வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, September 28, 2009

கலைஞரும், கலைவாணரும்

அண்ணா அவர்கள் முன்பே கலைவாணரிடம் கலைஞர் பேச்சு திறனைப் பற்றி பாராட்டி பேசிருந்தார். தனது 'மருமகள்' படத்துக்கு வசனம் எழுத அவரை அழைத்தார்.

"நீ நல்லா பேசுவேன்னு அண்ணா சொல்லியிருக்காரு, நான் இந்த ரெக்கார்டை ஆன் பண்றேன்.ஏதாவது பேசு பார்க்கலாம் !" என்று அங்கிருந்த ரெக்கார்ட் பிளேயரில் பதிவு செய்து கொள்ள ஆரம்பித்தார்.

"எதைப் பற்றி பேச ? தலைப்பு கொடுங்க, பேசுறேன் !'

"எதைப் பற்றியாவது பேசுய்யா. படத்துக்கு கதை வசனம் நீதான் எழுதப் போற, அதுல எந்தவிட மாற்றமும் இல்லை. நீ பேசுறதை நாங்க கேக்கணும். ஏதாவது பொதுவா பேசு"

கலைஞர், "எதைப் பற்றி பேச ?" என்று ஆரம்பித்தார். திருவள்ளுவரின் பெருமையைப் பேசவா, அவர் எழுதிய அறத்துப் பால் பற்றிப் பேசவா, சிலப்பதிகாரத்தைப் பற்றி பேசவா ? புகார் காண்டத்தைப் பற்றி பேசவா அல்லது இளங்கோவடிகளைப் பற்றிப் பேசவா, பாரதியைப் பற்றி பேசவா, அவர் பாடிய குயில் பாட்டு பற்றி இப்படியே கலைஞர் பேசிக் கொண்டே இருந்தார்.

ரெக்கார்ட் பிளேயர் முடிந்ததும் தெரியாமல், கலைவாணர் கன்னத்தில் கைவைத்து அவர் பேஉவதையே ரசித்துக் கொண்டிருந்தார்.

**'மணமகள்' படத்துக்கு வசனம் எழுத அவ்வளவு பணம் வேண்டும் என்றார் கலைவாணர்.

'நீங்களே சொல்லுங்க' என்றார் கலைஞர்.

கலைஞர் கடைசி வரை எவ்வளவு வேண்டும் என்று குறிப்பாகச் சொல்லவில்லை.

முடிவாக கலைவாணர் ஒரு துண்டுச் சீட்டில் எழுதி அதைச் சுருட்டி கலைஞர் கையில் கொடுத்தார். கலைவாணர் அந்த சீட்டில் நான்கு புஜ்ஜியத்தை எழுதியிருந்தார்.

ஏதோ விஷயமிருக்கிறது என்று புரிந்து கொண்ட கலைஞர், 'சரி சம்மதம்' என்று சொல்லிவிட்டார்.

"அப்படியா ! நான்கு பூஜ்ஜியங்கள் போட்டிருக்கிறேன். சம்மதம் என்கிறீர்களே ? நான் நம்பலாமா ?" என்று கலைவாணர் கேட்டார்.

"ஆமாம், சம்மதம் தான்"

"சீட்டைக் கொடுங்கள்" என்று சீட்டைக் கையில் வாங்கிக் கொண்டு, "இதில் எங்கே ஒன்று போடுவது ?" என்று கேட்டார்.

கலைஞர்,"எங்கு வேண்டுமானாலும் போடுங்கள்" என்றார்.

கலைவாணர் '00001' என்று எழுதிக் கொடுத்தார். சீட்டை வாங்கிய கலைஞர் அவருடைய குறும்பைப் புரிந்து கொண்டு அந்தச் சீட்டைத் தலைகீழாகத் திருப்பி 'சரி தான்' என்றார். தலைக்கீழாகத் திருப்பிவிட்டதில் சீட்டு '00001' என்பது '10000' என்று மாறியிருந்தது,

கலைவாணர் சிரித்துக் கொண்டே அந்த தொகையை தருவதாக சம்மதித்தார்.

**


ஒரு முறை கலைஞரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்திருந்தார் கலைவாணர். இருவரும் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது கலைஞரின் டிரைவர் காருக்க்கு பெட்ரோல் போட கலைவாணரின் அலுவலகத்தில் பணம் கேட்டிருக்கிறார். ஒரு பெட்ரோல் கூப்பனை எடுத்துக் கொடுத்த மேனேஜர், 'இனிமேல் இப்படியெல்லாம் கலைவாணர் வீட்டுப் பணத்தை அழிக்காதே' என்று சொல்லிவிட்டார்.

கலைஞருக்கு இந்த விஷயமே தெரியாது.

ஆனால், அடுத்த நாள் அந்த மேனேஜர் கலைவாணரிடம் அக்கறை கொண்டவராகதான் நடந்து கொண்ட விஷயத்தை தன்னுடைய அக்கறையை அவரிடம் சொல்லியிருக்கிறார். இதை கேட்ட கலைவாணர் அப்போது ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்து காரில் ஏறி நேராக கலைஞர் வீட்டு வாசலில் இறங்கினார். வீட்டில் கலைஞர் இல்லை. அவர் அம்மாதான் இருந்தார். ஆயிரம் பெட்ரோல் கூப்பன்களை எடுத்து அந்த அம்மாவிடம் கொடுத்து, "இதை வைத்துக் கொண்டு தம்பி வந்ததும் வேண்டிய அளவு வெட்ரோல் போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

விஷயம் கேள்வி பட்ட கலைஞர், அந்த கூப்பன்களை எடுத்துக் கொண்டு கலைவாணர் வீட்டுக்கே வந்து கொடுத்துவிட்டு போய்விட்டார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails