வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 11, 2011

தமிழக தேர்தல் களம் - 2011

பாரதப்போரில் தர்மரை கைது செய்ய துரோணர் சக்கர வியூகம் அமைப்பார். தந்திரமாக அர்ஜூனனை யுத்தக்களத்தில் இருந்து அகற்றி, தர்மரை நோக்கி படையுடன் செல்வார். ஆனால், அந்த தந்திரத்தில் சிறுவன் அபிமன்யூ தர்மரை காப்பாற்ற இறப்பான். ஏறக்குறைய, வடிவேலுவின் நிலைமையும் அது தான். இதில் கொடுமை என்னவென்றால் வியூகம் அமைத்து வடிவேலுவை சிக்க வைத்தது கலைஞர் என்றே சொல்ல வேண்டும்.

எதிரணியில் தன்னை பலர் தாக்கி பேசிய போதும், அதற்கு பதில் கூறாமல், விஜயகாந்தை தாக்கி பேசுகிறார். அவரது கட்சிக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை தன் பிரச்சாரத்தின் மூலம் உடைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால், இதை எதிர்கொள்ள அதிமுக சிங்கமுத்துவை களம் இறக்கியிருக்கிறார்கள். மேலும், ஆர்.வி.உதயகுமார், விந்தியா என்று திரைநட்சத்திரங்கள் வடிவேலுவை தாக்கி பேசுகிறார்கள்.

அதிமுக அணியில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். வடிவேலு, குஷ்பு யாரும் தேர்தலில் போட்டியிட வில்லை. பிரச்சாரம் தான் செய்கிறார்கள். அதிமுக அவர்களை தாக்கி பேசி எதிரணி பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் தேடிக் கொடுக்கிறார்கள். அதிமுக தேர்தல் அறிக்கை பரப்பாமல், கலைஞர் ஆட்சியை விமர்சனம் செய்யாமல், வடிவேலுவை தான் அதிகம் விமர்சித்து வருகிறார்கள்.

எதிரணியில் இருக்கும் திரைப்பட கலைஞர்களை வடிவேலு பக்கம் திருப்பிவிட்டு திமுக கூட்டனி கட்சிகள் தங்கள் சாதனையை பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

**

அழகிரி, தயாநிதி, சிதம்பரம் போன்ற மத்திய அமைச்சர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமல்ல 121 கோடி இந்தியர்களுக்கும் அவர்கள் தான் அமைச்சர்கள். இவர்கள் போடும் பட்ஜெட் அதிமுக, தேமுதிக தொண்டனை சென்றடைகிறது. இந்திய அரசாங்கத்துக்கு எதிரணியில் இருப்பவர்களும் வருமான வரி செலுத்துகிறார்கள் .

இந்தியாவின் மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக ஈடுபடுவது ஒரு தலை பட்சமானது. அமைச்சாராக பல வேலைகள் அவர்களுக்கு இருக்கும். அதை செய்வதை விட்டு ஒரு மாதத்தை மாநில தேர்தலுக்காக நேரத்தை செலவு செய்கிறார்கள்.

பதவியில் இருப்பவர்கள் பிரச்சாரத்திற்கு போகக் கூடாது என்று சட்டம் வர வேண்டும். அப்படி போக விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும்.

**

மூன்றாவது அணி அமைந்தால் அவர்களுக்கு ஓட்டுப் போடலாம் என்று இருந்தேன். ஆனால், இந்த முறை மூன்றாவது அணி என்று எதுவும் சொல்லும் படியாகயில்லை. பா.ஜ.க தங்கள் தலைமையில் ஏதாவது செய்து மூன்றாவது அணி அமைத்திருக்கலாம். தனித்து போட்டியிடுவதால் அவர்களும் பலவினமாகவே தெரிகிறார்கள். முப்பனார், வைகோ, விஜய்காந்த் போன்றவர்கள் இருபது வருடங்களாக மூன்றாவது அணி அமைப்பார்கள் என்று கனவு தான் காண்கிறோம். மாற்று கட்சி ஒன்று உருவானதாக தெரியவில்லை.

**

அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி - ஆர்.கே.நகர் (சென்னை) - 31
குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி - நாகை - 4

**

தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பலர் ஆர்வமாய் இருக்க, தேர்தலில் நிற்பதை கின்னஸ் சாதனை செய்து வருகிறார் ஒருவர். மு.க.ஸ்டாலின் எதிராக கொளத்தூர் தொகுதியில் சுயேச்சையாக நிற்கிறார். கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களை எதிர்த்து தேர்தலில் பல முறை நின்றுயிருக்கிறார். 1988ல் இருந்து தேர்தலில் போட்டியிடும் இவர் 121 முறை போட்டியிட்டுயிருக்கிறார். 2003ல் லிம்கா சாதனையில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் அமைப்பும் இவரை பரிசலனை செய்து வருகிறார்களாம்.

அப்படியே, அறுபது வருடங்களாக ஓட்டு போட்டு முன்னேறாத மக்கள் என்று நம் நாட்டு பெயரும் கின்ன்ஸில் இடம் பெறுமா ??

1 comment:

எல் கே said...

//பா.ஜ.க தங்கள் தலைமையில் ஏதாவது செய்து மூன்றாவது அணி அமைத்திருக்கலாம். தனித்து போட்டியிடுவதால் அவர்களும் பலவினமாகவே தெரிகிறார்கள்.//

இல்லைத் தலைவரே. அவர்களோட ஓட்டு வங்கி சரியா கணிக்க முடியும்.

LinkWithin

Related Posts with Thumbnails