வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, May 11, 2012

துவந்த யுத்தம் - குறும்படம்

துவந்த யுத்தம் - தமிழர் மீனவர்கள் பிரச்சனையை சொல்லும் குறும்படம். ராமேஸ்வரத்திற்கு மத்திய அமைச்சர் வருவதை அறிந்து அவரை கடத்தி மீனவன் ஜோசப் தன் நண்பனுடன் மீன் பிடிக்க செல்கிறான் . அமைச்சர் தன்னை கடத்தியதற்காக ஜோசப்பை மிரட்டுகிறார். ஜோசப் தங்கள் பிரச்சனையை புரிய வைப்பதற்காக கடத்தி வந்ததாக கூறுகிறான். அப்போது இலங்கை இராணுவம் தூப்பாக்கியால், அவர்கள் கப்பலை நோக்கி சுடுகின்றனர். அவர்கள் கையில் இருக்கும் பணம், பொருளை பரித்துக் கொள்கிறார்கள். அமைச்சர் கை நீட்டி பேச, அவரை சுட துப்பாக்கி எடுக்க ஜோசப்பின் நண்பன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். அவர்களின் மீன் வலைகளை அருக்கவும் ஜோசப்பின் நண்பன் விடவில்லை. அவனை கடலில் தள்ளி, சுட்டுக் கொள்கிறார்கள். ஜோசப்பை தன் நண்பன் இறந்ததை பார்த்து அழுகிறான். அமைச்சர் தன் முன்னால் ஒரு உயிர் பிரிந்ததை பார்த்து உரைந்து போகிறார்.

தாங்கள் தினமும் வாழும் வாழ்க்கை இது தான் என்கிறான் ஜோசப். நாங்கள் அவர்கள் எல்லைக்குள் போகாமலே இலங்கை இராணுவம் தங்களை ஏன் தாக்க வேண்டும் போன்ற கேள்விகளை கேட்கிறான். இதற்கு ஒரு முடிவு வர வேண்டும் என்று தான் கடத்திய காரணத்தை கை கும்பிட்டப்படி கூறுகிறான். அமைச்சர் அவன் கைகளை பிடித்து ஆறுதல் சொல்லுவது போல் கடலை காட்டுகிறார்கள்.

வானோலி செய்தியில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீண்டும் இலங்கை இராணுவம் தாக்கியதாகவும், அதில் ஜோசப் இறந்ததாகவும், ராமேஸ்வரத்தில் மக்கள் போராட்டம் நடத்துவதாகவும் செய்தி கூறுகிறார்கள். "குருதி ஓயவில்லை" என்ற மனதை வருடும் பாடலுடன் குறும்படம் முடிகிறது.

இந்த குறும்படத்தை இயக்கியவர் அஷோக்குமார். இப்படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிட தக்கது.

இணையதளம், புத்தகம் எல்லாம் படித்தவர்கள் மட்டுமே புரிந்துக் கொள்ள விஷயமாக உள்ளது. பாமர மக்களுக்கு பிரச்சனை புரிய வைக்க வேண்டும் என்றால் காட்சி ஊடகமே சரியான வழியாக இருக்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழ் மீனவர்கள் பிரச்சனையை, கூடாங்குளம் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் தான் சராசரி மக்களுக்கு புரியும் என்பதை இந்த குறும்படம் உணர்த்தியுள்ளது. இந்த பிரச்சனைகளை மக்களுக்கு சொல்லும் திரைப்படத்தை விரைவில் எதிர்பார்ப்போம்.


( நன்றி : பொதிகை மின்னல், மே,2012 )No comments:

LinkWithin

Related Posts with Thumbnails