ஐந்து பேர் கதை தொடங்கியதுமே 'மல்டி செக்மன்ட் ஸ்டோரி டெல்லிங்' பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் புரிந்துக் கொள்ள முடிந்தது.
இசை உலகில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று அம்மா சொன்ன இராணுவ வேலையை நிராகரித்து தன் காதலி, நண்பர்களுடன் ஹைதிரபாத் வருகிறான் மனோஷ் மன்சு. சுயநலவாதியான அவன் ஒரு சர்தாஜி உதவி செய்ததும் பொது நலவாதியாக மாறுகிறான். விபத்தில் மாட்டி தவிக்கும் ஒரு கர்ப்பி பெண்ணுக்கு உதவ தன் வண்டியில் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்.
கந்து வட்டிக்கு பணம் வாங்கி அசலை கொடுத்த பிறகும், வட்டி கட்டிக் கொண்டு இருக்கும் நாகைய்யாவின் பேரனை கந்து வட்டிக்காரன் தூக்கிச்சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்த தன் பேரனை மீட்க தன் மருமகளின் கிட்னி விற்க ஹைதிராபாத் வருகிறான். கிட்னி கொடுத்த மருமகள் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.
இந்துக்களால் கருவிலே தன் குழந்தை இழந்து இந்தியாவை விட்டு ஷார்ஜாவுக்கு செல்ல திட்டமிடுகிறான் ரஹிம். முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி என்று கருதும் போலீஸ்க்காரன், அவன் உறவினர்களின் தீவிரவாதி ஒருவனை கைது செய்யும் போது ரஹிம்மை சேர்த்து செய்கிறான். போலீஸிடம் இருந்து தப்பிக்கும் காலில் குண்டடி பட்டு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறான்.
விபச்சாரம் செய்யும் சரோஜா, தன் திருநங்கை தோழியுடன் விபச்சார விடுதியில் இருந்து தப்பித்து ஹைதிராபாத்துக்கு வருகிறாள். ஆனால், அவளை வைத்து தொழில் செய்த பெண்ணின் ஆட்கள் சரோஜாவை விடாமல் துரத்துகிறார்கள். அவர்களிடம் தப்பிக்கும் போது தன் திருநங்கை தொழிக்கு கத்தி குத்து பட, அவளை அழைத்து கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு வருகிறாள் சரோஜா.
யாரை பற்றி கவலைப்படாமல் தன் காதலி தான் உலகம் என்று வாழுகிறாள் கேபிள் ராஜூ. அவளிடம் பணக்காரனாக நடித்து, இரவு விருந்துக்கு பெரிய ஹோட்டலில் இரண்டு பாஸ் வாங்கி வருவதாக சொல்கிறான். ஒரு பாஸ் 20,000 ரூபாய் என்று இருக்க, 40,000 ரூபாய்யை மருமகள் கிட்னியை விற்ற நாகைய்யாவிடம் பணத்தை திருடுகிறான். இறுதியில் மனம் மாறி, அரசாங்க மருத்துவமனையில் நாகைய்யாவிடம் பணத்தை கொடுக்க வருகிறான்.
ஐந்து கதாப்பாத்திரங்கள் எவ்வேறு இடத்தில் தொடங்கி ஒரு இடத்தில் சந்திக்கும் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நான்கு பேர் முற்றுகை ஈடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.
