வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 29, 2011

வானம் (வேதம்) - திரைவிமர்சனம்

ஐந்து பேர் கதை தொடங்கியதுமே 'மல்டி செக்மன்ட் ஸ்டோரி டெல்லிங்' பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் புரிந்துக் கொள்ள முடிந்தது.

இசை உலகில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று அம்மா சொன்ன இராணுவ வேலையை நிராகரித்து தன் காதலி, நண்பர்களுடன் ஹைதிரபாத் வருகிறான் மனோஷ் மன்சு. சுயநலவாதியான அவன் ஒரு சர்தாஜி உதவி செய்ததும் பொது நலவாதியாக மாறுகிறான். விபத்தில் மாட்டி தவிக்கும் ஒரு கர்ப்பி பெண்ணுக்கு உதவ தன் வண்டியில் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்.

கந்து வட்டிக்கு பணம் வாங்கி அசலை கொடுத்த பிறகும், வட்டி கட்டிக் கொண்டு இருக்கும் நாகைய்யாவின் பேரனை கந்து வட்டிக்காரன் தூக்கிச்சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்த தன் பேரனை மீட்க தன் மருமகளின் கிட்னி விற்க ஹைதிராபாத் வருகிறான். கிட்னி கொடுத்த மருமகள் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

இந்துக்களால் கருவிலே தன் குழந்தை இழந்து இந்தியாவை விட்டு ஷார்ஜாவுக்கு செல்ல திட்டமிடுகிறான் ரஹிம். முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி என்று கருதும் போலீஸ்க்காரன், அவன் உறவினர்களின் தீவிரவாதி ஒருவனை கைது செய்யும் போது ரஹிம்மை சேர்த்து செய்கிறான். போலீஸிடம் இருந்து தப்பிக்கும் காலில் குண்டடி பட்டு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறான்.
விபச்சாரம் செய்யும் சரோஜா, தன் திருநங்கை தோழியுடன் விபச்சார விடுதியில் இருந்து தப்பித்து ஹைதிராபாத்துக்கு வருகிறாள். ஆனால், அவளை வைத்து தொழில் செய்த பெண்ணின் ஆட்கள் சரோஜாவை விடாமல் துரத்துகிறார்கள். அவர்களிடம் தப்பிக்கும் போது தன் திருநங்கை தொழிக்கு கத்தி குத்து பட, அவளை அழைத்து கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு வருகிறாள் சரோஜா.

யாரை பற்றி கவலைப்படாமல் தன் காதலி தான் உலகம் என்று வாழுகிறாள் கேபிள் ராஜூ. அவளிடம் பணக்காரனாக நடித்து, இரவு விருந்துக்கு பெரிய ஹோட்டலில் இரண்டு பாஸ் வாங்கி வருவதாக சொல்கிறான். ஒரு பாஸ் 20,000 ரூபாய் என்று இருக்க, 40,000 ரூபாய்யை மருமகள் கிட்னியை விற்ற நாகைய்யாவிடம் பணத்தை திருடுகிறான். இறுதியில் மனம் மாறி, அரசாங்க மருத்துவமனையில் நாகைய்யாவிடம் பணத்தை கொடுக்க வருகிறான்.

ஐந்து கதாப்பாத்திரங்கள் எவ்வேறு இடத்தில் தொடங்கி ஒரு இடத்தில் சந்திக்கும் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நான்கு பேர் முற்றுகை ஈடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.

ஆங்கில படங்களில் Babel, 21 Grams போன்ற வெற்றி படங்கள் இந்த திரைக்கதை யுக்தியை தான் பயண்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் Babel நான்கு நாடுகளில் நடக்கும் கதை இறுதி காட்சி ஒரே புள்ளியில் வந்து முடியும். ஹாலிவுட்டில் பயன்படுத்திய திரைக்கதை யுக்தியை நம் நாட்டுக்கு ஏற்ற வாறு திரைக்கதை அமைத்திருப்பது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


தமிழ் படத்தில் கூட இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பதை பார்த்து விடலாம். தெலுங்கு படங்களில் மிகவும் அபூர்வம். அப்படியே இரண்டு நாயகர்கள் என்றால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நடிகள் தான் நடிப்பார்கள். அல்லு அர்ஜூன், மனோஜ் மன்சு போன்ற நடிகர்கள் இணைந்து நடிப்பது மிக விஷயம். வில்லனை விரல் நீட்டி மிரட்டுபவர்கள். நூறு பேர் வந்தாலும் அடித்து உதைக்க கூடிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்கள். 'கேபிள் ராஜூவாக அல்லு அர்ஜூனும், விவேக் சக்கரவர்த்தியாக மனோஜ் மன்ச்சுவும் வாழ்ந்திருப்பது ‘மாசாலா’ படம் பார்த்தவருக்கு சாபவிமோச்சனம் கிடைத்தது போல் இருந்தது. ஒரு தீவிரவாதியிடம் இருந்து பல ஆயிரம் பேர் காப்பாற்ற இரண்டு நாயகர்கள் போராடுவதும், அதற்கான முடிவை தேர்ந்தெடுப்பதும் தெலுங்கு படங்களில் வராத முடிவு. ( இரண்டு 'மாஸ்' ஹீரோக்கள் சாதான குடிமகனாக நடித்திருப்பது என்னால் இன்னும் நம்பமுயவில்லை. )கண்ணில் அதிக மைய்யும், லோ ஹிம் புடவையும், பின் முதுகு தெரியும் படியான ஜாக்கெட்டும் என்று அசல் விபச்சாரியாகவே வருகிறார் அனுஷ்கா. தன் திருநங்கைக்காக டாக்டரிடம் கெஞ்சும் போது, " உங்க கூட எத்தன வாட்டி வேணும்னாலும் படுகிறேன். அவள காப்பாத்துங்க !" என்று கெஞ்சும் போது கதாப்பாத்திரம் மீறி அவள் மேல் பரிதாபப்பட வைக்கிறது.

