வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 5, 2009

முடியாத காதல் கதை

" ஹலோ வணக்கம்.... நான் பிரியா பேசுறேன். நீங்க யாரு பேசுறது ?"

" நா திண்டிவணத்துல இருந்து ஷோபா பேசுறேன்"

"சொல்லுங்க ஷோபா... எப்படி இருக்கீங்க..?"

"நா நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க...?"

"யம்மாடி...ஆத்தாடி. உன்ன என்னக்கு தரியாடி...!!"

" கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி தூத்திக்குடி..."

" நீங்கள் பார்த்துக் கொண்டு இருப்பது........"

" ச்சே..." - கோபத்துடன் என் கையில் இருந்த ரிமோட்டை தூக்கி வீசினேன்.

இசையருவி, சன் மீயூசிக், ஜெயா மீயூசிக், ராஜ் மீயூசிக் என்று தமிழில் இருக்கும் எல்லா இசை சேனல்களை போட்டு பார்த்துவிட்டேன். நான் எதிர்பார்க்கும் அந்த விஷயம் மட்டும் இன்னும் வரவில்லை. மூன்று ஆண்டுகளாக என் மனதில் அலைமோதிய ஆசை. என் கல்லூரி படிப்பு தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நொடியும் நான் அனு அனுவாய் செத்ததற்கு பலன். என் வாழ்க்கையில் வரும் சந்தோஷம் எல்லாம் தமிழ் இசை சேனல்களில் எதோ ஒன்றில் தான் இருக்கிறது.

பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று என்று என் காதலை நினைக்க வேண்டாம். என் காதல் வித்தியாசமானது. முடிவில்லாதது. என் காதலை கதையை பற்றி எத்தனை முறை கூறினாலும், எனக்கு அலுப்பு தட்டுவதில்லை. நீங்களும் ஒவ்வொரு முறை புதிதாய் கேட்பது போல் உணர்வீர்கள். என் காதல் கதையை நீங்கள் முடிக்க நினைத்தாலும் இதில் நீங்கள் தொலைந்து போவீர்கள். சிறு பயத்தை மனதில் வைத்துக் கொண்டு என் காதல் கதையை கேளுங்கள்...

என் மூன்று வருட தவத்தை இன்று தான் அவளிடம் சொன்னேன். அவள் பெயர் அமுதா. எனக்கென்று பிறந்த தேவதை. எனக்காவே வடிவமைத்து பிரம்மன் செதுக்கி பூமியில் பிறக்க வைத்த தேவதை. அவள் மீது யார் ஆசை வைத்தாலும் தெய்வ குத்தமாகிவிடும். எனக்காக அவளை கடவுள் அவளை படைத்த போது, மற்றவர்கள் அவளை சகோதரியாக தான் பார்க்க வேண்டும். என் கோபத்தை விட, கடவுளின் கோபத்திற்கு நிச்சயம் எல்லோரும் பயப்படுவீர்கள். அதனால், என் அமுதாவை நீங்கள் சகோதரியாக பாருங்கள். இப்படி, என் கல்லூரியில் படிப்பவர்களை மிரட்டி இருக்கிறேன். நான் நல்லவன் என்று காட்டிக் கொள்ள நண்பர்களிடம் கெஞ்சியிருக்கிறேன். ஆனால், அவளிடம் மட்டும் பேச ஒரு வார்த்தை கூட வரவில்லை. இன்று தான் என் மௌனத்தை கலைத்தேன். என் அமுதாவை இல்லை... தேவதையை அழைத்து தனியாக பேசினேன்.

" மூனு வருஷமா நா உன்ன லவ் பண்ணுறேன். அது உன்னக்கே நல்லா தெரியும். நம்ம படிப்பு கெட்டு போக கூடாது தான் நா இதுவரைக்கும் சொல்லல்ல.. ஐ லவ் யூ அமுதா..."

அமுதா எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

" என்ன அமுதா... நா சொன்னதுக்கு பதிலே சொல்லல்ல..."

"கொஞ்சம் டைம் கொடு... நா அப்புறம் பதில் சொல்லுறேன்.."

" எப்போ...எவ்வளவு நாள் ?"

மூன்று வருடங்களாக சொல்ல காத்திருந்த என் இதயத்திற்கு, என் காதலை சொன்ன பிறகு காத்திருக்க முடியவில்லை. அவளிடம் இருந்த பதில் வர போகும் நாட்களை என்ன வேண்டுமா என்று மனம் பதறியது.

" ரொம்ப டைம் எடுத்துக்க மாட்டேன். இன்னைக்குள்ள சொல்லுறேன்..."

"உனக்கு போன் பண்ணட்டா..."

" இல்ல வேண்டாம். நா எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்..."

இவ்வளவு பெரிய விஷயத்த எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் சொல்லுறா... என்ன பண்ணுறது..

" காதல் வந்துவிட்டால்
Missed Call கொடுத்து
காதலை தொலைப்பவர்கள் – பெண்கள் !
Out-going Call செய்து
காதலை தக்கவைத்து கொள்பவர்கள் – ஆண்கள் !!"

புது கவிதை மனதில் எழுதிக் கொண்டேன். என் காதல் உறுதியாகும் வரை இது போன்ற கவிதையில் என் காதலை சிதைத்துவிட விரும்பவில்லை.

" என் நம்பர் உனக்கு தெரியுமா..."

" உன் செல்போனுக்கு இல்ல... தமிழ் மீயூசிக் ச்சேனலுக்கு ஏதாவது ஒண்ணுக்கு அனுப்புவேன்.."

" என்ன ச்சேனல் சொல்லு...."

" அது தான் சஸ்பென்ஸ்... என் பதில் ஏதாவது ஒரு தமிழ் ச்சேனல்ல வரும்... பாரு !"

இன்றே என் காதல் தேர்வுக்கு முடிவு தெரிய போவதை நினைத்து சந்தோஷப்படுவதா ? எந்த ச்சேனலில் பதில் வரும் என்று தெரியாமல் விழிப்பதா ? என்று ஒன்றும் புரியவில்லை. தன் காதலுக்கு முடிவு சொல்ல... இப்படி ஒரு உத்தியை கொண்டுவந்தது என் அமுதாவாக தான் இருக்கும்.

ஒவ்வொரு ச்சேனல் கீழில் யார் யாரோ அனுப்பிய தகவல் வந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், என் அமுதா அனுப்பியதை இவர்கள் ஒளிப்பரப்ப நேரமாகுமா... வேறு ஏதாவது தமிழ் ச்சேனலாக இருக்குமா என்று இன்னொரு சந்தேகம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ச்சேனலை மாற்றிக் கொண்டு வருகிறேன். என் அமுதா அனுப்பியது போல் எந்த பதிலும் வந்ததாக தெரியவில்லை.

ஒவ்வொரு நிமிடமும் டைம் பாம் நேரம் கடப்பது போல் இருந்தது.

ஒரு ச்சேனலில் தொலைப்பேசி மணி ஒலித்தது. என் கவனம் முழுக்க ச்சேனல் கீழ் வரும் பதிலை எதிர்பார்த்து இருந்தது.

அந்த ச்சேனல் தொகுப்பாளர் பிரியா போனை எடுத்து பேசினாள்...

(மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்......! )

****

பின்குறிப்பு : இப்போ தலைப்பின் அர்த்தம் தெரிஞ்சிருக்குமே... :)

நன்றி : தமிழோவியம்.காம்

8 comments:

ஆதவா said...

ஹா ஹா.... சரியான சுழற்சி இது...

பட்டையக் கிளப்பறீங்க.... என்ன சேனலில் வருமோன்னு எதிர்பார்த்துட்டு இருந்தா இப்படி கோர்த்துவிட்டுட்டீங்கலே!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசி வரைக்கும் மண்டை காய வேண்டியதுதானா.. ஐயோ பாவம்..

குகன் said...

// பட்டையக் கிளப்பறீங்க.... என்ன சேனலில் வருமோன்னு எதிர்பார்த்துட்டு இருந்தா இப்படி கோர்த்துவிட்டுட்டீங்கலே!!! //

ஏதாவது சேனல் பேர் சொல்லி. இந்த கட்சிகாரனு முத்திரை குத்திட்டா என்ன பண்ணுறது.... :)

குகன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
கடைசி வரைக்கும் மண்டை காய வேண்டியதுதானா.. ஐயோ பாவம்..
//

சிறு பயத்தை மனதில் வைத்துக் கொண்டு என் காதல் கதையை கேளுங்கள் என்று சொல்லியிருந்தேனே... அப்போவே புரிந்திருக்க வேண்டாமா....:)

வெற்றி said...

யேய்யா குகா,
ஓன் காலக் குடு, அட உன்னதாய்யா..
காலக் குடுங்கிறேன்..

எப்பிடி ராசா இப்பிடி...

நீர் நெஞ்சத் தொடலய்யா.. தொட..ல

நக்கிப்புட்டீரு....

A N A N T H E N said...

நல்ல வேளை, கீழே கருத்துரை படிச்சிட்டு அப்புறம்தாம் மேலே போய் படிச்சேன், அதனால் மண்ட ஈரமாத்தான் இருக்கு

செம்ம சைக்கோ கதை...

குகன் said...

// தேனியார் said...
எப்பிடி ராசா இப்பிடி...

நீர் நெஞ்சத் தொடலய்யா.. தொட..ல

நக்கிப்புட்டீரு....//

நன்றி தேனியார் அண்ணே...

குகன் said...

// A N A N T H E N said...
செம்ம சைக்கோ கதை... //

காதல் கதைய எழுதினா.... சைக்கோ கதை சொல்லுறீங்களே... !!

LinkWithin

Related Posts with Thumbnails