வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, February 23, 2015

சினிமா 1913 -2013 : 11. மாற்றம் தந்த மூவேந்தர்கள்

கடந்த பத்து மாத தொடரில் 1930-50களில் சினிமா இயங்கி, அறிமுகமான கலைஞர்களை பார்த்து வந்தோம். மறக்கமுடியாத சிலரை தெரிந்துக் கொண்டோம். இனி, அடுத்த காலக்கட்டமான 1950-70களில் தமிழ் சினிமாவில் பங்களித்து மாற்றம் தந்த கலைஞர்களை பார்க்க இருக்கிறோம். 

1930களில் பாடல் பாடத் தெரிந்தவர்கள் தான் கதாநாயகர்களாக நடிக்க முடியும் என்று இருந்தது. ஆனால், 1950களில் வசன உச்சரிப்பு, நடிப்பு, முகப்பாவனை என்று பல விஷயங்களை நடிகர் திரையில் காட்ட வேண்டியதாக இருந்தது. பாடல், இசை எல்லாம் பின்னனியில் பார்த்துக் கொண்டனர். ஆன்மீக படங்களை விட சமூகப் படங்கள் அதிகமாக எடுக்கத் தொடங்கினர். படங்களில் பாடல்களும் முன்பை விட குறையத் தொடங்கியது. 

 தியாகராஜர் பாகவதர் – பி.யு.சின்னப்பா போன்றவர்கள் மறக்கடிக்கப்பட்டு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற மூன்மூர்த்திகளும், ஜெய்சங்கர், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், எவிஎம்.ராஜன் போன்ற இடைநிலை நடிகர்களும் காலுன்ற தொடங்கினார்கள். 

எம்.ஜி.ஆர் 

தமிழ்த்திரையில் சூப்பர் ஸ்டாராகவும், பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர். சாதாரன குடும்பத்தில் பிறந்து, குடும்ப கஷ்டங்களுக்காக நாடக கம்பேனியில் இவரும், இவரது சகோதரர் சக்ரபாணியும் சிறு சிறு வேடகங்களில் நடித்தனர். 1936ல் 19 வயது இருக்கும் போது எஸ்.எஸ்.வாசன் எழுதிய “சதிலீலாவதி” படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அவருக்கு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் (வீர ஜெகதீஷ், மாயா மச்சீந்திரா,பிரகலாதா, சீதா ஜனனம்) தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. 


11 வருடங்களுக்கு போராட்டத்திற்கு பிறகு 1947ல் வெளியான ‘ராஜகுமாரி’ படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்து. 

திரையுலகில் ஆரம்பக்கட்டம் என்பதால் “அபிமன்பு” படத்தில் அர்ஜுனனாக சிறு வேடத்தில் மீண்டும் நடித்தார். இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் மு.கருணாநிதி !! 

சிறையில் வெளிவந்த பாகவதர் ‘ராஜமுக்தி’ என்ற படத்தை தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு அடுத்து, தளபதி பாத்திரத்தில் (இரண்டாவது நாயகனாக) எம்.ஜி.ஆர் நடித்தார். அதில் கதாநாயகியாக நடித்தவர் வி.என்.ஜானகி அம்மா அவர்கள். இந்த படத்தில் தான் இருவரும் முதன் முதலில் சந்தித்தனர். ’ராஜமுக்தி’ படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது. 

இதற்கடுத்து, எம்.ஜி.ஆர் – வி.என்.ஜானகி இணைந்து நடித்த ‘மோகினி’ படம் வெற்றிப் பெற்றது. அதைத் தொடர்ந்து ’மருதநாட்டு இளவரசி’ படமும் வெற்றிப் பெற்றது. பிறகு, இருவரும் வாழ்க்கையிலும் இணைந்தனர். 

மர்மயோகி (முதல் ‘ஏ’ சர்டிபிகேட் படம்), என் தங்கை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது ‘மலைக்கள்ளன்’ படம் தான். குலேபகாவலி, மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடங்கல் என்று அடுக்கடுக்காக வெற்றிப்படங்களை குவித்து தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக மாறினார். அவருடைய ‘கால்ஷீட்’ பெற ஒரு பெருபடை காத்திருந்தது. 

இந்த காலக்கட்டத்தில் ‘எம்.ஜி.ஆர்’ பிக்சர்ஸ் பெயரில் ‘நாடோடி மன்னன்’ படத்தை அவரே தயாரித்து, இயக்கி நடித்தார். இந்த படமும் வசூல் குவித்த வெற்றிப் படமாக அமைந்தது. 1963ல் மட்டும் 9 படங்கள் அவர் கதாநாயகனாக நடித்து, அனைத்து படங்களும் வசூல் குவித்து வெற்றிப்பெற்றது. 

அரசியல் காரணத்திற்காக தி.மு.க கட்சியை விட்டு விலகி, அ.தி.மு.க கட்சி தொடங்கினார். 1977ல் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றிப் பெற்றார். அவர் கடைசியாக நடித்த ‘மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்து கொடுத்த பிறகே முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். 

’சிவாஜி’ கணேசன் 

கணேசனாக நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்தவர், பெரியாரால ‘சிவாஜி’ என்று பெயர் சூட்டப்பட பின்பு இதுவே இவரின் பெயராக மாறிவிட்டது. ஆரம்பக் காலத்தில் நாடகத்தில் சிறு சிறு வேடங்களில் நடத்தவர், இவரது திறமையை பார்த்து முதல் படமே நாயகனாக ’பராசக்தி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

‘பராசக்தி’ படத்தில் கொண்ட பகுத்தறிவு பிரச்சாரத்தால், பொறுக்க முடியாத பலர் அந்த படத்திற்கு தடைவிதிக்க முயற்சித்தனர். ஆனால், எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. முதல் படமே வெற்றிப் பெற்றதால் ’சிவாஜி’ கணேசன் பலரது கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.


பணம், மனோகரா, தூக்குத் தூக்கி போன்ற படங்கள் நல்ல நாயகனாகவும், திரும்பி பார், அந்த நாள், கூண்டுக்கிளி போன்ற படங்களில் எதிர்மறை நாயகனாகவும் நடித்தார். இந்த பாத்திரத்திற்கு தான் இவர் பொருந்துவார் என்ற முத்திரையும் இவர் மேல் விழவே இல்லை. எப்படிப்பட்ட பாத்திரத்தை கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார் என்று பெயர் எடுத்தார். 

புராணப்படங்கள், சமூகப்படங்கள், மாயாஜாலப் படங்கள் என்று சிவாஜி கணேசனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. படத்தில் சிறு வேடம் கொடுத்தால் கூட, மற்றவர்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. 

கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற விடுதலை வீரர்களை பற்றி மக்கள் சிவாஜி உருவத்தில் தான் தெரிந்துக் கொண்டனர். படிக்காத மேதை, பாசமலர், உயர்ந்த மனிதன் போன்ற உணர்வு மிக்க படங்களிலும், தில்லாணா மோகனாம்பாள், திரிசூலம், வியாட்நாம் வீடு போன்ற படங்களில் நடிப்பின் எல்லா பரிநாபத்தையும் காட்டினார். 

முழுவதுமாக சொல்ல வேண்டும் என்றால், நடிப்பு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் ‘சிவாஜி’ கணேசன் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் சிவாஜி நடித்த தோல்விப்படங்கள் கூட இவர் நடித்ததற்காகவே இன்று வரை ரசித்து பார்க்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

பல தலைவர்களில் வேடத்தில் நடத்த சிவாஜி, கடைசி வரையில் தனக்கு ‘சிவாஜி’ என்று பெயர் வைத்த பெரியார் வேடத்தில் நடிக்கவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. ரஜினி, கமல் போன்ற அடுத்த தலைமுறைகளோடு இல்லாமல், அதற்கடுத்த தலைமுறை நடிகரான விஜய் வரை சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். 

’ஜெமினி’ கணேசன் 

சண்டைக்காட்சிக்கு எம்.ஜி.ஆர், நடிப்புக்கு ‘சிவாஜி’ கணேசன் என்றால் காதலுக்கு ‘ஜெமினி’ கணேசன். ( நிஜ வாழ்க்கையிலும் இவர் காதல் மன்னன் என்பது வேறு கதை.) 

இவர் பெயரும் கணேசன் தான். ஆரம்பக்காலத்தில் ‘ஜெமினி’ ஸ்டூடியோவில் வேலைப்பார்த்ததால் இவரை பின்னாளில் ‘ஜெமினி’ கணேசன் என்று அழைக்கத் தொடங்கினர். இவர் முதல் படமான ‘மிஸ் மாலினி’ படத்தில் துணை பாத்திரமாக தான் அறிமுகமானார். பெரும்பாலும் ஜெமினி தயாரிப்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 


பிறகு, ’தாய் உள்ளம்’ படத்தில் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக நடிக்க, ஜெமினி கணேசன் வில்லனாக நடித்தார். ( பின்னாளில் நிலைமை தலைக்கீழாக மாறியது.) 

’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கூட இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி அம்மா அவர்கள். 

பெண், மிஸ்ஸியம்மா, கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். குறிப்பாக, ’கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் கூனன் வேடத்தில் நடித்தது ஜெமினி கணேசனா என்று கேட்கும் அளவிற்கு அவருடைய ஒப்பனைகள் இருந்தது. 

ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் ’நடிகை திலகம்’ சாவித்திரி அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் திரைத்துரையில் மட்டுமில்லாமல் பல சமூக காரியங்களுக்கும் நல் உதவி செய்துவந்தார்கள். காலத்தின் கட்டாயத்தால் சாவித்திரி அம்மாவை பிரிய வேண்டியதாக இருந்தது. 

பிரபு, கார்த்திக் போன்ற அடுத்த தலைமுறை நடிகரோடு இல்லாமல், அஜித், பிரபு தேவா போன்ற மூன்றாவது தலைமுறையோடும் நடித்திருக்கிறார். ’கிருஷ்ணதாசி’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருக்கிறார். 

1950-70களில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி தமிழ் சினிமாவின் முவேந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தமிழ் சினிமா தியாகராஜர் பாகவதர் – பி.யு.சின்னப்பா கொடிக்கட்டி பறந்தாலும் இறக்கும் போது பொருளாதார நெருக்கடியில் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு அடுத்த நட்சித்திரங்களான எம்.ஜி.ஆர் – சிவாஜி – ஜெமினி இருந்தவர்கள் தங்கள் பாதையில் சரியாக பயனித்தனர். இன்றைய நடிகர்களும் இவர்கள் அமைத்த பாதையில் ஒன்றில் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கல். 

எம்.ஜி.ஆரை போல் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்கள், ஜெமினி போல் காதல் வசப்படும் நடிகர்கள், சிவாஜி போல் அரசியல் – சினிமா இரட்டை கப்பலில் பயணம் செய்யும் நடிகர்கள் என்று இந்த மூவேந்தர்கள் வழி காட்டிய பாதை தான்.

நன்றி : நம் உரத்தசிந்தனை இதழ் ( டிசம்பர், 2014 மற்றும் பிப்ரவரி,2015)

Monday, February 16, 2015

இஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதிகள்

“இஸ்லாம், மனிதனுடைய உள்ளத்தை மட்டுமில்லாமல், அவனது அறிவையும் முன்னிறுத்தியே பேசுகிறது. அறிவாற்றல் சந்திப்பதுதான் உண்மை நிலையின் பக்கம் உள்ளம் சென்றடைவதற்குரிய வழியாகும் என்பதும் அது ஈமானை உறுதிப்படுத்தக்கூடிய நேரிய வழிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் இஸ்லாத்தின் தத்துவங்களாகும்.” 
– பேராசிரியர் அப்பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாக இந்நூலில் (பக்.37) இடம் பெறுகிறது. இன்று, உலகில் அதிகம் பேசப்படும், விமர்சிக்கப்படும் இஸ்லாம்தான், ஒரு பக்கம் தாலிபன், அல் கொயிதா, I.M, ISIS போன்ற பல இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் மூலம் பல தாக்குதல் நடத்தியுள்ளது. பலர் இவர்களால் இறந்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்துபவர்கள் தங்கள் கொள்கையோடு மதத்தையும் முன் நிறுத்துகிறார்கள். 

இன்னொரு பக்கம் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாழ்வியல் நெறி, வழிமுறைகள் உலகிற்கு எடுத்துக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். உலகத்தில் மிகப் புனிதமான மார்க்கமாக இஸ்லாம் மதத்தை முன் நிறுத்துகிறார்கள். இரு தரப்பினரும் நேர் எதிரில் இருப்பவர்கள். ஆனால், உலகப்பார்வையில் இருவருமே ஒன்றாகத் தெரிகிறார்கள். இரண்டு எதிர் பக்கத்தில் இருப்பவர்களை ஒரே மாதிரியாக விமர்சனம் செய்கிறார்கள். 

“நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல் அந்நேரத்தி)லும், நான் உன்னை வெட்டுவதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால் நிச்சயமாக நான் அகிலத்தார் யாவரையும் படைத்துப் போஷித்து இரட்சிப்போனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன். என்னுடைய பாவத்தையும் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகிறேன். அவ்வாறாயின், நீ நரகவாசிகளில் உள்ளவனாகி விடுவாய்; இதுதான் அக்கிரமக்காரர்களுக்குரிய கூலியாகும்”, (இவ்வாறு ஹாபீல் கூறினார்) – (அல்குர் ஆன் 5:28, 29) 

தன்னைக் கொல்ல வருபவனை கொலை செய்யக்கூடாது என்பதை குரான் சொல்கிறது. அப்படி இருக்கும்போது பள்ளிச் சிறுவர்களை கொன்று குவித்தவர்களை உண்மையான இஸ்லாமியர்களாக எப்படிச் சொல்ல முடியும்? வன்முறை தூண்டுபவர்கள் எப்படி இஸ்லாமியராக இருக்க முடியும்? உண்மையில் குரானுக்கு எதிராகதான் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போராடுகிறார்கள் என்பதை இந்த வரிகள் உணர்த்துகிறது. 

