையாடி பாருங்கள்.

www.stickcricket.aol.in/gamepremierleague.php

LinkWithin

Related Posts with Thumbnails