வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, April 29, 2009

நட்பினிலே காதல்

பெண்ணே உந்தன் அருகில்
நட்பின் பெருமையை உணர்ந்தேனே !
உன்னை நான் பிரிகையில்
காதலின் கொடுமையை அறிந்தேனே !

வருங்கால மணவாளனை பற்றி
கனவுகளைச் சொன்னாய் !
உன் காதலனாகத் தகுதியில்லை என்று
மறைமுகமாகக் காட்டினாய் !

உன் கனவு நாயகனுக்குத் தகுதியை
பயில நான் பல முறை முயன்றேன் !
எனக்கென்று ஒரு தனித்தன்மையை
இருப்பதை மறந்தேன் !

நட்பைக் கொண்டு
என் காதலை வென்றாய் !
நட்பாலே
என் காதலைப் பூட்டினாய் !

நானும், நீயும் நினைத்ததால்
நமக்குள் நட்பு வந்தது !
நான் நினைத்ததை
நீ நினைக்கும் வரை
நம்முள் காதல் வாராது !

நான் நினைத்ததை
நீ நினைக்கும் வரை...
நட்பாலே
என் காதல் பூட்டி இருக்கட்டும் !
நட்பின் பெயரில்
என் காதல் பாதுக்காக்கப் படட்டும் !

Tuesday, April 28, 2009

டிராபிக் ஜோக்ஸ்

டிராபிக் காஸ்டபிள் : வேகமாக வந்திருக்க... கோர்ட்ல கட்டுனா நூறு! இங்க கொடுத்தா அம்பது

ஓட்டுநர் : சார்... என் கிட்ட பணம் இல்ல

டிராபிக் காஸ்டபிள் : வேற என்ன இருக்கு...

ஓட்டுநர் : கிரடிட் கார்ட் இருக்கு..

டிராபிக் காஸ்டபிள் : நோ பிராப்ளம்... நாங்க எல்லா கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணுவோம்

ஓட்டுநர் : ????

****

டிராபிக் காஸ்டபிள் : வண்டிய நிருத்து... இன்ஷூரன்ஸ் பேப்பர் எடு..

ஓட்டுநர் : இன்ஷூரன்ஸ் நேத்தோட முடிஞ்சு போச்சு... போன சிக்னல்ல அம்பது ரூபா கொடுத்தேன்

டிராபிக் காஸ்டபிள் : அவங்க ஒயர்லஸ்ல தகவல் சொன்னதால தான் உங்க வண்டிய நிருத்துறேன்.. பணத்த எடு.

ஓட்டுநர் : ????

*****

ஓட்டுநர் : அது என்ன சார்...சரியா 99 ரூபா லஞ்சமா கேக்குறீங்க..?

டிராபிக் காஸ்டபிள் : இந்த மாசம் லஞ்சம் வாங்குற டார்கெட் தொடுறதுக்கு... அவ்வளவு தான் பாக்கி

*****

ஓட்டுநர் : என்ன சார் இவ்வளவு பணம் கேக்குறீங்க... உங்க சீனியர் ஆபிஸர் கிட்ட கம்ளைன்ட் பண்ணுவேன்

டிராபிக் காஸ்டபிள் : நானாவது இவ்வளவு கேட்டேன். என் சீனியர் டபுளா கேப்பாரு

ஓட்டுநர் : %$#^$#^$

********

ஓட்டுநர் : சார்.. ஏன் சிவப்பு, பச்ச சிக்னல் மாத்தி மாத்தி எறியுது ?

டிராபிக் காஸ்டபிள் : யாராவது கிராஸ் பண்ண... 'சிக்னல் கிராஸிங்' சொல்லி ஃபைன் போடுறதுக்கு...

Monday, April 27, 2009

"நான் வில்லனாக தான் நடிப்பேன்"- நடிகர் புஷ்பராஜ் பேட்டி

பிரபல வார இதழ் நிருபர் தங்கள் இதழில் நடிகர் புஷ்பராஜ் பேட்டியை பிரசுரம் செய்ய ஆசைப்பட்டு அவரை காண சென்றார். தேநீருடன் உபசரித்த நடிகர் புஷ்பராஜ் நிருபர் கேள்விக்கு பதில் சொல்ல தயார் ஆனார்.

நிருபர் : உங்க டைட் ஷெடுல்ல எங்களுக்கு டைம் ஒதுக்குனது ரொம்ப நன்றி...!

புஷ்ப்பராஜ் : ( கையில படமே இல்ல. என்ன பண்ணுறது) உங்கள மாதிரி இதழ்ல என் பேட்டி வரதுக்கு எனக்கும் ரொம்ப பெருமையா இருக்கு..!

நிருபர் : சரி... பேட்டிக்கு போவாமா ஸார்...!
புஷ்ப்பராஜ் : கண்டிப்பா...!

நிருபர் : ஹீரோவ அறிமுகமான நீங்க இப்போ வில்லனா நடிக்கிருங்க... ஏன் இந்த திடீர் முடிவு. மறுபடியும் ஹீரோவா நடிப்பிங்களா ?

புஷ்ப்பராஜ் : ( நான் என்ன ஹீரோவா நடிக்க மாட்டேனா சொன்னேன். எவனும் ச்சான்ஸ் தர மாட்டேங்கிறான்) ஹீரோவா நடிக்கிறது விட வில்லனா நடிக்கிறது ரொம்ப கஷ்டம். எல்லா படத்திலையும் ஹீரோனா நாலு பாட்டுக்கு டான்ஸ், அஞ்சு பாட்டுனு போய்டலாம். வில்லனா அப்படியில்ல ஒவ்வொரு படத்துல கொலைய வித விதமா பண்ணணும். ரேப் பண்ணனும். ஹீரோ கிட்ட அடிவாங்குறது மட்டும் இல்லாத, அவங்க அம்மா, தங்கச்சினு குடும்பத்துகிட்ட அடிவாங்குற மாதிரி சீன் வரும். அது எல்லாம் என்ன மாதிரி திறமையான கலைஞன் தான் செய்ய முடியும்.

சாகுற மாதிரி சீன் பார்த்த கூட வில்லன் பாத்திரம் தான் ரொம்ப வசதி. ஹீரோ அடிப்பட்டாலும் கடைசி வரைக்கும் சண்டை போடனும். தூப்பாகி குண்டு பட்டாலும், அவனே கத்திய வச்சி குண்டு எடுத்து ட்ரிட்மென்ட் எடுக்கனும். சாகும் போது துடிச்சு, கஷ்டப்படு, இம்சப்பட்டு செத்தா தான் ஜனக ஏத்துப்பாங்க ! ( ஜனக ஏத்துப்பாங்களோ இல்லையோ டைரக்டர் அப்ப தான் டேக் 'ஓ.கே' சொல்லுவாரு )

வில்லன் அவ்வளவு கஷ்டப்பட தேவையில்ல... படம் முழுக்க ஜாலியா, வசதியா வரலாம். பொண்ணுங்க, சுமோ, பங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கலாம். ஹீரோ ஒரு கத்தி வீசினாலும், தூப்பாகியால ஒரு குண்டு சுட்டாலும் டக்குனு செத்திடலாம். ரொம்ப சிரமப்படாம சாகலாம்.

ஹீரோ பணக்காரணாகனும்னா ரொம்ப கஷ்டப்படு உழைக்கனும். ‘விக்கரம்’ மாதிரி டரைக்டர் தான் ஒரே பாட்டுல பணக்காரனாக்குவாரு. மத்தவங்க பட முழுக்க ஹீரோவ ரொம்ப கஷ்டப்படு உழைக்க வைப்பாங்க. வில்லன் ஒரு சீன்ல பணக்காரன் ஆகலாம். எம்.பி, எம்.எல்.ஏ, மந்திரி உதவி வச்சி அடுத்த சீன்ல பணக்காரன் ஆகலாம். நம்ப ‘தமிழ் சினிமா’ பொருத்த வரை வில்லன் பெரும்பாலும் பணக்காரங்களா தான் இருப்பாங்க ! வில்லன முன்னுக்கு கொண்டு வர நேர்வழியே கிடையாது. குறுக்கு வழியில தான் முன்னுக்கு வருவான்.

இது எல்லாத்துக்கு மெல வில்லன நடிக்கிறதுக்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கு. ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் இல்ல இரண்டு ஹீரோயினோட தான் டூயட் பாடமுடியும். அதுவும் மெயின் ஹீரோயின் தொடமா நடிக்க வேண்டியது இருக்கும். ஆனா வில்லன் அப்படியில்ல... ஒவ்வொரு சீன்லையும் பத்து பொண்ணுங்களோட வரலாம். பெரிய பட்ஜெட் படமா இருந்தா ‘பிகினி’ போட்ட பொண்ணுங்க கூட வருவாங்க. இப்படி சந்தோஷமா, ஜாலியா இருந்துட்டு கடைசியா ஒரு சீன் மட்டும் அடிவாங்கி சாகனும். ஹீரோ ஒரு பொண்ண கட்டி பிடிக்குறதுக்காக படம் முழு கஷ்டப்பட்டு அடிவாங்கி ஜெய்க்கனும்.

ஒரே சமயத்துல வில்லனா நாலைஞ்சு படம் நடிக்கலாம். ஹீரோவ ஒண்ணு, இரண்டு படம் தான் நடிக்கம் முடியும்...

புஷ்பராஜ் பேசிக் கொண்டு இருக்க நிருபர் எழுந்து செல்ல தொடங்கினார்.

புஷ்பராஜ் : எங்க பதில் சொல்லி முடிக்கிறதுகுள்ள கலம்பிட்டீங்க....?
நிருபர் : இந்த பதிலே எங்க வார இதழ்ல இரண்டு பக்கம் வரும். இன்னும் நீங்க பேசி எல்லாம் பதிவு பண்ணா, அடுத்த வாரம் இதழ்ல முழுக்க உங்க பேட்டி மட்டும் தான் வரும்.

புஷ்பராஜ் நிருபரையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

நிருபர் : அடுத்த வாரம் வந்து இன்னொரு கேள்வி கேட்கிறேன். இத மாதிரி பதில் சொல்லுங்க. 'ஹாய் புஷ்பராஜ் !' சொல்லி இரண்டு பக்கம் உங்களுக்காக ஒதுக்கி தரோம்.

இப்படி சொல்லிவிட்டு நிருபர் 'எஸ்' ஆனார்.

“ஓ...இப்படி தான் எல்லாரும் 'பத்தி' எழுத்தாளரானங்களா...” என்று நடிகர் புஷ்பராஜ் மனதில் நினைத்துக் கொண்டார்.

Saturday, April 25, 2009

பிரம்மிக்க வைத்த சிறுவன்

பள்ளி, புத்தகம் எல்லாவற்றையும் விட ஒருவனுக்கு வாழ்க்கை எவ்வளவு கற்று தரும் என்பதற்கு இந்த சிறுவன் ஒரு மிக பெரிய உதாரணம்.

அவனை யூ ட்யூப்பில் பார்க்க..

Friday, April 24, 2009

பசி

24 மணி நேரம் பிரௌசிங் !
அடையாளம் இல்லாத நாற்காலி !
ஸ்டேடஸ் என்ற பெயரில்
வீனாக்கிய காகிதங்கள் !
மற்றவர் முகத்தை விட
அதிகமாய் பார்த்த கணினி !

விரல் நுணி
வாசித்த கீ போட்...
வாதங்களை தனிப்பட்ட முறையில்
எடுத்துக் கொள்ளாத சில நண்பர்கள் !

நேரம் கெட்ட நேரத்தில்
காபி மெஷினில் குடித்த காபி !

தவறுகளை குறித்து வைத்து கொண்டு
சம்பள உயர்வு சமயத்தில்
நினைவு படுத்தும் மேலாளர்கள் !

இயந்திரங்களோடு இந்திரமாய்
இருந்து விட்ட வாழ்ந்துவிட்ட போதிலும்
‘நான் மனிதன்’ என்று உணர்த்துகிறது
- ‘பசி’ !!

Thursday, April 23, 2009

'கடல் புறா' - மூன்றாம் பாகம் சுருக்கம்

கடல் புறா மூன்றாம் பாகம் இரண்டு பகுதியாக பார்ப்போம்.