ஆங்கில படங்களில் Babel, 21 Grams போன்ற வெற்றி படங்கள் இந்த திரைக்கதை யுக்தியை தான் பயண்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் Babel நான்கு நாடுகளில் நடக்கும் கதை இறுதி காட்சி ஒரே புள்ளியில் வந்து முடியும். ஹாலிவுட்டில் பயன்படுத்திய திரைக்கதை யுக்தியை நம் நாட்டுக்கு ஏற்ற வாறு திரைக்கதை அமைத்திருப்பது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தமிழ் படத்தில் கூட இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பதை பார்த்து விடலாம். தெலுங்கு படங்களில் மிகவும் அபூர்வம். அப்படியே இரண்டு நாயகர்கள் என்றால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நடிகள் தான் நடிப்பார்கள். அல்லு அர்ஜூன், மனோஜ் மன்சு போன்ற நடிகர்கள் இணைந்து நடிப்பது மிக விஷயம். வில்லனை விரல் நீட்டி மிரட்டுபவர்கள். நூறு பேர் வந்தாலும் அடித்து உதைக்க கூடிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்கள். 'கேபிள் ராஜூவாக அல்லு அர்ஜூனும், விவேக் சக்கரவர்த்தியாக மனோஜ் மன்ச்சுவும் வாழ்ந்திருப்பது ‘மாசாலா’ படம் பார்த்தவருக்கு சாபவிமோச்சனம் கிடைத்தது போல் இருந்தது. ஒரு தீவிரவாதியிடம் இருந்து பல ஆயிரம் பேர் காப்பாற்ற இரண்டு நாயகர்கள் போராடுவதும், அதற்கான முடிவை தேர்ந்தெடுப்பதும் தெலுங்கு படங்களில் வராத முடிவு. ( இரண்டு 'மாஸ்' ஹீரோக்கள் சாதான குடிமகனாக நடித்திருப்பது என்னால் இன்னும் நம்பமுயவில்லை. )
கண்ணில் அதிக மைய்யும், லோ ஹிம் புடவையும், பின் முதுகு தெரியும் படியான ஜாக்கெட்டும் என்று அசல் விபச்சாரியாகவே வருகிறார் அனுஷ்கா. தன் திருநங்கைக்காக டாக்டரிடம் கெஞ்சும் போது, " உங்க கூட எத்தன வாட்டி வேணும்னாலும் படுகிறேன். அவள காப்பாத்துங்க !" என்று கெஞ்சும் போது கதாப்பாத்திரம் மீறி அவள் மேல் பரிதாபப்பட வைக்கிறது.
வசனங்கள் ஒவ்வொன்றும் ரொம்ப ஷார்ப். குறிப்பாக ஒரு இடத்தில் கூட பன்ச் டைலாக் இல்லை.
கிட்னி விற்க செல்லும் தன் மருமகளிடம் நாகைய்யா, " ஏழைகளுக்கு இருக்குற பெரிய சொத்தே அவங்க உடம்பு தான்" என்று சொல்லும் இடமாகட்டும்,
போலீஸ் ஸ்டேஷனில் அனுஷ்கா, " நாங்க உடம்பில இருக்குற துணிய அவுத்து போட்டு சம்பாதிக்கிறோம், நீங்கள் துணியப்போட்டு சம்பாதிக்கிறீங்க" என்ற இடமாகட்டும்,
ஷார்ஜா செல்லும் ரஹிம்மிடம் அவர் தந்தை, " நிறைய முஸ்லீம் இருக்குற இடத்துல இந்து பயப்படுறதும், நிறைய இந்துக்கள் இருக்குற இடத்துக முஸ்லீம் பயப்படுறதும் சகரஜம். மாப் சைக்காலஜி" என்று சொல்லும் இடம் மிக அருமை.
அதுவும் இறுதி காட்சியில், அல்லு அர்ஜூன் மனோஜிடம் " உங்க பெயர் என்ன பாஸ் ?" என்று கேட்கும் இடம் கண்ணில் நீர் வராத குறை.
அனுஷ்கா , சரண்யா ட்ரெக்கை தெலுங்கில் இருந்து அப்படியே எடுத்திருக்கிறார்கள். தெலுங்கில் அல்லு அர்ஜூனா செய்த பாத்திரத்தை சிம்புவும், மகேஷ் மஞ்சு செய்த பாத்திரத்தை பரத்தும், முஸ்லீம் மகேஷ் செய்த பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்ஜூம் செய்திருக்கிறார்கள்.
தெலுங்கில் இந்த படத்தை பார்த்ததும் ஒரு மணி நேரம் எதைப் பற்றியும் என்னால் யோசிக்க முடிவில்லை. தமிழில் அந்த பாதிப்பை கெட்டுக்காமல் எடுத்தால் நன்றாக இருக்கும்.
படம் பார்த்து கேபிள் சங்கர் சொன்ன பிறகே படத்தை பார்ப்பேன்.
No comments:
Post a Comment