வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 24, 2013

ஹேராம் படமும், நாளைய தலைமுறையின் கேள்வியும்

நேற்று, கலைஞர் தொலைக்காட்சி "ஹே ராம்" ஓடியது.அதைப் பார்த்து, என் ஆறு வயது மகன் "எதுக்காக காந்திய சுட்டாங்க?" என்று கேட்டான்.

எவ்வளவு காலம் தான் பசங்களுக்கு காக்கா, நரி கதை சொல்லுவது. இந்திய வரலாற்றை சொல்லிக் கொடுப்போம் என்று இந்தியா - பாகிஸ்தான் வரைப்படத்தை வரைந்து விளக்க தொடங்கினேன்.

“சின்ன பசங்களுக்கு சொல்லுற கதையா” என்று என் மனைவி கேட்டாள்.

“இப்போவே இந்த கதைய தெரிஞ்சிக்கிட்டாதான் நாளை பசங்களுக்கு படிக்கும் போது புரியும்” என்றேன்.

அதுமட்டுமல்ல… நாளைய தலைமுறைகள் நமது சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா - பாகிஸ்தான் பிரிந்த கதை, ஹிந்து - முஸ்லிம் அடித்துக் கொண்டு இறந்தது என்று கூறியதோடு இல்லாமல், வரைப்படத்தில் இப்படி தான் பிடிக்கப்பட்டது என்று விளக்கினேன்.

" அதுக்கு ஏன் காந்திய சுட்டாங்க...?" என்று கேள்வி கேட்டான்.

"காந்தி, நேரு, ஜின்னா, மவுன்ட்பேட்டன் எல்லாம் சேர்ந்து தான் இந்தியா - பாகிஸ்தான் பிரிச்சாங்க. இந்து - முஸ்லிம் சண்டையில நிறைய பேரு செத்ததுக்கு காந்தி தான் காரணம் நினைச்சு சுட்டுட்டாங்க..." என்றேன்.

"அப்போ ! மத்தவங்களும் இதே மாதிரி சுட்டு தான் செத்துப்போனாங்களா ?" என்று கேள்வி கேட்டான்.

"இல்ல... எல்லாரும் வயசாகி தான் செத்துப் போனாங்க..." என்றேன். (1979ல் மவுன்ட்பேட்டன் (தனது 79 வயதில்) ஐரிஷ் போராளிகளால் கொல்லப்பட்டது இந்த இடத்தில் சொல்ல வேண்டாம் என்று தோன்றியது.)

"எல்லாரும் சேர்ந்து தானே தப்பு பண்ணாங்க... அப்போ எதுக்கு காந்திய மட்டும் சுட்டாங்க... பாவம் தானே அவரு..." என்றான்.

இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை. சரித்திரப் பக்கத்திற்கு நாளைய தலைமுறை கேட்க போகும் கேள்விக்கு பதில் இல்லை.

Thursday, December 19, 2013

முசோலினி

இந்த வருடம் பதிப்பக வேலைகளுக்கு ஓய்வு கொடுத்ததில் என்னுடைய எழுத்துப்பணியில் அதிகம் கவனம் செலுத்த முடிந்தது. சென்னை 2014 புத்தகக் கண்காட்சிக்கு வரிசையாக என்னுடைய நூல் வர இருக்கிறது.

ஜனவரி 2013, உலக சினிமா ஓர் பார்வை வெளியானது. கௌதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சென்ற சென்னை புத்தகக் கண்காட்சியிலே வெளியாகி, பதிப்பாளருக்கு நஷ்டமாகாமல் விற்பனையானது.

ஆக்டோபர் 2013, பெரியார் ரசிகன் நாவல் வெளியானது. உதயகண்ணன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தில் என்னுடைய மூன்றாவது புத்தகமாக முசோலினி வெளியாகியுள்ளது. இதனை சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் இன்னொரு பிரிவான வானவில் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நூலைப் பற்றிய விபரம்:

இத்தாலியில் அரசியல் இருந்தது, அதிகாரம் இருந்தது, ஆட்சி இருந்தது.  ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. அத்தனைக்கும் காரணம் ஒற்றை மனிதர்,

அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒரு மனிதன் எத்தனை உயரத்துக்கு வளர்வான், எத்தனை ஆழத்துக்கு வீழ்வான் என்பதற்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியே முதன்மையான உதாரணம்.

பயந்துகொண்டு வியந்துகொண்டும் வாசிக்க வேண்டிய வாழ்க்கை !!

இணையத்தில் வாங்க...

மேலும் என்னுடைய மூன்று நூல் வர விருக்கிறது. அதைப் பற்றிய விபரங்களை பின்னர் அறிவிக்கிறேன்.

Tuesday, December 17, 2013

சினிமா 100 (1913 - 2013) - 2. நடராஜ முதலியார்

சென்ற தொடரில் இந்திய அளவில் மௌனப்படங்களுக்கு பங்கு அளித்த முக்கிய பிரமுகர்கள், படங்களைப் பற்றி பார்த்தோம். ஆனால், மொழிவாரியாக சினிமாவை கொண்டு செல்ல முடியவில்லை. எப்படி இந்திய சினிமாவின் தந்தை பால்கே என்று சொல்கிறோமோ, அதேப் போல் ஒவ்வொரு மொழியிலும் சினிமாவை வளர்த்த முக்கிய நபர்கள் இருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவின் தந்தையாக கருதப்படுபவர் ஆர்.நடராஜ முதலியார். தானுந்து (Automobile) வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கிய இவர், பால்கே எடுத்த படங்களால் ஈர்க்கப்பட்டார். தானும் தென்னகத்தில் சினிமா கலையை வளர்க்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இறங்கினார்.

சில நண்பர்களை மூலம் முதலீட்டை திரட்டி, புரசைவாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் திரைப்பட ஸ்டூடியோ ஒன்றை தொடங்கினார். தென்னகத்தில் முதல் திரைப்பட ஸ்டூடியோ இது தான். ஸ்டூடியோவோடு நின்றுவிடாமல் திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டார்.

1916ல், இவர் எடுத்த “கீச்சக வதம்" படம் தான் தென்னிந்தியாவின் முதல் படம் என்று சொல்லலாம். அன்றைய தேதியில் இந்த உருவாக்க ஆன மொத்த செலவு ரூ.35000 மட்டும் தான். அதன் வெற்றியை தொடர்ந்து லவக்குசா, ருக்மணி சத்யபாமா, மயில் ராவணா போன்ற பல மௌனப்படங்களை எடுத்திருக்கிறார் என்று பல படங்களை தயாரித்தார். பல புராணக் கதைகள் தென்னகத்தில் மக்கள் நடராஜ முதலியார் உதவியால் படமாக பார்த்தனர்.

மௌனம் படம் என்பதால் ஹிந்தியிலும் வெளியிடுவதில் சிரமமில்லை. தலைப்பு பலைகை மட்டும் ஹிந்தியில் எழுதி வெளியிட்டனர். நடராஜ முதலியார் படங்களுக்கு ஹிந்தி எழுத்து பலகை எழுதியவர் மகாத்மா காந்தியின் கடைசி மகனும், ராஜஜியின் மருமகனுமான தேவதாஸ் காந்தி அவர்கள். சினிமாவுக்காக உழைத்த நடராஜ முதலியார் தனது மகனை ஒரு தீ விபத்தில் இழந்தார். அதுவும் தன் ஸ்டூடியோவில் நடந்த தீ விபத்து. மகனை இழந்து, ஸ்டூடியோ பாதிக்கப்பட்டத்தில் மனதளவில் நடராஜ முதலியார் நோடிந்து போய்விட்டார். தன் ஸ்டூடியாவை முடிவிட்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

இவரது திரைப்படங்களால் பலர் ஈர்க்கப்பட்டுயிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் ஜே.சி.டேனியல்.

 ஜே.சி.டேனியல் மலையாள திரையுலகில் தந்தையாக கருத்தப்படுபவர். மலையாளத்தின் முதல் படமான “விகதகுமரன்” எடுத்தவர். திருவனந்தப்புரம் நேஷ்னல் பிக்சார்ஸ் என்ற பெயரில் ஸ்டூடியோ தொடங்கியவர். அதுவரை புராண கதைகளே படமாக்கி வந்திருந்தனர். இவர் தான் முதன் முதலில் சொந்தக்கதை உருவாக்கி படமாக எடுத்தார்.

மலையாளத் திரையுலகத்தின் தந்தை என்று போற்றப்படும் ஜே.சி..டேனியல் “ஒரு தமிழர்” என்பது குறிப்பிடதக்கது. தமிழ் நாட்டில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், கேரளா சென்று படம் எடுத்தார். இன்று தென்னகத்தில் தரமான படங்கள் என்று சொன்னால் மலையாளப் படங்கள் என்று சொல்லும் அளவிற்கு மலையாள திரையுலகம் இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் தெலுங்கு திரையுலகின் தந்தையான வெங்கையா நாயுடு பெயரில் தெலுங்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளருக்கு "நந்தினி வருது" நிகழ்ச்சியில் விருது வழங்கப்படுகிறது. அதேப் போல், ஜே.சி.டானியல் நினைவாக கேரள அரசு வாழ்நாள் சாதனை விருது முத்த கலைஞர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் நடராஜ முதலியார் பெயரில் ஒரு விருது வழங்கப்படவில்லை.

அதேப் போல், இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை மராத்தியில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். மலையாள சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜெ.சி.டெனியல் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.
சினிமா நூற்றாண்டை அமோகமாக கொண்டாடிய நாம் தமிழ் சினிமாவின் தந்தையான நடராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை எப்போது திரைப்படமாக எடுக்கப் போகிறோம் ? குறைந்தப் பட்சம் தமிழ் சினிமாவில் பணியாற்று சினிமாத்துறையினர்களுக்காவது தமிழ் சினிமாவின் தந்தைப் பற்றி தெரிந்திருக்குமா ?

(நன்றி : நம் உரத்தசிந்தனை மாத இதழ், டிசம்பர் )

Monday, December 9, 2013

சரப்ஜித் சிங் : ரா உளவாளியின் கண்ணீர் கதை

சரப்ஜித் சிங் ஒரு விவசாயி. திருமணமானவன். அழகான இரண்டு பெண் குழந்தைகள். அன்பான சகோதரி. இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருக்கும் தர்ன் தரன் மாவட்டத்தில் இருக்கும் பிகிவிந்த் என்ற இடத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தான். மல்யுத்தம் என்றால் அலாதி பிரியம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களோடு மல்யுத்தம் விளையாடுவது சரப்ஜித்துக்கு பிடிக்கும்.

குடும்பதோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த சரப்ஜித் சிங் ஒரு நாள் மாயமாய் மறைந்தார். குடும்பத்திறனர் ஒவ்வொருவரும் அவனை தேடாத இடமில்லை. விசாரிக்காத உறவினர்கள் இல்லை. எங்கு சென்றான். எப்படி சென்றான் என்று எந்த விபரமும் இல்லை. இரண்டு பெண் குழந்தையை சரப்ஜித் சிங் மனைவி செய்வதறியாமல் இருக்க அவர்களுக்கு துணையாக இருந்தது சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பிர் சிங் தான்.


1991ல் ஒரு நாள் சரப்ஜித் சிங்யிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் தான் பாகிஸ்தான் இராணுவத்தால் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், தன் பெயரை பாகிஸ்தான் சிறை பதிவு ஏட்டில் ”மன்ஜித் சிங்” என்ற பெயரில் இருப்பதாகவும் எழுதியிருந்தார். தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று தன் கண்ணீர் துளிகள் குறிப்பிட்டிருந்தான். அன்றில் இருந்து தன் சகோதரனின் விடுதலைக்காக தல்பீர் போராடினாள்.

 இந்திய அரசு, பாகிஸ்தான் அரசு, கருணை மனு, மக்கள் உதவி என்று ஒவ்வொருவராக கெஞ்சி தன் சகோதரனின் விடுதலைக்காக கேட்டு பார்த்தாள். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல..... கிட்ட தட்ட இருபத்தி இரண்டு வருடங்கள் தன் சகோதரனின் விடுதலைக்காக போராடினாள்.

 பாகிஸ்தான் இராணுவம் பிடித்திருப்பது இந்திய ஏழை விவசாயி என்று தான் சரப்ஜித் சிங்கை முதலில் கைது செய்தனர். பின்னர் பாகிஸ்தான் அரசு சரப்ஜித் சிங்யை 'ரா உளவாளி' என்று கூறியது. அது மட்டுமில்லாமல் லாகூர், பைசிலாபாத் இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது குற்றத்திற்காக சரப்ஜித் சிங்க்கு மரண தண்டனை விதித்தது.

 சரப்ஜித் சிங் ரா உளவாளி அல்ல என்று இந்திய அரசு மறுத்தது. வெடிகுண்டு தாக்குதலுக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அவர்கள் குடும்பம் மறுத்தனர். ஆனால், பாகிஸ்தான் சரஜித் சிங்யை விடுதலை செய்ய உதவவில்லை.

நாடெங்கும் சரப்ஜித் சிங் மரண தண்டனை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தது. சரப்ஜித் சிங்யின் மரண தண்டனை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடந்தது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூட சரப்ஜித் சிங் ஆதரவாக இணையத்தில் ஆதரவு கேட்டார். இந்திய அரசு சரப்ஜித் சிங் விடுதலை செய்ய கோரியது. ஆனால், பாகிஸ்தான் எதற்கும் செவி சாய்கவில்லை. தங்கள் நாட்டில் வெடிகுண்டு நிகத்திய சரப்ஜித்தை தண்டிக்காமல் விட மாட்டோம் என்று தான் சொன்னது.

இங்கிலாந்து வழக்கறிஞர் "freesarabjitsingh.com" என்ற இணைய்தளத்தை தொடங்கி சரப்ஜித் சிங் விஷயத்தை மனித உரிமை குழுவுக்கு கொண்டு சென்றார். உலகில் பல இடங்களில் இருந்து ஆதரவு கிடைத்தது. பாகிஸ்தான் வழக்கறிஞர் ஒருவர் கூட சரப்ஜித் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

 சரப்ஜித் கருணை இழுவையில் இருக்கும் சமயத்தில் 29 ஏப்ரல் 2013 அன்று பாகிஸ்தான் சிறைச்சாலையில் கைதிகளுக்குள் நடந்த சண்டையில் சரப்ஜித் சிங் பலமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.

இறந்த சரப்ஜித் சிங் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பெரிய பெரிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். பெரிய தலைவர் இறந்தால் எவ்வளவு கூட்டம் கூடுமோ அந்த அளவுக்கு இறுதி ஊர்வலத்தில் கூடியது. பாகிஸ்தான் எதிரான கோஷங்கள் எழுப்பட்டது. இருபது வருடங்களுக்கு மேல் காத்திருந்த ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைக்க அரசு என்ன செய்தாலும் சரப்ஜித் சிங் உயிருக்கு ஈடாகாது.

அவரது சகோதரி இது திட்டமிட்ட மிட்ட கொலை என்றார். அரசியல் பிரமுகர்கள் "அப்ஸல் குருவை தூக்கில் போட்டதற்காக பாகிஸ்தானின் பழி வாங்கும் நடவடிக்கை” என்றனர். பிரதமர் மன்மோகன் சிங் "துக்கக்கரமான செய்தி" என்று சரஜித் சிங் மரணத்திற்கு இறங்கல் தெரிவித்தார். இந்திய அரசு அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி உதவித்தொகை அளித்தது.