வசனங்கள் ஒவ்வொன்றும் ரொம்ப ஷார்ப். குறிப்பாக ஒரு இடத்தில் கூட பன்ச் டைலாக் இல்லை.

கிட்னி விற்க செல்லும் தன் மருமகளிடம் நாகைய்யா, " ஏழைகளுக்கு இருக்குற பெரிய சொத்தே அவங்க உடம்பு தான்" என்று சொல்லும் இடமாகட்டும்,

போலீஸ் ஸ்டேஷனில் அனுஷ்கா, " நாங்க உடம்பில இருக்குற துணிய அவுத்து போட்டு சம்பாதிக்கிறோம், நீங்கள் துணியப்போட்டு சம்பாதிக்கிறீங்க" என்ற இடமாகட்டும்,

ஷார்ஜா செல்லும் ரஹிம்மிடம் அவர் தந்தை, " நிறைய முஸ்லீம் இருக்குற இடத்துல இந்து பயப்படுறதும், நிறைய இந்துக்கள் இருக்குற இடத்துக முஸ்லீம் பயப்படுறதும் சகரஜம். மாப் சைக்காலஜி" என்று சொல்லும் இடம் மிக அருமை.

அதுவும் இறுதி காட்சியில், அல்லு அர்ஜூன் மனோஜிடம் " உங்க பெயர் என்ன பாஸ் ?" என்று கேட்கும் இடம் கண்ணில் நீர் வராத குறை.

அனுஷ்கா , சரண்யா ட்ரெக்கை தெலுங்கில் இருந்து அப்படியே எடுத்திருக்கிறார்கள். தெலுங்கில் அல்லு அர்ஜூனா செய்த பாத்திரத்தை சிம்புவும், மகேஷ் மஞ்சு செய்த பாத்திரத்தை பரத்தும், முஸ்லீம் மகேஷ் செய்த பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்ஜூம் செய்திருக்கிறார்கள்.

தெலுங்கில் இந்த படத்தை பார்த்ததும் ஒரு மணி நேரம் எதைப் பற்றியும் என்னால் யோசிக்க முடிவில்லை. தமிழில் அந்த பாதிப்பை கெட்டுக்காமல் எடுத்தால் நன்றாக இருக்கும்.

படம் பார்த்து கேபிள் சங்கர் சொன்ன பிறகே படத்தை பார்ப்பேன்.

Thursday, April 28, 2011

இத்தாலி.....முசோலினிக்கு முன்பு !

இத்தாலி... இந்தியாவை போலவே முன்று புறமும் கடல் நீர். 116,346.5 சதுரங்க நிலப்பரப்பு கொண்ட தேசம். அதன் தலைநகரம் ரோம். இவை எல்லாம் உலக வரைப்படத்தில் நாம் அறிந்துக் கொள்ளும் செய்தி. இன்று உலகவரைப்படத்தில் நாம் பார்க்கும் இத்தாலி இரண்டாம் உலக யுத்தத்து பிறகுகே உருவானது. ஆனால், அதற்கு முன்பு இத்தாலி சிறு சிறு நாடுகளாக தான் பிரிந்து இருந்தன.

வெனிடியா, லொம்பர்டி, பர்மா, மொடேனா போன்ற இடங்களை ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி நாடுகள் அதிகாரம் செலுத்தி வந்தது. அதே போல் மத்தியில் இருக்கும் பாபஸ் ஸ்டேஸ் மற்றும் ரோம் இடங்கள் போப் பாண்டவர் கட்டுப்பாட்டில் இருந்தது. தெற்கு பகுதியில் இருக்கும் இடங்களை சிசிலி மன்னர் ஆட்சி கீழ் இருந்தது. இப்படி இத்தாலியை ஒவ்வொருவரும் வெவ்வெறு விதமாக ஆட்சி செய்து வந்தனர். மக்களும் தலை விதியே என்று தான் வாழ்ந்து வந்தார்கள். யாரையும் எதிர்த்து ஒருவர் கூட பேசவில்லை. இச்சமயத்தில் தான் ஒரு புரட்சி பிறந்தது.... இத்தாலியில் அல்ல... பிரான்ஸ்யில்....!


1789ஆம் ஆண்டு பிரான்ஸ்யில் ஃபிரென்ட்ச் புரட்சி தொடங்கிய காலக்கட்டம். பிரென்ட்ச் புரட்சியில் பிரான்ஸ் தனி நாடாக உருவாகி , மக்கள் ஆட்சி மலர்ந்தது. ஃபிரான்ஸ் மக்கள் சந்தோஷத்தை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் கொண்டாட்டம் இத்தாலி மக்களை ஏங்க வைத்தது. தங்கள் நாட்டிலும் மக்கள் ஆட்சி வர வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் எப்படி....?

