இன்று உரையாடல் அமைப்பினர் நடத்திய சிறுகதை பயிற்சி பட்டறை இனிதே நன்றாக நடந்து முடிந்தது.
பயிற்சி பட்டறையில் முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள் பேசினார்.
அவர் பேசும் போதும் போது "எழுதிய கதை வாசகன் உணர வேண்டும். அதை உணர்த்துவதற்காக தூக்கலான வார்த்தைகள் இருக்க கூடாது" என்றார்.
கதைகளுக்கு திட்டமிட்ட வரம்புகள் எதுவும் இல்லை என்பதை கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக 'தக்கலி' என்ற கதையை கூறினார்.
ஒரு எழுத்தாளன் தன் உறவினர்களுடன் செல்லும் போது வாசகர்களை சந்திப்பதை நகைச்சுவையாக கூறினார்.
பாஸ்கர் சக்தி பேசி முடித்த பிறகு தேநீர். அதை அடுத்து யுவன் சந்திரசேகர் அவர்கள் பேசினார்.
அவர் எழுதிய 'கானல் நதி' நாவலை படித்த பிறகு மிகவும் சீரியஸான மனிதர் என்று நினைத்தேன். வாசகர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு பதில் சொல்லும் போது நகைச்சுவையாக பதிலளித்தார்.
தொடங்கும் போதே கதைக்கும், சம்பவத்திற்கும் உள்ள வேறுபாட்டை கூறினார்.'சம்பவம் கதையானால் தான் ஸ்வாரசியம். காரணம், ஒரு சம்பவம் வந்த பத்திரிகை செய்தி அடுத்த நாள் பழமையாகி விடுகிறது. கதை எந்த காலத்திலும் படிக்க கூடியது' என்றார்.
ஒரு கதையை ஆலோசனை கேட்டு செயல்படுத்தப்படும் வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் 1700 ஆலோசனைகள் வரும். அதில் நமக்கு ஏற்ற ஆலோசனையை ஏற்று கதை எழுதுவதற்கு பதிலாக, முன்பே நம் கற்பனைக்கு தகுந்த போல் கதை எழுதிவிட்டால் நேரத்தை தவிற்கலாம் என்று கூறினார்.
சாலமன் பாப்பையா தனக்கு வகுப்பு எடுத்த அனுபவத்தை மிக நகைச்சுவையாக கூறினார். குறிப்பாக 'எழுப்பு-தொடுப்பு-முடிப்பு' என்று சொல்லும் 'பு'வில் இன்னொரு முக்கியமான 'பு' 'தலைப்பு' என்று சொல்லும் இடத்தில் அருமை.
கதை எழுதுவது 'நிகழ்வுகளை ஸ்வாரஸ்யமாக சொல்லுவது அல்ல. கற்பனைகள் சேர்ந்து சொல்லுவது தான் கதை என்று அவர் பேச்சின் சாரம் இருந்தது.
'I am that' - J.Krishnamoorthy
பிறகு - பூமணி
நெய்வேதியம்
Future Shock
போன்ற புத்தகங்களை பற்றி கூறினார்.
அதன் பிறகு மத்திய சாப்பாடு. 'Non-Veg' இடெம் இரண்டு தான். 'Veg' யில் 'Gobi Machurian' கலக்கியிருக்கிறார்கள்.
மத்திய சாப்பாடு பிறகு, தேவதாஸ் அவர்கள் 'மொழிபெயர்ப்பு சிறுகதைகள்' பற்றி பேசினார்.
உண்ட மயக்கம் என்பதால் அவர் பேசிய பெரும் பகுதி மனதில் பதியவில்லை. கேள்வி - பதில் பகுதியில் விழித்துக் கொண்டு அவர் சொல்லும் விளக்கத்தை கேட்டேன்.
இறுதியாக பா.ரா அவர்கள் பேசினார்.
தன் Laptop மூலம் முன்பே இதை தான் பேச வேண்டும் என்று திட்டமாக வந்ததால் சரியான நேரத்திற்கு பேசி முடித்தார்.
நாம் அனுப்பும் எல்லா கதைகளும் படிக்கிறார்களா ? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக முதல் பத்தி படிப்பார்கள் என்றார். படிப்பவரை உள்ளே இழுக்கும் பட்சத்தில் தொடர்ந்து படிப்பார்கள் என்று கூறினார்.
அவர் 'PPT'யில் எனக்கு மிகவும் பிடித்த ஸ்லைட் 'உதவி ஆசிரியர் எப்படிப்பட்டவர் ?' என்பது தான்.
பெருமாலும் அடிப்பட்டவர்கள், கஷ்டஜீவிகள்
பெருமாலும் இரக்க சுபாவம் கொண்டவர்கள்
பெருமாலும் நல்லவர்கள்
பெருமாலும் விரக்தி கொண்டவர்கள்
பெருமாலும் குடும்பக்கதைகளை விரும்புகிறவர்கள்
பெருமாலும் நல்ல முடிவுகளை விரும்புகிறவர்கள்
பெருமாலும் நல்ல எழுத்தாளனை கண்டு பிடித்து விடமாட்டோமா என்று ஏங்குபவர்கள்
கதைகளுக்கு முடிவை சொல்லுவதை விட சொல்லாமல் விடுவது நல்லது என்ற கருத்தையும் கூறினார்.
சிறுகதை பயிற்சி பட்டறைக்கு பதிவர்களுக்காக ஏற்பாடு செய்ய நண்பர் பைத்தியக்காரன்.... சிவராமன் அவர்களுக்கு நன்றி.
உடனே நான் 'சிறுகதை' எழுதனும் எங்க பேனா.....????????
1 comment:
பாரா கொஞ்சம் நேர்மையாகத் தான், உதவி ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்!
சாலமன் பாப்பையா செல்வதாக இருக்கும் பகுதியில், எடுப்பு தொடுப்பு முடிப்பு என்றிருக்க வேண்டும். எடுப்பும் தொடுப்பும் சரியாக இல்லாவிட்டால் முடிப்பை, இங்கே வாசிக்கிறவர்களே பார்த்துக் கொள்வார்கள், அதனால் எழுதுகிறவன், எடுப்பு, தொடுப்பில் கவனம் செலுத்தினாலே போதுமானது!
எடுப்பும் தொடுப்பும் சரியாக அமைந்து விட்டால், அதிலேயே அந்த தலைப்'பு' தானாகவே வந்து சேர்ந்து கொள்ளும்!
Post a Comment