வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 30, 2012

நண்பா - குறும்படம்வாழ்க்கையில் வளர்ந்து பல வெற்றிகள், சாதனைகள் குவித்தாலும், நாம் திரும்பி சென்று வாழ நினைக்கும் பருவம் குழந்தை பருவம். பள்ளி வாழ்க்கையில் நண்பர்களுடன் விளையாட்டுக்காக சண்டைப்போட்டு , உருண்டு பிரண்டு மகிழ்ந்த பருவம்.... பல முறை நினைத்தாலும் பசுமையான மின்னும். இரண்டு சிறுவர்களுக்குள் நடக்கும் போட்டி தான் கதை களன்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் (ராஜ் மோகன்), சந்தீப் (கௌரவ்) தேர்வில் இருவரும் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள். அதற்கு பரிசாக ஆசிரியர் சாக்லெட் ஒன்றை சந்தோஷிடம் கொடுத்து இருவரையும் பங்கு போட்டுக் கொள்ள சொல்கிறார். ஆசிரியர் சந்தோஷிடம் சாக்லெட் கொடுத்தது சந்தீப்புக்கு பிடிக்கவில்லை. சந்தோஷ் சந்தீப்பை அழைத்து மீதி சாக்லெட் கொடுக்க வர, அவன் மறுக்கிறான். அடுத்த தேர்வில் அவனை விட அதிக மதிப்பெண் எடுத்து முழு சாக்லெட் தான் சாப்பிடுவேன் என்கிறான் சந்தீப். சந்தோஷ்  சந்தீப்பின் சவாலை ஏற்றுக் கொள்கிறான். இருவரில் யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள் என்பது தான் கதை.


சிறுவர்களின் பள்ளி உலகத்தை காட்டியிருக்கும் இந்த குறும்படம் பல விருதுகளை குவித்துள்ளது. பல வெளிநாட்டு குறும்பட போட்டிகளிலும் இந்தியா சார்பாக இக்குறும்படம் தேர்வு செய்து அனுப்பியுள்ளார்கள்.
Tuesday, May 29, 2012

மேதகு பிரபாகரனின் புரட்சிகரச் சிந்தனைகள்


இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி

சுதந்திரம் என்பது பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளும் ஒரு வியாபாரப் பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றி கொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.

எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும் போது, முழு உலகமே கவலை கொள்ளலாம்ல் கண்டனங்கள் தெரிவிக்கலாம்; கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய நம்முடையது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


வீழ்ந்தவர்கள் எல்லாம் விதையாகிப் போனதால் தான் விடுதலைப் போர் இன்றும் தொடர்கின்றது.

வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தி அல்ல. அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்து சூத்திரப் பொருளும் அல்ல, வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு, மனிதனே வரலாற்றைப் படைக்கிறான். மனிதனே தனது தலைவிதியையும் நிர்ணயிக்கிறான்.


 
உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்கமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுமக்களே.

விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளர்களாக இராது, நேரடிப் பங்காளிகளாக மாற வேண்டும்.

உயிரோடு எதிரிகளின் கைகளில் பிடிபடுவதைவிட கௌரவமாகச் சாவதை விரும்புகிறோம்.

நாம் சமாதானத்திற்கும் தயார். போருக்கும் தயார். நாம் சமாதானத்தின் கதவை திறப்பதா? அல்லது யுத்தத்தின் பாதையில் செல்வதா ? என்பதை எதிரி தான் தீர்மானிக்க வேண்டும். நாம் சமாதானத்தின் கதவுகளை திறந்து விட்டிருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் மக்களிடமிருந்து வேறுப்பட்டவர்கள் அல்லர்; விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள் தான் மக்கள். மக்கள்தான் புலிகள்.

பிரிவினைவாதம் என்பது தவறான சித்தாந்தம். இதனை எங்கள் போராட்டத்திற்கு பிரயோகிக்க முடியாது. எங்கள் இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடி வருகிறோம்.

தமிழீழக் காவல் துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப் பிடித்து கூண்டில் நிறுத்துவது தமிழீழக் காவல்துறையின் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் லட்சியமாகும்.

மாவீரர் நாள் எமது தேசத்தின் துக்க நாள் அல்ல; நாம் கண்ணீர் சிந்திக் கவலை கொள்ளும் சோக நாளும் அல்ல. இன்றைய நாள், ஒரு தேசிய எழுச்சி நாள், எமது தேசம் சுதந்திரம் வேண்டி உறுதி பூணும் புரட்சித் தினம்.

எமது விடுதலைப் போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.

இந்தியாவின் உதவியை நம்பி மட்டுமல்லாது ஏதேனும் ஒரு வெளியார் உதவியை நம்பி நாம் விடுதலை போரைத் துவக்கவில்லை. நாம் உயிருள்ளவரை போராடுவோம். நான் இறந்தால், வேறு ஒருவர் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்வார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சொன்னது போல் எந்த ஒரு விடுதலைப் போராளியும் தன்னால்தான் விடுதலை கிடைக்கும் என தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியாது. விடுதலையைப் பெறாமல் இன்றைய தலைமுறை இறந்தால், அடுத்த தலைமுறை அப்போரைத் தொடரும்

எதிரிகளை மன்னிப்பதோ தண்டிப்பதோ கடவுள் செய்வார்… அவர்களை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டுமே நாம் செய்ய வேண்டும்வெளியீடு

மேதகு பிரபாகரனின் புரட்சிகரச் சிந்தனைகள்
தமிழன் பாபு
பக்:128, ரூ.60/-
வள்ளலார் பதிப்பகம்
போளூர் – 606 803
திருவண்ணாமலை மாவட்டம்.
பேசி : 99404 48599

Friday, May 25, 2012

நேரு vs ராஜாஜி, காமராசர்

இலக்கிய நிகழ்வில் ஒன்றில் முத்த பத்திரிக்கையாளர் ’மின்னூர்’ சீனிவாசன் அவர்கள் நேருவைப் பற்றி உரையாற்றினார். நேருவின் மீது எனக்கு ஆர்வம் இல்லை என்றாலும், சீனிவாசன் அவர்களின் உரையை கேட்பதற்காக அமர்ந்தேன். சில தகவல்கள் உண்மையிலே மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது.

