வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, September 27, 2016

கவிதை : வாணி ஸ்ரீ !

அன்று என் காதலை மறுத்தவள்
இன்று பேஸ்புக்கின் என் நட்பை ஏற்க மறுக்கிறாள்

அன்றும் என்னை கடந்து போக விரும்பியவள்
இன்று என்னை பார்க்க விரும்பாதவளாக இருக்கிறாள்

என்றோ ஒரு நாள்
நீ என்னை மீண்டும் பார்த்தாள்
அடையாளம் தெரிவதற்காகவே
உடல் எடைப்போடாமல்
அதே எடையில் இருக்கிறேன்!
தலை முடிக்கு
கருப்பு சாயம் பூசுகிறேன் !

அந்த ஒற்றை நாளுக்காக
பல நாட்களாக
என்னை நான் பாதுகாத்துவருகிறேன் !

சந்தேகம் இல்லை
நீ என் வாணி ஸ்ரீ தான்
மாறவே இல்லை !
இந்த அளவுக்கு
ஒரு ஆணின் இதயத்தை உடைக்க
உன்னால் மட்டுமே முடியும் !!

ஆனால்,
அன்றும் சரி, இன்றும் சரி
நான் சிவாஜி கணேசன் அல்ல !

உன்னிடம் ஒரு நொடிக் கூட
நடிக்க தெரியாதவன் நான்
எப்படி சிவாஜியாக முடியும் ?

வாணி ஸ்ரீ !
நீ மறுப்பாய் என்று தெரிந்தும்
ஒரு முறை
உன்னை பார்க்க வேண்டும்
என்று என் மனம் விரும்புகிறது !

நீ என்னை மீண்டும் பார்த்தால்
அடையாளம் தெரிவதற்காகவே
நான் மார்க்கண்டேயனாக
 காத்திருக்கிறேன் !

Tuesday, March 8, 2016

பெண்கள் தின வாழ்த்துகள் !!



அன்பாய் இருப்பவள்
ஆச்சாள் என்பவள்
இல்லத்தை ஆள்பவள்
ஈரவன் முகம் கொண்டவள்
உயிரைக் கொடுப்பவள்
ஊக்கத்தின் உருவானவள்
எழில் மொழி பேசுபவள்
ஏணிப்படியாய் இருப்பவள்
ஐயத்தை போக்குபவள்
ஒவ்வாததை செய்யாதவள்
ஓங்காரத்தை போற்றுபவள்
ஔவியம் கொள்ளாதவள்

அவள் தான்
‘பெண்’ என்பவள் !

**
meanings
ஆச்சாள் - அம்மா, ஈரவன் - நிலவு, ஓங்காரம் - கடவுள், ஔவியம் - பொறாமை⁠⁠⁠⁠

Monday, December 7, 2015

காமராசர்

லட்சக்கணக்கான
புகழ்ப் பெற்ற பணக்காரர்கள் 
வாழும் நாட்டில்
புகழ்ப் பெற்ற ஏழை
காமராசர் ! 

சமான்யனாக பிறந்து
சாம்ராஜ்ஜியத்தை அமைத்த 
முதல்வர்களுக்கு மத்தியில்
ஏழையாக பிறந்து
ஏழையாக இறந்தவர் !


வரும் தலைமுறையினருக்கு
வழிக் காட்டியாய் இருந்து
வழி வகுத்து
முதல் அமைச்சர் பதவியில்
விளகியவர் !

எடுத்த காரியங்களை
கர்மமென முடித்ததால்
“கர்மவீரர்”
என்ற பெயருக்கு
சொந்தக்காரர் !

காந்தியின் பிறந்த நாள் அன்று
காந்தியின் திருவடி அடைந்தவர் !

முதல்வர்கள்
எப்படி இருக்க வேண்டும் 
என்பதற்கு
பல்கலைக்கழகமாக
வாழ்ந்த
எங்கள் காமராசர் !

Wednesday, November 25, 2015

இரண்டு கவிதை : மழை, புகைப்படம்

மழை
----------

வானம் மழை சிந்தினால்
விவசாயி கண்ணீர் சிந்த தேவையில்லை !

வீட்டுக்கு மழைநீர் சேகரித்தால்
குடம் ஏந்தி சாலையில் நிற்க தேவையில்லை !

கடலுக்குள் கலக்கும் முன் மழைநீரை சேமித்தால்
 தண்ணீருக்கு அண்டை மாநிலத்தை நம்ப வேண்டியதில்லை !

பண சேமிப்பு எதிர்காலத்திற்கு நல்லது
மழைநீர் சேமிப்பு பூமிக்கு நல்லது !!

மழை
நம் வாழ்க்கைக்கு தேவையானது மட்டுமல்ல
நமக்கு சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கை !

**

புகைப்படம் 
------------------- 

நரைத்த முடி
தோல்வியடைந்த கனவுகள்.

நிகழ்கால வலி
இறந்தக்கால நினைவுகள்.

நட்பின் கொண்டாட்டம்
நட்பின் சுயநலம்.

ஆறு வித்தியாசங்களை
கடந்து செல்கிறது
கல்லூரிக்கால புகைப்படத்திற்கும்
தற்போதிய புகைப்படத்திற்கும் !!

Thursday, July 17, 2014

இப்படிக்கு கடவுள் !

அடுத்தவரை ஒதுக்க சொல்லும்
ஹிந்து மதம் வேண்டாம் !

ஆயுதம் எந்தச் வைக்கும்
இஸ்லாம் மதம் வேண்டாம் !

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
மதம் மாற வைக்கும் கிறிஸ்துவமும் வேண்டாம்

அன்பை ஏட்டில் எழுதி வைத்து
கொலை செய்யும் புத்தனும் வேண்டாம்

இதையெல்லாம் மதங்கள் செய்யவில்லை
மனிதன் தான் செய்கிறான் என்று தெரியும்

அதனால்,
எனக்கு மனிதர்களே வேண்டாம்.

இப்படிக்கு,
கடவுள்.

Monday, March 10, 2014

உனக்காகவே மயங்குகிறேன் - யாத்விகா

காதல் கவிதைகள் எழுதுவதில் ஏன் பெண்களால் ஆண்களை மிஞ்ச முடியவில்லை என்று தெரியவில்லை. தபூ சங்கர், கட்டளை ஜெயா போன்ற காதல் கவிஞர்களுக்கு தனி வாசகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த அளவுக்கு ஏன் ஒரு பெண் எழுத்தாளர் ‘காதலை’ கொட்டி கவிதை எழுத முடியவில்லை.

’காதல்’ என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனால், ஆண் கவிதைகளில் இருக்கும் காதல் ரசம் பெண் எழுதும் கவிதைகள் குறைவாக எனக்கு படுகிறது. (ஒரு வேளை இன்னும் அதற்கான கவிதை நான் தேடி படிக்கவில்லை என்றுக் கூட இருக்கலாம்.)

கவிதை எழுதுவதை துறந்தாலும், காதல் கவிதை, ஹக்கூ கவிதைகளை மட்டும் வாசித்து வருகிறேன். பத்து வருடம் பின்னோக்கி கல்லூரி நாட்களுக்கு செல்ல வேண்டும் என்றால் காதல் கவிதைப் போல் சிறந்த புத்தகம் இல்லை.

அப்படி சமீபத்தில் வாசித்தது யாத்விகா எழுதிய ” உனக்காகவே மயங்குகிறேன்”


காதல் கவிதைகளுக்கு டெம்ளேட்டான படங்களை நிரப்பிய கவிதை தொகுப்பு தான். கௌதம் மேனன் படங்களில் பெண்ணின் காதலையும், தவிப்பையும் அழகாக சொல்வது போல் ஒரு சில கவிதைகளில் யாத்விகா சொல்லியிருக்கிறார்.

ஐயோ 
அப்படி பார்க்காதே ! 
என் 20 வருட 
 அழகும் இம்சிக்கிறது
 என்னை…! 
 அடிக்கடி 
 கண்ணாடி பார்க்கச் சொல்லி ! 

 ** 

அசுரனே 
இப்படியா 
நினைப்பாய்… 
24 மணி நேரமும் 
விக்கல் எடுக்கிறது 
எனக்கு 

சில கவிதைகளில் ஆண்பால், பெண்பால் குழப்பம் ஏற்ப்படுகிறது. ஒரு பெண் பார்வையில் இந்த புத்தகம் நகர்கிறது என்று நினைத்தால், ஒரு ஆண்ணின் பார்வையில் சில கவிதைகள் வருகிறது. ஒரு சில கவிதைகள் எங்கோ கடந்த வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

மற்ற கவிதைகள் எழுதுவதை விட காதல் கவிதைகளுக்கு பல சவால்கள் இருக்கிறது. இலக்கிய அந்தஸ்து கிடைக்காது. படிக்கும் பல வாசகர்களுக்கு காதல் பரிட்சயமானதாக இருக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது. அதையும் மீறி படிக்கும் வாசகர்களுக்கு ஒரு சில கவிதைகள் அமெச்சூர் தனமாக இருக்கும். இதையெல்லாம் மீறி காதல் கவிதைகள் வெல்வது கடினம்.

யாத்விகா… கவிதை என்ற வட்டத்திற்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் சிறுகதை, நாவல் போன்ற முயற்சிகள் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.


