வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, August 13, 2010

மூன்று கவிதைகள்

கடிகாரம்

"உன் கடிகாரம்
பதினைந்து நிமிடம்
அதிகமாக சுற்றுகிறது" - என்றான்.

"அடுத்த பதினைந்து நிமிடம்
என்ன நடக்க போகிறது என்று
தெரிந்து கொள்வதற்காக !" என்றேன்.

"எல்லாம் முன்பே தெரிந்துக் கொள்ள
நீ என்ன கடவுளா !" என்றான்.

"ஆம் ! நான் கடவுள் " என்றேன்.


****

எழுத்தாளன்
கோடி எழுத்துக்கள் என்னுள்
புதைந்து கிடக்கின்றன !

லட்ச கட்டுரைகள்
உயிர் கொண்டு வர துடிகின்றன !

ஆயிரம் புத்தகங்கள்
அச்சில் உருவாக போகின்றன !

கற்பனை கோட்டையில்
எழுத்தாளன் !

****

புத்தகம்

கம்யூனிச புத்தகம்
வாங்கலாம் என்று எடுத்தேன்
விலையோ
முதலாளிதுவம் பேசியது !

2 comments:

யாதவன் said...

கடைசி கவிதை சுப்பர்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கற்பனை பற்றிய இரண்டாவது கவிதை மிகவும் சிறப்பு . கடல் நீர் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடிக்கும் திறமை கற்பனைக்கு மட்டுமே உண்டு . தொடர்ந்து எழுதுங்கள் . மீண்டும் வருவேன்.

LinkWithin

Related Posts with Thumbnails