**


அறிஞர் அண்ணா அவர்கள் நேருவின் கருத்துக்கு எதிராக மேடையில் பேசியது நேருவின் காதுக்கு சென்று இருக்கிறது. அப்போது, நேரு முதல்வர் ராஜாஜியை தொடர்பு கொண்டு கேட்ட போது ராஜாஜி, “ Don’t worry Nehruji. I will Suppress them” என்றார்.
அதற்கு நேரு, “நான் அவர்களை கட்டுப்படுத்த சொல்லவில்லை. உங்கள் மாநிலத்திற்குள் ஒரு கலாச்சார ஏக்கம் தெரிகிறது. அதை இங்கு இருந்து என்னால் உணர முடிகிறது. அதை கவனித்து சரி செய்யுங்கள்என்றார்.

**

ராஜாஜி கவர்மெண்ட் ஜென்ரல் பதவியில் இருந்து ஓய்வு பெரும் விழாவில் எல்லோரும் ராஜாஜியை பெருமையாக பேசினார்கள். அவரைப் பற்றி நேரு பேசும் போது, “ இதயத்தின் பங்கு இல்லாமல் எப்படி மூளை பலத்தை கொண்டு பொதுவாழ்க்கையில் இவரால் நிர்வாகம் செய்ய முடிகிறது என்பதை பல முறை பார்த்து வியந்துள்ளேன்என்றார்.

ராஜாஜி இதயமில்லாமல் நிர்வாகம் செய்தார் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

**

நேரு இந்தியாவை நான்கு மாநிலமாக (வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு) பிரிக்கலாம் என்று எண்ணிய போது, எல்லா தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், காமராசர் மட்டும் ஏற்றுக் கொள்ள்வில்லையாம். அதற்கு அவர் கூறிய பதில், ” எங்க தமிழ் நாட்டுக்காரங்கள் ஒத்துக்க மாட்டாங்க” என்றார்.

ஒரு சில கருத்தின் காரணமாக நேருவும் நான்கு மாநிலமாக இந்தியாவை பிரிக்கும் எண்ணத்தை கைவிட்டார்.

**

நேருவின் மொழிகள்I am not Socialist. I am not communist. I am an Individualist.

There is one way traffic in Time.

Thursday, May 17, 2012

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - 3 : ஸ்விஸ் வங்கி பணத்தை மீட்ப்பு

பாகம் - 1, பாகம் -2

ஹிட்லர் இருபதாம் நூற்றாண்டின் ராஜபக்சே. இந்த உலகில் எல்லா நாடுகளில் இருந்து இவரை பற்றிய புத்தக வந்துள்ளது. யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலக போரும் நீக்கிவிட்டு ஹிட்லர் வரலாறு பார்த்தால் நிச்சயம் அவர் ஒரு வரலாற்று நாயகன். அவர் செய்த மிக பெரிய இரண்டு தவறு அவரின் சாதனையை மறைத்துவிட்டது.

உலக நாடுகளுக்கு வில்லனாக இருந்த அவர் ஜெர்மனியர்களுக்கு நாயகன் என்பதற்கு ஒரு சுவையான தகவல்.

1929ல் வால் ஸ்டிரீட் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடும் சரிவும், ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கமும், மக்கள் பலர் வேலை இழந்தனர். பணக்காரர்கள் தங்கள் பணத்தை வரியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைத்தனர்.

1933ல் பதவிக்கு வந்த ஹிட்லர் தனது நாட்டின் பணம் அந்நிய நாட்டில் இருப்பது அவரை கோபப்படுத்தியது. தனது வழக்கமான ஸ்டைலில் ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் மரண தண்டனை என்று அறிவித்தார்.


ஒரு தனி குழு அமைத்து ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் பண முதலைகளை கண்டு பிடித்தார். வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணங்களை தன் நாட்டு கொண்டு வந்து, பதுக்கியவர்களுக்கு மரண தண்டனை வழங்கினார். இதில் ஜெர்மனியர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யூதர்கள். ஜெர்மனியர்களை விட யூதர்களே அதிகம் பணம் பதிக்கி வைத்துள்ளார்கள்.

அரசாங்கத்தை ஏமாற்றி ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களை எப்படி கண்டு பிடித்தார் ?

ஒரு பெரும்புள்ளி ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பார் என்று சந்தேகப்பட்டால் அவர் பெயரை சொல்லி அவர் கணக்கில் பணம் போட செல்வார்கள். அங்கு அவர் வங்கி கணக்கு இல்லை என்று சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால், இவர் இங்கு தான் கணக்கு வைத்திருக்கிறார் என்று சொன்னால் தீர்ந்த்து விஷயம்.