இணையத்தில் வாங்க..... இங்கே

Monday, August 12, 2013

லிங்கூ (கவிதையும் ஓவியமும்) - லிங்குசாமி

சமிபத்தில் கவிதை புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்து வருகிறேன். விதி விளக்காக ஹைக்கூ கவிதைகளை மட்டும் வாசிக்கிறேன். மூன்று வரியில் கொடுக்கும் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஹைக்கூ கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹைக்கூ என்ற வார்த்தையை மாற்றி புதிய வார்த்தையாக ‘லிங்கூ’ என்று லிங்குசாமி பெயிரிட்டதால் என்னை புத்தகம் வாசிக்க வைத்தது.

பெரும்பாலான கவிதைகள் காதல் கவிதைகள். ஆர்வக் கோளாறுகள் முதல் கவிதை நூலாக காதல் கவிதைகளை படம் போட்டு வெளியிட்டு சக்கைப் போடு போட்டது ஒரு காலம். இப்போது, எல்லோரும் படமும், காதல் கவிதகளும் கொண்டு வருவதால் இந்த நூல் அதில் இருந்து வேறுபடவில்லை. படத்திற்கு மாறாக புரியாத ஒவியத்தை லிங்குசாமி வரைந்திருக்கிறார். மற்றப்படி முதல் கவிதை நூல் சராசரி கவிஞனிடம் இருந்து எப்படி படைப்பு வருமோ அப்படி தான் இயக்குனர் லிங்குசாமியிடம் இருந்து வந்திருக்கிறது.



இந்த நூலில் இடம் பெற்று இருக்கும் காதல் கவிதைகளில் மிகவும் ரசித்த கவிதை இது மட்டும் தான்.

சுஜாதா
கவிதா பத்மா உஷா 
அப்புறம் கீதா 
இவை எல்லாம் 
வெறும் பெயர்கள் அல்ல.

சமூக கவிதைகள் ஹைக்கூ இலக்கணத்தில் எழுதவில்லை என்றாலும், சிறப்பாக எழுதியிருக்கிறார். குறிப்பாக ஒரு சில கவிதைகள்.

இஸ்திரி போடும் தொழிலாளியின் 
வயிற்றில் சுருக்கம் 

பூச்சி மருந்தில் பூச்சி 
உயிரோடு 

அசோகர் இத்தனை மரங்களை நட்டார் 
அதில் ஒன்று கூட போதி மரமில்லையா 

என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான் 
பிச்சைக்காரன். 

வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்
ஆப்பிள் விழுந்த கணத்தில் 
நியூட்டன் 

லிங்கு சார், படத்திற்கு ‘சுபம்’ கார்ட் போட்ட பிறகு ஆடியன்ஸ் தியேட்டரில் இருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் புத்தகம் முடிந்த பிறகு, பத்தி பேர்கள் அறிமுக உரையை, இருபது பக்கங்கள் மேல் இடம் பெற்று இருக்கிறது. இதை விகடன் பிரசுரம் சரிப்பார்த்திருக்க வேண்டும். பாராட்டிய பிரபலங்கள் திரும்ப திரும்ப நான்கைந்து கவிதைகளே சொல்வதால் எல்லா கவிதைகளும் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறது.

ஒரு அறிமுக எழுத்தாளருக்கு இருக்கும் ஆர்வம் தான் இயக்குநர் லிங்குசாமியிடம் தெரிகிறது. வெற்றிப்பட இயக்குநருக்கு இருக்க வேண்டிய முதிர்ச்சி அவர் எழுதிய புத்தகத்தில் தெரியவில்லை.

விகடன் மார்க்கெட்டிங் திறமையால் நான்கு பதிப்புகள் வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிறந்த கவிதை புத்தகம் என்று சொல்ல முடியாது. 

இணையத்தில் வாங்க.....

விலை. 90, பக் : 120
விகடன் பிரசுரம்

Monday, July 8, 2013

கவிதை : அப்பா

மகனின்
முதல் கதாநாயகன்
முதல் வில்லன்
அப்பா !

எந்த பாத்திரம்
ஏற்க போகிறார் என்பதில்
மகன் எழுதும்
திரைக்கதையில் தான் உள்ளது !

*

மகன் விழும் போது எழுவோம் என்று
நம்பிய முதல் மனிதர்
அப்பா !

அன்பை உள்ளே வைத்துக் கொண்டு
எதிரிப் போல் தெரியும் ஒரே உறவு
அப்பா !

‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தையில்
கொடுத்த செயற்கை வலியால்
‘முடியும்’ என்ற நம்பிக்கையை
விதைத்தவர் அப்பா !

*

கொண்டுவந்தால் தான் தந்தை என்று
யார் பொய் சொன்னது
தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர்
தந்தை உண்மை சொல்கிறது !

*

மகனிடம் தோற்பதை
   லட்சியமாய் கொண்டவர் !
மகன் தோற்றாலும்
   வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில
   மகன் வேகத்துக்கு நடப்பவர் !
மகன் ஒடுவதை
   ஒதுங்கி நின்று ரசிப்பவர் !

