வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, April 22, 2009

தேர்தல் வந்தாச்சு

தேராத மக்கள் எல்லாம் ஒன்று கூடி
தெருவோரம் இருந்தவனை தேர்வு செய்ய
தேர்தல் என்னும் தேர்வு எழுத வந்தோங்க !
ஒவ்வொரு முறை தேர்வு எழுதியும்
அரியர்ஸ் வச்ச மாணவன் போல்
ஒரே இடத்தில் இன்னும் இருக்கோங்க..!

நல்ல தலைவர் வருவாங்கனு நம்பி
குத்திக்கிட்டோமே கரும்புள்ளி !
நமக்கு ஒரு நல்ல காலம்
எப்போ வருமோ விடிவெள்ளி !

வெறுமையா இருந்த சுவரெல்லாம்
வண்ண மையமாக மாறுது !
கவர்ச்சி காட்டி நடித்த சிட்டுகள்
இப்போ சேலை கட்டி சீட்டு கேட்குது !

வருவான வரி குறைக்கிறேன்னு
ஒருத்தன் சொல்லுறான் !
ஈழ பிரச்சனை தீர்வு காண்போம்னு
ஒருத்தி சொல்லுறாள் !
வடக்கு பக்கம் போனா
ராமர் கோயில் கட்டுரதா சத்தியம் பண்ணுறான் !
இந்தியா உயர்த்தி காட்டுவேனு
சத்தமா சபதம் செய்யுறான் !

அடடா உங்க பாசமெல்லாம்
இத்தன நாளா எங்க ஒலிச்சு வச்சிங்க..!
தேர்தல் வந்தா மட்டும்
காவேரி, ஈழம் கண்ணுக்கு தெரியுதே !

தேராத மக்கள் எல்லாம் ஒன்று கூட போறோமே
இந்த முறையாவது பாஸ் மார்க் எடுப்போமா.... ?தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

ஈழ தமிழர்களுக்கு எதிராக
கொடுத்த ஆயுதங்களை திரும்ப பெறுவோம் !
நம்மிடம் உள்ள ஆயுதங்களை
தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் மூலம் காட்டுவோம் !

2 comments:

" உழவன் " " Uzhavan " said...

//தேராத மக்கள் எல்லாம் ஒன்று கூட போறோமே
இந்த முறையாவது பாஸ் மார்க் எடுப்போமா.... ?//

இந்த முறைமட்டுமல்ல, எந்த முறையும் பாஸாக வாய்ப்பே இல்லை.

நல்ல கவிதை நண்பரே..

குகன் said...

// " உழவன் " " Uzhavan " said...
இந்த முறைமட்டுமல்ல, எந்த முறையும் பாஸாக வாய்ப்பே இல்லை.

நல்ல கவிதை நண்பரே..
//

பாராட்டுக்கும், வருவகைக்கும் நன்றி உழவன் :)

LinkWithin

Related Posts with Thumbnails