வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label நாகரத்னா பதிப்பகம். Show all posts
Showing posts with label நாகரத்னா பதிப்பகம். Show all posts

Monday, October 17, 2016

பதிப்பகம் தொடங்கும் ஆசை ?

எப்பொதெல்லாம் பதிப்பகம் தொடங்கும் ஆசை வருகிறதோ, அப்போதெல்லாம் ‘நாகரத்னா பதிப்பகம்’ சார்பாக வெளியிட்டப் புத்தகங்களை பார்ப்பேன். மீண்டும் பதிப்பகம் தொடங்கும் ஆசை பறந்துவிடும்.

கடந்த இரண்டு மூன்று மாதமாக மீண்டும் பதிப்பகம் தொடங்க வேண்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம், நான் எழுதி கொடுத்த நூல்களை பதிப்பகங்கள் உரிய நேரத்தில் வெளியிடாமல் இருப்பது தான். ஏறக்குறைய எட்டு நூல் நான்கு பதிப்பகத்திடம் வெளியிடப்படாமல் இருக்கிறது. எப்போது வெளியிடுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத ரகசியம்.

இதனால், அடுத்த எழுதிய இரண்டு நூலை எந்தப் பதிப்பகத்திடமும் கொடுக்கவில்லை. மீண்டும் பதிப்பகம் தொடங்கி நாமே வெளியிடலாமா என்ற சிந்தனை வருகிறது. பணம் பிரச்சனை இல்லை. அச்சடிக்கும் நூல்களை வைப்பதற்கு இடம் இல்லை. முந்தைய நூல்கள் இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் படித்த புத்தகங்கள் வைப்பதற்கு கூட இடமில்லாமல், நாகரத்னா பதிப்பக நூல்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டியதாக இருக்கிறது. அதையும் மீறி சென்னை மழையில் சில நூறு பிரதிகள் பாதிக்கப்பட்டது. அப்படியாவது புத்தகம் செல்கிறதே என்று நினைத்து சந்தோஷப்படும் மனநிலை இருக்கிறேன்.

பதிப்பகம் தொடங்கும் ஆசை குறைத்துக் கொள்வதற்காக, என் வீட்டை ஆக்கிரமித்திருக்கும் நாகரத்னா புத்தகத்தை எண்ணிக்கை வெளியிடுகிறேன்.



2012ல் வெளிவந்த புத்தகங்கள் Stock விபரங்கள்…
கேபிளின் கதை – 748 
என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிக்குமார் - 596 
பிணம் தின்னும் தேசம் – 412 
விழிப்பறி கொள்ளை – 333

2010ல் வெளிவந்த புத்தகங்கள் Stock விபரங்கள்… 
டைரிக்குறிப்பு காதல் மறுப்பும் – 524 
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் – 258

2010 முன்பு வெளியிட்ட நூல்கள்… 
எனது கீதை – 488 
என்னை எழுதிய தேவதைக்கு - 56 

நாகரத்னா பதிப்பகத்தில் 300-500 பிரதிகள் அச்சத்தடித்த நூல்கள் லாபம் தரவில்லை என்றாலும், பெரிய நஷ்டம் கொடுக்கவில்லை. மேல் குறிப்பிட்ட அனைத்து நூல்களும் 1000 பிரதிகள் அடித்தது. நஷ்டம் ஏற்படுத்தியதை விட இடம் ஆக்கிரமிப்பை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

என் புத்தகம் இத்தனை பிரதிகள் விற்பனையாகியிருக்கிறதா என்று எழுத்தாளர்கள் சந்தோஷப்பட வேண்டாம். என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிக்குமார், லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும், என்னை எழுதிய தேவதைக்கு… இந்த மூன்று நூல் மட்டும் தான் எனக்கு Breakeven கொடுத்தது (லாபம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க). 

சென்னை மழையில் கொஞ்சம், சில புத்தக விற்பனையாளர் ஸ்வாகா செய்தது கொஞ்சம் என்று காணாமல் போன பிரதிகளை கணக்கில் கொண்டு வரவில்லை. அதுவெல்லாம் போக கையில் இத்தனை பிரதிகள் இருக்கிறது. இதையெல்லாம் எப்படி காலி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்கி வருவதால், பல எழுத்தாளர்கள் சொந்தப் பதிப்பகம் தொடங்குவார்கள். அவர்களுக்கு ஒரு ப்ரீ அட்வைஸ்… 1000 பிரதிகள் அடிக்க வேண்டாம். அதே சமயம் POD மூலம் 200-300 பிரதிகள் அடிக்க வேண்டாம். 500 பிரதிகள் அச்சடித்து என்னால் விற்பனை செய்ய முடியும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே பதிப்பகம் தொடங்கலாம். இந்த நம்பிக்கையில் கொஞ்சம் குறைவதாக உங்களுக்கு தோன்றினாலும், உங்கள் பழைய பதிப்பகத்தோடு சமசரமாக சென்று கொடுக்கும் ராயல்டியை வாங்கிக் கொள்ளுங்கள். 

ராயல்டி பிரச்சனைக்காக வேறு பதிப்பகம் சென்று, இரண்டு மூன்று பதிப்பகம் மாற்றி… கடைசியில் பழைய பதிப்பகத்திடம் சரணடையும் கதை இங்கு ஆயிரம் உண்டு. ( பல பிரபல எழுத்தாளர் ஒரு ரவுண்ட் அடித்து, கடைசியில் தங்கள் பழைய பதிப்பகத்தில் தஞ்சமடைந்திருப்பதை கவனத்தில் கொள்க !) 

இந்த பதிவில் எனது எழுத்தாளர்களை குறைச் சொல்ல விரும்பவில்லை. அது என் நோக்கமுமில்லை. பதிப்பகம் தொடங்குவது விளையாட்டான விஷயமில்லை. வரும் லாபத்தை விட இரண்டு மடங்கான உழைப்பை கொட்ட வேண்டும். நஷ்டத்தை விட அதிகமாக நம்மை பாதிப்பது விற்பனையாக புத்தகங்கள். இந்த இரண்டு விஷயத்தை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். 

பதிப்பகம் தொடங்குவது… வியாபாரிகளின் வேலை. வியாபார சிந்தனையில்லாத எந்த எழுத்தாளரும் பதிப்பகம் தொடங்கினால் நிலைமை இதுவாக தான் இருக்கும். 

பின்குறிப்பு : இந்த பதிவை எழுதிய நான் விரைவில் புது பதிப்பகம் தொடங்கினால், அதற்கு காரணம் நானல்ல… என் பதிப்பகங்கள் .

Thursday, April 10, 2014

நாகரத்னா பதிப்பகம் - Book Clearance Sales

வீ கேன் ஷாப்பிங் இணைய விற்பனை, சினிமா, எழுத்துலகம் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால் தொடர்ந்து நாகரத்னா பதிப்பகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், அடுத்த இரண்டு ஆண்டுகள் பதிப்பக வேலையை ஒத்திவைக்கிறேன்.

கையிருப்பு புத்தகங்களை அப்படியே விற்பனைக்கு யாராவது எடுத்துக் கொள்வதாக இருந்தால் நன்றாக இருக்கும். புத்தகக் கடைகளுக்கு, பள்ளிகளுக்கு பரிசளிக்க விரும்பு நண்பர்கள் என்னை அனுகலாம். 50-60% வரை கழிவு (உற்பத்தி தொகையில்) வழங்கப்படும்.

ஒரு புத்தகம், இரு புத்தகம் ஆர்டர் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. குறைந்தது ரூ.1000க்கு வரையில் ஆர்டர் இருக்க வேண்டும்.

 குகன்
தொடர்புக்கு : 9940448599
மின்னஞ்சல் : tmguhan@yahoo.co.in

*

கையிருப்பு இருக்கும் புத்தகங்கள்.

பொது

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - ஜீவா - ரூ.70
கேபிளின் கதை - கேபிள் சங்கர் - ரூ.100
எனது கீதை - குகன் - ரூ.40
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி - கனியன் செல்வராஜ் - ரூ.10

சிறுகதை

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா - ரூ.50
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - கேபிள் சங்கர் - ரூ.50 

கவிதை

விழிப்பறி கொள்ளை - உமா சௌந்தர்யா  - ரூ.40
பிணம் தின்னும் தேசம் - சண்முகசுந்தரம் - ரூ.40
தமிழனும் இந்தியனே - கனியன் செல்வராஜ் - ரூ.40
இயற்கையைக் காப்போம் - 50 கவிஞர்கள் எழுதிய தொகுப்பு - ரூ.40

குறிப்பு : புத்தகத்தின் விலையை குறைத்துக் கொடுப்பதால் அதன் தரம் குறைந்தது என்ற அர்த்தமில்லை. 

ஒரு புத்தகம் பெறுவதாக இருந்தால் www.wecanshopping.com இணையம் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், 20% - 40% கழிவு தான் வழங்கப்படும்.

Friday, January 25, 2013

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - விமர்சனம்

இந்த வாரம் குமுதத்தில் வெளியான "என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார்" நூலின் விமர்சனம்.

  







Friday, January 11, 2013

சென்னை 36வது புத்தகக் கண்காட்சிக்கு வாங்க !

நாகரத்னா பதிப்பக நூல்கள் கிடைக்குமிடம்.....

டிஸ்கவரி புக் பேலஸ் - எண். 43-44
இருவாட்சி இலக்கிய துறைமுகம் : எண். 554
மதி நிலையம் - எண் 34 - 35
கௌதம் பதிப்பகம் - எண் 283
பாலவசந்தா பதிப்பகம் - எண் 138

Friday, January 4, 2013

கேபிளின் கதை மற்றும் கே.எஸ்.ரவிகுமார் நூல் விமர்சனங்கள்

கேபிளின் கதை

பொதுவாக யாரும் அவர்கள் சார்ந்த துறையைப் பற்றி எழுத முன் வருவதில்லை. அந்த வகையில் கேபிள் சங்கர் தனது கேபிள் ஆப்ரேட்டர் அனுபவத்தை ஒளிவு மறைவு இல்லாமல் துணிந்து சொல்லியிருக்கிறார். கேபிளின் ரிஷிமூலத்திலிருந்து ஆரம்பித்து, கண்டிஷனல் ஆக்ஸஸ் சிஸ்டம், ட்ராய், அரசு கேபிள் என்று அதன் முழுக் கதையையும் வருங்காலத் தலைமுறைகளுக்குப் புரியும் படி சொல்லியிருக்கிறார்.

வெறும் அனுபவங்கள் என்ற அளவில் நிற்காமல் கேபிள் டி.வி தொழில் நுட்பத்தில் ஊடுருவியிருக்கும் அரசியலையும் சொல்லியிருப்பது தான் நூலின் வெற்றி. அரசு மற்றும் தொலைக்காட்சி நிறுவங்கள் எப்படி வருமானத்தை இழந்து வருகின்றன என்பதைக் கூறியதோடு, எப்படி லாபம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையையும் முன் வைக்கிறார்.