அஷயமுனை கைது செய்யப்பட்ட பலவர்மனுடன் இளையபல்லவன் கடலில் பயணம் செய்துக் கொண்டு இருக்கிறான். அப்போது இரண்டு கலிங்கத்து மரகலத்துடன் போர் புரிந்து அவன் கைப்பற்றுகிறான். இளையபல்லவன் கைப்பற்றிய மரக்கலத்தில் காஞ்சனை, குணவர்மனும் கைதிகளாக இருப்பதை பார்த்து இருவரையும் விடுவிக்கிறான். கடல் புறா 'கடல் மோகினி' நோக்கி செல்வதை கேள்விப்பட்ட பலவர்மன் அஞ்சி நடுங்கிறான். கடல் புறாவை திருப்பவும் சொல்கிறான். ஆனால், அவன் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் 'கடல் மோகினி' நோக்கி செல்கிறான் இளையபல்லவன்.

தமிழர்கள் வசம் இருந்த கடல் மோகினி கங்கதேவன் என்னும் தலைவன் கலிங்கத்தை ஆதரிக்கும் ஸ்ரீ விஜயத்தின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதை தெரிந்துக் கொள்கிறான். உண்மை அறிந்த இளையபல்லவன் தன் மரக்கலங்களில் கலிங்கத்துக்கு கோடியை பறக்க விட்டு கடல் மோகினிக்கு செல்கிறான். குணவர்மனை ரகசிய அறையில் வைத்து விட்டு, காஞ்சனையை மஞ்சளழகி என்று கங்கதேவனிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். பலவர்மனை பார்த்தவுடன் கொன்று விட துடிக்கும் கங்கதேவன் அவர்கள் அரச காரியத்திற்காக அவர்களை எதுவும் செய்யாமல் தன் தீவில் தங்க வைக்கிறான்.

தன் தீவுக்கு வந்த இளையபல்லவனை, அவன் உபதளபதிகளையும் விருந்துக்கு அழைக்கிறான் கங்கதேவன். விருந்துக்கு வந்தவர்கள் உள்ளே நுழைந்ததும் கங்கதேவன் கைது செய்கிறான். கங்கதேவன் ஆபத்தான எதிரி என்று முன்பே யுகித்த இளையபல்லவம் தான் அகூதாவின் தளபதி என்று அறிமுகம் படுத்துகிறான். அதுமட்டுமல்லாமல் கடாரத்தை கொள்ளையடிக்க தன்னுடன் கூட்டனி சேரும்ப்படி ஆசை வார்த்தை காட்டுகிறான்.

இளையபல்லவனை ஒப்பந்ததை ஏற்றுக் கொள்ள மஞ்சளழகி என்று அறிமுகப்படுத்தப்பட்ட காஞ்சனையை கேட்கிறான். தன் ஆபத்தான நிலைமை உணர்ந்த இளையபல்லவன் காஞ்சனை மீது தனக்கு பற்று இல்லாதது போல் காட்டிக் கொள்கிறான். இதனால், இருவரும் கூட்டு சேர்கிறார்கள். அதே சமயம் கங்கதேவன் மாலுமிகளிடம் காஞ்சனையுடன் யார் தவறாக நடந்துக் கொண்டாலும் அவர்களை உயிருடன் விட மாட்டேன் என்று கூறுகிறான்.

இளையபல்லவன் குணவர்மனை கங்கதேவனிடம் ஒப்படைத்து சிறை வைக்கிறான்.இளையபல்லவன் சதி திட்டத்தை அறிந்த கடாரத்தின் இளவரசியான காஞ்சனை கோபம் கொள்கிறாள். காஞ்சனை இளையபல்லவனிடம் கோபமாக வாதம் செய்ய கங்கதேவன் அவளை கை பிடித்து தன் மாளிகை அழைத்து செல்ல பார்க்கிறான். இளையபல்லவன் கங்கதேவனிடம் காஞ்சனையை விடும் படி சொல்கிறான். அவன் மறுக்க, இருவரும் சண்டையிடுக்கின்றனர். இறுதியில் இளையபல்லவன் கங்கதேவனை கொன்று விட்டுகிறான். காட்டில் ஒலிந்திருந்த தமிழர்களுடம் இளையபல்லவனுக்கு ஆதரவாக வருகின்றனர்.



ஒன்பது மாதம் பிறகு....

கலிங்கத்துக்கு ஆதரவாக இருந்த ஸ்ரீ விஜய தீவுகளை கைபற்றிவிட்டு காஞ்சனையை பார்க்க கடாரத்துக்கு செல்கிறான் இளையபல்லவன். ஆனால், அவனுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்துக் கொண்டு இருப்பதை அப்போது தான் தெரிந்துக் கொள்கிறான். தனது நண்பனான அநபாயன் வீரராஜேந்திர தேவர் ஆணைப்படி தன்னை கைது செய்ய வந்திருப்பதை ஒரு வீரன் தெரிவிக்கிறான்.

அதே சமயம் அநபாயன் கைது செய்து சிறையில் வைக்கும் போது அங்கு தப்பிக்கவும் திட்டம் கொடுக்கிறான். ஆனால், இளையபல்லவன் அதை செய்ய மறுக்கிறான். அதனால், அநபாயன் அமீரின் துணையோடு இளையபல்லவனை மயக்கடைய செய்து காஞ்சனையுடன் அஷயமுனைக்கு கடல் புறாவில் அனுப்புகிறான்.

மயக்க தெளிந்த இளையபல்லவன் கடல் புறாவில் தன் தலைமையை மதிப்பு இல்லை என்று உணர்கிறான். தன் தந்திரத்தால் அமீர், கண்டிதேவன் இருவரையும் கடல்புறாவை ஸ்ரீ விஜய்த்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'மலையூர்' பக்கம் திருப்பிவிடுகிறான். முதலை வாயில் இருப்பதை உணர்ந்த அமீர், மீண்டும் இளையபல்லவனை தலைமை ஏற்க்கும்மாறு கூறுகிறான்.

கடல் புறா விஜயசந்திரன் என்னும் உபதளபதி தலைமையில் மலையூர் படைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர். விஜயசந்திரப் ஆபாரா போர் திறமை கடல் புறா ஒரளவு சேதமானது. ஆனால், இறுதியில் இளையபல்லவனே வெல்கிறான். கைது செய்யப்பட்ட விஜயசந்திரனிடன் அவன் தளபதிக்கு கடிதம் எழுத சொல்கிறான். அவனும் எழுதிக் கொடுக்கிறான். அந்த கடிதத்தை இளையபல்லவனே எடுத்துக் கொண்டு மலையூர் தளபதியை சந்திக்க செல்கிறான்.

அங்கு சென்றவுடன், அவனுக்கு பெரும் அதிர்ச்சி. மலையூருக்கு தலைவனல்ல.. தலைவி...அதுவும் 'மஞ்சளழகி' அந்த இடத்தில் அமர்ந்திருந்தாள். அதன் பிறகு ஜெயவர்மன் தன்னை மகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பதையும், அவளிடம் மலையூரை கட்டுப்பாட்டில் விட்டதையும் தெரிந்துக் கொள்கிறான்.

மஞ்சளழகி இளையபல்லவன் மீது இருந்த காதலால் அவனுடைய கடல்புறாவை அழிக்காமல் விட்டுவிடுகிறாள். தந்தை ஆணைப்படி கேட்கும் உபதளபதியின் கவனைத்தை திசை திருப்ப உதவுகிறாள். இதனால், எந்த பெரிய யுத்தமில்லாமல் மலையூரை இளையபல்லவன் கைப்பற்றுகிறான்.

மலையூர் கைப்பற்றிய கையோடு ஜெயவர்மனின் ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்கிறான். போரில் வெற்றி பெற்ற இளையபல்லவனுக்கு பரிசாக வீரராஜேந்திர தேவர் வண்டை குறுநிலத்தை பரிசாக அளிக்கிறான். காஞ்சனை, மஞ்சளழகி இருவரையும் மணக்கிறான் இளையபல்லவன்.

மூன்றாம் இனிதே முடிவடைந்தது !!

Wednesday, April 22, 2009

தேர்தல் வந்தாச்சு

தேராத மக்கள் எல்லாம் ஒன்று கூடி
தெருவோரம் இருந்தவனை தேர்வு செய்ய
தேர்தல் என்னும் தேர்வு எழுத வந்தோங்க !
ஒவ்வொரு முறை தேர்வு எழுதியும்
அரியர்ஸ் வச்ச மாணவன் போல்
ஒரே இடத்தில் இன்னும் இருக்கோங்க..!

நல்ல தலைவர் வருவாங்கனு நம்பி
குத்திக்கிட்டோமே கரும்புள்ளி !
நமக்கு ஒரு நல்ல காலம்
எப்போ வருமோ விடிவெள்ளி !

வெறுமையா இருந்த சுவரெல்லாம்
வண்ண மையமாக மாறுது !
கவர்ச்சி காட்டி நடித்த சிட்டுகள்
இப்போ சேலை கட்டி சீட்டு கேட்குது !

வருவான வரி குறைக்கிறேன்னு
ஒருத்தன் சொல்லுறான் !
ஈழ பிரச்சனை தீர்வு காண்போம்னு
ஒருத்தி சொல்லுறாள் !
வடக்கு பக்கம் போனா
ராமர் கோயில் கட்டுரதா சத்தியம் பண்ணுறான் !
இந்தியா உயர்த்தி காட்டுவேனு
சத்தமா சபதம் செய்யுறான் !

அடடா உங்க பாசமெல்லாம்
இத்தன நாளா எங்க ஒலிச்சு வச்சிங்க..!
தேர்தல் வந்தா மட்டும்
காவேரி, ஈழம் கண்ணுக்கு தெரியுதே !

தேராத மக்கள் எல்லாம் ஒன்று கூட போறோமே
இந்த முறையாவது பாஸ் மார்க் எடுப்போமா.... ?



தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

ஈழ தமிழர்களுக்கு எதிராக
கொடுத்த ஆயுதங்களை திரும்ப பெறுவோம் !
நம்மிடம் உள்ள ஆயுதங்களை
தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் மூலம் காட்டுவோம் !

Tuesday, April 21, 2009

ஓட்டை தவிற்கும் வாக்காளர்கள்

“கள்ள ஓட்டுப் போட்டால் இரண்டு வருஷம் தண்டனை
நல்ல ஓட்டுப் போட்டால் ஐந்து வருஷம் தண்டனை”
- தண்டனை வேண்டாம் என்பதற்காக பெரும் பாலும் யாரும் ஓட்டுப் போடவே வருவதில்லை.



முன்பு ஒரு முறை செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி. தங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தராததால், அந்த கிராமமே தேர்தலை புறக்கனித்தனர். சமிபத்தில் பீகார் தேர்தல் எனக்கு மீண்டும் இந்த செய்தியை நினைவுப்படுத்தியிருக்கிறது. நடந்த பாராள மன்ற தேர்தலில் பீகாரில் 46 % மட்டுமே வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

பாதிக்கு மேற்ப்பட்டவர்கள் ஓட்டு போடாமல் இருக்க ஏதாவது ஒரு காரணம் இருக்கும். பாதிக்கு மேல் ஓட்டு போடாமல் இருந்தாலும் கிடைத்த ஓட்டுக்களை வைத்து வெற்றியாளர்களை நிர்ணயம் செய்யும் ஜனநாயக நாட்டில் தான் நாம் இருக்கிறோம். ஒரு தொகுதியில் ஐம்பது சதவீதம் பேர் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய விஷயம். அதை பற்றி யோசிக்காமல் அடுத்த மாநிலத்தில் நடக்கும் தேர்தலை பற்றி தொலைக்காட்சி ஊடகங்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

தேர்தலை புறக்கணிப்பவர்கள் தங்கள் ஓட்டுகள் பற்றி விழிப்புணர்வு இல்லையா அல்லது தங்கள் பிரதிநிதி தேர்வு செய்ய அ க்கறையில்லையா என்று புரியவில்லை. எது எப்படி இருந்தாலும், பாதிக்கு மேல் வாக்குகள் பதிவாகாத போது அந்த பகுதிக்கு வெற்றியாளர் என்று யாரையும் அறிவிக்க கூடாது.

ஆட்சி அமைக்க பாதி வாக்குகள் பதிவாகாத தொகுதியில் யாரோ ஒரு வெற்றியாளரை அறிவிப்பதால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்து விட போகிறது. தங்கள் பிரதிநிதியை தேர்வு அவர்களுக்கே கவலையில்லாத போது கடமைக்கென்று ஒரு வெற்றியாளர் அறிவிப்பதால் ஓட்டு போடாத ஐம்பது சதவீதம் மக்கள் அவரை மதிக்கவா போகிறார்கள்.

இப்படி ஐம்பது சதவீதம் குறைவான வாக்குகள் பதிவான இடத்தில் மாவட்ட ஆட்சியாளர் பொருப்பில் ஒப்படைக்கலாம். இரண்டு வருடம் கலித்து தங்களுக்கு ஒரு பிரதிநிதி வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நினைத்தால் ஒரு இடைத்தேர்தல் நடத்தலாம்.

நான் சொல்வதற்கு காரணத்தை பீகார் தேர்தலை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். பீகாரில் மட்டும் ஓட்டுக்கள் 46% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மிதம் உள்ளவர்கள் தேர்தலை புறக்கனிக்கிறார்கள். வெற்றி பெரும் வேட்பாளருக்கு 16 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும். இரண்டாவதாக இருக்கும் வேட்பாளருக்கு 12 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும். மூன்றாவதாக இருக்கும் வேட்பாளருக்கு 10 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும். மிதம் 8 சதவீதம் இதற வேட்பாளருக்கு ஓட்டுக்கள் கிடைக்கும். இறுதியில் நூறு சதவீத ஓட்டுகளில் 16 சதவீத ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு வருகிறார். இதற்கு பெயர் நாம் ஜனநாயகம் என்றால் அது நம்முடைய பேதமை ?

இப்படிப்பட்ட இடங்களில் வெற்றியாளர் அறிவிக்காமல் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கொடுத்தால், தங்களின் பிரதிநிதியை பற்றின முக்கியதுவத்தை மக்கள் உணர்வார்கள். அவர்களின் அவசியத்தை புரிந்துக் கொள்வார்கள்.தங்கள் கஷ்டங்களை தீர்வு செய்ய மக்கள் தேர்தல் அரசாங்கத்தை நாடுவார்கள். அப்போது, இது போன்ற பகுதியில் இடைதேர்தல் நடத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் கிடைத்த ஓட்டுகளில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவதால், ஓட்டுப்போடாதவர்கள் செய்யும் தவறு அவர்களுக்கே தெரிவதில்லை.

தேர்தலை புறக்கனித்தால் அவர்களுக்கு அடிப்படை வசதி வந்துவிடுமா என்ன ? இப்படி கேள்வி எழுப்பினால் அவர்கள் எழுப்பும் கேள்வி ஓட்டுப் போட்டால் மட்டும் எங்கள் குறை தீர்ந்து விடுமா ? நம்பிக்கை இல்லாத வேட்பாளருக்கு ஓட்டுப் போடத்தான் வேண்டுமா ? தவறான ஒருவரை தேர்ந்தெடுத்து தீர வேண்டுமா ? என்று பல கேள்விகள் எழும்.

எந்த வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லாத வாக்காளர்கள் குறைந்தது 49 ஓ பிரிவில் பதிவு செய்யுங்கள். தேர்தல் நடக்கும் இடத்தில் வாக்களார்கள் 49 ஓ பிரிவில் ஒரு காகிதத்தில் பதிவு செய்தால், அந்த வாக்காளர்கருக்கு எந்த வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லை என்று பொருள். இப்படி ‘யார் மீதும் நம்பிக்கை இல்லை’ என்று வாக்காளர்கள் ஓட்டுப் போடலாம்.

பின் சேர்க்கை :

பெரும்பான்மை மக்கள் ஓட்டு போடாமல் இருப்பது ஜனநாயக தவறு என்றால், ' எந்த பிரதிநிதி வேண்டாம்' என்று நினைக்கும் மக்களிடம் வலுக்கட்டாயமாக ஒரு பிரதிநிதியை தினிப்பதும் 'ஜனநாயக எதிரானது'. அது தான் நம் நாட்டில் இது வரை நடந்துக் கொண்டு இருக்கிறது. அரசாங்கதை குறை சொன்னால் ஒவ்வொருவர்கள் மீது விரலை தான் காட்டுவார்கள்.

ஒரு தொகுதியில் வெற்றியாளர் என்ற அறிவித்து மக்கள் எண்ணத்திற்கு எதிராக நடக்காமல் இருந்தால், வரும் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும்.எண்பது சதவீதம் வாக்குகள் பதிவாகும் நிலைமை வரும்.அரசாங்கத்தை திருத்துவது பெரிய வேலை. தேர்தலில் நாம் ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரட்டும். பிறகு அரசாங்கத்தை திருத்துவதை பார்த்துக் கொள்ளலாம்.

Monday, April 20, 2009

என் முதல் ஆங்கில பதிவு : Decision from heart

நான் எழுதிய சிறுகதையை நானே மொழியாக்கம் செய்யாவிட்டால் யார் தான் செய்வார்கள் :)...

நான் எழுதிய 'மனசாட்சி சொன்னது' சிறுகதை மொழியாக்கம் செய்து பதிவு ஏற்றியுள்ளேன்.

Will this time my effort will come true..? It’s my third attempt. I don’t know why I failed to get it in last two interviews. Too many things are getting into Ramesh mind. Will his dream comes true tomorrow?

Ramesh's project manager Ram coming to his cabin.

“Hello ramesh... you look very tensed today "

“Yes ram...! I feel much embarassed. If I got this time, my entire life will get change..."

"Don’t worry.... you are key person for success of our project. I hope u will get it...."

After short advice, ram left ramesh’s cabin. It’s very easy to advice anyone but very difficult to follow it. His last two visa application got rejected by America embassy. This is third time his visa getting processed. If Ii got visa, two years life in America with good salary. Everything is possible only after getting US visa.

Twin-tower explosion brings lots of restriction in getting US visa. There is no perfect reason why visa getting rejected. They won’t say why the reason for rejecting it. Some people will advice we need to emotionally control during interaction consultant. Other says we should always be smile at consultant. Small mistake in application, visa might get rejected. Let see what going to happen for me tomorrow.

Next day....

Ramesh spend restless night. He was waiting more than two hours in America embassy. if visa reject, whole waiting time will be waste. To be frank, I am losing my patience. Suddenly, one white man came out and call " Ramesh" with loud voice.

Now, Ramesh got into US consultant’s cabin. After half-hour interview, Ramesh feel more tensed.

"So..Mr.Ramesh. your H1B visa is granted. "

"Thank you" said Ramesh without showing any expression in his face.

"All the best Ramesh!" - US consultant.

Ramesh feels like he in heaven. His lifetime ambition becomes true now. Two years life in America, everything will be settled.

He ringed his Project manager Ram and informing about his H1B visa. Next day... he gives treat to his friends and colleagues. Purchasing new suit, shoes..., preparing himself as an American.

31st dec, 2006 night..

Eve of new year... Ramesh packing out his things. He needs to be in America on 4th of Jan. During packing his cloths, suddenly he noticed flash news in television and got stunt for a while...ramesh totally struck. He doesn’t know what to do next?

Next day. fine morning.

Ramesh got into Ram's cabin. "Hi! ram, I want your time to speak for few minutes"

“Yes, ramesh. Are you ready to go US ?"

“Sorry ram. I am not willing to US now. I like to work from India itself"

"Why ? What happen man..? Why u suddenly change your decision..?"

"Sorry to saying this in last minute. But i have no choice. I don’t want to go America..."

"Any personal reason for your sudden change..?"

"Not personal reason... for world cause..."

"World cause? I didn’t get u ...?"

“Have you watched yesterday news about Saddam Husain execution?”

"Yes... but what that news link with your decision..?"

"It has... our IT professionals are keeping on working for American projects, but they are just concentrating only on wars. Last fifty years... you know how many people are killed by Americans. Japan, Vietnam, Afganistan, Cuba and now...Iran. Why like this happening...?"

" See ramesh... you talking about world politics. Do you think your decision will change entire thing...?"

"I know my decision will not change anything...but I feel guilty for supporting them indirectly. We are working for them and indirectly funding them for a war... who knows tomorrow they may announce war against India."

"What you says correct. But please reconsider your decision. It’s your many years dream. Don’t demolish it for small reason..."

"Sorry ram...this is not small reason. If every IT professional took same decision entire world scenario may change. Please don’t try to convince me. I took this decision from my heart. There is no room for reconsider it."

"Please understand what I am trying to say..."

"Extremely sorry ram... if you try to force, I have only option to put my papers.."

"Ok ramesh. It’s up to you. One thing I need to say.... you loosing very good opportunity...."

"I never mind. I don’t want to be guilty. Let put full stop for this."

"Ok. I will do necessary thing. Please send your decision in mail. I will take it forward."

"Thanks ram. Thanks for time."

"Ok. you carry on your work."

Everyone in Ramesh's team understands his feeling, but some people were saying his decision was stupid. In this world, one man cannot change anything... project manager ram sends another person for America.

பரிசு பெற்ற ஒரே காரணத்திற்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். உங்கள் கருத்தை கூறுங்கள்.

Sunday, April 19, 2009

சிறுவன், சிறுமி - நீதி கதை

மின்னஞலில் வந்த ஆங்கில கதையின் தமிழாக்கம்….

ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாட வருகிறார்கள். சிறுவன் கோலி குண்டுகளுடனும், சிறுமி இனிப்புகளுடனும் வந்தார்கள்.

சிறுவன் சிறுமியிடம் கோலி குண்டுகளுக்கு இனிப்பு மாற்றிக் கொள்ளலாம் என்று கூறுகிறான். சிறுமியும் அதை ஏற்றுக் கொள்கிறாள்.

சிறுவன் பெரிய கோலிகளை சிறுமிக்கு தெரியாமல் தன்னுடன் வைத்து கொண்டு சிறிய கோலிகளை சிறுமிக்கு கொடுக்கிறான். ஆனால், சிறுமி தன்னுடன் இருக்கும் எல்லா இனிப்புகளையும் சொன்னப்படி சிறுவனுக்கு கொடுத்துவிடுகிறாள்.

இரவு தூங்கும் போது…

சிறுமி நிம்மதியாக தூங்குகிறாள். ஆனால், சிறுவன்… தன்னை போல் அவளும் பெரிய இனிப்பை மறைத்து வைத்துக் கொண்டு சிறிய இனிப்பு தன்னிடம் கொடுத்திருப்பாளோ என்ற சந்தேகத்துடன் தூங்காமல் இருக்கிறான்.

நீதி : - நாம் சதவீதம் உண்மையாக இல்லாமல் இருந்தால், மற்றவர் நூறு சதவீதம் உண்மையாக இருந்தாலும் அவர்கள் மேல் நமக்கு சந்தேகம் வரும்.

Saturday, April 18, 2009

'கடல் புறா'- இரண்டாம் பாகம் சுருக்கம்

கடல் கொள்ளையரான இளையபல்லவன் தன் உப தளபதிகளான அமீர், கண்டிதேவனுடன் அஷயமுனை தீவை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கிறான். முதல் பாகத்தில் படைத்தலைவனாக வந்த இளையபல்லவன் எப்படி கடல் கொள்ளைக்காரனாக ஆனான் விளக்கத்தை தன் சொல்கிறான். கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருக்கும் ஸ்ரீ விஜயத்தின் கடற்படை பலத்தை சிதைக்கவே தான் கடல் கொள்ளையனான அகூதாவுடன் ஒராண்டு பயிற்சி எடுத்ததை சொல்கிறான். இப்போது தன் லட்சிய பாதையை நோக்கி தன் உபதளபதிகளுடன் அஷயமுனை தீவைக்கு வருகிறான்.

அஷயமுனை தீவு அதன் தலைவன் பலவர்மன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அஷயமுனை ஸ்ரீ விஜயத்துக்கு ஆதரவாக இருப்பதை தெரிந்தும் இளையபல்லவம் தன் உபதளபதிகள் உதவியில்லாமல் தனியாக தீவுக்குள் செல்கிறான். முதலில் அவனை கொல்ல நினைக்கும் பலவர்மன், இளையபல்லவன் அகூதாவின் பெயரை பற்றி சொன்னதும் அஞ்சுகிறான். தன்னுடன் நட்புறவு வைத்துக் கொண்டால் அஷயமுனை தீவு பாதுகாக்கப்படும் என்பதையும் இளையபல்லவன் சொல்கிறான். அப்போது பலவர்மனுடைய வளர்ப்பு மகள் மஞ்சளழகி அங்கு வருகிறாள்.