 மே 3, 2013 ஜம்மு சிறைச் சாலையில் இருக்கும் பாகிஸ்தான் கைதியான சனுல்லா ஹக் முன்னாள் இராணுவ வீரன் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தான். இதனால், இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் கைதிகள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்து.

 சரப்ஜித் சிங்க்காக இத்தனை பேர் போராடினார்கள். ஆனால், நிஜமாகவே அவர் ரா உளவாளி தானா என்ற சந்தேகம் அவருக்காக போராடியவர் மனதில் இருந்துக் கொண்டு தான் இருந்தது. 1990ல் பாகிஸ்தானில் வெடித்த குண்டு வெடிப்புக்கு சரப்ஜித் சிங்க்கு சம்மந்தம் இருக்கிறதா இல்லையா என்ற உறுதியான தகவல் இல்லை. ஆனால், சரப்ஜித் சிங் இறந்த பிறகு அவர் ரா உளவாளி தான் என்ற உண்மையை ரா தலைமை அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.

முக்கியமான பணிக்காக பாகிஸ்தானுக்கு உளவு பாக்க அனுப்பி வைக்கப்பட்டார் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால், பாகிஸ்தான் வெடிகுண்டு பற்றியும், சரப்ஜித் சிங் பங்கு பற்றியும் எந்த விபரமும் கூறவில்லை. 

கட்டுரைக்கு உதவியது

http://en.wikipedia.org/wiki/Sarabjit_Singh
http://indiatoday.intoday.in/story/surjeet-singh-admits-he-was-a-spy-raw-agent-in-pakistan/1/202866.html

Thursday, November 14, 2013

சினிமா 100 (1913 - 2013)

சலனப்பட காலங்கள் 

சினிமா - அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை கொண்டாடக் கூடிய ஒரே விஷயம். ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு ரசனை இருந்தாலும், சினிமாவை ஒதிக்கிவிட முடியாதபடி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கலந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு முதல்வர்களை தந்ததும், கோடிஸ்வரர்களை தெருவுக்கு கொண்டு வந்தது சினிமா தான். பொழுதுபோக்குக்கும் சரி, குடும்பத்துடன் செல்வதற்கும் சரி, தனிமையை மறப்பதற்கும் சரி சினிமா பலரின் தோழனாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சினிமா நூறு ஆண்டுகள் கடந்திருக்கிறது மிகவும் பிரமிப்பான விஷயம். எத்தனையோ தொழிற்துறை நூறு ஆண்டுகளை கடந்திருக்கிறது. சினிமாவுக்கு முன்பு தோன்றிய தொழிற்துறை இன்றும் இருக்கிறது. ஆனால், சினிமா நூற்றாண்டை கொண்டாடுவது போல் வேறு எந்த துறையை கொண்டாடியதில்லை. கொண்டாடப் போவதுமில்லை. காரணம், மற்ற தொழிற்துறையை விட சினிமா பல முதலாளிகளை உறுவாக்கியிருக்கிறது. தன் வரலாற்றை சரியாக பதிவு செய்து வளர்ந்த ஒரே துறை சினிமா மட்டும் தான்.


அழுது சத்தம் போட்டுக் கொண்டே பிறக்கும் குழந்தைப் போல் சினிமா தோன்றவில்லை. சினிமாவின் பிறப்பு மௌனமாக முறையில் தான் இருந்தது. திரையில் படம் பார்ப்பவர்களுக்கு சிறு சத்தம் கூட திரையில் இருந்து கேட்காது. ஓளியை மட்டும் பதிவு செய்யும் சாதனமாக தான் சினிமா தோன்றியது.

முதன் முதலில் இந்தியாவில் திரையிடப்பட்ட படம் ”ஸ்ரீ புண்டலிக்’ என்னும் மராத்தியில் எடுக்கப்பட்ட சலனப்படம் தான். மே 18, 1912ல் தாதாசாகேப் டோர்ன் என்பவர் மும்பையில் முதல் முதலாக படத்தை திரையிட்டார். இதில் பணியாற்றிய கெமிராமேன் ஜான்சான் வெள்ளையன் என்பதாலும், படத்தின் வேளைகள் முழுக்க முழுக்க லண்டனில் நடந்ததாலும் இதை முதல் இந்திய சினிமாவாக யாரும் கருவதில்லை.

முதல் இந்திய சினிமாவாக நாம் சொல்வது மராத்தியில் தாதாசாகேப் பால்கே அவர்கள் இயக்கிய “ராஜா ஹரிசந்திரா” படம் தான். மே 3, 1913ல் மும்பையில் திரையிடப்பட்டது. ஒரே ஒரு பிரதி மட்டும் எடுக்கப்பட்டு திரையிட்டனர். வியாபார ரிதியாகவும் இந்த படம் மிக பெரிய வெற்றிப் பெற்றது.

ராஜா ஹரிசந்திரா படத்தின் வெற்றிக்கு பிறகு மோகினி பஸ்மசூர், சத்தியவான் சாவித்திரி, லன்கா தாஹன், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மா போன்ற படங்களை பால்கே இயக்கினார். ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவுக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய பால்கே, தனது நிறுவனம் நஷ்டத்தில் முழ்கி கையில் பணமில்லாமல் இறந்தார்.

சினிமாவில் வாழ்நாள் சாதனையானையாளர்களுக்கு பால்கே நினைவாக “தாதாசாகேப் பால்கே” விருது வழங்கிவருகிறோம். இந்திய சினிமாவின் தந்தையாக பால்கேவை தான் நாம் கொண்டாடுகிறோம்.

இந்திய சினிமா எடுத்தத்தில் பால்கே எப்படி மிக முதன்மையாக திகழ்ந்தாரோ ஜம்ஷத்ஜி ப்ராம்ஜி மதன் படத்தை தயாரிப்பதிலும், விநியோகம் செய்வதிலும் மிக முக்கியமானவர். எல்பின்ஸ்டோன் பயாஸ்கோப் என்று நிறுவனத்தின் மூலம் பல குறும்படங்களை தயாரித்திருக்கிறார். அல்பர்ட் தியேட்டரை தொடங்கினார். முதல் பெங்காலிப் படத்தை தயாரித்தப் பெருமையும் இவரையே சாரும்.

பால்கே, ஜம்ஷத்ஜி இருவரால் சினிமாவை வட இந்தியாவில் பரப்ப முடிந்த அளவிற்கு, தென்னிந்தியாவில் பெரிதும் பரப்ப முடியவில்லை. தென்னிந்தியாவில் சினிமாக் கலை பரவியதற்கு மிக முக்கியமானவர் ரகுபதி வெங்கையா நாயுடு. தெலுங்கு திரையுலகின் தந்தையாக திகழ்கிறார். வருடந்தோறும், ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருது விழாவில் திரைப்பட கலைஞர்களுக்கு “ரகுபதி வெங்கையா” விருது வழங்கி வருகிறது.

அண்ணா சாலையில் இருக்கும் கெய்டி தியேட்டர், புரசையில் இருக்கும் க்ளோப் தியேட்டர், மிண்ட் தெருவில் இருக்கும் க்ரவுன் தியேட்டர் என்று சென்னையில் இருக்கும் பல முக்கிய தியேட்டர்கள் இவரால் நிறுவப்பட்ட வை. கஜேந்திர மோட்சம், நந்தனார் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

சினிமாத் துறை இந்தியாவில் வளர்வதை கண்ட வெள்ளையர்கள் 1927ல் இந்திய சினிமா அமைப்பை உருவாக்கினர். ஆனால், இந்திய சினிமா வளர்ச்சிக்கு உதவுவதற்கு பதிலாக வெள்ளையர்கள் தங்கள் படங்களை கொண்டு செல்வதில் தான் அதிக கவனம் செலுத்தியது. அதனால், இந்த அமைப்பு விரைவிலே கலைக்கப்பட்டது.

இந்திய சினிமா வளர்ச்சிக்கு மிக ஆரம்பப் புள்ளியாக இருந்தது மௌனப்படங்கள் என்பது மறுக்க முடியாது. ஆனால், அதை நாம் பாதுகாக்கவில்லை என்பது தான் வரலாறு சொல்கிறது.

சமிபத்தில் தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்த சினிமா நூற்றாண்டு நிகழ்ச்சியில் 1913ல் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் சினிமா என்று சொல்லப்படும் “ராஜா ஹரிசந்திரா” படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நாற்பது நிமிடங்கள் உள்ளப் படம் வேறும் இருபது நிமிடங்கள் தான் பார்க்க கிடைத்திருக்கிறது. மற்ற பகுதிகள் எல்லாம் அழிந்துள்ளது.

அதே நிகழ்ச்சியில், 1903ல் எடுக்கப்பட்ட “The Great Train Robbery" என்ற அமெரிக்கப் படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டதை பார்த்தேன். 14 நிமிடங்கள் எடுக்கப்பட்ட படம். எந்த பகுதியும் பாதிக்கப்படவில்லை.

இந்தியாவில் 1936 முன்பு வரை 1500 சலனப்படங்கள் வந்துள்ளது. அதில் “மார்த்தாண்ட வர்மன்” என்ற படம் மட்டும் தப்பி பிழைத்து புனே திரைப்பட காப்பகத்தில் இருப்பது 'தமிழ் ஸ்டூடியோ' அருண் கூறினார். 23 வருட வரலாற்றை காப்பாற்ற முடியாமல் இந்திய சினிமாத்துறை இருந்துள்ளது. சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இந்நேரத்தில் சினிமாவை தந்த முன்னோர்களின் பொக்கிஷத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதை நாம் வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அசையும் படங்கள் மக்கள் மனதில் அதிக வரவேற்பு பெற்றாலும், ரசிகர்களுக்கு எதோ ஒரு குறை இருந்துக் கொண்டு தான் இருந்தது. அதைக் குறையை நீக்க பேசும் படம் இந்திய சினிமாவில் மெல்ல அடியெடுத்து வைத்தது.

இன்னும் பேசுவோம்.

(நன்றி : நம் உரத்தசிந்தனை மாத இதழ், நவம்பர் )

Monday, November 11, 2013

சிரியா - இன்னொரு இராக் வேண்டாம் !

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா சிரியாமீது போர் தொடுக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் என்று இரு நாடுகளையும் மேஜைக்கு முன்னால் எதிரெதிரே அமர வைத்ததில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் பங்கு முக்கியமானது. சிரிய அரசு தன் வசமுள்ள ரசாயன ஆயுதங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அழித்துவிடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் இப்போது போர் மேகங்கள் கலைக்கப்பட்டுள்ளன.

சிரியா தனது சொந்த மக்கள்மீது ரசாயனத் (விஷவாயு) தாக்குதல் நடத்தி 1300ம் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கிறது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ‘ரசாயன ஆயுதம் கூடாது’ என்னும் சிவப்புக் கோட்டை சிரியா தாண்டிவிட்டதால் துருப்புகளை அனுப்பவேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தன் தரப்பை நியாயப்படுத்தியது அமெரிக்கா.


2011 தொடங்கி பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் காரணமாக இருந்துள்ளார் என்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை. இனப்படுகொலையை நோக்கி சிரியா நகர்ந்து சென்றுகொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.

சிரியா என்பது ஆசாத் குடும்பத்தின் சொத்தாகவே திகழ்கிறது. 1971ல் சிரியாவின் அதிபராக ஆசாத்தின் தந்தை ஹஃபிஸ் அல் ஆசாத் பொறுப்பேற்றுக் கொண்டார். முப்பது வருடங்கள் பதவி அனுபவித்த கையோடு, தனது அதிபர் பதவியை மகன் பஷர் அல் ஆசாத்திடம் ஒப்படைத்துவிட்டார் அவர். இவர் கடந்த பதிமூன்று வருடங்களாக அதிபராக இருந்து வருகிறார். தேர்தல், ஜனநாயகம் ஏதுமின்றி சிரியா மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடங்களாக, ஆசாத் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை அடக்க ஆசாத் அரசு அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. இதற்காகவே உலக நாடுகளில் இருந்து தனது போருக்கான ஆயுதங்களை சிரியா அரசு வாங்கியிருக்கிறது.

இங்கேதான் அமெரிக்க நுழைகிறது. பல வருடங்களுக்கு முன்பு இரான் மீது யுத்தம் நடத்த அமெரிக்க சொன்ன அதே காரணத்தைத் தற்போது சிரியாவுக்கும் சொல்லியிருக்கிறது அமெரிக்கா. ஆனால் இரானுக்கும் சிரியாவுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. அமெரிக்காவின் தலையீட்டை சிரியா மக்களே ஆதரிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அமெரிக்கர்களுக்கு இந்தப் போரில் உடன்பாடு இல்லை என்பது தெரிகிறது. அமெரிக்க செனட் உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும், அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அமெரிக்காவின் போர் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ராணுவ நடவடிக்கைக்கான தீர்மானம் தோல்வியடைய, வேறு வழியின்றி பின்வாங்க வேண்டியதாகிவிட்டது.

உண்மையில் இந்தப் போரில் அமெரிக்காவுக்கு கூட விருப்பமில்லை. இருந்தாலும் தனது வல்லரசு மிதப்பை விட்டுக் கொடுக்காமல் சிரியாவை மிரட்டிப் பார்க்க விரும்பியிருக்கிறது. இரண்டு வருடங்களாக பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோது அமைதி காத்த அமெரிக்கா திடீரென்று இப்போது எதிர்ப்பதற்கும் மிரட்டுவதற்கும் காரணம் எண்ணெய் என்றும் சொல்லலாம். ஆனால், அதுதான் முக்கியக் காரணம் என்றால், உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோதே அமெரிக்கா தலையிட்டிருக்கும். இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஏன்?


ஆரம்பத்திலேயே அமெரிக்கா தலையிட்டிருந்தால், இஸ்லாமிய விரோத மனப்பான்மை, எண்ணெய் வளத்துக்கான ஆசை போன்றவை பகிரங்கமாகத் தெரிந்திருக்கும். எனவே நேரடியாக இறங்காமல் உள்ளூர் போராளிகளை ஆசிர்வதித்து அரசுக்கு எதிராகக் கலகம் செய்ய தூண்டிவிட்டது அமெரிக்கா. இப்போது, சிரியா அரசு தனது தாக்குதல் மூலம் சிரியப் போராளிகளை ஒரளவுக்கு அடக்கிவிட்டது. அதனால் விழித்துக்கொண்டது அமெரிக்கா. ஆசாத்தின் ஆட்சி மட்டுமல்ல அவர் குடும்பத்தின் ஆட்சியும் தொடரக்கூடாது என்று விரும்பிய அமெரிக்கா தலையிடுவதற்கு இதுவே தருணம் என்று முடிவு செய்தது.

சரி, அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையிலான இந்த மோதலில் ரஷ்யா எப்படி வந்தது? ரஷ்யா, 2000 முதல் 2010 வரை சிரியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. தங்களது முக்கிய வாடிக்கையாளராக இருக்கும் சிரியாவைக் காக்கும் பொறுப்பு ரஷ்யாவுக்கு இருக்கிறது. போர் இல்லாவிட்டாலும் ஆயுதங்களுக்கான தேவை எப்போதும் இருக்கும் என்று ரஷ்யாவுக்குத் தெரியும். காரணம், மத்தியக் கிழக்குப் பகுதியில் ஓயாமல் பதற்ற நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்கா எது செய்தாலும் அதை எதிர்ப்பது சீனாவின் கொள்ளை என்பதால் இந்த முறையும் சிரியா மீதான அமெரிக்காவின் தலையீட்டை சீனா எதிர்த்துள்ளது. கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை சிரியாவில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று இனியும் இருந்துவிடமுடியாது. சிரியாவில் யுத்தம் மூண்டால் கச்சா எண்ணெய் அதிகரிக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும். அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். பெட்ரோல் மானியச் சுமை அழுத்தும். மானியத்தைக் குறைக்க விலையை உயர்த்தினால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். மொத்தத்தில், இந்தியப் பொருளாதாரம் பாதிப்படையும். சிரியா யுத்த அபாயம் வெளிப்பட்ட அன்றே சென்செக்ஸ் பங்குச்சந்தை 700 புள்ளிகள் வரை சரிந்தது. ஒருவேளை யுத்தம் நடந்தால், மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும்.

அப்படி எதுவும் நேராது, சிரியா யுத்த அபாயம் நீங்கிவிட்டது என்கிறார்கள் சிலர். ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை மீறி அமெரிக்காவால் முன்னேறமுடியாது. ஐ.நாவின் ஒப்புதலும் கிடைக்காது. இங்கிலாந்து பின்வாங்கிவிட்டது. எப்படி மூளும் யுத்தம் என்கிறார்கள் இவர்கள்? இன்னொரு பிரிவினரோ தற்போது நிலவுவது தாற்காலிக அமைதியே என்று எச்சரிக்கிறார்கள். ரசாயன ஆயுத ஒப்பந்த விஷயத்தில் சிரியா ஒத்துழைப்பு தராது என்றும் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தாக்கலாம் என்றும் இவர்கள் அஞ்சுகிறார்கள்.

இதற்கிடையில் பல லட்சக்கணக்கான சிரிய மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர். அவர்களைக் குடியமர்த்துவது சிரியாவுக்கு மட்டுமல்ல சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த ஒரு காரணத்துக்காகவே உலக நாடுகள் தலையிட்டு போரைத் தவிர்க்கவேண்டும் என்னும் கோரிக்கை பலம் பெற்றுவருகிறது. இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் இன்னொரு இராக் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது.

(நன்றி : ஆழம், அக்டோபர் இதழ்)

Tuesday, October 29, 2013

மோடி ரன் (Modi Run)

முன் குறிப்பு : இது அரசியல் பதிவு அல்ல. கூகுள் ப்ளே ஸ்டோரில் புது விளையாட்டு அப்பிளிக்கேஷன் தான் ‘மோடி ரன்’. மோடியை ஒவ்வொரு மாநிலமாக ஒடி வெற்றிப் பெற வைப்பதே இந்த விளையாட்டின் நோக்கம்.

வித்தியாசமாக இருக்கிறதே என்று டவுன்லோட் செய்து விளையாடிப் பார்த்தேன். குஜராத் மாநிலத்தில் சுலபமாக வெல்ல முடிந்தது. இரண்டாம் மாநிலத்தில் (மகாராஷ்ட்ரா) வெல்ல முடியவில்லை. ஆட்டம் லெவல் 2விலே நின்றுவிட்டது.

நான் விளையாடுகிறேன் என்று சொல்லி என் ஆறு வயது மகன் விளையாடினான். மோடி மூன்று மாநிலத்தில் வென்று, நான்காவது மாநிலத்தில் போட்டிப் போடுகிறார். சாரி... விளையாடுகிறார். ( மோடி வெல்வது இவர்கள் போன்ற சிறுவர்களின் கையில் உள்ளது )

குறுகிய காலத்திலேயே இந்த விளையாட்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த அப்பிளிக்கேஷன் முன்னனியில் இடம் பெற்றுள்ளது. சிறு வயதில் மரியோ விளையாடியவகளுக்கு இந்த விளையாட்டு பிடிக்கும்.

மோடியை பிடித்தவர்கள் அவரை ஒவ்வொரு மாநிலமாக வெல்ல வையுங்கள். பிடிக்காதவர்கள் அவர் கீழே விழுவதை ரசியுங்கள்.

எதுவாக இருந்தாலும், நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர் கேம். விளையாடி பாருங்கள். !!!Wednesday, October 23, 2013

பிராட்லி மேனிங் - ஓர் அமெரிக்க வீரனின் கதை

நீங்கள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரி ஒருவர் கொலை செய்வதை நீங்கள் பார்த்து விடுகிறீர்கள். அதை வெளியிலும் சொல்லிவிடுகிறீர்கள். கொன்றவரை விட்டுவிட்டு சாட்சி சொன்ன உங்களுக்கு 136 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும்? ஏதோ ஒரு பின்தங்கிய நாட்டில் அல்ல, உலகின் மிக முன்னேறிய பணக்கார நாடான அமெரிக்காவில்தான் இப்படியொரு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பலிகடா, இருபத்தைந்து வயது பிராட்லி மேனிங்.


தன்னைச் சுற்றி தவறுகள் நிகழும்போது நியாயமாக இரு விஷயங்களை ஒருவர் செய்யவேண்டும். ஒன்று, அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லவேண்டும். அல்லது, தவறுகளை அம்பலப்படுத்தவேண்டும். பிராட்லி மேனிங் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். அதனால்தான் அவருக்கு இத்தனை பிரச்னைகளும். கம்ப்யூட்டர் ஹாக்கிங்கில் வல்லவர் மேனிங். தன்னுடைய தந்தையைப் போல் தானும் கப்பல் படையில் பணியாற்றி நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்னும் விருப்பத்தின் காரணமாகப் பணியில் இணைந்திருக்கிறார். ஆனால் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகளைக் கண்டு இவருக்குப் பெருமித உணர்வு வரவில்லை. மாறாக, மாபெரும் அநியாயத்துக்கு நாமும் துணை போகிறோம் என்னும் குற்றவுணர்வே ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க ராணுவச் செயல்பாடுகளின் இருண்ட பக்கத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு பிராட்லி மேனிங்குக்குக் கிடைத்தது. 2007ல் பாக்தாத்தில் விமானத் தாக்குதல் மூலம் பொது மக்களும் இரண்டு ஆப்கன் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டது, 2009ல் கிரானி பகுதியில் விமானத் தாக்குதல்மூலம் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது போன்ற பல சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்தன. மேலும், ஆப்கனிஸ் மற்றும் இராக் போர் ஆவணங்களும் சிக்கின. ‘அமெரிக்கா நடத்திய தாக்குதல் வீடியோ என்னை பதறச் செய்தது. சிறு குழந்தைகள் எறும்புகளை நசுக்கி விளையாடுவது போல் விமானத்தில் இருந்தபடியே பொது மக்கள்மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்’ என்று ஒருமுறை பேட்டியில் கூறினார் மேனிங். இந்த உண்மைகளை எப்படி உலகுக்குக் சொல்வது என்று தவித்த பிராட்லிக்கு விக்கிலீக்ஸின் தொடர்பும் கிடைத்தது.

2010ல் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது தாலிபனோ, ஹமாஸோ இல்லை. விக்கிலீக்ஸ்தான். மேனிங்கிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்களை ஒவ்வொன்றாக அவர்கள் இணையத்திலும் பிற பத்திரிகைகளிலும் வெளியிடத் தொடங்கினார்கள். பல நாடுகளில் பணிபுரியும் அமெரிக்கத் தூதர்கள் அந்தந்த நாட்டின் அரசியல் சூழல் குறித்து என்னென்ன செய்திகளை தங்கள் அரசுக்கு அனுப்பினார்கள் என்பது விக்கிலீக்ஸ்மூலம் தெரியவந்தது. அமெரிக்கா குறிப்பிட்ட ஒரு நாட்டை எப்படிப் பார்க்கிறது என்பதையும் இந்த கேபிள்களில் இருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது.

பிராட்லி கசியவிட்ட ஒவ்வொரு ஆவணமும் அமெரிக்காவின் போர்க்குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரமாகத் திகழ்ந்தது. இந்த ஆதாரங்களால் அமெரிக்காவின் மதிப்பு உலகளவில் சற்றே சரிந்தது உண்மைதான் என்றாலும் அமெரிக்கா ஒரு போர்க்குற்றவாளி என்று யாரும் வாதிடவில்லை. ‘போர் குற்றம்’ என்ற வார்த்தை போரில் தோல்வி அடைந்தவர்கள் மீதே பாயும் என்பதுதான் வரலாற்று உண்மை. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி முதல் இன்று ஈழத்தில் தோல்வியுற்ற விடுதலைப் புலிகள் வரை இதற்கு உதாரணங்கள் காட்டமுடியும். அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தப் பின்னணியில் அமெரிக்கா பிராட்லி மேனிங்கைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தது. மொத்தம் 22 வழக்குகள் அவர்மீது தொடுக்கப்பட்டன. அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்புத் தளத்தை அத்துமீறி பார்வையிட்டது, ரகசியமாக பதிவு செய்தது, ரகசியங்களை வெளியிட்டது என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்யப்பட்டது.

ஏழு லட்சம் கேபிள்களை பிராட்லி மேனிங் கசியவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 2010ல் இராக்கில் இன்டெலிஜன்ஸ் அனலிஸ்டாகப் பணியாற்றியபோது சில வீடியோ ஆதாரங்களையும் இவர் பிரதி எடுத்துக்கொண்டாராம். இவை விக்கிலீக்ஸில் பின்னர் வெளிவந்தது. மேற்படி குற்றங்களுக்காக அவருக்கு எதிராகப் பதிவான 22 வழக்குகளில் 18 குற்றங்களை பிராட்லியே ஒத்துக்கொண்டதால் நீதிபதிக்கும், அமெரிக்க அரசுக்கும் சுலபமாகி விட்டது. ஒவ்வொரு குற்றத்துக்குமான தண்டனைக்காலத்தைக் கூட்டியபோது 136 வருட சிறைவாசம் கிடைத்தது. அதையே தீர்ப்பாக வெளியிட்டார்கள். பின்னர் தண்டனைக்காலம் 90 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. எளிதில் வெளியில் வந்துவிடமுடியாதபடி அவர்மீது தேச விரோதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை நாம் இங்கே கவனிக்கவேண்டும்.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்.எஸ்.ஏ. தனது குடிமக்கள் உள்பட பல நாட்டு மக்களின் தகவல் பரிமாற்றங்களை வேவு பார்க்கிறது என்பதை ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து அம்பலப்படுத்திய எட்வர்ட்ஸ்நோடென் அமெரிக்காவில் இருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சமைடைந்தார். ஆனால் மேனிங்குக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. கைது செய்யப்பட்டுவிட்டதால் அடைக்கலம் தேடுவதற்கான முயற்சிகளிலும் அவரால் இறங்கமுடியவில்லை. ஸ்நோடென், அசாஞ்சே போன்றோருக்கு இருந்ததைப் போன்ற பொதுமக்கள் ஆதரவு மேனிங்குக்கு இல்லை என்பதையும் நாம் இங்கே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

‘உண்மையை வெளியே கொண்டு வந்ததற்காக என் வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்கவேண்டிவந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை’ என்று முன்னர் சொல்லியிருந்தார் மேனிங். அவர் சொன்னது இன்று பலித்துவிட்டது. குறுகலான ஓர் அறையில் நிர்வாணமாக நிறுத்திவைத்தது, உறக்கமில்லாமல் அலைக்கழித்தது என்று உடல்ரீதியிலும் மனரீதியிலும் ஏராளமான துன்பங்களை அனுபவத்திருக்கிறார் மேனிங். இனி எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில்தான் கழிக்கவேண்டியிருக்கும். பொய்கள் ஆட்சி செய்யும் காலத்தில் உண்மையைச் சொல்வதைப் போன்ற ஒரு பெரும்தவறு இருந்துவிடமுடியாது.

(நன்றி : ஆழம், செப்டம்பர் இதழ்)

Friday, October 4, 2013

சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம் !!

சினிமா நூற்றாண்டை கொண்டாட்டம் முடிந்த வேளையில், தமிழ் திரையுலகில் முக்கிய படங்களாக கீழ் இருக்கும் படங்கள் என் விருப்ப பட்டியலாக பகிர்கிறேன்.

 உண்மையாக சொல்வதென்றால், இதில் பல படங்கள் சினிமா நூற்றாண்ட்டை கொண்டாடும் விதமாக பல திரையரங்குகளில் போட்டிருக்க வேண்டும். அரசியல்காரனமாக அரசியல்வாதிகளின் படங்கள் மற்றும் அரசியலுக்கு வர துடிப்பவர்களின் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டது. அதைப் பற்றி பேசி எந்த பலனிமில்லை என்பதால் விருப்ப பட்டியலுக்கு செல்கிறேன்.

ஹரிதாஸ் - மூன்று தீபாவளி கண்டப்படம்
அபூர்வ சகோதரர்கள் (பழையது) - முதல் இரட்டையர்கள் வைத்து எடுக்கப்படம்
ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமனி - முதல் பென்டஸிப்படம்
சந்திரலேகா - முதல் பெரிய பட்ஜெட் படம்
நல்லதம்பி - அண்ணாதுரை வசனத்தில் கம்யூனிசத்தை வளியுருத்தும் படம். பராசக்தி - முதல் பகுத்தறிவு படம்

இயக்குனர் ஸ்பெஷல் 

உதிரிப் பூக்கள் - மகேந்திரன்
வீடு - பாலு மகேந்திரா
ரோஜா - மணிரதனம்
எதிர்நீச்சல் - கே.பாலசந்தர்
நெஞ்சில் ஓர் ஆலயம் - ஸ்ரீதர்  
16 வயதினிலே - பாரதிராஜா

தேசிய விருதுப் பெற்ற படங்கள்

வாகை சுடவா
காஞ்சிவரம்
பிதா மகன்
அக்கிரகாரத்தில் கழுதை

இப்படி எல்லாம் பதிவு போட்டு தனியாக சினிமா நூற்றாண்டை கொண்டாடலாம் என்று இருந்தேன். ஆனால், தமிழ் ஸ்டுடியோ உண்மையான சினிமா நூற்றாண்டை கொண்டாட இருக்கிறது.

நிகழ்ச்சிக்கான அழைப்பு...

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம் - தொடச்சியாக நூறு இந்தியப் படங்கள் திரையிடல்...

தொடங்கி வைப்பவர்: இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

நாள்: 05-10-2013, சனிக்கிழமை.
இடம்: ட்ரீம்ஸ் இந்திய, சர்குலர் ரோட், கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் பூங்கா அருகில்)

நேரம்: மாலை 5 மணி.


05-10-2013 சனிக்கிழமை - தி கிரேட் ட்ரைன் ராபரி & ராஜா அரிச்சந்திரா (மௌனத் திரைப்படம், இந்தியாவின் முதல் திரைப்படம்)
----------------------------------------------
06-05-2013 ஞாயிறு - தோ பிகா ஜாமீன் (Do Bigha Zamin), இந்தியாவில் இருந்து முதல் முறையாக வெளிநாட்டு விருதை வென்ற திரைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற திரைப்படம். இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனைகளை எவ்வித ஜோடனைகளும் இன்றி, எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் திரைப்படம்)
----------------------------------------------
07-10-2013 திங்கள் - அவன் அமரன் (தமிழில் வெளிவந்த முதல் கம்யுநிசத் திரைப்படம்)
----------------------------------------------
08-10-2013 செவ்வாய் - மர்மயோகி (தமிழின் முக்கியமான இயக்குனரான கே. ராம்னாதின் திரைப்படம், இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். 
----------------------------------------------
09-10-2013 புதன் - திக்கற்ற பார்வதி ( சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் முதல் திரைப்படம் இது. தமிழக முதல்வர் ராஜாஜி அவர்களின் கதையை தழுவி எடுக்கப்பட்டத் திரைப்படம்)
----------------------------------------------
10-10-2013 வியாழன் - ஒரே ஒரு கிராமத்திலே (தமிழ்நாடு அரசு முதன்முறையாக தடைவிதித்த திரைப்படம், இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டு, கிளைமேக்ஸ் மாற்றப்பட்டதும், அனுமதி வழங்கப்பட்டது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை வாலி எழுதியிருந்தார்)
----------------------------------------------
11-10-2013 வெள்ளி - சாசனம் (இயக்குனர் மகேந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெளிவரவில்லை. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் நிதியுதவி செய்து எடுக்கப்பட்ட திரைப்படம். கந்தர்வனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
12-10-2013 சனிக்கிழமை - யாருக்காக அழுதான் (எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கிய திரைப்படம், நாகேஷின் பிரமாதமான நடிப்பிர்காகவே போற்றப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
13-10-2013 ஞாயிறு - ஏழை படும் பாடு - கே. ராம்நாத் இயக்கிய இந்த திரைப்படம் தமிழின் முக்கியமான திரைப்படம். லெஸ் மிசரப்லஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம். 

14-10-2013 திங்கள் - ஓர் இரவு - அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.

15-10-2013 செவ்வாய் - மதன காமராஜன் (நிகழ்கால பார்வையாளர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத இந்த திரைப்படம், பழங்கால வாழ்க்கை முறை, தெரிந்துக் கொள்ள உதவும்.

16-10-2013 புதன் - நந்தனார் - நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.


 அனுமதி இலவசம். அனைவரும் வருக !!!! 

Tuesday, September 24, 2013

நேதாஜி உயிரோடு இருக்கிறார் !!

”நேதாஜி உயிரோடு இருக்கிறார்” என்று கல்கத்தாவில் இவர் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், நேருவுக்கு எவ்வளவு பெரிய தலைவலியாக இருந்திருக்கும் பேசியவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

நேதாஜி உயிருடன் இருப்பதை நேருவுக்கு தெரிந்திந்தும் அமைதியாக இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சனம் எழுந்தது. இரண்டாம் உலகப் போரின் குற்றவாளியான நேதாஜியை நேரு மறைக்கிறாரா என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு வந்தால் இந்தியாவின் பெயர் கெட்டுவிடும் என்று நேரு பயந்தார். நேதாஜியின் அபிமானிகள் நேதாஜி உயிருடன் தான் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘இவர்’ பேசிய பேச்சு இன்னும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.

காரணம், ஒரு பொது கூட்டத்தில் “நேதாஜி பத்திரமாக இருக்கிறார். சீனா, திபெத் எல்லையோரமாக இருக்கிற சிக்காங் என்ற இடத்தில் இருக்கிறார். அவரைத் தேடித்தான் நான் போனேன். அவரை நேரடியாகச் சந்தித்தேன்” என்று பேசியிருந்தார். நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இன்னும் மேலும் வலுவடைந்தது.

நேரு நேதாஜி மரணத்தை பற்றிய செய்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால், ஷா நவாஸ்கான் என்பவரின் தலைமையில் நேதாஜி மரணத்தை பற்றி விசாரிக்க ஒரு கமிஷனை அமைத்தார். அந்த கமிஷனில் அந்தமான் ஹை கமிஷனராக இருந்த மொய்தார, நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் சந்திரபோஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கமிஷன் அமைத்ததும் முதன் முதலில் அழைத்தது ‘இவரை’ தான். அவரும் வந்தார்.

“நேதாஜி அவர்கள் உயிருடன் இருக்கிறாரா என்ற செய்தியை விசாரிக்க உங்களை அழைத்தோம்.”

“நேதாஜி பற்றிய உண்மையை அவ்வளவு எளிதில் உங்களால் வெளியே கொண்டு வர முடியாது. தற்போது பதவியிலிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக் கமிஷன் இருக்க வேண்டும். உலகம் முழுக்க எந்த இடத்துக்கும் வேண்டுமானாலும் போய் விசாரணை செய்யும் அதிகாரம் கமிஷனுக்கு வழங்கப்பட வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது,. அப்போதுதான் அது சாத்தியப்படும்”

இவர் கூறிய ஆலோசனை விசாரணை கமிஷன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

“அதைப் பற்றி எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நேதாஜியை பார்த்ததாக சொல்கிறீர்களே ! அவர் எங்கு இருக்கிறார் ? “ என்று கேட்டனர்.

அதற்கு அவர், “இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அமெரிக்க அரசு அறிவித்த போர் குற்றவாளி பட்டியலில் நேதாஜி பெயர் இருக்கிறதா ? அப்படி ஒரு வேளை அவர் பெயர் இருந்து, தலைமறைவாக இருக்கும் நேதாஜி, இந்தியாவுக்கு வந்தால் அவரை அந்த நாடுகளிடம் காப்பாற்ற இந்திய அரசு உறுதியாக இருக்குமா ?” என்று கேள்வி எழுப்பினார்.

”போர்க் குற்றவாளிகள் பட்டியல் பற்றி இந்த கமிஷனுக்குத் தெரியாது. இந்திய அரசின் சார்பாக கமிஷனால் எந்த உறுதிமொழியும் வழங்கும் அதிகாரமில்லை. ஒரு வார காலத்தில் பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகளிடம் விசாரித்து போர்க் குற்றவாளிப் பற்றிய பட்டியலை சொல்கிறோம்” என்று ஷா நவாஸ்கான் கூறினார்.

“ நல்லது. நீங்கள் கேட்டு சொல்லுங்கள். அதன் பிறகு எனது சாட்சியத்தைச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்,

ஒரு வாரம் காலம் டெல்லியில் தங்கியிருந்தார். பிறகு, ஷா நவாஸ்கானே தொலைப்பேசியில் இவரை தொடர்பு கொண்டார்.

“நேதாஜியின் பெயர் உலகப் போர் குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கிறதா ? இல்லையா ? என்ற விவரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.” என்றார்.

“அப்படி என்றால் என்னால் கமிஷனுக்கு முன்பாக சாட்சியம் அளிக்க முடியாது. மன்னிக்கவும்” என்று சொல்லி தொலைப்பேசி வைத்திவிட்டார்.

கமிஷனின் விசாரணைக்கு உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த விஷயத்தை அப்படியே விடாமல் டெல்லி பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுத்தார்.

“நேதாஜி இறக்கவில்லை. உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருடன் இன்று வரை எனக்குத் தொடர்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் பிரதமருக்கு சந்தேகம் இருந்தால், அவரோ அல்லது அவருடைய பிரதிநிதியோ என்னுடன் வந்தால், நேதாஜி அவர்கள் இருக்கும் இடத்தை நான் அவரை அழைத்துப் போகிறேன்” என்றார்.

அடுத்த நாள் டெல்லி பத்திரிக்கைகளில் இவர் கொடுத்தப் பேட்டி தான் தலைப்பு செய்தியாக இருந்தது. “ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்ற ஆங்கில பத்திரிக்கை ‘இவருடைய’ புகைப்படத்தை போட்டு இந்த விஷயத்தை தலையங்கமாகவே எழுதினார்கள்.

” இவர் சொல்கிறபடி, நேரு ஒரு பிரதிநிதியை அனுப்பி, நேதாஜியைப் பற்றிய உண்மையை அறிந்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நேதாஜி விஷயத்தில் நேருவுக்கு அக்கரையில்லை என்று மக்கள் நினைப்பார்கள்” என்று எழுதியிருந்தனர்.

முற்றுப் புள்ளி வைக்க நினைத்த விஷயத்திற்கு தொடர்கதை போல் தொடர்வது நேருவுக்கு பிடிக்கவில்லை. அதே சமயம், நேருவோ கமிஷனோ இவருடன் எந்த பிரநிதியையும் அனுப்பவில்லை. மற்ற சாட்சிகளை விசாரித்து கமிஷன் அறிக்கையை நேருவிடம் கொடுத்தனர்.

“நேதாஜி இறந்தது உண்மைதான்” என்ற அறிக்கையை பார்லிமெண்ட்டில் வைத்து நேரு நிறைவேற்றினார்.

நேதாஜி விவகாரம் அத்தோடு முடியவில்லை. இந்திர காந்தி பிரதமரானதும் இந்த விவகாரம் பூதமாக கிளம்பியது. “நவாஸ்கான் கமிஷன் அறிக்கை நம்ப முடியாத ஒன்று. பிரதமர் மீண்டும் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” என்று 250 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு கொடுத்தனர்.

1971ல் இந்திரா காந்தி கோஸ்வா கமிஷனை நியமித்தார். அப்போது முக்கிய சாட்சியாக அழைக்கப்பட்ட ’இவர்’ உயிருடன் இல்லை. இவர் கூறிய இருந்த சீனா, திபெத் என்று போகாமல் உள்ளூரில் இருந்தவர்களை விசாரித்து “நேதாஜி இறந்தது உண்மை’ என்ற அறிக்கையை சமர்பித்தனர். ஒரு வேளை இரண்டாம் உலகப் போரில் நேதாஜி தப்பித்து உயிருடன் இருந்தாலும் 1971 வாக்கில் முதுமைக்காரணமாக இறந்திருந்திருக்கலாம்.

இறந்ததாக நம்பப்பட்ட நேதாஜிப் பற்றியை விசாரணை நடத்த இவருடைய பேச்சு இருந்திருக்கிறது. முருகன் பக்தாரான இவர் பெரியாருடன் மேடையில் அரசியல் பிரச்சாரம் செய்திருக்கிறார். கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். நேதாஜி மீது கொண்ட அபிமானத்தில் ‘நேதாஜி’ என்ற பத்திரிக்கை தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். சட்டசபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் ஒரே சமயத்தில் வென்றுயிருக்கிறார்.

இன்று இவரை ஜாதி தலைவராக மாற்ற நினைத்தவர்களின் முயற்சிகள் தோல்வி அடைந்து தமிழகத்தின் தலைவராக இருக்கிறார். இன்றைய தேதி வரை அவரை நினைவுகூராமல் தமிழகத்தில் அரசியல் நடத்தமுடியாது .அபாரமான பேச்சு திறமை, தெய்வ பக்தி, மக்கள் மீதான அக்கரை என்று பொன் போல் ஜோலிச்சவர். அவர் தான் பசும்பொம் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.

Friday, September 20, 2013

இயக்குனர் ராம் அவர்களுக்கு ஓர் கடிதம்

அன்புக்கினிய இயக்குனர் ராம் அவர்களுக்கு,

ஒரு படத்தின் வெற்றியை வருவாய் நிர்ணயம் செய்யும் சூழலில் காலத்தால் நினைவில் வைத்திருக்கக் கூடிய படைப்பை தந்துள்ளீர்கள். உங்களுக்கு என் ஆயிரம் பாராட்டுக்கள் !!

"தங்க மீன்கள்" படத்தை பார்த்ததும் என் வீட்டில் ஒரு செல்லம்மா இல்லையே என்ற வருத்தம் வந்தது. கல்யாணி மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை போல் நான் என் மகன் மீது வைத்திருக்கிறேனா என்ற சுய கேள்வி கேட்க வைத்தது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனாராக உங்களுக்கு ஒரு இடம் இருக்கிறது என்பதில் சிறியதளவும் சந்தேகமில்லை.

உங்களின் முந்தைய படமான "கற்றது தமிழ்", தற்போதிய " தங்க மீன்கள் " படங்களில் நீங்கள் சொல்ல வந்த கருத்தில் ஒரு சிலவற்றை ஏற்றுக் கொண்டாலும், உங்கள் கருத்துக்கான திரைக்கதையா என்பதில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

கற்றது தமிழ் 

ஒரே வயதில் இருக்கும் இரண்டு இளைஞர்கள். ஒருவன் மாதம் லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறான். இன்னொருவன் மாதம் நாலாயிரம் சம்பாதிக்கிறான். ஒரு பக்கத்தில் மட்டும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, இன்னொரு பக்கத்தை உதாசினப்படுத்தினால் அது வீக்கமாக இருக்குமே தவிர வளர்ச்சியாக இருக்காது என்ற கருத்தை சொல்ல வந்திருப்பது புரிந்தது.

ஆனால், படத்தில் உங்கள் கருத்துக்கான காட்சிகளை இரண்டு, மூன்று வைத்து விட்டு, பிரபாகரனின் கொலைகள், மன வேதனை, விரக்தியை தான் அதிகம் காட்டியிருக்கிறீர்கள். சமூகத்தால் ஒருவன் பாதிக்கப்படுவதை நீங்கள் காட்டும் போது, அந்த ஒருவன் மட்டும் அதிக முன் நிறுத்தப்படுகிறான். அந்த சமூகம் தெரியவில்லை. படம் முடிந்து பார்வையாளன் சமூகத்தை பற்றிய கேள்வியை சுமப்பதற்கு பதிலாக, பிரபாகரன் என்ற மனநிலை பாதிக்கப்பட்டவனின் கதையாக பலர் எடுத்துக் கொண்டார்கள்.

தங்க மீன்கள் 

தனியார் கல்வி குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுவதில்லை. குழந்தைக்கு எது ஆர்வமோ அதில் அவர்களை ஊக்கப்படுத்துவதில்லை. மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றி வருகிறார்கள். மதிப்பெண்கள் வைத்து அவர்களின் அறிவுத் திறமையை அளவிடுகிறார்கள். நீங்கள் சொல்ல வந்த கருத்து புரிந்தது.

ஆனால், பார்வையாளன் தனியார் பள்ளியில் இருக்கும் கல்வி முறையையோ அல்லது பண சுரண்டலோ சுமந்து செல்லவில்லை. மகளுக்காக வேறு மாநிலம் சென்று வேலை பார்க்கும் கல்யாணி, தந்தைக்கு தொந்தரவு தரக்கூடாது என்று திருடும் செல்லம்மா இருவருக்கும் இருக்கும் பாசத்தை சுமந்து செல்கிறார்கள். அப்பாக்களை இழந்த மகள்களும், புகுந்த வீட்டுக்கு சென்ற மகளை நினைக்கும் அப்பாக்களும் கண்டிப்பாக கண்ணீர் சிந்தியிருப்பார்கள். பிரிந்த உறவை நினைத்து பார்த்திருப்பார்கள்.அதே சமயம் கல்வித்துறையை பற்றிய உங்கள் கருத்து மறந்துப் போய்யிருப்பார்கள்.

உங்கள் கருத்துக்கான காட்சி படத்தில் இருந்தும், கதாபாத்திரங்கள் கருத்தை மறைத்து விடுகிறது அல்லது மறக்க வைக்கிறது. கருத்துக்களுக்கான அதிக காட்சிகள் வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டாம். ஆனால், உங்கள் கருத்தை மறக்க வைக்கும் அளவிற்கு காட்சிகள் இருக்க வேண்டாம் என்பது ஒரு பார்வையாளனான எனது விருப்பம்.

கோனார் நோட்ஸ் வைத்து படம் பார்பதற்கு, படம் பாடமல்ல... அது ஒரு வித்தியாசமான அனுபவம். அனுபவித்திருக்கிறேன். மற்றவர்களும் அனுபவித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும் மின்ன வேண்டும் என்று விரும்புகிறேன்.

 வாழ்த்துக்களுடன் ஒரு சராசரி ரசிகன் ,
 குகன்

Thursday, September 12, 2013

வன்னி யுத்தம் - கடைசி நேரப் பயணம்

 ”ஈழம்”

இன்று வரை கனவு தேசமாகவே இருக்கிறது. உலக நாடுகளும் அதை கனவாகவே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. பணமோ, தங்கமோ இருக்கும் தேசமில்லை. ஆனால், இலங்கை பிரியக்கூடாது என்பதில் மட்டும் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியாக யோசிக்கிறது. ஆசிய நாடுகள் தங்கள் ஆயுதம் விற்க இலங்கையை நல்ல வியாபார தளமாக மாற்றிக் கொண்டது. அதில், இலங்கை அர்சு வெற்றிப் பெற்ற பிறகு, வேறு வியாபாரங்கள் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

வன்னி யுத்தம் ஈழத்தை முன் வைத்து வந்த நூல் அல்ல... ஈழப் போராட்டத்தை பற்றின கடைசி நாட்களை பற்றியது. விடுதலைப் புலிகளை பற்றின விமர்சனங்கள், அலசல்கள் என்று சொல்லலாம். ஆனால், இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு, திருத்தி மீண்டும் போராட அவர்களால் முடியாது. 

ஈழப் போராட்டத்தை அங்கு இருக்கும் ஈழத் தமிழர்கள் எப்படி பார்த்தார்கள், போராட்டத்தில் அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் என்று பல விஷயங்கள் இந்த நூல் சொல்கிறது.குறிப்பாக சில பகுதிகள்…..

“இந்த நூல் ஈழப் போராட்டம், விடுதலை, சுதந்திரம் போன்ற மந்திரச் சொற்கள் வறிய கூலிக் குடும்பங்களை சார்ந்த இளைஞர்களின் ஏற்படுத்திய தாக்கங்கள் மேட்டுக்குடி இளைஞர்களிடம் ஏற்படுத்தவில்லை ! அவர்கள் எப்போதும் மேட்டுக்குடியாகவும் அளும் வர்க்கமாக கருதிக் கொண்டார்கள் என்ற கருத்தை முன் வைக்கிறது.”

 அத்தியாயம் 6ல், மாமிச பொங்கல், பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டாலும் சைவ வேளாளர், வன்னி மெட்டு குடியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் விமர்சனங்களாக புலிகளுக்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்கள் இலங்கை இனவாத அரசுக்கு சாதகமாக அமைகிறது.”

தமிழ் தேசிய போராட்டங்களுக்கு சம்மந்தமான விமர்சனங்கள் கோட்பாடு ரீதியான தர்மங்களை மீற தாக்குதல்களாகவே இருக்கிறது. 

ஆரம்ப காலங்களில் சிறுவர் புலிகளில் இணைந்தார்கள். புலிகளும் ஏற்றுக் கொண்டார்கள். அதற்காக காரணத்தை பக், 59, அத்.9.

குழந்தை இராணுவம் பற்றி ஆரம்ப காலத்தில் புலிகளின் சிறுவர்கள் இருந்தார்கள். ஆனால், 18 வயது கீழ் புலிகளின் சேர்ப்பதில்லை என்று அவர்களுக்கு பின்பற்றினார்கள்.

வன்னியில் நல்லிரவில் ஒரு பெண் தனியாக நடக்கலாம். வேலையில்லா திண்டாட்டம் இல்லை, (பக்.52)

சிங்களவர்கள் தமிழர்கள் மீது எவ்வளவு வெறுப்புடன் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அத்தியாயம். 20ல் ஒரு பகுதி.

”காயத்துடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட சிங்கள வீரர்கள் யுத்த மரபுப்படி நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அந்த இராணுவ வீரனை அன்புடன் கவனித்துக்கு ஐயர் அவனிடம் ‘ ஒரு வேளை நான் உன் ஊருக்கு வந்தால், நீ உனக்கு என்ன தருவாய் ?” என்ற கேட்டதற்கு, “ நீ ஒரு தமிழன்; நீ என் ஊருக்கு வந்தால் உன்னை நான் சுடுவேன்’ என்று தனது வன்மத்துடன் பதில் சொன்னான். 

சகோதர இனத்தின் சோகங்களையும், கோரத்தனமாக மரணங்களையும், ஈழத்தின் அவலத்தையும் சிங்கள பட்டாசு சத்ததால் எவ்வளவு நாள் மறைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

மனித நேயம் இறந்த மண்ணில் மனித உரிமையைப் பற்றி பேசப் போகும் காமன்வெல்த் மாநாடு….!!!

சிங்களர்கள் ஈழத்தில் நடத்தியது யுத்த வெறியல்ல, வர்த்தகத்தின் திமிர். காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது போல் தன் மீது இருக்கும் இனப்படுகொலை கரையை சிங்களவர்கள் துடைத்துவிடுவார்கள். வர்த்தக வாய்ப்பை பார்த்து வல்லரசு நாடுகளும் ஆதரவு தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள்.இறந்த தமிழர் உயிர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களாக இருக்கும்.

நூலை இணையத்தில் வாங்க.....

வன்னி யுத்தம்
ரூ.125. பக். 336
விகடன் பிரசுரம்

Friday, September 6, 2013

White Dog - 26 வருடங்கள் தடை செய்யப்பட்ட திரைப்படம்

தமிழ்நாட்டில், 'குற்றப்பத்திரிக்கை' திரைப்படம் அரசியல் காரணத்திற்காக தடை செய்தார்கள். 'விஸ்வரூபத்தை' மதத்தின் காரணமாக தடைச் செய்ய சொன்னார்கள். ’டாம் 999’ படத்தை தவறான கருத்தை கூறி, மக்களை அஞ்சக் கூடாது என்பதற்காக தடைச் செய்தனர். இன்னும், எத்தனையோ ஈழ தமிழர் அவலப்படங்கள் மக்கள் தெரிந்துக் கொள்ளமால் இருக்க தடைச் செய்யப்பட்டிருக்கிறது. அதேப் போல், அமெரிக்காவில் 'வெள்ளை நாய்' யை கறுப்பினத்தினர்களுக்கு எதிராக பயிற்சி அளிப்பதை தெரியாமல் இருக்க இந்த படத்தை தடை செய்திருக்கிறார்கள்.

காரில் செல்லும் போது ஜூலி என்ற நடிகை வெள்ளை நாய் மீது மோதிவிடுகிறாள். அந்த நாய்யை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வைத்தியம் பார்த்து, தன்னுடன் வைத்துக் கொள்கிறாள். அப்போது, அவள் வீட்டில் திருடன் நுழைய, அந்த வெள்ளை நாய் அவளை காப்பாற்ற, அந்த நாய் மீது அதிக பாசம் வைக்கிறாள். ஒரு நாள் அந்த வெள்ளை நாய் , நடு இரவில் சென்று ஒருவனை தாக்கி கொன்று விடுகிறது.நாய் காணாமல் போனதாக நடிகை புகார் கொடுக்க, அந்த வீட்டை தேடி அதுவாக வந்து விடுகிறது. நாய்யை தன்னுடன் சினிமா ஷூட்டிங்க்கு அழைத்து செல்ல, அங்கு அவளுடன் நடிக்கும் நடிகையை தாக்குகிறது. அந்த ஜூலியின் காதலன் அவளிடம் அந்த நாய்க்கு எதோ கோளாறு இருக்கிறது, அதை கொன்று விட வேண்டும் என்கிறான். ஆனால், அவள் அவனிடம் இருந்து விலகி நாய்யை நாய் பயிற்சியாளரிடம் அழைத்து செல்கிறாள்.
பயிற்சியாளரான கருத்தரும் அந்த நாய்யை கொன்று விட சொல்கிறான். அங்கிருந்து கோபமாக ஜூலி நாய்யுடன் வெளியே வர, அப்போது அங்கு வேளை செய்பவனை தாக்குகிறது. அங்கு மிருகங்களுக்கு பயிற்சி அளிக்கும் கீஸ் என்ற கறுப்பர் “ இது வெள்ளை இன வெறி' நாய்” என்கிறான். ஆதாவது, கறுப்பர்களை மட்டும் தாக்க பயிற்சி அளிக்கப்பட்ட நாய்.

ஒரு நாய்யை குட்டியாக இருக்கும் போது, கறுப்பர்களை வைத்து அடிக்க வைத்து, கறுப்பர்கள் மீது வெறுப்பை வளர்த்து பய்ற்சி கொடுப்பார்கள். அந்த நாய் வளர்ந்ததும், கண்ணில் படும் கறுப்பர்களை தாக்கி சிறு வயதில் வாங்கிய அடியை பழி தீர்த்துக் கொள்ளும். இப்படி தான் ஒரு சாதான நாய்யை ‘வெள்ளை இன வெறி’ நாயாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை மாற்றுவது மிக கடினமான காரியம் என்று கீஸ் கூறுகிறான்.

ஆனால், ஜூலி தன் நாய்யை குணப்படுத்த எவ்வளவு பணம் செலவு செய்ய தயாராக இருப்பதாக கூறுகிறாள். நிற துவேஷமுள்ள நாய்யை மாற்றும் சவாலை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். மிருக விடுதியில் வைத்து அந்த நாய்க்கு பயிற்சி அளிக்கிறான். ஒரு நாள், அந்த நாய் மிருக விடுதியில் இருந்து தப்பித்து ஒருவனை கொன்று விடுகிறது. கீஸ் மயக்க உசிப்போட்டு அந்த வெள்ளை நாய்யை திரும்பி விடுதி கொண்டு வருகிறான். தனது தீராத முயற்சியால் நாய்யின் நிற துவேஷத்தை போக்குகிறான்.ஜூலியை பாசமாக முத்தமிடுகிறது. ஆனால், வெள்ளை நிறத்தினரின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்கிறது. கீஸில் பயிற்சியாளர் நண்பராக கருத்தரை தாக்க முயற்சிக்க, அந்த நாய்யை கீஸ் கொன்றுவிடுகிறான்.
கறுப்பர்களை தாக்கும் நாய்யின் தவறா ? அல்லது கறுப்பின மக்கள் மீது துவேஷத்தை வளர்த்த வெள்ளை நிற வெறியர்களின் தவறா ? என்ற நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். தவறு செய்தவர்கள் மனிதர்கள் தான்.இதில் இறந்தது மனிதனின் குப்பையை சுமந்த வெள்ளை நாய்.

உலகளவில் 1982ல் இந்த வெளிவந்தாலும், அமெரிக்காவில் வெள்ளை நிறத்தினற்கு எதிராக இருப்பதால் இந்தப் படம் தடை செய்ய பட்டது. அதிகாரப்பூர்வமாக டிசம்பர்,2008 ல் அமெரிக்காவில் இந்த படத்தில் டி.வி.டி கிடைக்க தொடங்கின. இருபத்தி ஆறு வருடங்களுக்கு மேல் ஒரு திரைப்படத்தை வல்லரசு அமெரிக்கா தடை செய்கிறது என்றால், இந்தியா இதில் பின்னோக்கி இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை.

விஸ்வரூபத்தின் தடையை எதிர்த்தவர்கள், ஏன் மெட்ராஸ் கபே, தலைவா படத்தின் தடையை ஏன் எதிர்க்கவில்லை என்று பல கேள்விகள் வருகிறது. ‘விஸ்வரூபத்தின் தடை மதத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்டது. மெட்ராஸ் கபே, தலைவா படங்களுக்கு தடை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காக....!!

இங்கு மதத்தை விமர்சனம் செய்யும் இருக்கும் துணிச்சல் அரசியலை விமர்சனம் செய்வதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆளும் கட்சியின் கருத்துக்கு எதிராக படம் எடுத்தால் ‘தடை’ என்ற பாஸிசக் கொள்கையில் அரசு இயங்குகிறது.

குற்றப்பத்திரிக்கை, செங்கடல், காற்றுக்கென்ன வேளி போன்ற ஈழப்படங்களை தடை செய்தவர்கள், ‘மெட்ராஸ் கபே தடையை தவறு என்று சொல்கிறார்கள். இவர்கள் தமிழ் நாட்டில் தடை செய்த தமிழ் ஈழப்படங்களை வெளியிட்ட பிறகு , ‘மெட்ராஸ் கபே’ தாராளமாக தமிழ் நாட்டில் வெளியிடலாம். தமிழ் நாட்டில் தமிழ்படங்களுக்கு தடைப்பொடுபவர்கள், ‘டாம் 999, மெட்ராஸ் கபே மாற்று மொழி படங்களின் தடைகளை விமர்சனம் செய்ய தகுதியில்லை.

தமிழ் ஈழபடங்களுக்கு தடை விதித்தது நியாயம் என்றால், மெட்ராஸ் கபே படத்தின் நியாயமாக தான் பார்க்க வேண்டும். மெட்ராஸ் கபே வெளியாக வேண்டும் என்றால்,  தடை செய்யப்பட்ட எல்லா ஈழப்படங்களை வெளியிட்ட பிறகு ‘மெட்ராஸ் கபே’ வெளியிடலாம்.

ஆளும் கட்சியின் கருத்தை தான் சினிமாவில் சொல்ல வேண்டும் என்றால், இனிமேல் தேர்தல் வெற்றிப் பெறும் போது ‘சினிமா’ ஆளும் கட்சியின் சொத்து என்று அறிவித்துவிடலாம். எதிர் கருத்து இருப்பவர்கள் சினிமா பக்கமே வர மாட்டார்கள்.

இன்றும், அரசியல்வாதிகள் ‘சினிமாவை கண்டு பயப்படுவது இவர்கள் போடும் தடைகள் எடுத்துக் காட்டுகிறது. ஆனால், பெரியார், அம்பேத்கார் சொல்லி வராத விழிப்புணர்வு ஒரு திரைப்படத்தில் வந்துவிடவா போகிறது....?

Thursday, August 29, 2013

பெரியார் ரசிகன்


மூன்று வருடங்களுக்கு முன் எழுதிய நாவல். “அந்த மூன்று பெணகள்” என்ற பெயரில் எனது வலைப்பதிவில் தொடராக எழுதியிருந்தேன். முழுமையாக கூட பதிவில் போடவில்லை. தொடரை படித்து பார்த்த நண்பர் உதயகண்ணன் தனது பதிப்பகத்தில் வெளியிட விருப்பம் தெரிவித்தார். அப்போது நானே வெளியிடுவதாக கூறியிருந்தேன். ஆனால், மற்ற வேலைகளுக்கு நடுவே எனது புத்தகத்தை பற்றி யோசிக்க நேரமில்லை.

சமீபத்தில், இந்த நாவலைப் பற்றி உதயகண்ணன் மீண்டும் கேட்க, என்னால் மறுக்கமுடியவில்லை. நாவலின் தலைப்பை “பெரியார் ரசிகன்” மட்டும் மாற்றி வெளியிடுங்கள் என்றேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

பெரியார் ரசிகன்.
 உதயகண்ணன் பதிப்பகம் விரைவில்....

Wednesday, August 21, 2013

பதிவர் திருவிழா அழைப்பிதழ்..அனைவரும் வருக !சென்ற ஆண்டைப் போலவே ஒருநாள் முழுவதும் நடக்கவிருக்கும் இவ்விழாவை மிகவும் சிறப்பானதாக எடுத்துச் செல்ல பதிவர்கள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைவதற்கு ஏதுவாக விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கலாம் என கடந்த வார கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.நிர்வாகக் குழுவின் முறையான வங்கிக் கணக்காக பதிவர் அரசன் அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறோம்.

நன்கொடை கொடுக்க விரும்பும் பதிவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.பணத்தை செலுத்திவிட்டு கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விபரத்தையும் உங்கள் சுய விபரத்தையும்(வலை முகவரி,மின்னஞ்சல் முகவரி) தெரியப்படுத்துங்கள். பணம் வந்து சேர்ந்ததும் tamilbloggersinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெற்றுக்கொண்டோம்.. நன்றி.. என்ற தகவல் வந்து சேரும்.

First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA.
S Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
Address: 49, Arcot Road, Saligramam ,
Chennai, City Pin - 600093
Contact :044- 24849775

தொடர்புக்கு

அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645

நன்றி..

ஒருங்கிணைப்புக்குழு , தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

Tuesday, August 13, 2013

பட்டு - அலெசாண்ட்ரோ பாரிக்கோ

உலகின் தலை சிறந்த நாவல். வாசித்திக்க வேண்டிய நாவல். மனிதனின் மகத்துவத்தை எடுத்துறைக்கும் கதை. என்று எந்த பெரிய வார்த்தைகள் மூலம் இந்த புத்தகத்தை அலங்கரிக்க போவதில்லை. மிக சிறந்த நாவல் பட்டியலிலும் இது இடம் பெற போவதில்லை. அதற்கு மாறாக உங்கள் ஆள் மனதை எதோ ஒன்று செய்யும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்.முன்னால் இராணுவ வீரனான ஹெர்வே ஜான்கர் தன் புதிய தொழிலுக்கான பட்டு வியாரத்துக்காக தன் மனைவி ஹெலனை விட்டு பிரிந்து உலகின் கடைசியான ஜப்பானுக்கு செல்கிறான். அங்கு, விலைமாதுவான பிளான்ச்சி என்ற பெண்ணை பார்க்கிறான். அவளை தொடாமலே அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது. அவளிடம் இருந்து ஜப்பானிய மொழியில் ரகசியமான கடிதம் ஜான்கருக்கு கிடைக்கிறது. அந்த கடித்தத்தின் வார்த்தைகள் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. அந்த கடிதம் அவனை மீண்டும் கடல் கடந்து செல்ல வைக்கிறது. அந்த கடிதத்தின் அர்த்தம் புரிந்ததும், ஹெர்வே ஏற்பட்ட குற்றவுணர்வு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

ஆரம்பத்தில், யாரோ ஒருவரின் டைரிக் குறிப்புகளில் அனுமதிப் பெற்று கொண்டு நுழைந்த உணர்வு இருந்தது. ஹெர்வே பயணிக்கும் போது, நாம் அவனுடன் பயணிக்கவில்லை. ஆனால், அவனுள் பிளான்ச்சி மீது காதல்/காமம் மட்டும் நம்மிடம் தோன்றிவிடுகிறது. பிளான்ச்சி கடிதம் படிக்க படிக்க…. நாமும் ஹெர்வேவாக மாறிவிடுகிறோம். கடிதத்தின் ரகசியத்தை பிளான்ச்சி சொல்லும் ஹெர்வேவுக்கு இருக்கும் நமக்கும் வருகிறது.

சுகுமாரனின் மொழிபெயர்ப்பை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். குறிப்பாக கீழ் இருக்கும், வாசகங்கள் நம்மை பாதிப்புள்ளாக்குகிறது.

உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பறவைகளைக் கூண்டில் நிரப்பு. உனக்கு நல்லது ஏதாவது நடக்கும் நாளில் அவற்றைத் திறந்து விட்டு அவை பறந்து போவதை பார்.

என்னால் அவனை தடுக்க முடியாது. போக வேண்டும் என்று அவன் வற்புறுத்தும் போது என்னால் செய்யக்கூடியது அவன் திரும்பி வருவதற்கான இன்னொரு காரணத்தை அவனுக்குக் கொடுப்பதுதான்.

போர் விலையுயர்ந்த விளையாட்டு. உங்களுக்கு நான் தேவை. எனக்கும் நீங்கள் தேவை. 

ஏதோ ஒன்றைத் தீவிரமாக விரும்பி அதற்காக உயிரை விடுவதை நான் ஒரு போதும் அனுபவித்ததில்லை

நம் அருகில் இருப்பவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பு, காதலை அவர்கள் மரணத்திற்கு பிறகு தெரிந்துக் கொள்ளும் வலியைத் தான் இந்த கதை உணர்த்துகிறது.

இந்நாவல் பிரெஞ்சு – கனடிய இயக்குநரான ஃப்ரான்ஸ்வா கியார்த் இயக்கத்தில் ‘SILK’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.


நூல் வாங்க 

விலை. ரூ. 95. பக். 120
காலச்சுவடு பதிப்பகம்

Monday, August 12, 2013

லிங்கூ (கவிதையும் ஓவியமும்) - லிங்குசாமி

சமிபத்தில் கவிதை புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்து வருகிறேன். விதி விளக்காக ஹைக்கூ கவிதைகளை மட்டும் வாசிக்கிறேன். மூன்று வரியில் கொடுக்கும் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஹைக்கூ கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹைக்கூ என்ற வார்த்தையை மாற்றி புதிய வார்த்தையாக ‘லிங்கூ’ என்று லிங்குசாமி பெயிரிட்டதால் என்னை புத்தகம் வாசிக்க வைத்தது.

பெரும்பாலான கவிதைகள் காதல் கவிதைகள். ஆர்வக் கோளாறுகள் முதல் கவிதை நூலாக காதல் கவிதைகளை படம் போட்டு வெளியிட்டு சக்கைப் போடு போட்டது ஒரு காலம். இப்போது, எல்லோரும் படமும், காதல் கவிதகளும் கொண்டு வருவதால் இந்த நூல் அதில் இருந்து வேறுபடவில்லை. படத்திற்கு மாறாக புரியாத ஒவியத்தை லிங்குசாமி வரைந்திருக்கிறார். மற்றப்படி முதல் கவிதை நூல் சராசரி கவிஞனிடம் இருந்து எப்படி படைப்பு வருமோ அப்படி தான் இயக்குனர் லிங்குசாமியிடம் இருந்து வந்திருக்கிறது.இந்த நூலில் இடம் பெற்று இருக்கும் காதல் கவிதைகளில் மிகவும் ரசித்த கவிதை இது மட்டும் தான்.

சுஜாதா
கவிதா பத்மா உஷா 
அப்புறம் கீதா 
இவை எல்லாம் 
வெறும் பெயர்கள் அல்ல.

சமூக கவிதைகள் ஹைக்கூ இலக்கணத்தில் எழுதவில்லை என்றாலும், சிறப்பாக எழுதியிருக்கிறார். குறிப்பாக ஒரு சில கவிதைகள்.

இஸ்திரி போடும் தொழிலாளியின் 
வயிற்றில் சுருக்கம் 

பூச்சி மருந்தில் பூச்சி 
உயிரோடு 

அசோகர் இத்தனை மரங்களை நட்டார் 
அதில் ஒன்று கூட போதி மரமில்லையா 

என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான் 
பிச்சைக்காரன். 

வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்
ஆப்பிள் விழுந்த கணத்தில் 
நியூட்டன் 

லிங்கு சார், படத்திற்கு ‘சுபம்’ கார்ட் போட்ட பிறகு ஆடியன்ஸ் தியேட்டரில் இருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் புத்தகம் முடிந்த பிறகு, பத்தி பேர்கள் அறிமுக உரையை, இருபது பக்கங்கள் மேல் இடம் பெற்று இருக்கிறது. இதை விகடன் பிரசுரம் சரிப்பார்த்திருக்க வேண்டும். பாராட்டிய பிரபலங்கள் திரும்ப திரும்ப நான்கைந்து கவிதைகளே சொல்வதால் எல்லா கவிதைகளும் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறது.

ஒரு அறிமுக எழுத்தாளருக்கு இருக்கும் ஆர்வம் தான் இயக்குநர் லிங்குசாமியிடம் தெரிகிறது. வெற்றிப்பட இயக்குநருக்கு இருக்க வேண்டிய முதிர்ச்சி அவர் எழுதிய புத்தகத்தில் தெரியவில்லை.

விகடன் மார்க்கெட்டிங் திறமையால் நான்கு பதிப்புகள் வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிறந்த கவிதை புத்தகம் என்று சொல்ல முடியாது. 

இணையத்தில் வாங்க.....

விலை. 90, பக் : 120
விகடன் பிரசுரம்

Monday, August 5, 2013

சார்லி சாப்பிளின் “A Dog’s Life”

தெருவோரம் வாழ்பவனின் வாழ்க்கை நாய்யின் அன்றாட வாழ்க்கையை விட மிக வேதனையானதாகவே இருக்கிறது. குப்பையில் உணவை தேடும் நாயின் சராசரி குணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதே உணவை ஒரு மனிதன் பசிக்காக தேடினால் அவனை பரிதாபமாக கூட பார்க்கப்படுவதில்லை. குப்பைகளை கலைத்துப் போடும் தேச விரோதியாக தான் தெரிகிறான். அவனின் பசியை விட தெருவின் சுத்தம் கேட்டு விட்டதே என்று பலரின் எண்ணமாக இருக்கிறது. இப்படி தெருவோரம் வாழ்பவனின் வாழ்க்கையை நகைச்சுவையாக எண்பது ஆண்டுகள்ளுக்கு முன் தனது “A Dog’s Life” மூலம் பதிவு செய்தவர் சார்லி சாப்பிள்.தெருவோரம் வாழும் சாப்பிளின் பல நாய்களுக்கு நடுவில் மாட்டி தவிக்கும் ஒரு குட்டி நாயை காப்பாற்றுகிறார். ஓடிய கலைப்பில் நாய்யும், சாப்பிளும் ஒரு உல்லாச விடுதிக்குள் நுழைய அங்கு வேலை செய்யும் பெண்ணை பார்த்து மயங்குகிறார். அவளுக்கு விருப்பமில்லாத வேலையாக இருந்தாலும், தன் வேலைக்காக அவரிடம் பேசுகிறாள். ஆனால், பணம் இல்லாத காரணத்தால் சாப்பிளின் அந்த உல்லாச விடுதியில் இருந்து விரட்டப்படுகிறார். அந்த பெண்ணின் வேலை பரிக்கப்படுகிறது.

வெளியே வந்த சாப்பிளின், நாய்யும் தெருவில் உறங்குகின்றனர். நாய்யின் உதவியால் சாப்பிளுக்கு பண பர்ஸ் கிடைக்கிறது. அந்த பணத்தை கொண்டு மீண்டும் அந்த உல்லாச விடுதிக்கு செல்கிறார். அப்போது அவன் பார்த்த பெண் தன் துணிமணிகளை எடுத்து கிளம்புவதாக இருந்ததாள். அந்த பெண்ணை விடுதியின் வாடிக்கையாளராக உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் தரச் சொல்கிறான். தன்னிடம் பணம் இருப்பதை காட்டுகிறான். அப்போது, அங்கு இருக்கும் சில கயவர்களால் பரிக்கப்படுகிறது.

மீண்டும் அந்த பணத்தை அடைந்து, அந்த பெண்ணுடன் தோட்டம் அமைத்து உல்லாசமாக வாழ்க்கிறான். அவனுடன் இருந்த நாய்யும் தன் குட்டிகளுடன் உல்லாசமாக ஒரு குழந்தைப்போல் சாப்பிளின் வீட்டில் இருப்பதை படம் முடிகிறது.

சாப்பிளின் உலக அளவில் ஏன் பேசப்படுகிறார் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. சாப்பிளின் முதல் தேசியப்படம் இது தான். சினிமாக்காரர்களுக்கு உலக இயக்குனர்கள் பலரை தெரியாமல் இருக்கலாம். ஆனால், சாமான்யனுக்கு கூட தெரிந்த இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தவர் சார்லி சாப்பிள்.

ஆரம்பக் காட்டியிலே, தன்னையும் நாய்யும் ஒப்பிட்டு இரண்டு பேரும் ஒரே வாழ்க்கை வாழ்வதை சுட்டிக் காட்டிவிடுகிறார். அதேப் போல், அவர் வேலைக்கு செல்ல விரும்பதாவனாக கூட காட்டவில்லை. வேலை தேடும் போட்டியில் வெற்றி பெற முடியாமல் விரக்தியில் திரும்புகிறார். செல்வம் புழங்கும் அமெரிக்காவில், வேலை தேடி அலயும் அபலத்தை இந்த காட்டியில் காட்டுகிறார் சாப்பிளின்.

நாயை உள்ளே அனுமதிக்காத விடுதியில் தன் பெண்ட்டுக்குள் நாயை போட்டு செல்வதும், தன் பணத்தை திருடபவனிடம் இருந்து பணத்தை திரும்ப பெருவதும், தன்னை பார்த்து கண்ணடிக்கும் பெண்ணை அப்பாவித்தனமாக கைக்குட்டையால் துடைக்க செல்வதும் என்று சாப்பிளின் நகைச்சுவை முத்திரைகள்.

சாப்பிளினின் திரைப்படங்கள் விவாதிக்கப்பட்ட அளவிற்கு, அவரது குறும்படங்கள் விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த காலத்தில் ஒரு படம் இருபது நிமிடம் தான் எடுத்தனர். இன்றைய காலக்கட்டத்தில் இதை நாம் குறும்படமாக பார்க்கிறோம். தன்னுடைய திரைப்படங்களை விட குறும்படத்தில் தான் அதிக விஷயத்தை முன் வைத்திருக்கிறார் என்பதை அவரது ஒரு சில குறும்படங்களின் புரிந்து கொண்டேன்.

சார்லி சாப்பிளின் குறும்படங்களை பற்றி மேலும் பார்க்கலாம்.

Tuesday, July 30, 2013

மாற்றம் தந்த இந்திய சினிமா - 5 :: ஹரிஷ்சந்திரச்சி பாக்ட்ரி

மொழி : மராத்தி
இயக்கம் : பரேஷ் மோகஷி

இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இத்தருணத்தில் நாம் கொண்டாட வேண்டியப்படம் ‘ஹரிஷ்சந்திரச்சி பாக்ட்ரி'.(Harishchandrachi Factory).

வருடம் வருடம் தாதாசாஹேப் பால்கே விருது சினிமா கலைஞர்களுக்கு வழங்குவது கேள்விப் பட்டிருப்போம். அந்த விருதைப் பற்றியும், விருந்தின் கௌரவத்தை பற்றியும் முதன் முதலாக சிவாஜி அவர்களுக்கு கொடுக்கும் போது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.


சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு "தாதாசாகேப் பால்கே" விருது பெயரில் விருது வழங்குவதை தெரிந்திவர்களுக்கு, பால்கே என்பவர் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு இந்திய சினிமாவின் தந்தையாக தெரிந்திருக்கும். ஆனால், சினிமா என்று ஒன்று அறியப்படாத காலத்தில் முதன் முதலில் சினிமா எடுக்க நினைத்த பால்கேவின் கஷ்டம் தெரியுமா ? அதற்கான தொழிற்நுட்பத்தை எப்படி அறிந்துக் கொண்டார் என்பது தெரியுமா ? அவர்ப்பட்ட கஷ்டங்களை எல்லாம் ஒரு சொட்டு கண்ணீர் இல்லாமல் நகைச்சுவையாக, நல்ல தரமான உலக சினிமாவை கொடுத்திருக்கிறார்கள்.

"உலக சினிமா" என்றால் பார்வையாளனை அழ வைக்க வேண்டும் எழுதப்படாத விதியில் இருந்து இந்தப் படம் மாறுப்படுகிறது. முழுக்க முழுக்க பார்வையாளர்கள் ரசித்து சிரித்துப் பார்க்க முடிகிறது.


இந்திய சினிமா தொடக்க காலமான 1913ல் கதை தொடங்குகிறது. வறுமையில் வாடும் பால்கே, படம் எடுக்க வேண்டும் ஆசைப்படுகிறார். நண்பர்கள் மூலம் கடன் வாங்கி அதற்கான தொழிற்நுட்பத்தை கற்றுக் கொள்ள இங்கிலாந்து செல்கிறார். திரும்பி வந்த பால்கே, செடி வளர்வதை படம் பிடிக்கிறார். செடி வளர்வதை படப்பிடித்ததை வைத்து தான் எடுக்க இருக்கும் ‘ராஜா ஹரிசந்திரா’ படத்திற்கு நிதி திறட்டுகிறார்.

