நேற்று முன் தினம் (26.9.09), இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தேன். வழக்கம் போல் இந்தியா அணி சோதிப்பியது. கொஞ்ச நேரத்தில் மழை வந்து ஆட்டத்தை பாதித்திருந்தது. மழை நிற்க வேண்டும் என்று பலர் ஆர்வமாக கடவுளை வேண்டினர். காரணம், இதில் இந்தியா வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும். அப்போது, Times Nowவில் இந்தியா விளையாடிய 42.3 ஓவர்களை கடுமைகாக விமர்சித்தனர்.
பிரவின் குமார் 'ரன் அவுட்' விட்டதை, அடிப்படை கூட தெரியாமல் Stump முன்னாடி நின்றதையும், சச்சின் டைவ் அடித்ததையும் கடுமையாக விமர்சித்தார்கள். கிட்ட தட்ட 'அடிப்படையே' தெரியாமல் விளையாடுவதாக பேசிக் கொண்டார்கள். இதை சொன்னது கிரிக்கெட் ரசிகர்கள் அல்ல... இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரன் மோரே !!
விளையாட்டு இன்னும் முடியவில்லை. மழை நின்றால் மீண்டும் இந்தியா சிறப்பாக விளையாடலாம். அதற்குள் இந்தியா தோல்வி அடைந்து விட்டது போல் விமர்சித்து Times Now டி.வி. ஒளிபரப்பினர். ஒரு வேலை இந்த ஆட்டம் தொடங்கி இந்தியா விளையாடி இருந்தால், 'What a amazing performance !!' என்று புகழாரம் சூட்டியிருப்பார்கள்.
வெற்றியோ தோல்வியோ விளையாட்டில் சகஜம். இந்தியா தோல்வி பெரும் போது கிரிக்கெட் வீரர்கள் வீடு தாக்கப்படுவதும், உருவ பொம்மை எரிப்பதற்கும் இது போன்ற ஊடகங்களும் ஒரு காரணமாக தான் இருக்கின்றன.
விமர்சிப்பது தவறில்லை. ஆனால், ஆட்டம் முடியாமல் இருக்கும் போது பாமரன் போல் கடுமையான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment