இங்கிலீஷ் மிடியத்தில் படிக்கும் அன்பு பீச் கட்ட முடியாமல் அவன் அப்பா தமிழ் மிடியத்தில் சேர்க்கிறார்.எதிர் வீட்டில் வாத்தியார் மகனான ஜீவாவும் அன்பு படிக்கும் அதே வகுப்பில் படிக்கிறான். பள்ளி முதல் நாள் அன்றே அன்புவும், ஜீவாவும் சண்டை போடுகிறார்கள். படிப்பு, போட்டி, பாராட்டு என்ற எல்லா விஷய்ங்களிலும் அன்பு ஜீவாவை விட மிஞ்சி இருக்கிறான். அன்பு சண்ட மறந்து ஜீவாவிடம் நட்பு கரம் நீட்டியும் ஜீவா ஏற்ற்க மறுக்கிறான். இதற்கிடையில் ஜீவாவின் அக்கா கோபிகுட்டிக்கும், அன்புவின் சித்தப்பா மீனாட்சி சுந்தரத்திற்கும் மெல்லிய காதல். அன்பு, ஜீவா சண்டை பெரியவர்கள் சண்டையாக மாறுகிறது. அன்பு ஜீவா இணந்தார்களா ? சோபிகுட்டி, மீனாட்சி சுந்தரம் காதல் கைகுடியதா ? இரண்டு குடும்பம் சேர்ததா ? என்பது மீது கதை.

அன்பு, ஜீவா வரும் இரண்டு சிறுவர்கள் கதாநாயகர்கள். இரண்டு பேருமே நடிப்பில் பிண்ணி பேடல் எடுத்திருக்கிறார்கள். முதல் நாள் பள்ளியில் 'என் பேரு அன்பரசன் I.A.S' என்று சொல்லுவதும், அவனை பார்த்து மற்ற மாணவர்களும் தங்கள் புத்தகத்தில் B.E,MBBS,IPS போட்டுக் கொள்வதும் நல்ல சிந்தனை. கை தட்டல் குழந்தைகளை எந்த அளவிற்கு ஊக்கவிக்கும் என்பதை அன்புவாக வரும் சிறுவன் வாழ்ந்து காட்டியிருக்கிறான்.
படம் முழுக்க வில்லத்தனத்தை செய்யும் சிறுவனாக ஜீவா. வாத்தியாரான அப்பா அன்புவை பாராட்டும் போது பொறாமையில் காலை எழுந்து சத்தமாக படிப்பதும், அக்காவின் காதலை வீட்டில் உடைப்பதும், அப்பாவிடம் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று சொல்வதும் உணர்ந்து நடித்திருக்கிறான் அந்த சிறுவன். ஜீவாவை ஏத்தி விடும் இரண்டும் சிறுவர்களாக பகோடா, மணி. ஒவ்வொரு முறையும் பகோடா ஏத்திவிடும் போது ஜீவா 'விஜய்' மாதிரி மெனலீசம் செய்வது நல்ல நகைச்சுவை.

மீனாட்சி சுந்தரத்தின் செல்போன் ரீங் டோனே அவன் வரும் காட்சியில் சிரிப்பு வரவழைக்கிறது. 'நண்பர்கள் வைத்து சோபிகுட்டியை பாராட்டியே கரேட்' செய்கிறார். பெண்ணை காதலிக்க வைக்கும் புது யுக்தி. பெற்றோர்கள் கற்று கொள்ள வேண்டிய காட்சிகளும் இந்த படத்தில் உள்ளது.
ஜெம்ஸ் வசந்த் இசை சுமார் தான். ஆனால், அன்பு, ஜீவா மோதும் காட்சியில் பின்னனி இசை நன்றாக அமைத்திருக்கிறார். படத்துக்கு பாடலே தேவையில்லை என்று தோன்றுகிறது.
முதல் படத்தில் குழந்தைகளுக்காக படம் கொடுத்து பெரியவர்களை கட்டி போட்டு உட்கார வைத்திருக்கார் இயக்குனர் பாண்டியராஜ்.ஒவ்வொரு சீனும் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல எதிர்காலமுண்டு.
இயக்குனராக வெற்றி பெற்ற சசிகுமார் இந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று இருக்கிறார்.
பசங்க - பசங்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் தான்.
10 comments:
ஆமாங்க
படம் நன்றாக இருந்தது.
இன்றை படங்களிலிருந்து முற்றிலும்
வேறுபட்டு
நல்ல விமர்சனம் குகன்..
அட படம் நல்ல இருக்கு போல..
பாத்துருவோம்..!!
அருமையான விமர்சனம்..
நாகரிகமான விமர்சனம்..
// முனைவர்.இரா.குணசீலன் said...
ஆமாங்க
படம் நன்றாக இருந்தது.
இன்றை படங்களிலிருந்து முற்றிலும்
வேறுபட்டு
//
ஆமாம் குணசீலன். எந்த விரசமும் இல்லாமல். குழந்தைகளை குழந்தைகளாக காட்டியிருக்கிறார்கள்.
// Cable Sankar said...
நல்ல விமர்சனம் குகன்..
//
நன்றி தல :)
// தமிழ் விரும்பி said...
அட படம் நல்ல இருக்கு போல..
பாத்துருவோம்..!!
//
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
// தமிழ் விரும்பி said...
அருமையான விமர்சனம்..
நாகரிகமான விமர்சனம்..
//
படமே ரொம்ப நாகரிகமான படம் தான் :)
//இயக்குனராக வெற்றி பெற்ற சசிகுமார் இந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று இருக்கிறார்.//
//With the grand success of this film, Director-Producer and actor of this film Sasi Kumar//
சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் அவருடைய சொந்தபடம் தான்.
ஒண்ணு ரெம்ப கொஞ்சமா விமர்சனம் எழுதுறீங்க!
இல்லைன்னா பக்கம் பக்கமா படிக்க முடியாமா உண்மைத்தமிழன் மாதிரி விமர்சனம் எழுதுறீங்க!
எப்பத்தான்யா தேவையான அளவு எழுதுவீங்க?
// நொந்தகுமாரன் said...
ஒண்ணு ரெம்ப கொஞ்சமா விமர்சனம் எழுதுறீங்க!
இல்லைன்னா பக்கம் பக்கமா படிக்க முடியாமா உண்மைத்தமிழன் மாதிரி விமர்சனம் எழுதுறீங்க!
எப்பத்தான்யா தேவையான அளவு எழுதுவீங்க? //
நல்ல படங்களை பத்தி கம்மியா எழுதினா தான் அத பார்க்கனும் தோனும்.
மொக்க படங்களுக்கு பக்கம் பக்கமான விமர்சனமே போதும். படம் பார்க்க தேவையேயில்ல...
Post a Comment