வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, December 28, 2009

நாகரத்னா பதிப்பக புத்தகங்களை வாங்க...!!

வணக்கம் நண்பர்களே !

நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்க நினைப்பவர்கள் கீழ் காணும் முகவரியில் வாங்கலாம்.

எனது கீதை - கட்டுரை
நடைபாதை - சிறுகதை
என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை
காந்தி வாழ்ந்த தேசம் - கவிதை

நன்றி,
குகன்

Sunday, December 27, 2009

தினமலரில் நாகரத்னா நூல் வெளியிட்டு நிகழ்ச்சி

27.12.2009 அன்று வெளியான தினமலரில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழாவை பற்றி செய்து வந்துள்ளது.

அதை கத்தரித்து கீழே குறிப்பிட்டுள்ளேன்.நாகரத்னா நூல்கள் இணையத்தில் வாங்கும் வசதி விரைவில் அறிவிக்கப்படும்.

Friday, December 25, 2009

புத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது !

இன்று (25.12.09) காலை 10.30, மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டப்பத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

அண்ணன் 'கேபிள்' சங்கர், நிலா ரசிகன் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.

கிறிஸ்மஸ் தினமன்று காலையில் நூல் வெளியீட்டு விழா என்றதும் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று நினைத்தேன். அரங்க இருக்கைகள் நிரம்பும் அளவிற்கு கூட்டம் இருந்தது.

காந்தி வாழ்ந்த தேசம் - கவிதை நூலை, மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்) வெளியிட திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17) அவர்கள் பெற்றுக் கொண்டார்.

என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூலை, திருமதி. கிரிஜா ராகவன் வெளியிட கவிஞர். கார்முகிலோன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

விழா முடிவில் 'காந்தி வாழ்ந்த தேசம்' தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நூலில் கவிதை எழுதிய பதிவர்கள் சான்றிதழ், புத்தகம் பெற தங்கள் முகவரியை மின்னஞ்சலில் அனுப்பவும்.

நாகரத்னா பதிப்பகத்தின் நான்கு நூல் சென்னை புத்தகக் கண் காட்சியில் இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Sunday, December 20, 2009

நாகரத்னா பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா !

வரும் வெள்ளி (25.12.2009) அன்று, காலை 10.30 மணிக்கு, மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு வெளியீட்டு நடைப்பெற உள்ளது.

தலைமை : திருமதி. கிரிஜா ராகவன்(ஆசிரியர், 'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழ் )

காந்தி வாழ்ந்த தேசம் - 50 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு.

வெளியிடுபவர் : மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்)
பெறுபவர் : திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17)

தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு திரு.ஆதி ('சிலந்தி' திரைப்பட இயக்குநர்) சான்றுகள் வழங்கவுள்ளார்.

என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூல்

வெளியிடுபவர் : திருமது. கிரிஜா ராகவன்
பெறுபவர் : கவிஞர். கார்முகிலோன்
தொடர்ந்து நூல் பெறுபவர் : திரு. ஜே.ரமேஷ் ( உரிமையாளர், 'Bigtop Travels')


100 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்கள் விழா அரங்கில் ரூ.80/-க்கு கிடைக்கும்.

என்னுடன் தோழர் தனஞ்ஜெயன் அவர்கள் தனது இரண்டு கவிதை நூல் வெளியிடுகிறார்.

மழையில் குடை பிடித்துப் போகாதே ! - கவிதை நூல்

வெளியிடுபவர் : திரு. 'யார்?' கண்ணன் ( திரைப்பட இயக்குநர்)
பெறுபவர் : திரு. ஏ.எல். ஆறுமுகம் ( நிறுவனர், A.L.A.Foundation)

காற்றில் கவிதை உலா - கவிதை நூல்
வெளியிடுபவர் : திரு.நீலன் ( 'அலிபாபா' திரைப்பட இயக்குநர்)
பெறுபவர் : திரு. எம். இருளப்பன் ( நிறுவனர், D.V.M சேவா பாலம் அமைப்பு)


இடம் : சந்திரசேகர் திருமண மண்டபம்
34, லேக்வியூ சாலை,
மேற்கு மாம்பலம், சென்னை-33,
(கிட்டு பாற்க் எதிரில், போஸ்டல் காலனி அருகில் )


அனைவரும் வருக.....!!

Saturday, December 19, 2009

80/20 - ஒரு புதிய ஆட்டம் - (பகுதி - 2)

முதல் பகுதி

சென்ற பதிவில் 80/20 தத்துவத்தை பற்றி எழுதியிருந்தேன். பலர் அதை ஒரு ‘Business Principle’ ஆக தான் பார்க்கிறார்கள். நாம் வாழ்க்கையில் பினைந்து விட்ட ஒன்று என்பதற்கு சில உதாரணங்கள் பார்ப்போம்.