அந்த தீவில் பௌர்ணமி திருவிழா நடக்கும் சமயத்தில் இளையபல்லவன் வந்தால் அவனுக்கு புர்வகுடி தலைவனான வில்வலனால் ஆபத்து வருமா என்று பலவர்மனும், மஞ்சளழகியும் அஞ்சுகிறார்கள். மஞ்சளழகி அந்த திருவிழா வில்வலன் செய்யும் கொடுமைகளையும், கொலைகளையும் பற்றி சொல்கிறாள். ஒரு வேலை வில்வலன் இளையபல்லவனை கொன்றாலும் அஷயமுனைக்கு ஆபத்து இருப்பதை பலவர்மன் உணர்ந்தான். ஆனால், இளையபல்லவன் எதற்கும் அஞ்சாமல் அந்த விழாவில் தன் உபதளபதிகளுடன் கலந்துக் கொள்கிறான்.

திருவிழாவில் மஞ்சளழகி ஆடும் போது இளையபல்லவனை நோக்கி ஒருவன் குறுவாள் வீசும் போது உபதளபதி அமீர் தன் குறுவாள்ளால் கொல்கிறாள். இதை பார்த்த வில்வலன் கோபன் கொண்டு இளையபல்லவன் சண்டைக்கு அழைத்து தோல்வியும் அடைகிறான். தோல்வியுற்ற வில்வலன் பலவர்மனிடன் இன்னும் சிறு நாட்களில் அஷயமுனையை அழித்துவிடுவதாக சுழ்ழுரைத்து செல்கிறான்.

அஞ்சி நடுங்கிய பலவர்மன் ஒரு திட்டம் போடுகிறான். தன் மகளை இளையபல்லவனுக்கு திருமணம் செய்து வைத்தாள் தன் கோட்டை பாதுகாக்கும் தளபதி கிடைக்கிறான். அவன் திருமணத்துக்கு மறுத்தால் தன் மகளிடம் தவறாக நடந்து கொண்டான் என்று சொல்லி கொன்றுவிடலாம் என்று திட்டம். பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவனை யாராக இருந்தாலும் அகூதா மன்னிக்கமாட்டான் என்பதை அந்த தீவில் உள்ளவர்கள் அனைவருக்கு,ம் தெரிந்த உண்மை.

மஞ்சளழகி தன் தந்தையின் இந்த திட்டத்தை பற்றி சொல்கிறாள். ஒன்று திருமணம் அல்லது மரணம் என்ற நிலையில் இளையபல்லவன் தள்ளப்படுகிறான். அவளை திருமணம் செய்துக் கொள்ள இளையபல்லவன் சம்மதிக்கிறான். அதுமட்டுமல்லாமல், தன் கப்பலில் இருக்கும் செல்வத்தை எல்லாம் பலவர்மன் செல்வத்துடன் இணைத்து சேந்தனை பாதுக்காக்கும் படி சொல்கிறான். அஷயமுனை இருக்கும் மக்களுக்கு போர் வில்வலனை எதிர்க்கும் போர் பயிற்சியும் கொடுக்கிறான்.

இதற்கிடையில், மஞ்சளழகி வைத்து பலவர்மன் ஆடும் அரசியல் பகடையை பார்த்து இளையபல்லவன் மனதில் சந்தேகம் எழுகிறது. அவள் பலவர்மனின் வளர்ப்பு மகள் பிறகு தெரிந்துக் கொள்கிறான். தன் உபதளபதி கண்டிதேவனை தன் கப்பலை மாற்றியமைக்க சொல்கிறான். கண்டிதேவன் கொள்ளை கப்பலை புறாவடிவத்தில் மாற்றியமைக்கிறான். அதற்கு ஒரு மாதம் நேரமும் எடுத்துக் கொள்கிறான். மாற்றியமைத்த கப்பலுக்கு 'கடல் புறா' என்ற பெயர் வைக்கிறான் இளையபல்லவன்.

இளையபல்லவன் அஷயமுனையில் எல்லா வகை மதுக்களையும் சுவைத்து பார்க்கிறான். அவன் குடிப்பதை பார்த்து பலவர்மன் இளையபல்லவன் முழு குடிகாரனாக மாறிவிட்டதை நினைத்து சந்தோஷப்படுகிறான். என்னென்றால், பலவர்மன் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவை மறைமுக இளையபல்லவன் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறான் என்று தெரிந்துக் கொண்டான். வில்வலனை நேரம் பார்த்து தன் தீவை தாக்கும்படி பலவர்மனே யோசனை சொல்கிறான். மஞ்சளழகி மூலம் அஷயமுனையில் காவலை குறைக்க வைக்கிறான் பலவர்மன். இளையபல்லவன் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று பலர் வியந்தனர்.

இளையபல்லவன் குடிபழக்கத்துக்கு அதிகம் அடிமையாகிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலவர்மன் அவன் குடிக்கும் மதுவில் விஷம் கலக்கிறான். ஆனால், இளையபல்லவன் மது அறிந்திருந்தாலும் நிதானம் இழக்கவில்லை என்பது அப்போது தெரிந்தது. தன் உபதளபதிகளுக்கு ரகசிய உத்தரவுப்படி வில்வலனை தாக்குதலை எதிர்கொள்ள போருக்கு தயாராக இருந்தனர்.

வில்வலனை கொன்று அஷயமுனை பாதுக்காக்க படுகிறது. யுத்தம் முடிந்த பிறகு அகூதா வருகிறான். மஞ்சளழகி தன் சகோதரி மகள் என்று இளையபல்லவனிடம் கூறுகிறான். அதுமட்டுமல்ல.... தன் சகோதரியை பலவர்மனும், ஜெயவர்மனும் சேர்ந்து கடத்தி சென்றனர் என்றும், மஞ்சளழகியின் தந்தை ஜெயவர்மன் என்றும் உண்மையை சொல்கிறான். அகூதா பலவர்மனை கொல்ல நினைக்கும் போது இளையபல்லவன் அவனை தடுத்து தனக்கு உதவியாக கடல் பயணத்துக்கு அழைத்து செல்கிறான். மஞ்சளழகியிடம் அஷயமுனையை ஒப்படைத்து விட்டு கடல் புறாவில் பயணம் மேற்கொள்கிறான்.

இரண்டாம் பாகத்தில் நச் வசனங்கள்..

மஞ்சளழகி இளையபல்லவனை சந்தித்த போது....

மஞ்சளழகி : நீங்கள் மாவீரன்...!

இளையபல்லவன் : நன்றி

மஞ்சளழகி : உங்களுக்கு அடக்கமும் இருக்கிறது..

இளையபல்லவன் : நன்றி

மஞ்சளழகி : வெட்கமும் இருக்கிறது உங்களுக்கு..

இளையபல்லவன் : சில சமயங்களில் அந்தக் குணம் ஆண்களுக்கும் தேவையாயிருக்கிறது.

மஞ்சளழகி : உங்களுக்கு விஷமமும் இருக்கிறது..

இளையபல்லவன் : என்ன ?

மஞ்சளழகி : நீங்கள் மாவீரன் என்றேன் - அடக்கத்தை காட்டினீர்கள். உங்களுக்கு அடக்கமிருக்கிறதென்றேன் - வெட்கத்தை காட்டினீர்கள். வெட்கமிருக்கிறதென்றேன் -என்னை குத்திக் காட்டி உங்களுக்கு விஷமமும் உண்டு என்பதை நிரூபித்தீர்கள்.

இளையபல்லவன் : ஏன் ?

மஞ்சளழகி : அடக்கம் வீரத்துக்கு அடையாளம். வெட்கம் பண்பாட்டுக்கு அடையாளம். விஷமம் ரசிகத் தன்மைக்கு அடையாளம்.


காஞ்சனை மீது இளையபல்லவனுக்கு காதல் இருப்பதை பற்றி மஞ்சளழகி கேட்க.. அதற்கு இளையபல்லவன் "மனம் ஒன்றுதான். எனக்கு அது சிக்கி இருக்கும் சிறைகள் இரண்டு. அது எப்பக்கம் இழுபடுமோ தெரியாது".

இறுதியில் இளையபல்லவம் மஞ்சளழகியை விட்டு பிரியும் போது, " இந்த அலையை போல தான் நீங்களும் என்ற அன்றே சொன்னேனே..? அலையும் என்னைத் தொட்டுவிட்டுப் போகிறது. நீங்களும் அப்படித்தான் போகிறீர்கள்." என்கிறாள். இதே வார்த்தையை மூன்றாம் பாகத்திலும் இளையபல்லவன் நினைத்து மஞ்சளழகிகாக வருந்துவது வாசகர்களை இரண்டாம் பாகத்தை நினைவுப் படுத்த வைக்கிறார்.

Thursday, April 16, 2009

சாண்டில்யன் எழுதிய 'கடல் புறா' - முதல் பாகம் சுருக்கம்

சமிபத்தில் ஒரு நாவலை படிக்க நான் இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டதில்லை. மூன்று பாகங்கள் கொண்ட இந்த சரித்திர நாவல் வீரராஜேந்திரன் காலத்தில் 'தமிழ் - கலிங்க' எல்லை விவகார சமயத்தில் நடக்கிறது. கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களுக்கு காரணம் ஏன் இருக்க கூடாது என்ற சிந்தனையில் இந்த நாவல் பிறந்ததுள்ளது. அநபாய குலோத்துங்கனின் ஸ்ரீ விஜயப் பயணத்தையும் இந்த நாவலில் சாண்டில்யன் சேர்த்துள்ளார்.

சரித்திர நிகழ்வுகளை வைத்து நாவலாக படிக்கும் அனுபவம் மிகவும் வித்தியாசமான ஒன்று. அதுவும் இந்த நாவலில் கப்பல் பயணத்தை பற்றி விபரிக்க போதும், போர் கப்பல் அமைப்புகளை பற்றி சொல்லும் போதும் நடுகடல் பயணத்தில் இருப்பது போல் இருந்தது.

இருபத்தியைந்து பதிப்பு அச்சான நாவலை பற்றி இதற்கு மேல் விளக்க எனக்கு தகுதியில்லை என்று தான் தோன்றுகிறது.



கதை சுருக்கத்துக்கு போவோம்.

புகார் நகரத்தில் இருந்து வீரராஜேந்திர சோழரின் சமாதான ஒலையுடன் பாலூர் பெருந்துறைக்கு சோழர்களில் படை தலைவனான இளையபல்லவன் என்று அழைக்கப்படும் கருணாகர பல்லவன் வருகிறார்.

அங்கு சுங்க அதிகாரியான சேந்தன் இளையபல்லவனை போகாமல் தடுத்து பாலூர் பெருந்துறையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்குகிறார். சோழர் இளவரசர் அநபாயன் கைது செய்யப்பட்டதையும், அவர் அந்த சிறைசாலையில் இருந்து தப்பித்ததையும் கூறுகிறார். இளையபல்லவனை ஒரு ரகசிய அறையில் மறைத்து வைக்கிறார் சேந்தன்.

கலிங்க படை தன்னை வருவதை உணர்ந்த இளையபல்லவன் தப்பித்து விருந்தினர் விடுதிக்கு நுழைக்கிறார். அங்கு, கடாரத்து இளவரசியையும் காஞ்சனாதேவியையும், அவள் தந்தை குணவர்மனையும் சந்திக்கிறார். குணவர்மனை கொல்லும் சதி நடப்பதை பற்றி இளையபல்லவன் சொல்கிறார். ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை ஆழும் ஜெயவர்மன் குணவர்மனின் சகோதரன். ஜெயவர்மன் கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருப்பதால் , கலிங்கத்தின் பாலூரில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை குணவர்மன் உணர்கிறார்.

குணவர்மனிடம் பேசிக் கொண்டு இருந்த போது 'வெண் புறா' அநபாயனின் செய்திக் கொண்டு அந்த அறைக்கு வருகிறது. புறா வந்த சில நாழிகளில் ஒரு காவலன் அநபாயன் அழைப்பதாய் சொல்லி அழைத்து செல்ல , அவனை கைது செய்ய தயார் நிலையில் கலிங்கத்து அரசன் பீமன் இருந்தான். சுங்க அதிகாரி போர்வையில் இருந்த சோழர் தூதன் சேந்தனும் கைது செய்யப்பட்டான்.

