சமிபத்தில் எனக்கு வந்த Forward மெயிலில் ….
சமீப நாட்களாக கமல்ஹாசன் குறித்து இணையத்தில் உலவும் செய்தி.
'கமல் 1978-ல் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் கில்லராக நடித்திருந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, அதே போல பெண் களைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ ராமன் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டான்.
1988-ல் 'சத்யா'வில் வேலையில்லா இளைஞனாக நடித்தார் கமல். 90-கள் முழுக்க நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம்.
1992-ல் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி ஓடுவதாக 'மகாநதி'யில் கதை. 1996-ல் நிஜமாகவே ஃபைனான்ஸ் கம்பெனிகள் முதலீடுகளை லபக்கி ஓடின.
2000-ல் இந்து-முஸ்லிம் கலவரம் குறித்த 'ஹேராம்' படம் வெளியானது. 2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலை.
2003-ல் 'அன்பே சிவம்' படத்தில் ஒரு காட்சியில் கமல் சுனாமி பற்றி பேசுவார். 2004-ல் நிஜமாகவே வந்தது சுனாமி.
2006-ல் 'வேட்டையாடு விளையாடு' படம் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றியது. தொடர்ந்த நாட்களிலேயே நொய்டாவில் மொனீந்தர், சதீஷ் என்னும் தொடர் கொலைகாரர்கள் பிடிபட்டனர்.
இப்போது 'தசாவதாரம்' படத்தில் அமெரிக்காவில் இருந்து உலகை அழிக்கும் கிருமி இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதாகச் செல்லும் கதை. இப்போது அமெரிக்காவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சல் கிருமிகள்தான் உலகெங்கும் பரவுகின்றன!'
இந்த மெயில் படித்தவுடன், "எப்படி எல்லாம் உக்காந்து யோசிக்கிறாங்களோ " நினைச்சேன்.
இப்போது கமல் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படம் வந்துள்ளது. அதே சமயம், அண்ணா பிறந்த நாளுக்காக கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் ஈடுப்பட்ட 10 தீவிரவாதிகளை தமிழக அரசு விடிவித்துள்ளது.
உண்மையிலே, கமல் ஒரு தீர்க்கத்தரிசியாக இருந்தால் வெளியான தீவிரவாதிகளில் நிலைமை....???
அட பாவிங்களா !!!!!!!
என்னையும் உங்கள மாதிரி யோசிக்க வச்சிட்டிங்களே !!!
3 comments:
நண்பரே,
ஏற்கனவே பரிசல் இதை எழுதிவிட்டார். அதே மேட்டர் ஆனந்த விகடனிலும் வந்து விட்டது. இப்போது உன்னைப் போல் ஒருவன் மேட்டரைத் தவிர அப்படியே நீங்களும் திருப்பி எழுதியிருக்கிறீர்கள்.
26.08.09 தேதியிட்ட ஆனந்த விகடனில் 19 ஆம் பக்கத்தில் "கமல் கடவுளா?" என்ற தலைப்பில் நானே கேள்வி நானே பதில் பகுதியில் அப்படியே உள்ளது.
பரிசலின் பதிவின் லிங்க்:
http://www.parisalkaaran.com/2009/08/120809.html
// என். உலகநாதன் said...
நண்பரே,
ஏற்கனவே பரிசல் இதை எழுதிவிட்டார். அதே மேட்டர் ஆனந்த விகடனிலும் வந்து விட்டது. இப்போது உன்னைப் போல் ஒருவன் மேட்டரைத் தவிர அப்படியே நீங்களும் திருப்பி எழுதியிருக்கிறீர்கள்.
//
நான் என் பதிவிலே தெளிவாக சொல்லிவிட்டேன்.. சமிபத்தில் வந்த Forward mail என்று !! நான் எழுதியதாக எங்கு சொன்னேன் ?
'உன்னைப் போல் ஒருவன்' மேட்டரை சேர்க்க வைத்து, யோசிக்க வைத்தவனை தான் தேடிட்டு இருந்தேன்.
அது பரிசல் தானா..!!!!
Post a Comment