வாழ்க்கையில் வளர்ந்து பல வெற்றிகள், சாதனைகள் குவித்தாலும், நாம் திரும்பி சென்று வாழ நினைக்கும் பருவம் குழந்தை பருவம். பள்ளி வாழ்க்கையில் நண்பர்களுடன் விளையாட்டுக்காக சண்டைப்போட்டு , உருண்டு பிரண்டு மகிழ்ந்த பருவம்.... பல முறை நினைத்தாலும் பசுமையான மின்னும். இரண்டு சிறுவர்களுக்குள் நடக்கும் போட்டி தான் கதை களன்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் (ராஜ் மோகன்), சந்தீப் (கௌரவ்) தேர்வில் இருவரும் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள். அதற்கு பரிசாக ஆசிரியர் சாக்லெட் ஒன்றை சந்தோஷிடம் கொடுத்து இருவரையும் பங்கு போட்டுக் கொள்ள சொல்கிறார். ஆசிரியர் சந்தோஷிடம் சாக்லெட் கொடுத்தது சந்தீப்புக்கு பிடிக்கவில்லை. சந்தோஷ் சந்தீப்பை அழைத்து மீதி சாக்லெட் கொடுக்க வர, அவன் மறுக்கிறான். அடுத்த தேர்வில் அவனை விட அதிக மதிப்பெண் எடுத்து முழு சாக்லெட் தான் சாப்பிடுவேன் என்கிறான் சந்தீப். சந்தோஷ் சந்தீப்பின் சவாலை ஏற்றுக் கொள்கிறான். இருவரில் யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள் என்பது தான் கதை.
சிறுவர்களின் பள்ளி உலகத்தை காட்டியிருக்கும் இந்த குறும்படம் பல விருதுகளை குவித்துள்ளது. பல வெளிநாட்டு குறும்பட போட்டிகளிலும் இந்தியா சார்பாக இக்குறும்படம் தேர்வு செய்து அனுப்பியுள்ளார்கள்.
1 comment:
நண்பா.....:) குறும்படம் ஓ கே...நல்லா இருக்கு ...
குச்சி ஐஸ் ஒன்னு வேணும் தருவீங்களா..?
உங்க பதிவின் வார்த்தைகளில் கொஞ்சம் அக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்..
Post a Comment