ஒரு புறம் போப் பாண்டவரின் கட்டுப்பாடு, மறு புறம் சிசிலி மன்னரின் ஆட்சி, எல்லாவற்றிக்கும் மேலாக ஆஸ்திரியாவின் ஆதிக்கம்..... இப்படி ஒருவர் இடமிருந்து தப்பித்தாலும் இன்னொருவர் அந்த இடத்தை நிரப்பிவிடுவார். இத்தாலியில் மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்றால் பிரிந்து இருக்கும் எல்லா நாடுகளும் ஒருங்கிணைக்க வேண்டும். நாடுகளை ஒருங்கிணைத்தால் மக்கள் ஒன்றாக முடியும். மக்கள் ஆட்சி கொண்டு வருவவதற்கு சுலபமாக இருக்கும். நாடுகள் ஒருங்கிணைத்து ஒரு குடைக்குள் கொண்டு வருவது என்பது இத்தாலி மக்களுக்கு கனவாக தான் இருந்தது. இதை நினைவாக்க பல இயக்கங்கள் செயல் பட்டு வந்தன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் புரட்சியாளர் கரிபால்டி இயக்கத்தை சொல்ல வேண்டும். மூலைக்கு ஒரு புறம் நாடுகளை இணைக்க பல இயக்கங்கள் உருவனதோடு மட்டுமில்லாமல் பல புரட்சி செயல்களும் வெடிக்க உருதுணையாக கரிபால்டி இருந்தார்.இத்தாலியை பெரும் பகுதியை ஆஸ்திரிய அரசு ஆண்டு வந்ததால் இந்த புரட்சி இயக்களின் செயலை ஆஸ்திரிய அரசு விரும்பவில்லை. அதே சமயம் அங்காங்கே வெடிக்கும் புரட்சிகளையும் ஆஸ்திரிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மத்தியில் இருக்கும் பாபல் ஸ்டேஸ், ரோம் ஆண்டு வந்த போப் பாண்டவரின் உதவியை நாடினார்கள். ஆஸ்திரிய ஆட்சி பகுதியில் நடக்கும் செயல்கள் தன் நாட்டிலும் நடக்கலாம் என்பதை போப் உணர்ந்தனர். அதுமட்டுமில்லாமல் இத்தாலி நாடுகள் ஒருங்கிணைத்தால் கத்தோலிக்கர்களை பாதிக்கும் என்று நினைத்த போப் ஆஸ்திரிய அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆஸ்திரிய மற்றும் போப் திட்டங்களால் புரட்சியாளர்களின் முயற்சி எல்லாம் முறியடிக்க பட்டுக் கொண்டு இருந்தது. புரட்சியாளர் கரிபால்டி நாடு கடத்தப்பட்டார்.

சில ஆண்டுகள் பிறகு நாடுகளை ஒருங்கிணைக்கும் எண்ணம் செனிடியாவை ஆண்ட விக்கடர் ஈமானுவேலுக்கும் வந்தது. தன் எண்ணத்தை நிறைவேற்றும் ஒருவரை கவர்னராக அமர்த்த முடிவு செய்தார். ஈமானுவெல் எதிர்பார்த்த தகுதியெல்லாம் கொண்ட ஒருவர் கிடைத்தார். அவர் பெயர் கேவ்வர். ஈமானுவேல், கேவ்வர் பிரிந்து இருக்கும் நாடுகளை ஒரு நாடாக்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாலும் அது சுலபமான திட்டமில்லை என்பதையும் உணர்ந்தனர். போப் பாண்டவரை தாக்கினால் பிரன்ட்ச் அரசு போருக்கு வரும். மத்தியில் இருக்கும் நாடுகளை கைப்பற்றாமல் சிசிலி நாட்டை தாக்க முடியாது. அதனால், இருவரும் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர். இவர்கள் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒரு யுத்தத்தின் மூலம் அமைந்தது.

1854யில் 'கிரமியன் யுத்தம்' தீவிரமாக நடந்துக் கொண்டு இருந்த சமயம். துருக்கிக்கும், ஃபிரன்ட்சு - இங்கிலாந்து கூட்டணிக்கும் யுத்தம் உச்சக் கட்டத்தில் நடந்துக் கொண்டு இருந்தது. இச்சமயத்தில் செனிடியா ஃபிரன்ட்சு கூட்டனிக்கு ஆதரவாக யுத்த களத்தில் தன் படைகளை அனுப்பியது. மிகவும் பரப்பரபாக நடந்த யுத்தத்தில் ஃபிரான்ஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால், ஃபிரான்ஸ் மன்னரான மூன்றாம் நெப்போலியனுக்கும், கேவ்வருக்கும் நெருக்கம் அதிகமானது. இவர்களுக்குள் ஒரு ரகசிய ஓப்பந்தமும் கையெழுத்தானது. செனிடியாவுக்கு எதிராக ஆஸ்திரியா போர் தொடுத்தால் செனிடியாவுக்கு ஆதரவாக ஃபிரன்ட்சு அரசு போரில் குதிக்கும். ஃபிரன்ட்சு ஆதரவு கிடைத்து விட்டது... அடுத்தது திட்டத்திற்கு தன் காய் நகர்த்தினார் கேவ்வர். நாடு கடத்தப்பட்ட கரிபால்டி தன் நாட்டிற்கு அழைத்தார். அழைத்ததோடு மட்டுமில்லாமல் அவருக்கு தன் இராணுவத்தில் ஜென்ரல் பதவியையும் கொடுத்தார். அது மட்டுமா.... புதிய இராணுவம் அமைத்துக் கொள்ள பொருப்பையும் அவருக்கு கொடுத்தார் கேவ்வர். தன்னை போல் கரிபால்டியும் எல்லா நாடுகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று புரட்சி செய்ததற்காகவே அவருக்கு இத்தனை பொருப்புக்கள் கிடைத்தது.

இராணுவ ஜென்ரல் பொருப்பேற்ற கரிபால்டி புதிய இராணுவ அமைக்கும் பணியில் ஈடுபட தொடங்கினார். தனக்கு உதவியாக ‘மாஜினி’ என்ற புரட்சியாளரை தன்னுடன் இணைத்துக் கொண்டு இராணுவத்தை அமைத்தார். கேவ்வர் எதிர்பார்த்தது போல் ஆஸ்திரிய- செனிடியா யுத்தம் நடந்தது. கரிபால்டி, மாஜினி தலைமையில் செனிடியா இராணுவம் ஆஸ்திரியா இராணுவமுடன் யுத்தம் செய்த்தார்கள். பெரும்பாலான லம்பார்டி பகுதியில் செனிடியா இராணுவம் வெற்றி பெற்றுக் கொண்டு இருந்தது. இத்தாலிய புரட்சியில் மாஜினி ஆத்மாவாகவும், காரிபால்டி ஆயுதமாகவும், கேவ்வர் அறிவாகவும் இருந்தார்.

முன்பே நாம் பார்த்தது போல் செனிடியாவுக்கு ஃப்ரான்ஸ் அரசு உதவுவதாக கூறின. அதனால், மூன்றாம் மன்னர் நெப்போலியன் தலையிட்டு லம்பார்டி பகுதியை செனிடியாவுக்கு வாங்கி கொடுத்தார். லம்பார்டி மக்கள் செனிடியாவுடன் இணைந்ததை கொண்டாடினர். கவர்னர் கேவ்வரின் முதல் திட்டம் மிக பெரிய வெற்றி. இனி அடுத்த திட்டம் போட தொடங்கினர்...!

லம்பார்டி செனிடியாவுடன் இணைந்ததை கண்ட பிற இத்தாலி நாடுகளும் செனிடியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்பினர். ஒற்றர்கள் மூலம் இதை உணர்ந்த கேவ்வர் மற்ற நாடுகளை தங்களுடன் இணைக்க யுத்தமில்லாமல் புது மாதிரியான திட்டம் செய்தார். மற்ற நாட்டு தங்களுடன் இணைய விரும்புவதாக ஆஸ்திரிய அரசு தெரிவித்தார். ஆஸ்திரிய அரசு இதை எதிர்த்தது. அடுத்தது போர் என்று தான் கேவ்வரும் எதிர்பார்த்தார். ஆனால், ஃப்ரான்ஸ் செனிடியாவுக்கு பக்க பலமாக இருப்பதை உணர்ந்த ஆஸ்திரிய அரசு மக்கள் விரும்பினால் செனிடியாவுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றது. கேவ்வரும் மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார். பெரும்பாலான மக்கள் தங்கள் நாடு செனிடியாவுடன் இணைக்க விரும்புவதாக வாக்களித்தனர். இறுதியில் ரோம், சிசிலி, வெனிடிய நாடுகளை தவிர மற்ற பகுதிகள் எல்லாம் செனிடியாவுடன் இணைத்துக் கொண்டது. கத்தியின்றி ரத்தமின்றி கேவ்வர் தான் நினைத்ததை சாதித்தார். இதற்கு உதவியாக இருந்த ஃப்ரான்ஸ் அரசுக்கு தன் இடத்தில் ஒரு பகுதியை பரிசாக கொடுத்ததனர்.

சிசிலி நாட்டை கைப்பற்ற கரிபால்டி தலைமையில் செனிடியா இராணுவத்தை அனுப்பினார் கேவ்வர். ஆரம்பத்தில் இருந்தே செனிடியா படைகள் கையோங்கியே இருந்தது. கடும் எதிர் தாக்குதல் சிசிலி இராணுவத்திடம் இல்லாததால் கரிபால்டி எளிதாக வென்றார். இறுதில் சிசிலி நாட்டும் செனிடியாவுடன் இணைந்தது. இணைக்கப்பட்ட நாடுகளுக்கு புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிதாய் உருவான இத்தாலி நாட்டுக்கு இரண்டாம் விக்டர் ஈமானுவெல் மன்னராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தாலியை போல் பர்ஷியா ச்சான்ஸ்லர் பிஸ்மார்க்கும் பிரிந்து இருக்கும் ஜெர்மன் மாநிலங்ளை ஒன்று சேர்க்க நினைத்தார். ஜெர்மன் மாநிலங்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றால் பிஸ்மார்க் ஆஸ்திரியாவை வெல்ல வேண்டும். பிஸ்மார்க் எண்ணத்தை அறிந்த செனிடியா ஒடி சென்று அவருக்கு உதவியது. 1866 ஆம் ஆண்டு பர்ஷியா அரசுவுடன் இத்தாலி கூட்டணி அமைத்தது. வலுவான பர்ஷியா- இத்தாலி கூட்டணி ஆஸ்திரியா எதிராக யுத்தம் தொடங்கியது. இதிலும் இத்தாலி தரப்புக்கு தான் வெற்றி. வெற்றிக்கு பரிசாக செனிடியா வேண்டிய பகுதியை எடுத்துக் கொண்டது.

கேவ்வர், ஈமானுவெல் நினைத்ததை தொன்னூறு சதவீதம் அடைந்து விட்டார்கள். இன்னும் மிஞ்சி இருப்பது ரோம் மட்டும் தான். இத்தாலி படை பலத்துடன் ஒப்பிட்டால் ரோம் சிறு பூச்சி தான். ஆனால், ரோம் எதிராக இத்தாலி போர் செய்தால் ரோமில் இருக்கும் ஃப்ரான்ஸ் படைகளை தாக்க வேண்டியது இருக்கும். இதனால், ஃப்ரான்ஸ் - இத்தாலி உறவு பாதிக்கப்படும் என்று உணர்ந்த இத்தாலி யோசித்தது. இப்போதைக்கு மௌனமாக இருப்பதே நல்லது என்று இத்தாலி நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர். இத்தாலி எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பம் 1870ல் வந்தது.

ஃப்ரான்ஸ் அரசுக்கும், பர்ஷிய அரசுக்கும் யுத்தம் மேகம் மூண்டது. தனது இரண்டு கூட்டணி நாடுகளை சண்டை போடுவதை பார்த்து இத்தாலி கவலை படவில்லை. சமரசம் செய்து வைக்க கூட இத்தாலி முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக இந்த யுத்தத்தை பயன்படுத்தி கொண்டு இத்தாலி ரோம் நகரை கைப்பற்றியது. ஃப்ரான்ஸ் பர்ஷவுடன் யுத்ததில் தோல்வி பெற்றது இத்தாலிக்கு பெரும் லாபமாக அமைந்தது. ரோம்மை தன் தலை நகராக்க இத்தாலி மாற்றியது.பர்ஷியர்களின் தலைமையில் ஒருகிணைந்த ஜெர்மனியும் உருவானது. ஜெர்மனியும், இத்தாலியும் ஒரே காலக்கட்டத்தில் தான் ஒருகிணைக்கப்பட்டது. பிஸ்மார்க் கொண்டு வந்த பல திட்டங்களால் ஜெர்மன் மிக பெரிய தொழில்வலம் மிக்க நாடாக முன்னேறியது. ஆனால், விவசாய நிலங்கள் கொண்ட இத்தாலி எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆரம்பித்த இடத்திலே தான் இருந்தது. இத்தாலியில் எங்கும் பஞ்சம் தலை விரித்து ஆட்டி படைத்து கொண்டு இருந்தது. மக்கள் ஒவ்வொரு நாளும் போராடி கொண்டு தான் வாழ்ந்தார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில் 1883ஆம் ஆண்டு முசோலினி இத்தாலியில் பிறந்தார்.

Tuesday, April 26, 2011

புத்தக இணையதளம் !

நாகரத்னா பதிப்பகத்தின் பிரதான புத்தக இணையத்தளமாக ezeebookshop.com யில் சில தகவல் கோளார் ஏற்பட்டுள்ளதால், பல வாசகர்கள் புத்தகம் வாங்க முடியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர்.

மாற்று ஏற்பாடாக, கிரடிட் கார்ட் மூலம் புத்தகம் வாங்க விரும்புபவர்களுக்கு 'nhm.in' இணையதளத்தில் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

என்.எச்.எம் தளத்தில் கூட பெஸ்ட் செல்லர் புத்தகமாக கேபிள் சங்கரின் 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' புத்தகம் திகழ்கிறது. இதற்கு, முன் Ezeebookshop.com இணையதளத்தில் கூட 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' பெஸ்ட் செல்லர் என்பது குறிப்பிட தக்கது.

Tuesday, April 19, 2011

ஹைக்கூ கவிதைகள் - 8

துனிஷியாவைப் போல்
புரட்சி செய்ய விரும்பவில்லை
மர தமிழர்கள் !

**

வளரும் போது
மனிதனைப் போல் உரசவில்லை
மரங்கள் !

**

பூமியின் சந்தோஷத்தை
நகல் எடுத்துக் காட்டுகிறது
பூக்கள் !

**

யூத்தம் தோற்ற இடத்தில்
வெற்றி பெற்றது
வெள்ளை !

**

வயிற்றில் சுமக்கிறேன்
பிரசவமாகவில்லை பல வருடங்களாக
தொப்பை !

**

மே.13ல் பிரசவ வலி
வரப்போவது
ஆணா ? பெண்ணா ?

Friday, April 15, 2011

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி

பக்கம் பக்கமாக எழுதப்படும் கவிதைகளை விட பல சமயம் இரு வரி, மூன்று வரி கவிதைகள் வாசகர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. அதில் குறிப்பாக நல்ல ஹைக்கூ கவிதைகள் படித்த நிமிடங்களை விட நம் மனதில் குடியிருக்கும் நிமிடங்கள் தான் அதிகமாக இருக்கும். உண்மையான கவிதைக்கு அது தான் வெற்றியும் கூட. அப்படிப்பட்ட வெற்றி ஹைக்கூ கவிதைகளை எழுதி, தொகுத்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். www.kavimalar.com என்ற இணையதளம் மூலம் இணையத்தில் பிரவலாக பேசப்படுபவர்.

கடலில் விளையாடும் சிறுவனுக்கு ஒரு அலையை விட இன்னொரு அலை எப்படி பெரிதாக தெரியுமோ, இந்த நூலிம் இடம் பெற்று இருக்கும் கவிதை ஒன்றை விட ஒன்று அதிகமாக அளவிடப்படுகிறது. சுனாமி, அரசியல்வாதி, ஈழம், குழந்தை தொழிலாளிகள் இரா.ரவியை அதிகமாகவே பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த நூலில் பல கவிதைகள் இந்த நான்கை சுற்றி தான் வலம் வருகிறது.

உண்மையிலும் உண்மை
எழுத்து இடமாற்றம்
நகரம் – நரகம்


இன்னும் சில கவிதைகள் இன்றைய அரசியல் நிலவரத்தை பகடி செய்வது போல் வடிவமைத்திருக்கிறார்.

இலவச கியாஸ், டிவி சரி
இலவச மணமகன்
எப்போது ?


தமிழகத்தில் நடக்கவிருக்கும் எல்லா தேர்தலுக்கு இந்த கவிதை பொருந்த போகிறது.

வரும் முன்பே
பரப்பரப்பாய் பேசப்பட்டது
பெரியார் படம் !


நடிகர்கள் அரசியல் வரக்கூடாது என்று சொல்லுபவர்கள், நடிகர்கள் நடித்த படத்தை வைத்து அரசியல் நடத்துவதை இந்த ஹைக்கூ காட்டுகிறது.

கௌரவம் இழந்தது
கௌரவா டாக்டர் பட்டம்
நடிகைக்கு வழங்கியதால்


பணத்திற்கு பட்டம் வழங்கிய பிறகு, வானத்தில் பறக்கும் பட்டத்திற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போனதை எடுத்துரைக்கிறது.

ஊதிய உயர்வு
வறுமையில் வாடியதால்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு


கேட்டவுடன் ஊதிய உயர்வு பெற்றக்குடியவர்கள் நம் சட்டமன்ற உறுப்பினர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு ஹைக்கூ கவிதைக்கும் அழகான, மிகவும் பொருந்தக்கூடிய படங்களை போட்டு மிக அழகான புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்.

சில இடங்களில் ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் கவிதைகள் இடம் பெற்றுயிருப்பதால், முதல் கவிதை ஏற்ப்படுத்திய தாக்கம் இரண்டாவது கவிதை ஏற்ப்படுத்தவில்லை.

ஹைக்கூ பிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

கவிஞர் இரா.இரவி
பக். 72, விலை : ரூ.40/-
ஜெயச்சித்ரா
6, தாளமுத்துப் பிள்ளை சந்து,
வடக்குமாசி வீதி, மதுரை – 1

Tuesday, April 12, 2011

வேட்பாளர்களும், வழக்குகளும்

என் அலுவலக நண்பர் ஒரு இணைய முகவரி அனுப்பியிருந்தார். அதில், இந்தியாவில் இருக்கும் அத்தனை எம்.பி., எம்.எல்.ஏ விபரங்கள், அவர்கள் மீது இருக்கும் கிரிமினல் வழக்குகள், படிப்பு, சொத்து விபரங்கள் என்று பல தகவல்கள் உள்ளன. அது மட்டுமில்லாமல், ஐந்து மாநில தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் விபரங்களும் இதில் உள்ளது.

தமிழகத்தின் 234 தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர் விபரங்கள் இதில் இருக்கிறது.

http://www.nationalelectionwatch.org/

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் இருப்பதால், நீங்கள் சரியான முடிவு எடுக்க இந்த இணையதளம் உதவும்.

தேர்தலை புறக்கணித்து நாம் எதையும் சாதிக்க முடியாது. உங்கள் ஓட்டை தவறாமல் பதிவு செய்யுங்கள்.

Monday, April 11, 2011

தமிழக தேர்தல் களம் - 2011

பாரதப்போரில் தர்மரை கைது செய்ய துரோணர் சக்கர வியூகம் அமைப்பார். தந்திரமாக அர்ஜூனனை யுத்தக்களத்தில் இருந்து அகற்றி, தர்மரை நோக்கி படையுடன் செல்வார். ஆனால், அந்த தந்திரத்தில் சிறுவன் அபிமன்யூ தர்மரை காப்பாற்ற இறப்பான். ஏறக்குறைய, வடிவேலுவின் நிலைமையும் அது தான். இதில் கொடுமை என்னவென்றால் வியூகம் அமைத்து வடிவேலுவை சிக்க வைத்தது கலைஞர் என்றே சொல்ல வேண்டும்.