இணையத்தில் நூல் வாங்க...

நன்றி : குமுதம் ( 9.1.13)

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் 

பிரபல டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பற்றி அவருடைய துணை டைரக்டர் ஜே.டி.ஜீவா எழுதிய புத்தகம்,. ரவிகுமாரின் சிறப்புக்களைப் பற்றி எழுதியிருப்பதுடன் பட உலகம் எப்படி செயல்படுகிறது என்பதையும் விளக்கியிருக்கிறார். சினிமா டைரக்டர்களின் பொறுப்புகள் என்ன, படம் தயாரிப்பது என்றால் அதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் இந்நூல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ரவிகுமார் திட்டமிட்டு செயல்படுவதாலும், குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிப்பதாலும் அவரால் நஷ்டம் அடைந்த பட அதிபர்கள் எவரும் இல்லை என்றும் கூறுகிறார் ஜீவா. படிப்பதற்கு சுவையான புத்தகம்.


இணையத்தில் நூல் வாங்க...

நன்றி : தினத்தந்தி (26.12.12)

Wednesday, December 5, 2012

தமிழனும் இந்தியனே ! - எதிர்வினை



அன்பிற்குரிய குகனுக்கு,

என் உடல் நிலை சற்று சரியில்லாததால் நிகழ்ச்சிக்கு வர இயலாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உணர்ச்சிகளின் வெளிபாடு கவிதையாகிறது. பீரிட்டு கிளம்பும் பிரவாகப் பெருக்கை ஒரு வடிவத்துக்குள் அமைப்பது கவிதை. இவ்வுல்கில் எத்தனையோ தரப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கலாம். அதன் பாதிப்பு கவிதையாகக் வெடிக்கலாம். பாரதி எப்படியெல்லாம் பாடியுள்ளான். பூனைக்குட்டியிலிருந்து பூகோலப்படத்தில் காணப்படும் நாடுகளை எல்லாம் தொட்டுவிட்டான். வசன கவிதைக்கு வழிகோலியவனும வந்தான். வாழையடி வாழையாக வரும் கவிஞர் கூட்டம் வரவேற்ப்பிற்க்குறியதே !

"தமிழனும் இந்தியனே! " என்னும் கனியன்செல்வராஜின் நூலை நாகரத்னா பதிப்பகம் வேளியிட்டுள்ளது. அட்டையைப் பார்த்தால் வலைஞர்களின் கவலையைக் கண்முன் நிறுத்தும் கருத்தைக் கொண்ட நூலோ அல்லது உழைப்பாளிகளின் அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் நூலோ என எண்ணத்தோன்றுகிறது.

64 பக்கங்களில் 29 கவிதைகள் இடம் பெற்றுள்ளன . பெயருக்கேற்றபடி முதல் கவிதை நன்றாக உள்ளது. "நீயும் கடவுளாகலாம்" நல்ல சிந்தனை. "தொடரும் பாவத்தின் நீட்சிகள்" என்ற கவிதையின் கடைசி வரிகள் நன்று.

கண்ணகி சிலைக்குப்பின்னாலேயே ஏதேதோ நடக்கும் போது "காந்திசிலைக்குப்பின் நடப்பதற்க்கென்ன? தமக்கையின் துயரம் தம்பிமூலம் பெற்றோர்க்குத் தெரிய வேண்டாம் எண்ணும் தவிப்பை விழி பேசியவார்த்தைகளில் உணரமுடிகிறது. அன்பான மனைவியின் மடிமீது தலைவைத்துப் படுத்தலே அனைத்துக் கவலைகளையும் மறந்து நிம்மதியாக தூங்களாம். புனர்ந்தாக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசிரியரின் இரண்டாவது ஆவது கவிதை நூல் என அறிகிறேன்.

எளிய தமிழ் சொற்கள் ஏராளமாய்க் கொட்டிக்கிடக்கையில் ஆங்கிலச் சொற்களை நாடுவது தேவையில்லை. "மொழியே நம்முடைய அடையாளம்" என்று பாடலாசிரியர் யுகபாரதி அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சொல்லப்படும் பொருள் தெளிவாகவும் எளிதில் விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆசிரியரின் முயற்சியையும் ஆர்வத்தையும் பாரட்டுகிறேன்.

 நாகரத்னா பதிப்பகம் மக்களுக்குப் பயன்படும் தரமான நூல்களை எப்போதும் போல் தொடர்ந்து வெளியிட வாழ்த்துகிறேன். 

அரிமா இளங்கண்ணன் 
 வழக்கறிஞர் 
16/11/12

Thursday, November 1, 2012

நாகரத்னா பதிப்பகத்தின் 7 நூல்கள் வெளியீடு !

வரும் நவம்பர் 17 அன்று மாலை 5 மணிக்கு, தி.நகர் தக்கர் பாபா அரங்கில் நாகரத்னா பதிப்பகத்தின் 7 நூல்கள் வெளியிடப்படுகிறது.


கேபிளின் கதை - கேபிள் சங்கர் 
ரூ.100



 என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - ஜே.டி.ஜீவா
ரூ.70


தமிழனும் இந்தியனே ! - கனியன் செல்வராஜ் 
ரூ.40


இயற்கையைக் காப்போம் - தொகுப்பு : குகன்
ரூ.40




உலக சினிமா : ஒர் பார்வை - குகன் ( கௌதம் பதிப்பக வெளியீடு)
ரூ.50



நூல் அறிமுகம்

விழிப்பறி கொள்ளை - உமா சௌந்தர்யா
ரூ.40


பிணம் தின்னும் தேசம் - கருவை. சண்முக சுந்தரம்
ரூ.40



வெளியீடப்படும் நூல்களை முன் பதிவு செய்துக் கொள்ள.... இங்கே

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்களை பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.