நீங்கள் வேலை முன்னேற 100 சதவீத முழு மூச்சோடு உழைக்க வேண்டும் என்று இல்லை. 20 சதவீதம் செலவழிக்கும் முயற்சியில் தான் உங்கள் 80 சதவீத வெற்றி அடங்கி இருக்கிறது. உதாரணத்திற்கு, வேலைக்கு சரியான நேரத்திற்கு செல்லுதல், வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக முடித்தல், நாகரிகமான உடை அணிந்து அலுவலகம் வருதல் போன்ற சின்ன சின்ன விஷ்யங்கள் உங்கள் மேல் மேலாளருக்கு நல்ல எண்ணம் வரும். அதுவே உங்கள் 80 சதவீத வெற்றிக்கு காரணமாக இருக்கும்.20 சதவீத உற்பத்தி பொருள் நிறுவனத்திற்கு 80 சதவீத லாபத்தை தருகிறது. ஒரு பொருளை விற்றால் நான்கு மடங்கு லாபம் சம்பாதிக்கும் படி தான் பொருளின் விலையை நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும்.

20 சதவீத வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் 80 சதவீத வருமானத்திற்கு காரணமாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, எல்.ஐ.சி முகவர் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளர் தெரிந்தவர்களுக்கு சிபாரிசு செய்வதை சொல்லலாம்.

நாட்டில் இருக்கும் 20 குற்றவாளிகள் தான், 80 குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறார்கள். 20 மோட்டார் வாகனங்களால் தான் 80 விபத்துகள் நடக்கிறது. 20 சதவீதம் வீட்டை அழகு படுத்தினால் 80 சதவீதம் பார்க்க அழகாக இருக்கும்.

80 சதவீத ஓட்டுகளில், இருபது சதவீத ஓட்டுகளை பெற்று தொகுதி வெட்பாளர் வெற்றி பெருகிறான்.

இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம்.இவ்வளவு எதற்கு... ஒரு பாரில் 20 குடிகாரர்கள் 80 பாட்டில் சரக்கு குடிக்கிறார்கள். ( இது ரொம்ப எளிமையான உதாரணம் ! )

சரி...! 80/20 நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கிற ஒன்று என்று ஏற்றுக் கொண்டு இருப்பீர்கள். அது என்ன 80/20.... ஏன் 50/50, 60/40 என்று இருக்க கூடாதா...?? இருக்க முடியாது என்பது தான் வல்லுநர்களின் கருத்து.

ஒவ்வொரு பிரிவில் சேர்ந்த வல்லுநர்கள் தங்களிடம் இருக்கும் தகவல்களை வைத்து ஆய்வு செய்த போது, முடிவில் 80/20 நெருக்கமாகவோ அல்லது அதற்கு மேலாக தான் வந்தது. அதனால், 80/20 என்று இந்த தத்துவதிற்கு பெயர் வைத்துவிட்டார்கள்.

அப்படி என்ன தகவல்கள் வைத்து ஆய்வு செய்தார்கள்...??? அடுத்த பதிவில்.

Friday, December 18, 2009

ஜெயிலுக்கு போறேன்.... நானும் ரவுடி தான்

டிசம்பர் மாதம் கச்சேரி மழை மட்டுமல்ல... புத்தக மழையும் பொழியும் என்று இந்த மாதம் நடந்து வரும் பல புத்தக வெளியீட்டு விழா காட்டியுள்ளது. பல புது பதிப்பகங்களும் களத்தில் குதித்துள்ளது. இதில் அடியேனும் பங்கு பெறுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.

சரி... ரொம்ப மொக்க போடமா நேர விஷயத்துக்கு வா... என்று நீங்கள் சொல்லுவது புரிகிறது.

வரும் டிசம்பர் 25ஆம் தேதி, காலை 10.30 மணிக்கு, மாம்பலம் சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

என்னை எழுதிய தேவதைக்கு... - (சிறுகதை தொகுப்பு)பதிப்பகம் தொடங்குபவர்கள் செய்ய கூடாத பெரிய முயற்சியை செய்திருக்கிறேன். நான் சொந்தமாக எழுதிய நூலை வெளியீடுவதை தான் சொல்கிறேன்.

அடுத்தவர் எழுதிய நூலில் சோதனை முயற்சிகள் செய்வதை விட நான் எழுதிய நூலில் செய்வது பரவாயில்லை என்று தோன்றியது.அந்த சோதனை (?) முயற்சித் தான் இந்த புத்தகம்.படிப்பவர்களுக்கு சோதனையாக இருக்காது என்ற நம்பிக்கையில் 'காதல் சிறுகதைகள்' மட்டும் தேர்வு செய்து தொகுத்துள்ளேன்.

பக்கங்கள் : 96
விலை : ரூ.55/-


காந்தி வாழ்ந்த தேசம் (கவிதை தொகுப்பு)50 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துக்காக தொகுக்கப்பட்ட நூல் என்று சொல்லலாம். ( நூல் வேலை தொடங்கும் முன்பே 50 பேரிடம் புத்தக பெயர் சென்று அடைந்து விட்டதே !) பல எழுத்தாளர்களின் தொடர்பும் கிடைத்திருக்கிறது.

பக்கங்கள் : 80
விலை : ரூ.45/-

வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரமுகர்களை பற்றிய விபரங்கள் அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்.

பதிவர் நண்பர்கள் அனைவரும் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, December 15, 2009

பிச்சைக்காரி !?கருவில் சுமக்காத குழந்தையை
கையில் சுமந்து
யாசகம் கேட்ட பிச்சைக்காரி !

குமரியாக இருந்தாலும்
அன்னை வேடத்தில்
அனுதாபத்தை காசாக்க
காரின் ஜன்னல் வெளியே
கைய்யேந்தினாள் !

பெண் என்றதும்
காற்றடித்த காகிதம் போல்
சீமானின் சட்டை பையில்
தெரிந்தே விழுந்தது
ஐந்நூறு ரூபாய் காகிதம் !

இரவில்
அதுவே அவள் ஆடையானது !
காலையில்
மீண்டும் அன்னையானாள்
அடுத்த நாள் இரவை கடப்பதற்கு... !

**

உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை

Monday, December 14, 2009

அப்தூல் கலாமும், சுஜாதாவும்

'கலாம்' என்ற மந்திர சொல் எத்தனை காலம் கடந்தாலும் இளைஞர்களால் உச்சரிக்கப்படும். அதிபர் பதவி அவருக்கு அலங்காரமாக இருந்தது என்று சொல்வதை விட, அவர் அதிபர் பதிவிக்கு பெருமை சேர்த்தார் என்று சொல்லலாம். அப்படிப் பட்ட 'அப்தூல் காலம்' பற்றி இரண்டு சுவையான நிகழ்ச்சி. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடன்.

*

1.ஒரு சமயம் சில ரஷ்ய விஞ்ஞானிகள் ஹைதராபாத்திற்கு தொழில் பேச வந்திருந்தார்கள். அதில், கலாமும், சுஜாதாவும் கலந்து கொண்டனர். முக்கிய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து விட்டதைக் கொண்டாடும் சந்தோஷத்தில் ஒரு ரஷ்ய விஞ்ஞானி கலாம் கையில் ஒரு கோப்பை ஓட்காவை திணித்து விட்டு அதை அருந்துமாறு வற்புற்த்தினார். கலாம் சுத்த சைவம் மட்டுமல்லல் எந்தவித மதுபானங்களையும் தொடாதவர். விளக்கிச் சொன்னாலும் ரஷ்யருக்கு ஆங்கிலம் புரியாது. அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

கலாம் தர்ம சங்கட நிலையில் சுஜாதாவிடம் வந்து, " இந்த பானம் தண்ணி மாதிரி தான் இருக்கு. நீ நேரா போய், இதே மாதிரி கிளாஸ்ல கொஞ்சம் வெறும் தண்ணி எடுத்துட்டு வந்திரு. என்கிட்ட யாருக்கும் தெரியாம கொடுத்து மாத்திரு" என்றார். சுஜாதா அவர்களும் அவ்வாறே செய்து விட, கலாம் ஒரு கோப்பை தண்ணீரை ரஷ்யர்களை நோக்கி உயர்த்தி 'சியர்ஸ்' என்றார்.

***

2.

கலாமும், சுஜாதாவும் திருச்சியில் இருந்த காலத்திலே நல்ல நண்பர்கள். இருவருக்கும் இந்திய ராக்கெட்ட் இயலைப் பற்றி திப்பு சுல்தானிலிருந்து ஆரம்பித்து, ஒரு புத்தகம் எழுதுவதாகத் திட்டம் போட்டனர். சுஜாதா அவர்கள் கலாமை எப்போதும் விமானத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பார்த்தாலும், " கலாம் என்னாச்சு புத்தகம்" என்பார்.

"இதோ ! அடுத்த மாசம் லீவு எடுத்திட்டுப் பத்து நாள் வரேன்யா ! ரெண்டு பேரும் முதல்ல மைசூர் போவோம். அங்க எழுத ஆரம்பிக்கலாம் ! " என்பார்.

அந்தப் புத்தகம் கலாமின் கனவை போல மாற்றிவிட்டது 'சுஜாதாவின் மரணம்.

Friday, December 11, 2009

80/20 - ஒரு புதிய ஆட்டம்

9 மணிக்கு ராமேஷ் அலுவலகத்தில் இருக்க வேண்டும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, 8மணிக்கு சென்றால் தான் முடியும். உடல் அசதியில் 7 மணி வரை தூங்கிவிடுகிறான். அவசர அவசரமாக குளித்து பாத்ரூம் விட்டு வெளியே வரும் போது காலில் அடிப்பட்டு விடுகிறது. எப்போதும் பொறுமையாக இருப்பவன், அன்று மனைவி சமையல் சரியில்லை என்று கரித்து கொட்டினான். வண்டியை வேகமாக ஓட்டும் போது ஒருவர் மீது மோதி சாலையில் சிறு பிரச்சனை யாகிறது. கடைசியில் ஒரு வழியாக அலுவகத்திற்கு 9.30 மணிக்கு வந்து சேருகிறான். அரை மணி நேரம் காலதாமதமாக வந்ததிற்கு, மேலாளரிடம் ‘அர்ச்சனை’ வாங்குகிறான். அன்று முழு அவன் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.ரமேஷ்யின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் ? காலையில் சரியான நேரத்தில் எழுந்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. ஒரு இடத்தில் தவறு நடந்ததால், பல இடங்களில் அதனின் பாதிப்பு தெரிகிறது. இதே சூழ்நிலையை எதிர்மறையாக சிந்திக்காமல், நேர்மறையாக சிந்தித்து பாருங்கள்.

ரமேஷ் சரியான நேரத்தில் எழுந்து சீக்கிரம் அலுவலகத்துக்கு தயாராகுகிறான். மனைவியின் சமையலில் குறை இருந்தாலும் சிரித்தப்படி சொல்லுகிறான். நேரம் அதிகமாக இருப்பதால் பொறுமையாக வண்டி ஓட்டி மேலாளருக்கு முன் செல்கிறான். மேலாளர் எதுவும் சொல்லலாததால் அன்றைய தினம் தன் வேலையில் தவறும் நடக்காமல் பார்த்துக் கொண்டான்.

சிறு புள்ளி தான். அதில் இருந்து சரியாக போனால் நேரான கோடு வரும். இல்லை என்றால் அது கிறுக்கல் தான். இதை தான், " முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்று பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். 80/20 தத்துவம் என்னவென்றால், முதல் புள்ளி சரியாக இருந்தால் போதும். கோடு என்ன… ஒரு பெரிய வீடே கட்டி விடலாம்.

"குறைந்த ஆட்களை வைத்து, அதிகமாக உற்பத்தி செய்தல்.
சிறிய நட்பு வட்டத்தில் இருந்து, பெரிய நட்பு வட்டத்தை உருவாக்குதல்.
குறைவாக முதலீடு செய்து பெரிதாக லாபம் பார்ப்பது"
- 80/20 அடிப்படை தத்துவம் இது தான்.

80/20 என்பது வியாபார தத்துவம் அல்ல.... நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் சந்திப்பது. சந்தித்துக் கொண்டு இருப்பது. சந்திக்க போவது....

20/20. 50/50 என்று எத்தனையோ ஆட்டம் பார்த்துவிட்டோம். இதுவும் ஒரு ஆட்டம் தான். ஆடி பார்த்துவிடுவோம்.

சினிமா, வியாபாரம், கல்வி, எழுத்து என்று நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் இந்த தத்துவத்தை தெரிந்துக் கொண்டால்.... சிகரத்தை தொட்டுவிடலாம்.

இதற்கு உதாரணம் அடுத்த பதிவில்........

Tuesday, December 8, 2009

பேனா திருடன்

மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிர்களும் திருடர்கள் தான். ஏதாவது ஒரு கட்டத்தில் எதையாவது திருட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும். சிலர் முயற்சித்து வெற்றி பெற்று இருப்பார்கள். ஒரு சிலர் பயத்தில் முயற்சிக்காமல் விட்டு இருப்பார்கள். அப்படி ஒரு 'ஆசை'. தப்பு.... 'ஆசை' என்று சொல்ல கூடாது. 'வேகம்' என்று தான் சொல்ல வேண்டும். 'பேனா' திட வேண்டும் என்ற வேகம் என்னுள் எழுந்தது.சனிக்கிழமை (5.12.09) அன்று அவரமாக திருச்சி செல்ல வேண்டிய வேலை வந்தது. அதனால், தக்கலில் டிக்கெட் வாங்கி அரை மணி நேரம் முன்பாகவே ஏழும்பூர் ரெயில்வே நிலையத்திற்கு சென்றுவிட்டேன். பயண சமயத்தில் என்னிடம் எப்போது மூன்று புத்தகங்களாவது இருக்கும். ராமேஸ்வர எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் என் சீட்டை தேடி கண்டு பிடித்து அமர்ந்தேன். பையில் இருக்கும் பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய 'சில நேரங்களில் சில அனுபவங்கள்' புத்தகத்தை படிக்க எடுத்தேன்.

புத்தகம் படிக்கும் போது எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டு குறித்துக் கொள்வேன். முடிந்தவரை கோடு, கட்டம், வீடு எல்லாம் கட்டி அடுத்தவர் அந்த புத்தகத்தை படிக்க முடியாமல் செய்துவிடுவேன். அப்படி அந்த புத்தகத்தை படிக்கும் போது கோடு போட சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்தேன். எழுதவில்லை.

தட்டி பார்த்தேன். கிறுக்கினேன். ஹூம். ஒன்றும் பலனில்லை. கடைசியில், பலூனை உதுவது போல் பேனாவை திறந்து ரிப்பில்லை எடுத்தேன். அப்போது தான் கவநித்தேன். பேனா இங்க் ரிப்பில் பின் வழியாக வழிந்து இருக்கிறது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அதை ஜன்னல் வழியாக தூக்கி ஏறிந்தேன்.