மறு நாள் மரணத்தை பற்றி நினைத்த சேந்தனை பார்த்து இளையபல்லவம் அநபாயன் நம்மை காப்பாற்ற வருவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இளையபல்லவனும், சேந்தனும் நீதிமன்றத்தில் அனந்தவர்மன் முன் நிறுத்தப்படுகின்றனர். அப்போது, அநபாயன் அனந்தவர்மன் முன் தோன்றி அவர்களை விடுவிக்க சொல்கிறார். காஞ்சனாதேவி அனந்தவர்மன் மார்ப்புக்கு குறிவைத்து வில்லோடு நின்றாள்.

தப்பித்து வந்த இளையபல்லவன் காஞ்சனை தன்னை காதலிப்பதை பற்றி தெரிந்துக் கொள்கிறார். பாலூரில் இருந்து தப்பிக்க அநபாயன் கடல் கொள்ளையரான அகூதா, அவன் சீடனான அமீர், கண்டிதேவன் உதவியை நாடுகிறார். அவர்களும் திட்டம் வகுத்து காஞ்சனையும், குணவர்மனையும் பாதுகாப்பாக தப்பிக்க வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தப்பி செல்வதை பார்த்த பீமன் தன் படையோடு பின் தொடர்ந்து செல்கிறான். அவர்களை திசை திருப்ப இளையபல்லவன் அவர்களோடு சண்டை போடுகிறான். பலத்த காயங்களுடன் உயிரை துச்சமாக மதித்து இளையபல்லவன் சண்டை போட்டுக் கொண்டு இருக்க, இளையபல்லவன் நிலையை நினைத்து கடலில் காஞ்சனை பயணம் செய்வது போல் முதல் பாகம் முடிகிறது.

முதல் பாகத்தில் காட்சி விபரங்களை விட மிகவும் ரசித்தது வசனங்களை தான்.

காஞ்சனை அறையில் மறைந்திருந்த இளைபல்லவனை பார்த்து...
" நீ எதிரியா...?" காஞ்சனை.

"இல்லை"

" அப்படியானால் கள்வனாயிருக்க வேண்டும்"

"கள்வனுமல்ல..."

"அப்படியானால் தமிழனா ?"

இந்த கேள்வி மேலும் பிரபிப்பையே அளித்தது இளையபல்லவனுக்கு."கள்வனாயிராவிட்டால் தமிழனாயிருக்க வேண்டுமா ?" என்று வினவினான். தமிழர்களைத்தான் சில நாள்களாகக் கலிங்க அதிகாரிகள் சிறைக்குள் தள்ளி வருகிறார்கள்.


குணவர்மன் இளையபல்லவனிடம் தன் கதையை சொல்லும் போது, " இது உலக விசித்திரம். வேண்டாதவனிடம் பதவி ஒட்டிக் கொள்கிறது. வேண்டுபவனை வெட்டி விலக்கி தள்ளுகிறது." என்கிறார்.

நீதி மன்ற விசாரனையின் போது...

அனந்தவர்மன் " சோழர் வேறு இனம்; கலிங்கம் வேறு இனம்"
இளையபல்லவம் : மாந்தர் அனைவரும் ஒரே இனம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தவிர இன்னொரு நாட்டவரின் அதிக்கத்தைவிட ஓர் இனம் தன் இனத்தின் மீதே நடத்தும் ஆதிக்கம் மிகக் கொடுமையானது. சரித்திரம் இதற்குச் சான்று.."
அனந்தவர்மன் : சரித்திரம் இதுவரை காணாத புதிய சான்றுகளை கலிங்கம் அளிக்கும்.


இந்த வசனத்தை படிக்கும் போது ஈழ பிரச்சனைக்கு கலிங்கம் முன் உதாரணமாக இருக்கின்றது என்று தான் தோன்றியது. பல இடங்களில் இப்படி பல ‘நச்’ வசனங்களும் உள்ளன.

பல ஆங்கில படத்தில் இருந்து கதை, வசனத்தை தழுவும் தமிழ் இயக்குநர்கள், இது போன்ற நாவல்களில் இருந்து கதை, வசனங்களை உரிமை வாங்கி எடுத்தால் எழுதுபவர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

புத்தக வாசகர்கள் ‘கடல் புறா’ கண்டிப்பாக படிக்க வேண்டிய சரித்திர நாவல்.

Saturday, April 11, 2009

வரதட்சனை வாங்குறது தப்பில்லைங்க....

‘பொற்காலம்’ படத்தில் ஒரு காட்சி...

" நம்ப மனசுல ஊனத்த வச்சிக்கிட்டு... ஊருல இருக்குறவங்களோட ஊனத்த பத்தி பேசி என்ன பண்ணுறது. உன் தங்கச்சிக்கு 'ராசா' மாதிரி மாப்பிள்ளை வேணும்னு நினைச்சியே... என்ன மாதிரி கருப்பா... அசிங்கமா இருக்குறவங்க உன் கண்ணுக்கு தெரியல... நீ மட்டும் என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா... உன் தங்கச்சிய நான் கல்யாணம் பண்ணி என் பொண்ணாட்டியாக்கியிருப்பேன்"

தங்கைக்கு திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் முரளியிடம் வடிவேலு இப்படி வசனத்தை பேசுவார். வடிவேலு பேசுவதை கேட்டு தன் தங்கையை அவனுக்கு திருமணம் செய்து வைக்க முரளி சம்மதிப்பார். மண்சட்டி விற்பவனே மண்சட்டிக்காரனுக்கு பெண் கொடுக்காவிட்டால் அவனுக்கு எப்படி தான் திருமணம் ஆகும்..? இந்த இடத்தில் பல வரன்கள் முரளியிடம் 'வரதட்சனை' கேட்டதால் தான் 'வடிவேலுவுக்கு' பெண் கொடுக்க சம்மதிக்கிறார் முரளி. அதனால் ‘வரதட்சனை வாங்குறது தப்பில்லைங்க....’

இந்த கட்டுரை தொடர்ந்து படிக்கும் நீங்கள் இரண்டு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளவும்.
* காதல் திருமணத்தில் வரதட்சனை வாங்குவதை நான் ஆதரிக்கவில்லை.. எதிர்கிறேன். இரண்டு மனம் சேர்ந்த பிறகு ஜாதகம், ஜாதி பார்ப்பது எப்படி தவறோ அதே போல் 'வரதட்சனை வாங்குவதும் தவறு.

* திருமணத்துக்கு பிறகு பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பி பணம், நகை வாங்கி தர சொல்லுவதும் தவறு. இரண்டு பேர் வாழ்க்கையை பங்கு போடும் எல்லாமே சரி பாதியாக இருக்கும் போது ஒருவர் மட்டும் இதில் துயரப்படக் கூடாது.

அப்போ... வரதட்சனை எப்போது தான் வாங்க வேண்டும் ? அது தப்பில்லை என்று சொல்ல முடியும் ?

இதற்கு பதிலை சில சம்பவங்களோடு சொல்கிறேன்.

1. சில மாதங்களுக்கு முன்பு விஜய் டி.வியில் “நீயா ? நானா?” நிகழ்ச்சியில் ஒரு திருமணம் ஆகாத பெண் தனக்கு வர போகும் கணவனுக்கு என்ன தகுதி வேண்டும் என்று சொல்கிறாள் தெரியுமா... " 1/2 கிரவுன்ட் பிளாட், கிரடிட் கார்ட், பைக்" வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறாள். அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான பெண்கள் வருங்கால கணவன் பற்றி சொல்லும் போது வசதிகளை பற்றி தான் அதிகமாக சொன்னார்கள். கணவன் அதிமாக அன்பு காட்ட வேண்டும், தன் மீது அக்கரை செலுத்த வேண்டும் என்று எந்த பெண்ணும் சொல்லவில்லை.இப்படிப்பட்ட பெண்ணை, ‘கட்டிய புடவையோடு வா, கண்கலங்காமல் வாழ வைக்கிறேன்’ என்று சொன்னால் ஆண்களை நம்ப மாட்டார்கள். இவர்களிடம் வரதட்சனை வாங்குறதில் தவறு என்ன இருக்கிறது.
2. இரண்டு வருடங்களுக்கு முன்பு, பெண்ணை வெளிநாட்டில் இருக்கும் இந்தியனுக்கு கொடுப்பதை பெண் வீட்டினர் ரொம்ப பெருமையாக நினைத்தனர். எவ்வளவு செலவு செய்தாலும் பரவாயில்லை. அவர்கள் பெண் வெளிநாட்டில் வாழ்வதை சொந்தக்காரர்களிடம் பெருமையாக சொல்லவேண்டும். இதற்கு பெற்றோர்கள் மட்டும் காரணமல்ல, ஒரு சில பெண்களும் தங்களுக்கு வர போகும் கணவன் வெளிநாட்டில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பதும் ஒரு காரணம்.
இவர்களுக்கு ஆண்கள் பாஸ்போட்டாகவும், விசாவாகவும் தான் தெரிகிறார்கள். வெளிநாட்டை பார்க்க ஆசைப்படும் பெரும்பாலான படித்த பெண்கள் வேலைக்கு போகிறவர்கள் தான். அவர்கள் தங்கள் அலுவலகத்தின் மூலம் செல்வதை விட்டுவிட்டு... ஒரு ஆண்ணை பாஸ்போட்டாக தேர்வு செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

பத்து பெண் வீட்டார்களிடம் வரதட்சனை கேட்டால், நான்கு பேராவது வரதட்சனை கொடுக்க முடியாமல் லோக்கலில் இருக்கும் ஒரு பையனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். இதில் 'வரதட்சனை' நான்கு ஆண் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறது.

3. என் எழுத்துலக நண்பர் ஒருவர். 33 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. உடலில் எந்த குறையும் இல்லை. ரொம்ப நல்லவர். மாதம் 15000 ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். பல பெண் வீட்டார்கள் அவர் ஜாதகத்தை பார்க்காமலே நிராகரித்துவிட்டனர். காரணம், அவர் ஒரு 'வழக்கறிஞர்'.
என் ஒன்று விட்ட அண்ணன் மார்க்கெட்டிங் வேலையில் இருக்கும் போது ஒவ்வொரு காரணத்தை சொல்லி பெண் வீட்டினர் தட்டி கலித்தனர். 32 வயதான பிறகு 'மேனேஜர்' தகுதி கிடைத்த பிறகே திருமணம் நடந்தது.
டாக்டர், இன்ஜினியர் போன்றவர்கள் திருமணத்துக்கு 'வரதட்சனை' வாங்குவதால் தான் பிரஸ் பிரிட்டிங், சேல்ஸ், ஷாப் கிப்பர்ஸ் போன்ற ஆண்களுக்கு திருமணம் நடக்கிறது. டாக்டர், இன்ஜினியர்கள் வரதட்சனை வாங்க நிருத்திவிட்டால் எல்லா பெண்களும், பெண் வீட்டினரும் டாக்டர், இன்ஜினியர் மாப்பிளை தேடுவார்கள். அப்போது மற்ற வேலை செய்பவர்கள் நிலைமை யோசித்து பாருங்கள்.

மேட்டிரிமோனி இணையத்தளத்தில் ஒரு பெண் தன் பயோடேட்டாவும் தனக்கு வரபோகும் கணவனுக்கான தகுதியையும் குறிப்பிட்டிருந்தாள். அதில் Software Engineers’ தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருந்தாள். தனக்கு வர போகும் கணவனின் தகுதி பற்றி சொல்ல ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், 'Software Engineer ' வேண்டாம் என்று பகிரங்கமாக சொல்வதின் மூலம் அந்த வேலை செய்துக் கொண்டு இருப்பவர்கள் மணம் புண்படுகிறது. கஸ்தூரி பாய், சுதா நாராயண மூர்த்தி போன்ற பெண்கள் மனைவியாக கிடைக்கும் என்றால் காலில் கூட விழலாம். மற்றவர்கள் மனம் புண் படுத்தும் இந்த பெண்ணிடம் ஒரு ஆண் வரதட்சனை கேட்டால் தவறில்லை. கடைசியில் வரதட்சனை கொடுக்க முடியாமல் அந்த பெண் ஒரு 'Software Engineer ' ஆண்ணையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் அமையலாம்.

ஒரு காலத்தில் 'Software Engineer ' மாப்பிளை வேண்டும் என்று தவம் கிடந்த பெண் வீட்டினர் எத்தனை பேர். இன்றைய பொருளாதார வீழ்ச்சியில் ஒரு பெண் 'Software Engineer ' வேண்டாம் என்கிறாள். ஒரு வேலை திருமணத்துக்கு பிறகு பொருளாதார வீழ்ச்சியடைந்தால் அந்த பெண் கணவனை விட்டு சென்று விடுவாளோ என்னவோ.!!

மதிப்புக்குறிய பெண்களே ! ஒரு ஆண் 'நர்ஸ் பெண் வேண்டாம்' என்று பகிரங்கமாக சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா....!

“ஆண் வீட்டினர் வாழ வரும் பெண் முக்கியம் என்று நினைக்க வேண்டும்” என்று வாதாடும் பெண்கள். இருபது, முப்பது வயது ஆ ணிடம் அ ம்பானி அளவில் சொத்தை எதிர்பார்க்கும் பெண்களை பற்றி பேசுவதே இல்லை.

என் அலுவக நண்பர் திருமணத்துக்கு நல்ல பெண்ணா என்று பார்த்தால் போதும். வரதட்சனை என்ற பெயரில் வியாபாரம் செய்ய வேண்டாம் என்று சொன்னார். பல மேடை பேச்சை கேட்டு அப்படியே ஒப்பித்துவிட்டார்.

அவரிடம் நான் கேட்டது.. " ஒரு நல்ல பெண் தான் முக்கியம் என்றால் வேலைக்காரி, பிச்சைக்காரியை கூட திருமணம் செய்துக் கொள்ளலாமா ??" என்றேன்.

பிச்சைக்காரியும் பெண்தானே ! அவள் நல்லவள் என்றால் திருமணம் செய்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது என்றார்.

இந்த பதிலை தான் அவரிடம் இருந்து எதிர்பார்த்தேன். அப்படி என்றால், வரதட்சனை கொடுக்க முடியாதவர்கள் பிச்சைக்காரனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க வேண்டாம். பியூன், வார்ட் பாய், சேல்ஸ் மேன் பொன்றவர்களுக்கு கொடுக்கலாமே ! அவர்களில் நல்ல ஆண்கள் இருக்கிறார்களே ! இதை எத்தனை பெண் வீட்டினர் செய்வார்கள். இந்த வேலை செய்பவர்கள் பெண் கிடைக்காமல் எதோ ஒரு ஊரின் ஒதுக்கு புறத்தில் இருக்கும் கிராமத்தில் பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ( இதில் கூட அந்த கிராமத்தில் இருக்கும் ஆண் ஒதுக்கப்படுகிறான்)

வரதட்சனையால் எத்தனை திருமணம் நடக்காமல் இருக்கிறது ? எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சின்ன குழந்தை போல என் அலுவலக நண்பர் கேட்டார்.

இந்த உண்மை நம் நாட்டில் வளர்ச்சி அடையாத கிராமத்தில் வேண்டுமானால் நடக்கலாம். சென்னைக்கு பொருந்தவே பொருந்தாது. ஆண்களுக்கு எதிராக இருக்கும் 'வரதட்சனை வழக்கு' பாதிக்கு மேல் பொய் வழக்குகளே ! நடிகர் பிரஷாந்த், ஸ்ரீ காந்த் விவகாரத்தில் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 'வரதட்சனை சட்டம்' பெண்கள் ஆண்களுக்கு எதிராக தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்று பிரபல நாளிதழ் எழுயிருந்தது.

அம்பானியிடம் சம்மந்தம் பேச நினைத்தால் அவன் வரதட்சனை தான் கேட்பான். உழைத்து அம்பானி போல் ஆக வேண்டும் என்று நினைப்பவனுக்கு பெண் கொடுங்கள். வரதட்சனை ஓழியும். 'வரதட்சனை வளருவதே பெரிய இடத்தில் தன் பெண் வாழ வேண்டும்’ என்ற நினைப்பு தான் காரணம்.

மீண்டும் ஒரு முறை தெளிவாக சொல்கிறேன்.
திருமணத்துக்கு பிறகு வரதட்சனை வாங்குவது தவறு. காதல் திருமணத்தில் வரதட்சனை வாங்குவது பெரும் குற்றம்.

ஆனால், திருமணத்துக்கு முன்பு ஒரு முறை வரதட்சனை கேளுங்கள். தப்பில்லை. திருமணத்துக்கு பிறகு மீண்டும் அவர்களிடம் வாங்கிய வரதட்சனை கொடுக்கலாம். ஆனால், கேட்காமல் இருந்து விடாதீர்கள். அப்போது தான் வசதியில்லாத உழைக்கும் ஆண்களுக்கு திருமணம் நடக்கும்.

திருமணத்துக்கு முன்பு ஒரு முறை வரதட்சனை வாங்வது சட்ட விரோதமல்ல .. சமூக சேவை.

Friday, April 10, 2009

சிற்றிதழ் விமர்சனங்கள்

‘எனது கீதை’ நூலை பற்றி சிற்றிதழ் விமர்சனங்கள்

வாழ்க்கையின் யதார்த்த உண்மைகளை எடுத்துச் சொல்கிறார் குகன். 'நான் என்ன கலியுக கண்ணனா உபதேசம் செய்ய ?' என அவரது உரையில் கூறிவிட்டு 25 தலைப்புகளில் உபதேசக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

கவியரசரி கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலின் தாக்கம் சற்று அதிகமுள்ள இவரது நூல் பல நல்ல தத்துவங்களையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. சிறிய வயதில் பெரிய விஷயங்களைத் தொட்டிருக்கும் இவரது வரிகள் சிந்திக்க தூண்டுபவை.

- ‘இலக்கியப்பீடம்' மாத இதழ் , ஆகஸ்ட்,2007


'தன்னை மறந்த இறைவன் மனிதன்' என்பார் ஒரு அறிஞர். தன்னுள்ளே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டுருக்கிற மனிதன் தன்னைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டுருக்கிறான். எல்லா வாழ்வியல் நூல்களும் தன்னையறிதனாலேயே தலையாய நோக்காக, பொருளாக எடுத்துக் கொள்ளும். இதே வழியிலும், மரபிலும் நண்பர் குகனும் இந்நூலில் வாழ்வியல் தொடர்பாகப் பல கருத்துகளைத் தொகுத்துத் திரட்டித் தந்துள்ளார். எளிமை, இனிய உவமை சுமந்து வருகிற சம்பவங்கள் என்று நூல் சுவையாக சிறப்பாக அமைந்துள்ளது. மனித நேயம், நட்பு, காதல், குடும்பம், ஆன்மிகம் என்று மனிதம் தொடர்பான செய்திகள் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. படித்தும், பரிசளித்தும் இன்புறலாம். நூலின் நிறைவுப் பகுதியில் "உலகம் எனக்கு எதைக் கற்று தந்திருக்கிறதோ அதை நூலாக எழுதியிருக்கிறேன்" என அடக்கமாக குகன் தெரிவித்திருந்தாலும் கற்றதைவிடக் கற்க தருகிற திறனுக்காக அவரைப் பாராட்டி மகிழலாம்.

-‘கவிதை உறவு’ மாத இதழ், ஆகஸ்ட், 2006

என் புத்தகத்தையும் மதித்து விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். இப்போது தான் இதை பதிவில் ஏற்ற தோன்றியது.

Thursday, April 9, 2009

கிரடிட் கார்ட்

கந்துவட்டிக்காரனின் மறு உருவம் !
மார்வாடியின் அவதாரம் !
உங்களை கடனாலியாக்கி
பணக்காரர்களாவது தான் எங்கள் வியாபாரம் !

பெண் குரல் மூலம்
உங்களிடம் தொடர்பு கொள்வோம் !
பணம் தர மறுத்தால்
அவர்கள் வீட்டில் குண்டர்களை அனுப்புவோம் !

எமாந்தவர்கள் எங்கள் வாடிக்கையாளர்
சட்டம் தெரிந்தவர்கள் எங்கள் எதிரிகள் !

எங்களுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும்
ஒரு ஒற்றுமை உண்டு !
நீதி மன்ற தீர்ப்பை
மதிக்கும் பழக்கம் எங்களுக்கில்லை !!

எங்களுக்கும், 'அட்டை' பூச்சிக்கும்
சிறு வித்தியாசம்
அட்டை இரத்தத்தை உறிஞ்சும்
நாங்கள் பணத்தை உறிஞ்சுவோம் !!

கையெழுத்தால் அவர்களின்
தலையெழுத்தை மாற்றிய பெருமை எங்களுக்கு உண்டு !
கையெழுத்தை மாற்றி எழுதி
நாங்கள் ஏமாறப்பட்ட கதைகள் சில உண்டு !

நிபந்தனை ஏற்ப பயன்படுத்தினால்
சலுகைகள் மூலம் சொர்க்கத்தை காட்டுவோம்
மிறி நடப்பவர்களை கடன் அட்டையை
எமலோகத்தின் நுழைவு அட்டையாக மாற்றி கொடுப்போம் !

நானும் அலாவுதீன் விளக்கு ஒன்று தான்
தேய்க்க தேய்க்க…
பூதமும் வரும்
பூகம்பமும் வரும் !!


(5.4.09 அன்று நம் உரத்தசிந்தனை வெள்ளி விழாவில் சொன்ன கவிதை.)

Friday, April 3, 2009

ஜோ(கே)டி பொருத்தம்

இன்று எல்லா தொலைக்காட்சியிலும் பொதுவான நிகழ்ச்சிகள் தான் ஒளிப்பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான நிகழ்ச்சி 'ஜோடி பொருத்தம்'. 'நீ பாதி நான் பாதி', 'அன்பே அருயிரே' என்று பல தலைப்புகள் வைத்தாலும் நிகழ்ச்சி ஒன்று தான். இதோ என் கற்பனையில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி.....

தொகுப்பாளர் : ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதற்கு மகிழ்ச்சி. உங்க பேரு ஸார் ???
ஆண் : சம்பத்

தொகுப்பாளர் : நீங்க என்னவா இருக்கீங்க...
சம்பத் : சாப்ட்வேர் இன்ஜினியரா இருக்கேன்....

தொகுப்பாளர் : ஓ... நல்ல சம்பளம் உள்ள வேலனு சொல்லுங்க....
சம்பத் : ( வயத்தெறிச்சல கொட்டிக்காத... வேலைய விட்டு தூக்கி வீட்டுல தாண்டா இருக்கேன்...) அவ்வளவு அதிகமான சம்பளம் கிடையாது. ஏதோ குடும்ப நடத்துற அளவுக்கு...

தொகுப்பாளர் : சரி.... உங்க பெரு மேடம்...?
பெண் : ராணி...

தொகுப்பாளர் : எந்த ஊருக்கு ராணி...??
ராணி : ( இந்த மொக்கை ஜோக்க சின்ன வயசுல இருந்து கேட்டுயிருக்கேன். இதுக்கு பக்கத்துல இருக்குற என் புருஷன் வேற சிரிக்கிறான் பாரு...) ஈஈஈ.... என் வீட்டுக்கு நா தான் ராணி...

தொகுப்பாளர் : சரி... போட்டிக்கு நாம போவோம்..
சம்பத் : ( அப்பாடா... பேசி முடிச்சிட்டான்...)

தொகுப்பாளர் : போட்டிக்கு போறத்துக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு சின்ன கேள்வி...?
சம்பத் : ( மறுபடியும் ஆரம்பிச்சிட்டானே...) கேளுங்க...!

தொகுப்பாளர் : இந்த போட்டியில நீங்க ஜெய்ச்சு ஒரு லட்ச ரூபா வந்தா என்ன பண்ணுவீங்க...
சம்பத் : ( ஒரு டீ கட போட வேண்டியது தான். ஒரு ஆபிஸ்ல வேலை செய்யுறத விட முதலாளியா இருக்கலாம் ) என் பொண்ணாட்டிக்கிட்ட கொடுத்திடுவேன்.

தொகுப்பாளர் : அவ்வளவு பணத்தையுமா....
சம்பத் : ( ஆமான்டா...என்ன பார்த்தா ஏமாந்தவன் மாதிரி தெரியுதா.... ஒரு பொய் சொன்னவுடனே என் பொண்ணாட்டி எப்படி சிரிக்குறா பாரு ) ஆமாங்க...

தொகுப்பாளர் : மேடம் நீங்க அந்த பணத்துல என்ன பண்ணுவீங்க....
ராணி : ( நான் ஒரு பட்டு புடவை, நெகலஸ் வாங்குவேன்...) அவருக்கிட்ட கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டேன்...