வெளியிடப்படும் 7 நூல்களின் விளம்பரப்படம். தங்கள் நண்பர்களுடன் பகிரவும். நன்றி !!

Wednesday, May 16, 2012

14வது நூல் - கவிதைகள் அனுப்பவும் !!!

நாகரத்னா பதிப்பகம் தொடங்கியது முதல்,  வருடத்திற்கு ஒரு நூல் பல எழுத்தாளர்களிடம் கவிதைகள் பெற்று தொகுப்பு நூலாக வெளியீட்டு வருகிறது.

1. காந்தி வாழ்ந்த தேசம் ( பதிப்பக தொடக்க விழாவில் வெளியிட்டோம்)
2. கவிதை உலகம்
3. கலாம் கண்ட கனவு (இரண்டாம் ஆண்டு விழாவில் வெளியிட்டோம்)

இப்போது மூன்றாம் ஆண்டு பயணித்துக் கொண்டு இருக்கும் நாகரத்னா பதிப்பகம் தனது 14வது நூலாக கவிதை தொகுப்பை வெளியிட உள்ளது. இந்த வருடத்தின் தலைப்பு “ இயற்கையைக் காப்போம்”.

கவிதை 24 வரிகள் இருக்க வேண்டும்.

கவிதை ஹைக்கூ, மரபு, புது கவிதை மரபு, நவீனம் என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.5.12

கவிதைகள் To: nagarathna_publication@yahoo.in மற்றும் CC : tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

கவிதை அனுப்புபவர்கள் தங்களின் அலைப்பேசி எண்ணும், முகவரியும் குறிப்பிட்டால் நல்லது. கட்டாயமில்லை.

கவிதைகளை Word doc attachment அனுப்ப வேண்டாம். தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் ஜூன் முதல் வாரத்தில் மின்னஞல் மூலம் தெரிவிக்கப்படும்.

அன்புடன்,
குகன்

Tuesday, May 15, 2012

நீங்கதான் சாவி – மக்கள் குரல் விமர்சனம்


மனிதர்கள் யாரையும் சந்தித்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் போதும். வாழ்க்கையில் ஏதேதோ பிரச்சனைகள், சிக்கல்கள் எனக் கூறுவர். அதனால் என் முன்னற்றமே தடைபட்டு வருகிறது. அதனால் நிம்மதி இல்லை என்று கூறுவதை கேட்க முடிகிறது. ஆனால், எந்த ஒரு பிரச்சினைக்கும், சிக்கலுக்கும் காரணம் நாம்தான் என்பதையும், அதற்கான தீர்வும் நம்மிடமே உள்ளது என்பதையும் பலரும் உணர்ந்ததாக தெரியவில்லை. அதனால் தான், நமது தமிழ் மூதுரையில், ”தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கூறப்படுள்ளது என்பதை எண்ணிப் பார்த்தாலே பொதும். நமது நம்மால் தீர்க்க முடியும் என்பதுடன், வராமலும் தடுத்துக் கொள்ள முடியும் என்பதை அறியலாம். ஆம், நமது சிக்கல்களுக்கான தீர்வு நம்மிடமே உள்ளது. பூட்டுப் போட்டது நாம்தான். எனவே, சாவியும் நம்மிடம் தான் உள்ளது. அதனை முறையாக பயன்படுத்த வேண்டும். தவறவிட்டிருந்தால் தேடி எடுத்து பயன்படுத்த வேண்டும்.



 பென்சில் வாழ்க்கை

 இதனை வலியுறுத்த, ஆசிரியர் சுரேகா ”நீங்கதான் சாவி” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இதற்காக ‘பென்சில் வாழ்க்கை’ என்ற கட்டுரை வரையில் 19\8 தனித்தனி தலைப்புகளில், நாம் செய்யும் தவறுகளையும் அதற்கான தீர்வுகளையும் எளிய தமிழில், பலருக்கு புரியும் எடுத்துக்காட்டுடன் விளக்கி உள்ளார். ’பென்சில் வாழ்க்கை’யில் நாம் நம்மை எப்போதும் கூர்மை படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த, நமக்கு ‘அறிவு விஷயத்தில் போதும்கிற மனசும், பண விஷயத்தில் போதாதுன்கற மனசும் இருக்கு’. அது அப்படியே மாறினா போதும், வெற்றிக்கு நிரந்தர நண்பனா ஆகிடலாம் என்பதை சிறப்பாக கூறியுள்ளார். இது போன்ற பல்வேறு விஷயங்களும் இந்த புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை படித்து முடிக்கும் யாருக்கும் சிறு மாற்றமாவது நிச்சயம் கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.

- மதிவாணன்

நன்றி : மக்கள் குரல் (7.5.12)


இணையத்தில் புத்தகம் வாங்க.... இங்கே

Tuesday, February 14, 2012

கலாம் கண்ட கனவு - நூல் விமர்சனம்




தொகுப்பாசிரியர் : குகன்
ரூ.35, பக்கங்கள் : 64


அப்துல் கலாம் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 45 கவிஞர்கள் இந்நூலில் கவிதை எழுதியுள்ளனர். ஒவ்வொரு கவிஞரின் முகவரியையும் கவிதையோடு தந்திருக்கும் முயற்சி பாராட்டுக்குறியது. அத்துடன் அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகளையும் அவரது சிந்தனைகளையும் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



( நன்றி : நம் உரத்தசிந்தனை (பிப்,2012) இதழ் [பக்.79] )

நூல் வாங்க...