மதத்தின் பெயரில் தனது மதத்திற்காக கொலை செய்பவன் என்று சொல்பவன்தான், தனது மதத்திற்கு உண்மையான எதிரியாகிறான். அதற்கு, மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்துபவர்களே சாட்சி! 

பல இடங்களில் கிறிஸ்தவ மதங்கள் விமர்சிக்கப்படுகிறது. இஸ்லாமுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பரப்பிய பிரசாரத்தைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக இஸ்ரேலியர்கள் எழுதும் விரிவுரைகள் இஸ்லாமிற்கு களங்கம் விளைவிப்பதாக இருப்பதை எடுத்துக் கூறுகிறார். 

“மனிதர்களின் மூலம் நீ உண்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. முதலில் நீ உண்மை எதுவென்று தெரிந்துகொள்! அதன் பின்னர் உண்மை கூறுபவர் யார் என்பது தானாகவே உனக்கு தெரிந்துவிடும்” என்ற அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அமுதமொழி இங்கே குறிப்பிடத்தக்கது. (பக்.110) 

அல்லாஹ் உங்களின் வெளித் தோற்றங்களை மட்டும் பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங்களைத்தான் பார்க்கிறான் என்பதாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. 

தன்னை வணங்குவதற்காகவும், காணிக்கை செலுத்துவதற்காகவும் கடவுள் மனிதனை படைக்கவில்லை. இந்த செயல் வீரர்களில் பெண்கள் இருக்கிறார்களா என்பது தெளிவாகக் குறிப்பிடவில்லை. செயல்வீரர்கள் என்பது பெண்களும் அடக்கம்தானே என்று நம்முள் தோன்றினாலும், இந்து – கிறிஸ்தவ மதத்தில் பெண் மத போதகர்கள் இருப்பதுபோல் இஸ்லாமில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்ற இன்னொரு பொதுவான விமர்சனத்துக்கு இந்த நூல் பதில் அளிக்கவில்லை. இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்ள மேலும் சில நூல்களை ஆசிரியர் பரிந்துரைக்கிறார். 

**

இஸ்லாம் மதத்தினரை என்னதான் பலர் விமர்சனம் செய்தாலும் ‘இஸ்லாமிய வங்கி’ (Islamic Banking) முறைக்கு உலக அளவில் வரவேற்பு உண்டு. 

“பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு ஏழை, தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப அவசியத் தேவைகளைக்கூட முழுமையாக சரிக்கட்ட முடியாத நிலையிலிருக்கின்றான். வேறு யாரிடமாவது கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் அவனுக்கு இல்லை. 10 ரூபாய் கடன் வாங்கினால், 11 அல்லது 12 ரூபாயாக அல்லது இதைவிட கூடுதல் குறைவாக திரும்ப இவனிடம் கேட்பவர்கள்தான், கடன் கொடுக்க முன்வருகிறார்கள். இந்த வட்டி முதலைகளைத் தவிர பெரிய பணக்காரர்கள் கடன்கொடுக்க முன்வராததினால் இவர்களிடமே அந்த ஏழை வட்டிக்கு பணம் வாங்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறான். இதனால்தான் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது என்ற வாதம் இந்த ஒரு நிலைக்கு மட்டுமே பொருந்தும்.” (பக். 183, 184) 

 இஸ்லாமிய வங்கி முறை பணம் கொடுப்பவர் நமது தொழிலில் ஒரு பங்குதாரராகவே ஆகிறார். லாபத்திலும், நஷ்டத்திலும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நாம் நஷ்டப்பட்டாலும் வட்டி கட்டவேண்டும் என்கிற முறை இல்லை. அதே சமயம் அந்த வங்கியில் பணம் போட்டிருப்பவர்களுக்கு வட்டி கிடைக்காததால், உலகளாவிய நாடுகளில் வரவேற்பு இல்லை. 

இஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதி குரானை முழுமையாக வாசித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் நூல் முன்மொழிகிறது. அப்படி குரானை முழுமையாக வாசித்தவன் அன்பை மட்டுமே ஏந்துவான். ஆயுதங்களை அல்ல…!


**
இஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதிகள், 
- டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி, 
இலக்கியச் சோலை, ரூ. 130 

LinkWithin

Related Posts with Thumbnails