தொகுப்பாளர் : (What a ideal couple !) சரி போட்டிக்கு போவம்... ஜோடி பொருத்தம்......

பின்னனி இசை ஒலிக்கிறது.

முதல் சுற்று

தொகுப்பாளர் : இந்த சுற்றுல... மனைவிமார்கள் கேசரி சமைப்பாங்க... கணவன்மார்கள் சாப்பிட்டு அவங்க மனைவி சமைச்சத கண்டு பிடிக்கனும்..சமைக்கிறதுக்கு பத்து நிமிஷம் தான் டைம்... ஸ்டார்ட்...

பத்து நிமிடத்திற்கு பிறகு...

இப்போ ஒவ்வொருத்தாரா வந்து கேசரி சுவைத்து பார்த்தனர். இப்போது சம்பத் முறை...

சம்பத் : இது தான் என் மனைவி சமைச்சது...

தொகுப்பாளர் : கிரேட்.... எப்படி சாப்பிடாம... பார்த்துமே கண்டு பிடிச்சிட்டீங்க...

சம்பத் : அவ சமையலுக்கு தனி ஸ்டைல் இருக்கு..அது எந்த பெண்ணுக்கும் வராது.. (நம்ப எத சமைக்க சொன்னோமோ.. அத சமைக்க மாட்டா... ரவா கேசரி பதிலா... ரவா உப்புமா செஞ்சிருக்கா... இத சாப்பிட்டு வேற சொல்லனுமா...)

தொகுப்பாளர் : அடுத்த சுற்று... கேள்வி - பதில் சுற்று. கணவன் - மனைவி இரண்டு பேர் கிட்டையும் தனி தனியா கேள்வி கேட்க போறேன்.

தொகுப்பாளர் : மிஸ்டர் சம்பத்… உங்க மனைவி கிட்ட தனியா சில கேள்விகள் கேட்கனும். நீங்க அந்த ரூமுக்கு போங்க...

கணவன் : ( அடி செருப்பால.. என் மனைவிகிட்ட தனியா உனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு) சரி ஸார்....

----

தொகுப்பாளர் : உங்க கணவன் கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன...?

ராணி: ரொம்ப நேர்மையான மனிஷன். நாலு பேர் கிட்ட கையேந்தி நிக்க மாட்டாரு ... ( அப்படி வாங்கியிருந்தா... பீரோ முழுக்க நகை வாங்கி போட்டிருபேனே... என் தலை எழுத்து, பொழைக்க தெரியாத ஆள் கிட்ட வாக்க பட்டுடேன்.)

தொகுப்பாளர் : உங்க கணவன் எப்போ எல்லாம் கோப படுவாரு..?

ராணி : அவருக்கு என் மேல் கோபமே வராது. ( வெட்க கெட்ட மனுஷன். எவ்வளவு திட்டினாலும் சொரனையில்லாம அப்படி நிக்கும்)

--

தொகுப்பாளர் : உங்க மனைவிக்கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன....?

சம்பத் : அவங்களோட சமையல் தான். சாதரனமா செய்யுற டிபன் கூட ரொம்ப வித்தியாசமா செய்வா...( சப்பாத்திய பூரி மாதிரி... இட்லி சைஸ்ல தோசனு ரொம்ப வித்தியாசமா பண்ணுவா..!)

தொகுப்பாளர் : உங்க மனைவி கோபப்படும் போது என்ன பண்ணுவாங்க...

சம்பத் : எதுவும் பேச மாட்டா... (நேரா கரண்டியால அடிக்க வருவா..)
தொகுப்பாளர் : இப்போ அடுத்த சுற்று... ஒவ்வொரு தம்பதியர்களுக்கும் இரண்டு நிமிஷம் தருவோம். இதுல கணவன் - மனைவி இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு, சேர்ந்திடனும். நாங்க ஏத்துக்குற மாதிரி காரணத்த வச்சி சண்ட போட்டு சேர்ந்த உங்களுக்கு 29'' டி.வி. பம்பர் பரிசும் உண்டு....

சம்பத், ராணி இருவரும் மெதுவாக பேசிக் கொள்கிறார்கள்.

ராணி : டி.வி ஷோவுல உங்கள திட்ட விரும்பல... முதல் ஒரு நிமிஷத்துக்கு என்ன திட்டுங்க... அடுத்த இரண்டாவது நிமிஷத்துல உங்கள சமாதானப்படுத்துற மாதிரி பேசுறேன். சைலண்ட் ஆயிடனும்... புரிஞ்சதா...

சம்பத் : சரிம்மா....

ராணி : எப்படியாவது 29'' டி.வி நாம தான் ஜெய்க்கனும்.

சம்பத் : ….. (முதல் தடவையா உன்ன திட்ட வாய்ப்பு கிடைச்சிருக்கு... விடுவேனா...)

தொகுப்பாளர் : முதல்ல.... சம்பத் - ராணி தம்பதியர்கள் சண்ட போட போறாங்க...

சம்பத் : ஏய்... ராணி ! காபி எங்க... ஆபிஸ்ல இருந்து வந்தவுடனே காபி கொடுக்க தெரியாதா...

ராணி : சாரிங்க.. உள்ள கொஞ்சம் வேலையா இருந்தேன்.

சம்பத் : ஏன்டி பொய் சொல்லுற... முண்டம்...

ராணி ; ... (எவ்வளவு தைரியம் இருந்தா... என்ன 'டி' போட்டு கூப்பிடுவ... டி.விக்காக சும்மா இருக்கேன்.)

சம்பத் : என்னடி சும்மா முறைக்குற.... போய் காபி கொண்டுவாடி... நாயே...

ராணி : ஏங்க என்ன இப்படி திட்டுறீங்க... இரண்டு நிமிஷத்துல காபி கொண்டு வந்திடுறேன்.

சம்பத் : ( இப்பே முப்பது ஸகேண்ட் ஆயிடுச்சு....) என்னால வெயிட் பண்ண முடியாது... எல்லாம் உங்க அப்பன சொல்லனும்..

ராணி : எதுக்கு எங்க அப்பாவ இழுக்குறீங்க...???

சம்பத் : உங்க அப்பாவ என்ன... அம்மாவை சேர்த்து இழுப்பேன்... பொண்ண பெத்து வைக்க சொன்னா.... பஜாரிய பெத்து வெச்சிருக்காங்க...

ஒரு நிமிடம் கடந்து விட்டது.

ராணி : எங்க அப்பா, அம்மா பத்தி பேசாதிங்க... எனக்கு கடவுள் மாதிரி...

சம்பத் : எல்லாரும் செத்த அப்புறம் கடவுள்... உங்க அப்பா, அம்மா தான் உயிரோட இருக்காங்களே....

இன்னும் குறைவான நேரம் தான் இருக்கிறது...

ராணி : நம்ப சண்டைய அப்புறம் வச்சிக்கலாம். இந்தாங்க காபி குடிச்சிட்டு சமாதானம் ஆகுங்க....

சம்பத் : என்னடி சமாதானம்... மன்னாங்கட்டி... பேயே...பிஸாசு...

ராணி : என்ன அப்புறம் வேணும்னாலும் திட்டலாம்.. இப்ப சமாதானம் ஆகுங்க...

சம்பத் : ( இப்ப விட்டா நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதே...) என்ன அப்புறம் கிப்புறம்னு சொல்லிட்டு... என்னால சமாதானம் ஆக முடியாது...

“டங்...டங்...” சப்தம் ஒலித்தது.

தொகுப்பாளர் : நேரம் ஆயிடுச்சு... உங்களால குறிப்பிட்ட நேரத்துக்குள்ள சண்டைய முடிக்கல்ல.... 29" கலர் டி.வி. தவர விட்டீங்க... பரவாயில்ல... அடுத்த சுற்றுக்கு... போவோம்..

ராணி : நிறுத்தியா... இந்த ஆளால கலர் டி.வி போச்சு... நீ பாட்டுக்கு பேசிட்டே போற...

தொகுப்பாளர் : மேடம்... சைலண்டா இருங்க... நீங்க பேசுறது எல்லாம் ரெகார்ட் ஆகுது...

ராணி : போய்யா... விளங்காதவனே... எங்க என் புருஷன்..

சம்பத் பயந்தப்படி தொகுப்பாளர் பின் ஒலிந்துக் கொண்டு இருந்தான். அதை கவனித்த ராணி சம்பத் சட்டையை பிடித்து இழுத்து வருகிறாள்.

ராணி : யோவ்... உன்னால எனக்கு கலர் டி.வி. போச்சு. அது கூட பராவாயில்ல... இத்தன பேரு முன்னாடி நாயே, பேயே,பிஸாசு, முண்டம் திட்டுற... உன்ன என்ன பண்ணுறேன் பாரு...

சம்பத் : அடிக்காதம்மா....வலிக்குது... எல்லாரும் பாக்குறாங்க...

ராணி : எல்லாரும் பாக்கட்டும்... எனக்கு கவலையில்ல...

கேடி பொருத்தம் நிகழ்ச்சி.... ச்சே... ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.

Thursday, April 2, 2009

தேடினேன் ஒரு தேவதை

சௌக்காரப்பேட்டை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது 'சேட்' பெண்கள் தான். அப்படிப்பட்ட 'சேட்' பெண்களை சைட் அடித்தப்படி குறுக்கும் நெருக்கான சந்துகளில் நடந்துக் கொண்டு இருந்தேன்.

வட இந்திய பெண்களை இறக்குமதி செய்தது போல் ஒவ்வொரு பெண்களும் இருந்தனர். ( வட இந்தியாவில் இருந்து இங்கு தயங்கியவர்கள் அப்படி தான் இருப்பார்கள்... இது கூடவா தெரியாதா..!!) வெள்ளை தோலை எல்லாம் அழகு என்று சொல்லும் முட்டாள் நானில்லை. ஒரு சிலர் பார்க்கும் படி இருந்தனர். ஒரு சிலர் சப்பாத்தி மாவு போல் தெரிந்தனர். எந்த பெண்ணையும் இரண்டு நிமிடம் மேல் பார்க்க முடியவில்லை.

என் கண்ணுக்கு மட்டும் என்னவோ சப்பாத்தி பெண்கள் தான் அதிகம் தெரிந்தனர். இப்படி வேடிக்கை பார்த்தப்படி நடக்கையில் ஒரு பெண் மீது தெரியாமல் இடித்துவிட்டேன்.

" ஸாரி..." என்ற சொல்லி அவள் முகத்தை பார்த்தேன்.

ஐஸ்வர்யா ராய்யின் மெழு சிலைக்கு உயிர் வந்தது போல் அவன் தேக நிறம் அவ்வளவு சிவப்பாக இருந்தது. நிச்சயமாக இவள் 'சேட்' பெண்ணாக இருக்க மாட்டாள் என்றே தோன்றியது.

காரணம், அவளை இடித்தவுடன் " முட்டாள்...உனக்கு கண்ணு தெரியல்ல..." என்று சுத்த தமிழில் திட்டினாள். ‘இந்தி’ கலப்படம் இல்லாமல் சுத்த தமிழில் பேசியதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்.

அழகான பெண் நம்மை திட்டி விட்டு சென்றால் தமிழ் நாட்டில் எண்பது சதவீதம் ஆண்கள் கவலையில்லாமல் அவளை பின் தொடர நினைப்பார்கள். அதை தான் நானும் செய்ய நினைத்தேன். நான் நினைத்து முடிப்பதற்குள் கூட்டத்தில் அவள் தொலைந்து போனாள். இல்லை... இல்லை...நான் அவளை தொலைத்துவிட்டேன்.

இவள் இந்த இடத்தில் இருப்பவளாக இருந்தால் கண்டிப்பாக இதே சந்து வழியாக தான் செல்வான் என்று தோன்றியது.

அடுத்த நாள்...

அதே சந்தில் அவளுக்காக காத்திருந்தேன். அவள் வரவில்லை. ஒரு வேலை உடம்பு சரியில்லையோ...!!

அதற்கு அடுத்த நாள்...

இன்றும் அவள் வரவில்லை... வேறு சந்து வழியாக சென்று இருப்பாளோ...

அடுத்த வாரம்...

இன்றைக்கும் அவளை காணவில்லை. வீடு மாறி வேறு ஏரியாவுக்கு குடிபுகுந்திப்பாளோ...

அடுத்த மாதம்...

இதோ மைலாப்பூல் சாலையில் தேவதையை பின் தொடந்து சென்றுக் கொண்டு இருக்கிறேன்.

