வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, September 25, 2012

மாற்றம் தந்த இந்திய சினிமா – 3. அந்தர்சாலி யாத்ரா

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பார்ப்பனர்கள் செய்த கொடுமையை மறந்து விடக்கூடாது. ‘மனு தர்மம்’ என்ற பெயரில் அதர்மத்தை செய்தவர்களை, தற்போதிய பார்ப்பனிய சமூகம் கூட தங்கள் முன்னோர்கள் மீது சானி அடிப்பார்கள். அப்படி, அவர்கள் கடைப்பிடித்த பிற்போக்கான பல சிந்தனைகளில் ‘சதி’ யும் ஒன்று. இறந்த கணவனோடு மனைவியும் உடன் கட்டை இறந்து போவது !

கணவன் இழந்து மனைவி தவிக்கக் கூடாது எனவும், கணவன் - மனைவி இருவரும் இறந்து அடுத்த பிறவியில் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வார்கள் என்று பல காரணங்கள் மனுதர்மத்தில் சொல்லப்படுகிறது. இப்படி, பல பிற்போக்கான சிந்தனையுடனும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களுடைய தர்மத்தை குருட்டுத் தனமாக நம்பும் கதாப்பாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் “அந்தர்சாலி யாத்ரா” (Antarjali Jatra).



நாடி நரம்புகள் தளர்ந்து இறக்கும் தருவாயில் இரண்டு பிள்ளைகளோடு கங்கை நதிக்கரையில் வருகிறான் முதியவனான சீதாராமன். அவர் உடலை பார்த்த மருத்துவரும் நீண்ட நாள் உயிருடன் இருக்க மாட்டார் என்கிறார். ஆனால், ஜோதிடர் அனந்தா சீதாராமன் கைரேகையை பார்த்து, சீதாராமன் எப்போ வேண்டுமானாலும் இறக்கலாம். அதை தடுக்க அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறான். தன் மகளை திருமணம் வயது வந்தும், திருமணம் செய்து வைக்க முடியாத ஏழை பிராமணன் அங்கு வருகிறான். மனுதர்மப்படி, திருமணம் செய்யாத பெண்ணை வீட்டில் வைத்துக் கொள்வது பாவம். தன் பாவத்தை போக்க ஏழை பிராமணன், தன் பெண்ணை கிழவன் சீதாராமனுக்கு தர சம்மதிக்கிறான்.

ஜோதிடர் ஏழை பிராமணனிடம் அவர் மகளை இறக்க இருக்கும் தன் கணவன் உயிரை மாங்கல்ய பலத்தால் காத்து, அவருடன் உடன் கட்டை இறந்தால் அவன் குடும்ப பாவங்கள் எல்லாம் போகும், அவள் மகளும் கடவுளாகப் போற்றப்படுவாள் என்கிறான்.

ஆனால், சீதாராமனை பரிசோதித்த மருத்துவர் இந்த திருமணத்தையும், ‘சதி’ முறையையும் எதிர்க்கிறார். ஜோதிடர் அனந்தா பிராமண சமூகத்தை விட்டு விரட்டிவிடுவதாக மிரட்ட, மருத்துவர் அமைதியாகிறான். பிராமணர்களின் செயலை ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்க்கும் வெட்டியான் பைஜூ இதை தவறு என்கிறான். தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததால் அவன் குரல் எடுப்படவில்லை.

ஒரு வழியாக தள்ளாத கிழவனுக்கு தன் மகள் யஷ்யோபதியை திருமண செய்த கையோடு புண்ணியத்தை சேர்த்ததாக எண்ணி செல்கிறார் பெண்ணின் தந்தை. புதிதாக திருமணமான கிழவனும், பெண்ணும் ஆற்றங்கரையில் தனிமையில் விடப்படுகிறார்கள். முதலில் பேசவே சிரமப்பட்ட கிழவன் சீதாராமன், புது மனைவி முத்தம்மிடக் ஆசைப்படுகிறான். ஆனால், தன் புது மனைவியிடம் இன்னும் வாழ வேண்டும் என்ற தன் கனவைக் கூறுகிறான். 

இவர்கள் இருவருக்கு துணையாக இருந்த சீதாராமனின் மகன்கள் கொத்துசாவிக்கு ஆசைப்பட்டு இரண்டு பேரும் சண்டைப்போட்டு ஓடுகிறார்கள். சென்றவர்கள் திரும்பிவரவில்லை. இருவரும் கங்கை நதிக்கரையில் தனிமையில் விடப்படுகின்றனர்.

வெட்டியான் பைஜூ கிழவனை ஆற்றில்ப் போட்டு கொன்று, யஷ்யோபதி காப்பாற்ற நினைக்கிறான். ஆனால், அவளே அவனை தாக்கி தனது கிழட்டு கணவனைக் காப்பாற்றுகிறாள். அடி வாங்கிய பைஜூ மீண்டும் கிழவனை அவர்கள் இருப்பிடத்துக்கே போட, யஷ்யோபதி பைஜூவிடம் மன்னிப்பு கேட்கிறாள். ஒரு கட்டத்தில் அவனை கட்டி தழுவி அழுகிறாள். மறு நாள், தன் கிழட்டு கணவன் காலில் விழுந்து குற்றவுணர்வோடு இருக்கிறாள்.

பெண்ணின் அப்பா, ஜோதிடர் புது மண தம்பதியர்களை வாழ்த்தி, அவர்கள் சமைப்பதற்கான பாத்திரங்களை கொடுக்கின்றனர். ‘சதி’ மூலம் யஷ்யோபதி இறந்தால், அவள் கடவுளாகி தன் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் செல்கிறான் யஷ்யோபதியின் அப்பா. ஆனால், யஷ்யோபதி தன்னுடைய காதலுக்கும், சம்பிரதாயத்துக்கும் நடுவே மாட்டுக் கொண்டு தவிக்கிறாள்.

புது மனைவி வந்த சந்தோஷத்தில் அவனாகவே எழுந்து உட்காரும் அளவிற்கு முன்னேறுகிறான் சீதாராமன். தனக்கு குடிக்க பால் வேண்டும் என்ற சீதாராமன் அடம்பிடிக்க, யஷ்யோபதி பைஜூவிடம் இருந்து ஆட்டு பால் வாங்கிவருகிறாள். பைஜூவுக்கு, யஷ்யோபதிக்கு இருக்கும் மெல்லிய காதல் உரையாடல் நடக்கிறது. இதை தூரத்தில் இருந்து சீதாராமன் பார்க்க, அவளை தண்ணீரில் மூழ்க்கி சாக சொல்கிறான். யஷ்யோபதி அதையே செய்ய நினைக்க, பைஜூ தடுகிறான். யஷ்யோபதி பைஜூவிடம் தன்னை மேலும் மேலும் பாவம் செய்ய வைக்கிறாய் என்று சொல்லி அழுகிறாள்.

கொஞ்ச நேரத்தில் கங்கை ஆற்று நீர் அளவு அதிகரித்து தண்ணீர் கரைக்கு வருகிறது. சீதாராமன் இருந்த பகுதி முழுக்க நீர் சூழ்ந்துக் கொள்ள, அவனை காப்பாற்ற யஷ்யோபதி தண்ணீரில் குதிக்கிறாள். சீதாராமனை காப்பாற்ற முடியாமல் அவளுடம் நீரோடு நீராக அடித்து செல்லப்படுகிறாள். அவளை காப்பாற்ற முடியாமல் கரையில் பைஜூ அழுதுக் கொண்டு இருக்கிறான். அங்கு நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் சாட்சியாக படகு காட்டியப்படி படம் முடிகிறது.

கமல் குமார் முசந்தர் எழுதிய “மஹா யாத்ரா" என்ற நாவலின் அடிப்படையாக கொண்டு எடுத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் கோஷ். சதியின் கொடுமையை படத்தில் காட்டவில்லை என்றாலும், மரணப் பயத்தில் இருக்கும் யஷ்யோபதி பாத்திரத்தில் சதியின் கொடுமையை உணர்த்துகிறார்.

பல திருமணம் செய்துக் கொண்ட கிழவனுக்கு சீதாராமன் என்ற பெயர் வைத்திலே இயக்குனரின் பகடி குணம் தெரிகிறது. அதுவும், எழுந்திரிக்க முடியாத கிழவன் புது மனைவியை முத்தமிட நினைப்பதும், அனுபவிக்க நினைத்து செய்யும் செயல்களும் நகைச்சுவையாக அமைத்திருக்கிறார். தள்ளாத வயதில் திருமணத்துக்கு சம்மதிக்கும் கிழவன், திருமணத்துக்கு முன்பே இறந்துவிடக்கூடாதா என்று பார்வையாளர்களை நினைக்க வைக்கிறார்.

ஒரு பெண்ணை அனுபவிக்க நினைக்கும் கிழவன் பாத்திரத்துக்கு நேர் எதிர் பாத்திரமாக பைஜூ பாத்திரம். பைஜூவை கட்டி தழுவி யஷ்யோபதி அழுதும், தன்னை தொடக் கூடாது என்கிறான். பால் வாங்க வரும் போது கூட பாத்திரத்தில் கையால் வாங்காமல், ஆட்டின் பாலை நேரடியாக அவள் பாத்திரத்திற்கு எடுத்து கொடுக்கிறான்.