தன் படத்திற்கு வேலை செய்ய நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரையும் தேர்வு செய்கிறார். சரித்திரத்தில் இடம் பெறபோகிறோம் என்று தெரியாமலே வேறு வேலை கிடைக்காததால் அந்த கலைஞர்களும் சம்மதிக்கிறார்கள். கதாநாயகி மட்டும் கிடைக்காததால், ஆணுக்கு பெண் வேடமிட்டு நாயகியாக்குகிறார். ' ராஜா ஹரிசந்திரா' படம் எடுக்க சென்ற இடத்திலும், காவல்த்துறையினரால் கைது செய்யப்படுகிறார்கள். சினிமா என்றாலே தெரியாத காலக்கட்டத்தில் பால்கே சினிமாவைப் பற்றி விளக்குகிறார்.

ஒரு வழியாக பல இன்னல்கள் கடந்து, பால்கே படத்தை எடுத்து முடிக்கிறார். இந்தியாவில் இந்தியனால் எடுக்கப்பட்ட முதல் சினிமா ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெருகிறது. இங்கிலாந்திலும் அவரது படம் வெற்றி பெறுகிறது. அவரை இங்கிலாந்தில் படம் எடுக்க அழைப்பு விடுக்கும் போது, " நான் இங்கிலாந்து வந்துவிட்டால், இந்தியாவில் இந்த கலை எப்படி வளர வைக்க முடியும்" என்கிறார். "இந்திய சினிமாவின்" தந்தை என்ற பெயரை பெறுகிறார்.

பால்கேவின் நண்பர் படத்தின் ஒத்துகை பார்க்கும் இடம், நாயகிக்காக தாசிகள் இருக்கும் இடத்தில் தேடுவது, படத்தைப் பற்றி விவாதிப்பது, பால்கேவும், அவரது மனைவியின் உரையாடல் என்று நகைச்சுவை தழும்ப காட்சி அமைத்திருக்கிறார்கள். கலைக்காக போராடிய எல்லோருடைய வாழ்கையிலும் சோகம் நிறைந்து தான் இருக்கிறது. பால்கே வாழ்கையும் அப்படி தான்.

ஆனால், சினிமாவுக்காக உழைத்த மனிதரை அழுது வடிய விரும்பவில்லை. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ரசிகர்களை பால்கே பாத்திரம் சிரிக்க வைத்திறது.

இந்திய சினிமாவை நூற்றாண்டை கொண்டாடும் வேலையில், இந்த படம் இந்திய சினிமா தந்தைக்கு மணி மகுடமாக “ஹரிசந்திரச்சி பாக்ட்ரி” அமைந்திருக்கிறது.

Monday, July 8, 2013

கவிதை : அப்பா

மகனின்
முதல் கதாநாயகன்
முதல் வில்லன்
அப்பா !

எந்த பாத்திரம்
ஏற்க போகிறார் என்பதில்
மகன் எழுதும்
திரைக்கதையில் தான் உள்ளது !

*

மகன் விழும் போது எழுவோம் என்று
நம்பிய முதல் மனிதர்
அப்பா !

அன்பை உள்ளே வைத்துக் கொண்டு
எதிரிப் போல் தெரியும் ஒரே உறவு
அப்பா !

‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தையில்
கொடுத்த செயற்கை வலியால்
‘முடியும்’ என்ற நம்பிக்கையை
விதைத்தவர் அப்பா !

*

கொண்டுவந்தால் தான் தந்தை என்று
யார் பொய் சொன்னது
தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர்
தந்தை உண்மை சொல்கிறது !

*

மகனிடம் தோற்பதை
   லட்சியமாய் கொண்டவர் !
மகன் தோற்றாலும்
   வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில
   மகன் வேகத்துக்கு நடப்பவர் !
மகன் ஒடுவதை
   ஒதுங்கி நின்று ரசிப்பவர் !

முதுமையில் மகன் கரம் பிடித்து
குழந்தைப் போல் நடப்பார்
அப்பா !

*

பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
    அம்மாவை பாட்டியாக பார்க்கலாம்
பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
   அப்பாவை குழந்தையாக தெரிவார் !

அம்மா – அன்பை அன்பாக காட்டுவார்
அப்பா – அன்பை கண்டிப்பாக காட்டுவார்

*
"மாறாத அன்பு
அம்மாவின் அன்பு" என்று
திருமணமாகதவன் சொன்னது !

"மாறாத அன்பு
அப்பாவின் அன்பு" என்று
திருமணமானவன் சொன்னது !

*

அம்மாவின் அன்பை விட
சிறந்த அன்பு உலகில்
இருக்கிறதென்றால்
அது அப்பாவின் அன்பு !


Monday, July 1, 2013

மத தீவிரவாதிகள்

மத தீவிரவாதம் என்று பேசும் போது உடனே மக்கள் பேசுவது 'இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி தான். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் நடத்தும் குண்டு வெடிப்புகள், படுகொலைகள் தான் அவர்களுக்கு நினைவில் வரும் . உண்மையை சொல்லுவதென்றால் இஸ்லாமிய தீவிரவாதம் தொன்னூறு தொடக்கத்தில் தான் தொடங்கியது. அதுவும், அமெரிக்காவின் ஆப்கான் ஆதரவு என்ற பெயரில் வளர்த்த தீவிரவாத இயக்கத்தால் வந்தது. அதற்கு முன் மற்ற நாடுகளைப் போல இஸ்லாமிய நாட்டுக்குள் சில சில சண்டைகள், பிரச்சனைகள் நடந்திருக்கிறது.

மதத்தின் பெயரில் இஸ்லாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதம் நடத்துகிறார்களா ? என்றால் கண்டிப்பாக இல்லை.

எண்பதுகளில், தொன்னூறு தொடக்கத்தில் இந்தியாவுக்கு மிக பெரிய தலைவலியாக இருந்தது சீக்கிய தீவிரவாதம். கனிஷ்கா குண்டு வெட்டிப்பு, அரசு அதிகாரிகளை கொலை செய்வது, இந்திரா காந்தி படுகொலை என்று சீக்கிய தீவிரவாதத்தால் பல பிரச்சனைகளை இந்தியா சந்தித்துள்ளது.

இந்தியா இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலை உணர்ந்தது 1993ல் நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தான். ஆனால், அந்த தீவிரவாதத்தை உசுப்பி விட்டது பாபர் மசூதி இடிப்பு என்று இந்துக்கள் நடத்திய கலவரச் செயல். இது ‘இந்து தீவிரவாதம்’ என்பது சந்தேகமில்லை. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ இந்தியாவின் இஸ்லாமியர்கள் உதவி கிடைக்காமல் தவித்தப் போது, இந்த சம்பவத்தை வைத்து இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை உசுப்பிவிட்டது.

இலங்கையில் நடக்கும் புத்த பேரினவாதம். தங்கள் இனத்தை தவிர வேறு இனமே இருக்கக் கூடாது என்று நினைக்கும் தேசமாக மாறியிருக்கிறது. இது பௌத்த தீவிரவாதம் என்ற வார்த்தையை ஏன் யாரும் பயன்படுத்தவில்லை.

இந்து தீவிரவாதத்தைப் பற்றி திராவிட கழங்கள் அதிகம் பேசியிருக்கிறார்கள். அமெரிக்காவும், அதன் அடிவரிடிகளும் இஸ்லாமிய தீவிரவத்தைப் பற்றி உலகம் முழுக்க பரப்பியிருக்கிறார்கள். ஆனால், நாம் பேசாமல் தெரியாமல் இருக்கும் எத்தனையோ மத தீவிரவாதங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

உலகில் தீவிரவாதி தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும் நாடுகள் என்று எடுத்துக் கொண்டால் ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா என்று வரிசைப்படுத்தி இருக்கிறது ஒரு புள்ளி விபரம். கடந்த இருபது ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்கள் இந்த நாட்டில் என்று கூறிப்பிட்டுயிருக்கிறார்கள். அதே சமயம், கடந்த இருபது ஆண்டுகளில் அடுத்த நாட்டுடன் போர் தொடுத்தவர்கள் என்று பட்டியலிட்டால் அதற்கு முதல் இடம் சந்தேகமில்லாமல் எல்லோரும் கை தூக்கி "அமெரிக்கா" என்பார்கள். ஆனால், அதற்கு அடுத்த நாடு என்று யாராவது சொல்ல முடியுமா ?

இஸ்ரேல்.

உலகில் மதத்தை முன் நிறுத்தி தீவிரவாத நடவடிக்கை செய்வத இஸ்லாம் மதத்தினர் என்று ஊடகம் காட்டிக் கொண்டு இருக்கிறது. காரணம், ஊடகத்தின் விளம்பரங்கள். பிரச்சாரங்கள். மதத்தை வைத்து ஒரு நாடே தீவிரவாத நடவடிக்கை செய்து வருகிறது. தாக்குதல் நடத்துகிறது. ஆனால், இதை போர் என்று சொல்கிறார்கள். இதை ஏன் ஜீயோனிச தீவிரவாதம் என்று யாரும் சொல்லவில்லை. பிரச்சாரம் செய்யவில்லை.

பிறந்து முழுசாக எழுபது வருடம் கூட ஆகவில்லை. ஒரு நூற்றாண்டு விழா கூட கொண்டாடாத தேசம். இவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாடினால் அமெரிக்க அண்ணன் வாழ்த்திவிட்டு கவிதைப் பாடி செல்வார்கள். ஏதாவது முன்னேற்ற தீட்டத்திற்கு பணத்தேவை என்றால், அமெரிக்க அண்ணன் ஓடிவந்து உதவுவான். போர் என்றால் சொல்லவே வேண்டாம். என்ன என்ன ஆயுதங்கள் வேண்டுமோ கேட்காமல் கொடுப்பான். புது ஆயுதங்களை அறிமுகப்படுத்தி பயற்சிக் கொடுப்பான். மொத்தத்தில், "முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... " என்ற பழைய பாடலை பாடி இஸ்ரேலை வளர்த்து விட்டது அமெரிக்கா தான்.

அண்ணன் முதல் இடத்தில் இருக்கும் போது, தம்பி இரண்டாவது இடத்தில் இருப்பது தானே நியாயம்.

அமெரிக்கா உலக போலீஸ் என்றால், இஸ்ரேல் மத்திய கிழக்கு போலீஸ். என்ன எந்த மத்திய கிழக்கு நாடும் இஸ்ரேலுடன் சுமுகமான உறவு இருந்ததில்லை. மத்திய கிழக்கில் எந்த தேசமும் இஸ்ரேலில் மீது மதிப்பும், மரியாதை இல்லை. ஆனால், இஸ்ரேலின் உளவாளிகள் ஒவ்வொரு நாட்டில் ஒழிந்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களுக்கு ஆபத்தாக எந்த நாட்டில் என்ன திட்டம் போடுகிறார்கள் என்பதை உடனே தகவல் அனுப்பிவிடுவார்கள். தங்களுக்கு பயனில்லை என்றாலும், அமெரிக்க அண்ணனுக்கு பயனாக இருந்தாலும் அந்த தகவலைக் கொடுத்து விஸ்வாசத்தைக் காட்டிக் கொள்வார்கள்.

கை விரலில் ப்ளேட் வெட்டி இரத்தம் வடியும் அளவில் தான் இஸ்ரேல் தேசம். ஆனால், மத்திய கிழக்கு பகுதியில் தலைவலியாக இருப்பவர்கள் இவர்கள். இஸ்ரேல் என்ற நாடு உருவானது இருந்து இவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் நிம்மதியாக இருக்க விட்டதில்லை.

இஸ்ரேல் என்ற ஒரு தேசம் உருவாகவில்லை என்றால் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற தீவிரவாத இயக்கங்கள் தோன்ற வேண்டியதில்லை. இஸ்ரேல் என்ற யூத தேசம் மட்டுமல்ல. யூத தீவிரவாத தேசம்.

Tuesday, June 18, 2013

ஒரு செல் உயிர்கள் - வி.டெல்லிபாபு


ஒரு இலக்கிய நிகழ்வில், நண்பர் ஒருவர் "ஒரு செல் உயிர்கள்" என்ற கவிதை புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்தார். வி.டெல்லிபாபு எழுதியது.

நூல் அட்டை வடிவமும், கவிதைக்கான படங்களும் பார்த்த மாத்திறத்தில் படிக்க ஈர்த்தது. சில கவிதைகள் ரசிக்கும் படியாகவே இருந்தது.

அந்த நூலின் நான் மிகவும் ரசித்த கவிதைகள்.

சாயங்கால 
வரவேற்பறை 

வசதியான 
இருக்கைகளில் 
வந்து அமர்ந்தனர் 
குடும்பத்தில் எல்லோரும்

கதாபாத்திரங்கள் 
பேசிக் கொண்டன 

** 

ஒரே நிறம் தான் 
கருப்பு பலகையும் 
சவபெட்டியும் 

இரண்டும் போதிக்கின்றன 
முதலாவது அவனுக்கு 
இரண்டாவது 
அவன் மற்றவனுக்கு 

** 
நாளைய மழழை 

அம்மா... 
என்ன பறவை அது ? 
கத்துகிறதே 
உன் ரிங்டோன் போல 

** 

வேட்டி கட்டிய 
வேடத்திற்கு
விருது வாங்க 
'நடிகர்' வந்தார் 

'டை' கட்டி 

** 

அரசியல்வாதி 

இவர்கள் 
குதிரை பேரத்தில்
வாங்கிய மனிதர்கள்

** 

வந்துவிட்டது 
தடை 
பைகளுக்கு 

குப்பைகளுக்கு ?? 

** 

தாளுக்குத் 
தீயிட்ட பின் 
கல்வெட்டாயின 

உன் கடித வரிகள்

**

இன்று, அதிகமாக வெளிவரும் நூல் என்றால் 'கவிதை' நூல்கள் தான். அதே சமயம், வாசகனிடம் சென்றடையும் நூல்களில் குறைவாக சென்றடைவதும் கவிதை நூல் தான்.

வணிக நோக்கத்திற்காக எத்தனையோ கவிதைகள் இன்னும் அச்சுக்கு வ்ராமல் இருக்கிறது.எத்தனையோ கவிஞர்களை தொலைத்திருக்கிறது, இந்த சமூகம்.

கவிதை நூல்கள் பட்டியல் நீளுவதைப் போல, தொலைந்த கவிஞர்களின் பெயர் பட்டியலும் நீண்டுக் கொண்டே போகிறது.

Monday, June 17, 2013

தப்பு !!

எதோ பெயர் தெரியாத கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் கண்மணியும், கருப்பனும் பள்ளி முடிந்து மரத்தடி நிழலை நோக்கி நடந்தனர்.

“கண்மணி ! இப்போ எல்லாம் என் கூட நடந்து வரவே மாட்டீங்கர...”

 “போடா... ! குத்த வெச்சதில்ல இருந்து அம்மா எந்த பசங்களோட பேசாத பலகாதனு சொல்லிக்கிட்டே இருக்கா....” வாடிய முகத்துடன் கருப்பன்,

“நா வேணும்னா பொண்ணா மாறட்டா....!”

 “போடா கிறுக்கா... கொஞ்சமாவது அறிவிருக்கா....”