முதுமையில் மகன் கரம் பிடித்து
குழந்தைப் போல் நடப்பார்
அப்பா !

*

பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
    அம்மாவை பாட்டியாக பார்க்கலாம்
பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
   அப்பாவை குழந்தையாக தெரிவார் !

அம்மா – அன்பை அன்பாக காட்டுவார்
அப்பா – அன்பை கண்டிப்பாக காட்டுவார்

*
"மாறாத அன்பு
அம்மாவின் அன்பு" என்று
திருமணமாகதவன் சொன்னது !

"மாறாத அன்பு
அப்பாவின் அன்பு" என்று
திருமணமானவன் சொன்னது !

*

அம்மாவின் அன்பை விட
சிறந்த அன்பு உலகில்
இருக்கிறதென்றால்
அது அப்பாவின் அன்பு !


Tuesday, June 18, 2013

ஒரு செல் உயிர்கள் - வி.டெல்லிபாபு


ஒரு இலக்கிய நிகழ்வில், நண்பர் ஒருவர் "ஒரு செல் உயிர்கள்" என்ற கவிதை புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்தார். வி.டெல்லிபாபு எழுதியது.

நூல் அட்டை வடிவமும், கவிதைக்கான படங்களும் பார்த்த மாத்திறத்தில் படிக்க ஈர்த்தது. சில கவிதைகள் ரசிக்கும் படியாகவே இருந்தது.

அந்த நூலின் நான் மிகவும் ரசித்த கவிதைகள்.

சாயங்கால 
வரவேற்பறை 

வசதியான 
இருக்கைகளில் 
வந்து அமர்ந்தனர் 
குடும்பத்தில் எல்லோரும்

கதாபாத்திரங்கள் 
பேசிக் கொண்டன 

** 

ஒரே நிறம் தான் 
கருப்பு பலகையும் 
சவபெட்டியும் 

இரண்டும் போதிக்கின்றன 
முதலாவது அவனுக்கு 
இரண்டாவது 
அவன் மற்றவனுக்கு 

** 
நாளைய மழழை 

அம்மா... 
என்ன பறவை அது ? 
கத்துகிறதே 
உன் ரிங்டோன் போல 

** 

வேட்டி கட்டிய 
வேடத்திற்கு
விருது வாங்க 
'நடிகர்' வந்தார் 

'டை' கட்டி 

** 

அரசியல்வாதி 

இவர்கள் 
குதிரை பேரத்தில்
வாங்கிய மனிதர்கள்

** 

வந்துவிட்டது 
தடை 
பைகளுக்கு 

குப்பைகளுக்கு ?? 

** 

தாளுக்குத் 
தீயிட்ட பின் 
கல்வெட்டாயின 

உன் கடித வரிகள்

**

இன்று, அதிகமாக வெளிவரும் நூல் என்றால் 'கவிதை' நூல்கள் தான். அதே சமயம், வாசகனிடம் சென்றடையும் நூல்களில் குறைவாக சென்றடைவதும் கவிதை நூல் தான்.

வணிக நோக்கத்திற்காக எத்தனையோ கவிதைகள் இன்னும் அச்சுக்கு வ்ராமல் இருக்கிறது.எத்தனையோ கவிஞர்களை தொலைத்திருக்கிறது, இந்த சமூகம்.

கவிதை நூல்கள் பட்டியல் நீளுவதைப் போல, தொலைந்த கவிஞர்களின் பெயர் பட்டியலும் நீண்டுக் கொண்டே போகிறது.

Friday, June 14, 2013

ஈழம் : ஹைக்கூ கவிதைகள் - 14

கடவுளிடம்
ஜாமீன் மனு
பாவ மன்னிப்பு !


**

மனிதனே
மனிதனை நினை
கடவுளின் வேண்டுதல் !

**

சாத்தனை பார்த்தும்
சிலையாய் நின்ற கடவுள்
திருப்பதில் ராஜபக்ஷே !!


**

வாழும்
ஒவ்வொரு நாளும் சாதனையே
ஈழத்தில் !

**

தினம் தினம்
தீபாவளி
யாழ் மண்ணில் !

**

Tuesday, May 28, 2013

ஹைக்கூ கவிதைகள் - 13

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
சதுரங்கங்கத்தில் !

**

ஊழலை ஒழிக்க
மக்கள் தற்கொலை
முந்தைய ஆட்சிக்கு ஓட்டு !!

**

குடும்பங்கள்
காந்தி வழியில்
பிரச்சனைக்கு உண்ணாவிரதம் !!

**

சமூகத்தில்
அங்கிகரிக்கப்படாத விதவை
முதிர்கன்னி !