வெளியே வந்து புது பேனா வாங்கலாம் என்று பெட்டியுடன் இறங்கினேன் ( அந்த கம்பார்ட் மெட்டில் நான் தான் முதலில் ஏறியிருந்தேன். பெட்டியை தனியாக விட்டு வர பயமாக இருந்தது.) பிளாட் பாரம் கடை முழுக்க முழுக்க டீ, காபி, கூல் டிரிக்ஸ், பேப்பர் என்று இருந்தது. ஆனால், எந்த கடையிலும் பேனா இல்லை. ட்ரெயின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை இருக்கும் கடைகளை அலசிவிட்டேன். பேனாயில்லை. அந்த நேரம் பார்த்து பலர் சட்டை பையில் பேனாவுடன் அலைந்து எனக்கு எரிச்சல் மூட்டினர். அவர்களை பார்க்க பொறாமையாக இருந்து. கோபம் கூட வந்தது.

ஐந்து மணி நேர பயணத்தில் புத்தகத்தை எப்படி கோடு போடாமல் படிப்பது ? கோடி கணக்கில் செலவு செய்யும் தென்க ரயிலே ஸ்டேஷன் கட்டி என்ன பயன் ? எந்த ஒரு கடையிலும் பேனா விற்பனைக்கு இல்லை. இப்போது ரயில் புரப்பட இன்னும் பத்து நிமிடம் தான் உள்ளது. வெளியே சென்று வாங்கி வருவதும் சாத்தியமில்லை.

வேறு வழி இல்லை. பேனாவை திருட வேண்டியது தான். யாரிடமாவது பேனாவை வாங்கி அப்படியே ஒடிவிடலாம் என்று முடிவு செய்தேன். என் கெட்ட நேரம் அவர்களின் நல்ல நேரம். என் கண் முன்னே இந்தி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் பேனாவை ஆட்டைய போட்டால், 'தமிழன்' பேனா எடுத்து ஓடிவிட்டான் என்பார்கள். அதனால் வேண்டாம். தமிழ் பேச தெரிந்தவர்களிடம் சுடலாம் என்று இருந்தால் அவர்கள் சட்டை பையில் பேனா இல்லை. யாராவது ஏமாளி கிடைக்க மாட்டானா திரும்பி வந்தேன்.

'S2' கம்பார்ட்மென்ட். நான் பயணம் செய்ய வேண்டிய கம்பார்ட்மென்ட். ஏமாற்றத்தோடு என் இடத்துக்கு வந்து அமர்ந்தேன். வேறு வழியில்லாமல் படிக்க தொடங்கினேன். அப்போது ஒரு முதிய தம்பதியர்களை ஏற்றிவிட சபரிமலை மாலை போட்ட ஒருவர் வந்தார். பாக்கெட்டில் 'செல்லோ' பேனா. அவரிடம் திருட மணமில்லை. ஆனால், எனக்கு பேனா வேண்டும். ஐந்து மணி நேரம் கிறுக்காமல் புத்தகம் எப்படி படிப்பது.

கடைசியில் துணிந்து விட்டேன். செய்து விட வேண்டியது தான். தப்பாக இருந்தாலும் வெட்கத்தை விட்டு செய்து விட்டேன். ஆம்.... !

"ஸார் ! உங்க பேனா கொடுக்க முடியாமா !" என்று கேட்டேன். நான் திருப்பி கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் கொடுத்தார். என் நிலைமையை ( இது எல்லாம் நிலைமையா ??) அவரிடம் சொன்னேன். "நீங்களே பேனாவ வச்சிக்கோங்க" என்று சொல்லி சென்றுவிட்டார். ( மனதில் என்ன நினைத்தாரோ ??)

அப்பாடா ஒரு வழியாக பேனா கிடைத்துவிட்டது ! இது எப்படி பேனா திருட்டாகும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் எழுதவில்லை என்று தூக்கி போட்டேனே அது திருட்டு பேனா தான்.

Saturday, December 5, 2009

சில கேள்விகளும் கலைஞரின் பதிலும்

எப்படி இருந்தால் அது கலை ? எப்படி இருந்தால் எழுத்து இலக்கியமாகிறது ?

எதோ ஒருவகையில் உணர்வுகளை வருடுவது கலை ! என்றைக்கும் சாகாத எழுத்து, இலக்கியமாகிறது.

**சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கட்டுரை, கவிதை என்று எல்லா வகையிலும் முயற்சி செய்திருக்கிறீர்கள். இந்த இலக்கிய வடிவங்களில் உங்களுக்குப் பிடித்து எது ? எந்த வடிவத்தில் தேர்ருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் ?

நீங்கள் குறிப்பிடும் எல்லா இலக்கிய வடிவங்களிலும் எனக்கு மிகுந்த ஆர்வமும், அக்கரையும், அயற்வில்லா முயற்சியும் உண்டு ! எதில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதை மதிப்பெண் வழங்கிட உரிமை பெற்றுள்ள மக்கள் தான் தீர்மானிக்க முடியும்.

**

முன்பு குமுதத்தில் உங்களை விமர்சித்து கார்ட்டூன், செய்திகள் வந்தன என்பதற்காக குமுதத்தில் எழுதியதை நிறுத்தியது, ஜனநாயகம் போக்குதானா ? விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா நீங்கள் ?

