வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 30, 2015

இந்திய உளவுத்துறை RAW - விமர்சனம்

பொதுவாக விமர்சனங்கள் வரும் மின்னஞ்சல், இன்பாக்ஸ் மெசேஜ்களை ஒரு Word documentல் சேகரித்து வைப்பேன். தேவைப்படும் போது மட்டும் பேஸ்புக்கில் அல்லது வலைப்பதிவில் பகிர்வது வழக்கம்.

இன்று அந்த word document யை பார்க்கும் போது ஒரு வாசகர் கடிதம் (எற்கனவே படித்ததாக இருந்தாலும்) எனக்கு உற்சாகத்தை அளித்தது. காரணம், நான் அடுத்தது எதை குறித்து எழுதலாம் என்ற யோசனை ( ஒரு தலைப்பு) அதில் குறிப்பிட்டிருக்கிறார். எழுத வேண்டிய புத்தக பட்டியலில் கண்டிப்பாக அந்த தலைப்பு இருக்கும். ஆனால், எப்போது எழுத தொடங்குவேன் என்பது எனக்கே தெரியாது.

துரதிஷ்டவசமாக அந்த வாசகர் பெயரை குறித்து வைக்கவில்லை.


 // என்னுடைய கைக்குக் கிடைத்து படித்துக் கொண்டிருக்கிறேன்.இந்திரா காந்திக்கும், மன்மோகன் சிங்-க்கும் RAW-வின் மேல் என்ன மாதிரியான Control இருந்திருக்கும் என்ற உண்மை உறைக்கிறது. இந்திராவின் நாட்டுபற்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மன்மோகன் சிங்கிடம் RAW என்ன எதிர்பார்க்கிறது என்றும் தெரிகிறது. ஒருபுறம் நாட்டின் பாதுகாப்பு நிறுவனம் நாட்டு அரசியல்வாதிகளால் எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் தடுமாறுவது தெரிகிறது. ஒரு எடுத்துக்காட்டு-The Italian Marines Case. இன்னொரு பிரச்சினை நாட்டின் மக்கள் தொகை, யார் எந்த மூலையில் என்ன செய்கிறார்கள் என்று எப்படி கண்காணிப்பது? ஒரு RAW, ஒரு IB போதாது.மிகச் சிறப்பாக செய்திகளை கோர்த்து இருக்கிறீர்கள். சீனாவின் MSS, JINYIWEI, மற்றும் NATIONAL ADMINSTRATION FOR THE PROTECTION OF STATE SECRETS பற்றி தெரிந்துக் கொள்ள ஆவல். ஒரு ஆசிரியரின் வெற்றி வாசகனை தூண்டுவது தான். நான் ஒரு ரா-வின் FIELD OFFICER இல்லை இல்லை ஒரு DIRECTOR ஆக இருந்திருந்தால் இந்நேரம் உங்களை சந்தித்து இருப்பேன் .அவ்வளவு செறிவு. முழுவதும் படித்தவுடன் தொடர்பு கொள்வேன். //

இணையத்தில் வாங்க....

Monday, June 15, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 8

ஒரு மாலை நேரத்தில் எலி ஒன்று மும்முரமாக எழுதிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த நரி, “ என்ன செய்துக் கொண்டு இருக்கிறாய் ?” என்று கேட்டது.

அதற்கு எலி, ”என் கண்டுபிடிப்பின் செய்முறை விளக்கத்தை எழுதிக்கிறேன்” என்றது.

மிகவும் ஆச்சரியமடைந்த நரி, “அப்படி என்ன கண்டுபிடித்தாய் ?” என்று கேட்டது.

”எலி எப்படி நரியை சாப்பிடும் என்பதை பற்றியது.” என்று பதிலளித்தது.

அதைக் கேட்டதும் நரி சிரிக்கத் தொடங்கியது. ”நீ என்ன முட்டாளா ! யாராவது இதை நம்புவார்களா ?” என்றது.



எலி நரியின் சிரிப்பைப் பற்றி கவலைப்படவில்லை.

“நீ என்னுடன் வா ! நான் உனக்கு காட்டுகிறேன்.” என்று கூறி தன்னுடன் அழைத்துச் சென்றது. நரியும், எலியும் ஒரு மரத்தின் பின்னால் சென்றது. சிறிது நேரம் கழித்து எலி நரியின் எழும்போடு வெளியே வந்தது. அதன் பின் தன் எழுதும் வேலையை செய்யத் தொடங்கியது.

அப்போது நரியைப் போலவே, அங்கு வந்த ஓநாய் எலிடம் விசாரித்தது.

”எலி எப்படி ஓநாய்யை சாப்பிடும் என்பதை பற்றி எழுதுகிறேன்” என்றது.

”உனக்கு என்ன பைத்தியமா ? இதை யாரும் நம்ப மாட்டார்கள்.” என்று ஓநாய் கூறியது.

”என்னுடன் வா ! உனக்கு காட்டுகிறேன்.” என்று கூறி நரியை அழைத்துச் சென்றது போலவே ஓநாய்யையும் அழைத்து சென்றது.