வாடிக்கையாளர் பெயரை சொல்லி பணத்தை போட்டு, அவர் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு ஆண்டாக பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் பெற்றுவிடுவார்கள். ஸ்விஸ் வங்கியில் இருக்கும் பணத்தை ஜெர்மனுக்கு கொண்டு வருவதோடு இல்லாமல், பணம் பதுக்கி வைத்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

1938க்கும் 1945 இடைப்பட்ட கால கட்டத்தில் அப்படிக் கொண்டு செல்லப்பட்ட தங்கம் சுமார் நூரு டன் என்றும், ஸ்விட்சர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பணத்தின் மதிப்பு ஆறு பில்லியன் என்று மதிப்பிடப்படுகிறது.

ஹிட்லரால் இனப்படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் பலர் ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ளனர். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பிறகு இறந்த யூதர்களின் வாரிசுகளுக்கு புது வாழ்க்கை தொடங்க பணம் தேவைப்பட்டது. அவர்கள் ஸ்விஸ் வங்கியிடம் பணம் பெற நினைக்கும் போது அவர்களால் முடியவில்லை. எந்த ஆதாரம் இல்லாததால் ஸ்விஸ் வங்கி பணம் தர மறுத்துவிட்டது.

ஸ்விஸ் பணம் கிடைக்காத யூதர்கள் ‘Holocaust Victim’ என்ற அமைப்பை உருவாக்கி ஸ்விஸ் வங்கியிடம் தங்கள் மூதாதயரில் பணம் பெற முயற்சித்தனர். போதிய ஆதாரம் காட்டினால் பணம் தருவதாக கூறினார்.

கொத்துக் கொத்தாக இறந்த யூதர்களுக்கு யார் டெத் சர்ட்டிபிக்கேட் கொடுப்பது ? பல வருடங்களாக இரண்டாம் உலகப் போர் இறந்த யூதர்களின் பணம் ஸ்விஸ் வங்கியிலே இருந்து வருகிறது.

12000 பேர் கொண்ட ‘Holocaust Victim’ குழு அமெரிக்க அரசிடம் முறையிட்டது. பல போராட்டகளுக்கு பிறகு 1997ல் ஸ்விஸ் வங்கி போதிய ஆதாரங்கள் காட்டினால் பணம் தருவதாக ஒத்துக் கொண்டது.

யோசித்து பாருங்கள் சுதந்திரம் பெற்று இவ்வளவு வருடங்களில் எத்தனை ஊழல்கள். பி.ஜே.பி கட்சி வெளிநாட்டில் பதுக்கி வைத்த கருப்பு பணத்தைப் பற்றி பேசு போதெல்லாம காங்கிரஸ் அரசு ஆர்வம் காட்டியதில்லை. 2G , CWG, ஆதர்ஷ் என்று ஊழல் பட்டியல் பெறுகியது தவிர ஊழல் பணத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர முயற்சி அவர்கள் செய்ததில்லை.

நம் நாட்டில் பசி என்ற பெயரில் எத்தனையோ பேர் இறக்கிறார்கள். ஆனால், அரசியவாதிகள் பலர் ஸ்விஸ் வங்கியில் தங்களது பணத்தை பதுக்கி வைத்து அவர்களும் அனுபவிக்காமல் இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் பணத்தை தன் நாட்டுக்கொண்டு வந்த ஹிட்லர் நல்லவரா ? தானும் அனுபவிக்காமல், மற்றவர்களும் அனுபவிக்காமல் பணம் பதுக்கி வைக்கும் நம் அரசியல் தலைவர்கள் நல்லவர்களா ?கட்டுரைக்கு உதவி நூல் :
ஸ்விஸ் பேங்க் – எஸ். சந்திரமௌலி

Wednesday, May 16, 2012

14வது நூல் - கவிதைகள் அனுப்பவும் !!!

நாகரத்னா பதிப்பகம் தொடங்கியது முதல்,  வருடத்திற்கு ஒரு நூல் பல எழுத்தாளர்களிடம் கவிதைகள் பெற்று தொகுப்பு நூலாக வெளியீட்டு வருகிறது.

1. காந்தி வாழ்ந்த தேசம் ( பதிப்பக தொடக்க விழாவில் வெளியிட்டோம்)
2. கவிதை உலகம்
3. கலாம் கண்ட கனவு (இரண்டாம் ஆண்டு விழாவில் வெளியிட்டோம்)

இப்போது மூன்றாம் ஆண்டு பயணித்துக் கொண்டு இருக்கும் நாகரத்னா பதிப்பகம் தனது 14வது நூலாக கவிதை தொகுப்பை வெளியிட உள்ளது. இந்த வருடத்தின் தலைப்பு “ இயற்கையைக் காப்போம்”.

கவிதை 24 வரிகள் இருக்க வேண்டும்.

கவிதை ஹைக்கூ, மரபு, புது கவிதை மரபு, நவீனம் என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.5.12

கவிதைகள் To: nagarathna_publication@yahoo.in மற்றும் CC : tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

கவிதை அனுப்புபவர்கள் தங்களின் அலைப்பேசி எண்ணும், முகவரியும் குறிப்பிட்டால் நல்லது. கட்டாயமில்லை.

கவிதைகளை Word doc attachment அனுப்ப வேண்டாம். தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் ஜூன் முதல் வாரத்தில் மின்னஞல் மூலம் தெரிவிக்கப்படும்.

அன்புடன்,
குகன்

Tuesday, May 15, 2012

நீங்கதான் சாவி – மக்கள் குரல் விமர்சனம்


மனிதர்கள் யாரையும் சந்தித்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் போதும். வாழ்க்கையில் ஏதேதோ பிரச்சனைகள், சிக்கல்கள் எனக் கூறுவர். அதனால் என் முன்னற்றமே தடைபட்டு வருகிறது. அதனால் நிம்மதி இல்லை என்று கூறுவதை கேட்க முடிகிறது. ஆனால், எந்த ஒரு பிரச்சினைக்கும், சிக்கலுக்கும் காரணம் நாம்தான் என்பதையும், அதற்கான தீர்வும் நம்மிடமே உள்ளது என்பதையும் பலரும் உணர்ந்ததாக தெரியவில்லை. அதனால் தான், நமது தமிழ் மூதுரையில், ”தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கூறப்படுள்ளது என்பதை எண்ணிப் பார்த்தாலே பொதும். நமது நம்மால் தீர்க்க முடியும் என்பதுடன், வராமலும் தடுத்துக் கொள்ள முடியும் என்பதை அறியலாம். ஆம், நமது சிக்கல்களுக்கான தீர்வு நம்மிடமே உள்ளது. பூட்டுப் போட்டது நாம்தான். எனவே, சாவியும் நம்மிடம் தான் உள்ளது. அதனை முறையாக பயன்படுத்த வேண்டும். தவறவிட்டிருந்தால் தேடி எடுத்து பயன்படுத்த வேண்டும். பென்சில் வாழ்க்கை

 இதனை வலியுறுத்த, ஆசிரியர் சுரேகா ”நீங்கதான் சாவி” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இதற்காக ‘பென்சில் வாழ்க்கை’ என்ற கட்டுரை வரையில் 19\8 தனித்தனி தலைப்புகளில், நாம் செய்யும் தவறுகளையும் அதற்கான தீர்வுகளையும் எளிய தமிழில், பலருக்கு புரியும் எடுத்துக்காட்டுடன் விளக்கி உள்ளார். ’பென்சில் வாழ்க்கை’யில் நாம் நம்மை எப்போதும் கூர்மை படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த, நமக்கு ‘அறிவு விஷயத்தில் போதும்கிற மனசும், பண விஷயத்தில் போதாதுன்கற மனசும் இருக்கு’. அது அப்படியே மாறினா போதும், வெற்றிக்கு நிரந்தர நண்பனா ஆகிடலாம் என்பதை சிறப்பாக கூறியுள்ளார். இது போன்ற பல்வேறு விஷயங்களும் இந்த புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை படித்து முடிக்கும் யாருக்கும் சிறு மாற்றமாவது நிச்சயம் கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.

- மதிவாணன்

நன்றி : மக்கள் குரல் (7.5.12)


இணையத்தில் புத்தகம் வாங்க.... இங்கே

Monday, May 14, 2012

அம்பேத்கார் கேலி சித்திரம் - ஒரு பார்வை

பாடதிட்டத்தில் இருக்கும் நேரு, அம்பேத்கார் கேலி சித்திரம் சமிபக்கால ஊடகத்தின் பரப்பரப்பாக பேசப்படும் ஒரு விஷயம். அம்பேத்கார் புகழை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் சித்திரம், கண்டிப்பாக பாடத்திட்டதில் இருந்து நீக்க வேண்டிய ஒன்று தான். வருகால சங்கதியர்களுக்கு, அதுவும் குறிப்பாக பின்தங்கிய மாணவர்கள் தங்கள் சமுகத்திற்காக உழைத்த தலைவரை தவறாக நினைக்க கூடும்.

ஆனால், எல்லோர் மனதில் எழும் கேள்வி – ஆறுபது வருடங்கள் முன் வரைந்த சித்திரம் அப்போது விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் இப்போது ஏன் இவ்வளவு சர்ச்சை கிளம்பியுள்ளது ?ஒரு முறை, கேலி சித்திரம் வரைந்த சங்கர் தொகுத்த நூலுக்கு பிரதமர் நேரு “ Don’t Spare me sankar !” என்று சொல்லியிருக்கிறார். அதவாது, நான் பிரதமர் என்பதால் உன் கேலி சித்திரத்தில் என்னை விட்டு விடாதே என்று அர்த்தத்தில். சுதந்திர இந்தியாவில் புது சட்டத்தை அமைக்க அம்பேத்காரை நேரு உட்பட பலர் அவரை நெருக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால், அம்பேத்கார் ஒவ்வொரு சட்டத்தை பார்த்து பார்த்து பொறுமையாக அமைத்தார். அதனால், இப்படி ஒரு கேலி சித்திரம் வரைந்ததாக ஒரு பார்வை இருக்கிறது.

சுதந்திர இந்தியாவை, நேருவும், அம்பேத்காரும் வேகமாக இழுத்து செல்லாமல் நத்தைப் போல் மெதுவாக செல்கின்றனர்.நேரு சவாரி செய்யாமல் அம்பேத்காரை வேலை வாங்குகிறார் என்ற இன்னொரு விமர்சனமும் உண்டு. சங்கரின் கேலி சித்திரத்தின் நேருவும் தப்பவில்லை என்பதை ஓய்வுப் பெற்ற ஒரு முத்த பத்திரிகையாளர் மூலம் தெரிந்துக் கொண்டேன்.


அதனால், இந்த கேலி சித்திரம் ஆறுபது வருடங்கள் முன்பு பெரிய கேள்வியோ, சர்ச்சையோ சந்திக்க வில்லை. அன்று இருந்தவர்களின் மனநிலை வேறு. ஆனால், இப்போது சர்ச்சை கிளப்பி உள்ள முக்கிய காரணம் பார்க்கின்றவர்களின் பார்வையும், அதை செயல்படுத்த நினைத்த நல்ல உள்ளங்களும் தான். அம்பேத்காரைப் பற்றி தவறாக எண்ணம் மாணவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நினைப்பவர்கள் தான் காரணம்.


டிசம்பர் 6, தேர்வு செய்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாபர் மசூதியை இடித்த காரணம் அன்று அம்பேத்காரின் நினைவு தினம் என்பதால் தான் என்ற எண்ணம் பலரது மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இந்த கேலி சித்திரம் நேரு குதிரைப் போல் வேக செயல்படக்கூடிய சட்டத்தை எதிர்பார்க்க, அம்பேத்கார் நத்தைப் போல் மெதுவாக செயல்படும் சட்டத்தை அமைத்தார் என்ற அர்த்தில் பரப்ப அந்த (ஆரிய) நல்ல உள்ளங்களுக்கு தோதாக இருக்கும்.

ஆறுபது ஆண்டு காலம் சட்டத்துறையில் செயல்பட்ட எல்லா தவறுகளை அம்பேத்கார் மீது சுமத்திவிட்டு, மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிவார்கள். பின்தங்கியவர்களை முன்னுக்கு கொண்டு வந்த குற்றத்திற்காக அம்பேத்கார் ஆறுபது வருடம் கலித்து இந்த பழியை சுமக்க வேண்டியதாக இருக்கும்.

இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது. அடுத்த ஆண்டு இந்த கேலி சித்திரம் நீக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். எங்கள் அம்மாவிடம் இந்த பொருப்பை ஒப்படைத்திருந்தால், பாடப் புத்தகத்தில் இருந்து அந்த பக்கத்தை கிழித்து கொடுக்க சொல்லியிருப்பார். கிழித்துப் போடுவதற்கு சமச்சீர் பாட புத்தகத்தில் இருக்கும் கலைஞர் கவிதையா என்ன ?


Friday, May 11, 2012

துவந்த யுத்தம் - குறும்படம்

துவந்த யுத்தம் - தமிழர் மீனவர்கள் பிரச்சனையை சொல்லும் குறும்படம். ராமேஸ்வரத்திற்கு மத்திய அமைச்சர் வருவதை அறிந்து அவரை கடத்தி மீனவன் ஜோசப் தன் நண்பனுடன் மீன் பிடிக்க செல்கிறான் . அமைச்சர் தன்னை கடத்தியதற்காக ஜோசப்பை மிரட்டுகிறார். ஜோசப் தங்கள் பிரச்சனையை புரிய வைப்பதற்காக கடத்தி வந்ததாக கூறுகிறான். அப்போது இலங்கை இராணுவம் தூப்பாக்கியால், அவர்கள் கப்பலை நோக்கி சுடுகின்றனர். அவர்கள் கையில் இருக்கும் பணம், பொருளை பரித்துக் கொள்கிறார்கள். அமைச்சர் கை நீட்டி பேச, அவரை சுட துப்பாக்கி எடுக்க ஜோசப்பின் நண்பன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். அவர்களின் மீன் வலைகளை அருக்கவும் ஜோசப்பின் நண்பன் விடவில்லை. அவனை கடலில் தள்ளி, சுட்டுக் கொள்கிறார்கள். ஜோசப்பை தன் நண்பன் இறந்ததை பார்த்து அழுகிறான். அமைச்சர் தன் முன்னால் ஒரு உயிர் பிரிந்ததை பார்த்து உரைந்து போகிறார்.

தாங்கள் தினமும் வாழும் வாழ்க்கை இது தான் என்கிறான் ஜோசப். நாங்கள் அவர்கள் எல்லைக்குள் போகாமலே இலங்கை இராணுவம் தங்களை ஏன் தாக்க வேண்டும் போன்ற கேள்விகளை கேட்கிறான். இதற்கு ஒரு முடிவு வர வேண்டும் என்று தான் கடத்திய காரணத்தை கை கும்பிட்டப்படி கூறுகிறான். அமைச்சர் அவன் கைகளை பிடித்து ஆறுதல் சொல்லுவது போல் கடலை காட்டுகிறார்கள்.

வானோலி செய்தியில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீண்டும் இலங்கை இராணுவம் தாக்கியதாகவும், அதில் ஜோசப் இறந்ததாகவும், ராமேஸ்வரத்தில் மக்கள் போராட்டம் நடத்துவதாகவும் செய்தி கூறுகிறார்கள். "குருதி ஓயவில்லை" என்ற மனதை வருடும் பாடலுடன் குறும்படம் முடிகிறது.

இந்த குறும்படத்தை இயக்கியவர் அஷோக்குமார். இப்படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிட தக்கது.

இணையதளம், புத்தகம் எல்லாம் படித்தவர்கள் மட்டுமே புரிந்துக் கொள்ள விஷயமாக உள்ளது. பாமர மக்களுக்கு பிரச்சனை புரிய வைக்க வேண்டும் என்றால் காட்சி ஊடகமே சரியான வழியாக இருக்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழ் மீனவர்கள் பிரச்சனையை, கூடாங்குளம் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் தான் சராசரி மக்களுக்கு புரியும் என்பதை இந்த குறும்படம் உணர்த்தியுள்ளது. இந்த பிரச்சனைகளை மக்களுக்கு சொல்லும் திரைப்படத்தை விரைவில் எதிர்பார்ப்போம்.


( நன்றி : பொதிகை மின்னல், மே,2012 )Thursday, May 10, 2012

விபச்சாரம்


ஸ்டார் ரூம்மில் புக் செய்து வோட்கா, ஸ்காச், ரம் எல்லாம் ஏற்பாடு செய்த வாடிக்கையாளர் வராத சந்தோஷத்தில் இருந்தாள் தீப்தி. எப்போதும் அறைக்குள் நுழைந்ததும், ப்ளைட் பிடிக்கும் அவசரத்திலே வாடிக்கையாளர்கள் நடந்துக் கொள்வார்கள். ஆனால், இந்த முறை ப்ளைட் லேடானதால், ஒரு நாள் பெரிய பணக்கார வாழ்க்கை வாழும் சந்தர்ப்பம். எதோ ஒரு பிஸினஸ் டீல்காக வரும் வெளிநாட்டு விருந்தினரை சந்தோஷப்படுத்த உள்ளூர் பணக்காரர் செய்த ஏற்பாடு. யார் வீட்டு பணமோ அனுபவிப்போம் என்று இருந்தாள் தீப்தி.

அறையில் இருந்து போர் அடித்ததால், கீழ் இருக்கும் பர்மிட் ரூம்முக்கு சென்றாள். தன்னை போல் மட்டும் அல்லாமல், பெரிய பணக்கார பெண்களும் ஆண்களுக்கு போட்டியாக வோட்காவை குடித்துக் கொண்டு இருந்தனர். பெரும்பாலான பெண்கள் நடுத்தர வயதில் இருப்பவர்கள். யாரும் கணவனுடன் வரவில்லை என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.

தான் தங்கியிருக்கும் ரூம் கணக்கில், தீப்தி ஒரு வோட்காவை ஆர்டர் செய்தாள். அப்போது, தனியாக அமர்ந்திருந்த ஒரு ஆண் தன்னை உற்று நோக்குவதை கவனித்தாள். தீப்தி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


 
வோட்கா வந்ததும் ஒரு க்ளாஸ்ஸில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தாள். அவளை வைத்த கண் மாறாமல் அந்த ஆள் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்தாள்.

இன்று, ஒரு நாள் ஆண் துணையில்லாமல் தூங்கலாம் என்று இருந்த தீப்தி, பெரிய ஓட்டலில் கிடைக்கும் பெரிய வாடிக்கையாளரை விட்டுவிட மனம் வரவில்லை. சும்மா தனியாக பெரிய அறையில் தூங்குவதற்கு, பெரிய வாடிக்கையாளர் பிடித்து வைப்போம் என்று நினைத்தாள் தீப்தி.

மீண்டும் பணக்கார வாழ்க்கை இந்த வாடிக்கையாளர் மூலம் கிடைக்கலாம். யார் கண்டது, பெரிய ஆளாக இருந்தால் வெளிநாட்டுக்கு கூட துணைக்கு அழைத்து செல்லலாம். பணத்துக்கு பணம், சந்தோஷத்திற்கு சந்தோஷம்.

அவளாகவே வழிய சென்று அந்த ஆண்ணின் டேபிலில் அமர்ந்தாள்.

”ஹாய் ! ஐ எம் தீப்தி “ என்று தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டாள்.

“ஐ எம் ஷாம். ஆர் யூ வெயிட்டிங் பார் சம்படி ?” என்று கேட்டான்.

“இல்ல...யூ..?” என்று கேட்க, அவனும் இல்லை என்று மறுத்து இருவரும் வோட்கா, ரம் என்று குடித்துக் கொண்டு இருந்தனர்.

தீப்தி பேச பேச பதிலளித்தானே தவிர அவனாக எதுவும் கேட்கவில்லை. பேசவில்லை. ஒரு கட்டத்தில் தானே அதைப் பற்றி எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தாள்.

“ஷல் வீ கோ டூ ரூம் ?” என்று ஷாம் கேட்க, தீப்தி முன்பே கேட்டிருக்க கூடாதா ? இவ்வளவு நேரம் இதற்கு மொக்கை போட வேண்டியதாக இருந்தது என்று நினைத்துக் கொண்டாள்.

எப்போது வாடிக்கையாளரிடம் பணம் விஷயம் பேசிய பிறகு தான் தீப்தி செல்வாள். ஆனால், பெரிய ஓட்டலில் ரூம் எடுத்திருப்பவன், இவனிடம் பேரம் பேசினால் நன்றாக இருக்காது. கண்டிப்பாக பெரிய அமௌண்ட் கிடைக்கும் என்று தீப்திக்கு தோன்றியது. அவனுடன் குடிப்போதையில் சென்றாள்.

எனோ தன் ரூம்முக்கு போக வேண்டாம் என்று ஷாம் மறுத்தான். சரி ! இருக்குகவே இருக்கிறது வெளிநாட்டு விருந்தினர்காக காலியாக இருக்கும் ரூம். தீப்தியும், ஷாமும் குடி போதையில் அறைக்குள் நுழைந்தனர்.

தான் பார்த்த வாடிக்கையாளர்களில் ஷாம் மிகவும் விஷயம் உள்ளவன். பெண்களிடம் அதிகம் பழகுபவனாலே அவளது அந்தரங்க தேவையை புரிந்துக் கொள்ள முடியும். ஷாமும் அப்படி பட்டவன் தான். என்ன சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது.

தமிழ்படங்கள் நடக்கும் சென்சார் கட் செய்யப்படும் எல்லா காட்சிகளும் அந்த அறைக்குள் அரங்கேறியது.

இரவு இரண்டு மணி வரை முழித்து இருந்தாலும், காலையில் எட்டு மணிக்கே ஷாம் எழுந்து தீப்தியை எழுப்பினான்.

”தீப்தி ! நான் காலேஜ் கிளம்பனும். ரூ.5000 பணம் கொடுத்திங்கனா போவேன்.”

“வாட் யூ மின் ???”

“ விளையாடதீங்க தீப்தி ! ஒரு நைட்க்கு 5000 வாங்குவேன். நானும் நேத்து என்ஜாய் பண்ணேன். அட் லீஸ்ட் ரூ.3000 ஆவது கொடுங்க…!!”

“ ஹோ காட்… யூ கிகலோ** !!!”** gigolo - பணத்திற்காக பெண்ணிடம் கலவியில் ஈடுபடுப்வன். விபச்சாரன் ( இப்படி ஒரு வார்த்தை தமிழில் இருக்கிறதா தெரியவில்லை.)

Friday, May 4, 2012

தேசிய விலங்கு : பாலா

ஒரு கவிதை நூலுக்கு அதிகம் பேர் அணிந்துரை எழுதிய பிரிவு என்று கின்னஸ் சாதனையில் இருந்தால் கண்டிப்பாக இந்த நூலை பரிந்துரை செய்யலாம்.

வைகோ
பழ.நெடுமாறன்
காசி ஆனந்தன்
அறிவுமதி
சீமான்
வே.ஆனைமுத்து
கொளத்தூர் மணி
தியாகு
வ.கௌதம்
பாரதி கிருஷ்ணகுமார்
மற்றும்
நக்கீரன் கோபால்

- என்று 11 பேர் அணிந்துரை எழுதியுள்ளார்கள். கவிதைகளை விட அணிந்துரை படிக்கவே அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆண்டு மலர் படிக்கும் எண்ணம் தொற்றிக் கொள்கிறது. அதே சமயம் எந்த கவிதையும் குறை சொல்லுவதற்கு இல்லை.

பிரபாகரனின் அட்டைப்படம், தலைப்பும் இந்த கவிதை நூலை வாசிக்க வைத்தது. நக்கீரனின் அவ்வபோது ‘நச்’ கவிதைகளில் பாலா எழுதியுள்ளார். அதன் பிரபதிபலிப்போ என்னவோ ஒவ்வொரு கவிதைகளும் ‘நச்’ என்று ஐந்து, ஆறு வரிகளில் எழுதியுள்ளார்.

முன்னொரு காலத்தில்
முறத்தால்
புலி விரட்டிய
தமிழச்சி…
இன்று புலியாகிவிட்டாள்…!

ஈழ கனவு சிலருக்கு பேச்சாகவும், வீரமாக வரும்... தோழர் பாலா கவிதையாக வந்துள்ளது. கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய ‘பிணம் தின்னும் தேசம்’ ஈழ கவிதை நூலுக்கு பிறகு நான் வாசித்த ஈழ கவிதை நூல் இது தான்.

தமிழர்களின் ஒற்றுமையின்மை ஒற்றுமையின் சின்னமான காக்கை வைத்தே சொல்லியிருக்கிறார்.

காக்கைகள்
காலி செய்து விடும்
தமிழகத்தை விட்டு,
ஒற்றுமையில்லாத
தமிழனை பார்த்து
ஒரு வேளை நாமும்
கெட்டுப் போவோம் என்று… !

இனப்படு கொலையில் ராஜபக்சே ஹிட்லருக்கு குருவாக இருக்கிறார் என்பதை இந்த வரி கவிதைகள் சொல்லும்.

இனவெறியில்
ஹிட்லருக்கு கொடுக்கலாம்
ராஜபக்சே
பட்டம்…!

ஹிட்லரும் வல்லரசு உதவியோடு இனப்படு கொலை செய்திருந்தால் அவருக்கு இந்த உலகம் கதாநாயகன் பட்டியலில் சேர்த்திருக்கும். இன்று ராஜபக்சேவுக்கு தெரிந்தது ஹிட்லருக்கு தெரியாமல் போனது.

கள்ளத்தோனி இறந்த உயிர்களை எட்டு வார்த்தை கவிதையில் உருக்கமாக சொல்லியிருக்கிறார் பாலா.

படகுகளில்
சில சமயம்
சவாரி
பல சமயம்
சமாதி…!

ஒரு முறை வனப்புலி அழிந்து வருவதை பற்றின ஆவணப்படம் ஒன்று அறிவுப்பு பார்த்தவும், என் நண்பர் ஒருவர் ‘விடுதலைப் புலிகள்’ பற்றின படமா ? என்று கேட்டார். இந்த கேள்வி கேலியாக இருந்தாலும், அதனுள் ஒழிந்து இருக்கும் உண்மை எவ்வளவோ இருக்கிறது.

வனப்புலிகளுக்காக
வருந்தும் தேசமே
எம்
இனப்புலிகள்
அழிப்பிற்கு மட்டும்
உன் துப்பாக்கி
உதவியோ ?

காட்டில் மான் வேட்டை அனுமதியில்லை. புலிகளை கொன்றால் சட்டப்படி குற்றம். கடலுக்கு மீன் பிடிக்க 45 நாட்கள் தடைக்கூட உள்ளது. ஆனால், மூன்று வருடங்களாக இடைவேளை இல்லாமல் ஈழ தமிழர்கள் கொடுமைப்படுத்து வருதை மட்டும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழர்கள் !!!