குமுதத்தில் என் தொடர் வெளிவந்த போது அரசியல் அடிப்படையில் என்னை விமர்சித்தும், கேலி புரிந்தும், எத்தனையோ கட்டுரைகள் கார்ட்டூன்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை நான் ரசித்திருக்கிறேன். ஆனால், எனது தமிழ் அறிவையே கேள்விக்குறியாக்கி "கார்ட்டூன்" போட்ட போதுதான் குமுதம் ஆசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, " இனி தொடர்ந்து குமுதம் இதழில் எழுதிட இயலாதவனாக இருக்கிறேன்" எனத் தெரிவித்திட நேர்ந்தது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற நிகழ்ச்சி.

**
டாக்டர் பட்டம் பெற்றதால், உங்களுக்கு என்ன புது புகழ் வந்தது என்று நினைக்கிறீர்கள் ?

புத்துப்புகழ் எதுவும் வரவில்லை. அதனால் தான் என்னைப் பொறுத்த மட்பில் என் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' பட்டத்தை நான் பயன்படுத்துவதில்லை. பரவாயில்லை, "புது புகழ் வந்ததா ?" என்று கேட்பதின் மூலம் "பழைய புகழ்" இருப்பதாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி ! அதாவது, அந்தப்பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பே !

**

1936-1937ம் ஆண்டு பள்ளிப் பாடத்தின் வாயிலாக நீதிக் கட்சிகளைப் பற்றி அறிந்து கொண்டவர் நீங்கள். உங்கள் ஆட்சிக் காலத்தில், திராவிட இயக்கம் பற்றி மாணவர்கள் அறிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?

பெரியார், அண்ணா மற்றும் தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளும் - அவர்தம் கருத்துக்களும் கழக ஆட்சிக்காலத்தில் பாட புத்தங்கள்களில் இடம்பெற்றன.

**

திராவிட இயக்கத் தலைவராகிய உங்களின் குடும்பத்தார் நடத்தும் பத்திரிகைகள் குங்குமம், குங்குமச் சிமிழ், சுமங்கலி போல சனாதானத்தின் குறியீடுகளைத் தூக்கிப் பிடிப்பது ஏன் ? யாரைத் திருப்திப்படுத்த இந்தப் பெயர்கள் ?

உங்களுக்கு அந்தப் பெயர்கள் அல்லது பொருள்கள் சனாதனத்தின் குறியீடுகளாகத் தோன்றலாம். பழங்காலர் தோட்டு தமிழ் நாட்டுப் பெண்களின் பழக்கத்திலிருக்கும் பண்பாட்டுச் சின்னங்கள் என்றும் கூறலாமல்லவா ? உண்டியல் என்றால் உடவடியாக கோயிலில் இருக்கிற ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. அதற்காக வீட்டில் தாய்மார்கள் சேமிப்புக்காக உண்டியலைப் பயன்படுத்துவது சனாதனமாகிவிடுமா ?

**

நவீன இலக்கியம் என்றால் என்ன ? ஆங்கிலம் கலந்து எழுதுவது தான் " நவீனம்" என்று கருதுகிறீர்கள். இலக்கியத்தில் நவீனத்துவம் என்றால் என்ன ?

ஆங்கிலம் கலந்து எழுதுவது தான் நவீன இலக்கியம் என்ற கருத்து எனக்கு உடன்பாடல்ல ! இலக்கியத்தில் நவீனத்துவம் என்பது ; வளர்ந்து வரும் சமூதயத்தில் புதிய சிந்தனைகளைத் தூண்டுவது.

**

சங்கத் தமிழ் மாதிரி, தொல்காப்பியம் பற்றி எழுதுகிறீர்களாமே ? அகம், புறம் மட்டுமே எழுதுவீர்களா ? எழுத்து, சொல்லையும் எழுதுவீர்களா ?

அந்தப் பணிக்கான ஓய்வு இன்னும் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் பற்றி எழுத முயற்சி தொடங்கினால், முதல் கட்டமாக பொருளதிகாரத்தைத்தான் எடுத்துக் கொள்வேன்.

**

எழுத்துத் துறைக்கு மட்டும் நீங்கள் வராமல் இருந்திருந்தால், உங்கள் அரசியல் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் ?

அரசியல் களத்தில் நின்று போராட எனக்குத் தேவையான ஒரு படைக்கலன் குறைந்திருக்கும்.

**
திரவிட இயக்கப் பாரம்பரியத்தில் ஒரு பிராமணப் பெண்மணி முதல்வராக நேர்ந்தது, திராவிட இயக்கத்தின் தத்துவப் பின்னடைவு காரணம் என்று சொல்லலாமா ? திராவிட இயக்கத்தின் மூத்த தளபதி என்ற நிலையிலிருந்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

தத்துவத்தின் பின்னடைவு அல்ல ! தத்துவங்களால் ஏற்பட்ட பின்னடைவு !

**

'1950 ம் ஆண்டுகளில் தாங்கள் எழுதிய எழுத்துப் பாணியை 90 களிலும் பயன்படுத்துவது, தங்கள் எழுத்து வளர்ச்சியைக் காட்டுவதாக இல்லை' என்று விமர்சகர்கள் கூறுகிறார்களே, அதற்குத் தங்கள் பதில் என்ன ?

