வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 14, 2012

அம்பேத்கார் கேலி சித்திரம் - ஒரு பார்வை

பாடதிட்டத்தில் இருக்கும் நேரு, அம்பேத்கார் கேலி சித்திரம் சமிபக்கால ஊடகத்தின் பரப்பரப்பாக பேசப்படும் ஒரு விஷயம். அம்பேத்கார் புகழை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் சித்திரம், கண்டிப்பாக பாடத்திட்டதில் இருந்து நீக்க வேண்டிய ஒன்று தான். வருகால சங்கதியர்களுக்கு, அதுவும் குறிப்பாக பின்தங்கிய மாணவர்கள் தங்கள் சமுகத்திற்காக உழைத்த தலைவரை தவறாக நினைக்க கூடும்.

ஆனால், எல்லோர் மனதில் எழும் கேள்வி – ஆறுபது வருடங்கள் முன் வரைந்த சித்திரம் அப்போது விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் இப்போது ஏன் இவ்வளவு சர்ச்சை கிளம்பியுள்ளது ?



ஒரு முறை, கேலி சித்திரம் வரைந்த சங்கர் தொகுத்த நூலுக்கு பிரதமர் நேரு “ Don’t Spare me sankar !” என்று சொல்லியிருக்கிறார். அதவாது, நான் பிரதமர் என்பதால் உன் கேலி சித்திரத்தில் என்னை விட்டு விடாதே என்று அர்த்தத்தில். சுதந்திர இந்தியாவில் புது சட்டத்தை அமைக்க அம்பேத்காரை நேரு உட்பட பலர் அவரை நெருக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால், அம்பேத்கார் ஒவ்வொரு சட்டத்தை பார்த்து பார்த்து பொறுமையாக அமைத்தார். அதனால், இப்படி ஒரு கேலி சித்திரம் வரைந்ததாக ஒரு பார்வை இருக்கிறது.

சுதந்திர இந்தியாவை, நேருவும், அம்பேத்காரும் வேகமாக இழுத்து செல்லாமல் நத்தைப் போல் மெதுவாக செல்கின்றனர்.நேரு சவாரி செய்யாமல் அம்பேத்காரை வேலை வாங்குகிறார் என்ற இன்னொரு விமர்சனமும் உண்டு. சங்கரின் கேலி சித்திரத்தின் நேருவும் தப்பவில்லை என்பதை ஓய்வுப் பெற்ற ஒரு முத்த பத்திரிகையாளர் மூலம் தெரிந்துக் கொண்டேன்.


அதனால், இந்த கேலி சித்திரம் ஆறுபது வருடங்கள் முன்பு பெரிய கேள்வியோ, சர்ச்சையோ சந்திக்க வில்லை. அன்று இருந்தவர்களின் மனநிலை வேறு. ஆனால், இப்போது சர்ச்சை கிளப்பி உள்ள முக்கிய காரணம் பார்க்கின்றவர்களின் பார்வையும், அதை செயல்படுத்த நினைத்த நல்ல உள்ளங்களும் தான். அம்பேத்காரைப் பற்றி தவறாக எண்ணம் மாணவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நினைப்பவர்கள் தான் காரணம்.


டிசம்பர் 6, தேர்வு செய்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாபர் மசூதியை இடித்த காரணம் அன்று அம்பேத்காரின் நினைவு தினம் என்பதால் தான் என்ற எண்ணம் பலரது மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இந்த கேலி சித்திரம் நேரு குதிரைப் போல் வேக செயல்படக்கூடிய சட்டத்தை எதிர்பார்க்க, அம்பேத்கார் நத்தைப் போல் மெதுவாக செயல்படும் சட்டத்தை அமைத்தார் என்ற அர்த்தில் பரப்ப அந்த (ஆரிய) நல்ல உள்ளங்களுக்கு தோதாக இருக்கும்.

ஆறுபது ஆண்டு காலம் சட்டத்துறையில் செயல்பட்ட எல்லா தவறுகளை அம்பேத்கார் மீது சுமத்திவிட்டு, மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிவார்கள். பின்தங்கியவர்களை முன்னுக்கு கொண்டு வந்த குற்றத்திற்காக அம்பேத்கார் ஆறுபது வருடம் கலித்து இந்த பழியை சுமக்க வேண்டியதாக இருக்கும்.

இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது. அடுத்த ஆண்டு இந்த கேலி சித்திரம் நீக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். எங்கள் அம்மாவிடம் இந்த பொருப்பை ஒப்படைத்திருந்தால், பாடப் புத்தகத்தில் இருந்து அந்த பக்கத்தை கிழித்து கொடுக்க சொல்லியிருப்பார். கிழித்துப் போடுவதற்கு சமச்சீர் பாட புத்தகத்தில் இருக்கும் கலைஞர் கவிதையா என்ன ?


2 comments:

mohamedali jinnah said...

அருமையான கட்டுரை

Gobinath said...

சரிதான் போங்கள். இவனுகளுக்கு எது கிடைச்சாலும் அதில அரசியல் இலாபம் எப்படி கிடைக்கும்னுதான் பார்ப்பாங்க.

LinkWithin

Related Posts with Thumbnails