மிகவும் பரிதாபப்பட வேண்டிய பாத்திரம் யஷ்யோபதி. மரண பயத்திலும் தன் கிழட்டு கணவனிடம் நாம் இறந்து மீண்டும் புது வாழ்க்கை தொடங்குவோம் என்ற நம்பிக்கையாக பேசுகிறாள். மரணத்தை சாஸ்திரம் என்ற பெயரில் ஒரு பெண்ணை எப்படி ஏற்றுக் கொள்ள வைக்கிறது. அதுவும் கிழட்டு கணவன் தன் பெயரைக் கூட தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டதை நினைத்து, முகம் வாடுவதும், மரணப்பயத்தில் நடுங்குவதும்... என்று வாழ்ந்த வரலாற்று பெண்களின் வாழ்க்கையை பிரதிபத்திருக்கிறது.

'உடன் கட்டை எரிதல் பழைய வழக்கம்' என்பது வரலாறாக இருக்கலாம். அதற்கு பின், எத்தனை பெண்களின் வேதனை இருக்கிறது. உணர்வுகள் கொல்லப்பட்டு இருக்கிறது. சாஸ்திரங்கள் எரியப்படுவதற்கு பதிலாக எத்தனையோ மனித உடல்கள் எரிந்திருக்கிறது. இவர்கள் மீது காரி உமிழ ஒரு பெரியார் போதாது என்பதை தான் இந்தப் படம் உணர்த்துகிறது.

அந்தர்சாலி யாத்ரா - 1988ல் பெங்காலி மொழி பிரிவில் இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. 1988 ல் கென்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது என்பது பெருமைக்குரிய அம்சமாகும்.

Friday, September 21, 2012

நடுரோட்டில் ஆபத்தான குழி !! (தொடர்ச்சி)

 நம்மிடம் இருக்கும் மிக பெரிய குறையே.... அரசாங்கத்தை ஈசியாக குறை சொல்லிவிடுகிறோம். ஆனால், அவர்கள் சரி செய்ததை பாராட்டவோ அல்லது சரியாகி விட்டது என்று சொல்லவோ செய்வதில்லை.இதே தவறை தான் நானும் மூன்று நாட்களாக செய்திருக்கிறேன்.

சென்ற திங்கள் அன்று பதிவிட வேண்டும் என்று இருந்தேன். நேரமின்மைக் காரணமாக இன்று பதிவிடுகிறேன்.


அதன் பின் TN CM cell க்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஒரு வாரம் பொருத்திருந்து பார்த்தேன். பெரிதாக பலனில்லை. இரண்டு நாள் கலித்து, 'கேபிள்' சங்கர் அவர்கள் மேயரின் முக நூலில் போஸ்ட் போட்டதற்கு சரியான பதில் கிடைத்தது என்று கூறியிருந்தார். CM cell சரியாக வேலை செய்யாத போது, மேயர் மின்னஞ்சல் மட்டும் சரியாக வேலை செய்யுமா என்ற அவ நம்பிக்கையோடு தான் மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால், அடுத்த இரண்டு நாளில் ஒரு குழி முடப்பட்டது. ( இதில் இருக்கும் அரசியலுக்கு நாம் போகாமல் இருப்பது நல்லது.)

இந்த குழியில் தான் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு ஆபத்தாக இருந்தது. அப்படியும், இரண்டாவது குழியை அவர்கள் மூடவில்லை. ஐந்து நாளாகியும் ஒரு குழி மட்டும் மூடப்படாமல் இருந்தது.

ஏ.ஈ தொடர்பு கொண்டு கேட்டேன். கொஞ்சம் வேலை இருந்தது. இன்று முடிந்துவிடும் என்று அன்றே குழியை முடிவிட்டார். 


நான்கு தெருவும் சேரும் முனை என்பதால் இந்த குழி மூடியதும் ஒரளவு போக்குவரத்து பரவாயில்லை.

 குழி தொண்டிய சுவடு மட்டும் சாலையில் உள்ளது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான சாலையின் கதி அது தானே !!!

Tuesday, September 11, 2012

தொடரும் கார்டூன் அரசியல் !!

அசீம் திரிவேதியை கைதுயை சரியா ? தவறா ? என்று விவாதிக்கும் முன் ஊழலுக்கு எதிரான இந்த இணையதளத்தை பாருங்கள். ஊழலுக்கு எதிரான பல கேலி சித்திரங்கள் இதில் உள்ளது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது நியாயம் தான். ஜனநாயக கடமையும் கூட. ஆனால், தேசிய சின்னம், தேசிய கோடி அவமானப்படுத்தும் கேலி சித்திரத்தை என்னால் ஆதரிக்க முடியவில்லை.

