வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, May 19, 2009

பிரபாகரனின் ஆத்மா சாந்தி அடையுமா ??

பல முறை 'பிரபாகரன் மரணம்' என்று அறிவித்திருந்த இலங்கை அரசு இந்த முறை ஆதரப்புர்வமாக அறிவித்திருக்கிறது. அறிவிப்போடு இல்லாமல் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் இறந்த அவர் உடலை காட்டிவருகின்றனர். (இந்த முறையும் இது வேறும் வதந்தியாக இருக்க கூடாத என்று மனம் எங்குகிறது.)மூடாத கண்கள், நிறைவேறாத கனவுகள், கம்பிரமான இரண்வு உடையில் பிரபாகரன் இறந்திருக்கிறார். அவர் லண்டன், அமெரிக்கா என்று பதுயிருப்பார் என்று சில ஊடங்கள் மூலம் தவறாக பிரச்சாரம் செய்தவர்களுக்கு 'பிரபாகரன் ஒரு உண்மையான போராளி' என்று பிரபாகரனின் மரணம் காட்டியிருக்கும். இறந்த அவர் ஆத்மா தமிழீழ எல்லையில் தான் சுற்றிக் கொண்டு இருக்கும். அந்த ஆத்மாவையாவது இலங்கை இராணுவம் சுதந்திரமாக உலாவ விடட்டும்.

பிடல் காஸ்டிரோ ஆயுதம் எடுத்தான் - க்யூபா பிறந்தது. ஹோ சி மின் ஆயுதம் எடுத்தான் - வியட்நாம் மலர்ந்தது. ஈழம் மலர பிரபாகரன் ஆயுதம் எடுத்தான். இன்று நரகாசுரன் இறந்த தீபாவளி தினம் போல் கொண்டாடுவதும், சந்தோஷமாக இனிப்பு வழங்குவதுமாக தான் இருக்கிறார்கள். ஹிட்லர் தொடங்கி இந்த உலகம் தோல்வி அடைந்தவர்களை விமர்சித்து வருகிறது. இதில் பிரபாரகனும் தப்ப முடியாமல் போனது தான் மிக கொடுமை.

பிரபாகரன் செய்தது சரியா ? தவறா ? என்று விவாதிக்க விரும்பவில்லை. விவாதித்தாலும் இனி எந்த பயனுமில்லை. அவரால் இறந்த உயிர் இழப்புகளை நியாயப்படுதவுமில்லை. இனியாவது, 'இன படுகொலை' என்ற பெயரில் யார் உயிரும் போகாமல் இருக்க வேண்டும். யுத்தமில்லாத பூமியாக மாற வேண்டும். அது தான் எல்லோருடைய ஆசையாக இருக்கும்.பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று சொன்ன அரசியல் வாதிகள், தனி ஈழம் அமைத்து கொடுப்போம் என்று சொன்னவர்கள் இப்போது எதை வைத்து அரசியல் செய்ய போகிறார்கள் ?

இது வரை, அவரை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இனி அரசியல் செய்ய வேறு காரணம் கிடைத்து விடும். தமிழ் நாட்டில் அரசியல் செய்ய காரணத்திற்கா பஞ்சம்...! ஆனால், இலங்கை தமிழர்களுக்கு இனி யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

8 comments:

திரு/Thiru said...

கடந்த 3 நாட்களில் மட்டும் பலமுறை, பலவிதங்களில் பிரபாகரனை கொலை செய்ததாக செய்திகளை வெளியிட்டது சிறீலங்கா மற்றும் இந்திய ஊடகங்கள்.

அவை எவற்றிலும் உண்மையில்லை. பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிய போது சுட்டுக்கொன்றதாக பொய்யை சொன்னது. 2 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டதாக சொன்னார்கள். அடுத்தது டிஎன்ஏ பரிசோதனை நடப்பதாக நேற்று சொன்னார்கள். இன்று செய்தியில் நந்திக்கடலில் கொன்றதாகவும், இன்று உடல் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள். அதற்காக ஒரு படம், ஒரு ஒளிக்காட்சி!

2 நாட்களுக்கு முன்னர் இறப்புக்குள்ளான உடல்கள் எப்படியிருக்கும் பார்த்திருக்கிறீர்களா? படங்களில் இருக்கும் முகம் அப்படி 2 நாளான உடல் மாதிரியா இருக்கிறது?

பிரபாகரனின் 2008 மாவீரர் உரை படங்களை விடவும் இந்த படத்தில் இருக்கும் முகம் இளமையாக இருப்பது தெரியவில்லையா?

நேற்று டி.என்.ஏ பரிசோதனை செய்த உடலை, இன்று கண்டுபிடித்தார்கள்?

எந்த 'டி.என்.ஏ.மாதிரிகளை' வைத்து பிரபாகரன் என்று டி.என்.ஏயை உறுதிப்படுத்தினார்கள்?

சார்லஸ் ஆன்றனி என்று வந்த படமும் இன்னொரு போராளியுடையது. பிரபாகரன் பற்றி வெளியாகிற இப்போதைய படங்களும், செய்திகளும் பொய்.

நண்பர்களே,

தொழில்நுட்ப உலகின் யுத்தம் உளவியலை பாதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. பலியாகிவிடாதீர்கள். தமிழர்களின் ஈழத்திற்காக போராட களத்தில் வருவான் பிரபாகரன். இப்போதைக்கு பாதுகாப்பான தளத்தில் தனது முக்கிய தளபதிகளுடன் அவர் இருப்பதை நம்புங்கள்.

சிறீலங்கா செய்துள்ள போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மறைக்கவும், அழிக்கவும் உளவு அமைப்புகளும், அரசுகளும் நடத்துகிற நாடகங்களுக்கு பலியாகிவிடாதீர்கள். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதிக்கு நீதி பெற கவனம் செலுத்துங்கள்.

ஈழம் ஒரு போதும் கனவாக முடியாது. நம்புங்கள்! தமிழ் மக்களின் சுதந்திர வேட்கை இன்றைய இழப்புகளால் கலைந்து போகாது.

rajie said...

mikka nanri thiru neengal sonathu unmai

பாலா... said...

சரியாச் சொன்னீர்கள் முரு. வழ வழவென்று சவரம் செய்யவா நேரம் அங்கே?

மொழிவளன் said...

மேலும் சில சந்தேகங்கள்.

வாகனமொன்றில் தப்பிச்செல்ல முற்பட்டப் போது சுடப்பட்டிருந்தால், அந்த வாகனத்தைக் காட்டாதது ஏன்?

வாகனத்தில் பிரபாகரன் மட்டும் தான் தப்பிச்செல்ல முயற்சித்தாரா? அவருடன் சென்றவர்கள் எங்கே?

சுடப்பட்டதாகச் செய்திகள் வெளியிடப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்பே படத்தைக் காண்பிக்கின்றனர். படத்தில் உள்ள (போலியென்றாலும்) பிரபாகரனின் தோற்றத்தை துள்ளியமாக காட்டும் போது மரபணுச் சோதனைகளூடாக உறுதிப்படுத்துவதாகக் கூறுவது ஏன்?

இரண்டு நாட்களுக்கு முன் சுடப்பட்டதாக கூறும் இலங்கை ஊடகங்கள், இன்று நீர் ஏரியில் இருந்து சடலத்தை தூக்கியெடுப்பது போன்று காணொளியில் காண்பிக்கின்றனர்.

இரண்டு நாட்கள் நீரில் கிடந்த ஒரு சடலத்தில் குறிப்பாக கண்களை மீன்கள் கொத்திவிடும். ஆனால் இக்காணொளியிலோ கண்கள் திறந்த நிலையில் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றது. தவிர நீரில் இரண்டு நாட்கள் கிடந்த சடலத்தில் தோற்றம் ஒரு போதும் இப்படியிருக்கப் போவதில்லை.

ஒருவர் இறந்தப் பின்பும் குறிப்பிட்டக் காலத்திற்கு மயிர் வளர்ந்த வண்ணமே இருக்கும். இங்கே மெழுகுப் பொம்மைப் போல் சடலம் காண்பிக்கப்படுகின்றது.

சடலத்தை துக்கியெடுக்கும் காட்சியைப் பாருங்கள்.

அதில் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த ஒரு சடலம் உருக்குழைந்த நிலையிலேயே இருக்கும். அதிலும் தலையில் வெடிப்பட்டு தலையின் பிற்பகுதி அற்ற நிலையிலேயே காண்பிக்கப் படுகின்றது. அதுவும் தண்ணீருக்குள் இரண்டு நாட்கள் கிடந்திருப்பின் அதனை கையால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாதளவு சிதைந்து சீழ் பிடித்துப் போயிருக்கும். கொழக் கொழ என்று அல்லவா இருக்கும். அவ்வாறான ஒரு சடலத்தை மண்டை சிதைந்திருக்கும் இடத்தில் கைகளை வைத்து எவ்வாறு தூக்க முடியும்?

காணொளியை மீண்டும் ஒரு முறைப் பாருங்கள்.

Nandagopal.M.P said...

தயவு செய்து பிரபாகரன் பற்றிய அஞ்சலிகளையும், வதந்திகளையும் பரப்புறதை நிறுத்துவீர்களா நண்பர்களே?//

ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுஙகள். நம்மால் உதவி செய்யமுடியவில்லை என்றாலும் உபத்திரவாதம் செய்யாமல் இருப்பது நல்லதில்லையா???

குகன் said...

நன்றி திரு, மொழிவளன்....

நீங்கள் எழுப்பிய சந்தேகங்கள் எனக்கும் இருந்தது.

பிரபாகரன் உடல் என்று புகைப்படங்கள் வெளியிட்டவுடன்... அதிர்ச்சியில் மனம் வருந்தி எழுதிய பதிவு இது....

பிரபாகரன் உயிருடன் இருந்தால் தமிழீழம் கனவாகாது..

குகன் said...

// Nandagopal.M.P said...
தயவு செய்து பிரபாகரன் பற்றிய அஞ்சலிகளையும், வதந்திகளையும் பரப்புறதை நிறுத்துவீர்களா நண்பர்களே?//

ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுஙகள். நம்மால் உதவி செய்யமுடியவில்லை என்றாலும் உபத்திரவாதம் செய்யாமல் இருப்பது நல்லதில்லையா???
//

இது வதந்தியாக இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை கூட...

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

LinkWithin

Related Posts with Thumbnails