பெண்ணே உந்தன் அருகில்
நட்பின் பெருமையை உணர்ந்தேனே !
உன்னை நான் பிரிகையில்
காதலின் கொடுமையை அறிந்தேனே !
வருங்கால மணவாளனை பற்றி
கனவுகளைச் சொன்னாய் !
உன் காதலனாகத் தகுதியில்லை என்று
மறைமுகமாகக் காட்டினாய் !
உன் கனவு நாயகனுக்குத் தகுதியை
பயில நான் பல முறை முயன்றேன் !
எனக்கென்று ஒரு தனித்தன்மையை
இருப்பதை மறந்தேன் !
நட்பைக் கொண்டு
என் காதலை வென்றாய் !
நட்பாலே
என் காதலைப் பூட்டினாய் !
நானும், நீயும் நினைத்ததால்
நமக்குள் நட்பு வந்தது !
நான் நினைத்ததை
நீ நினைக்கும் வரை
நம்முள் காதல் வாராது !
நான் நினைத்ததை
நீ நினைக்கும் வரை...
நட்பாலே
என் காதல் பூட்டி இருக்கட்டும் !
நட்பின் பெயரில்
என் காதல் பாதுக்காக்கப் படட்டும் !
4 comments:
நல்லா இருக்குங்க குகன்.
என் காதல் பூடி இருக்கட்டும் ! /// பூட்டி???
தொடர்ந்து எழுதுங்கள். வித்தியாசமாய் முயலுங்கள்!!
அன்புடன்
ஆதவா
//உன் கனவு நாயகனுக்குத் தகுதியை
பயில நான் பல முறை முயன்றேன் !
எனக்கென்று ஒரு தனித்தன்மையை
இருப்பதை மறந்தேன் !//
நல்லாருக்கு..
//
ஆதவா said...
நல்லா இருக்குங்க குகன்.
என் காதல் பூடி இருக்கட்டும் ! /// பூட்டி???
தொடர்ந்து எழுதுங்கள். வித்தியாசமாய் முயலுங்கள்!!
//
மாற்றி விட்டேன். நன்றி ஆதவா..
//
" உழவன் " " Uzhavan " said...
நல்லாருக்கு..
//
நன்றி உழவன் :)
Post a Comment