இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி
சுதந்திரம் என்பது பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளும் ஒரு வியாபாரப் பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றி கொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.
எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும் போது, முழு உலகமே கவலை கொள்ளலாம்ல் கண்டனங்கள் தெரிவிக்கலாம்; கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய நம்முடையது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வீழ்ந்தவர்கள் எல்லாம் விதையாகிப் போனதால் தான் விடுதலைப் போர் இன்றும் தொடர்கின்றது.
வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தி அல்ல. அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்து சூத்திரப் பொருளும் அல்ல, வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு, மனிதனே வரலாற்றைப் படைக்கிறான். மனிதனே தனது தலைவிதியையும் நிர்ணயிக்கிறான்.
விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளர்களாக இராது, நேரடிப் பங்காளிகளாக மாற வேண்டும்.
உயிரோடு எதிரிகளின் கைகளில் பிடிபடுவதைவிட கௌரவமாகச் சாவதை விரும்புகிறோம்.
நாம் சமாதானத்திற்கும் தயார். போருக்கும் தயார். நாம் சமாதானத்தின் கதவை திறப்பதா? அல்லது யுத்தத்தின் பாதையில் செல்வதா ? என்பதை எதிரி தான் தீர்மானிக்க வேண்டும். நாம் சமாதானத்தின் கதவுகளை திறந்து விட்டிருக்கின்றோம்.
விடுதலைப் புலிகள் மக்களிடமிருந்து வேறுப்பட்டவர்கள் அல்லர்; விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள் தான் மக்கள். மக்கள்தான் புலிகள்.
பிரிவினைவாதம் என்பது தவறான சித்தாந்தம். இதனை எங்கள் போராட்டத்திற்கு பிரயோகிக்க முடியாது. எங்கள் இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடி வருகிறோம்.
தமிழீழக் காவல் துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப் பிடித்து கூண்டில் நிறுத்துவது தமிழீழக் காவல்துறையின் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் லட்சியமாகும்.
மாவீரர் நாள் எமது தேசத்தின் துக்க நாள் அல்ல; நாம் கண்ணீர் சிந்திக் கவலை கொள்ளும் சோக நாளும் அல்ல. இன்றைய நாள், ஒரு தேசிய எழுச்சி நாள், எமது தேசம் சுதந்திரம் வேண்டி உறுதி பூணும் புரட்சித் தினம்.
எமது விடுதலைப் போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.
இந்தியாவின் உதவியை நம்பி மட்டுமல்லாது ஏதேனும் ஒரு வெளியார் உதவியை நம்பி நாம் விடுதலை போரைத் துவக்கவில்லை. நாம் உயிருள்ளவரை போராடுவோம். நான் இறந்தால், வேறு ஒருவர் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்வார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சொன்னது போல் எந்த ஒரு விடுதலைப் போராளியும் தன்னால்தான் விடுதலை கிடைக்கும் என தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியாது. விடுதலையைப் பெறாமல் இன்றைய தலைமுறை இறந்தால், அடுத்த தலைமுறை அப்போரைத் தொடரும்
எதிரிகளை மன்னிப்பதோ தண்டிப்பதோ கடவுள் செய்வார்… அவர்களை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டுமே நாம் செய்ய வேண்டும்
வெளியீடு
மேதகு பிரபாகரனின் புரட்சிகரச் சிந்தனைகள்
தமிழன் பாபு
பக்:128, ரூ.60/-
வள்ளலார் பதிப்பகம்
போளூர் – 606 803
திருவண்ணாமலை மாவட்டம்.
பேசி : 99404 48599
No comments:
Post a Comment