மனிதர்கள் மதம் மாறும் மத்தியில் கடவுளை மதம் மாற்றியது போன்ற கற்பனையை கண்டிப்பாக பாராட்டலாம்.

கண்ணை மூடிக்கிடக்கும்
புத்தனே !
கண்களைத் திற
உன்னை
யுத்த மதத்திற்கு மாற்றிவிட்டார்கள்

அதிக பக்கங்கள் கொண்ட அணிந்துரையும், விலையும் மட்டுமே என்னை முகம் சுழிக்க வைத்தது. மற்றப்படி இந்த கவிதைகளை அரை மணி நேரத்தில் வாசித்துவிடலாம். ஒவ்வொரு கவிதைகளும் ஈழ உணர்வை பதிவு செய்ததோடு இல்லாமல் வாசகர்களையும் உணர வைத்திருக்கிறார்.

***
நூல் விபரம் :
 
தேசிய விலங்கு
பாலா

பக். 62, விலை. ரூ.60/-
விசை பதிப்பகம்
98652 80440

Wednesday, May 2, 2012

துளித்துளி நிலா : மன்னை பாசந்தி
பல கவிதைகள் இன்று சிஸரசிங் முறையிலே பிறக்கிறது. மேடையில் கவிதை வாசிக்க வேண்டும், வார மாத இதழ்கள் கொடுக்கும் தலைப்பில் எழுத வேண்டும் என்று தங்களை தாங்களே கட்டாயப்படுத்தி செயற்கை தனமாக கவிதை பிரசவித்து வருகின்றன. இயற்கையாக தங்களுக்குள் இருக்கும் கவிதையையும், அதற்காக வர வேண்டிய உணர்வையும் வருவதில்லை. மருந்துகள் எதுவும் இல்லாமல் வலியுடன் நரம்புகள் பின்னி பெடலெடுத்து சுப பிரசவத்தில் பிறக்கும் குழந்தைப் போல் ஒரு சில கவிதைகள் நம் வாழ்வோடு ஒட்டிக் கொள்கிறது. மன்னை பாசந்தி கவிதைகளும் அப்படிதான்.

செயற்கை தனமாக எழுத வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. அவர் எழுதிய ‘துளித்துளி நிலா’ சுப பிரசவக் குழந்தை போல தான். அதற்கு பின்னால் எவ்வளவோ வேதனை, வலி, தேடல் இருந்ததால் தான் அவருடைய நம் மனதில் ஒட்டிக் கொள்கிறது.


சொர்க்கம்
தெரிந்தது
மழலைச் சிரிப்பு

என்று குழந்தைகள் பற்றின தனது ஹைக்கூ தொகுப்பு நூலை தொடங்குகிறார்.

பல பக்கங்கள் உலக சம்பவங்களை பதிவு செய்யும் கவிதகள் நடுவில், மூன்று வரிகளில் உலகத்தை கேள்வி கேட்பது ஹைக்கூ கவிதைகள். இதோ மன்னை பாசந்தி நம் அரசுக்கு எதிராக கேட்கும் ஹைக்கூ கேள்விகள்.

உலகில் முதலிடம் இந்தியா
ஆனாலும் தலைக் குனிவு
ஊழல் !


*


கள் குடிக்காதீர்
கள்ளத்தனமாய் குடிக்காதீர்
தெருவெங்கும் டாஸ்மார்க்


*


அரசியல்வாதிகளின் சண்டை
அலறுகிறது
சமச்சீர் கல்வி


இவரின் கோபத்திற்கு கடவுள் கூட தப்பவில்லை.

கடவுளின் படைப்பில்
கலப்படம்
திருநங்கை.


நேரடியாக கருத்து சொல்லும் கவிதைகளை விட நகைச்சுவையாக இருக்கும் கவிதை மிக ஆபத்தாக இருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உண்மையை உறைக்க வைக்கிறார்.


செல்லும் போச்சு
உயிரும் போச்சு
செல்போன் பேச்சு


*


நேரம் தவறாத
இல்லதரசிகள்
தொலைக்காட்சி தொடர்


ஹைக்கூ கவிதைகள் வார்த்தைகளை நம்பி இருப்பதில்லை. வார்த்தைகளற்ற மௌனமே கூட ஒரு நல்ல ஹைக்கூ தான்.

இரண்டு வரி இதழோடு மூன்றாவது வரி முத்தம் சேர்வது ஹைக்கூ. இரண்டு கையில் தவழ்ந்து வரும் குழந்தை மூன்றவதாக தந்தையின் விரலைப் பிடிப்பது ஹைக்கூ. இந்த இரண்டு பக்க விமர்சனங்களை படித்து விட்டு மூன்றவதாக மன்னை பாசந்தி நூலை வாங்கி படிப்பது ஹைக்கூ தான்.

நம்மை சுற்றி ஹைக்கூக்கள் நிறைந்து இருக்கின்றன. அதை கவனித்து பார்த்து தோண்டி எடுத்தால், ‘துளித்துளி நிலா’ ஹைக்கூ நூல் போல் எழுதலாம். கவனிக்காமல் போனால் இயந்திரங்களோடு இயந்திரமாக வாழலாம்.

***

நூல் விபரம் :
துளித்துளி நிலா
மன்னை பாசந்தி
பக்.32, விலை : ரூ.15/-
மின்னல் கலைக்கூடம் வெளியீடு
117, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட், சென்னை.

LinkWithin

Related Posts with Thumbnails