ஊழலில் இடம் பெற்று இருக்கும் அரசியல்வாதிகளை, நீதி மன்ற இழுவையை விமர்சிக்கலாம். மன்மோகன் சிங், சோனியா, அத்வானி, மோடி, அன்னா ஹசாரே யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை. காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க யாரும் ஊழல் இல்லாத ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயகத்தில் இவர்களை விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.




விமர்சனம்... தவறு செய்ததை திருத்த உதவ வேண்டும். நம்மை நாமே அவமானப்படுத்தும் படி இருக்கக் கூடாது.

 “பாராளமன்றத்தை கழிவறையாகிவிட்டார்கள்” என்று சொல்வது வேறு. “பாராளமன்றம் ஒரு கழிவறை” என்று சொல்வது வேறு.

நம் அரசியல் நிர்வாகத்தை விமர்சிக்கலாம். நம் அடையாளத்தை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. 

அதே சமயம், திரிவேதி மீது பாய்ந்த சட்டம், அவரை வரைய தூண்டிய ஊழல் அரசியல்வாதிகள் மேல் ஏன் பாயவில்லை என்ற நிதர்சனக் கேள்வியை கேட்காமல் இருக்கமுடியவில்லை.

***


இந்திய சின்னமான அசோக சின்னத்தை அவமானப்படுத்திய திருவேதியை கைது செய்தது எந்த அளவுக்கு நியாயமோ... அந்த அளவிற்கு இந்த போஸ்டர் வடிவமைத்த காங்கிரஸ் கட்சிக்காரரும் கைது செய்வதும் நியாயம் தான்.

இதை எதிர்த்து யாராவது வழக்கு போட்டார்களா ?

Monday, September 10, 2012

கல்லூரி டைரியில் காதல் கவிதை !

எதற்கோ என் புத்தக அலமாரியில் புத்தகங்களை தேடி, எதோ பழைய புத்தகத்தை புரட்ட , அது கல்லூரி வகுப்பில் நோட்ஸ் எடுத்த டைரியாக இருந்தது.

எந்த வகுப்பில் உட்கார்ந்து எழுதிய கவிதை (?) என்று ஞாபகமில்லை. எந்த பெண்ணை நினைத்து எழுதினேன் என்று நினைவில் இல்லை. (ஒன்றா இரண்டா சொல்வதற்கு ?) . எல்லோவற்றிக்கும் மேலாக இது கவிதையா என்ற சந்தேகம் இப்போது படிக்கும் போது தோன்றியது.

சரி ! ஆனது ஆகட்டும். எத்தனையோ மொக்கை பதிவுகளில் நடுவில் என் கல்லூரி கவிதை (?) ஒரு பக்கம் இருந்து விட்டு போகட்டும்.

***

மௌனம் என்பது மொழி
சொன்ன கவிஞர்கள் நூறு உண்டு !
அது என்னைக்ம்கொள்ளும் ஆயுதம்
கண்டேன் உன்னிடத்தில் இன்று

ஒரு பெண் போனால் இன்னொரு பெண்
என்று இது வரை நான் இருந்தேன்
உன்னை பார்த்த பின்பு
மற்ற பெண்கள் பொய் என்று உரைத்தேன் !

பனித்துளிப் போல எந்தன் காதல்
பகலில் என்றும் தெரிவதில்லை
இரவில் மட்டும் கனவில்
எந்தன் காதல் தினம் தொல்லை !

**

பெண்கள் மனம் தேடுவது
காதலா ? நட்பா ?
ஆண்கள் மனமோ அறிவதில்லை.

நட்பை தேடினால் காதலை விரும்பும்
காதலை தேடினால் நட்பை விரும்பும்
புதிர் போடும் புதிர் நீங்கள் !

விலகிச் சென்றால் விரும்பி வரும்
விரும்பி சென்றால் விலகிப் போகும்
புரியாத வினாத்தாள் நீங்கள் !

விடை அறிந்த வினாக்களே !
எங்களை விரும்ப வைக்கும்
இயந்திரம் நீங்கள் !

உங்கள் மனம் தேவை என்ன ?
தெளிவாய் சொல்லிவிடுங்கள் !
ஆண்கள் தேடும் தேடலுக்கு
நீங்கள் கொஞ்சம் ஓய்வுக் கொடுங்கள் !

பெண்கள் அறிய நினைத்த அறிஞர்கள்
தலை நரைத்தே மடிந்தான் !
வாழுக்கின்ற இளைஞர்கள் நாங்களோ !
மடிவதற்காகவே பெண்களை தேடுகின்றான் !

LinkWithin

Related Posts with Thumbnails