சமிபத்தில் நான் படித்த புத்தகங்களில் என்னை அதிகம் பாதித்தது நடிகர்..... அல்ல எழுத்தாளர் சிவகுமார் அவர்கள் எழுதிய 'இது ராஜப்பாட்டை அல்ல' புத்தகம். அந்த புத்தகத்தை பற்றி தனி பதிவு போட வேண்டும். ஆனால், இப்போது நான் குறிப்பிட விரும்புவது அவர் எழுதிய 'சிவாஜி' கணேசன் பற்றின கட்டுரை.
1.
சிவகுமார் ஓவியம் வரைவார் என்பதை தெரிந்த சிவாஜி தன் அம்மா படத்தை வரைந்து தர சொல்லி கேட்டிருந்தார். காலப்போக்கில் சிவகுமார் அவர்கள் அதை மறந்துவிட்டார். மீண்டும் ஒரு முறை சிவகுமாரை சிவாஜி சந்திக்கும் போது, " கவுண்டரே ! என்னடா இப்படி ஏமாத்திக் கிட்டிருக்கே. அம்மா படத்தை வரைஞ்சு கொடுக்கச் சொன்னேனே... மறந்துட்டியா ? அம்மா ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கடா..." என்று சிவாஜி சொல்லும் போதே மனதை கசியவைக்கிறார்.
2.
'இனி ஒரு சுதந்திரம்' படம் பார்த்த சிவாஜி, " உன் படம் பார்த்தேன். பிரம்மாதமா பண்ணியிருக்க. 'கப்பலோட்டிய தமிழன்' உயிரை கொடுத்துச் செய்தேன். தமிழ் நாட்டு ஜனங்க எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்கும்க் குழைச்சிட்டிருக்காங்க" என்று சொல்லும் போது, படம் தோல்வி அடையும் என்பதை எந்த நடிகனும் இவ்வளவு வெளிப்படையாக நடித்தவரிடம் சொல்ல மாட்டார்கள். இதில் அவருடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் தெரிகிறது.
3.
'உறுதிமொழி' படப்பிடிப்பில் தன் மகன் பிரபுவை பார்க்க குடும்பத்தோடு வந்த போது, 'கவுண்டரே ! சிவாஜி கணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேன்" என்று குரல் தடதமுக்க சொல்ல, " அண்ணே ! என்ன பேச்சு பேசுறீங்க..! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுல தான் நாங்க விளையாடுகிறோம். எந்த கொம்பனும் இந்த தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிக்க முடியாது ?", என்றார் சிவகுமார்.
அப்படியா நினைக்கிறே ?
"இது என் தாய்மேல் சத்தியம் ! தொழில் மேல் சத்தியம் " என்றார் .
"எல்லாரும் அப்படி நினைப்பாங்களா ?" சிவாஜி கேள்வி சிவகுமாரை கண் கலங்க வைத்துவிட்டது.
சிவாஜி கேட்ட கேள்வி படிக்கும் வாசகன் என்னை கண்கலங்க வைத்து விட்டது.
4.
சீங்கப்பூரில் மயங்கி விழுந்த சிவாஜி சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளித்தனர். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புது ரத்தம், புது பொழிவுடன் திரும்பினார். அப்போது சிவகுமார் தன் குடும்பத்துடன் சிவாஜியை பார்க்க செல்கிறான். ஒரு நாற்காலியை எடுத்து சிவாஜி அருகே அமர்கிறார்.
"நாமெல்லாம் 'Once Upon a time Actor' சிவா ! எல்லாம் முடிஞ்சு போச்சு. நம்பலை இப்போ யார் ஞாபகம் வச்சிருக்கா...! சிங்கபூர்ல பாரு அஞ்சாயிரம் அடி திரையில கட்டபொம்மன் காட்சியை போடுறான். அஞ்சாயிரம் பேரு விசில் அடிக்கிற்ன்."
"தங்கபதுமை... ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா அவனவன் சாமி ஆடுறான். 'தங்கபத்தம்' அரங்கமே குலுங்குது !"
"சிவா ! வாட் என் ஃபைன் மூவமெண்ட் ! உங்க அண்ணன் அப்போ ஏன்டா சாகல ? இப்போ எதுக்கு உயிரோட வந்தேன் ?" என்று சிவாஜி சொன்ன போது கண்ணில் நீர் முட்டி தள்ளியது.
சிவகுமார் அவர்கள் சிவாஜியுடன் தன் அனுபவத்தை பகிவதை படிக்கும் போது என்னையும் அறியாமல் என்னை எதோ செய்தது.
பிஷ்மரை படு வைத்த அர்ஜூனன் சந்தோஷப்பட வில்லை. அவர் கால்களில் கண்ணீர் சிந்தி அழுதான். ஒரு நடிகனின் நல்ல படம் தோல்வி அடையும் என் போன்ற ரசிகர்களிலும் மனம் வருந்துகிறோம்.
நல்ல திறமை மிக்க கலைஞனுக்கு ஓய்வு எவ்வளுவு பெரிய கொடுமை என்று இந்த கட்டுரையில் என்னால் உணர முடிகிறது.யார் யாரோ நடிக்கிற படத்தை பார்த்த ரசிகர்கள் 24 மணி நேரம் சினிமா, நாடகம் இரண்டிலும் நடிப்பை பற்றி யோசித்த பழைய நடிகர்களை மறந்த குற்ற உணர்வு உருத்துகிறது.
தமிழ் படித்த ஒவ்வொரு மனிதனுக்கு இலக்கிய தாகம் மனதின் ஓரத்தில் மறைந்திருக்கும். வேலை சுமை, குடும்ப சூழ்நிலை என்று சமாளிக்க நேரம் சரியாக இருக்கும் நேரத்தில் பலருக்கு எழுதவோ படிக்கவோ நேரம் இருப்பதில்லை. வேலை ஓய்வுக்கு பிறகு ஒரு சிலர் தங்கள் இலக்கிய தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.ஒரு நடிகனுக்கும் இலக்கிய தாகம் இருப்பது 'இது ராஜப்பாட்டை அல்ல' புத்தகம் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
கே.பாலசந்தர் சொல்லுவது போல்
'நடிப்பிற்கு இலக்கணமும் அகராதியும் சிவாஜி என்றால்,
நடிகனுக்கு இலக்கணமும் அகராதியும் சிவகுமார் !'
6 comments:
நல்ல பதிவு!
அன்புள்ள குகனுக்கு!
பதிவைப் பார்த்தேன். நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கும் - மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்களுக்கும் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழன் பார்த்தபின் தான் எம் நாட்டில் விடுதலைப் போரின் வேகம் அதிகரித்தது என்று சொல்லலாம். நான் சிறுவயதில் அந்தப் படத்தைப் பார்த்தது சுப்பிரமணிய சிவா - கப்பலோட்டிய தமிழன் நட்பு - சிறை வாழ்க்கை இவற்றால் பாதிக்கப்பட்டவன் என்றும் சொல்லலாம். அன்பை - நட்பை - குடும்ப பாசப் பிணைப்பை மிஞ்சிய அக்கால திரைப்படங்களை ஒரு போதும் மறக்க முடியாது! அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு குகன்!
அன்பான நண்பர் திரு குகன்,
Interesting Post! keep it up!!
நன்றி
பகிர்தலுக்கு நன்றி நண்பரே..
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
இரவல்கவிதை வரிகள், அடுத்தவர் எழுதின வசனம் ஆனாலும் பேசியது தான் தான் என்பது சிவாஜிக்கு மறந்திருக்கலாம்! காலம் மறக்காதே, என்ன செய்ய:-((
Post a Comment