ஓநாயும், எலியும் அதே மரத்தின் பின்னால் சென்றது. சற்று நேரம் கழித்து எலி ஓநாயின் எழும்போடு வெளியே வந்தது.

அடுத்ததாக அந்த வழியாக வந்த ஒரு கரடி எலியிடம் இதே கேள்வியை கேட்டது. எலி அந்த கரடியை மரத்தின் பின் அழைத்து சென்றது. அங்கே, மரத்தின் பின் இருக்கும் சிங்கத்திடம் கரடியை அறிமுகம் செய்து வைக்கிறது. சிங்கம் – எலி கூட்டனி கதை கரடிக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

 எலி வெளியே வரும் போது கரடியின் எழும்போடு வந்தது.

 Management நீதி : 

நாம் மற்றவர்கள் நம்பும் படி வேலை செய்வதை விட நம் மேலாளருக்கு பிடித்த மாதிரி வேலை செய்தால் வேலையில் உயர்வு நிச்சயம். அடுத்தவர் பலியாவதை நினைத்து வருந்தக் கூடாது.

Thursday, June 11, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 7

அதிகாலை வேளை சூரியன் சுடும் நேரத்தில் சிங்கம் தனது குகையில் உறக்கம் கலைந்து வெளியே வந்தது. அப்போது அந்த வழியாக நரி வாக்கிங் வர ” இப்போது நேரம் என்னவென்று தெரியுமா ? என் கை கடிகாரம் ஒட வில்லை.” என்று கேட்டது. 

”என்னிடம் கொடு. உனக்காக நான் சரி செய்து தருகிறேன்” என்று சிங்கம் பதிலளித்தது.



நரி தனது கடிகாரத்தின் நலன் கருதி, “மிகவும் கஷ்டமான காரியம்... நகங்கள் கொண்ட கையில் செய்தால்... அந்த கடிகாரம் அழிந்துவிடும்” என்றது. 

ஆனால், சிங்கம் விடுவதாக இல்லை. “ஒன்றும் ஆகாது.... நான் சரி செய்வேன்” ”இது முட்டாள் தனமாக உள்ளது. நீண்ட நகங்கள் கொண்ட கையால் சரி செய்ய முடியாது.” என்று நரி எவ்வளவோ சொல்லியும் சிங்கம் கேட்பதாக இல்லை. 

"என்னால் சரி செய்ய முடியும்" என்று சொல்லி அந்த கடிகாரத்தை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் நுழைந்தது. சற்று நேரத்தில் வேளியே வந்தது. நரிக்கு ஒரே அதிர்ச்சி. ஓடாத கடிகாரம் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது நரி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தன் கடிகாரத்தை வாங்கி சென்றது. சிங்கம் சோம்பலை முறித்துக் கொண்டு மீண்டும் தன் உறங்க தொடங்கியது. 

அப்போது ஒரு ஓநாய் சிங்கத்தின் குகைக்கு வந்தது. ”இன்று உன் குகைக்குள் தொலைக்காட்சி பார்க்க வரலாமா ? என் தொலைக்காட்சிப் பேட்டி உடைந்து விட்டது.” என்று ஓநாய் கேட்டது. 

”என்னிடம் உன் தொலைக்காட்சி பெட்டியை கொடு. நான் சரி செய்து தருகிறேன்” என்று சிங்கம் கூறியது. ஓநாய் சிங்கம் சொன்னதை நம்பவில்லை. 

“இதை நான் நம்புவேன் என்று நினைக்கிறாயா? எப்படி உன் நீண்ட நகங்கள் கொண்ட கையினால் சரி செய்வாய் ?” 

”கவலை வேண்டாம். என்னால் முடியும். ” என்று கூறியது. 

ஓநாய் தன் தொலைக்காட்சி பெட்டியை சிங்கத்திடம் கொடுத்தது. சிங்கம் அந்த தொலைக்காட்சி பெட்டியை தன் குகைக்குள் எடுத்து சென்றது. சற்று நேரத்தில் சரி செய்து தொலைக்காட்சி பெட்டியை ஓநாய்யிடம் கொடுத்தது. தொலைக்காட்சியில் நன்றாக படம் தெரிந்தது. ஓநாய் மிகழ்ச்சியுடன் வாங்கி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தது. 

 இதில் நமக்கு தெரியாத காட்சி : 

சிங்கத்தின் குகைக்குள் ஆறு முயல்கள் இருந்தன. ஆறு முயல்களும் மென்னையான கைகளையும், நல்ல அறிவு திறனும் இருப்பதால் அந்த பணியை செம்மையாக முடித்தன. சிங்கம் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை மட்டுமே பார்த்தது. 

Management நீதி : 

மேலாளர் எல்லா வேலையையும் தானே செய்து முடிக்க வேண்டும் என்பதில்லை. அவர் சொல்வதை சரியாக வேலை செய்பவர்களை நிர்வாகித்தால் போதும். தான் செய்தது போல் பெயர் எடுக்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails