வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, February 20, 2009

பாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம் - 2

முதல் பாகம்

" எனக்கு இரண்டு வயசு இருக்கும் போது அம்மா இறந்துடாங்க. அப்பா தான் என்ன வளர்த்தாரு. ஒரு ஆம்பில மாதிரி கராத்தே, ஜிம்னு எல்லாத்திலையும் என்ன என்கரேஜ் பண்ணது அப்பா தான். ஒரு ஆம்பள மாதிரி தான் என்ன வளர்த்தாரு. நானும் ஒரு ஆம்பளைக்கு இருக்குற தைரியத்தோடு வளர்ந்தேன். அதனாலையே எனக்கு ஆம்பளைங்க மேல ஈர்ப்பு இல்ல. அப்புறம், நா காலேஜ் படிக்கும் போது அவரும் இறந்துட்டாரு..."

" அடிபாவி... நா என்ன கேள்வி கேக்குறேன். நீ என்ன பதில் சொல்லுற. உன் கதை கேக்கவா இவ்வள்வு தூரம் வந்தேன்.." என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

என் முகம் ஒரு மாதிரியாக இருப்பதை உணர்ந்துக் கொண்டாள்.

" என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா...???"

"அப்படி எல்லாம் இல்ல..."

" நா நேரா உங்க கேள்விக்கு பதில் சொல்லுறேன். எங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் என் பிரண்ட்டோட அப்பா தான் என்ன படிக்க வச்சாரு. சொந்த மக மாதிரி பாத்திக்கிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் உண்மையான பிரண்ட்ஸ்னு அவங்க அப்பா, அம்மா ரொம்ப நம்பினாங்க. ஆனா ! எங்களுக்குள்ள பிரண்ஷிப் மீறின உறவு இருந்ததுனு அவங்களுக்கு தெரியாது..."

ரம்யா சொல்லுவதை ஒவ்வொன்றாக பேப்பரில் எழுதினேன். அவள் நான் எழுதுவதை கவனித்துக் கொண்டு மேலும் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

" என் பிரண்ட யார் தப்பா பார்த்தாலும் சரி, கிண்டல் பண்ணுலும் சரி நா அவங்கள சும்மா விட்டதில்ல. என் பிரண்ட சைட் அடிச்ச இரண்டு பசங்கள பப்ளிக் ப்ளேஸ்ல அடிச்சிருக்கேன்." என்று தன் தொழி மீது இருந்த காதலை கூறினாள்.

" உங்க ஆசைக்கு எப்படி உங்க தோழி சம்மதிச்சாங்க....??" என்றேன்.

" எனக்கு எப்படி ஆம்பளைங்க மேல் ஈர்ப்பு இல்லையோ. என் பிரண்டுக்கு ஆம்பளைங்கனா பயம்.
என் கிட்ட எல்லாத்தையும் சொல்லுவா. நா அவள தொட்டு தொட்டு பேசுறது அவளுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஒரு நாள் நாங்க இரண்டு பேரும் எக்ஸாமுக்கு கம்பைன் ஸ்டடி பண்ணும் போது அவங்க அப்பா, அம்மா ஊருக்கு போய் இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது 'அது' நடந்திடுச்சு. எங்க ரெண்டு பேருல நான் தான் ஆண். அவ தான் பெண்..." என்றாள்.

யப்பா...யப்பா... அவள் சொல்ல சொல்ல.. எனக்குள் எதோ செய்வது போல் இருந்தது. இவ்வளவு அழகான பெண் எந்த ஆண்ணின் மீதும் ஈர்ப்பு இல்லை என்று சொல்லும் போது ஆண் இனத்திற்கே இழப்பு என்று தோன்றியது.

" உங்க இரண்டு பேருக்கு இன்னும் 'உறவு' இருக்கா...

" இப்படி கடைசி வரைக்கும் இருந்திருலாம் நினைச்சோம். ஆனா, எங்க 'உறவு' அவங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு. என்ன வீட்ட வீட்டு அனுப்பிச்சிடாங்க. அவளுக்கும் கல்யாணம் அயிடுச்சு. " என்று தன் 'லெஸ்பியன்' கதையை சொல்லி முடித்தாள்.

எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. விபச்சாரம் வயிறு பிழைப்பு நடத்தும் தொழில் என்று சொன்னால் கூட விபச்சாரிகள் மீது ஒரு கருணை வரும். அவர்கள் கதைக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு சோகம் இருக்கும். ஆனால், ஒரு பெண் தன்னை 'லெஸ்பியன்' என்று சொல்லிக் கொள்ள அசாத்திய துணிச்சல் வேண்டும். வெளிப்படையாக அவள் சொன்ன பிறகும் இந்த சமுதாயம் அவளை எப்படி பார்க்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

"சொல்லுறேனு தப்பா நினைக்காதீங்க.... ஒவ்வொரு ஆண்ணும் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம கஷ்டப் படுறாங்க. இப்படி பொண்ணுங்க ஆண் துணை வேண்டாம்னு நினைச்சா... நம்ப நாட்டுல அடுத்த தலைமுறைக்கு ஒண்ணு இருக்காது. " என்று நான் சொல்லி முடிப்பதற்குள் ரம்யா கோபமாக பேச தொடங்கினாள். " ஜன தொகையில இந்தியா இரண்டாவது இடத்துல இருக்கு. இப்படி நாங்க எல்லாரும் 'லெஸ்பியன்' உறவு வச்சிகிட்டாலும் இந்தியாவுக்கு இராண்டுவது இடத்துல இருந்து மூனாவது இடத்துக்கு போக ரொம்ப நாள் ஆகும்."

அவள் சொன்ன பதிலில் எனக்கு சிரிப்பு தான் வந்தது. உணர்ச்சி பூர்வமாக ஒருவர் பேசும் போது நான் சிரித்தால் நன்றாக இருக்காது என்பதற்காக அமைதியாக எனக்கு இருந்த இன்னொரு சந்தேகத்தையும் கேட்டேன்.

" ஒரு சின்ன சந்தேகம். ஒர் இன சேர்க்கை தப்புனு நீங்க நினைச்சது கூட பார்த்த தில்லையா..." என்றேன்.

" லெஸ்பியங்குறது என்னோட பெட் ரூப் விஷ்யம். அத மத்தவங்க எட்டி பார்க்குறது தான் தப்பு. என்னோட உணர்வுகள் நான் கொலை பண்ண விரும்பல. நா எதுக்கு தைரியமா உங்களுக்கு இன்டர்வியூ கொடுத்தேனா.... என்ன மாதிரி பல பெண்கள் தங்கள் உணர்வுகள கொல்ல முடியாம ஒரு ஆண கல்யாணம் பண்ணிகிட்டு வாழுறாங்க. சில பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்க. என்னோட பேட்டி அவங்களுக்கு தைரியத்த கொடுக்கும்." என்று மிக துணிச்சலோடு கூறினாள்.

நான் அவளையே உற்று பார்த்தேன். அவள் முகத்தில் சலனமில்லை. குற்ற உணர்ச்சி என்பது சிறிது கூட இல்லை. அவள் உருவத்தில் மட்டுமே பெண்ணாக இருக்கிறாள். நிஜமாகவே தைரியத்தில் ஆண்ணை விட மிஞ்சியவள் என்று புரிந்துக் கொண்டேன்.

எனக்கு அவளிடம் தொடர்ந்து பேச வேண்டும் போல் இருந்தது. என் கேள்விக்கு அவள் பதில் சொல்லும் போது எனக்கு இன்னொரு கேள்வி பிறக்கிறது.

" மேடம். உங்க கிட்ட கடைசி கேள்வி....கேக்கலாம்மா...." என்றேன்.

"சொல்லுங்க...."

" உங்க பிரண்ட் இப்போ எப்படி இருக்காங்க... அவங்க புருஷனோட சந்தோஷமா இருக்காங்களா....!"

" இல்ல... அவ இன்னும் என்னை நினைச்சிட்டு அப்படியே இருக்குறா...." என்றாள்.

"அப்படியேனா.....?????? புரியல்ல..."

"இன்னும் அவ புருஷன் கூட 'உறவு' இல்லமா தான் இருக்கா...." என்றாள்.

" நீங்க தப்பா நினைக்கலேனே... உங்க பிரண்டையும் நான் இன்டர்வியூ பண்ணனும். அவங்க அட்ரஸ் போன் நம்பர் கிடைக்குமா...?" என்று கேட்டேன்.

அவள் அட்ரஸ், போன் நம்பர் கொடுக்க நீண்ட நேரம் யோசித்தாள்.

" கவல படாதீங்க. உங்கள பத்தி எழுதும் போது கற்பனை பேரு வச்சி தான் எழுதுவேன். அவங்களுக்கு, உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது. அதுக்கு நான் கிராண்டி..:" என்று அவளுக்கு என்னை பற்றின நம்பிக்கை கொடுத்தேன்.

" நா போன் நம்பர் கொடுக்கனும்னு அவசியமில்ல. என் பிரண்டு உங்க ஓய்ப் வர்ஷா தான். ரொம்ப பயந்திட்டு இருந்தா. நான் தான் அவளுக்கு தைரியம் சொல்லி உங்கள கான்ட்டேக் பண்ணி எங்க விஷயத்த பத்தி உங்களுக்கு சொன்னேன்.

" என்னது....? என் மனைவி லெஸ்பியனா........!!!!!!!!!!!" அதிர்ச்சியுடன் தலைசுற்றலும் வந்தது.

" சுந்தர் ! இப்போ என்ன முடிவுடா எடுக்க போறே...???" என்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.


சுந்தர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்களாவது சொல்லுங்கள் ????

14 comments:

ஆ.ஞானசேகரன் said...

கடைசியில் கொக்கி நல்லாயிருக்கு

Karthick Palavesam said...

nice..........
its real story

குகன் said...

//ஆ.ஞானசேகரன் said...

கடைசியில் கொக்கி நல்லாயிருக்கு //

நன்றி ஞானசேகரன் :)

குகன் said...

//Karthick Palavesam said...

nice..........
its real story //

thanks for coming karthik.

Its not an real story. This story based on Lesbian's gal interview on Daily Newspaper.

Nagarajan said...

Get both the girls to a psychiatrist. Let the doctor explain the girls about the importance of men-women sex which is very important for the welfare of humans

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

RAMASUBRAMANIA SHARMA said...

தீடீர் த்ருப்பங்களுடன் கதயை முடித்தும், முடிக்காமலும் ...வாசகர்களின் கருத்துக்கு விட்டு விட்டீர்கள்...இது உண்மையாக இருந்தால், மிகவும் சென்சிடிவ் ஆன சப்ஜெக்ட்....எனவே, ஒரு தகுந்த மனோதத்துவ டாக்டரை பார்ப்பது நலம்...கதையாக இருந்த்தால்...நீங்கள் பின்னாளில் ஒரு தி.ஜா. போன்ற ஒரு ஆசிரியராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது...however i will take it as a story and wish you all the best in your future writings....pl continue your beautiful thoughts, in various aspects...do not confine your self...in this category alsone...I am sure , you will be coming out with some intresting facts...Greetings.

RAMASUBRAMANIA SHARMA said...

Pl send email followup to my mail id....

" உழவன் " " Uzhavan " said...

நல்லாதான் கதை போய்க்கிட்டுயிருந்தது.கடைசியில சும்மா பகீர்னு ஆயிடுச்சி. நன்று.

உழவன்

குகன் said...

// RAMASUBRAMANIA SHARMA said...
நீங்கள் பின்னாளில் ஒரு தி.ஜா. போன்ற ஒரு ஆசிரியராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது...//

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஷர்மா....

குகன் said...

// " உழவன் " " Uzhavan " said...
நல்லாதான் கதை போய்க்கிட்டுயிருந்தது.கடைசியில சும்மா பகீர்னு ஆயிடுச்சி. நன்று.

உழவன் //

வருகைக்கு நன்றி உழவன் :)

englishvocabs said...

hi,

the story is good kannan. i feel the husband has failed to show his prowess in sex to augment the feeling the wife has for women. hence it is the impotence or the carelessness of the husband to satisfy the wife that has led to this situation.its better the husband respect the feeling of the wife or make her forget all these feelings by showering kindness and satisfaction to her .

குகன் said...

// englishvocabs said...
hi,

i feel the husband has failed to show his prowess in sex to augment the feeling the wife has for women. //

Thanks for your visit.

Its not like that. His wife already has affair with her friend. she fails to tell her feeling before marriage.

LinkWithin

Related Posts with Thumbnails