**

என்னோடு இருந்தும்
என்னை தனிமையாக்கி விடுகிறாய்
செல்போன் உரையாடலில் !

Friday, May 24, 2013

ஹைக்கூ கவிதைகள் - 12

கூடாங்குளம்
ஒரு அரசியல்வாதியை உருவாக்கியது
அப்துல் கலாம் !

**

கூடாங்குளம்
ஒரு தலைவனை உருவாக்கியது
உதயகுமார் !

**

இருபதாம் நூற்றாண்டின்
ராஜபக்சே
ஹிட்லர் ! 

**
இருப்பதியன்றாம் நூற்றாண்டின்
ஹிட்லர்
ராஜபக்சே !

**
இரண்டு நாடுகள் ஆடும்
டென்னிஸ் பந்து
அகதி !

**
இன்றைய தேவை
இஸ்லாம் மதத்தில்
பெரியார்.

**
பல புத்தகங்களை படித்த
மனநிறைவு
பெரியாரின் பேச்சு !

Tuesday, January 29, 2013

கவிதை : இல்லாதவன்

கிருஷ்ணன் –
ஆண்ணின் காமத்தின்
மொத்த உருவம்

அல்லா –
முகமது நபியின்
கற்பனை பாத்திரம்

ஏசு –
கடவுளாக்கப்பட்ட
சராசரி மனிதன்

மொத்தத்தில் கடவுள் -
மனிதன் பயத்தின்
உருவம் !

* *


கடவுளைப் பற்றி
நிறைய இதிகாசகங்கள் உண்டு
வரலாறு இல்லை !

மனிதனின்
வன்முறை வரலாற்றை
கடவுள் தடுத்ததில்லை !

தடுக்க 'அவன்' இருந்தால்
இத்தனை பிரச்சனையில்லை.

இத்தனை
'இல்லை'களுக்கு நடுவில்
என் கேள்வி...

இல்லாத ஒன்றுக்காக
மனிதன்
ஏன் மனிதனாக
வாழ்வதில்லை ?

Monday, September 10, 2012

கல்லூரி டைரியில் காதல் கவிதை !

எதற்கோ என் புத்தக அலமாரியில் புத்தகங்களை தேடி, எதோ பழைய புத்தகத்தை புரட்ட , அது கல்லூரி வகுப்பில் நோட்ஸ் எடுத்த டைரியாக இருந்தது.

எந்த வகுப்பில் உட்கார்ந்து எழுதிய கவிதை (?) என்று ஞாபகமில்லை. எந்த பெண்ணை நினைத்து எழுதினேன் என்று நினைவில் இல்லை. (ஒன்றா இரண்டா சொல்வதற்கு ?) . எல்லோவற்றிக்கும் மேலாக இது கவிதையா என்ற சந்தேகம் இப்போது படிக்கும் போது தோன்றியது.

சரி ! ஆனது ஆகட்டும். எத்தனையோ மொக்கை பதிவுகளில் நடுவில் என் கல்லூரி கவிதை (?) ஒரு பக்கம் இருந்து விட்டு போகட்டும்.

***

மௌனம் என்பது மொழி
சொன்ன கவிஞர்கள் நூறு உண்டு !
அது என்னைக்ம்கொள்ளும் ஆயுதம்
கண்டேன் உன்னிடத்தில் இன்று

ஒரு பெண் போனால் இன்னொரு பெண்
என்று இது வரை நான் இருந்தேன்
உன்னை பார்த்த பின்பு
மற்ற பெண்கள் பொய் என்று உரைத்தேன் !

பனித்துளிப் போல எந்தன் காதல்
பகலில் என்றும் தெரிவதில்லை
இரவில் மட்டும் கனவில்
எந்தன் காதல் தினம் தொல்லை !

**

பெண்கள் மனம் தேடுவது
காதலா ? நட்பா ?
ஆண்கள் மனமோ அறிவதில்லை.

நட்பை தேடினால் காதலை விரும்பும்
காதலை தேடினால் நட்பை விரும்பும்
புதிர் போடும் புதிர் நீங்கள் !

விலகிச் சென்றால் விரும்பி வரும்
விரும்பி சென்றால் விலகிப் போகும்
புரியாத வினாத்தாள் நீங்கள் !

விடை அறிந்த வினாக்களே !
எங்களை விரும்ப வைக்கும்
இயந்திரம் நீங்கள் !

உங்கள் மனம் தேவை என்ன ?
தெளிவாய் சொல்லிவிடுங்கள் !
ஆண்கள் தேடும் தேடலுக்கு
நீங்கள் கொஞ்சம் ஓய்வுக் கொடுங்கள் !

பெண்கள் அறிய நினைத்த அறிஞர்கள்
தலை நரைத்தே மடிந்தான் !
வாழுக்கின்ற இளைஞர்கள் நாங்களோ !
மடிவதற்காகவே பெண்களை தேடுகின்றான் !

Thursday, June 28, 2012

நாமும் மரமும் !



மரத்தின் கையில்
உருவான நாற்காலியில் அமர்ந்து
எப்படி சொல்லுவது
மரத்தை வெட்டாதீர்கள் என்று !

புகை மண்டலத்தை உருவாக்கும்
இரு சக்கர வாகனத்தில் சென்று
எப்படி பறப்ப போகிறேன்
சுகாதார வாழ்க்கையை பற்றி

மரத்தின் எச்சத்தில்
உருவான காகிதத்தில்
எப்படி எழுதுவது
இயற்கையைக் காப்போம் என்று

பசிக்கும் மனிதன்
சாப்பிட போவது பழமா ? பணமா ?

மரம் பொருட்காட்சியில்
பார்க்கும் பொருளாகுமோ ?
அது நினைவு சின்னமாகுமோ ?
மனிதன் மரணத்திலும்
மரம் தான் எரிய வேண்டுமா ?

கேள்விகளிலே குற்றவுணர்வோடு
பயணிக்கும் நாம்
ஒன்றுக்காவது விடை காண்போமா ?

Friday, June 1, 2012

புகையிலைக் கேட்டை ஒழி !



உடலை புண்ணாக்கி கொண்டோம்
புண் பட்ட மனதை
புகைவிட்டு ஆற்றிய போது !

நான் அடிமையில்லை
சொன்ன நடிகனின் கையில் சிகரெட்

நான் சிகரெட் பிடித்ததில்லை
பண்ணீரெண்டாம் படிக்கும் வரை
பெருமையாய் சொல்லும் மனிதன் !

முரணான இயங்குகிறது புகையிலை உலகம் !

ஒவ்வொரு சிகரெட் பிறக்கும் போது
ஒரு மனிதனின் ஒரு வருட ஆயுள் இறக்கப்படுகிறது

ஒவ்வொரு புகையிலை எரியும் போது
பத்து மனிதனின் ஆயுள் கேள்விக்குறியாகிறது !

காதலியின் எத்தனை முத்தங்கள் இழந்தையோ
இந்த சிகரெட் புகையினால் !

மழலை மொழிகள் தவிற்த்தாய்
புகையிலை நாற்றத்தினால் !

உனக்கு நீயே கொல்லி வைத்துக் கொண்டாய்
சிகரெட் பற்ற வைத்ததினால் !

உன் ஆண்மை அழியும் என்று தெரியாமலே
புகையிலையை நண்பனாக்கி கொண்டாய் !

உன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை
இழக்க வைக்கும் புகையிலையை இழந்தால்
உலகம் உனக்கு நண்பனாகும் !!!

***

நேற்று (31.5.12), புகையிலைக்கு எதிராக மின்னல் தமிழ்ப்பணி அமைப்பினர் நடத்திய "புகையிலைக் கேட்டை ஒழி !" என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தினர். அந்த கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை.

கிட்டதட்ட நாற்பது கவிஞர்கள் மேல் கவிதை வாசித்தனர். இந்த நிகழ்ச்சி இன்று (1.6.12) மாலை 5 மணிக்கு எஸ்.ஆர்.எம் வானொலியான 90.4 FM ல் கேட்கலாம்.

Wednesday, May 16, 2012

14வது நூல் - கவிதைகள் அனுப்பவும் !!!

நாகரத்னா பதிப்பகம் தொடங்கியது முதல்,  வருடத்திற்கு ஒரு நூல் பல எழுத்தாளர்களிடம் கவிதைகள் பெற்று தொகுப்பு நூலாக வெளியீட்டு வருகிறது.

1. காந்தி வாழ்ந்த தேசம் ( பதிப்பக தொடக்க விழாவில் வெளியிட்டோம்)
2. கவிதை உலகம்
3. கலாம் கண்ட கனவு (இரண்டாம் ஆண்டு விழாவில் வெளியிட்டோம்)

இப்போது மூன்றாம் ஆண்டு பயணித்துக் கொண்டு இருக்கும் நாகரத்னா பதிப்பகம் தனது 14வது நூலாக கவிதை தொகுப்பை வெளியிட உள்ளது. இந்த வருடத்தின் தலைப்பு “ இயற்கையைக் காப்போம்”.

கவிதை 24 வரிகள் இருக்க வேண்டும்.

கவிதை ஹைக்கூ, மரபு, புது கவிதை மரபு, நவீனம் என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.5.12

கவிதைகள் To: nagarathna_publication@yahoo.in மற்றும் CC : tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

கவிதை அனுப்புபவர்கள் தங்களின் அலைப்பேசி எண்ணும், முகவரியும் குறிப்பிட்டால் நல்லது. கட்டாயமில்லை.

கவிதைகளை Word doc attachment அனுப்ப வேண்டாம். தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் ஜூன் முதல் வாரத்தில் மின்னஞல் மூலம் தெரிவிக்கப்படும்.

அன்புடன்,
குகன்

Friday, May 4, 2012

தேசிய விலங்கு : பாலா

ஒரு கவிதை நூலுக்கு அதிகம் பேர் அணிந்துரை எழுதிய பிரிவு என்று கின்னஸ் சாதனையில் இருந்தால் கண்டிப்பாக இந்த நூலை பரிந்துரை செய்யலாம்.

வைகோ
பழ.நெடுமாறன்
காசி ஆனந்தன்
அறிவுமதி
சீமான்
வே.ஆனைமுத்து
கொளத்தூர் மணி
தியாகு
வ.கௌதம்
பாரதி கிருஷ்ணகுமார்
மற்றும்
நக்கீரன் கோபால்

- என்று 11 பேர் அணிந்துரை எழுதியுள்ளார்கள். கவிதைகளை விட அணிந்துரை படிக்கவே அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆண்டு மலர் படிக்கும் எண்ணம் தொற்றிக் கொள்கிறது. அதே சமயம் எந்த கவிதையும் குறை சொல்லுவதற்கு இல்லை.

பிரபாகரனின் அட்டைப்படம், தலைப்பும் இந்த கவிதை நூலை வாசிக்க வைத்தது. நக்கீரனின் அவ்வபோது ‘நச்’ கவிதைகளில் பாலா எழுதியுள்ளார். அதன் பிரபதிபலிப்போ என்னவோ ஒவ்வொரு கவிதைகளும் ‘நச்’ என்று ஐந்து, ஆறு வரிகளில் எழுதியுள்ளார்.

முன்னொரு காலத்தில்
முறத்தால்
புலி விரட்டிய
தமிழச்சி…
இன்று புலியாகிவிட்டாள்…!

ஈழ கனவு சிலருக்கு பேச்சாகவும், வீரமாக வரும்... தோழர் பாலா கவிதையாக வந்துள்ளது. கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய ‘பிணம் தின்னும் தேசம்’ ஈழ கவிதை நூலுக்கு பிறகு நான் வாசித்த ஈழ கவிதை நூல் இது தான்.

தமிழர்களின் ஒற்றுமையின்மை ஒற்றுமையின் சின்னமான காக்கை வைத்தே சொல்லியிருக்கிறார்.

காக்கைகள்
காலி செய்து விடும்
தமிழகத்தை விட்டு,
ஒற்றுமையில்லாத
தமிழனை பார்த்து
ஒரு வேளை நாமும்
கெட்டுப் போவோம் என்று… !

இனப்படு கொலையில் ராஜபக்சே ஹிட்லருக்கு குருவாக இருக்கிறார் என்பதை இந்த வரி கவிதைகள் சொல்லும்.

இனவெறியில்
ஹிட்லருக்கு கொடுக்கலாம்
ராஜபக்சே
பட்டம்…!

ஹிட்லரும் வல்லரசு உதவியோடு இனப்படு கொலை செய்திருந்தால் அவருக்கு இந்த உலகம் கதாநாயகன் பட்டியலில் சேர்த்திருக்கும். இன்று ராஜபக்சேவுக்கு தெரிந்தது ஹிட்லருக்கு தெரியாமல் போனது.

கள்ளத்தோனி இறந்த உயிர்களை எட்டு வார்த்தை கவிதையில் உருக்கமாக சொல்லியிருக்கிறார் பாலா.

படகுகளில்
சில சமயம்
சவாரி
பல சமயம்
சமாதி…!

ஒரு முறை வனப்புலி அழிந்து வருவதை பற்றின ஆவணப்படம் ஒன்று அறிவுப்பு பார்த்தவும், என் நண்பர் ஒருவர் ‘விடுதலைப் புலிகள்’ பற்றின படமா ? என்று கேட்டார். இந்த கேள்வி கேலியாக இருந்தாலும், அதனுள் ஒழிந்து இருக்கும் உண்மை எவ்வளவோ இருக்கிறது.

வனப்புலிகளுக்காக
வருந்தும் தேசமே
எம்
இனப்புலிகள்
அழிப்பிற்கு மட்டும்
உன் துப்பாக்கி
உதவியோ ?

காட்டில் மான் வேட்டை அனுமதியில்லை. புலிகளை கொன்றால் சட்டப்படி குற்றம். கடலுக்கு மீன் பிடிக்க 45 நாட்கள் தடைக்கூட உள்ளது. ஆனால், மூன்று வருடங்களாக இடைவேளை இல்லாமல் ஈழ தமிழர்கள் கொடுமைப்படுத்து வருதை மட்டும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழர்கள் !!!

மனிதர்கள் மதம் மாறும் மத்தியில் கடவுளை மதம் மாற்றியது போன்ற கற்பனையை கண்டிப்பாக பாராட்டலாம்.

கண்ணை மூடிக்கிடக்கும்
புத்தனே !
கண்களைத் திற
உன்னை
யுத்த மதத்திற்கு மாற்றிவிட்டார்கள்

அதிக பக்கங்கள் கொண்ட அணிந்துரையும், விலையும் மட்டுமே என்னை முகம் சுழிக்க வைத்தது. மற்றப்படி இந்த கவிதைகளை அரை மணி நேரத்தில் வாசித்துவிடலாம். ஒவ்வொரு கவிதைகளும் ஈழ உணர்வை பதிவு செய்ததோடு இல்லாமல் வாசகர்களையும் உணர வைத்திருக்கிறார்.

***
நூல் விபரம் :
 
தேசிய விலங்கு
பாலா

பக். 62, விலை. ரூ.60/-
விசை பதிப்பகம்
98652 80440

Friday, April 27, 2012

கல்லூரி காதல் - டைரிக்குறிப்பு !!

ஒவ்வொருவனின் வாழ்க்கையில் மறக்க முடியாத புத்தகம் இருக்கும். கருத்தும், குணத்திற்கும் அந்த புத்தகம் மாறுபடலாம். ஆனால், எல்லோரும் மிக முக்கியமாக, பொக்கிஷமாக பாதுகாத்து வரும் ஒரு புத்தகம் ஒன்று உண்டு. அது, அவரவர் டைரி தான்.

பழைய புத்தகங்களை எல்லாம் எடுத்து வைக்கும் போது, கல்லூரியில் நான் எழுதிய ‘காதல் சோகப் பாடல்’ கண்ணில் பட்டது. என் நண்பன் ஒரு ட்யூன் சொல்ல, அதற்கு எதோ எழுதியிருக்கிறேன். நண்பன் சொன்ன ட்யூன் ஞாபகமில்லை. காதலை அதிகம் ரசிக்கும் பருவம் கல்லூரி காலங்கள் என்பது என் பழைய டைரிக்குறிப்புகளில் தெரிகிறது.

எல்லா உணர்வுகளை விட காதல் மட்டும் எப்படி கை ரேகைப் போல் உடம்பில் ஒட்டிக் கொள்கிறது என்று புரியவில்லை.

***


மனதென்பது அவளிலுள்ளது
காதலென்பது என்னிலுள்ளது
ஈருயிராலும் ஒர் காதல்
ஒருயிரானாலும் உயர்வனாது காதல்
காதலை நான் தான் சுமந்தேன்
கருத்தரிக்க சொன்னால்
உயிர் துறப்பேன்
(மனதென்பது



வந்தது வரட்டும் என்பதல்ல காதல்
வாழ்க்கையோடு வாழ தேவை காதல்
வருபவர்கள் எல்லாம் செய்வதல்ல காதல்
வலிக் கொடுத்தவளை செய்வது தான் காதல்

புதிரா ! புனிதாமா புரிவதில்லை
பலர் சொன்னாலும் விளங்குவதில்லை
தியாகம், துரோக,
தர்மம் , கர்மம்

எல்லாம் இருப்பது காதல் தான்...
காதல் தான்... காதல் தான் !
(மனதென்பது



ஓடி ஒதுங்கியவர்களை எல்லாம் விரும்பாது காதல்
விரும்பியவர்களை தேடி தேடி அழையும் காதல்
ஒப்பனை செய்தாலும் வருவதில்லை காதல்
வெற்றி தோல்வியிலும் இருப்பது காதல்

தொடங்கியது தொடங்கியது தான்
கல்லறை வரை தொடர்வது தான்
சொர்க்கம், நரகம்,
ஜனனம், மரணம்

எல்லாம் இருப்பது காதல் தான்
காதல் தான்... காதல் தான்...

(மனதென்பது


Wednesday, April 25, 2012

ஹைக்கூ கவிதைகள் - 11

சேவை செய்ய
அதிகம் தேவை
மருத்துவருக்கு பணம் !

**

உயிருக்கு ஆபத்தான
பகுதியில் வாழும் மக்கள்
இடிந்தக்கரை !

**

ஆற்று நீர் குடித்தும்
தாகம் அடங்கவில்லை
சூரியனுக்கு !

**

மாநிலத்தில் ஓர் கொள்கை
ஊருக்கு ஓர் பேச்சு
கம்யூனிஸ்ட் கட்சி

**

கடலுக்கு மாற்று நிறம்
இரத்த சிவப்பு
தமிழ் மீனவர்கள் !

**
ஆயுளை குறைக்கிறது
நாம் சாப்பிடும்
உணவு பொருள்

**

எந்த உறவும்
உண்மையானதில்லை
டி.வி மெகா தொடர்

LinkWithin

Related Posts with Thumbnails