வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts
Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts

Tuesday, August 7, 2012

அணு உலை எதிர்ப்பு தினம்


ஐன்ஸ்டின் தான் கண்டுபிடித்த அணு ஆயுதத்தை பயன்ப்படுத்த வேண்டாம் என்று எவ்வளோ முயன்றும், அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென் அணு ஆயுதத்தை ஹிரோஷிமா மீது இன்று(அகஸ்ட் 6, 1945) தான் பயன்ப்படுத்தினார். தன் வாழ்நாள் முழுக்க செய்த பாவத்திற்கு, அணு ஆயுதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார் ஐன்ஸ்டின்.

அனைத்து நாடுகளுக்கும் யூரேனியத்தை அளிக்கும் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு அணு உலைக் கூட இல்லை. வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் அணு கைவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். காரணம், ஹிரோஷிமா அணு குண்டு உலகிற்கு ஏற்ப்படுத்திய பாதுப்பு.

நேற்றோடு ( ஆகஸ்ட் 6) ஹிரோஷிமா குண்டு வெடிப்பு நிகழ்ந்து 67 ஆண்டுகள் ஆகிறது. அதை நினைவூட்டு வகையில் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகே “அணு உலை” எதிர்ப்புக்கான கூட்டம் நடந்தது.

இரண்டாம் உலகப் போரில் எத்தனையோ மாற்றுதிறனாளிகளை உருவாக்கிறது. அவர்களுக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் போது, தெரிந்தே நாம் ஏன் அணு உலை மூலம் இன்னும் மாற்றுதிறனாளிகளை உருவாக்க வேண்டும் என்ற கேள்விகள் ஏழுப்பப்பட்டது.

தங்களைப் போல் மற்றவர்களும் மாற்றுதிறனாளிகளாகக் கூடாது என்று இவர்களின் போராட்டம் வெற்றிப் பெற வேண்டும். இவர்களுக்கு இருக்கும் சமூக உணர்வு இரண்டு கை, கால் இருந்து... எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் எனக்கு குற்றவுணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.



Monday, May 14, 2012

அம்பேத்கார் கேலி சித்திரம் - ஒரு பார்வை

பாடதிட்டத்தில் இருக்கும் நேரு, அம்பேத்கார் கேலி சித்திரம் சமிபக்கால ஊடகத்தின் பரப்பரப்பாக பேசப்படும் ஒரு விஷயம். அம்பேத்கார் புகழை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் சித்திரம், கண்டிப்பாக பாடத்திட்டதில் இருந்து நீக்க வேண்டிய ஒன்று தான். வருகால சங்கதியர்களுக்கு, அதுவும் குறிப்பாக பின்தங்கிய மாணவர்கள் தங்கள் சமுகத்திற்காக உழைத்த தலைவரை தவறாக நினைக்க கூடும்.

ஆனால், எல்லோர் மனதில் எழும் கேள்வி – ஆறுபது வருடங்கள் முன் வரைந்த சித்திரம் அப்போது விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் இப்போது ஏன் இவ்வளவு சர்ச்சை கிளம்பியுள்ளது ?



ஒரு முறை, கேலி சித்திரம் வரைந்த சங்கர் தொகுத்த நூலுக்கு பிரதமர் நேரு “ Don’t Spare me sankar !” என்று சொல்லியிருக்கிறார். அதவாது, நான் பிரதமர் என்பதால் உன் கேலி சித்திரத்தில் என்னை விட்டு விடாதே என்று அர்த்தத்தில். சுதந்திர இந்தியாவில் புது சட்டத்தை அமைக்க அம்பேத்காரை நேரு உட்பட பலர் அவரை நெருக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால், அம்பேத்கார் ஒவ்வொரு சட்டத்தை பார்த்து பார்த்து பொறுமையாக அமைத்தார். அதனால், இப்படி ஒரு கேலி சித்திரம் வரைந்ததாக ஒரு பார்வை இருக்கிறது.

சுதந்திர இந்தியாவை, நேருவும், அம்பேத்காரும் வேகமாக இழுத்து செல்லாமல் நத்தைப் போல் மெதுவாக செல்கின்றனர்.நேரு சவாரி செய்யாமல் அம்பேத்காரை வேலை வாங்குகிறார் என்ற இன்னொரு விமர்சனமும் உண்டு. சங்கரின் கேலி சித்திரத்தின் நேருவும் தப்பவில்லை என்பதை ஓய்வுப் பெற்ற ஒரு முத்த பத்திரிகையாளர் மூலம் தெரிந்துக் கொண்டேன்.


அதனால், இந்த கேலி சித்திரம் ஆறுபது வருடங்கள் முன்பு பெரிய கேள்வியோ, சர்ச்சையோ சந்திக்க வில்லை. அன்று இருந்தவர்களின் மனநிலை வேறு. ஆனால், இப்போது சர்ச்சை கிளப்பி உள்ள முக்கிய காரணம் பார்க்கின்றவர்களின் பார்வையும், அதை செயல்படுத்த நினைத்த நல்ல உள்ளங்களும் தான். அம்பேத்காரைப் பற்றி தவறாக எண்ணம் மாணவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நினைப்பவர்கள் தான் காரணம்.


டிசம்பர் 6, தேர்வு செய்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாபர் மசூதியை இடித்த காரணம் அன்று அம்பேத்காரின் நினைவு தினம் என்பதால் தான் என்ற எண்ணம் பலரது மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இந்த கேலி சித்திரம் நேரு குதிரைப் போல் வேக செயல்படக்கூடிய சட்டத்தை எதிர்பார்க்க, அம்பேத்கார் நத்தைப் போல் மெதுவாக செயல்படும் சட்டத்தை அமைத்தார் என்ற அர்த்தில் பரப்ப அந்த (ஆரிய) நல்ல உள்ளங்களுக்கு தோதாக இருக்கும்.

ஆறுபது ஆண்டு காலம் சட்டத்துறையில் செயல்பட்ட எல்லா தவறுகளை அம்பேத்கார் மீது சுமத்திவிட்டு, மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிவார்கள். பின்தங்கியவர்களை முன்னுக்கு கொண்டு வந்த குற்றத்திற்காக அம்பேத்கார் ஆறுபது வருடம் கலித்து இந்த பழியை சுமக்க வேண்டியதாக இருக்கும்.

இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது. அடுத்த ஆண்டு இந்த கேலி சித்திரம் நீக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். எங்கள் அம்மாவிடம் இந்த பொருப்பை ஒப்படைத்திருந்தால், பாடப் புத்தகத்தில் இருந்து அந்த பக்கத்தை கிழித்து கொடுக்க சொல்லியிருப்பார். கிழித்துப் போடுவதற்கு சமச்சீர் பாட புத்தகத்தில் இருக்கும் கலைஞர் கவிதையா என்ன ?


Thursday, December 29, 2011

ஐரோம் ஷர்மிளா : மணிப்பூரின் இரும்பு பெண்மணி

தாழ்த்தப்பட்டவன் ஆயுதம் எடுத்தால் நக்ஸலைட். தமிழன் ஆயுதம் எடுத்தால் விடுதலை புலி. இன்று தேசிய அளவில் இப்படி பலரது எண்ணங்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அகிம்சை அறிமுகப்படுதிய இந்தியாவில் மக்கள் ஏன் வன்முறையில் இறங்குகிறார்கள் ? என்று காந்தி ஆதரவாளர்கள் வக்கனையாக பேச தெரியும். அன்னா ஹசாரே உண்ணா விரதத்திற்கு கூட்டமாக சென்று ஆதரவு அளிக்க தெரியும். ஊடகத்தில் அகிம்சையை பற்றி பேச தெரியும். ஆனால், இவர்களுக்கு முன்பு பதினொரு வருடங்களாக தன் இளமையை தொலைத்து ஒரு பெண்மணி தன் மாநிலத்திற்காக போராடி வருகிறாள். அவளுக்காக குரல் கொடுக்கவோ, ஆதரவு தெரிவிக்கவோ யாருமில்லை. வருடத்துக்கு ஒரு முறை, ஷர்மிளா பத்து வருடம் உண்ணாவிரதம் முடித்துவிட்டார், பதினொரு வருடம் முடித்துவிட்டார் என்று செய்தி வெளியீடுவது சடங்காகவே இருக்கிறது. அவர் போராட்டத்திற்கு பெரிய முன்னேற்றமில்லை.

மணிப்பூர். இந்தியாவின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஓரமான மாநிலம் மட்டுமல்ல. இந்திய அரசு ஓரம் கட்டிய மாநிலம். இயற்கை வளம். அழகான தேயிலை தோட்டம். வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று. இப்படி பல வர்ணனை வார்த்தைகள் மணிப்பூரை சொல்கிறார்கள். ஆனால், அந்த மாநிலம் பிரிவினைவாதிகளிடமும், இந்திய இராணுவத்திடமும் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது. ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள் மணிப்பூர் கிராமத்து மக்களை மிரட்டி தங்களுக்கு தேவையான உணவு, பணம் வாங்கிவருகிறார்கள். அவர்களை பிடிக்க முடியாத இந்திய இராணுவம் உதவி செய்த மக்களை வன்கொடுமை செய்திருக்கிறது. உள்ளூர் காவல்துறையினரும் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக நிற்கின்றனர்.



அப்பாவி மக்களை சுட்டு, அவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்லி ஒவ்வொரு பிணத்தையும் இந்திய இராணுவம் கணக்கு சொல்லியது. பெண்களை கற்பழித்து, பிறகு தங்கள் தோட்டாக்கள் மூலம் பெண்ணுறுப்பை அழித்தனர். இந்திய சட்டமும் அதற்கு உதவியாகவே இருந்தது. தட்டிக் கேட்கவும் முடியாது. கேட்டாலும், தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவார்கள். கிட்டதட்ட, ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்கும் மாநிலமாக மணிப்பூர் இன்று வரையும் இருந்து வருகிறது.

இந்திய இராணுவம் நடந்த பல தாக்குததில் ஒரு தாக்குதல் மலோம் கிராமத்தை அதிர வைத்தது. பஸ்க்காக காத்திருந்த பத்து கிராமத்தினரை பிரிவினைவாதிகள் என்று சொல்லி இந்திய இராணுவம் சுட்டு தள்ளியுள்ளது. இறந்த பத்து அப்பாவினர் குடும்பத்திற்கும் அரசிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை. அவர்களுக்கு நியாயமும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு நியாயம் கிடைக்க, இது போல் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய அரசு மணிப்பூரில் இருக்கும் இராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும். விராசனை இல்லாமல் கொல்லப்படுவதை திருத்த வேண்டும் என்று துடித்து எழுந்து தனி பெண்ணாக களத்தில் குதித்தார் ஐரோம் ஷர்மிளா.

மனித வெடி குண்டாக மாறவில்லை. துப்பாக்கி எடுத்து யாரையும் சுடவில்லை. தன் உடல் தான் ஆயுதம். காந்தி வழி தான் சிறந்த வழி. நவம்பர் 2, 2000 இந்திய அரசுக்கு எதிராக உண்ணா விரதத்தை மேற்க் கொண்டார். ’தற்கொலை முயற்சி’ என்று அவரை அரசு கைது செய்தது. காவலில் இருக்கும் போது இறந்து விடக் கூடாது என்பதற்காக வலுக்கட்டாயமாக உணவு குழாய் பொருத்தினர்.

தான் இறந்து போராட்டத்தில் வெற்றிப் பெற முடியாது அவரும் ஏற்றுக் கொண்டார். இன்றளவும், உணவு, தண்ணீர் இல்லாமல் உணவு குழாய் மூலம் வாழ்ந்து வருகிறார்.

ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்த பதினொரு ஆண்டுகள் பல முறை தற்கொலை முயற்சி (IPC 309) சட்டத்தில் கைது செய்து உள்ளது. ஆனால், இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற யோசித்ததுக் கூட இல்லை. காந்தி வழியில் நியாயம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் நடத்துகிறார்.

பல மாதர் சங்கங்கள் ஷர்மிளா போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு ஷர்மிளா பெயர் பரிசிலனை செய்யப்பட்டது. மணிப்பூரின் ”இரும்பு பெண்மணி” என்று பலராலும் போன்றபடுகிறார்.

ஊடகங்கள் அண்ணா ஹசாரேவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஐரோம் ஷர்மிளாவுக்கு கொடுக்கப்படவில்லை. ஹசாரே கேட்கும் லோக் பால் மசோதாவை விட ஷர்மிளாவின் கோரிக்கை மிகவும் மலிவானது. இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற வேண்டும். ஆனால், அதற்காக அவர் பதினொரு வருங்களாக காத்துக் கொண்டு இருக்கிறார்.

ஹசாரேவுக்கு குரல் கொடுக்கும் தோழர்கள் இவருக்கும் கொஞ்சம் கொடுங்கள்.

Monday, October 12, 2009

நடிகர் சங்கம் vs பத்திரிகையாளர்கள்

புவனெஸ்வரி என்ற தனி நபர் விபச்சார வழக்கு எப்படி எல்லாம் திசை மாறி நடிக சங்கம் - பத்திரிகையாளர்கள் சண்டையாக மாறிவிட்டது. கடைசியில், வழக்கில் கைதான புவனெஸ்வரியை மறந்து விட்டனர். மூன்று நாட்கள் பெரிய விஷயமாக இருக்கும் என்று எதிர்பார்த்தது, இப்போது ஒரு மாதத்திற்கு பெரிய செய்தியாக மாறிவிட்டது.

தினமலர் வெளியிட்ட விபச்சார நடிகைகள் பட்டியலை வெளியிட்ட கண்டன கூட்டத்தில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் உண்மையான குணம் தெரிந்துவிட்டது. அவர்கள் யாருக்கு பிறந்தவர்கள் என்பதை பத்திரிகையாளர்களை திட்டியதில் தெரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக கூடிய கூட்டத்தில் கூட இத்தனை ஆவேசத்தை காட்டவில்லை. இலங்கை இராணுவத்தை எதிர்த்து பேச வாய்வரவில்லை. அங்கு நடக்கும் பிரச்சனையை எழுதிய பத்திரிகையாளர் குடும்பத்தை சேர்த்து திட்டுவதற்கு இவர்களுக்கு பல வார்த்தைகளை கண்டு பிடித்து பேசி இருக்கிறார்கள்.

தினமலர் மீது மான நஷ்ட வழக்கு போட்டு முடிய வேண்டிய விஷயத்தை, தன் நண்பர் விஜயகுமார் மனைவி (மஞ்சுளா) பெயரை பிரசுரம் செய்ததற்காகவே நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பெரிதாக ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் அவர்கள் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும்.

இவ்வளவு பெரிய பிரச்சனை ஆன பிறகு, தினமலர் தங்கள் ஆதாரத்தை வெளியீட வேண்டும். அப்போது தான் அவர்கள் சொன்னது உண்மை என்று நம்ப வைக்க முடியும். இல்லை என்றால், அவர்கள் வெளியீட்ட செய்தி யூக மாக கருதப்படும்.

எது எப்படியோ ஒரு மாதத்திற்கு இது தான் "Headlines"

டிஸ்கி : பத்திரிகையாளருக்கு எதிரான மனுவை முரசொலி ஆசிரியர் (முதல்வர்) நடவடிக்கை எடுக்க கொடுத்திருக்கின்றனர். முதல்வருக்கு வேறு வேலையே இல்லையா.... அவர் பதவியை நடிகர் சங்கம் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் நாட்டமைக்கு தான் வெளிச்சம்...

Wednesday, September 30, 2009

Times Now செய்தது சரியா...??

நேற்று முன் தினம் (26.9.09), இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தேன். வழக்கம் போல் இந்தியா அணி சோதிப்பியது. கொஞ்ச நேரத்தில் மழை வந்து ஆட்டத்தை பாதித்திருந்தது. மழை நிற்க வேண்டும் என்று பலர் ஆர்வமாக கடவுளை வேண்டினர். காரணம், இதில் இந்தியா வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும். அப்போது, Times Nowவில் இந்தியா விளையாடிய 42.3 ஓவர்களை கடுமைகாக விமர்சித்தனர்.

பிரவின் குமார் 'ரன் அவுட்' விட்டதை, அடிப்படை கூட தெரியாமல் Stump முன்னாடி நின்றதையும், சச்சின் டைவ் அடித்ததையும் கடுமையாக விமர்சித்தார்கள். கிட்ட தட்ட 'அடிப்படையே' தெரியாமல் விளையாடுவதாக பேசிக் கொண்டார்கள். இதை சொன்னது கிரிக்கெட் ரசிகர்கள் அல்ல... இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரன் மோரே !!

விளையாட்டு இன்னும் முடியவில்லை. மழை நின்றால் மீண்டும் இந்தியா சிறப்பாக விளையாடலாம். அதற்குள் இந்தியா தோல்வி அடைந்து விட்டது போல் விமர்சித்து Times Now டி.வி. ஒளிபரப்பினர். ஒரு வேலை இந்த ஆட்டம் தொடங்கி இந்தியா விளையாடி இருந்தால், 'What a amazing performance !!' என்று புகழாரம் சூட்டியிருப்பார்கள்.

வெற்றியோ தோல்வியோ விளையாட்டில் சகஜம். இந்தியா தோல்வி பெரும் போது கிரிக்கெட் வீரர்கள் வீடு தாக்கப்படுவதும், உருவ பொம்மை எரிப்பதற்கும் இது போன்ற ஊடகங்களும் ஒரு காரணமாக தான் இருக்கின்றன.

விமர்சிப்பது தவறில்லை. ஆனால், ஆட்டம் முடியாமல் இருக்கும் போது பாமரன் போல் கடுமையான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

Friday, September 4, 2009

ஒரு நாள் அரசு விடுமுறை !

முதலில், ஆந்திர முதல்வர் மரணத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்பெல்லாம் தலைவர்கள் இறந்துவிட்டால், டி.டி தொலைக்காட்சியிலும், வானொலியிலும் சோக இசையும், இறந்தவர் பற்றிய செய்திகளும் போடுவார்கள்.

ஆனால், இப்போது பல சேனல் வந்த பிறகு இறந்த தலைவர்களுக்கு ஒரு நாள் அரசு விடுமுறை மட்டுமே மிஞ்சுகிறது. 'அரசு விடுமுறை' என்றதும் சும்மா இருப்பாருக்குமா தனியார் தொலைக்காட்சி....! புது படம் போட்டு தங்கள் டி.ஆர்.பி ரேடிங்கையை உயர்த்திக் கொள்வார்கள். கடைசியில் , உண்மையாக துக்கம் அனுசரிக்க வேண்டிய நோக்கம் நிரைவேறாமல் போய்விடுகிறது.

வெள்ளிக்கிழமை கிடைக்கும் ஒரு நாள் அரசு விடுமுறையை 'Long Weekend' என்று பலர் கொண்டாட தான் நினைப்பார்கள்.

அரசு அலுவலகத்தில் பல வேலைகள் தேங்கி இருக்க... துக்கம் அனுசரிக்க கொடுக்கும் ஒரு நாள் விடுமுறை தொலைக்காட்சியும், கொண்டாட்டமும் என்று இருக்கும் போது விடுமுறைக்கான நோக்கம் தெரிய போவதில்லை.

அப்படி இருக்கும் போது இந்த ஒரு நாள் அரசு விடுமுறை தேவை தானா ???

ஒரு நாள் விடுமுறை என்று அரசு அறிவித்ததும், என் நண்பர் ஒருவர் " நம்ப லீவ் விட்டதால,நாளைக்கு நம்ப ஆளுங்களுக்கு யாருக்காவது இப்படி நடந்தா இதே மாதிரி லீவ்விட தான் இப்படி பண்ணுறாங்களோ ! " என்று கேட்டார்.

அவர் பேச்சில் எந்த உள்குத்தும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு :அரசு விடுமுறை அறிவித்ததால், சனி கிழமை அலுவலகம் வைத்த ஆதங்கத்தில் இந்த பதிவை இடுகிறேன்.

Tuesday, May 6, 2008

ராம். கோபலனுக்காக இதோ தசாவதாரம் கதை !!



தசாவதாரம் கதை படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம். கோபாலன் வழக்கு போட்டுள்ளார். அவருக்காக இந்த தசாவதாரம் கதையை வெளியிடுகிறேன்.

வயதை குறைத்து இளமையாக காட்டிக் கொள்வதில் கமலுக்கு நிகர் கமல் தான்.

12 ஆம் நூற்றாண்டில் இருந்து கதை துவங்குகிறது. குலோத்துங்க மன்னன் ( நெப்போலியன் ) போரில் தோல்வியுற்ற விரக்தியில் தன் நகரத்தில் இருக்கும் பெருமாள் சிலையை கடலில் தூக்கி ஏறிய சொல்கிறார். கோயிலில் பணி புறியும் கமல் இதை எதிர்க்கிறார். அதனால், அவரையும் சேர்த்து பெருமாள் விக்கிரகத்தை கடலில் எறிகிறார்கள்.

இப்போது கதை 12ஆம் நுற்றாண்டில் இருந்து 21ஆம் நூற்றாண்டுக்கு நகர்கிறது. அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜேன்டுக்கள் மல்லிகா உட்பட கடலில் விழுந்த பெருமாள் விக்கிரகத்தை தேடி இந்தியா வருகிறார்கள். காரணம், அந்த விக்கிரகத்தில் விஞ்ஞானப் பூர்வமான சக்திகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அங்கு பணி புறியும் விஞ்ஞானி கமல் சி.ஐ.ஏ எஜேன்டுக்கு தெரியாமல் விக்கிரகத்தை காப்பற்ற இந்தியா வருக்கிறார். அசின் அவருக்கு உதவியாக இருக்கிறார். பாட்டி கமல் பல நூற்றாண்டுக்கள் முன் நடந்த சம்பவந்தை கூறி விஞ்ஞானி கமலுக்கு உதவி செய்து, பெருமாள் விக்கிரகத்தை இந்தியாவை விட்டு தூக்கி செல்லாமல் காப்பற்றுவது தான் மீது கதை. இதில் அமெரிக்க அதிபர் வேடத்தில் வருவதும் கமல் தான்.

கதையை உறுதி செய்துக் கொள்ள திரைப்படத்தை பார்க்கவும். :)

படம் பார்க்காமல் சர்ச்சை செய்து பெயர் வாங்வதில் அரசியல்வாதிகளுக்கு அடுத்து, ஆன்மீகவாதிகளும் இறங்கிவிட்டனர்.

LinkWithin

Related Posts with Thumbnails