இன்று சென்சாரின் 'A' Certificate வாங்கி படம் வெளிவருவதை பெருமையாக பல தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், பழைய தமிழ் சினிமா வசனத்தில் கூட அரசியல், ஆபாசம் இருக்க கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறது என்பதற்கு நான் படித்த இரண்டு சம்பவங்களை குறிப்பிட விரும்புகிறேன். இந்த சம்பவத்திலும் வெட்டப்படுவது கலைஞர் அவர்கள் எழுதிய எழுத்துகள் தான் !
1.
கலைஞர் அவர்கள் திருச்சி சிறைச்சாலை இருந்த நேரம். அவர் வசனம் எழுதிய 'திரும்பி பார்' படம் சென்சாருக்குச் என்ற போது இரண்டாயிரம் அடி வெட்டி விடச் சொல்லிவிட்டார்கள். 'திரும்பிபார்' படத்தின் கதை.... காதலித்த பெண் தந்தையை மணந்துக் கொள்கிறார். இருந்தும், அவளை அன்னையாக பார்க்காமல் காதலியாக பார்க்கும் இளைஞன் பற்றிய கதை. இதில், 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அன்னையை காதலிக்கும் இளைஞனாக நடித்திருப்பார். காதலியாகவும், முதியவரை மணந்த மனைவியாகவும் 'பத்மினி' அவர்கள் நடித்திருப்பார்.
இப்போழுது அந்த பாடத்தை யார் பார்த்தாலும் அதிலே வெட்டுவதற்கு எதுவும் இல்லை என்று தான் சொல்லுவார்கள். அன்றைய தேதியில் வெட்டினால் தான் படம் வெளியாகும் என்ற நிலைமை. இதை கேள்விப்பட்ட மார்டன் தியேட்டர் பட அதிபர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் கலைஞரை சிறைச்சாலைக்கு வந்து பார்த்து "நான் படத்தை வெளியிடப் போவதில்லை" என்றார்.
உடனே, கலைஞர் " வெளியிடுங்கள்" என்று சொன்னார்.
"இரண்டாயிரம் அடியை வெட்டிவிட்டு எதை வெளியிடுவது ?" என்றார்.
"எந்தெந்த வசங்களை வெட்ட சொல்கிறார்கள்?" என்று கலைஞர் கேட்டார்.
சில வசனங்களைச் சொல்லி, இதையெல்லாம் வெட்டச் சொல்கிறார்கள் என்றார். அதிலே ஒரு வசனம்.
"கொள்கை முழக்கம் செய்வதற்காக கோபுரமேறி நிற்கின்ற தலைவர்களே ! அந்த கொள்கையிலிருந்து எத்தனை முறை நீங்கள் வழுக்கி விழுந்திருக்கிறீர்கள். ஒரு முறை திரும்பி பாருங்கள்". இது தலைவர்களுக்காகச் சொல்லப்பட்டது. அந்த காலத் தலைவர்களும் சரி, இந்த காலத் தலைவர்களும் சரி கொள்கையிலிருந்து வழுக்கி விழும் தலைவர்களுக்காக எழுதப்பட்டது. அதை வெட்டிய சென்சார் அதிகாரி " கோபுரத்திலிருந்து ராமானுஜர் கீழே குதித்தார். அதைக் கருணாநிதி கிண்டல் செய்திருக்கிறார். கோபுரத்திலிருந்து விழுந்த தலைவர்களே என்று சொல்லுவது ராமானுஜரைத்தான். ஆகவே அதை அனுமதிக்க மாட்டோம் " என்று கூறி வெட்டி விட்டார்கள்.
படம் வெளியிட முடியாது என்று டி.ஆர்.சுந்தரம் முடிவெடுத்த போது எவி.எம்., எஸ்.எஸ்.வாசன் அவர்கள் அவரை அழைத்து சென்று சென்சார் அதிகாரியோடு மறுபடியும் சமாதானம் செய்து 2000 அடி என்பதை 1500 அடி என்று வெட்டி, 500 அடியைக் காபாற்றிக் கொடுத்து அந்த படத்தை வெளியிட்டார்கள்.
2.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'காஞ்சி தலைவன்' என்ற படத்திற்கு கலைஞர் வசனம் மட்டும் இல்லாமல் பாடலும் எழுதியிருக்கிறார்.
அதில், எம்.ஜி.ஆர். அவர்கள் 'காஞ்சி மன்னனாக' நடித்திருந்தார். எதிரி நாட்டு படைகளை எதிர்த்து எம்.ஜி.ஆர் படைகள் செல்லும் போது 'வெல்க காஞ்சி... வெல்க காஞ்சி... வெல்க வெல்கவே...' என்ற பாடல் எழுதியிருந்தார்.
இந்த பாடலை கேட்ட சென்சார் அதிகாரி, " இதில் வரும் வெல்க காஞ்சி என்பதை யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்கள்.
எம்.ஜி.ஆர்., கலைஞர் என்று பலர் கூறியும், சென்சார் அதிகாரி இந்த பாடலை "பிரச்சார பாடலாக" இருப்பதால் மறுத்தார்.
இறுதியில், அந்த பாடல் 'வெல்க நாடு... வெல்க நாடு... வெல்க வெல்கவே...' என்று மாற்றப்பட்டு வெளியிட்டார்கள்.
'வெல்க நாடு' என்பதால் எதிரி படைக்கும் இதும் பொருந்தும் என்று அந்த பாடலை கலைஞரே கிண்டலாக சொன்னார்.
2 comments:
"'திரும்பிப்பார்' படத்தின் கதை வேறு. சிவாஜிக்கு அக்காவாக பண்டரிபாய் நடித்திருப்பார்.
நீங்கள் சொன்ன கதை ஸ்ரிதர் வசனம் எழுதிய "எதிர்பாராரது".
சகாதேவன்
என்ன அண்ணனையே எதிர்த்து பின்னூட்டமா?
Post a Comment