வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 29, 2012

மால் அல்ல.... கோல்மால் !

“ஏயேய் ! மச்சி தீபாவளி புதுப்பட ரீலிஸ் சீ.டி வந்திருக்கு… வரியா எங்க ஹோம் தியேட்டர்ல பாக்கலாம்.”

“ நா வரலடா ! அந்த படம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன். அதனால தியேட்டர்ல போய் பார்க்க போறேன். அதுமட்டுமில்ல, சீ.டி பாக்குறது அடுத்தவங்க உழைப்ப திருடுறதுக்கு சமம்”

“அடபாவி ! என்னடா நல்லவன் மாதிரி பேசுற. இரண்டு வாரம் முன்னாடி தான் நம்ப எல்லோரும் சேர்ந்து புது நடிகர்கள் நடிச்ச படத்த சீ.டியில பாத்தோம்.” 

“அது மொக்கப்படம். சீ.டியிலாவது படத்த பார்த்தது பெரிய விஷயம்” 

நண்பனிடம் பேசி முடித்து புது மாப்பிள்ளை அளவுக்கு டிரெஸ் போட்டுக் கொண்டான் சவுண்ட் சந்தோஷ். யார் கண்டது அங்க கல்யாணத்துக்கு பொண்ணுக் கூட கடைக்கலாம். ஸாரி… கிடைக்கலாம்.

 [‘சவுண்ட்’ சந்தோஷ் எதையுமே சவுண்டாக ஒரு முறை சொல்லுவான். அது அப்புறம், மற்ற குடிமகன் போல் மனதுக்குள் குமுறிக் கொள்வான். வேறென்ன செய்ய முடியும் ? சராசரி இந்தியர்களைப் போல் அவனும் சராரரி குடிமகன் தான்.]

நண்பர்கள் அனைவரும் அந்த படத்தை பார்த்து விட்டதால் தனியாக சென்றான்.

முதல் தடவையா மால்ல சினிமா பாக்க போறோம். பஸ்லைய போவாங்க…!! ஓ.சி பைக்கில ஏ.சி மாலுக்கு நுழைத்தேன். பார்கிங்யில் நுழையவிடாமல் செக்யூரிட்டி நிறுத்தினான். வண்டி நம்பரை பார்த்து எதோ டைப் செய்து ஏ.டி.எம் கார்ட் ஒன்று கொடுத்தான். பார்க்கிங்க்கு பணம் கூட வாங்கல…!!

 “ அட ! இந்த மாலில் செலவு பண்ணுறதுக்கு ஏ.டி.எம் கார்ட் தராங்க…! இப்ப தெரியுது இங்க ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு !!

 “சார் வண்டி பார்க்கிங் டோக்கன்” என்றான்.

 “பராவாயில்லையே ! டோக்கன் பச்ச, சிவப்பு, கலர் டோக்கனா கொடுப்பாங்க… பிட்டு பேப்பர் தருவாங்க. இப்போ கார்ட்டுல தருயிங்க…” 

“இல்ல சார் ! இந்த கார்ட்ல நீங்க வந்த டைம் இருக்கும். வண்டியில வெளியே எடுக்கும் போது ஹவருக்கு பணம் கொடுக்கனும்”

 “ஏய் ! என்ன பார்த்தா உனக்கு என்ன மாதிரி தெரியுது. ஹவர் சைக்கில் கடையில காசு கொடுத்து சைக்கில் எடுப்போம். என் வண்டிய வைக்கிறதுக்கு ஹவர் கணக்கு எதுக்குடா பணம் தரனும்”

 “சார் ! மால்னா அப்படி தான்” என்றான்.

‘போங்கடா’ என்று வண்டிய வைத்தேன். அடுத்த வாட்டி வரும் போது பஸ்ல வரும் வண்டிய வெளியே பார்க் பண்ணணும் நினைத்துக் கொண்டேன். 

நுழையும் போது பை எல்லாம் பரிசோதனை நடந்தது. இப்போ எல்லாம் தீவிரவாதி எங்க குண்டு வைக்கிறாங்கனு யாருக்கு தெரியும். நம்ப நல்லது பேக் செக் பண்ணுறாங்க…!

 ஒரு பெண்மணி பையில் இருந்து உணவு பொருள் எல்லாம் வெளியே எடுத்து, “ உள்ளே எடுத்துப் போக அனுமதியில்லை” என்றனர்.

 “அடபாவிங்களா! வெடிகுண்ட உள்ளவிட்டுடுங்க. சாப்பாடு பொருள எடுத்து போகக்கூடாது சொல்லுங்க..”

என் அப்பத்தா எல்லாம் புலியோதர, எலுமிச்ச சாதம் கட்டிதான் வீட்டைவிட்டு வெளியே வருவாங்க. அவங்க மட்டும் இங்க வந்தாங்க நீ செத்தேடா….!! என்று நினைத்துக் கொண்டேன். தியேட்டரில் படம் ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு…!