Sunday, February 5, 2012

புதிய புத்தகம் பேசுது !!

பிணம் தின்னும் தேசம் - கருவை சு.சண்முகசுந்தரம்(நாகரத்னா பதிப்பகம் )

ராமேஸ்வரத்தை பூர்விகமாகக் கொண்ட கவிஞர். ஈழம் சார்ந்து குரல் கொடுப்பவர். அகதிகளின் துயரத்தையும், போர்ச் சூழலையும் பற்றி எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

தொகுப்பு: கிருஷ்ணபிரபு

நன்றி : புதிய புத்தகம் பேசுது !! (பக்கம் : 28)

Sunday, January 8, 2012

கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் !!!




குகன், சங்கர் நாராயண், இயக்குனர் சற்குணம், எழுத்தாளர் உமா சௌந்தர்யா.



குகன், சங்கர் நாராயண், இயக்குனர் சற்குணம், எழுத்தாளர் உமா சௌந்தர்யா.



குகன், சங்கர் நாராயண், இயக்குனர் சற்குணம், எழுத்தாளர் உமா சௌந்தர்யா.



குகன், கருவை சு.சண்முகசுந்தரம், இயக்குனர் ராசி அழகப்பன், கே.ஆர்.பி.செந்தில்.




குகன், கருவை சு.சண்முகசுந்தரம், இயக்குனர் ராசி அழகப்பன், கே.ஆர்.பி.செந்தில்.

Saturday, January 7, 2012

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு கவிதை நூல் வெளியீட்டு விழா !!

இன்று (7.1.12) மாலை 5:30 மணிக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியில் Discovery Book palace (ஸ்டால் 334) யில், நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

நூல் வெளியீடுபவர் : இயக்குனர். ராசி.அழகப்பன்

உமா சௌந்தர்யா எழுதிய
"விழிப்பறிக் கொள்ளை" (காதல் கவிதைகள்)



நூல் பெற்று வாழ்த்துபவர் : சங்கர் நாராயண் ( 'கேபிள்' சங்கர்)

கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய
"பிணம் தின்னும் தேசம்" (ஈழ கவிதைகள்)




நூல் பெற்று வாழ்த்துபவர் : யுவகிருஷ்ணா (லக்கிலுக்)

ஏற்புரை : உமா சௌந்தர்யா, கருவை சு.சண்முகசுந்தரம்

நன்றியுரை : குகன்

இடம் :

Discovery Book Palace (Stall No.334),
35th Chennai Book Fair,
St.George School, kilpauk.

பதிவர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு வருக...!!!

Wednesday, December 28, 2011

நாகரத்னா பதிப்பகத்தின் புது வெளியீடுகள் !

சென்னை புத்தக கண்காட்சி நெருங்க நெருங்க, எல்லா பதிப்பகங்களும் மண்டை உடைத்துக் கொள்வது “அடுத்து நாம் என்ன புத்தகம் போட வேண்டும்?” என்பது தான். பதிப்பாளரிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி, “ என்ன புத்தகங்கள் வெளியீட போறீங்க?” என்பது தான்.

நான் அதிகம் மண்டை உடைத்துக் கொள்ளவில்லை. காரணம், பதிப்பகத்தை தொழிலாக நினைக்கவில்லை. பதிப்பகத்தில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இரண்டாவது கேள்விக்கு பதில் இரண்டு புத்தகம். இரண்டுமே கவிதை.

விழிப்பறிக் கொள்ளை - உமா சௌந்தர்யா
பக். 80, விலை. ரூ.40



ஒரு பதிப்பகம் கவிதை நூல் வெளியீட முடிவு செய்ய பிறகு, கண்டிப்பாக ஒரு காதல் கவிதை தொகுப்பு நூல் அவர்கள் வெளியீட்டு பட்டியலில் இருப்பது நல்லது. புத்தக கண்காட்சிக்கு காதல் கவிதைக்கு என்று ஒரு தனி இளைஞர்கள் கூட்டம் வருகிறது. யார் எழுத்தாளர்கள் என்று பார்ப்பதில்லை. காதல் கவிதை புத்தகங்களை வாங்கிவிடுகிறார்கள் அல்லது அங்கேயே முழுமையாக படித்து வைத்து விடுகிறார்கள்.

அப்படி காதல் கவிதை வெளியீடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது நண்பரும் குறும்படம் இயக்குனருமான பொன்.சுதா மூலம் அறிமுகமானவர் உமா சௌந்தர்யா அவர்கள். “காதல் கவிதை” நூல் என்றது பெரும்பாலும் ஆண்கள் தான் எழுதியிருக்கிறார்கள். பெண்கள் பார்வையில் காதல் கவிதை நூல்கள் மிக குறைவாகவே வந்துள்ளது.

காதல் கவிதை பெண் பார்வையில் படிக்கும் போது ஸ்வாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக தொகுப்பில் என்னை கவிர்ந்த கவிதை.

எனக்காக நீ செய்த
எதுவும் எனை
வசீகரிக்கவில்லை
எல்லாம்
எனக்காகவே செய்தாய்
என்பதைத் தவிர.

**

நுணலும் தன்
வாயால் கெடும்
நானும்தான் உன்
காதலை சம்மதித்து


ஆண் பார்வையில் வெற்றி பெறும் காதல் கதை, பெண் பார்வையில் வெற்றி பெறுவதில்லை. (உதாரணம், அழகி, பூ படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்). காதல் ஆண் கோணத்தில் வாசித்த வாசகர்களுக்கு பெண் கோணத்தில் இருந்து வாசிக்க இந்த கவிதை புத்தகம் உதவும் என்று நம்புகிறேன்.

பிணம் தின்னும் தேசம் - கருவை சு.சண்முகசுந்தரம்
பக். 80, விலை. ரூ.40



ஈழப் போர் முடிந்து விட்டது என்று எதிரிகள் குரல் எழுப்பினாலும் இன்னும் முடியவில்லை என்று தமிழகத்தின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஈழ தொடர்பான கட்டுரை நூல் அல்லது விமர்சன நூல் கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய போது, தம்பி கனியம் செல்வராஜ் மூலம் அறிமுகமானவர் கருவை சு.சண்முகசுந்தரம்.

கவிதை நூல் என்று சண்முகசுந்தரம் சொல்லும் போது நான் ஆர்வமில்லாமல் இருந்தேன். அவர் எழுதியதை வாங்கும் போது கூட எனக்கு ஆர்வமில்லை. படித்தவுடன் கண்டிப்பாக இந்த நூலை நான் தான் வெளியீட வேண்டும் என்று முடிவே செய்துவிட்டேன். பல பக்கங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை விட, இவரின் ஐந்து வரி கவிதைகள் இதயத்தை பதம் பார்த்துவிடுகிறது.

குறிப்பாக கீழ் காணும் கவிதைகள்...

மனைவியைப் பிரிந்து
துறவு பூண்டான்
புத்தன்
பூட்டிய வீட்டிற்குள்
அத்துமீறும்
புத்தனின் பிள்ளைகள்

**

பசி வந்தால்
பத்தும் மறக்குமாம்
மறக்கவில்லை
நாங்கள்
தனிநாடு.

**

தமிழன் என்பதால் தாக்கப்பட்டோம்
அதைக்கண்டு
நாங்கள் வளர்த்த மாடுகள்
”அம்மா!” வென்று கத்தி
கண்ணீர் வடித்தன.

மாடுகளையும்
அவர்கள்
விட்டபாடில்லை.

**

இன்னும் பல கவிதைகள் தொட்டாக்களாக வரவிருக்கிறது.

“ஓயாத அலை” என்ற தலைப்பில் வந்த கவிதை தொகுப்பை, “பிணம் தின்னும் தேசம்” என்று தலைப்பை மாற்றினேன். நெல்லை ஜெய்ந்தா, அப்துல் காதர் அவர்கள் அணிந்துரையை பக்கத்தின் காரணமாக குறைக்க வேண்டியதாக இருந்தது. மற்றப்படி, சண்முகசுந்தரத்தின் படைப்பில் பதிப்பாளராக நான் கை வைக்க மனம் வரவில்லை. நாகரத்னா பதிப்பகத்தில் வெளிவந்த நூல்களில் எனக்கு மிகவும் மன நிறைவு கொடுத்த நூல் "பிணம் தின்னும் தேசம்” தான். கண்டிப்பாக இந்த நூலுக்கு ஒரு விருது உண்டு என்று என் உள்மனம் சொல்கிறது.

***

இரண்டு கவிதை நூலும், சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. நூல் வெளியீட்டு பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

நூல் வாங்க விரும்புபவர்கள் tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Friday, December 23, 2011

போராளிகளின் துப்பாக்கி வரிகள் - செந்தமிழன் சீமான்

தம்பி சண்முகசுந்தரத்தின் கவிதை வரிகளில் “போராளிகளின் துப்பாக்கிகளில் இருந்து வரும் தோட்டாக்களுக்கு நிகரான வலிமை கொண்டுள்ளன”. எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும் நம் சொந்தங்களின் அவலங்களைத் தீர்க்க முடியவில்லையே என்ற இயலாமையில் மண்ணுக்கேற்ற வீரமும் மானமும் தம்பியின் கவிதைகளில் இயல்பாய் இருக்கின்றன.

நான் சிறுவயதில் என் சொந்த மண்ணிலிருந்து என் ஈழ உறவுகளை எப்படிப் பார்த்தேனோ அதே பார்வையில் என் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இந்த கவிதை வரிகள் அமைந்துள்ளது.
முகவை மண்ணின் உப்புக்கலந்த காற்று என் உறவுகளின் உணர்வை பிரதிபலிக்கும். அந்த உப்புக்கான உணர்ச்சியோடு தம்பியின் கவித்துவம் அமைந்துள்ளது.

ஓயாத அலைகளென ஆரம்பித்து ‘சங்கார நிசமென சங்கே முழங்கு’ என்று என் மூத்தவன் பாரதிதாசன் சொல்லுவதைப் போல் ஈழ மக்களின் போராட்டங்களின் நியாயங்களையும் தீர்வையும் அழகாய் சொல்லியுள்ளார்.

”எத்தனை உயிர்களை கொடுத்தோம்
இன்னும்
எத்தனை உயிர்களை வேண்டுமென்றாலும்
கொடுப்போம்
ஒருபோதும் நிற்காது
ஓயாத அலைகள்”


என்று தமிழரின் வீரத்தைப் பறைசாற்றியுள்ளார்.

காந்தி தேசம் கொடுத்த ஆயுதத்தில் புத்த தேசம் குண்டு போட்டு கொன்றது காந்தியும், புத்தனும் குற்றவாளிகளாய், தமிழ் மக்களின் நீதிமன்றத்தில், காந்தியும் புத்தனும் எங்களுக்கு உதவவில்லை. அதனால் தான் பகத்சிங்கை துணைக்கு அழைத்தோம் என்று நம் பக்கத்தில் உள்ள நியாயத்தையும் காந்தி தேசத்திலிருந்து புத்த தேசத்திற்குச் சொல்லியுள்ளார்.