எதிரணியில் தன்னை பலர் தாக்கி பேசிய போதும், அதற்கு பதில் கூறாமல், விஜயகாந்தை தாக்கி பேசுகிறார். அவரது கட்சிக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை தன் பிரச்சாரத்தின் மூலம் உடைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால், இதை எதிர்கொள்ள அதிமுக சிங்கமுத்துவை களம் இறக்கியிருக்கிறார்கள். மேலும், ஆர்.வி.உதயகுமார், விந்தியா என்று திரைநட்சத்திரங்கள் வடிவேலுவை தாக்கி பேசுகிறார்கள்.

அதிமுக அணியில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். வடிவேலு, குஷ்பு யாரும் தேர்தலில் போட்டியிட வில்லை. பிரச்சாரம் தான் செய்கிறார்கள். அதிமுக அவர்களை தாக்கி பேசி எதிரணி பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் தேடிக் கொடுக்கிறார்கள். அதிமுக தேர்தல் அறிக்கை பரப்பாமல், கலைஞர் ஆட்சியை விமர்சனம் செய்யாமல், வடிவேலுவை தான் அதிகம் விமர்சித்து வருகிறார்கள்.

எதிரணியில் இருக்கும் திரைப்பட கலைஞர்களை வடிவேலு பக்கம் திருப்பிவிட்டு திமுக கூட்டனி கட்சிகள் தங்கள் சாதனையை பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

**

அழகிரி, தயாநிதி, சிதம்பரம் போன்ற மத்திய அமைச்சர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமல்ல 121 கோடி இந்தியர்களுக்கும் அவர்கள் தான் அமைச்சர்கள். இவர்கள் போடும் பட்ஜெட் அதிமுக, தேமுதிக தொண்டனை சென்றடைகிறது. இந்திய அரசாங்கத்துக்கு எதிரணியில் இருப்பவர்களும் வருமான வரி செலுத்துகிறார்கள் .

இந்தியாவின் மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக ஈடுபடுவது ஒரு தலை பட்சமானது. அமைச்சாராக பல வேலைகள் அவர்களுக்கு இருக்கும். அதை செய்வதை விட்டு ஒரு மாதத்தை மாநில தேர்தலுக்காக நேரத்தை செலவு செய்கிறார்கள்.

பதவியில் இருப்பவர்கள் பிரச்சாரத்திற்கு போகக் கூடாது என்று சட்டம் வர வேண்டும். அப்படி போக விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும்.

**

மூன்றாவது அணி அமைந்தால் அவர்களுக்கு ஓட்டுப் போடலாம் என்று இருந்தேன். ஆனால், இந்த முறை மூன்றாவது அணி என்று எதுவும் சொல்லும் படியாகயில்லை. பா.ஜ.க தங்கள் தலைமையில் ஏதாவது செய்து மூன்றாவது அணி அமைத்திருக்கலாம். தனித்து போட்டியிடுவதால் அவர்களும் பலவினமாகவே தெரிகிறார்கள். முப்பனார், வைகோ, விஜய்காந்த் போன்றவர்கள் இருபது வருடங்களாக மூன்றாவது அணி அமைப்பார்கள் என்று கனவு தான் காண்கிறோம். மாற்று கட்சி ஒன்று உருவானதாக தெரியவில்லை.

**

அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி - ஆர்.கே.நகர் (சென்னை) - 31
குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி - நாகை - 4

**

தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பலர் ஆர்வமாய் இருக்க, தேர்தலில் நிற்பதை கின்னஸ் சாதனை செய்து வருகிறார் ஒருவர். மு.க.ஸ்டாலின் எதிராக கொளத்தூர் தொகுதியில் சுயேச்சையாக நிற்கிறார். கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களை எதிர்த்து தேர்தலில் பல முறை நின்றுயிருக்கிறார். 1988ல் இருந்து தேர்தலில் போட்டியிடும் இவர் 121 முறை போட்டியிட்டுயிருக்கிறார். 2003ல் லிம்கா சாதனையில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் அமைப்பும் இவரை பரிசலனை செய்து வருகிறார்களாம்.

அப்படியே, அறுபது வருடங்களாக ஓட்டு போட்டு முன்னேறாத மக்கள் என்று நம் நாட்டு பெயரும் கின்ன்ஸில் இடம் பெறுமா ??

Wednesday, April 6, 2011

பணம் : கே.ஆர்.பி.செந்தில்

தமிழில் வர வேண்டிய புத்தகங்கள் இன்னும் பல உள்ளது. சொல்லப்படாத விஷயங்கள் இன்னும் இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி எழுத எழுத்தாளர்கள் தான் இங்கு இல்லை. வெளிநாட்டு சென்று லட்சக்கணக்கில் சம்பாதித்துக்கும் ஒருவனால் தன் அனுபவங்களை எழுத்தால் பதிவு செய்வதில்லை. எழுத தெரிந்தவனுக்கு வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கே.ஆர்.பி.செந்தில் போல் அரிதான சில பேருக்கு தான் வெளிநாட்டுக்கு செல்லும் தங்கள் அனுபவத்தை எழுத்தில் பதிவு செய்கிறார்கள். அதுவும் இந்த புத்தகம் யாரும் தொடாத சப்ஜெக்ட்.

“கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை” புத்தகத்தில் கலைவாணி என்ற பெண் தன் குழந்தையை காப்பாற்ற சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்காக செல்கிறாள். அங்கு சென்றதும் தான் அவளுக்கு தெரிகிறது, தன்னை ஏஜெண்ட் பாலியல் தொழிலுக்காக விற்றுவிட்டான் என்று. பல்லை கடித்துக் கொண்டு இரண்டு மூன்று மாத அந்த தொழில் செய்து இந்தியாவுக்கு வருகிறாள். பாலியல் தொழிலாளிப் பற்றிய புத்தகம் என்பதால், ஏமாற்றுக்கார ஏஜெண்ட்டுக்களை பற்றி பெரிதாக சொல்லவில்லை.வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள், தங்கள் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப நினைக்கும் பெற்றோர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். யாரோ ஒருவனை நம்பி மூன்று லட்சம் பணம் கொடுத்து வெளிநாட்டுக்கு சென்று அதே பணத்தை சம்பாதிக்க நாய்ப்படும் பட வேண்டியதாக இருக்கிறது. வயிற்று கட்டி, வாய் கட்டி சேர்த்து வைத்தாலும் அதிகப்பட்சமாக மாதல் 10000 – 15000 ரூபாய் வரை தான் பணம் சேர்த்து வைக்க முடியும். அதற்கு, உள்ளூரிலே ஒரு தொழில் தொடங்கி இந்த பணத்தை சேர்க்கலாம் என்பதை பல இடங்கில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.

எப்படியாவது பணம் சம்பாதிக்க சட்டவிரோதமாக குடியேறும் போது நம் உழைப்பு பல இடங்களில் சுரண்டப்படுகிறது. பிரம்படி தண்டனை, சிறை அனுபவம் என்று பல சித்திரவதைகள் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை ஊருக்கு அனுப்பினால், சொந்தக்காரர்கள் தண்ட செலவு செய்கிறார்கள். இல்லை என்றால், சம்பாதித்தவர்கள் பணத்தை அங்கையே விட்டுவிடுகிறார்கள். பணம் சம்பாதிக்க பணத்தை செலவு செய்யும் மனிதர்கள் நம் நிஜ வாழ்க்கையில் பார்க்கிறோம். மற்றவர் அனுபவத்தில் நாம் கற்க வேண்டிய பாடத்தில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

கஷ்டத்தில் உதவிய நண்பனை போலீஸிடம் காட்டிக் கொடுப்பது, விபச்சாரிகளை நம்பி நம் உடைமைகளை தைரியமாக கொடுப்பது, சம்பாதித்த அத்தனை பணத்தையும் சோக்காளிகள் இந்தோனேஷியா, மலேஷியாவில் விடுவது, இறந்த பெரியவரின் உடலை செலவு செய்து வாங்க மறுக்கும் உறவினர்கள் அவர் சம்பாதித்த பணத்தை மட்டும் கேட்பது போன்ற பல சம்பவங்கள் நம்மை தூக்கி வாரி போடுகிறது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்க வைக்கிறது.

வெளிநாட்டுக்கு செல்ல ஆசைப்படுபவர்கள் சுற்றுலா பயணியாக சென்று ஒரு வாரத்தில் வந்துவிட வேண்டும். இல்லை ப்ரோபஷ்னல்ஸாக செல்ல வேண்டும். எந்த காரணத்திற்காகவும் சட்டவிரோதமாக இன்னொரு நாட்டில் குடியேறினால் நம் உயருக்கு உத்திரவாதம் இருக்காது. பணத்தை மறந்துவிட வேண்டியது தான் என்ற நூலின் ஆசிரியர் கருத்துக்கு நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

நல்ல அட்டை வடிவமைப்பு. பொருத்தமான அட்டைப்படம். ஆனால், இந்த புத்தகத்தை பற்றின “sub-text” முன் பக்கமோ, பின் பக்கமோ எதுவும் குறிப்பிடவில்லை. புத்தகத்தில் இருக்கும் ஒரு அத்தியாயத்தின் ஒரு பகுதியை பின் பக்கம் சொல்லியிருந்தாலும், வாசகன் “பணம் சம்பாதிப்பது எப்படி ?” என்ற யுகத்தில் புத்தகத்தை வாங்கவோ, மறுக்கவோ வாய்ப்பிருக்கிறது.

இந்த புத்தகத்தில் வரும் “நான்... நானல்ல” என்ற ஆசிரியர் disclaimer செய்தாலும், இதில் அவர் எந்த “நானாக” இருப்பார் என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. செந்தில் சட்ட விரோதமாக தங்கிய பல குடியேறிகளை பேட்டி எடுத்திருக்கிறார். தன் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

பணத்தேவை அதிகமாகிவிட்டதால் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி பலரிடம் பார்க்க முடிகிறது. அந்த வெறியை வைத்து பணம் சம்பாதிக்கும் வெறி பிடித்த மனிதர்கள் நம்மை சுற்றி பலர் இருக்கிறார்கள். நம் பணம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அதை விட நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இணையத்தில் நூலை வாங்க.... இங்கே

பக் : 128, விலை : ரூ.90
ழ பதிப்பகம்

LinkWithin

Related Posts with Thumbnails