ஸ்டைல்லா பெப்ஸி வாங்கி குடிச்சு பொண்ணுங்க சைட், ஒரு புட் ஷாப்பில் பெப்ஸி கேட்டேன். பெப்ஸி டின் வாங்கி திறந்தார். “பிப்டி ரூபிஸ்” என்றான். “என்ன பார்த்தா முட்டாளா தெரியுதா... 300 ml ரூ.18, ரூ.20 தான் இருக்கும். இங்க என்னடா ரூ.50 சொல்லுறீங்க…”

 அவன் எதுவும் பேசாமல் சிரித்தான். டின்னில் எவ்வளவு இருக்குனு பார்த்தா… அட திருட்டு பசங்களா…. Selected Channel போட்டு இருக்காங்க ! அப்போ நீங்க சொல்லுறது தான் விலை..!!!

இவன் கிட்ட பேசுனதுல 15 நிமிஷம் போச்சு. அவசரப்பட்டு ஓபன் பண்ணிட்டேன். இரண்டு பிகரு நம்மைய பாத்திட்டு இருக்கு. மனசு இல்லாம அம்பது ரூபா கொடுத்து தொலைச்சேன்.

நம்மக்கிட்ட இருந்து கொள்ளை அடிக்கிறது அவங்களுக்கு குச்சமாயில்ல. நம்ம பணத்த திருப்பிக் கேட்டா மட்டும் ஒரு மாதிரியா பாக்குறாங்க. என்ன மாலுடா இது !!

அவங்கல ஸ்டைல்லா லுக் விட்டு ஒவ்வொரு கடையா வெடிக்கை பாத்து… தியேட்டர் குள்ளே போலானும் இருக்கும் போது… “சார் ! பெப்ஸியை தியேட்டர் காம்ளேக்ஸ் குள்ள எடுத்து போகக் கூடாது” என்றான்.

“ டேய் ! பெப்ஸிய மால்ல தான் வாங்குன. எதுக்கு வெளியே இருந்து தான் எடுத்து வரக் கூடாது. இங்க வாங்குனது கூடவா ?”

 “ தியேட்டர்ல புட் வொர்ல்ட் இருக்கு. உங்களுக்கு வேணும்னா அங்க வாங்குக…”

 அமாடா ! மறுபடியும் ரூ.20 பெப்ஸிய ரூ.50 வாங்குவாங்க… போடா …ங்கோ… என்று மனதில் திட்டிக் கொண்டேன். மால்க்குள்ள இந்தியா - பாகிஸ்தான் பார்டர் எப்படி பிரிச்சு வச்சிருக்காங்க. அங்க இருந்து இங்க கொண்டுப் போகக் கூடாதுனு, இருங்க இருந்து அங்க போகக் கூடாதுனு.

இவங்க இஷ்டத்துக்கு நாம நடந்துக்குறதுக்கு நா எதுக்கு பணம் தந்து மால்குள்ள வரனும் ?படத்துக்கு நேரமாச்சு. அரை மணி நேரம் பொறுமையா குடிக்கலாம் இருந்தா, இவனால அவசர அவசரமா குடிக்க வேண்டியதா இருக்கு.!

செக்யூரிட்டி பண்ண அக்க போரால ஹீரோவோட இன்ட்ரோ பாட்டை கோட்டைவிட்டேன். ஜாலியா படம் போச்சு. இன்ட்ரவல் வந்ததே தெரியுல. முதல் முதல்லா மால்ல படம் பாக்க வர அவசரத்துல எதுவும் சாப்பிடல. வெளியே வந்து ஏதாவது பிரியாணி சாப்பிடலாம் பார்த்தா… கொய்யால எல்லா பீசா, பர்கர் மட்டும் தான் இருக்கு. ஆனா, சிக்கன் பிரியாணி விக்கிற விலையில விக்குறாங்க.

பசி தாங்க முடியில. ரூ.200க்கு பர்கர் காம்போ ஒன்னு வாங்குன. கொடுக்குற காசுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்னு நினைச்சா. ஐஞ்சு நாள் முன்னாடி வச்ச பண்ண கொடுக்குறான். உள்ள காய்கறி வெட்டி வச்சு இவ்வளவு அநியாய விலைக்கு கொடுக்குறாங்க. நம்ப உருளைகிளங்க அழக வெட்டி ப்ரை பண்ணதால… பிரென்சு நாட்டுல சேத்துட்டாங்க. அதான் பிரென்சு ப்ரை.

 மனசு வராம கொடுத்த ரூ.200 க்கு ரூ.20க்கு தான் சாப்பிட்டேன். இவ்வளவு செலவு பண்ணி மால்ல பார்த்ததுல… படம் நல்லா இருந்துச்சி. படம் மட்டும் கொடுமையா இருந்திருந்து… அவ்வளவு தான். டைரக்டர் வீட்டுக்கு போய் செலவு பண்ண காச திருப்பிக் கேட்டுருப்பேன்.

