வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, June 15, 2012

உலக சினிமா - Departures (2008 - ஜப்பான் மொழி)

 எல்லோருக்கும் விரும்பும் வேலை அமைந்து விடுமா ? பிடித்த வேலை அதிகம் பணம் கிடைக்காததால் கிடைத்த வேலை செய்பவர்கள் தான் அதிகம். விரும்பாத மனைவியுடன் வாழ்வுவது போல் தினமும் வேலை செய்ய வேண்டும். கள்ள காதல்ப் போல் நாம் விரும்பிய வேலையை எப்போதாவது செய்து பார்க்கலாம். அதை முழு நேரமாக மாற்றிக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். தலை விதியே என்று கிடைத்த வேலை, எப்படி ஒரு மனிதனை மனதை மாற்றுகிறது. அந்த வேலை எப்படி விரும்ப தொடங்குகிறான் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் படம் தான் " Departures".டைகோ ஒரு செல்லோ கலைஞன். அவனது இசைக் குழு கலைக்கப்பட்டதால் அவனுக்கு வேலை பரிபோகிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு தான் அவன் அம்மா இறந்தார். அப்பா சிறு வயதில் தங்கள் தேநீர் கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் ஓடிவிட்டார். அவரின் முகம் கூட டைகோவுக்கு நினைவில் இல்லை. மனைவுடன் தனிக்குடித்தனம் நடத்துபவன். அடுத்த என்ன செய்வதறியாமல் தவிக்கிறான்.

“Assiting Departures" வேலை காலியிருப்பதாக செய்திதாளில் பார்த்து நேர்முக தேர்வுக்கு செல்கிறான். சசாகி என்பவர், "நீ கடுமையாக உழைப்பாயா ?" என்று கேட்கிறார். டைகோ செய்வேன் என்று சொல்ல, அவனுக்கு வேலை கிடைக்கிறது. வேலை கிடைத்த பின்பு தான் தெரிகிறது, இறந்த உடலுக்கு அலங்காரம் செய்து சவப்பெட்டியில் வைத்து, வழியனுப்பி வைக்கும் வேலை என்று. இறந்த கோழியை பார்த்தாலே வாந்தி எடுக்கும் டைகோ, இறந்த உடலோடு எப்படி வேலை செய்ய போகிறோம் என்று அஞ்சுகிறான். தனது மனைவியிடம் உண்மையை சொல்லாமல், நிகழ்ச்சி அமைப்பாளருக்கு உதவியான வேலை என்கிறான்.

முதல் நாளில், பிணங்களுக்கு எப்படி சுத்தம் செய்யப்படுகிறது என்ற விடியோ படத்திற்கு டைகோவை பிணமாக இருக்க சொல்லுகிறான் சசாகி. அடுத்து இறந்து இரண்டு வாரம் கலித்து கண்டு பிடிக்கபட்ட வயதான பெண்ணின் பிரேதத்துக்கு தனது முதலாளி சசாகியுடன் வருகிறான் டைகோ. இரண்டு வார பிரேதத்தை பார்த்ததும் வாந்தி எடுத்து எடுக்கிறான். சசாகி அவனை விடுப்பு எடுத்துக் கொள்ள சொல்கிறார்.

டைகோ தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளும் பொது குளியலறையில் குளித்து ஓய்வு எடுத்துக் கொள்கிறான். அதை, யமஷிட்டா என்ற வயதான பெண்மனி நடத்தி வருகிறாள். அவளது மகன் டைகோவின் பள்ளி நண்பன். ஒரு நாள் அவனது முதலாளி, சசாகி செல்ல முடியாததால் டைகோ சென்று பிரேதத்திற்கு அலங்காரம் செய்து சவப்பெட்டியில் அடைக்கிறான். அங்கு உறவினர்களின் கண்ணீர் அவனை மிகவும் பாதிக்கிறது. தொடர்ந்து பல மரண வீடுகளும், உறவினர்களின் நெகிழ்ச்சியான வார்த்தைகளும் அவன் இந்த வேலை மீது வைத்திருந்த கசப்பு தன்மை மறக்கடிக்கிறது. ஆனால், டைகோ செய்யும் வேலை அவன் மனைவிக்கு தெரிந்து அவனை விட்டு பிரிகிறாள். அவனது பள்ளி நண்பன் அவனிடம் வேறு நல்ல வேலை தேட சொல்கிறான். அவனின் குடும்பத்திடம் பேச கூட அவன் நண்பன் அனுமதிக்கவில்லை. 

நாட்கள் செல்கிறது. டைகோவின் மனைவி திரும்பி வருகிறாள். அவள் கற்பமாக இருப்பதை சொல்கிறாள். அந்த சமயம் போது குளியளறை நடத்தும் யமஷிட்டா இறந்த செய்தி வருகிறது. தன் மனைவியுடம் டைகோ செல்கிறான். அங்கு யமஷிட்டாவுக்கு உயிருடன் தூங்குவது போல அழகாக அலங்காரம் செய்கிறான். இறந்த தன் அம்மாவை டைகோவின் நண்பன் கண் கலங்கி அவனுக்கு நன்றி சொல்கிறான்.

கர்பினியான தன் மனைவியை ஆறங்கரையில் தன் தந்தையுடன் வந்ததை சொல்கிறான். மொழிகள் தெரியாத காலத்தில் கற்களை கொண்டு தான் பேசுவார்கள். மென்மையான கற்கள் கொடுத்தால் சந்தோஷமாக இருப்பதாகவும், கரடுமுரடான கற்கள் கொடுத்தால் கவலையாக இருப்பதாகவும் பொருள். சிறு வயதில் தன் அப்பாவுடன் கற்களை பரிமாரி விளையாடுவதை தன் மனைவியிடம் சொல்கிறான். வருடத்திற்கு ஒரு முறை தனக்கு கல் அனுப்புவதாக சொன்னார். ஆனால், இது வரை அவர் அனுப்பவில்லை. அவன் முகம் எனக்கு நினைவுக்கு வரவில்லை என்கிறான். 

ஒரு நாள் டைகோ வேலைக்கு சென்றதும் தன் அப்பா இறந்த தகவல் தெரிந்துக் கொள்கிறான். முதலில் செல்ல மறுக்கும் டைகோ பிறகு செல்ல சம்மதிக்கிறான். சசாகி தன்னிடம் இருக்கும் ஒரு சவப்பெட்டி எடுத்து செல்ல சொல்கிறான். அங்கு அப்பாவின் உடலை இறுதி காரியம் செய்பவர்கள் அஜாக்கிரதையாக கையாள, டைகோவுக்கு கோபம் வருகிறது.

தன் அப்பாவின் உடலை அவனே தயார் படுத்துவதாக சொல்கிறான். அப்போது தான் தன் அப்பாவின் முகத்தை பார்க்கிறான். தன் அப்பாவின் உடலை சுத்தம் செய்ய கை எடுக்கும் போது, அவர் கையில் மென்மையான கல் இருப்பதை பார்க்கிறான். சிறு வயதில் அப்பாவிடம் விளையாட்டிய வாலிப முகம் நினைவுக்கு வருகிறது. கர்பினியான தனது மனைவியின் வயிற்றில் மென்மையான கல்லை வைக்கிறான்.

விருப்பமில்லாத வேலையை எப்படி ரசித்து செய்ய தொடங்குகிறான் என்பதை டைகோ பாத்திரத்தின் மூலம் காட்டியுக்கிறார் இயக்குனர் யோஜிரோ டகிடா ("Yōjirō Takita "). அந்த பாத்திரம் மனநிலை மாறுவதற்கான காட்சிகள் அமைத்திருப்பது மிகவும் நெஞ்சை தொடுவதாக உள்ளது.


தீண்டப்படாத அல்லது சமூகத்தில் மதிக்கபடாதவர்களாக தான் இன்று வரை வெட்டியான் வேலை செய்பவர்களை பார்த்து வருகிறார்கள். கண்ணீரும், மரணமும் தினமும் பார்த்து வாழ்ந்துக் கொண்டு இருப்பவர்கள் தங்கள் மனதை எப்படி பாதித்திருக்கும் என்பதை ஒரு நாள் நாம் யோசித்திருப்போமா ? அவர்கள் அந்த வேலையை விரும்பி செய்வார்கிறார்களா ? என்று ஒரு முறையாவது நினைத்து பார்த்திருப்போம். ஒரு வேலை நாமும் நமக்குள் இந்த வேலையை விரும்பி செய்கிறோமா என்ற சந்தேகம் இருக்கிறாதா ?

1 comment:

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

LinkWithin

Related Posts with Thumbnails