என் எழுத்து வளர்ச்சியைக் காட்டும் அளவுகோல் நீங்கள் குறிப்பிடும் அந்த எரிச்சல் விமர்சகர்களிடம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.


நானும் இலக்கியமும் - பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞர் அளித்த பதில்கள். கலைஞர் கையெழுத்திலேயே அச்சிடப்பட்டுள்ள நூல்.

பக்கங்கள்.96. விலை.70
நக்கீரன் வெளியீடு

Thursday, December 3, 2009

குறும்படம் : என் மேல் விழுந்த மழைத்துளி

பதினைந்து நிமிடத்தில் ஒரு காதலை அழகாக சொல்ல முடியும் நிருபித்த தமிழ் குறும்படம். ஏற்கனவே... தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட கதை தான். ஆனால், இரண்டுரை மணி நேரம் சொன்ன விஷயத்தை சில நிமிடத்தில் உணர வைப்பதை பாராட்டியாக வேண்டும்.

கதாநாயகனாக வரும் அருள், காதலில் காட்டும் முகபாவனையும் மிக அருமை. இறுதி காட்சியில் நடிப்பு ( 'சேது' விகிரம் ஞாபகம் வந்தாலும்) அனுபவத்து நடித்திருக்கிறார்.

'ஐயோடா...', 'சாம்பாரே' சொல்லும் போது 'கதாநாயகி' அஷ்யானா தாமஸ் குரல் கொஞ்சுகிறது. கண் சிமிட்டுவதும் அழகு. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் தெரிவதால் என்னையும் அறியாமல் அவளை காதலிக்க வைக்கிறார். ( என் மனைவி இந்த பதிவை படிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்...). நடித்ததோடு இல்லாமல் 'சிறம் தொடும் மழைத்துளி...' என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.

பாடலிலே இருவரது காதலை மனதில் பதிவைத்துவிட்டுகிறார் இசையமைப்பாளர் நந்தா.

தன் காதலி கொடுக்கும் பரிசு கொடுக்கும் , அதே பரிசில் தன்னை முடித்துக் கொள்ளுவதும் மனதை நெருடுகிறது. இரண்டு பேர் காதல் காட்சியை பார்க்கும் ஒரு படத்தை பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. (கதை, திரைகதை, வசனம், பாடல் எல்லாம் இவரே ! )

குறும்படம் என்றால் மெசேஜ் என்று சொல்லாமல் ஒரு காதல் கதையும் சொல்லலாம் என்று காட்டுகிறது இந்த படம்.

Part - 1Part - 2இவர்கள் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Wednesday, December 2, 2009

மு.க.ஸ்டாலின்

ஜி.ஆர்.சுவாமி

"எல்லோரும் ஸ்டாலினை நான் உருவாக்குவதாகச் சொல்கிறார்கள். அது தவறு. அவரை உருவாக்கி விட்டதே இந்திரா காந்தி தானே ! பேசாமல் கிடந்த அவரை மிசா கைதியாக்கி, சிறையில் போட்டு, அரசியலில் அவரை உருவாக்கியதே இந்திரா காந்தி தானே !"
– கலைஞர்
நாளைய தி.மு.க கட்சியின் எதிர்காலம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் இருக்கிறது எந்த வித சந்தேகமில்லாமல் தற்போதிய அரசியல் சூழல் தெரிகிறது. அவரை பற்றி தி.மு.க கட்சி சாற்பாக பலர் இப்போதே கொடி தூக்கி நூல்கள் எழுத தொடங்கிவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலை ஒரு தலை பச்சமில்லாமல் ஸ்டாலினை பற்றி வந்த புத்தகம் என்று சொல்லும் அளவிற்கு Minimax வெளியீடான ‘மு.க.ஸ்டாலின்’ நூல் அமைந்துள்ளது.

ஸ்டாலின் வாழ்க்கையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர் மிசாவில் கைதானதில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை உறுதி செய்வது போலவே 'அது ஒரு மிசா காலம்' என்ற தலைப்பில் இந்த நூல் தொடங்குகிறது.

ஜார் மன்னன் ஆண்ட ரஷ்யாவை பாரதியார் " இம் என்றால் சிறைவாசம் ! ஏன் ? என்றால் வனவாசம், இவ்வாறு செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே கோலோச்சியது " என்பார். அந்த பிரதிபலிப்பு மிசாவின் போதும் அங்கிகெனாதப்படி இந்திய பெருநாட்டில் எங்கும் ஒரே மாதிரி தான் இருந்தது. இக்கொடுமைக்கு ஈடுக்கொடுக்க முடியாதவர்கள், " எங்களுக்கு தி.மு.கவுக்கும் எந்தத் தொடர்பும் இப்போது கிடையாது, நான் இயக்கத்தை விட்டு விலகி பல நாள் ஆகிவிட்டது" என அறிக்கை விடுவோரும், விளம்பரம் செய்ததோடுமாக இருந்தனர். அந்த சமயத்தில் ஸ்டாலினை கைது செய்து, அவர் கொடுமை படுத்திய காவலர்கள் முயற்சித்தனர். ஸ்டாலினை காப்பாற்றும் முயற்சியில் சிட்டிபாபு இறந்தார். ( சிட்டிபாபு இறந்ததை பற்றி இந்த நூலில் குறிப்பிடவில்லை.)

