உடலை புண்ணாக்கி கொண்டோம்
புண் பட்ட மனதை
புகைவிட்டு ஆற்றிய போது !
நான் அடிமையில்லை
சொன்ன நடிகனின் கையில் சிகரெட்
நான் சிகரெட் பிடித்ததில்லை
பண்ணீரெண்டாம் படிக்கும் வரை
பெருமையாய் சொல்லும் மனிதன் !
முரணான இயங்குகிறது புகையிலை உலகம் !
ஒவ்வொரு சிகரெட் பிறக்கும் போது
ஒரு மனிதனின் ஒரு வருட ஆயுள் இறக்கப்படுகிறது
ஒவ்வொரு புகையிலை எரியும் போது
பத்து மனிதனின் ஆயுள் கேள்விக்குறியாகிறது !
காதலியின் எத்தனை முத்தங்கள் இழந்தையோ
இந்த சிகரெட் புகையினால் !
மழலை மொழிகள் தவிற்த்தாய்
புகையிலை நாற்றத்தினால் !
உனக்கு நீயே கொல்லி வைத்துக் கொண்டாய்
சிகரெட் பற்ற வைத்ததினால் !
உன் ஆண்மை அழியும் என்று தெரியாமலே
புகையிலையை நண்பனாக்கி கொண்டாய் !
உன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை
இழக்க வைக்கும் புகையிலையை இழந்தால்
உலகம் உனக்கு நண்பனாகும் !!!
***
நேற்று (31.5.12), புகையிலைக்கு எதிராக மின்னல் தமிழ்ப்பணி அமைப்பினர் நடத்திய "புகையிலைக் கேட்டை ஒழி !" என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தினர். அந்த கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை.
கிட்டதட்ட நாற்பது கவிஞர்கள் மேல் கவிதை வாசித்தனர். இந்த நிகழ்ச்சி இன்று (1.6.12) மாலை 5 மணிக்கு எஸ்.ஆர்.எம் வானொலியான 90.4 FM ல் கேட்கலாம்.
3 comments:
நல்ல கவிதை. இந்த நேரத்திற்கு மிகவும் அவசியம்.
//ஒவ்வொரு சிகரெட் பிறக்கும் போது
ஒரு மனிதனின் ஒரு வருட ஆயுள் இறக்கப்படுகிறது
ஒவ்வொரு புகையிலை எரியும் போது
பத்து மனிதனின் ஆயுள் கேள்விக்குறியாகிறது !//
இதில் முக்கியமான நகைமுரண் என்னவென்றால் இந்த புகையிலை கம்பெனிகளின் பங்குகளில் பெறுவாரியான முதலீடு செய்துள்ளவை LIC போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களே.
பிரயோசனமான கருத்துக்களை உள்ளடக்கிய கவிதை..மிக அருமை ..பகிர்வுக்கு நன்றி சகோ
நல்ல வரிகள் !
Post a Comment