மொக்கப்படத்த தியேட்டர்ல பார்க்குறவங்களோட கோவம் இப்ப புரியுது.

வெளியே கூட்டத்துல வண்டிய எடுத்து வரும் போது வேலை செய்யுறவன் கொடுத்த ஏ.டி.எம் கார்ட கேட்டான். கொடுத்தேன். மிஷின்ல போட்டு…கொஞ்ச நேரத்துல ரூ.80 சொன்னான்.

ரூ.120 கொடுத்து படம் பார்த்தேன். என் வண்டிய வைக்குறதுக்கு ரூ.80 வா ?? ஹவருக்கு ரூ.20 என்றான்.

“அங்க… ரூ.15 போட்டிருக்கே ?” “அது வார நாள்ல… இது விக்கென்ட். ஹவருக்கு ரூ.20 பா” என்றான்.

“ மூனு மணி நேரப் படத்துக்கு கொஞ்ச முன்னாடி வந்ததால ரூ.20 பைன்னாட்டா. நல்லா இருப்பீங்க. இது மால்லா … கோல்மால்லா…”

அடுத்த உழைப்ப திருடக்கூடாதுனு காசுக் கொடுத்து தியேட்டர்ல படம் பாக்க வந்தா… நம்ப உழைப்ப திருடுறாங்க. இப்ப தெரியுது ஏன் எல்லா படத்தையும் சீ.டியில பாக்குறாங்க… பேசாம நானும் சீ.டியில படம் பார்த்திருக்கனும்.


Wednesday, November 7, 2012

கமலஹாசன் வீடியோ !

ஒரு முறை ஏக்நாத் அவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் கூறியது.

 "1984 - 86 களில் வீடியோ திரையரங்கம் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். பல படங்களை காப்புரிமை வாங்கி வீடியோவாக கொண்டு வந்து ,அதற்கான திரையரங்கை உருவாக்க நினைத்த போது பலர் என்னை எதிர்த்தார்கள். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட கலைஞர்கள் என்று என்னை எதிர்காத ஆளில்லை.


 சிவாஜி தலைமையில் எனக்கு எதிராக புகார் கொடுக்க அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சென்றார்கள். பத்திரிக்கையில் எனது பேட்டி வந்தால், எனக்கு எதிரான பேட்டி அடுத்த நாள் வரும். அந்த சமயத்தில், வீடியோ தொழில் வளர்ச்சியை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அப்போது எனக்கு ஆதரவாக இருந்தவர் ஒரே ஒருவர் கமல ஹாசன் தான். தொழிற்வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று எனக்கு ஆதரவாக பேசியவர் அவர் மட்டும் தான்.

இப்போது, ஹோம் தியேட்டர் என்று எல்லோர் வீட்டில் இருக்கிறது. வீடியோ வளர்ந்து... அதற்கு மாற்றாக சீ.டி, டி.வி.டி என்று வளர்ந்திருக்கிறது. இப்போது யார் இந்த வளர்ச்சியை தடுக்க முடியும்." என்றார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பலர் எதிர்த்த போதும், அதை அதிகம் ஆதரித்தவர் கமல ஹாசன் என்பது குறிப்பிட தக்கது.


திரு.கமலஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!

Thursday, November 1, 2012

நாகரத்னா பதிப்பகத்தின் 7 நூல்கள் வெளியீடு !

வரும் நவம்பர் 17 அன்று மாலை 5 மணிக்கு, தி.நகர் தக்கர் பாபா அரங்கில் நாகரத்னா பதிப்பகத்தின் 7 நூல்கள் வெளியிடப்படுகிறது.


கேபிளின் கதை - கேபிள் சங்கர் 
ரூ.100 என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - ஜே.டி.ஜீவா
ரூ.70


தமிழனும் இந்தியனே ! - கனியன் செல்வராஜ் 
ரூ.40


இயற்கையைக் காப்போம் - தொகுப்பு : குகன்
ரூ.40
உலக சினிமா : ஒர் பார்வை - குகன் ( கௌதம் பதிப்பக வெளியீடு)
ரூ.50நூல் அறிமுகம்

விழிப்பறி கொள்ளை - உமா சௌந்தர்யா
ரூ.40


பிணம் தின்னும் தேசம் - கருவை. சண்முக சுந்தரம்
ரூ.40வெளியீடப்படும் நூல்களை முன் பதிவு செய்துக் கொள்ள.... இங்கே

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்களை பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.


வெளியிடப்படும் 7 நூல்களின் விளம்பரப்படம். தங்கள் நண்பர்களுடன் பகிரவும். நன்றி !!

LinkWithin

Related Posts with Thumbnails