வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, August 12, 2010

ஓரின சேர்கை போராளிகள்

ஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சணங்கள் இந்தியாவில் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பியா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஒதிக்கினாலும் துணிவாக அவர்கள் பேசுவதை மதிக்கிறார்கள். பாச வலையில் பின்னப்பட்ட இந்தியாவில் ஓரின சேர்கையாளர்களர்களை அவர்கள் குடும்பங்கள் நிராகரிப்பதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பல எதிர்ப்புகள் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

இந்த எதிர்ப்புகளையும் மீறி ஒரு சிலர் வாழ்ந்து, அவர்களைப் போல் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒரு சிலர்.....

கிடி தடனி (Giti Thadani)

1980ல் இந்தியாவில் லெஸ்பியன் பரவலாக தெரியப்பட்ட காலத்தில் போராடிய பெண். லெஸ்பியன் திருமணத்தை பற்றியும், லெஸ்பியன் தற்கொலை தடுப்பது பற்றியும் மிக தீவிரமாக பேசியும், எழுதியும் வருகிறார். தன்னை லெஸ்பியன் என்று அறிவித்து, ' Sakhiyani: Lesbian Desire in Ancient and Modern India' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் பத்தாண்டுகளாக சமஸ்கிரத்தத்தை கற்று அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை இதில் தொகுத்துள்ளார். ரிக் வேதத்தில் ‘ஜமி’ என்ற இரட்டை அம்மாக்கள், இரத்த சம்மந்தமில்லாத உஷா, நக்டா தாய் - மகள் உறவு போன்ற குறிப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக, கஜுராஹோ சிலையில் இரண்டு யோனி கொண்ட பெண் சிலைகள் இருப்பதாக சொல்லுகிறார்.

டெல்லியில் இருக்கும் 'Sakhi' (சகி) மற்றும் Red Rose Rendezous Group (சிவப்பு ரோஜா) போன்ற ஓரின சேர்க்கை அமைப்புகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்.

நம் விநாயகர் கூட இரண்டு பெண்களால் உருவானவர் என்று தன் பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். பார்வதி கங்கையில் நீராடும் போது தன் காவலுக்காக விநாயக பெருமானை உருவாக்கிய கதையில், பார்வதிக்கும், கங்கைக்கும் உருவானவர் என்று விளக்குகிறார். இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஓரின சேர்கையை எதிர்க்கும் நிலையில் இந்து மதத்தை தங்களுக்கு ஆதரவாக்க பார்க்கிறார்கள் என்று இவர் ஆராய்ச்சியை எதிர்ப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கிடி தடனி தன் வேத குறிப்புகளை மறு பரிசீலனை செய்து எந்த லாபமும் அடைய முடியாது என்று அவரை எதிர்ப்பவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அப்ஹா பையா (Abha Bhaiya)

பத்து வருடங்களாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, இப்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். லெஸ்பியன் பெண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்ணியத்துக்காவும் போராடி வருகிறார். ‘சங்கத்’ என்ற அமைப்பின் மூலம் திருமணமாகாத பெண்கள், விவாகரத்தான பெண்கள், கன்னியாஸ்திரிகள் போன்றவர்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

மன்வேந்திர சிங் கோஹில் (Manvendra Singh Gohil)
குஜராத்தில் உள்ள ராஜ்பிப்லா சமஸ்தானத்தின் இளவரசராக கருதப்படும் மன்வேந்திர சிங் கோஹில் ஒரு கே. திருமணத்துக்கு பிறகு தனக்கு ஏற்பட்டு இருக்கும் தன் பால் ஆர்வம் மாறிவிடும் என்று நம்பி சந்திரிகா குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். அப்போது தான் ஒரு கே என்று அவருக்கு தெரியவில்லை. தாம்பத்திய வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் 1992ல் விவாகரத்து பெற்றார். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சுற்றி இருப்பவர்கள் நினைத்தார்கள். 2002ல் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஒரு கே என்று உறுதிப்படுத்தினார். தான் கே என்று உணர்ந்த கோஹில், தன்னை போல் பாதிக்கப்பட்டுயிருப்பவர்களுக்கு 'லக்ஷியா' என்ற அமைப்பை தொடங்கினார். ஓரின சேர்க்கை மட்டுமில்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் பரப்பிவருகிறார். தான் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பிந்துமாதவ் கிரே (Bindumadhav Khire)மராத்திய எழுத்தாளர். திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஆரம்பத்தில் தன்னுடைய ஓரின சேர்கை உணர்வை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், விடுபடவும் முடியாமல் மிகவும் அவதைப்பட்டவர். மிகுந்த மன உலைச்சலுக்கு உள்ளன, பிந்து மாதவ் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு இருக்கும் சன் ப்ரான்சிகோவில் த்ரீகோன் (Trikone) ஓரின சேர்க்கை அமைப்பின் மூலம் தன் குற்றவுணர்வில் இருந்து விடுப்பட்டார். த்ரீகோன் காலாண்டு இதலில் துணை பதிப்பாளராக இருந்து, பின்பு பதிப்பாசிரியரானார். அதன் பின், அமெரிக்காவில் நடந்த ஓரின சேர்கை போராட்டங்களில் கலந்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் தன்னம்பிகை வளர்ந்ததும் தன்னைப் போல் அவதைப்படும் இந்தியர்களுக்கு உதவ இந்தியா திரும்பினார்.

நிறைய புத்தகம் படித்தார். சுயபால் இனத்திற்காக எழுத தொடங்கினார். 2005ல் , 'பார்ட்னர்' என்ற நாவலை எழுதினார். ஓரின சேர்கைப் பற்றிய இந்த நாவல் சுய பால் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு இந்த புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.

அஷோக் ரோவ் ரவி (Ashok Row Ravi)

ஓரின சேர்கையாளரான இவர் மும்பையில் பிறந்தார். சுய பால் இனத்தினருக்காக போராடுவதோடு இல்லாமல், 50000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இந்திய பாரம்பரியத்தை பற்றியும் ஆராய்ச்சி செய்துவருகிறார். மலையாள மணோராமா, சன்டே மைல், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னனி பத்திரிகைகளுக்கு நிருபராக பணியாற்றியிருக்கிறார். 1990ல் பத்திரிகை நிருபர் வேலைக்கு முழுக்கு போட்டு, சொந்தமாக 'பாம்பே தோஸ்த்' என்ற ஓரின சேர்கையாளருக்காக இதழை தொடங்கினார். ஓரின சேர்கை மட்டுமல்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறார். அம்ஸபவர் ஓரின சேர்க்கை அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராகவும் இருந்து வருகிறார்.

இன்னும் பல பேர் ஓரின சேர்கைக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வெளிச்சத்திற்கு வரமால் இருக்கலாம். இன்று நூற்றி ஐம்பது நாடுகளுக்கு மேல் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஓரின சேர்கை திருமணம் சமூகத்தின் அங்கிகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. உலகில் பல நாடுகளில் இவர்கள் போராட்டம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

சரி... போராட்டம் நடத்த அப்படி என்ன இருக்கிறது ? சமூகத்தில் அங்கிகாரம் கொடுக்கவில்லை. ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான். போராட்டம் நடத்தினால் மதிப்பும், மரியாதையும் தானாய் வந்து விடுமா ? என்று கேள்வி எழலாம். நியாயமான கேள்வி தான்.

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான போராட்டங்கள் புரிய வைப்பதற்காகவும், விழிப்புணர்வு எற்ப்படுத்தவும் தான். ஓரின சேர்க்கையால், தற்கொலை நடக்காமல் இருக்க இவர்கள் பாடுபடுகிறார்கள். ஆனால், உலகளவில் ஓரின சேர்கையாளர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை தடுக்க பல போராட்டங்கள் உலகளவில் நடந்து வருகிறது. மிருகத்தை கேவலமாக தண்டிக்கப்பட்டுயிருக்கிறார்கள். ஏன் ? கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதை பற்றி அடுத்த பதிவில்.....

கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication

http://www.sayoni.com/index.php?option=com_content&view=article&id=1947:interview-giti-thadani&catid=61:literature-queer-a-more&Itemid=54

http://www.desicritics.com/2008/05/06/003835.php

http://en.wikipedia.org/wiki/Manvendra_Singh_Gohil

http://en.wikipedia.org/wiki/Ashok_Row_Kavi

6 comments:

RAJ said...

கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை HOMOSEXUAL / LESBIAN தண்டணையாக ஆசிர்வதிக்கப்பட்டது.

"க்ளிக்" செய்து படியுங்கள்.


கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக ?


ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்ய??

யாதவன் said...

நல்ல படைப்பு

secondpen said...

இதனால் மக்களின் எண்ணமும் மற்றும் உடலும் பாதிக்கபடுகிறது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

Anonymous said...

வணக்கம் நண்பரே! உங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது... நல்ல முயற்சி...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

LinkWithin

Related Posts with Thumbnails