இப்படி தொடங்கிய ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில் தி.மு.க இளைஞர் அணி முக்கிய பொறுப்பு அவரை மேலும் உயர்த்தியது. ஸ்டாலினுக்கு தோள் கொடுத்த தி.மு.க தலைவர்களுள் முக்கியமானவர் வை.கோபால்சாமி. தோள் கொடுத்தவர் ஒரு கட்டத்தில் எதிர் அணியில் சந்திக்க வேண்டிய சவாலை சமாளிக்க வேண்டிய நிலைமை.

ஆ.தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் மேயராக இருந்த போது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேயருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. விளைவு, மாநகராட்சியின் நிர்வாகப் பணிகளில் தேக்கநிலை ஏற்ப்பட்டது. ஒருவர் இரண்டு பதவியில் இருக்க கூடாது என்பதால் தன் மேயர் பதவியை துறந்தார்.

அதுமட்டுமில்லாமல், முதன் முறையில் போட்டியிட்டு அமைச்சரவையில் சுலபமாக வருவது போல் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி எதுவும் கிடைக்கவில்லை. 1976ல் தொடங்கிய ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில், 2006யில் தான் அமைச்சர் பதவி கிடைத்தது. அதுவும் வாரிசு என்ற பெயரில் கிடைத்த பதவி என்று விமர்சனத்துக்கு ஆளானார்.

அரசியலில் தொடக்கத்திலே பல சவால்கள், விமர்சனங்கள் என்று எப்படி சமாளித்தார் என்பதை இன்னும் விரிவாக இந்த புத்தகம் சொல்லியிருக்கலாம். ஒரு சில இடங்களில் புத்தகம் படிக்கும் எண்ணமே வரவில்லை. நாளெடுகழில் சேகரித்த செய்தி தொகுப்பு போல் இருந்தது. குறிப்பாக, தினகரன் அலுவலகத்தில் தீவைப்பு சம்மவமும், அழகிரி, ஸ்டாலின் உறவுமுறையும் சொல்லலாம். சிறு புத்தகம் என்பதால் மேலோட்டமாக செய்திகளை தான் தெரிந்துக் கொள்ள முடிகிறது.


‘ஒரே இரத்தம்’ என்ற திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவராக நடித்திருப்பார். ஸ்டாலின் வெள்ளித்திரை பிரேவரத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஒரு டி.வி தொலைக்காட்சி தொடரில் கூட நடித்து இருக்கிறார். இவரும் சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தினாரா இல்லையா என்று விபரங்கள் இல்லை.

ஸ்டாலின் பற்றிய வாழ்க்கை குறிப்புகளில் மு.க.முத்து, எம்.ஜி.ஆர் படம் எதற்கு ? ஸ்டாலின் சம்பந்தமான வேறு படத்தை போட்டு இருக்கலாம். எதிர் கட்சியில் இருந்த பெருந்தலைவர் காமராஜர், வி.வி.கிரி போன்றவர்கள் ஸ்டாலின் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். அதை பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

"கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலினுக்கு அது சாதகமாகவும் இருக்கிறது. பாதகமாகவும் இருக்கிறது. சாதகம் அவருக்கு விளம்பரம் கிடைக்கிறது. சுலபமாக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். அதே சமயம் முதல்வரின் மகன் என்பதால் விமர்சங்களும் எழுகிறது. இது பாதகம்." - சோ, துக்ளக் ஆசிரியர் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

இப்படி முன்னனி பத்திரிக்கையாளர் விமர்சனங்களுக்கு ஸ்டாலின் பதில் என்ன ?? ஸ்டாலின் பத்திரிக்கை விமர்சனங்களை எப்படி எதிர்க் கொண்டார் ?? போன்ற விபரங்கள் சொல்ல வேண்டிய ஒன்று.

கலைஞர் குழுமத்தில் சன் டி.வி இருந்த போதும், இப்போது கலைஞர் டி.வி கையில் இருந்தும் ஸ்டாலின் பெரும்பாலும் பேட்டி கொடுத்ததில்லை. அவர் மேல் இருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களை பெரிதாகவும் எடுத்துக் கொண்டதில்லை. அரசியல் விமர்சங்களுக்கு பதில் அளிக்கிறார். மேற் குறிப்பிட்ட ஒரு சில குறைகளை ஸ்டாலினை பற்றி பெரிய புத்தகம் கொண்டு வரும் போது கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்.

தமிழ் நாட்டு அரசியலில் வாரிசு அரசியல் என்ற பதம் தவிர்க்க முடியாதது. ஆனால், அது ஸ்டாலினுக்கும் பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. ! (என் கருத்தல்ல.... இந்த புத்தகத்தில் இருந்த இறுதி வரிகள்)

நூலை வாங்க இங்கே...

பக்கங்கள்.79 விலை.25.
Minimax வெளியீடு

LinkWithin

Related Posts with Thumbnails