 “ஏன் அப்படி சொல்லுற”

 “குத்த வெச்சதுல இருந்து எவ்வளவு கஷ்டம் தெரியுமா. உடம்பு வலிக்கும். சில சமயம் நடக்குறதுக்கு கஷ்டமா இருக்கும். எங்க போனாலும் துணைக்கு யாராவது கூட்டிட்டு போகனும்னு சொல்லுறாங்க... பையனா இருந்தா எவ்வளவு ஜாலி தெரியுமா !!”

 கருப்பன் அமைதியாக கண்மணி சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்தான். 

“சரி விடு ! எங்க வீட்டுல இருந்து ஜிலேப்பி கொண்டு வந்திருக்கேன். சாப்பிடு.” 

கருப்பன் கண்மணியிடம் இருந்து ஜிலேப்பி வாங்கி சாப்பிட்டான்.

 “என்டா ! நா பெரிய மனுஷியானா மாதிரி, நீ எப்போ பெரிய மனுஷனாவ...” 

“தெரியுல்ல... அப்படி நடந்தா உனக்கு செஞ்ச மாதிரி எனக்கு செய்வாங்களா ?” 

கருப்பன் சொன்னதை கேட்டு கண்மணிக்கு சிரிப்பு வந்தது. இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது கண்மணி அருகில் தேள் வருவதை கருப்பன் பார்த்தான்.

 “கண்மணி தேளு !!!”

 தேளை பார்த்ததும் கண்மணி எழுந்திருக்கும் போது கீழே விழுந்தாள். அவள் பாவாடை மேல வர, தேள் அவளை கண்மணியின் காலை நோக்கி வருகிறது. கருப்பன் தேளை கையில் எடுத்து வீசினான்.

 அப்போது அவர்கள் பள்ளி ஆசிரியை ஜமுனா வர, அவரின் பார்வைக்கு கருப்பன் கண்மணியை தொடுவதுப் போல் தெரிகிறது.

 “டேய் ! என்னடா பண்ணுற. மொலச்சு மூனு இலக் கூட விடல்ல... பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக்குற..” என்று சொல்லி கருப்பனை அடிக்கிறாள். அவனின் பதிலுக்காக அவள் காதிருக்கவில்லை.

 “நா ஒண்ணும் பண்ணல்ல மிஸ்... நா ஒண்ணும் பண்ணல்ல....”

 ஜமுனா மாணவனை அடிப்பதை பார்த்த தலைமை ஆசிரியர் அவரை தடுகிறார். 

“மேடம்...! என்னாச்சு... ஏன் அவன இப்படி போட்டு அடிக்கிறீங்க..?”

 “இவன் செஞ்ச காரியத்துக்கு அடிக்காம என்ன பண்ணுறது...”

 மேலும் கருப்பனை அடித்தாள்.

 “ அவன எதுக்காக அடிக்கிறேனு சொல்லிட்டு அடிங்க...?”

 “அந்த பொண்ணு பாவடா விலகியிருக்கு அத தொட போண்ணான்..”

 “ ஐயோ இல்ல மிஸ். கண்மணி கால் கிட்ட தேள் வந்துச்சு அத எடுக்க போண்ணேன். வேணும்னா கண்மணி கிட்ட கேளுங்க...”

 “ஆமாம் மிஸ். தேள் என்ன கடிக்க வந்திச்சு. கருப்பன் தான் தூக்கிப் போட்டான்.”

ஜமுனாவுக்கு தன் தவறு புரிகிறது.

 “மேடம் ! பார்த்தீங்களா இப்ப நீங்க தான் தப்பு பண்ணியிருக்கிங்க. அப்படியே இவங்க தப்பு பண்ணுறதா நினைச்சா. கூப்பிட்டு நம்பிக்கையா நாலு வார்த்த பேசுங்க. சந்தேகப்பட்டு அடிக்கிறதால நாலு பேருக்கு தெரியாம தப்பு செய்ய தோணும். இதுவே அவங்க மேல நம்பிக்கை வச்சு பேசுங்க... அந்த நம்பிக்கையே அவங்க தப்பு பண்ண விடாது !” என்றார்.

 ஜமுனா தன் தவறை உணர்ந்து, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். தலைமை ஆசிரியரும் கருப்பனுக்கும், கண்மணிக்கும் இதைப் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி சென்றார்.

 "கண்மணி ! நீ பெரிய மனுஷியாகமலே இருந்திருக்கலாம் "

 "எல்லாரும் ஒரு நாள் பெரியவங்களாக தானே பொறாங்க. ஆமா, அங்க கை வெச்சா என்னடா தப்பு ?" என்றாள் கண்மணி.

Friday, June 14, 2013

ஈழம் : ஹைக்கூ கவிதைகள் - 14

கடவுளிடம்
ஜாமீன் மனு
பாவ மன்னிப்பு !


**

மனிதனே
மனிதனை நினை
கடவுளின் வேண்டுதல் !

**

சாத்தனை பார்த்தும்
சிலையாய் நின்ற கடவுள்
திருப்பதில் ராஜபக்ஷே !!


**

வாழும்
ஒவ்வொரு நாளும் சாதனையே
ஈழத்தில் !

**

தினம் தினம்
தீபாவளி
யாழ் மண்ணில் !

**

Wednesday, May 29, 2013

சாயாவனம் - சா.கந்தசாமி

ஒரு படைப்பு காலம் கடந்து நிற்கும் என்பதற்கு இந்த படைப்பு ஒரு உதாரணம். சுமார் நாற்பது வ்ருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நாவல், இன்றைய காலக்கட்டத்தில் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

விஞ்ஞானிக்கு பிறகு நடக்கப்பதை கணித்து சொல்பவன் படைப்பாளியாக தான் இருக்க முடியும். விஞ்ஞானி கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கணித்து சொல்கிறான். ஆனால், ஒரு படைப்பாளி மனிதர்களை வைத்து எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க கூடும் என்ற சாத்தியங்களை முன்பே கணித்து எழுதுகிறான். அந்த காலக்கட்டத்தில் வாசிக்கும் போது ஒரு கற்பனை கதையாய் தெரியலாம். ஆனால், அந்த சம்பவம் நிகழும் போது எப்படி இவர் முன்பே கணித்து இருக்கிறார் என்பது எல்லோரையும் வியக்க வைக்கும்.


'சாயாவனம்' - அந்த வகையில் சேர்ந்த நாவல்.

ஒரு மனிதன் வனத்தை அழித்த கதையை, நாற்பது ஐந்து  ருடங்கள் முன்பே எழுதப்பட்டிருக்கிறது. இன்று மனிதன் தனது சுயநலத்திற்காக எத்தனையோ மரங்களை, செடி கொடிகளை வெட்டி சாய்ப்பதற்கு நவீன கருவிகளை கண்டுபிடித்திருக்கிறான். ஆனால், நாற்பது ஐந்து வருடங்கள் முன்பு கோடாளி, அருவாள் மட்டுமே நம்பி வனத்தை அழிக்கும் காட்சியை கண் முன்னே கொண்டு வருகிறார்.

சக்கரை ஆலை தொடங்குவடற்காக சாயாவனத்தின் மரங்களை அழிக்கும் வேலையில் ஈடுப்படுகிறான் சிதம்பரம். அவனுக்கு உதவியாக அந்த ஊரில் தேவர் நட்பு கிடைக்கிறது. தனக்கு வேலை ஆக வேண்டும் என்பதற்காக தேவரின் அக்கா மகன் என்ற போர்வையில் சிதம்பரம் வருகிறான். தனது வனத்தில் வேலை செய்ய வெளியூரில் இருந்து ஆட்கள் கொண்டு வராமல், ஐயர் பண்ணையில் வேலை செய்பவர்களை வைத்து வேலையை முடிக்கிறான்.

முங்கில் மரங்களை வெட்ட காலத்தை குறைக்க, முங்கில் காட்டை எரிக்கிறான். அதற்கு, தேவரும் உதவி செய்கிறார். 'கறும்பு இந்த நிலத்தில் விளையாது' என்று ஆரம்பத்தில் ஒரு சிலர் சொல்லுவதை புரக்கணித்து, சக்கரை ஆலைக்காக வனம் அழிக்கப்படுகிறது. ஆனால், அந்த சக்கரை ஆலைக்காக கறும்பு கொண்டு வர நடை முறை சிக்களை சந்திக்கிறான். 

மனிதனுக்கும், மரத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் மனிதன் தான் வெல்கிறான். ஆனால், மரம் இறுதிவரை போராடி மனிதனை தோற்கடிக்க விரும்புகிறது. மரம் மனிதனை எளிதாக வெற்றிப் பெற செய்வதில்லை என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது.

சாகித்திய விருது பெற்ற சா.கந்தசாமி அவர்களின் 'முதல் நாவல்' என்பது குறிப்பிடதக்கது.


வாங்க....

சாயாவனம்

சா.கந்தசாமி
காலச்சுவடு  பதிப்பகம்
ரூ.150


Tuesday, May 28, 2013

ஹைக்கூ கவிதைகள் - 13

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
சதுரங்கங்கத்தில் !

**

ஊழலை ஒழிக்க
மக்கள் தற்கொலை
முந்தைய ஆட்சிக்கு ஓட்டு !!

**

குடும்பங்கள்
காந்தி வழியில்
பிரச்சனைக்கு உண்ணாவிரதம் !!

**

சமூகத்தில்
அங்கிகரிக்கப்படாத விதவை
முதிர்கன்னி !

**

என்னோடு இருந்தும்
என்னை தனிமையாக்கி விடுகிறாய்
செல்போன் உரையாடலில் !

Friday, May 24, 2013

ஹைக்கூ கவிதைகள் - 12

கூடாங்குளம்
ஒரு அரசியல்வாதியை உருவாக்கியது
அப்துல் கலாம் !

**

கூடாங்குளம்
ஒரு தலைவனை உருவாக்கியது
உதயகுமார் !

**

இருபதாம் நூற்றாண்டின்
ராஜபக்சே
ஹிட்லர் ! 

**
இருப்பதியன்றாம் நூற்றாண்டின்
ஹிட்லர்
ராஜபக்சே !

**
இரண்டு நாடுகள் ஆடும்
டென்னிஸ் பந்து
அகதி !

**
இன்றைய தேவை
இஸ்லாம் மதத்தில்
பெரியார்.

**
பல புத்தகங்களை படித்த
மனநிறைவு
பெரியாரின் பேச்சு !

Thursday, May 23, 2013

இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?

தமிழர்கள் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால்  "இராஜீவ் காந்தி படுகொலை" என்று எளிதில் பதிலளித்துவிடுவோம். அதேப் போல், சீக்கியர் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால் "இந்திரா காந்தியின் படுகொலை" என்று தான் சொல்ல வேண்டும்.எண்பதுகளில், தொன்னூறு தொடக்கத்தில் ஆப்கானில் அமெரிக்கா இஸ்லாமியதீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டு இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தான் சீக்கிய தீவிரவாதத்தை இந்தியாவில் வளர்த்து வந்தது. பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதற்காகவும், தங்கள் தலைவரைக் கொன்றதற்காகவும், இரண்டு சீக்கியர்கள் இந்திரா காந்தியை கொலை செய்தனர்.ஆனால், அதன் பின்னால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ இருக்கிறது என்று இந்த நூல் சொல்கிறது.

இந்திரா காந்தி மீது என்ன விமர்சனங்கள் இருந்தாலும், இந்திய இறையாண்மையை அமெரிக்காவுக்கு தலைவனங்காமல் பாதுகாத்தவர். அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் சோவித்துடன் கைகோர்த்தவர். இந்தியா பாகிஸ்தான் அணு உலை சோதனையை தடுக்க திட்டமிடுவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. ஒரு வேலை இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், சோவியத்துக்கு எதிராக ஆப்கானுக்கு உதவ தங்களால் முடியாமல் போகுமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறார்கள்.

ஆப்கான் போராட்டம் பாதிக்கப்பட்டால், சோவியத் கை மேலோங்கும். அதனால்,சீக்கியர்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் அந்நிய சக்திகள் தங்களுக்கு சாதகமாகபயன்படுத்தி கொன்றார்கள் என்கிறது இந்த நூல்.

விறுப்பு விறுப்பு நிறைந்த நாவல் போலவே எழுதியிருக்கிறார் தாரிக் அலி. இடையே , இந்திராகாந்தியின் பகடி செய்வது போல் வசனங்களும் எழுதியிருக்கிறார்.

இன்று, அமெரிக்காவுக்கு அடிவருடும் இந்தியா, முப்பது வருடங்கள் முன்பு அமெரிக்கா,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை எதிர்த்து போராடி இந்தியாவை நிமிர செய்த ஒரு இரும்பு பெண்மணி மரணத்தை திரை வடிவமாக காட்டுகிறார் இந்த நூலின் ஆசிரியர்.


நூலை வாங்க.....

இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?
தாரிக் அலி
மதுரை பிரஸ்
ரூ.160.

Monday, May 20, 2013

இரண்டு நூல் விமர்சனம்

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
கோபிநாத் 

சுயமுன்னேற்ற புத்தகங்கள் படிப்பதற்கு சரியான நேரம் வேண்டும், அதற்கான மனநிலையில் படிக்க வேண்டும் என்று சமீபத்திய கடலூர் பயணம் உணர்த்தியது. கடலூருக்கு சென்று ஒரு நாள் வீணாக்கிவிட்டோமோ என்ற மனநிலையில் தான் “ ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!” படித்தேன்.

இந்த உலகம் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. நாம் தான் எவ்வேறு கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து ஸ்வாரஸ்யமாக்கி கொள்ள வேண்டும் என்ற சிந்தனை பிடித்திருந்தது. குறிப்பாக, கோபியின் நண்பர் தாமஸ் “தினமும் செல்லும் பாதை இருந்து வேறு பாதையில் அலுவலகத்துக்கு சென்று பாருங்கள்” என்று சொல்லும் போது… சின்ன சின்ன விஷயங்கள் நம்மை ஸ்வாரய்மாக்க காத்துக் கொண்டு இருக்கிறது. பிறகு, ஏன் ஸ்வாரஸ்யம் இல்லை என்று வருந்த வேண்டும்.

“ஒன்றுமே செய்யாமல் ஒரு நாள் வீணாக்கி விட்டோமே!” என்று வருந்திய நேரத்தில் உருப்படியாக செய்தது இந்த புத்தகத்தை வாசித்தது தான். 

வாங்க.... 

 ***

அபிதா – 
லா.ச.ரா 

 தனது பழைய காதலி சகுந்தலை அழகை உரித்து வைத்தது போலவே அவளது மகள் ‘அபிதா’ இருக்கிறாள். மகள் வயதில் இருக்கும். ஆனால், மகளாக நினைக்க தோன்றவில்லை. காதலியின் மகளாக இருந்தாலும், அவளைப் போலவே இருப்பவளை எப்படி மகளாக பார்க்க முடியும் ?. காதலா ? காமமா ? என்று ஒன்றும் புரியாத உறவின் வெளிப்பாடு. காதலியிடம் பேச முடியாத வார்த்தைகளை அவள் மகள் உருவத்தில் இருப்பவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை.

இப்படி விபரித ஆசைகளுடன் வீட்டுக்கு விருந்தினராக வந்தவனை வெகுளிதனமாக உபசரிக்கிறாள் அபிதா. ஒரு கட்டத்தில் தான் காதலித்தது சகுந்தலையா ? அவளது மகள் அபிதாவா ? என்ற சந்தேகிறது மனம்.

தமிழில் வாசிக்க வேண்டிய நாவல் வரிசையில் ‘அபிதா’ வுக்கு மிக முக்கிய இடம் உண்டு. இலக்கிய ஆர்வமுடையவர்கள் கண்டிப்பாக இந்த நாவலை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்.

வாங்க....

LinkWithin

Related Posts with Thumbnails