கபாலிஸ்வரன் கோவிலில் கடவுளை வணங்கும் அழகை பார்க்கும் போது... அம்மன் சிலையே கடவுளை வணங்குவது போல் இருந்தது.

" 'அம்மன்' கூட கடவுள் தான்.... ஒரு கடவுள் எப்படி இன்னொரு கடவுளை வணங்க முடியும்...முட்டாள்??" என்று யாரோ என்னை திட்டியது போல் இருந்தது.

யார் திட்டினால் நமக்கென்ன... தொடரு அந்த தேவதையை...

சௌக்காரப்பேட்டை தொலைத்த தேவதையை எப்படி மைலாப்பூரில் கண்டுபிடித்தேன் என்று வியப்பாக உள்ளதா....!

ஒரு மாதத்திற்கு மேல் தொலைந்த பெண்ணுக்காக காத்திருக்க நான் என்ன பைத்தியக்காரனா...!! இவள் வேறொரு தேவதை.... என்னுடைய தேவதை தேடல் தொடரும்...

Wednesday, April 1, 2009

மாறுவது மனம்

"நான் செய்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அதை தொடர வேண்டும் என்று தான் மனம் சொல்கிறது. அவளிடம் பேசும் போதெல்லாம் எனக்கு கிடைக்கும் சந்தோஷம் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. அவள் மீது எனக்கு வந்த காதலை என் நண்பனிடம் கூறிய போது கடுமையான வார்த்தைகளில் என்னை திட்டினான். அவன் பேசியதிலும் ஒரு நியாயம் இருக்க தான் செய்கிறது. ஆனால், என்னை மாற்றிக் கொள்ளமுடியவில்லை.

சிரமப்படாமல் காதலி வேண்டும் என்றால் உறவில் இருக்கும் பெண்ணை காதலிக்க வேண்டும் என்பார்கள். நானும் அதை தான் செய்தேன். ஆனால், அவளிடம் என் காதலை கூறினால் இந்த உலகமே என்னை எதிரியாக பார்க்கும். காரணம், என் காதலுக்கு எதிரியே எங்கள் உறவு முறை தான். அவள் எனக்கு 'சகோதரி' முறை.

அவள் பெயர் மஞ்சுளா. என் எதிர் வீட்டில் தான் இருக்கிறாள். அவளை விட நான் இரண்டு வயது மூத்தவன். என்னை விட மூத்தவளை கூட திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், சகோதரி முறை இருப்பவளை எப்படி... நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. ஆனால், என் மனம் அது நடக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது. என் தந்தையும், அவள் தந்தையும் ஒன்று விட்ட சகோதரர்கள். எங்கள் தாத்தா இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். இரண்டு தலைமுறைக்கு முன்பு ஏற்ப்பட்ட இந்த உறவு முடிச்சு என் காதலுக்கு சுறுக்கு கயிறாக இருந்தது.

நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பள்ளியில் தான் படித்தோம், ஒன்றாக தான் விளையாடினோம். அவள் என்னை ஒரு முறை கூட 'அண்ணா' என்று அழைத்ததில்லை. அதனாலோ என்னவோ அவளை சகோதரியாக நினைக்க தோன்றவில்லை. ஒரு முறை அவளுக்காக ஆசையாய் ஒரு பாவாடை சட்டை வாங்கி வந்தேன். அவள் மெல்லிய இடையில் பாவாடை நிற்க்க மறுத்தது. நான் என் பெல்ட்டை அவள் பாவாடைக்கு அணிவித்து பதினைந்து வருடத்திற்கு முன்பே புரட்சி செய்தேன். இன்று என் காதலிலும் புரட்சியை செய்துள்ளேன்."

- இப்படி மகேஷ் தன் டைரியை எழுதிக் கொண்டு இருக்கும் போது...

" மகேஷ்... மகேஷ்... " என்று அம்மாவின் குரல் கேட்டது. மாடியில் இருந்து கீழே வந்தேன். மஞ்சுளா என் வீட்டுக்கு வந்திருந்தாள்.

" டேய்.. மஞ்சுளாவுக்கு அக்கவுன்ட்ஸ்ல ஒரு சந்தேகமா... அவளுக்கு சொல்லிக் கொடு.." என்று என் அம்மா கூறினாள். பல முறை அவளுக்கு சொல்லி தர விளையாட்டாக மறுத்திருக்கிறேன். அதனாலே என்னவோ என் அம்மா சிபாரிசுடன் சந்தேகம் கேட்டாள்.

" நீ மாடிக்கு போ மஞ்சுளா.... நா என் சட்டை போட்டுட்டு வரேன்..." என்றேன்.

அவளும் மாடிக்கு சென்றாள். பல முறை நானும், அவளும் மொட்டை மாடியில் அரட்டை அடித்திருக்கிறோம். அப்போது இல்லாத பயம் என் காதலை உணர்ந்த பிறகு எனக்கு என் மீதே நம்பிக்கை இல்லை. கீழ் அறையில் இருந்த என் அக்கவுன்ட்ஸ் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடி அறைக்கு சென்றேன்.

"எதுல டவுட் உனக்கு..." என்றேன்.

" இல்ல... உன் கிட்ட தனியா பேசனும். அதுக்கு தான் பொய் சொன்னேன் " - என்றாள்.

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

" நான் சொல்ல போறது தப்பானு தெரியல்ல. இருந்தாலும் உன் கிட்ட சொல்லுறதுக்கு எனக்கு பயமில்ல. அதனால தைரியமா சொல்ல வந்தேன்"

" விசு மாதிரி ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்லாம விஷயத்த சொல்லு..."

" உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணிகிட்டா உன்ன தான் பண்ணிப்பேன். ஐ லவ் யூ.."

நான் ஒரு கனத்தில் சந்தோஷப்படுவதா கோபப்படுவதா என்று தெரியாம்மல் தவித்தேன். அவள் என்ன நினைப்பாளோ என்று நினைத்து இது வரை காதலை மறைத்து வந்தேன். ஆனால், இப்போது என் கண் முன் சமூகம் எதிரியாக நிற்கிறது. அவள் காதலை மறுக்கிறேன்... இல்லை மறுக்க முயற்சிக்கிறேன்.

" உனக்கு என்ன பைத்தியமா... நா உனக்கு அண்ண முறை வேணும். இத நாலு பேரு கேட்டா என்ன நினைப்பாங்க..."

" மத்தவங்கள பத்தி எனக்கு கவல இல்ல... உன் மனசுல நான் இருக்கேன். உண்மைய ஒத்துக்கோ..."

" அப்படி எல்லாம் ஒன்னுமில்ல..." என் உதடுகள் மட்டுமே இந்த வார்த்தைகள் பேசின.

" பொய் சொல்லாத. உன் டைரிய படிச்சதுக்கு அப்புறம் தான். எனக்கு காதல சொல்ல தைரியம் வந்திச்சி..."

என் குரல் திக்கின. நான் டைரி எழுதி எடுத்து வைக்க மறந்தது அப்போது தான் நியாபகம் வந்தது. இருவரும் காதலிக்க தொடங்கினால் சகோதர, சகோதரி உறவை கலங்கப்படுத்துகிறமோ என்ற அச்சம் என் உள்ளுணர்வு உருத்தி கொண்டு இருந்தது.

"லூசாட்டம் பேசாத... உன் வீட்டுக்கு போ.." என்றேன்

பேசி பலன் அளிக்காததால் மஞ்சுளா என்னை கட்டி பிடித்துக் கொண்டாள். அவளை அடித்து தள்ள எனக்கு மனம் வரவில்லை. என் காதலும் வெளிவர தொடங்கியது. நானும் அவளை அணைத்துக் கொண்டேன். அப்போது, ஒரு குரல் ஒலித்தது. அது என் அம்மாவின் குரல்.

" டேய்.. என்னடா பண்ணுற...? "

நாங்கள் இருவரும் திடுக்கிட்டு நின்றோம்.

***

ரங்கசாமியின் கண்கள் சிவந்தன. குமார் கையை உடைக்க வேண்டும் என்று தோன்றியது. அவனை போன் போட்டு நேரில் வர சொன்னார். இயக்குநர் வாய்ப்பு தேடும் குமார் ரங்கசாமியை பார்க்க வந்தான்.

" உனக்கு டாரைக்ட் பண்ண வாய்ப்பு கொடுக்குறேன்." என்றார் தயாரிப்பாளர் ரங்கசாமி.

குமார் முகத்தில் சந்தோஷம் நிரம்பி வளிந்தது.

"ஆனா இந்த கதைக்கு இல்ல... வேற ஒரு நல்ல கதை கொண்டு வா..." - என்று ஒரு குண்டையும் சேர்த்து ரங்கசாமி போட்டார்.

"சார்... நான் ரொம்ப வருஷமா.. கஷ்டப்பட்டு யோசிச்ச கத... இது உங்களுக்கு பிடிக்கலையா...!" - ஏக்கத்துடன் கேட்டான் குமார்.

உரத்த குரலில், " முதல் படத்த எல்லாரும் பேசனும்னு... அண்ணி புருஷனின் தம்பி மேல ஆசப்படுறது, தம்பி பொண்ணாட்டிய படுக்க கூப்புடுறது, சின்ன பொண்ண கற்பழிக்கிறது மாதிரி படம் எடுங்க... அத என்ன மாதிரி ஏமாந்த தயாரிப்பாளர் தயாரிக்கனும்... சமுதாய அக்கர இல்லாம ஏன்டா சினிமாவுக்கு வருறீங்க..?”- கோபமாக ரங்கசாமி பேசினார்.

"என் கதைய பத்தி தப்பா சொல்லாதீங்க..." - ஒரு படைப்பாளனுக்கு வர கூடைய நியாயமான கோபம் குமாருக்கு வந்தது.

" இதெல்லாம் ஒரு கதனு வேற சொல்லுறியா... இது படமா வந்தா... நாளைக்கே அண்ண தங்கச்சி தனியா போனா தப்பா பேச மாட்டாங்க... உன் கிட்ட பேசி நேரத்த வீணாக்க விரும்பல.. உனக்கு இரண்டே முடிவு தரேன். இந்த கதை காப்பி ரைட்ஸ் எனக்கு கொடுத்திட்டு, ஒரு நல்ல கதையோட வா உனக்காக பணம் போட்டு படம் பண்ணுறேன். இல்ல அந்த கதைய வச்சி கோடம்பாக்கம் பக்கம் சுத்துரதா கேள்விப்பட்டேன். உன்ன சினிமா பக்கமே வர விடமா பண்ணிடுவேன் ஜாக்கிரதை…” - அதிகம் பேசி தன் நேரத்தை வீணாக்காமல் முடிவை தெளிவாக ரங்கசாமி கூறினார்.

சினிமா வாய்ப்பு கிடைப்பதையே குதிரை கொம்பாக இருக்கும் காலம். தான் துணை இயக்குனராக இருக்கும் போது தன்னுடைய இயக்குனர் நடிகர், நடிகைகளுக்காக கதையை மாற்றியிருப்பதை குமார் நினைவுக்கு வந்தது. வாய்ப்புக்காக கதையை மாற்றுவது தவறில்லை என்பது கோடம்பாக்கத்தின் சித்தாந்தம். அதை தான் குமாரும் உணர்ந்தான்.

“வேற கதையோட வரேன். ஆனா..ஒரு சின்ன சந்தேகம். புடிக்காத கதைக்கு ஏன் காப்பி ரைட்ஸ் கேக்குறீங்க.." - நியாயமான சந்தேகம் குமாருக்கு வந்தது.

" நாளைக்கு படம் பண்ணி பெரிய ஆளா வந்துட்டா... இந்த கதைய வச்சு படம் பண்ணமாட்டேனு என்ன நிச்சயம் ? நீ காப்பி ரைட்ஸ் கொடுத்தது அப்புறம், இத குப்பையில தான் போட போறேன். எனக்கு சமுதாய அக்கர இருக்கு.. முதல்ல போய் நல்ல கதையோட வா...!

"ஸரி ஸார் !... வேற கதையோட உங்கள பார்க்க வரேன்..." -என்று சொல்லி குமார் வெளியே செல்ல , தயரிப்பாளர் ரங்கசாமி “மாறுவது மனம்” கதையை கோபமாக கிலித்து குப்பையில் போட்டார்.

LinkWithin

Related Posts with Thumbnails