சிங்களவின் இனப்பசிக்கு எங்களின் உரிமைகளை இழிந்தோம், உடமைகளை இழந்தோம், உயிரையும் கொடுத்தோம். ஆனால், இன்னும் இந்த தேசங்களின் தனி நாடு கேட்பது தவறென்கிறது என்பதை தம்பியின் வரிகள் அழகாய் சொல்லுகிறது.

“தனிநாடு கேட்பது தவறா ?
அப்படியானால்
உலக நாடுகளே ஒன்றினையுங்கள்”


தம்பியின் இந்த வரிகளில் எங்களின் கோபமும் எங்களின் நியாயமும் தென்படுக்கின்றது.

தம்பி உன் உணர்வுகளோடு இறுதியாய் எங்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் போல் அழகாய் இந்த கவிதைகளுக்கு முடிவுரை கொடுத்துள்ளாய்.

”இன்று
நாளை
நாளை மறுநாளென்று
என்றேனும்
ஒரு நாள்
நடைமுறைக்கு வரும்
தனி நாடென்னும்
நேற்றைய தீர்மானம்”


என்று தம்பி சண்முக சுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள் அன்பு உடன்பிறப்பாய்,
சீமான்

**

நாகரத்னா பதிப்பக சார்பில் கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய "பிணம் தின்னும் தேசம்" - ஈழ கவிதை நூலுக்காக செந்தமிழன் சீமான் அவர்கள் எழுதிய அணிந்துரை.

Thursday, December 22, 2011

"மழைக்கால துளசி போல...." - வித்தகக் கவிஞர் பா.விஜய்

குளிர் காலத்தின் அதிகாலையில், ஜன்னல் திறந்தும் உள்ளே அனுமதி கேட்காமல் நுழையும் பனிக்காற்று போல, கவிதையும் எழுதுபவரின் அனுமதி கேட்காமல்தான் படைப்பாய் பரவும்.

கவிதையின் சௌகரியமே இஷ்டத்திற்கு வளைத்து நெளித்துக் கொள்ள து சம்மதிப்பது தான். கவிதையைப் போல சொன்னபடி கேட்கும் குழந்தையும் இருக்க முடியாது. கவிதையைப் போல சொல் பேச்சு கேட்காத குழந்தையும் இருக்க முடியாது.

விழிப்பறிகொள்ளை புத்தகத்தை எழுதிய உமா சௌந்தர்யா, அவருடைய கணவர் மூலமாக பற்பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். எனது தந்தையுடன் நூற்பாலையில் சேர்ந்து பணிபுரிந்த இனிய நண்பர் தான் உமா சௌந்தர்யாவின் கவிதைகளுக்கும் இன்று நண்பராய் இருக்கின்ற அவரது கணவர் திரு. முருகேசன்.

ஒரு பெண் குடும்பத்தின் பணைப்புகளுக்குள் மூழ்கி கிடக்கும் போது, தளக்குள் இருந்து ஏதோ ஒரு தனித்துவத்தை உலகின் பார்வைக்கு பதிவுசெய்வதற்காக வெளியே வருவது மிக மிக ஆரோக்கியமாக, விழி அரங்கங்கள் நிரம்ப, கைதட்டல்களால் வரவேற்கக் கூடிய ஒன்று.

அலுவலகங்களோ, குடும்பங்களோ சம்பாத்தியம் இல்லாத அல்லது சமாத்தியத்துடன் கூடிய கை விலங்குகள்தான் பெண்களுக்கு. அதையும் மீறி, ஆத்மாவின் பாடலை படைப்புகளாய் வெளிவரச் செய்யும் பெண்மைகள் போற்றப் பட வேண்டியவை.

இந்த கவிதை தொகுப்பிற்குள்,

"என் வானம்
திரண்டு கிடக்கிறது
உன் நினைவுகள்
எப்போது வேண்டுமானாலும்
பெய்யாலாம்
விழிகளில் மழையாய்..."


என்ற கவிதையில் இதயமும் சேர்ந்து நனைந்தது.

"சிதைந்து போன
இதயத்தை தூக்கிக் கொண்டு
ஒடோடி வருகிறேன்

உடைந்த உன் மனதை
அள்ளிக்கொண்டு அப்போது தான்
சென்றதாய்
அக்கம் பக்கம் தகவல்

திரும்பும் வழியில்
கிடைக்கலாம்
இன்னொரு இதயம்
உனக்கோ எனக்கோ
"

இந்த தொகுப்பில் பளிச்சென்று மனதில் பதியம் போட்டுவிட்டு ஒடிப்போன ஒரு ஆழமான நிகழ்ச்சியின் ததும்பல் இந்த கவிதை.

"குவளையில் தேநீர்
அருந்தும் சாக்கில்
விழிகளால் என்னை
உறுஞ்சும் உன் உயிர்"


இந்த கவிதையில் சொற்களுக்குள் உணர்ச்சியை பிசைந்து தருகிற கலப்பியல், உமா சௌந்தர்யாவிற்கு கை வந்திருக்கிறது. அத்னால்தான் தலைப்பிலே கூட, வழிப்பறிக் கொள்ளை என்ற வழக்கு வார்த்தையை உடைத்து, விழிப்பறிக் கொள்ளை என்ற பெயரை உருவாக்க முடிந்திருக்கிறது.

வார்த்தைகளில் புதிது செய்வது ஒரு படைப்பாளனுக்கு மிக மிக அவசியம். அப்படி அழகான திரிபுகள் பல, இத்தொப்பிலே வாசல் கோலத்தின் புள்ளிகளை போல, மிக நேர்த்தியாய் வைக்கப்பட்டிருக்கிறது.

மழைக்காலத்தில் சில்லென்று ஆடிக்கொண்டிருக்கும் துளசி இலைகள் மாதிரிதான் நல்ல கவிதைகளை படிக்கும்போது மனதிற்குள் ஒரு கம கம வாசமும், சில்லென்ற மனோநிலையும் பதமாக உருவாகும். விழிப்பறிக் கொள்ளையில் அப்படி ஒரு மனோநிலை உருவாகிறது.

தொடர்ந்த எழுத்து முயற்சி இன்னும் அழகான படைப்புகளை நோக்கி உமா சௌந்தர்யாவை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். அவருடைய முதல் படைப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நம்பிக்கையுடன்,
பா.விஜய்

**

நாகரத்னா பதிப்பக சார்பில் உமா சௌந்தர்யா எழுதிய "விழிப்பறிக் கொள்ளை" - காதல் கவிதை நூலுக்காக வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் எழுதிய அணிந்துரை.

Wednesday, November 2, 2011

MKB நகரில் புத்தகக் கண்காட்சி

நாகரத்னா பதிப்பகம், We Can Books distributors மற்றும் முரண்களரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி.

இடம் : முரண்களரி புத்தக நிலையம்
ஆண்டாள் தையல் பயிற்சி மையம்
130, முதல் மாடி ( ஜானகி மகால் எதிரில்)
மகாகவி பாரதி நகர், சென்னை - 39


நேரம் : காலை 10 மணி முதல் இரண்வு 9 மணி வரை

கீழ் காணும் புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுகிறது.

1. நடைபாதை - குகன்
2. காந்தி வாழ்ந்த தேசம் - தொகுப்பு : குகன்
3. நீங்கதான் சாவி - சுரேகா
4. கலைஞரின் நினைவலைகள் 100 - தொகுப்பு : குகன்
5. கலாம் கண்ட கனவு - தொகுப்பு : குகன்
6. என்னை எழுதிய தேவதைக்கு - குகன்
7. உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி - கனியன் செல்வராஜ்
8. லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயண்
9. டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா
10. எனது கீதை - குகன்
11. 555 பொன்மொழிகள் – தொகுப்பு : சோலை தமிழினியன்
12. இரை தேடும் பறவை - கருவை ஷண்முகசுந்தரம்
13. சாமானியனின் கதை - என்.உலகநாதன்
14. வீணையடி நீ எனக்கு - என்.உலகநாதன்
15. மீண்டும் ஒரு காதல் கதை - சங்கர் நாராயண்
16. கொத்து பரோட்டா - சங்கர் நாராயண்
17. நாகம்மாள் - ஷண்முகசுந்தரம்
18. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
19. தூரன் கட்டுரைகள் - தூரன்
20. பசியின் நிறம் வெள்ளை
21. கீதாரகஸ்யம்
22. வாழ்வும் தியானமும் - 'யோசன்' மோகன பாலகிருஷ்ணன்
23. இணையதளம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ? - சந்திரசேகரன்
24. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் - சந்திரசேகரன்
25. பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி ? - சந்திரசேகரன்
26. வளமுடன் வாழ்வோம் வா - துருவன்
27. சிவபெருமானின் திருவிளையாடல்
28. புத்திர பாக்கியம் தரும் பரிகார தலங்கள்
29. எனது காத்திருப்பும் அவனின் கையசைப்பும்
30. மதுக்கடைகளை மூடு
31. நோய் தீர்க்கும் பாரம்பரிய வைத்தியம்
32. பாலபாரதி எழுத்து பயிற்சி – 1
33. பாலபாரதி எழுத்து பயிற்சி -2
34. பாலபாரதி எழுத்து பயிற்சி -3
35. பாலபாரதி எழுத்து பயிற்சி -4
36. பாலபாரதி எழுத்து பயிற்சி-5
37. அம்மன் பாடல்கள்
38. நினைவு திறன் வளர்த்தல் - பால சங்கரன்
39. தேர்வு செல்லும் மாணவர்களுக்கு - பால சங்கரன்
40. வள்ளுவர் காட்டும் வெற்றி நிர்வாகம் - பால சங்கரன்
41. சிந்திக்க வைக்கும் விடுகதைகள்
42. எம் மாணவனையும் பொன்னாக்கலாம்
43. மாணவர்களுக்கான யோகாசனங்கள்
44. புத்தி தரும் பஞ்சதந்திர கதைகள்
45. 10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
46. 9 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
47. படித்தவுடன் மனப்பாடம் - பால சங்கரன்

வட சென்னையில் புத்தக கடை இல்லை என்ற குறையை முரண்களரி புத்தக நிலையம் போக்கியுள்ளது. அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வடசென்னை பகுதியில் இருப்பவர்கள் புத்தக நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பெரம்பூர், வியாசர்பாடி, கண்ணதாசன் நகர், ரெட்டேரி போன்ற பகுதியில் இருப்பவர்கள் செல்லக்குடிய தொலைவில் தான் உள்ளது.

மேலும் விபரங்களுக்கு...

குகன் – 99404 48599
யாழினி முனுசாமி – 98413 74809

LinkWithin

Related Posts with Thumbnails