வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, August 3, 2010

கவிதை : விழித்தெழு தமிழா விழித்தெழு !

அன்று,
தமிழில் எழுதினால்
'புரட்சி' என்ற அங்கிகாரம் கொடுத்து
கைது செய்து சிறையில் அடைத்தான் !
இன்று,
தமிழில் எழுதினால்
விலைப்போகாது என்று
தமிழனே குப்பையில் எறிகிறான் !

அன்று,
வெள்ளைக்காரன் கூட
தமிழில் பேச முயற்சித்தான் !
இன்று,
தமிழனே தமிழை மறந்து
ஆங்கிலம் பேசுகிறான் !

அன்று -
'தமிழ்' தமிழனை தட்டி எழுப்பியது !
இன்று -
'தமிழ்' தமிழனுக்கு இன்னொரு ஒரு மொழியானது !

அன்று - தமிழ் புரட்சியை தூண்டியது !
இன்று - தமிழ் அரசியலானது !

தமிழ் நாட்டில் பிறந்ததால்
தன்னை தமிழன் என்கிறான் !
தமிழ் பேசும் மற்ற நாட்டினறின்
புர்வீகத்தை ஆராய்கிறான் !
பணத்திற்காக எழுதிவிட்டு
'புரட்சி' என்று சட்டம் பேசுகிறான் !
அமாவாசையில் பௌர்ணமி நிலவு
பற்றி சித்தாந்தம் பேசுகிறான் !

இன்னும்,
மிதம் இருக்கும்
தமிழ் உணர்வை தட்டி எழுப்ப
சிதரிக்கிடக்கும்
எச்சங்களை ஒன்று திரட்டி
அலைகளாக மாற்றுவோம் !

விழித்தெழு தமிழா விழித்தெழு !


( 31.7.10 அன்று ஜெர்மன் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் வாசித்த கவிதை. )

1 comment:

மதுரை சரவணன் said...

//இன்று,
தமிழில் எழுதினால்
விலைப்போகாது என்று
தமிழனே குப்பையில் எறிகிறான் !//


அருமை . வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails